Thursday 7 July 2016

கணிதத்தின் பார்வையில் சிவலிங்கத்தின் வடிவம் !! நம்ப முடியாத உண்மை

கணிதத்தின் பார்வையில் சிவலிங்கத்தின் வடிவம் !! நம்ப முடியாத உண்மை

சிவலிங்கத்திற்கும் அதன் அர்த்தத்திற்கும் பல்வேறு சித்தாந்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல திரித்து கூறப்பட்டவையும் கூட. இருப்பினும் இப்போது நாம் பார்க்க போவது மிகவும் சுவாரசியமானது; குறிப்பாக மாணவர்களுக்கு.
அதற்கு காரணம் இது படிப்போடு சம்பந்தப்பட்டது. அதனால் நாம் இன்று சிவலிங்கத்தின் வடிவத்தை கணிதத்தின் பார்வையில் பார்க்கப் போகிறோம்.
சிவலிங்கத்தின் வடிவம்
சிவலிங்கத்தின் வடிவத்தை நீங்கள் பார்த்துள்ளீர்களா? நீள்வட்டம் அல்லது முட்டை வடிவம் தான் மிக பொதுவான மற்றும் புகழ் பெற்ற வடிவமாகும். இதனை வழிபாடு தளங்கள், கோவில்கள், புனித ஸ்தலங்கள் போன்ற பல்வேறு இடங்களில் காணலாம்.
கோள உருவான சிவலிங்கம்
கோள உருவான சிவலிங்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள சுவாரசியமான விஷயங்கள் உள்ளது. இந்த வடிவத்தை வைத்து என்ன கூறலாம்? அதைப் பற்றி பார்க்கலாம்.
கோளம் எதற்கு?
கணிதத்தில், கோளம் சிறந்த வடிவத்தை குறிக்கும். அதிகப்படியான பரப்பை அது கொண்டுள்ளதாலே அதை சிறந்தது என கூறுகிறோம்.
அன்றாட நாளின் உதாரணங்கள்
இந்த உலகத்தில் உள்ள அனைத்து சுதந்திர தனிமங்களும் கோள வடிவத்தை தான் பெற முயற்சிக்கிறது. கீழே விழும் நீர் துளியை யோசித்து பார்த்தால் உங்களுக்கு புரியும். அது கோள வடிவத்தை தானே கொண்டுள்ளது?
ஆன்மீக முக்கியத்துவம்
கோள வடிவம் சரியான நிலையைக் குறிக்கும். ஆன்மீக ரீதியாக, கடவுளின் உருவமற்ற அம்சத்தை அது குறிக்கிறது. இந்த அண்டம் உருவாகாமல் இருந்த நிலையையும் அது குறிக்கிறது.
நீள்வட்டவுரு வடிவம்
கோள வடிவத்தின் ஓர் உருமாற்றம் தான் நீள்வட்டம். நீள்வட்ட வடிவத்திற்கு இரண்டு மையங்கள் உள்ளது என நம்பப்படுகிறது.
அன்றாட நாளின் உதாரணங்கள்
நீள்வட்ட வடிவத்திற்கு சிறந்த உதாரணமாக முட்டையை கூறலாம். அதனை நீட்டு வரிசையில் வைத்தால் அதனால் சமநிலையில் நிற்க முடியாது. அதற்கு விளிம்புகளும் கிடையாது.
ஆன்மீக முக்கியத்துவம்
சரியான மற்றும் உருவமற்ற கடவுள் படைத்தலுக்கு விருப்பப்பட்ட போது, அந்த வடிவத்தில் உருக்குலைவு ஏற்பட்டது. கோள வடிவில் இருந்து அது நீள்வட்ட வடிவத்திற்கு மாறியது.
சிவலிங்கத்தின் வடிவம்
சிவலிங்கம் இந்த அண்டத்தையே குறிக்கிறது. உருவமற்றதை உருவத்துடன் இணைப்பதற்கான சின்னம் அது; அதாவது கோள வடிவில் இருந்து நீள்வட்ட வடிவத்திற்கு.

16-1444975059-1-shiv-linga3

No comments:

Post a Comment