சோமேஸ்வரர்:
யமுனையின் தென்கரையில் நைதி என்னும் இடத்துக்குச் சென்று அங்கிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் சோமேஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.
திருவானைக்கா போல இங்கும் சிவலிங்க பீடத்தைச் சுற்றிலும் நீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. இது பஞ்சபூதங்களில் நீர் தொடர்புடை யது. இது சிறிய கோயில்தான் என்றாலும் புராதனமானது. கோயிலுக்கு வெளிச் சுற்று உண்டு. அதில் ஆஞ்சநேயரும், ஆறுமுகப் பெருமானும் தனித் தனியே உள்ளனர். இங்கே முருகன் மயில் மீது ஆரோகணித் துள்ளார்.
அனுமன்:
கோட்டைக்கு வெளியே ஒரு ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் படுத்த நிலையில் பிரும்மாண்ட வடிவில் உள்ளார். வலக்கரத்தில் கதாயுதமும் இடக்கரத்தில் சின்னஞ்சிறு உருவில் ராம், லட்சுமணர்களும் உள்ளனர்.
அனுமனின் வலதுகாலில் மயில் ராவணன் மிதிபட்ட நிலையில் உள்ளான். இடது காலுக்குச் சிறிது கீழே பாதாள தேவி உள்ளாள். அதற்கும் கீழே பாதாள அறையில் அனு மனின் சின்னஞ்சிறு சிலை ஒன்றுள்ளது. மேலே உள்ள விஸ்வரூப அனுமனின் பிரதிநிதி இவர்.
மயில் ராவணன் இராம இலட்சுமணரைத் திரிவேணிக்கு அருகில் பாதாளத்தில் மறைத்து வைத்ததாகவும் அனுமன் அவர்களை மீட்டதாகவும் அதன் அடையாளமாகப் பாதாளத்திலிருந்து வெளிவரும் பாவனையும் இந்த வடிவில் விளக்கப்படுகிறது.
ஆனால் ராமாயணத்தில் இப்படி ஒரு கதை சொல்லப்படவில்லை. வட இந்திய புராணக்கதை அடிப்படையில் அமைக்கப்பட்டது.
பரத்வாஜர்
ஆசிரமம்:
திரிவேணியில் உள்ள பரத்வாஜர் ஆசிரமம் பழமையான சிறு கோயில் இராமன், இலட்சுமணன், சீதை மூவரும் குகனை விட்டுப் பிரிந்தபின் இந்த ஆசிரமத்துக்குத் தான் வந்தனர். திரும்பும் போதும் இங்கு வந்தனர்.
இராமாயணத்தில் இந்த பரத்வாஜர் ஆசிரமம் பெரியதொரு காடாகச் சித்தரிக்கப்பட் டுள்ளது.
பிறகு இங்கே அலகாபாத் நகரம் அமைக்கப்பட்டதால் அந்தக் காடு அழிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது ஒரு சிறிய கோயில்தான் ஆசிரம நினைவுச் சின்னமாக உள்ளது.
நேருவின் இல்லமான ஆனந்தபவனுக்கு எதிரேதான் இந்தக் கோயில் உள்ளது. கோயில் கருவறைக்குள் பரத்துவாஜர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது. இராமாயணம் படித்தவர்களுக்கு மட்டுமே பரத்துவாஜர் ஆசிரமம் பற்றித் தெரியும். அதைத் தெரிந்தவர்கள் மட்டுமே இந்தக் கோயிலைப் பக்திப் பரவசத்துடன் வழிபட முடியும்.
அலோபிமாதா
கோயில்:
அருள் வழங்குவதில் லோபம் இல்லாதவள் என்பதைக் குறிக்கும் அலோபி அன்னைக் குடிகொண்டிருக்கும் கோயில் பரத்துவாஜர் ஆசிரமக் கோயிலுக்கு அருகில் உள்ளது.
உக்கிரக் காளியாக யாரும் நெருங்க முடியாத நிலையில் இருந்தாளாம் இந்த அன்னை. கொடிய சக்தியாகவும் விளங்கினாளாம். ஆதிசங்கரர் இங்கே வந்து ஸ்ரீசக்கரம் செய்து அவள் கோபத்தைத் தணித்து கொடிய சக்தியை மாற்றினாராம்.
பரத்வாஜ முனிவரின் காலத்திலேயே இந்தக் கோயில் அமைக்கப்பட்டிருக்கலாம். காரணம், தவ யோகிகள் உள்ள இடத்தில் அன்னைக்குக் கோயில் அமைவது இயல்பே. தன்னை உரிய வகையில் ஆராதிக்காத காலத்தில் சக்திகள் கடுமை கொள்வதும் தகுதியுள்ளவரால் சாந்தி செய்யப்படும் போது அமைதி கொள்வதும் இயல்பே. ஆதிசங்கரர் காலத்தில் இப்படித்தான் சாந்தி செய்யப்பட்டது.
ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இக்கோயிலில் திருவுருவம் ஏதும் இல்லை. ஆனால் தனது சக்தியின் காரணமாக, உத்தரப்பிரதேச மக்கள் எல்லாரையும் தன்பால் ஈர்க்கும் தன்மையுடன் விளங்குகிறது. நம்மூர் சமயபுரம் போல் அந்த மாநில மக்களிடையே மிகுந்த செல்வாக்குடன் விளங்கும் ஆலயம் இது. திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் உ.பி., மாநிலத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வந்து கூடுகின்றனர்.
பெண்கள் கூட்டமே மிகுந்திருக்கும்.
கோயிலின் கருவறையில் அழகான ஒரு பீடம் உள்ளது. அதன் நடுவே சதுரமான சிறுகுழி உண்டு. அதன் அடியில்தான் ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது.
ஆதிகேசவன்
கோயில் :
திரிவேணிக் கரையில் இருக்கும் புராதனக் கோயில்களில் இதுவும் ஒன்று.
கங்கைக்கு அக்கரையில் நாகபாசு என்ற பகுதியில் இக்கோயில் உள்ளது. திரிவேணியைக் காக்கும் காவல் தெய்வமாக வாசுகி என்னும் நாகஅரசு இங்கு மூலவராக உள்ளது.
வட்டவட்டமான பல பின்னல்களுடன் உடலைச் சுருக்கிப் பல தலைகளையும் விரித்துப் படமெடுத்தபடி வாசுகியை மூலஸ்தானத்தில் தரிசிக்கலாம்.
நாகதோஷம் உள்ளவர்கள், புத்திர ஸ்தானத்தில் ராகு கேது அமையப் பெற்ற ஜாதகர்கள், ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆகியோரால் வழிபடச் சிறந்த கோயில் இது.
லட்சுமணன் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவன். அது காரணமாக அவன் இங்கு வந்து வழிபட்டுள்ளான்.
இங்குள்ள மண்டபத்தில் ஒரு அரிய காட்சி. மகாபாரதத்தில் வரும் ஒரு காட்சியைச் சித்தரிக்கும் விதமாகக் கல்லில் வடிக்கப் பட்டுள்ள அதியற்புத சிற்பம் அது.
போரில் தளர்ந்த பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்து உத்தராயண புண்ணிய காலத்தில்தான் என் உயிர் பிரிய வேண்டும் என்று இருந்தார். அதுவும் கங்கைக் கரையில்தானே ! அதையே இங்கு கோயில் மண்டபத்தில் காட்சியாக்கியுள்ளார்கள்.
இருபத்து ஆறு அடி நீளமாகப் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். இரண்டு பேர் படுத்து உறங்குமளவுக்கு பீஷ்மரின் மார்பு விரிந்துள்ளதாக இருக்கிறது.
இரும்புக் கம்பிகளாலான அம்புகள் அவரது உடலைத் தாங்கியுள்ளன.
ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகியவற்றில் நீராடிவிட்டு, அதன்பின் திரிவேணிக்கு வந்து தீர்த்தமாடி, பிறகு காசிக்குச் செல்வோர் உண்டு.
வேதகாலத்திலிருந்து பெருமைமிக்கதாக விளங்கும் திரிவேணி மக்களின் பாவம் போக்குவதாலேயே தன்னையும் புனிதமாக்கிக் கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது.
விஸ்வநாதரை எல்லோரும் தொட்டு வணங்கலாம்
முக்தித் தலமாக விளங்குவது காசி. முக்திக்குத் தேவை பக்தி.
“பல காரணங்களுக்காகப் பக்தி புரிந்தாலும் முக்தியை வேண்டி பக்தி செய்வதே இவற்றில் சிரேஷ்டமாகும்”என்று சொல்லியிருக்கிறார் காஞ்சி பரமாச்சாரியார். அவர் சொல்கிறார்:
"ஈசுவர உபாசனையாகிய பக்தியால்
தான் நேரடியாக முக்தி கிடைக்கும். ஞானத்தினால் அல்ல” என்பதே ஸ்ரீசங்கரர் முதலிய அத்வைத ஆசாரியர்களின் கருத்து.
முக்தி என்றால் என்ன ?
’விடுபடுவது’ என்று அர்த்தம்.
எதிலிருந்து விடுபடுவது ?
சம்சாரத்திலிருந்து விடுபடுவதுதான் முக்தி.
மறுபடி மறுபடி பிறந்து கொண்டும் செத்துக் கொண்டும் இல்லாமல் நித்தியமான சத்திய நிலையை அடைவதுதான் முக்தி. மனசு என்று ஒன்று இருப்பதால்தான் சம்சார பந்தம் தெரிகிறது. மனசு மறைந்தால்தான் பந்தத்திலிருந்து விடுதலை. ரூபம், குணம் இவை இருக்கிற வரையில் இவற்றை அனுபவிக்கிற மனசும் இருக்கத்தான் செய்யும்.
பக்தி செலுத்துகிறபோது ஈசுவரனுடைய ரூபம், குணம் எல்லாவற்றையும் மனசினால் அனுபவிக்கிறோம். பக்தி நிலையிலும் பல விதமான உணர்ச்சிகள், பரவசம், ஆனந் தம், அழுகை எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன.
