தயாரிக்கும்போதே அற்புதமான மணம் பரவி, நாசியில் நுழைந்து, நாவின் சுவை நரம்புகளைத் தூண்டி, பசியாற வரவேற்கும் உணவு வகைகளில் ரசத்துக்கு முக்கிய இடமுண்டு. சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடும்போது பசி தணிக்கும் ரசம், அப்படியே சாப்பிட்டாலும் அசத்தும். `தென்னாட்டு சூப்’ என்ற செல்லப் பெயர்கொண்ட ரசத்தில் பல வகைகள் உண்டு. ரசம் தயாரிப்பதில் ரசப்பொடி ஒரு முக்கிய அங்கம்வகிக்கிறது. சில ரசப்பொடிகள் செய்யும் விதம், ரசம் செய்யும் முறை இங்கே...
ரசம் செய்யும் முறை...
முதலில் புளியைக் கரைத்து, பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். பொடியாக நறுக்கிய தக்காளியை நன்கு பிழிந்து, மசித்துச் சேர்த்துக் கொதிக்கவிடவும். பருப்பு சேர்ப்பதாக இருந்தால், பருப்பைத் தண்ணீரில் கரைத்துச் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்த பின் ரசப்பொடி, பெருங்காயம் சேர்த்து நுரைத்து வந்தவுடன் உப்பு சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும். பிறகு கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைச் சேர்த்து மூடி வைக்கவும்.
விதம்விதமாக ரசப்பொடி தயாரிக்க...
தேவையானவை:

செய்முறை: வாணலியில், ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் மிளகாயை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் இதர பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக மிதமான சூட்டில் கறுகாமல் வறுக்கவும். ஆறியபின் கொரகொரப்பாகப் பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்து உபயோகப்படுத்தவும்.
(அல்லது)
எல்லாப் பொருள்களையும் வெயிலில் நன்கு காயவைத்துக் கொரகொரப்பாகப் பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து உபயோகப்படுத்தவும்.

ஸ்பெஷல் ரசப்பொடி வகைகள்
மைசூர் ரசப்பொடி
தேவையானவை:
* காஷ்மீரி மிளகாய் - 15 (அ) 20
* தனியா (மல்லி) - அரை கப்
* மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
* சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
* வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
* கடுகு - ஒரு டீஸ்பூன்
* பெருங்காயம் - அரை டீஸ்பூன்
* கொப்பரைத் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, பெருங்காயம், கொப்பரைத் துருவல் ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து மிதமான சூட்டில் கறுகாமல் வறுத்து எடுக்கவும். ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். மைசூர் ரசம் செய்யும்போது இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம்.
குறிப்பு: ஃப்ரிட்ஜில் வைத்து, கைப்படாமல் உபயோகித்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

உடுப்பி ரசப்பொடி
தேவையானவை:
* காஷ்மீர் மிளகாய் - இரண்டரை கப்
* தனியா (மல்லி) - ஒரு கப்
* சீரகம் - கால் கப்
* வெந்தயம் - 3 டேபிள்ஸ்பூன்
* கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்
* பெருங்காயம் - அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 3 ஆர்க்கு
* தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, மிளகாயைச் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய்விட்டுச் சூடாக்கி தனியா, சீரகம், வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து எடுக்கவும் (தனியா, கறிவேப்பிலையை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்). ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். உடுப்பி ரசப்பொடி தயார். இந்தப் பொடி ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்.

ஆந்திரா ரசப்பொடி
தேவையானவை:
* காய்ந்த மிளகாய் - 2 கப்
* தனியா (மல்லி) - ஒரு கப்
* சீரகம் - அரை கப்
* வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்
* மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
* கட்டிப் பெருங்காயம் - அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை - தேவையான அளவு
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைத் தனித்தனியாகச் சேர்த்து மிதமான சூட்டில் கறுகாமல் வறுத்து எடுக்கவும். ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். ஆந்திரா ரசப்பொடி தயார்.

No comments:
Post a Comment