Monday 4 July 2016

கண் திருஷ்டி நீங்க

கண் திருஷ்டி நீங்க !!

கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார்கள். அதனால் அந்தத் தெருக்காரர்கள் எல்லாம் போகும் போதெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போவார்கள். அப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இதுதான் முக்கியம்.

சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.

சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.

ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

நாம் நன்றாக இருக்கும் போதே சில சமயங்களில் எதிர்ப்பாராத விபத்தோ அல்லது உடல் நலக்கேடோ வந்து த்தொல்லை தருகிறது. நம்முடன் பழகுபவர்கள் எல்லோரும் மிக நல்ல உள்ளத்துடன் இருப்பார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்க முடியாது. சிலர் பொறாமை, வெறுப்பு போன்ற நெகடிவ் எனர்ஜியுடன் நம்முடன் பழகுவார்கள். வெளியிலிருந்து பார்க்கும் போது அவர்கள் மிக நல்லவர்கள் போலத்தான் தோன்றும்". 'கூடவே இருந்து குழி பறித்தான்' என்று சொல்வதைக்கேட்டிருக்கிறோம்

இந்த ரகத்தைச்சேர்ந்தவர்களால் அதிகமாக கண் திருஷ்டி ஏற்படுகிறது.

என் சிறுவயதில் ஒரு மேடையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. "பாரதி கண் கண்ணன்" என்ற தலைப்பு. பேசி முடித்தப்பின் பலர் என்னைப் பாராட்டினார்கள். மகிழ்ச்சியுடன் மேடையிலிருந்து கீழே வர, அவ்வளவுதான் .......என்ன தடுக்கியதோ தெரியவில்லை. நான் கீழே விழுந்ததுதான் தெரியும். எப்படியோ நொண்டியபடி சமாளித்து வீடு வந்து சேர்ந்தோம். அப்போது தான் இந்தக் கண்திருஷ்டிப் பற்றிப் பேச்சு வந்தது.

ஒரு முனியம்மா வந்தாள். அம்மிக்குழவியை மிக எளிதாகத் தூக்கினாள். என்னை அமர வைத்து அப்பிரதக்ஷிணமாக மூன்று முறை சுற்றினாள். அந்த மூன்றாம் சுற்றிலேயே அந்தக்குழவி தூக்கமுடியாதபடி பளுவானது. அந்த முனியம்மா மூச்சைப்பிடித்தபடி அதைத்தூக்கி பின் திருஷ்டி கழித்தாள். இதை நான் நேரில் பார்த்தபோது கண்திருஷ்டி என்ற ஒன்றும் இருக்கிறது என தெரிந்துகொண்டேன்.

திருஷ்டி பட்டிருக்கிறது என்று எப்படிக் கண்டுப்பிடிப்பது ?

திருஷ்டிப்பட்டவர் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எந்த வேலையிலும் மனம் லயிக்காது. எதாவது புது உடை அணிந்தால் அது ஆணி மாட்டிக்கிழியலாம். சில சமயம் அதில் எதாவது கருப்புக்கறை படலாம். தூக்கம் அதிகமாகலாம் சப்பாடு பிடிக்காமல் போகலாம்.

திருஷ்டிக்கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டிச் சுற்றிக்கொள்பவரைவிட வயதில் மூத்தவராக இருந்தல் அவசியம். திருஷ்டிக்கழிக்க கடல் நீர் மிகவும் ஏற்றது. அதுவும் அமாவாசையில் கடல் நீரால் கழிக்க நல்ல பலன் உண்டாகும். வீட்டில் எல்லா முக்குகளிலும் இந்தக்கடல் நீரைத்தெளித்துப்பின், சாம்பிராணிப் புகையோ அல்லது ஊதுவத்தியோ உபயோகிப்பது நல்லது.

திருஷ்டிக் கழிப்பதில் பல வகைகள் உண்டு. திருஷ்டிக்கழிப்பவர் கல் உப்பைக் கையில் வைத்தபடி மூன்று முறை அப்பிரதக்ஷிணமாய் சுற்றி பின் சாக்கடையில் போடலாம். ஒருவரும் இதற்குக் கிடைக்கவில்லை என்றால், நமக்கு நாமே செய்துக்கொள்ளலாம். இரண்டாவதாக எலும்மிச்சம் பழத்தை வெட்டி, நடுவில் குங்குமம் தடவி இரண்டு கைகளிலும் வைத்துக்கொண்டு வலது பக்கமாக மூன்றுதரம் சுழட்டி பின் இடதுப்பக்கமாக மூன்றுதடவை சுழட்டி அந்த எலுமிச்சைப் பழங்களை ஒருவர் காலிலும் படாதபடி எதாவது புதர்ப்பக்கம் வீசிப்போடலாம். அடுத்ததாக இதற்கு உபயோகப்படுவது பூசனிக்காய். பூசனிக்காயின் நடுவில் குங்குமம் வைத்து, அமாவாசை அல்லது ஞாயிற்றுக்கிழமை உச்சிவேளையில் அந்தப் பூசனிக்காயினால் சுற்றி நான்கு சாலை கூடுமிடத்தில் உடைத்துவிடுவதுதிருஷ்டியைப்போக்கும்.

சிலர் திருஷ்டி வராமல் இருக்க யானைவால்முடி அணிவார்கள். சிலர் காசி பைரவகயிறும் அணிவார்கள். வீட்டின் முன்புறம் கற்றாழைச்செடி வைப்பதும் திருஷ்டி தோஷத்தைப்போக்கும் என ஒருவர் சொன்னார்.

மஞ்சள் நிறத்திற்குத் திருஷ்டியைப்போக்கும் சக்தி உண்டாம். ஆதலால் வீட்டின் முன் புறம் இருக்கும் கேட்டில் மஞ்சள் வண்ணத்தை அடித்து வைத்தல் நல்லது.

நாம் புதிதான ஆடைக்கட்டிக்கொண்டால், அதிலும் திருஷ்டிப்படிய வாய்ப்பு உண்டு. அதனால் அதைத் துவைத்தோ அல்லது வேறுவிதமாகச் சுத்தப்படுத்தியோ வைக்க வேண்டும்.

இப்போதெல்லாம் கண்திருஷ்டி வினாயகர் என்ற படமே கிடைக்கிறது. அதிலே வீட்டில் எப்படி எந்தத்திசையில் மாட்ட வேண்டும் என்ற குறிப்பும் இருப்பதால் கவலையில்லை.
சீன வாஸ்துவின்படி வீட்டில் நுழைந்தவுடன், ஒரு நிலைக்கண்ணாடி இருப்பது இந்தத் திருஷ்டியைப் போக்க வல்லது. திருஷ்டிக்கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும். கிழக்குத் திசையை நோக்கி நிற்க வேண்டும். தனியாகவும் நின்று இதை ஏற்கலாம். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நின்று இதைச் செய்துக்கொள்ளலாம். நாடகம் நடத்துபவர்கள் நாடகம் முடிந்தவடன் முழு குழுவையும் மேடையில் நிற்க வைத்துப் பூசனிக்காயால் திருஷ்டி
ச் சுற்றுவதை இன்றும் கா
ணலாம். 

No comments:

Post a Comment