மனசு அதற்கு ஆதாரமான வஸ்துவில் கரைந்து போய் அந்த ஆதார வஸ்துமட்டும் நிற்கும் போதுதான் எந்த மாறுதலும் இல்லாத சாந்த நிலை - முக்தி அல்லது மோட்ச நிலை சித்திக்கிறது.
இந்த மனசுக்கு ஆதாரமாக இருக்கிற ஆத்மா என்பது என்ன என்று அனவரதமும் விசாரம் செய்துகொண்டே இருப்பதுதான், ஞான மார்க்கம்
என்பது. இதே விசாரத்தில் மனசை முழுக்கினால், கடை சியில் தானாகவே மனசு மறைந்து ஆத்மா
இன்னதென்று தெரிந்துவிடுகிறது.
“ஆத்ம சாட்சாத்காரம் என்ற அந்த நிலையே விடுதலை
அல்லது முக்தி என்று தெரிகிறது” என்கிறார் பரமாச்சார்யார்.
எனவே காசியில் இறப்பது மட்டுமல்ல; பக்தியுடன் வணங்குவதும் முக்திக்கு வழிதான்.
விஸ்வநாதர்:
காசியில் சிவபெருமானுக்குக் கோயில்
எழுப்பப்படுவதற்கு முன்பே அங்கு காண பத்தியம், செளரம், சாக்தம், நாகவழிபாடு, யட்சர்கள்
வழிபாடு முதலியன இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் சிவபெருமானும் உமையவளும் திருமணம்
முடிந்து பூவுலகில் இன்பமுடன் அடியெடுத்து வைத்த இடம்தான் காசி என்றும், ஜோதிர்லிங்கம்
அண்ட சராசரங்களிலும் துளையிட்டுப் போனபோது இந்தப் பூமியில் காசியின் வழியேதான் ஊடுருவியது
என்றும் புராணங்கள் காசியின் புகழைப் பேசுகின்றன.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியா
வந்த சீன யாத்ரிகர் யுவான் சுவாங் காசியில் மணிகர்ணிகா காட் அருகில் உள்ள ஒரு பெரிய
கோயிலை மகேஸ்வர் மகாதேவர் என்று கூறுகிறார்.
1193-ல் கோரிமுகமதுவின் தம்பி குத்புதீன்,
யுவான் சுவாங் குறிப்பிடும் கோயிலையே அழித்திருக்கிறார்.
நாராயண பட் என்னும் பெரியார் ’திரிஸ்
தலி சேது' என்னும் தீர்த்தயாத்திரை நூலை எழுதியவர்.
இவர் அக்பரின் அரசவையில் நல்ல செல்வாக்குடன் இருந்த ராஜா தோடர்மால் உதவியுடன் காசியில்
புதிய விஸ்வநாதர் கோயில் ஒன்றை 1585ல் கட்டினார்.
ஆனால், பிறகு வந்த ஒளரங்கசீப் 1669ல்
அக்கோயிலை முழுவதுமாக இடித்து மசூதியாக்கிவிட்டார். அப்போதும் ஜோதிர் லிங்கமான விஸ்வநாதர்
பகைவர் அறியாமல் காப்பாற்றப்பட்டார். காசியில் உள்ள ஞானவாவி என்னும் கிணற்றில்தான்
விஸ்வலிங்கத்தை மறைத்து வைத்திருந்தனர்.
1777-ம் ஆண்டு இராணி அகல்யாபாய் என்பவள்தான்
இப்போது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலைக் கட்டினாள். இன்றைய விஸ்வநாதர் கோயிலுக்குப்
பின்புறம் இடிபாடுகளையும் பழைய மசூதியையும் காணலாம்.
விஸ்வநாதருக்கு முதலில் அவிமுக்
தேஸ்வரர் என்ற பெயர்தான் வழங்கி வந்தது. அது
நாராயண பட் காலத்தில் விஸ்வநாதர் கோயிலாகியிருக்கலாம். அதுதான் ஒளரங்கசீப் இடித்த கோயில்.
அங்கு கட்டிய மசூதிக்கு ஞானவாபி மசூதி என்றே இன்றும் பெயர். ஒரு பகுதி இந்துக் கோயிலின்
தூண்கள் இருக்க, மறு பகுதியை மசூதியாக்கி விட்டார்கள். இரண்டு மதங்களின் வழிபாட்டு
இடமும் ஒரே கட்ட டத்தில் இருக்கின்ற அதிசயமிது.
இப்போதும் மக்கள் கங்கையில் நீராடி
விட்டு, விஸ்வநாதர் கோயிலின் வலது புறம் வழியாகச் சென்று, ஞானவாவியை தரிசித்த பிறகே
விஸ்வநாதர் கோயிலுக்கு வருவதை வழக்கமாக்கிவிட்டனர். ஞானவாவி மசூதிக்குக் கிழக்கே ஞானவாவி
தீர்த்தம் உள்ளது.
-- புனித பயணம் வ(ள)ரும்..
No comments:
Post a Comment