Friday 12 August 2016

தெய்வங்களை நேரில் காண வழி காட்டும் சித்தர்


விண்வெளியில் பெரிய சூரிய மண்டலங்களில் உள்ள பெரிய பூமிகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் எட்டு,ஒன்பது அறிவுள்ள மனிதர்களையே நமது சித்தர்கள் தெய்வங்கள் என்றனர்.

அவர்களின் உதவி பெற தொடர்பு பெற நமது மூளையில் மின்காந்த சக்தி கூட வேண்டும் கண் ,காது,மூக்கு,தோல் இவைகளில் காந்த வசியம் கூடினால் அவர்களை காணலாம்..பேசலாம்..அவர்களின் மீது அன்பும்,நட்பும் செலுத்தலாம்..

அவர்களின் உதவி இல்லாமலும் நமது ஹார்மோன் சுரப்பி,மூளை,கண்,காது,குரல்நாண்,தோல்,மூக்கு ஆகிய ஐம்புலன்களும் ஒன்றாக வலுவுடன் (ஹைபோதலாமஸ்) செயல்பட்டால்,நாம் சர்வஜனவசியம் பெற்று ,புகழ்,அதிகாரம்,ஆரோக்கியம்,செல்வம்,பதவி இவைகளை பூமியில் திட்டமிட்டு அடையலாம்..

விதையையும் மதியால் வெல்லலாம்..
ஊழையும் உட்பக்கம் இழுக்கலாம்..
கிரகங்களை மனக்கயிற்றால் கட்டலாம்

என சமண வள்ளுவர் கூறுகிறார்.



அணுவை பிளந்தால் வரும் பெரும் சக்தியை போல் நம் உடலை பிளந்தால் பெரும் ஆன்ம மனோ சக்தி வரும். மனமகிழ் கூட்டு பிரார்த்தனையும்,, தானதர்மமும், போதும் என இயேசுவும், நபிகள் நாயகமும், புத்தரும், மகாவீரரும் கூறியிருக்கின்றனர்.

இறைவனை மனதில் உயிரில் ஏற்றி தியானம் செய்ய உருவங்களை பார்க்காமல் இமயத்தில் முனிவர்கள் தவம் செய்தனர்..முக்கோண பட்டங்களிலும் மழித்துளி நீரிலும் சூரிய ஒளியில் உல்ள நவவானவில் நிரங்கள் விலகும்.எனவே முனிவர்கள் நவகிரக சக்திகள் இல்லாத நீர்மேகங்கள் சூழ்ந்த முக்கோண மலை உச்சியிலும் கடலுக்கடியிலும் பாதாளத்திலும் தவம் செய்து சூரிய நியூட்ரினோ சக்தியை கிரகித்து ஞான சக்தியை பெற்றனர்.


நம் பிரச்சினைகளை தீர்த்துகொள்வது எப்படி..?

தினமும் காலையில் கடவுளிடம் உரையாடுங்கள்..ஒரு தீபம் ஏற்றி வைத்து உங்கள் இஷ்ட தெய்வமோ,குருவோ அவர்களிடம் பேசுங்கள். உங்கள் ஆசைகளை சொல்லுங்கள் நீங்கள் இன்று செய்து முடிக்க வேண்டிய வேலைகளை சொல்லி அதற்கு பக்க துணையாக இருக்கும்படி வேண்டுகோள் வையுங்கள். உங்கள் இலக்கு எது என தீர்மானித்து,அதைநோக்கிசெல்லதைரியம்,தன்னம்பிக்கை,முயற்சி,உழைப்பு எப்போதும் குறையாமல் பார்த்துக்கொள்வேன் என உறுதிமொழி எடுங்கள்
அதன் பின் உங்கள் அன்றாட வேலைகளை செய்யுங்கள்..பிரபஞ்ச சக்தி உங்கள் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி தரும்..இது பலரது அனுபவ நம்பிக்கை...முயற்சி செய்யுங்கள் நீங்கள் நினைத்தது நிறைவேறும்..கேட்டது கிடைக்கும்!!!

No comments:

Post a Comment