சார்தாம் யாத்திரை - கேதார்நாத்
சென்ற பகுதியின் தொடர்ச்சி...
கேதாரம் என்ற சொல்லுக்கு பனி, மயில், வயல்வெளி , நீர் நிலை என்று பல பொருட்கள் உண்டு. கேதம் என்றால் வடமொழியில் துன்பம் என்று பொருள். கேத + ஹர + ஈஸ்வரர் என்றால் நம் துன்பங்களை நீக்குவதில் தலைவர் என்பது பொருள்.
கேதார முனிவர் வழிபட்டதால் கேதாரீஸ்வரர் என்ற நாமம் என்பதும் ஐதீகம். கேதாரம் என்றால் கவலை நீக்குதல் என்று பொருள். சுயம்பு பாறையே இங்கு ஜோதிர் லிங்கம். பிரமிட் வடிவில் சேவை சாதிக்கின்றார் எம்பெருமான்.
கங்கை நதி மற்றும் கௌரி தேவி உருவாக்கிய கௌரி குளம் ஆகியவை தீர்த்தங்கள்.
கௌரி குளம் வரை பேருந்தில் செல்லலாம். கேதார பர்வதம் செல்ல மந்தாங்கினி நதியின் கரையோரமாக பாதை செல்கின்றது மந்தாங்கினி நதி அமைதியாக பாய்கின்றது அதன் அழகை ரசித்துக் கொண்டே அது ஓடும் அந்த சங்கீதத்தை இரசித்துக் கொண்டு பயணம் செய்வதே ஒரு அலாதி இன்பம்.(கௌரி குண்டத்தி லிருந்து 14 கி,மீ நடைப்பயணம் தான், உயர்ந்த பனி சூழந்த பகுதியில் நடந்து செல்ல முடியாதவர்கள் குதிரையிலோ, பல்லக்கு அல்லது கூடை ஆகியவற்றிலோ செல்லலாம்.)

இமயமலையின் ஒரு உச்சியில் சுமார் 12000 அடி உயரத்தில் இத்தலம் அமைந்துள்ளதால் வருடத்தில் ஆறு மாதங்கள் பனி மூடியிருக்கும் எனவே சித்திரை மாதம் அட்சய திரிதியை நாளிலிருந்து தீபாவளி வரை மட்டுமே ஐயனை திருக்கேதாரம் சென்று தரிசிக்க முடியும்.
(அதுவும் பருவ மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படும் போது யாத்ரீகள் சில சமயம் துன்பத்திற்க்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.)
தீபாவளியன்று கோவில் மூடப்பட்டு நந்தா விளக்கு என்னும் நெய் தீபம் ஏற்றப்படுகின்றது ஆறு மாதங்கள் மனிதர்களும் ஆறு மாதம் தேவர்களும் கேதாரீஸ்வரருக்கு பூஜை செய்வதாக ஐதீகம். பின் ஐயன் உற்சவ மூர்த்தி ரூபத்தில் கீழே வந்து ஊக்கிமத் மடத்தில் தங்குகிறார். ஆறு மாதங்கள் கழித்து கோவில் திறக்கும் போது அந்த நந்தா விளக்கு எரிந்து கொண்டிருக்கும் அதைக்காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். அந்த நந்தா விளக்கை தரிசிப்பது பெரும் பாக்கியமாக கருதப்படுகின்றது.
இறைவன் - கேதாரீஸ்வரர்.
இறைவி - கேதாரகௌரி.
சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது.
இருவரும் தென்கயிலாயமான திருக்காளத்தியிலிருந்தே இமயமலைச் சாரலில் உள்ள இத்தலத்தைப் பாடித் தொழுதனர்.
