Monday 18 July 2016

பூரி ஜெகன்னாதர் உருவ விளக்கம்

பூரி ஜெகன்னாதர் உருவ விளக்கம்


                    பூரி ஜெகன்னாதர் -சுபத்திரை-பலராமர் 
                       
                                   
இருக்கும் இடம் ;-
Country:India
State:Odisha
District:Puri
Location:Puri



                                        கிருஷ்ணர் -தன் தங்கை சுபத்திரை ,அண்ணன் பலராமர்  ஆகியோருடன் --மூலஷ்தானத்தில் இருக்கிறார் .
                                          இவர்களின் சிலை அமைப்பு வித்தியாசமாக இருக்கும் !!.
                                அதாவது --முகத்தில் பாதி விரிந்த கண்கள் ,கையும் காலும் உள்ளிழுத்தது போல் பாதியளவு  இருக்கும் .
  ----------ஏன் இந்த தோற்ற அமைப்பு ??பெரும்பாலும்  தெய்வங்களின் உருவ அமைப்பு அவர்கள் அந்த அந்த இடத்தில் எப்படி பக்தருக்கு காட்சி கொடுத்தார்களோ அப்படி அப்படி இருக்கும் [ஆனால் சிவன் பெரும்பாலும் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டதாகவே இருக்கும் ]அப்படியானால் இந்த உருவம் யார் பார்த்தது ?எந்த சந்தர்ப்பத்தில் ???
     இந்த ரூபத்தை ""நாரதர் தரிசித்தார் ""--கிருஷ்ணர் துவாரகையை ஆட்சிபுரியும் போது .
       ஒருநாள் கிருஷ்ணரின் 16108 மனைவிகளும் வசுதேவரின் [கண்ணனின் தந்தை ]மற்றொரு மனைவியான ரோகிணியிடம் சென்று --""எங்களை விட பிருந்தாவனத்தின் கோபியர்களிடம் கண்ணன் அதிக பிரேமையுடன் இருக்கிறாரே அதற்கு என்ன காரணம்? என்று கேட்க?""
          ,அவரும் ""பிருந்தாவனத்தில் கண்ணன் சிறு குழந்தையாக இருக்கும் போது செய்த லீலைகளை சொல்கிறேன் .ஆனால் அதை சொல்லும் போது கண்ணன் வந்துவிட்டால் ,அதை கேட்க நேரிடும் ,பின் பால பருவத்தின் நினைவு மேலீட்டால் அங்கு சென்றாலும் சென்று விடுவான் ,எனவே கண்ணனின் தங்கையான சுபத்திரை வாசலில் நின்று கொண்டு ,கண்ணன் வருவது தெரிந்தால் சமிக்கை கொடுகட்டும் ,நான் உடனே நிறுத்திவிடுகிறேன் "என்று பலமான முன்னேற்பாடுகளை செய்துவிட்டு ,--சொல்ல ஆரம்பிக்கிறார் .



            கண்ணன் கதையை  அனைவரும் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் .சுபத்திரையும் தன்னை மறந்து கேட்டுக்கொண்டிருக்கிறாள் .அப்போது கண்ணனும் பலராமரும் அரச சபையிலிருந்து வருகிறார்கள் ,தன் தங்கை மெய்மறந்து நிற்பதை பார்த்து --எதனால் அப்படி நிற்கிறாள் என்பதை அறிய அருகில் வந்து --அவளுக்கு இருபுறமும் நிற்கிறார்கள் .அப்போது உள்ளே தாயான ரோகிணி தன்னை மறந்து கண்ணன் கதையை சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டு அவர்களும் ஆனந்தத்துடன் கதையை --சுபத்திரையின் இரு பக்கத்தில் --நின்றபடி கேட்கிறார்கள் .

             கண்ணன் --அவனின் கதையாகவே இருந்தாலும் --கேட்க கேட்க பரவசமடைகிறான் .பொதுவாக யார் கதை கேட்டாலும் ,கதை சுவாரசியமாக இருந்தால் கண்கள் விரிவது இயற்கை ,அதிலும் சொல்பவர் சொல்லும் விதத்தால் மேலும் பரவசம் அடைவது இயற்கை --அதுவும் நம்மை பற்றி சிறப்பாக என்றால் ""அப்படியா !!""என்று அதை புதிதாக அறிவதுபோல் அறிவது இன்பமோ இன்பம் ??அப்படிப்பட்ட இன்பத்தில் கண்ணனும் ---கண்ணனின் லீலை பற்றிய இன்பத்தில் --சுபத்திரையும் பலராமரும் --கண்கள் விரிய விரிய உடல் சுருங்க --அதாவது  கையும் காலும் உள்ளிழுக்க --உடல் உருக நின்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் !!!!
              அப்போது ""நாரதர் ""அங்கு வருகிறார் .அவர்களின் தெய்வீக காட்சியை பார்க்கிறார் .கண்ணன் தன் உண்மை சொரூபத்தை நாரதர் பார்ப்பதை உணர்ந்து சுதாரித்து நிகழ்கால உருவத்தை அடைகிறார் .[இங்கு நாரதர் மட்டுமே வெளியிலிருந்து வருகிறார் .மற்றவர்கள் அனைவரும் ---கதை சொல்பவர் ,கேட்பவர் --மெய்மறந்திருக்கிறார்கள் --எனவே அவர்கள் யாரும் கண்ணன் சுயத்தை பார்க்கவில்லை ]
              நாரதர் கண்ணனிடம் வேண்ட --கண்ணன் பின்னொரு காலத்தில் ஒரு அரசனுக்கு இந்த ரூபத்தில் காட்சியளித்து ---பின் மக்கள் அனைவருக்கும் இதே ரூபத்தில் அருள் புரிவேன் என்று கூறுகிறார் .
              அது போல் --இறைவனை நேரில் பார்ப்பது போல் தரிசிக்கவேண்டும் --என்று ஆசையுடன் ,அதைப்பற்றி அறிய முற்பட்டு --மிகவும் சிரத்தை எடுக்கிறான் அரசன் "கங்கதேவ் ".ஒரு தேசாந்திரி மூலம் கேள்விப்பட்டு இந்த இடத்துக்கு வந்த அரசனுக்கு {கங்கதேவ்}காட்சியளிக்கிறார் .இந்த அரசனே கோவிலை கட்டுவித்தார் .இங்கு இறைவன் ""நீல நிற மணி போன்ற தோற்றத்தில் காட்சியளித்ததாகவும் ,அதை பார்த்து தாங்கும் சக்தி சாதாரண மானிடர்களுக்கு இல்லை ?என்பதால் --இப்படி உருமாறி தாகவும்  சொல்லப்படுகிறது ""

இது பகவானின் கதையை பக்தியுடன் சொல்லும் போது --பகவானே உருகுகிறார் !!என்றால் --அதை கேட்கும் மானிடராகிய நாம் ???
   எனவே பகவானின் கதையை சொல்பவர் --எப்படி சொல்லவேண்டும் ?
   கேட்பவர் எப்படி கேட்க வேண்டும்
                      என்பதற்கு  உதாரணம் தான் ""பூரி ஜெகன்னாதர் ""
       மேலும் சகோதரிக்கு இரு புறத்திலும் சகோதரர்கள் நின்று உடன் பிறப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது !!!
        இன்றுவரை --மரத்தாலான இத்திரு உருவங்கள் --குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறது
இங்கு ரத உற்சவம் ---மிக சிறப்பு



No comments:

Post a Comment