திருவக்கரை தேவார பாடல் பெற்ற தலமாகும்.
அமைவிடம்.
*************
இது திண்டிவனத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. புதுச்சேரி செல்லும் பாதையில் பெரும்பாக்கம் சென்று தெற்கில் 7 கி.மீ. செல்ல வேண்டும். இங்கு குண்டலி மகாமுனிவர் தவம் செய்து சமாதி பெற்றுள்ளார்.

இத்தல வரலாறு வருமாறு:-
*****************************
திருவக்கரை என்றதும் நினைவுக்கு வருவது வக்கிர காளியம்மன். சாதாரணமாக, காளி கோயில் ஊர் எல்லையில் இருக்கும். ஆனால், இங்கோ ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் வளாகத்துக்குள் காளிதேவி கோயில் கொண்டிருக்கிறாள்.

வக்கிரா சூரன் என்ற அசுரன் தேவர் மூவரால் அழியாமலும், சிவலிங்கத்தை எப்போதும் தன் கண்டத்தில் வைத்திருக்கவும் சிவனிடம் வரம் கேட்டான். சர்வேஸ்வரன் அவன் கேட்ட வரம் அளித்தார். வரம் பெற்றதும் வச்சிராசூரன் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் பிரம்மாவிடம் செல்ல, அவர் தேவர்களுடன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார். வக்கிராசூரன் பெண்களால் அழியா வரம் பெறவில்லை.
அவன் லிங்கத்தை கண்டத்தில் வைத்திருக்கும் போது கொல்ல முடியாது. அசைவ உணவு உண்ண கடல்வழி செல்லும் போது அசுரன் தன் தங்கை காவலில் கண்டலிங்கத்தை வைப்பான். அப்போது அசுரனின் சகோதரியை முதலில் அழித்து பின் அவனையும் அழிக்க வேண்டும் என்று மகாவிஷ்ணு யோசனை கூறினார். அதன்படி ஈஸ்வரி 16 கைகளுடன் பேருருவெடுத்து மகாவிஷ்ணு யோசனைப் படி வக்கிர துர்முகியை அழித்தாள்.
அதன்படி, வக்கிரன் இருந்த இடத்தை அடைந்த மகாவிஷ்ணு, பெரும் போருக்குப் பின் சக்கராயுதத்தைப் பிரயோகித்து அவனை வதம் செய்தார்.
வக்கிராசுரனுக்கு துன்முகி என்றொரு சகோதரி. அண்ணனின் அதிகாரம் தந்த ஆணவத்தால், துன்முகியும் பற்பல கொடுஞ்செயல்களைச் செய்தாள். சிவபெருமான், பார்வதி தேவியை நோக்கினார். திருக்கயிலையிலிருந்து புறப்பட்ட பார்வதிதேவி, துன்முகியை நோக்கிச் சென்றார். துன்முகி அப்போது கருவுற்றிருந்தாள்..

என்னதான் இருந்தாலும் கர்ப்பிணியாயிற்றே! அவள் தவறு செய்திருந்தாலும், அந்தச் சிசு என்ன பாவம் செய்தது? பார்த்தாள் பார்வதி. துன்முகியின் வயிற்றுச் சிசுவை பத்திரமாக எடுத்துத் தன் காதில் மாட்டிக் கொண்டு, துன்முகியை (இப்போது அவள் கர்ப்பிணி இல்லையல்லவா!) வதம் செய்தார். வக்கிரன் வாழ்ந்த இடம் என்பதால், ‘வக்கரை’ ஆன இந்த இடத்தில், காளியாகி நின்று காட்சி கொடுப்பதால் அம்பாள், வக்கிரகாளி ஆனார்.
சிவபெருமான் ஆலயத்துக்குள்ளேயே திருமாலும், செங்கண்மால் திருத்தங்கச்சியாம் வக்கிரகாளியும் கோயில் கொண்டுள்ளார்கள். எனவேதான், ரத்னத்ரயத்தை வணங்கும் சிறப்பு பெறுகிறது திருவக்கரை!
விழுப்புரம் மாவட்டத்தின் வானூர் வட்டம் - வராக நதி பாய்கிற இடம். சங்கராபரணி (சங்கரருக்கு ஆபரணம் ஆனவள்) என்றும் அழைக்கப்படும் இந்த நதிக்கரையில் அமைந்துள்ளது திருவக்கரை திருக்கோயில்.

கோவில் அமைப்பு.
*********************
பழைமையான, பெரிய கோயில். கிழக்கு வாயிலில், விண்ணளாவி நிற்கும் கிழக்கு ராஜ கோபுரம். இது கண்டராதித்தன் திருக்கோபுரம் என்றும் கண்டர் சூரியன் திருக்கோபுரம் அழைக்கப்படுகிறது.
*********************
பழைமையான, பெரிய கோயில். கிழக்கு வாயிலில், விண்ணளாவி நிற்கும் கிழக்கு ராஜ கோபுரம். இது கண்டராதித்தன் திருக்கோபுரம் என்றும் கண்டர் சூரியன் திருக்கோபுரம் அழைக்கப்படுகிறது.
பிற்காலச் சோழ சாம்ராஜ்யம் உருவாகக் காரணமான ஆதித்த சோழனால், இன்றைக்குச் சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன், செங்கற் கோயிலாக இந்தத் திருக்கோயில் கட்டப்பட்டது. அதற்கு முன்னரேகூட கோயில் சிறிய அளவில் இருந்துள்ளது. பின்னர், முதலாம் பராந்தகனின் மகன்களான ராஜாதித்தனும் கண்டராதித்தனும் இந்தக் கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள் ளனர். கண்டராதித்தனின் மனைவியான செம்பியன் மாதேவி திருவக்கரைக்குப் பற்பல திருப்பணிகள் செய்து தானங்கள் வழங்கியுள்ளார்.
கண்டராதித்தன் கட்டு வித்த கண்டராதித்த கோபுரம், ஏழு நிலைகளுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கோபுர வாயிலில் உள்ள கணபதி அலங்கரிக்கிறார். மேல் கூரையில் ஒன்பது கட்டடங்கள் போன்ற அமைப்பு. நடுவில் அழகான தாமரை. மலரைச் சுற்றிலும் எண்திசைக் காவலர்களாம், அஷ்டதிக்குப் பாலர்கள்.

ராஜ கோபுரம் தாண்டியதும், வடக்கு நோக்கிய வக்கிரகாளி அம்மன் சந்நிதி. சந்நிதிக்குள் நுழையும்போது, வாயிலில் உள்ள துவாரபாலகியர் நமது கவனத்தைக் கவர்கிறார்கள். பக்கத்துக்கு இரண்டாக, மொத்தம் நான்கு பேர். இவர்களைப் பற்றிய உள்ளூர்க் கதை நெகிழ்ச்சி தருகிறது.
நான்கு பேரும் பால் வியாபாரம் செய்தவர்களாம். ஆனால், பாலில் அதிகமாகக் கலக்கப்பட்ட தண்ணீரைத்தான், பால் என்று வியாபாரம் செய்தனராம். மக்கள் முறையிட, மன்னன் வரைக்கும் புகார் சென்றது. மன்னன், நால்வருக்கும் தண்டனை வழங்கினான். மொட்டையடித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட நால்வருக்கும், இறுதித் தண்டனை சிரச்சேதம். அந்தக் கடைசி வேளையில் அறிவு வந்தது போலும்! நால்வரும் தவறு உணர்ந்து அழுது புலம்பி அரற்றி, காளியை வழிபட... அவர்கள் மீது இரக்கம் கொண்ட காளி, நால்வரையும் தம்முடைய துவாரபாலகியராக ஆக்கிக் கொண்டார்.
இந்தச் சம்பவம் உண்மையில் நடந்ததோ, இல்லையோ தெரியவில்லை! ஆனால், இரண்டு செய்திகள் புரிகின்றன. ஒன்று, ஏமாற்றும் புரட்டும் செய்தால், தண்டனை கட்டாயம். இரண்டாவது, மனம் உருகிப் பிரார்த்தித்து, தவறுக்கு வருந்தித் திருந்தினால் மன்னிப்பு கிடைக்கும்.
வக்கிரகாளியின் சிறப்பு தோற்றம்.
**************************************
**************************************
வக்கிரகாளியம்மன் திருமேனி உள்ளத்தைச் சுண்டுகிறது. லேசாகச் சாய்த்த தலை. கிரீடத்தில் மண்டையோடு. வலக் காதில் சிசுக் குண்டலம். இடக் காதில் ஓலைச்சுருள். வதனத்தில் வசீகரமான புன்னகை. சற்றே கூர்ந்து கவனித்தால், உள்ளத்தில் தெளிவு கலந்த அச்சத்தை ஏற்படுத்துகிறாள். எட்டுத் திருக்கரங்கள். வலக் கரங்களில் பாசம், சக்கரம் (திருமாலின் சகோதரியாயிற்றே!), வாள், கட்டாரி. இடக் கரங்களில், மேல்கரம் உடுக்கையைப் பிடித்தாற் போல இருக்கிறது. அடுத்த இரு கரங்களில் கேடயமும் கபாலமும். கீழ்க்கரம், ஆள் காட்டி விரல் நீட்டி அம்மனின் பாதத்தைச் சுட்டுகிறது. கபாலங்களையே கோத்து முப்புரி நூலாக அணிந்திருக்கிறாள். கோரைப் பற்கள். பெரிய விழிகள்! ‘தவறு செய்தால், அம்மன் தண்டிப்பாள்!’ என்ற அச்சத்தையும் ‘தவறு செய்யக் கூடாது!’ என்ற தெளிவையும் தருகிறது.
இது என்ன ஐதீகம்?
*********************
ஒன்பது கோள்களை நவக்கிரகங்கள் என்று வழிபடுகிறோம் அல்லவா! நவக்கிரகங்களுக்கும் தனித்தனியாக அதிதேவதைகள் உண்டு. ராகு-கேதுவுக்கு காளியம்மனே அதிதேவதை. சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகுவும் கேதுவும் தீயவர்கள். எப்போது தீமை தரலாம் என்று காத்துக் கொண்டிருப்பவர்கள். அதிலும் அவர்கள் வக்கரித்துக் கொண்டால், கேட்கவே வேண்டாம். எனவேதான், இந்தக் கோயிலில் புது முறையான வலம் வருதலும் ஏற்பட்டது. நவக்கிரகங்களைச் சுற்றுகிற ஒன்பது சுற்றுகளில், ஏழு சுற்றுகள் சாதாரண வலமாகவும், வக்கரித்துக் கொள்ளும் ராகு- கேதுவுக்காக இரண்டு சுற்றுகள் அப்பிரதட்சிணமாகவும் சுற்றுகிற வழக்கம் தோன்றியது. இந்தக் கோயிலில், சனியும் வக்கிர சனியாகவே உள்ளார். அவருக்கு ஒரு சுற்று. தவிர, அவரவர்க்கு ஏதாவது ஒரு கிரகம் சரியான நிலையில் இல்லாமல் இருப்பது சகஜம். அந்த கிர கத்துக்காக ஒன்று என்றாகி, தற்போது மொத்தம் ஒன்பதில் ஐந்து பிரதட்சிணமாகவும், நான்கு அப்பிரதட்சிணமாகவும் அமைந்து விட்டது.

காளி கோயிலுக்கு எதிரில் (வடக்குப் புறத்தில்) ஆத்மலிங்கக் கோயில். கண்ட லிங்கம் (வக்கிராசுரன் தன் கண்டத்தில்/தொண்டையில் வைத்துப் பூஜித்ததால்) என்றும் வக்கிர லிங்கம் என்றும் பெயர்களுண்டு. மேற்கு நோக்கிய லிங்கம். ஆத்ம லிங்கத்துக்கு ஒரு தனிச் சிறப்பு இருப்பதாகக் கோயிலைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டார்கள். கோடை காலத்தில், லிங்கம் படுகுளிர்ச்சியாக இருக்குமாம். குளிர் காலத்திலோ, லிங்கத்தின் மீது, முத்து முத்தாக நீர்த் துளிகள் காணப்படுமாம். குளிர்ச்சி மிக்க ஆத்ம லிங்கமாகும்.
உள் கோபுரத்தின் இடதுபுறத்தில் அமைந்துள்ள மரத்தடியில் புற்றும், சுற்றிலும் நிறைய நாகர்களும். நாகராஜாவுக்குப் பால் வார்த்து விளக்குப் போட்டால், நினைத்ததெல்லாம் நடக்குமாம்.
இந்த ஸ்தலத்தின் சிறப்பம்சம்.
*********************************
அமாவாசை நாளில் பகல் 12 மணிக்கும், பவுர்ணமி நாளில் இரவு 12 மணிக்கும் காட்டப்படும் ஜோதிதரிசனம் நிகழ்ச்சி இங்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள குண்டலி முனிவரது ஜீவ சமாதியில் மனம் உருக வழிபட்டால் நினைத்தது நடக்கும். அங்கு 10 நிமிடம் தியானம் செய்தாலே போதும், மன சஞ்சலங்கள் பறந்தோடி விடும்.
