Saturday, 13 August 2016

14.பிரளயங்களைக் கடந்த காகபுசுண்டர்



காக புசுண்ட சித்தர். இவர் ஒரு காக்கை உருவில் பல இடங்களில் சுற்றி அலைந்து பல விஷயங்களை கண்டறிந்தார் என்பர். இவர் வரரிஷியின் சாபத்தால் சந்திரக்குலத்தில் பிறந்தார். இவர் அறிவிற்சிறந்தவர். பெறும் தவசி. இவர் பிரளயகாலங்களில் அவிட்ட நடசத்திர பதவியில் வாழ்வார் ஆதலினால் இவரை காக புசுண்டர் என்பர்.

ஒரு சமயம் கயிலையில் தேவர்கள், சித்தர்கள் அனைவரும் கூடி இருந்தனர். சிவபெருமான் தனக்கு எழுந்த சந்தேகத்தை அங்கு கூடி இருந்தவர்களிடம் தெரிவித்தார். “இந்த உலகமெல்லாம் பிரளயகாலத்தில் அழிந்து விட்ட பிறகு எல்லோரும் எங்கு இருப்போம். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஷ்வரன், சதாசிவம் ஐவர்களும் எங்கே இருப்பார்கள் தெரியுமா” என்றார்

எல்லோரும் மௌனமாக இருக்க மார்க்கண்டேயன் “இதற்கு திருமாலே பதில் சொல்வார்” என்றார். திருமாலிடம் சிவன் கேட்டார். அனைவரும் பிரளயத்தில் எல்லாம் அழிந்து போயின. ஆழிலை மேல் பள்ளிகொண்டிருந்த என்னிடத்தில் சித்துக்கள் யாவும் ஒடுங்கின. நானும் துயிலில் ஆழ்ந்திருந்தேன். என் சார்பாக என்னுடைய சுதர்சன சக்கரம் யாராலும் தடுக்க முடியாத வேகத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அப்பொழுது அங்கு வந்த புசுண்டர் எப்படியோ என் சக்கரத்தை ஓடாமல் நிறுத்தி விட்டு அதை தாண்டிச் சென்றார். அதனால் அவர் மிகவும் வல்லவர். வசிட்டரை அனுப்பி அவரை அழைத்து வருவதுதான் சரி அவரால் மட்டுமே உங்கள் கேள்விக்கு பதில் சொல்லமுடியும் என்றார் மகாவிஷ்ணு.



சிவனும் வசிட்டரை அனுப்பி புசுண்டவரை அழைத்து வரச்சொன்னார். அவரிடம் தன்னுடைய சந்தேகத்தைக் கூறினார். புசுண்டரும் தாம் எத்தனையோ யுகபிரளயங்கள் தோன்றி அழிந்ததையும் எத்தனையோ மும்மூர்த்திகள் அழிந்து போனதையும் ஒவ்வொரு பிரளயத்திற்குப் பிறகும் உலகம் புதிதாக சிருஷ்டிக்கப்பட்டதை பார்த்ததாகவும் கூறினார். தாம் காக உருவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல் ஆழ மரத்தின் மேல் வீற்றிருந்து இந்த அதிசயங்களை கண்டதாகவும் கூறினார்.

காகபுசுண்டர் துணைக்காவியத்தில் இந்த நிகழ்ச்சி விளக்கமாக கூறப்படுகிறது. காக புசுண்டர் பெயரில் வைத்தய நூல்கள் பல உண்டு. புசுண்டர் நாடி, எண் ஜோதிட நூலும் உண்டு இது தவிர காகபுசுண்டர் ஞானம் 80, காகபுசுண்டர் உபநிடதம் 31, காகபுசுண்டர் காவியம் 33, காகபுசுண்டர் குறள் 16, என்றும் நூல்கள் இவருடைய வேதாந்தக் கருத்தை விளக்குகின்றன. காணாத காட்சியெல்லாம் கண்ணிற் கண்ட காகபுசுண்டர் யோகஞானம் சமாதி முறை, காரிய சித்தி பெறும் வழி, இரசவாதாம், நோய்தீர்க்கும் மருந்து வகை, வேதியரை மயக்கும் மருந்து முறை, பிறர் கண்ணில் படாமல் மறைந்திருக்க மருந்து, பகைவரை அழிக்க வழி போன்றவைகள் இவருடைய நூலில் கூறப்பட்டுள்ளன. “இல்லறமாயினும் துறவறமாயினும் மனதில் மாசின்றி ஒழுக வேண்டும். அப்படி ஒழுகாவிடில் செய்யும் பிற செயல் வீண் பகட்டாகக் கருதப்படும்.” என்றார்.


