Tuesday 6 March 2018

சிவன் வடிவமைத்த காசி - 09

பஞ்சதீர்த்த யாத்திரை:

காசி யாத்திரை என்று கூறப்படுவதைப் போல காசியில் உள்ள 64 தீர்த்தக் கட்டங்களிலும் உள்ள முக்கியமான ஐந்து கட்டங்களில் நீராடுவதைப் பஞ்சதீர்த்த யாத்திரை” என்பர்.

Image result for varanasi tourism

ஐந்து தீர்த்தக் கட்டங்களிலும் ஒரே நாளில் அடுத்தடுத்து நீராடுவதே பஞ்ச தீர்த்த யாத்திரை. அவை:

1. அசி சங்கம் கட்டம்

எல்லாக் கட்டங்களுக்கும் தெற்கேயுள்ளது. அசி ஆறு கங்கையுடன் கலக்கும் இடம். இங்கு நீராடி, கரையில் உள்ள அசி சங்கமேச்வரரை (சிவமூர்த்தியை)த் தரிசிக்க வேண்டும்.

2. தசாசுவமேத கட்டம்

இங்கு நான்முகக் கடவுள் பத்து அசுவமேத யாகம் செய்தனர். அதனால் இப்பெயர். இங்கு நீராடி, கரையிலுள்ள சூலடங்கேஸ்வரர் என்ற சிவமூர்த்தியைத் தரிசிக்க வேண்டும்.

3. வருண சங்கம் கட்டம்

எல்லாக் கட்டங்களுக்கும் வடக்கே வருணை என்ற ஆறு கங்கா நதியுடன் கலக்கும் இடத்தில் உள்ளது. அங்கு நீராடி, கரையில் உள்ள ஆதிகேஸ்வரரையும், வருணேஸ்வரரையும் தரிசிக்க வேண்டும்.

4. பஞ்சகங்கா கட்டம்

இங்கு கங்கையுடன் யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் என்ற நதிகள் அந்தர்முகமாக வந்து கூடுவதனால் இதற்கு பஞ்ச கங்கா கட்டம் என்று பெயர். இங்கு நீராடி, கரையிலுள்ள பிந்துமாதவரையும் அவர் அருகிலுள்ள பஞ்ச கங்கேஸ்வரரையும் தரிசிக்க வேண்டும்.

5. மணிகர்ணிகா கட்டம்

மணிகர்ணிகை என்ற திருக்குளத்துக்கு நேராக உள்ள கங்கை நதியின் துறை. இங்கு நீராடி, கரையிலுள்ள மணிகர்ணி கேச்வரரையும் மற்றொரு புறம் உள்ள தேவி ஆலயத்தையும் தரிசிக்க வேண் டும்.

இந்த ஐந்து இடங்களில் நீராடியபின், நேரே விஸ்வநாதர் ஆலயம் சென்று விஸ்வநாதரை வணங்கி வழிபட வேண்டும்.

அசி கட்டத்திலிருந்து வருண சங்கமம் வரை சுமார் 10 கி.மீ. தொலைவு. ஓரிடத்தில் சென்று அங்கிருந்து ஐந்து இடங்களிலும் நீராடி வர ஐந்து மணி நேரம் செல்லும். ஆதலால் கூடுமானவரை காலையிலேயே செல்வது நல்லது.

Image result for varanasi tourism

பஞ்ச தீர்த்தத்தில் நீராட வருவோர் அசி, தசாசுவமேதா ஆகிய இரண்டில் நீராடிய பின் மணிகர்ணிகா கட்டத்தில் நீராட மாட்டார்கள். இதுவே ஐந்திலும் மையம். நகருக்கும் மையம். அதனால் இதற்கும் வடக்கே உள்ள இரண்டிலும் நீராடிய பிறகே இங்கு வந்து ஐந்தாவதாக நீராடுவர்.

இங்கு ஈமக்கிரியை செய்வோர் - தகனம் செய்வோர் - ஆண்டுக் குத்தகையாகத் தங்கள் பணியை ஏற்றுச் செய்கின்றனர்.

