Sunday 26 June 2016

பிரதோஷ விரதம்

பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும் அதன் பயன்களும்:





பிரதோஷம் என்பது சிவனுக்குரிய நாட்களில் மிகவும் முக்கியமான நாளாகும்.இந்தப் பிரதோஷமானது மாதம் இருமுறை அதாவது வளர்பிறையில் ஒரு முறையும்,தேய் பிறையில் ஒருமுறையும் வரும்.அப்படி வரும் 15 நாட்களில் பதிமூன்றாவது நாளான த்ரயோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை இருக்கும் நேரத்தை பிரதோஷ காலம் என்று கூறுவர். பிரதோஷ விரதம் சிவனுக்கு உரிய பலவித விரதங்களில் தலையாயது. இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களிலிருந்து நீக்கி இன்பத்தை எய்துவார்.
விரதம் அனுஷ்டிக்கும் முறை:Siva Lingam
வளர்பிறை தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களில் வரும் திரயோதசி திதி அன்று அதிகாலையிலும் எழுந்து நீராடி,நித்ய கடன்களை முடிக்க வேண்டும்.சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்கவேண்டும்.திருமுறைகள் ஒத வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவாலயம் சென்று (சிவாயநம)ஓதி வழிபட வேண்டும்.
பிரதோஷ காலத்தில் சிவனுடன் கூடவே அவரது வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும்.இவருக்கும் பால்,தயிர்,சந்தனம்,எண்ணெய்,நெய்,இளநீர்,போன்றவற்றால் அபிஷேகங்கள் நடைபெறும்.பின் பூ,வில்வம் முதலியவற்றால் அர்ச்சனைகள் நடக்கும்.

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:-

1. பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் – பல வளமும் உண்டாகும்
3. தேன் – இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் – விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்
6. நெய் – முக்தி பேறு கிட்டும்
7. இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும்
8. சர்க்கரை எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் – சுகவாழ்வு
10. சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்
முதலில் நந்தி தேவருக்கு தீபாராதனை காட்டப்படும். பின்பு தான் மூலவரான லிங்கத்திற்கு பூஜை நடக்கும். அப்படி நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். நமக்கு நன்மைகளே நடக்கும் என்பது நம்பிக்கை.

நந்தி ஸ்லோகம்:
நந்திகேச மஹா பாகா சிவ த்யான பராயணா
உமா சங்கர சேவார்த்தம் அனுக்ஞாம் தாது மர்ஹசி
 நந்தியின் சிறப்பு:
பிரதோஷ காலத்தில் சிவனுடன் கூடவே அவரது வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கும்  பால்,தயிர்,சந்தனம், எண்ணெய், நெய், இளநீர், போன்றவற்றால் அபிஷேகங்கள் நடைபெறும்.பின் பூ,வில்வம் முதலியவற்றால் அர்ச்சனைகள் நடக்கும். முதலில் நந்தி தேவருக்கு தீபாராதனை காட்டப்படும். பின்பு தான் மூலவரான லிங்கத்திற்கு பூஜை நடக்கும்.அப்படி நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.நமக்கு நன்மைகளே நடக்கும் என்பது நம்பிக்கை.
நந்தி அபிஷேகத்தின் போது சொல்லும் ஸ்லோகம்:
நந்திகேச மஹா பாகா சிவ த்யான பராயணா
உமா சங்கர சேவார்த்தம் அனுக்ஞாம் தாது மர்ஹசி
பொருள்:
சிவத்யானத்தில் சதா ஈடுபட்டுள்ள நந்தி பகவானே! நான் சிவ பார்வதி சேவை செய்ய அனுமதி அளிப்பாயாக!!
இவ்வாறு இந்த நந்தி ஸ்லோகத்தை சொல்லி வழி பட்டால் சிவனின் அருள் நமக்கு பிரதோஷகாலத்தில் கிடைக்கும்.

குறிப்பு:  இப்படியாக இந்த பிரதோஷத்தன்று விரதங்களை அனுஷ்டித்து பின்பு அன்றிரவு பால் பழம் போன்ற ஆகாரத்துடன் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment