Wednesday, 7 December 2016

நாகேஸ்வரர் கோவில் ,குஜராத் (ஜோதிர் லிங்கங்ளுள் ஒன்று)



நாகேஸ்வரம்- குஜராத் - நெருங்கும் சாலை - தோற்றம்
நாகேஸ்வரம்- குஜராத் – நெருங்கும் சாலை – தோற்றம்
நாகேஸ்வரம்- குஜராத் - வாயில்
நாகேஸ்வரம்- குஜராத் – வாயில்
நாகேஸ்வரம்- குஜராத் - கோவில் வெளிப்பக்கத் தோற்றம்
நாகேஸ்வரம்- குஜராத் – கோவில் வெளிப்பக்கத் தோற்றம்
நாகேஸ்வரம்- குஜராத் - 02-08-2013 அன்று மோடி வந்திருந்தபோது
நாகேஸ்வரம்- குஜராத் – 02-08-2013 அன்று மோடி வந்திருந்தபோது
நாகேஸ்வரம்- குஜராத் - சிலை- துவாசஸ ஜோதிர் லிங்காஸ்டகம்
நாகேஸ்வரம்- குஜராத் – சிலை- துவாசஸ ஜோதிர் லிங்காஸ்டகம்
நாகேஸ்வரர் கோவில்: துவாதஸ ஜோதிர்லிங்களில் ஒன்று மற்றும் முதலாவதாகத் தோன்றியது இது என்று, சொல்லப்படுகிறது. படைப்பிற்குப் பிறகு, பிரம்மா மற்றும் விஷ்ணு இடையே யார் பெரியவர் என்ற விவாதம் எழுந்த போது, சிவன் ஆரம்பம்-முடிவு இல்லாத ஒளிப்பிழம்பாக மாறினார். அவ்வொளி 64 மற்றும் 12 என்று மாறியதாகவும், அவ்வாறே அவை லிங்கங்களாக மாறின என்றும் புராணம் கூறுகிறது. 108 லிங்களில் ஒன்று என்ரும் கூறப்படுகிறது. இது உண்மையில் 12 துவாதச லிங்களில் வருமா-வராதா என்ற சர்ச்சை உள்ளது. ஏனெனில், அல்மோராவில் உள்ள ஜேகேஸ்வர கோவில்தான், நாகேஸ்வர ஜோதி லிங்கம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு, ஒரு சுலோகத்தையும் எடுத்துக் காட்டுகிறார்கள்:

இதனால், மொத்தம் மூன்று நாகேஸ்வரர் / நாகநாதர் மூன்று இடங்களில் இருக்கிறர் என்றும் சொல்லப்படுகிறது:
  1. துவாரகா, நாகேஸ்வரர் கோவில்.
  2. அல்மோராவுக்கு அருகில், உத்திரபிரதேசம்.
  3. உண்டா / ஹோண்டா நாகநாத், கக்ரபர்தி அருகில், வித்யாநாத்.
முகமதியர்களின் தாக்குதல்களினால், சிவலிங்கங்கள் மற்றும் சிவவழிபாடு, மேற்கிலிருந்து கிழக்காக நகர்ந்ததா என்றும் ஆராய வேண்டியுள்ளது. எது எப்படியாகிலும், இடிந்த நிலையில் இருந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு, புனர்நிர்மானம் செய்யப்பட்டுக் கட்டப்பட்டது மற்றும் சமீப காலங்களில் இது பிரசித்தி பெற்று வருகின்றதும் சிறப்பான விசயங்கள்.
நாகேஸ்வரம்- குஜராத் - துவாதஸ லிங்கங்கள் பவிவரம், குல்ஷன் குமார்
நாகேஸ்வரம்- குஜராத் – துவாதஸ லிங்கங்கள் பவிவரம், குல்ஷன் குமார்
குல்ஷன் குமார் (1956-1997) இக்கோவிலை புனர் நிர்மானம் செய்தது:

குல்ஷன்குமார் என்ற பிரத்தி பெற்ற பாடகர், பக்தி பாடல்கள் “டி-சீரீஸ்” ஒலிநாடா தயாரிப்பாளர் ஒருமுறை இக்கோவிலுக்கு வந்திருந்தபோது, இடிந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதனைப் புதுப்பிக்க தீர்மானம் செய்தார். இக்கோவில் புதுப்பித்துக் கட்டுவதற்கு நிதியுதவி செய்திருக்கிறார். 1996ல் புனர்நிர்மாண வேலைய ஆரம்பித்தார், 1997ல் இவர் கொலைசெய்யப்பட்டப் பிறகு, இவரது குடும்பம் அதனை பூர்த்தி செய்தது. குல்ஷன் குமார் தருமகாரியங்கள் டிரஸ்ட் அதற்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டது. குல்ஷன் குமார் கொலையும் மர்மத்தில் இருந்தது. அவரது மகன் பூஷண் குமார் எல்லா வேலைகளையும் பர்த்துக் கொண்டார். அக்காலத்தில், அரசர்கள், பெரிய வணிகர்கள் செய்ய வேண்டிய காரியத்தை குல்ஷன்குமார் மற்றும் அவரது குடும்பம் செய்துள்ளது கவனிக்கத் தக்கது.
நாகேஸ்வரம்- குஜராத் - உள்ளே
நாகேஸ்வரம்- குஜராத் – உள்ளே
நாகேஸ்வரம்- குஜராத் - மூலவர்- சிவலிங்கம்
நாகேஸ்வரம்- குஜராத் – மூலவர்- சிவலிங்கம்
நாகேஸ்வரம்- குஜராத் - கோவில் அமைப்பு வாஸ்து சாஸ்திரப்படி
நாகேஸ்வரம்- குஜராத் – கோவில் அமைப்பு வாஸ்து சாஸ்திரப்படி
நாகேஸ்வரம்- குஜராத் - கோவில் அமைப்பு வாஸ்து சாஸ்திரப்படி. கட்டப்ப்ட்டது
நாகேஸ்வரம்- குஜராத் – கோவில் அமைப்பு வாஸ்து சாஸ்திரப்படி. கட்டப்ப்ட்டது
நாகேஸ்வரம்- குஜராத் - முன்பக்க கட்டிட வரைப்படம்
நாகேஸ்வரம்- குஜராத் – முன்பக்க கட்டிட வரைப்படம்
நாகேஸ்வரம்- குஜராத் - பக்கவாட்டு கட்டிட வரைப்படம்
நாகேஸ்வரம்- குஜராத் – பக்கவாட்டு கட்டிட வரைப்படம்
இந்து கட்டிடக் கலை – வாஸ்து சாஸ்திரத்தின்படி கட்டப்பட்ட கோவில்:

இக்கோவில் வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைக்கப்பட்டு, கட்டப்பட்டது. மனிதனின் உடல் படுத்திருப்பது போலிருந்தால், எப்படி கால் பகுதியிலிருந்து, தலைப்பகுதி வரை மனிதனின் நிலை உயர்கிறதோ, அதே போல மனிதன் கால்களினால் நடந்து வந்து, படிப்படியாக கோவிலின் உள்ளே சென்று, கர்ப்பகிருகத்தில் பிரதான விக்கிரகத்தை வணங்கும் பொழுது, தலை வணங்கும், மனம் இறைவனை நினைக்கும் என்பதனைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. லிங்கம் மேற்கு பார்த்திருக்கிறது, பக்தர்கள் வணங்கும் போது, சூரியனைப் பார்த்து வணங்குவர். மேற்கு பார்த்து இருந்ததற்கு ஏக்நாத் என்ற பக்திகவியின் தொடர்பையும் வைத்து காரணம் கூறப்படுகிறது. கோவில் சிதிலமடைந்த நிலையில் இருந்தது என்பதிலிருந்து, இது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்று தெரிகிறது. அகழ்வாய்வு மேற்கொண்ட போது, ஹரப்பன் காலத்தைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்துள்ளன. இதனால், இப்பகுதியின் தொன்மை அறியப்படுகின்றது. தொன்மையினை வைத்துப் பார்க்கும் போது, இடைக்காலத்தில் அத்தகைய கதைகள் உருவாக்கப்பட்டதன் அவசியம் என்ன என்பதனை கூர்மையாக ஆராய வேண்டியுள்ளது. கோவில் தாக்கப்பட்டது எனும் போது, அதனை காக்க முடியவில்லை என்றாகிறது. சமீபத்தில் 1997க்குப் பிறகு புனர்நிர்மானம் பூர்த்தி அடைந்தது எனும் போது, அது இடிபாடுகளுடன் அதுவரை இருந்துள்ளது என்று தெரிகிறது.
எண்கோவில் பகுதிஉடல் பகுதி
1மஹாதுவார் – முக்கிய நுழைவுவாயில்கால் பகுதி, பக்தர்கள் உள்ளே நுழைவது
2கோவில் வாசல்.இருபக்கம் உள்ள கணேசர் மற்றும் ஹனுமார் கைகள்
3சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம்ரங்க மண்டபம், நடு பாகம், மார்பு மற்றும் வயிறு
4அந்தராலா – நந்திகீழ் பகுதி
5கர்ப்பகிருகம்.தலைப்பகுதி, மனம்
என்று அமைக்கப்பட்டிருக்கிறது. ரங்க மண்டபம், நந்தி மற்றும் கர்ப்பகிருகம் மூன்று நிலைகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன.  சுபாஷ் போட்டே என்ற கட்டிட வல்லுனரால் வடிவமைத்துக் கட்டப்பட்ட கோவில் ஆகும். அவர்களது இணைதளத்தில் அக்கோவில் எவ்வாறு வாஸ்து சாஸ்திரத்திபடி அமைந்துள்ளது என்பதனை விளக்க படங்களையும் கொடுத்திருக்கிறார்கள். நன்றியுடன், இங்கு உபயோகப்படித்தப் படுகின்றன. இவ்வளாகத்தில், ஒரு சனீஸ்வரர் கோவிலும் உள்ளது.
நாகேஸ்வரம்- குஜராத் - வெளிப்பக்கத்தில் இருக்கும் சனீஸ்வரர்
நாகேஸ்வரம்- குஜராத் – வெளிப்பக்கத்தில் இருக்கும் சனீஸ்வரர்

No comments:

Post a Comment