சிலவேளைகளில் இந்த மணிகர்ணிகா கட்டம் முழுவதும் சவங்களாகவே இருக்கும். ஆற்றின் மிக அருகில் இருப்பதால், தகனம் செய்ததும் அஸ்தியைக் கரைப்பதற்கு எளிதாகும்.

இராமா கட்டத்தில் அக்னீஸ்வரர் கோயில் உள்ளது.

பஞ்ச தீர்த்தமாடுவோர்க்கு உரியது பஞ்ச கங்கா கட்டம். பிரயாகையில் கங்கை, யமுனை, சரஸ்வதியாக மூன்று நதிகளோடு இங்கே தூதபாபா, கிரணா என்ற வேறு இரு நதிகளும் மறைமுகமாகக் கலப்பதாக ஐதீகம். அதனால் 'பஞ்ச கங்கா' ஆயிற்று.

தர்மானந்தா என்ற சிறு வாய்க்காலே அந்த இரு நதிகளின் அடையாளம் என்றும் கூறுவதுண்டு.

'கயா காட்' நாகேஸ்வரி கோயில் உள்ள துறை. இத்தேவியைச் சீதளா என்பர்.

துறைகளின் ஒழுங்கும், கங்கையின் வேகமும், துறைதோறும் கோயிலும், மாளிகைகளும், சடங்கு செய்வோர், இறுதிச் சடங்கு செய்வோர், இதிகாச, புராண உபன்யாசம் கேட்போர், நீரோடுவோர், துணி வெளுப்போர் ஆகியோரது கூட்டமும், கங்கைக் கரையின் சமய ஒற்றுமைக் காட்சியும் வேறெங்கும் காணமுடியாத காட்சிகள்.

காசியால் கங்கைக்குப் பெருமையா கங்கையால் காசிக்குப் பெருமையா என்றுணர முடியாத சங்கமமே காசியும் கங்கையும்.

துறைகள் (64 கட்டங்கள்):

1. அசி சங்கம காட், 2. லோலார்க காட், 3. துளசிதாச காட், 4.ஜானகி காட், 5. பார்சுவநாத காட், 6. சிவாலய காட், 7. நிரஞ்சன காட், 8. பிரமேந்திர காட், 9. ஹநுமந்த காட், 10. அரிச்சந்திர காட்.

11. லல்லி காட், 12. சிந்தாமணி காட், 13. ராணி காட், 14. கேதார காட், 15. சௌகி காட், 16.ருக்மாங்கத காட், 17. க்ஷோமேசுவர காட், 18. மானஸரோவர் காட், 19. நாரத காட், 20. அன்னபூரணா காட், 21. பாண்டேய காட்.

22. சதுர்சஷ்டி காட், 23. தண்டி காட், 24. ராணாமஹால் காட், 25. முன்ஷிகாட், 26. அகல்யாபாய் காட், 27. சீதளா காட், 28. பிரயாக காட், 29. தசாசுவமேத காட், 30. அசுவ காட், 31. கிடிகீ காட், 32. மான்மந்திர காட்.

33. திரிபுர சுந்தரி காட், 34. விசாலாட்சி காட், 35. ஜராசந்தேசுவர காட், 36. லலிதா காட், 37. கங்காகேசவ காட், 38. பிரம்மநாள் காட், 39. மகாமயான காட், 40. சித்திவிநாயக் காட், 41. மணிகர்ணிகா காட், 42. தத்தாத்ரேய காட், 43. சேந்திய காட், 44. யமேசுவர காட்.

45. கங்காமகால் காட், 46. அக்னீச்வர காட், 47. ராமா காட், 48. லட்சுணபாலா காட், 49. மங்களா கெளரி காட், 50. பஞ்சகங்கா காட், 51. பிந்து மாதவ காட், 52. துர்க்கா காட், 53. பிரும்ம காட், 54. சந்திர காட்.