இனி இத்தலத்தின் ஐதீகங்களைக் காண்போம்,

அன்னை கௌரியே ஐயனை கேதாரீஸ்வரராக வழிபட்டு கேதார கௌரி விரதம் அனுஷ்டித்த தலம். 21 தலைமுறை சத்திரியர்களை சாய்த்த பரசுராமர் வழிபட்ட ஈசர் கேதாரீஸ்வரர். கௌதமர் அகலிகைக்கு சாபம் கொடுத்தபின் இமயமலை வந்து கேதாரீஸ்வரரை வழிபட்டு தவம் செய்தார். நரநாரயணர்கள் இருவரும் வழிபட்ட ஈசர். அவர்கள் இருவரும் செம்மையான ஜீவகாருண்ய ஆட்சி புரிந்தனர், அவர்கள் மீது அழுக்காறு கொண்ட மாற்று நாட்டரசன் படையெடுத்து வந்த போது அவனுடன் போர் புரியாது தங்கள் நாட்டை ஒப்படைத்து விட்டு புனித யாத்திரை மேற்கொண்டு கேதாரீஸ்வரரை ஸ்தாபிதம் வழிபட்டு தவம் செய்தனர். அவர்களின் தவத்தின் கடுமையைக் கண்ட இந்திரன் எங்கே தனது ஆட்சிக்கு பங்கம் வந்து விடுமோ என்று அவர்கள் தவத்தை கலைக்க தேவ கன்னியை அனுப்பினான், அவர்கள் தங்கள் தொடையிலிருந்து அவளை விட அழகான ஊர்வசியைப் படைத்து அவளுக்கு நல்லுரை கூறி அனுப்பினர்.
சிவனடியார்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்த்தினர். பின் இருவரும் இறைவனுடன் கலந்தனர், கேதார மலையை பின் பக்கம் மலைச் சிகரமாக இருவரும் இன்றும் விளங்குகின்றனர். மஹா பாரதப்போருக்குப் பின் கண்ணபிரான் வந்து வழிபட்டதாகவும் ஐதீகம் உள்ளது. துர்வாச முனிவரின் சாபம் பெற்ற விஷ்ணு பூமிக்கு வந்து இமயமலையில் கேதாரநாதரை நோக்கி தவம் செய்த போது மஹாலக்ஷ்மி துணையாக பத்ராட்சை மரமாக காவல் இருந்தாள் எனவே அத்தலம் பத்ரிநாத் எனப்பட்டது. ஆதி கேதாரீஸ்வரரின் ஆலயம் பத்ரி நாதர் தலத்திற்கு எதிரே உள்ளது.
பாண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு இத்தலத்திற்கு உண்டு. பாசுபதாஸ்திரம் பெற அர்ச்சுனன் வந்து தவம் செய்த தலம் மற்றும் தெய்வீகக் கல்யாண தாமரை மலரைக் கண்டு பீமனை அதைக் கொய்து வர கூறுகின்றாள் அவ்வாறு வந்த போது தான் அனுமனை பீமன் சந்தித்ததாக ஐதீகம்.

ஆவணி மாதத்தில் பிரம்ம கமல் என்று அழைக்கப்படும் பெரிய தாமரை மலர்கள் இப்பகுதியில் மலர்கின்றன. அம்மலர்களை கேதாரீசருக்கு சமர்ப்பணம் செய்யும் பக்தர்கள் அநேகம். வட இந்தியர்களின் சிரவண் மாத பௌர்ணமியன்று கேதாரீஸ்வரருக்கு பிரம்ம கமல் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றது.
அதற்கு முதல் நாள் சதுர்த்தசியன்று அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.
தற்போது உள்ள கோவில் 8ம் நூற்றாண்டில் ஆதி சங்கர பகவத் பாதாள் அவர்களால் கட்டப்பட்டது அதற்கு அருகிலே பாண்டவர்கள் கட்டிய கோவில் உள்ளது.
