Tuesday 16 August 2016

அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில், வாலாஜாபேட்டை, வேலூர் மாவட்டம்.

தேவர்களும்அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்ததுஅந்த ஜோதியில் உதித்த மகாபுருஷர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர்.கற்பனைக்கு எட்டாத அழகுடன்திருக்கரங்களில் சங்குசக்கரம்அட்டைப்பூச்சிஅமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர்மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும்இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லதுஇவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும்.
தன்வந்திரி இந்து மதத்தில் வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும்தன்வந்திரியை முதல் மருத்துவர் என்று நம்புகின்றார்கள் இந்துக்கள்விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் இந்த வடிவம்தசாவதாரத்திற்குள் சேர்வதில்லைபெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தனி சந்நிதியில் தன்வந்திரி காணப்படுகிறார்.


இந்த ஊரின் வரலாற்று பெயர் (historical name) வாலாஜாபேட்டை என்பதுஆனால் பழைய பெயர் அகத்தீஸ்வரம் என்பதாகும்ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் சிவபெருமானின் திருக்கல்யாணத்தைப் பார்க்கஅகத்தியர்வசிஷ்டர்பரத்வாஜர்வால்மீகிகௌசிகர்அக்னீஸ்வரர் என்று ஆறு முனிவர்கள் (ரிஷிகள்வந்தனர்இவர்கள் வழியில் தங்கி பூஜைஅனுஷ்டானங்கள் செய்ய வேதவல்லி (பாலாறுநதிக்கரையோரத்தைத் தேர்ந்தெடுத்தனர்வைத்தியரான அகத்தியரும்,மற்ற முனிவர்களும் இறைவனை நினைத்து பூஜை செய்த இந்த இடத்தில் தேவமருத்துவரான ஸ்ரீதன்வந்திரியை அமரச் செய்துள்ளனர்.
இந்த ஆலயத்தில் கருவறையின்கீழ் 15 அடி ஆழத்தில் ஏழு அங்குலம் விட்டத்தில் செப்புக் குழாயின் நடுவின் ஏறத்தாழ 48 இலட்சம் பக்தர்களால் கைப்பட எழுதிய 54 கோடி மந்திரங்கள் 13மொழிகளில் எழுதப்பெறப்பட்டு இயந்திரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதுஇது ஓர் உலகச் சாதனையாகும்பக்தர்கள் கைப்பட எழுதிய இம்மகா மந்திரங்களுக் கஜபூஜைகோபூஜை 1008சுமங்கலி பூசை செய்து அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து வேலூர் மார்க்கத்தில் உள்ள வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்திலிருந்து,சோளிங்கர் சாலையில் கி.மீதூரத்தில் கீழ்ப்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம் அமைந்துள்ளது.
இந்த ஆரோக்கிய பீடம் சென்னையிலிருந்து மேற்கே 110 கி.மீதூரத்திலும்வேலூரிலிருந்து கிழக்கே 30 கி.மீதூரத்திலும்திருப்பதியிலிருந்து தெற்கே 110 கி.மீதூரத்திலும் திருவண்ணாமலையிலிருந்து வடக்கே 80 கி.மீதூரத்திலும் உள்ளது.

No comments:

Post a Comment