55. ராஜமந்திர காட், 56. லால் காட், 57. கெள் காட், 58. நாராயண காட், 59. திரிலோசனேசுர காட், 60. பிரகலாத காட், 61. சங்கடாதேவி காட், 62. ராஜ காட், 63. கட்கவிநாயக காட், 64. வருணா சங்கம் காட்.

Image result for varanasi tourism


கங்கா, யமுனா, சரஸ்வதி

உலக நாகரிகங்கள் எல்லாம் ஆற்று . வெளியில் தோன்றியதாகவே வரலாறு. நைல்நதி நாகரிகம், சிந்து (தி) சமவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம் என்று சொல்லப்படுவதெல்லாம் நதிகளின் கரையில் தொடங்கியது.

அதுபோல் இந்தியாவில் தொன்மையான நதிக்கரையில் நாகரிகம் வளர்ந்தபோதே மக்களின் சடங்கு முறைகளோடு கங்கையின் திரிவேணி சங்கமப் பகுதியும் வளர்ந்து தனியிடம் பெற்று விட்டது.

ஆறும் கடலும் கலக்குமிடமோ ஆறும் ஆறும் கலக்குமிடமோ அவை அழகியலை ரசிக்கும் கண்களுக்கு வேண்டுமானால் ரம்மியமான காட்சியாகத் தெரியலாம்.

ஆனால் ஆன்மிக சிந்தனையோடு பார்ப்பவர்களுக்கு அது தெய்வீகத் திருக்கோலம். ஜீவாத்மா பரமாத்மாவோடு ஒன்று கலக்கும் முக்தி நிலையைத்தான் அவர்களுக்கு அது காட்டுகிறது. அவ்விடத்தை அவர்கள் புனிதமாகப் போற்றி, இறைவன் இருப்பிடமாக நினைந்து வணங்குகிறார்கள்.

Image result for allahabad tourism

நீரானது பஞ்ச பூதங்களில் ஒன்று.

சிவபெருமானின் தலையில், திருமாலின் அனந்தசயனத்துக்கு அடியில், கண்ணனின் லீலைகளில் என்று நீர்நிலைகளைத் தெய்வாம்சத்தோடு இணைத்துப் பேசுவது இந்துமத மரபு.

தீர்த்த யாத்திரை என்பது ரிக் வேத காலத்திலேயே தோன்றி விட்டது. அல்லது அதற்கு முன்பிருந்தே உள்ளது எனலாம். ரிக் வேதத்திலேயே திரிவேணியில் மூன்று நாள் தங்குவது உத்தமம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே மிகத் தொன்மை நாளிலேயே திரிவேணி - கங்கையும் யமுனையும் வெளிப்படையாகவும் சரஸ்வதி என்ற நதி மறைமுகமாகவும் சங்கமம் ஆகும் இடம் - இந்துக்களின் பொது நம்பிக்கைக்கு உரியதாகி விட்டது.

'சரஸ்வதி நதி முன்பு வெளிப்படையாகவே கலந்து இருக்க வேண்டும். அது பிறகு போக்கு மாறியோ வற்றி அழிந்தோ போயிருக்க வேண்டும். வெளிப்படத் தெரியாத காலத்திலும், மறைவாகக் கலப்பதாக நம் பிக்கையோ கதையோ ஏற்பட்டிருக்கலாம்'  என்பர் சில ஆராய்ச்சியாளர்கள்.

பிரமன்தான் சரஸ்வதியைப் படைத்தான். அவனே படைத்த சரஸ்வதியை அவனே மணக்க விரும்பியதால் சரஸ்வதி கோபம் கொண்டு திருமாலிடம் சென்று அடைக்கலம் புகுந்தாள். இந்தக் கதை கூட, சரஸ்வதி மறைமுகமாகத் திரிவேணியில் சங்கமிக்கும் விஷயத்தைக் கூறவந்த புராணக் கதையாக இருக்கலாம்.

திரிவேணி சங்கமம் அமைந்த இடத்துக்கு பிரயாகை என்பதே தொன்மைப் பெயர். அக்பர் தனது ஆட்சிக் காலத்தில் இவ்வூருக்கு இலாகாபாத் என்று பெயரிட்டான். அதன் பின்வந்த ஆங்கிலேயர்கள் அதை அலகாபாத் என்று குறிப்பிடலாயினர்.

திரிவேணியே தீர்த்தங்களின் தாயகம். எல்லா தீர்த்தங்களும் இங்கிருந்தே தோன்றியதாக ஐதீகம். மூன்று நதிகளின் சங்கமம் என்பதைக் குறிக்கவே திரிவேணி ஆயிற்று.

பிரம்மா தனது வேள்விக்கு மூன்று வகையான தீயையாக குண்டலத்தில் வளர்த்து வேள்வி செய்ததால் அதைக் குறிக்கும் விதமாக பிரயாகை என்று இவ்விடத்துக்குப் பெயர் வந்தது.

நம்மூர் கும்பகோணத்தில் 12 ஆண்டுக ளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத்துக்கு கூறப்படும் அத்தனைச் சிறப்புகளும் இந்த திரிவேணிக்கும் பொருந்தும் இங்கே நடைபெறும் மகாமகத்தைக் கும்பமேளா என்பர். இந்தக் கும்பமேளா இன்று இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் பரவி விட்ட பெருந்திருவிழா ஆகிவிட்டது.

இங்குபோல நாசிக், உஜ்ஜயினி, ஹரித்துவர் ஆகிய இடங்களிலும் கும்பமேளா நடக்கிறது. இவ்விடங்களுக்கும் மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு தீர்த்தமாடுவர். இமயமலைச் சாரலில் தவம் புரியும் யோகிகளும் நிர்வாண சாமியார்கள் என்று, அழைக்கப்படும் திகம்பர சாமியார்களும் இங்கே வந்து நீராடுவர். ஆனாலும் திரிவேணியே தலைமைத் தீர்த்தமாக விளங்குகிறது.

Related image

காசி யாத்திரைக்கு என்று ஒரு மரபு உள்ளது. அதாவது ராமேஸ்வரத்தில் நீராடி சிவபிரானை வழிபட்டு, பிறகு ராமேஸ்வரத்தில் ஒரு பிடி மண் எடுத்துச் சென்று காசியில் கங்கையில் கரைத்து விட்டுப் பிறகு காசியில் நீராடி, சிவனை வழிபட்ட பிறகு காசியில் தீர்த்தம் எடுத்து வந்து, மீண்டும் ராமேஸ்வரம் திரும்பி அந்நீரால் இராமேஸ்வர கோயிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால்தான் காசியாத்திரை முற்றுப் பெற்றதாக ஆகும்.

இதே மரபு திரிவேணிக்கும் உண்டு.

பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் நீராடி, பிறகு காசியில் மணிகர்ணிகாவில் நீராடி, கயா சென்று முன்னோர்களுக்குக் கடன் கழித்து, மீண்டும் திரிவேணிக்கு வந்து தீர்த்தம் எடுத்துப்போய் - இராமேஸ்வரத்தில் பெருமானுக்குத் திருமுழுக்கு நடத்தினால்தான் காசியிலிருந்து ராமேஸ்வரம் வருவோரின் ராமேஸ்வர யாத்திரை முற்றுப் பெற்றதாகும்.

தாரா கஞ்ச் என்னும் ரயில் நிலையத்தில் இறங்கினால் 2 கி.மீ. தொலைவில் திரிவேணியை அடையலாம். இங்கு பக்தர்கள் தங்குவதற்கு சத்திரங்களும், தனியார் விடுதிகளும் (லாட்ஜ்கள்) உள்ளன. தமிழ் நாட்டினர் சென்று தங்குவதற்கு ஏதுவாக நகரத்தார்கள் சத்திரம் இருக்கிறது.

சங்கமத் துறைக்குச் செல்ல வண்டி ஏற்பாடுகள், படகு ஏற்பாடுகள் ஆகியவற்றையும், பக்தர்களுக்கு உதவியாக நகரத்தாரே (நாட்டுக்கோட்டை செட்டியார்கள்) செய்கிறார்கள். பக்தர்களுக்கு இப்படி உதவி செய்வதையே ஒரு புண்ணியத் தொண்டாக எண்ணிச் செய்கிறார்கள்.

