Friday 24 June 2016

தோப்புக் கரணம்

மூளைக்கு யோகாசனம் “தோப்புக் கரணம்” 


மூளைக்கு என்ன பயிற்சி எனக் கேட்டால், பலரும் தலையை அமுக்கி விடுவது, மனனம் செய்வது அதாவது ஒன்றையே திரும்பத்திரும்ப சொல்லுதல் என்று தான் சொல்வது வழமை.

ஆனால், முன்னாளில் நமது ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் நமக்கு வழங்கிய தண்டனை “தோப்புக்கரணம்” தான் மூளைக்கு சிறந்த யோகாசனம்.
தோப்புக்கரணம் போடுவதால் மூளை புத்துணர்ச்சி அடைகிறதாம், Autism எனப்படும் மன இறுக்கம் கொண்ட குழந்தைகள் கூட இந்தத் தோப்புக்கரணத்தால் நலன் பெறுகிறார்களாம்.
யாராவது ஒரு குழந்தை அடங்காமல அடம்பிடித்தால் அல்லது கோபத்தால் கிடைப்பதை எல்லாம் எறிந்து உடைத்தால், “Go to your room and think what you did…” என்பதில்லையே… செய்த பிழைக்கேற்ப பத்து, பதினைந்து அல்லது இருபது முறை தோப்புக் கரணம் போடு! என்பதுதான் வழமை…
குழந்தைகளுக்கு மன இறுக்கம் இருந்ததோ இல்லையோ, மன இறுக்கம் இருந்தால், அது உடனேயே நிவர்த்தி செய்யப்பட்டுவிடும்.
அந்த நாட்களில் பாடசாலை மாணவர்கள் அவமானம் என நினைத்த தண்டனையான இந்தத் தோப்புக்கரணத்திற்கு அமெரிக்கர்கள் காப்புரிமை கூடப் பெற்றிருக்கிறார்கள்.
எழுபதுகளில் ஒரு ஜெர்மானிய மருத்துவர் இந்தியா சென்ற போது, இந்தியர் பிள்ளையாரைப் பார்த்து தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்து விசித்திரமாக எண்ணவில்லை.
அவர் இந்த விசித்திரமான செய்கையை ஆராய்ந்து அந்த நாட்டு மருத்துவ இதழில் இந்தத் தோப்புக் கரணம் உடலில் என்ன நன்மையைச் செய்யும் என விளக்கியிருந்தார்.
அதாவது, இடது காதுச் சோணையில் வலது கண் நரம்பின் முடிவிடமும், வலது காதுச் சோணையில் இடது கண் நரம்பின் முடிவிடமும் இருப்பதால் இவற்றைச் சீரான அழுத்தத்துடன் அமுக்கி விடுவதால் கண்களிரண்டும் நல்ல பயிற்சி பெறும், இதனால் பார்வைக் கோளாறுகள் வராது என கூறியுள்ளார்.
இப்போது தெரிகிறதா தோப்புக் கரணத்தின் அருமை!

தோப்புக்கரணத்துக்கு கதையிருக்கு தெரியுமா? 

விநாயகர் வழிபாட்டில் கைகளால் குட்டிதோப்புக்கரணம் இடுவர். "தோர்பி கர்ணம்' என்னும் வடசொல்லே தோப்புக் கரணம் எனப்படுகிறது. இந்தச்சொல்லுக்கு "கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது' என்று பொருள். விநாயகர், தன் மாமா திருமாலின் சக்கரத்தை வாயில் போட்டுக் கொண்டு கொடுக்க மறுத்து அடம் பிடித்தார். 

அவரைச் சிரிக்க வைத்தால் வாயில் இருந்து சக்கரம் வெளியே வந்துவிடும் என்று எண்ணிய பெருமாள், தன் நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு கரணம் போட்டு வேடிக்கை செய்தார். விநாயகரும் அதைப் பார்த்து சிரிக்க, சக்கரம் கீழே விழுந்துவிட்டது. அதுமுதல் விநாயகரை மகிழ்விப்பதற்காக இவ்வழக்கம் உண்டானது. இவ்வழிபாட்டிற்கு வேறொரு புராணக்காரணமும் உண்டு. தேவர்களைக் கைது செய்த கஜமுகன் என்ற அசுரன் தனக்கு தோப்புக்கரணம் இடும்படி ஆணையிட்டான். விநாயகப்பெருமானை அவனை அழித்து தேவர்களைக் காத்தார். அவருக்கு நன்றிக்கடனாக தேவர்கள் தோப்புக்கரணம் இட்டனர். அதுமுதல் இவ்வழிபாடு உண்டானதாகவும் கூறுவர்

No comments:

Post a Comment