திருக்கேதாரம் பாண்டவர்களுடன் தொடர்புடையது. மஹா பாரதப் போரில் தமது சகோதரர்களையே கொன்றதனால் பாண்டவர்கள் கோத்ரா ஹத்யா என்னும் பாவத்திற்கு ஆளாகின்றனர், பாவ விமோசனம் பெற அவர்கள் சிவ பெருமானை தரிசிக்க செல்கின்றனர். காசியில் பரம் கருணா மூர்த்தி இல்லாததால் அவர்கள் கைலாயத்தில் உள்ள பெருமானைக் காண இமயமலை வருகின்றனர். அவர்களை ஹரித்வார் அருகில் கண்ட அந்த நீலகண்டர் அவர்களுக்கு தரிசனம் தர விரும்பாமல் மறைந்து விடுகிறார். இதைக்கண்ட தர்மர் இவ்வாறு கூறுகின்றார்,
"பிரபோ! நாங்கள் பாவம் செய்திருக்கின்றோம் அதற்காகவே தங்களை தரிசித்து பாவ விமோசனம் பெற வேண்டி தங்கள் பாதம் பணிய வந்தோம், ஆயினும் தாங்கள் இன்னும் மனமிரங்கவில்லை, தங்கள் திருவடி தரிசனம் தந்தே ஆக வேண்டும் , தாங்கள் மறைந்த இந்த இடம் குப்த காசி என்று அழைக்கப்பட வேண்டும்" என்று வேண்டினார். குப்த காசியிலிருந்து பாண்டவர்கள் கௌரி குண்டத்தை அடைகின்றனர். அங்கு ஒரு மாட்டு மந்தையில் ஒரு காளையை ( எருமை என்பாரும் உண்டு) நகுல சஹாதேவர்கள் காண்கின்றனர் அதன் கம்பீரத்தைப் பார்த்து சிவபெருமானே இவ்வாறு உருமாறி சோதிக்கின்றார் என்பதை உணர்ந்த அவர்கள் பீமனிடம் கூற பீமனும் தனது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அந்த காளையைத் துரத்த தொடங்குகின்றான். அவனிடமிருந்து தப்பிக்க எம்பெருமான் ஓட ஆரம்பிக்கின்றார். அவனிடமிருந்து தப்பிக்க எம்பெருமான் பூமிக்குள் பாய்கின்றார் ஆயினும் பீமன் அவரது திமிலைப் பிடித்து விடுகின்றான். அந்த இடத்தில் ஜோதிப் பிழம்பாக எம்பெருமான் தோன்றி பாண்டவர்களுக்கு பாவ விமோசனம் வழங்குகிறார், உங்கள் நிமித்தமாக நான் இங்கேயே ஜோதிர் லிங்கமாக விளங்குவேன் இங்கு என்னை தரிசனம் செய்பவர்கள் என்னுடைய பரமபக்தர்கள் ஆவார்கள் என்றும் வரம் தருகின்றார். எனவே அந்த இடத்திலேயே எம்பெருமான் திமிலின் வடிவமாக ஜோதிர்லிங்கமாக கேதாரீஸ்வரராக கோவில் கொள்கின்றார். பாவ விமோசனம் பெற்ற பாண்டவர்கள் பின் மேலே சென்று மோட்சம் அடைகின்றனர்.
அவ்வாறு ஐயன் பாய்ந்த போது அவரது மற்ற அங்கங்கள் மற்ற இடங்களிலும் வெளிப்படுகின்றன, ஐயனின் தலை பகுதி வெளிப்பட்ட இடம் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத். தொப்புள் மதுமஹேஸ்வரரிலும், கரங்கள் துங்கநாத்திலும், முகம் ருத்ரநாத்திலும், ஜடாமுடி கப்லேஸ்வரிலும் வெளிப்பட்டன. இந்த ஐந்து இடங்களும் பஞ்ச கேதாரம் என்று அழைக்கப்படுகின்றது.
இவ்வளவுதானா ஐயனின் புகழ் இன்னும் உள்ளது அடுத்த பதிவில் அதைக் காணலாம்...

திருச்சிற்றம்பலம்
கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்...
No comments:
Post a Comment