சங்கமத்துறை அப்படி ஒன்றும் ஆழமாக இருக்காது. மேடு தட்டிப் போய்தான் இருக்கும். பக்தர்கள் பயமின்றி இறங்கிக் குளிக்கலாம். முடியாதவர்கள் அதற்கென அமைக்கப்பட்டுள்ள பரண்களில் அமர்ந்து நீரை முகந்து தலையில் ஊற்றிக் குளிக்கலாம்.

Related image

பண்டாக்கள் என்று அழைக்கப்படும் புரோகிதர்கள் நிறைய கிடைப்பார்கள். சடங்குகளை அவர்களே முன்வந்து - கட் டணம் பேசிக் கொண்டு செய்து முடிப்பார் கள்.

இங்கே யமுனை நதிக்கரையில் கி.பி.1583ஆம் ஆண்டில் அக்பர் ஒரு கோட்டை கட்டினார். அது இன்னமும் இருக்கிறது. ஆனால் நதி நீரால் சேதப்பட்ட நிலையில் காட்சி தருகிறது. அக்பர் இங்கே கோட்டை கட்டி நகரை விரிவுபடுத்தியதன் காரண மாகவே, பிரயாகை என்ற பெயரை மாற்றி இலாகாபாத் என்று பெயர் இட்டார்.

அட்சயவடம் என்று கூறப்படும் ஆலமரம் ஒன்று இந்தக் கோட்டையில் இருக்கிறது. படகுப் பயணிகள் சென்று தரிசிக்கலாம். பிரளய காலத்தில் வெள்ளப் பெருக்கில் கண்ணன் ஆல் இலைமேல் குழந்தையாக மிதப்பானாம். அது, இந்த மரத்தின் இலையில்தானாம்.

திரிவேணியில் ஆழமற்ற குளிக்கும் இடத் தில் கூட நீரின் இழுப்பாற்றல் உள்ளுக்குள் அதிகம் இருப்பதை உணரலாம். சரஸ்வதி நதி மறைமுகமாகக் கலப்பதையே இது உணர்த்துகிறது என்பர்.

பாற்கடலில் அமுது கடைந்தபோது அமுத கலசத்தை அசுரர்கள் கைப்பற்றிக் கொள்ள ஓடிவந்தனர்.

பிரகஸ்பதி அதைத் தூக்கிக் கொண்டு வானுலகுக்குள் ஓடினார். அப்போது தளும்பிய அமுதம் நான்கு இடங்களில் சிந்தியது. அந்த நான்கு இடங்களே கும்பமேளா நடக்கும் நான்கு ஊர்களாக (பிரயாகை, நாசிக், உஜ்ஜயினி, ஹரித்துவார்) விளங்குகின்றன.

Image result for allahabad tourism

புராணத்தில் கூறப்படும் அமுதக் கதை இப்படியிருக்க, யோகிகள் கூறும் அமுதம் வேறு. அதாவது - சூரிய மண்டலமாகிய . வலது கண்ணும் சந்திர மண்டலமாகிய இடது கண்ணும் அக்னி மண்டலமாகிய புருவ மத்தியும் இணைந்தால் அமுதம் தலையில் ஊறும் என்பது யோக சித்தாந்தம்.

வலக்கண் யமுனை. இடக் கண் சரஸ்வதி. புருவ நடுவில் வெளித் தெரியாமல் மறைந்திருக்கும் கண் ஒன்று. இப்படிக் குண்டலினி சக்தி ஆறு ஆதாரங்களைக் கடந்து தலையுச்சியில் ஏறுவதால் அதற் குத்துணை செய்வதே இந்த திரிவேணி அன்னையின் அருள் என்பதால் அவள் கையில் அமுத கலசம் உள்ளது.

                                 -- புனித பயணம் ()ரும்..

No comments:

Post a Comment