ஸ்ரீ காக புஜண்ட சித்தர் புஜை முறைகள்

தியானச் செய்யுள் :


காலச்சக்கரம் மேல்
ஞானச்சக்கரம் ஏந்திய
மகா ஞானியே
யுகங்களைக் கணங்களாக்கி
கவனித்திரும் காக்கை ஸ்வாமியே
மும்மூர்த்திகள் போற்றும் புஜண்டரே உமது
கால் பற்றிய எம்மைக் காப்பாய்
காக புஜண்ட சுவாமியே.


தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் ஸ்ரீ காகபுசுண்டர் சுத்தர் ஸ்வாமியின் படத்தை வைத்து அதன் முன் மஞ்சள், குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருகக் கூறி நீலோத்பலம் நீல சங்கு, தவனம், மரு ஆகிய புஷ்பங்களில் ஏதாவது ஒரு புஷ்பத்தால் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
பதினாறு போற்றிகள்
1. மகா ருத்ரரே போற்றி!
2. சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி!
3. ஸ்ரீம், ஹரீம், லம், நமஹ, ஸ்வம், பீஜாட்சரத்தில் வசிப்பவNரு போற்றி!
4. அரக்கர்களை அழிப்பவரே போற்றி!
5. தேவர்களைக் காப்பவரே போற்றி!
6. ஸ்ரீ ராமரை ப10ஜிப்பவரே போற்றி!
7. அன்னப்பிரியரே போற்றி!
8. மானஸா தேவியை வணங்குபவரே போற்றி!
9. சிவசக்தி ஐக்கியத்தை தரிசிப்பவரே போற்றி!
10. மகானுக்கெல்லாம் மகானே போற்றி!
11. மனிதர்களை வணங்கும் தெய்வமே போற்றி!
12. நோய்களுக்கு மருந்தே போற்றி!
13. கோடி லிங்கங்களை ப10ஜிப்பவரே போற்றி!
14. பாவத்தைப் போக்குபவரே போற்றி!
15. நாரதகானப் பிரியரே போற்றி!
16. ஸ்ரீ ராமர் பாதத்தை தரிசனம் செய்த ஸ்ரீ காகபுஜண்ட சித்தர் ஸ்வாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், லம் நமஹ, ஸ்வம் ஸ்ரீ காக புஜண்ட சித்தர் ஸ்வாமியே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக வறுத்த கடலை, தண்ணீர் ஆகியவற்றை வைத்து உங்கள் பிராத்தனையை மனமுருக்கக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்ய வேண்டும்.

ஸ்ரீ காக புசுண்டர் பூஜையின் காரிய சித்த பலன்கள்



இவர் நவக்கிரகங்களில் குருபகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிப்பட்டால்
1. ஜாதகத்தில் குரு பகவானால் ஏற்படக் கூடிய தோஷங்கள் விலகும்.
2. பணப்பிரச்சினை, புத்திர பாக்கியக் கோளாறு, அரசாங்கத்தால் பிரச்சினைகள் ஆகியவையாவும் அகலும்.
3. வியாபாரத்தில் எதிர்பாராத பண நஷ்டம், சமாளிக்க முடியாத நிலை ஆகியவை அகன்று லஷ்மி கடாஷம் பெருகும்.
4. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
5. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
6. கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை, அதனால் ஏற்படும் வழக்குகள் அகலும்.
7. அரசாங்கத்தால் பிரச்சினை,அரசாங்க அதிகாரிகளுக்கு உள்ள பிரச்சினை ஆகியவை நீங்கும்.
8. வறுமை அகன்று வாழ்க்கை வளம்பெற, இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் விசேஷப்பலன்கள் கிடைக்கும்.

இவரை வழிபட சிறந்த நாள் வியாழன்.

No comments:

Post a Comment