இத்தலத்தில் 3 மாதம் பவுர்ணமி நாளில் தொடர்ந்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடும். நவராத்திரி தினத்தன்று மூலவர் வடிவாம்பிகைக்கு 10 நாட்கள் அலங்காரம் நடைபெறும். 10-வது நாள் அம்மன் அம்பு உற்சவம் சிறப்பாக நடை பெறும்.*********************************
அமாவாசை நாளில் பகல் 12 மணிக்கும், பவுர்ணமி நாளில் இரவு 12 மணிக்கும் காட்டப்படும் ஜோதிதரிசனம் நிகழ்ச்சி இங்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள குண்டலி முனிவரது ஜீவ சமாதியில் மனம் உருக வழிபட்டால் நினைத்தது நடக்கும். அங்கு 10 நிமிடம் தியானம் செய்தாலே போதும், மன சஞ்சலங்கள் பறந்தோடி விடும்.
அவன் கண்டத்தில் லிங்கத்தை வைத்திருந்ததால் கண்டலிங்கம் என்று பெயர் ஏற்பட்டது. மன நிம்மதி வேண்டி வரும் பக்தர்களுக்கு இந்த சக்தி தலத்தில் நிம்மதி கிடைக்கிறது. குறிப்பாக வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்துக்கு வந்து வக்கிரகாரி, வக்கிரலிங்கம், வக்கிர சனிபகவான் ஆகியோரை வழிபட்டால் பயன் கிடைக்கும்.
"வராகநதி " என்றழைக்கப்படும் 'சங்கராபரணி ' ஆற்றின் கரையில் பெரிய ராஜகோபுரத்துடன் கோயில் கம்பீரமாக உள்ளது; மிகப் பழமையான தலம்.
ஸ்தல சிறப்புகள்.
*******************
*******************
மரங்கள் கல்லாக மாறியிருக்கும் விந்தையுடையது, இவ்வூர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் பூமியில் புதைந்த மரங்கள், பட்டைகள், கிளைகள் கூடிய அதே தோற்றததோடு இன்று கல்லாக - கல்மரங்களாக மாறிக் காட்சியளிக்கின்றன. நல்ல நீரில் உள்ள 'சிலிகா ' என்னும் கண்ணாடிக்கல் அணுக்கள், அம்மரங்களுள் ஊருருவி, மர அணுக்களை மாற்றிவிட்டு, மரம் முழுவதும் நிறைந்து, மரங்களை உறுதியான கற்களாக மாற்றிவிட்டன என்று அறிவியலார் கூறுகின்றனர். நெய்வேலியில் பூமிக்குக்கீழ் உள்ள உப்பு நீரில் மரங்கள் புதைந்ததால் அம்மரங்கள் கறுப்பாக (நிலக்கரியாக) மாறின என்றும்; இங்கு வெள்ளையாக மாறின என்பதும் அறிவியற் செய்தியாகும். இப்பகுதிக்குப் பக்கத்திலுள்ள, 'செம்மேடு' என்னுமிடத்தில் நிலவியல் துறையினரால் 'முதுமக்கள் தாழி 'யும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ராஜகோபுரத்தின் இடப்பக்கம் "வக்கிரகாளி " உள்ளது; இவ்வுருவம் மிக்க அழகுடையதாக உள்ளது. பௌர்ணமியில் அம்பாளுக்கு விசேஷம்.
சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த பெரிய 'வக்கிர லிங்கம் ' உள்ளது.
சதுர அடிப்பாகத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் உள்ள மூலவர் அழகிய திருமேனி மும்முகத்துடன் விளங்குகின்ற கம்பீரமான தோற்றம்.
உள்பிரகாரத்தில் குண்டலி மாமுனிவர் சந்நிதி - முனிவரின் சமாதி மீது சிவலிங்கம் உள்ளது; இதற்கு கோஷ்டமூர்த்தமாகத் தட்சிணாமூர்த்தி, திருமால், வரதராஜப்பெருமாள் உள்ளனர்.
அர்த்த மண்டபத்தில் நடராசர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்; தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் வரை வந்துள்ளது. புதிய அமைப்புடையது; இதை 'வக்கிர தாண்வம் ' என்று குறிப்பிடுகின்றனர்.
நவக்கிரகச் சந்நிதியில் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாக தென்புறம் நோக்கியுள்ளது.
No comments:
Post a Comment