Sunday, 26 June 2016

சிவபெருமானின் அருவ வடிவமாக லிங்களின் வகைகள்...

அருவ வடிவமாக லிங்களின் வகைகள்:


★சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அருவ வடிவமாக லிங்கம் வழிபடப்படுகிறது. இந்த இலிங்கமானது எண்ணற்ற வகைகளில் தேவர்களாலும், மனிதர்களாலும் வணங்கப்படுகிறது.

★சுயம்பு லிங்கம் - இறைவன் இச்சைப்படி தானாக தோன்றிய லிங்கம்

★தேவி லிங்கம் - தேவி சக்தியால் வழிபடபட்ட லிங்கம்.

★காண லிங்கம் - சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், 
ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட லிங்கம்.

★தைவிக லிங்கம் - மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட லிங்கம்.

★ஆரிட லிங்கம் - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.

★இராட்சத லிங்கம் - இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.

★தெய்வீக லிங்கம் - தேவர்களால் பூசை செய்யப்பட்டு முனிவர்களின் தவத்தினால் பூமிக்கு வந்த லிங்கம்

★அர்ஷ லிங்கம் - ரிசிகளும், முனிவர்களும் தங்களின் வழிபாட்டிற்கு உருவாக்கிய லிங்கம்

★அசுர லிங்கம் - அசுரர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.

★மானுட லிங்கம் / மனுஷ்ய லிங்கம் - மனிதர்களால் வழிபடப்பட்ட லிங்கம்

★மாணி மாய லிங்கம் - இந்திரனால் வழிபடப்பட்ட லிங்கம்

★தாமரமய லிங்கம் - சூரியனால் வழிபட்டப்பட்ட லிங்கம்

★முக்தி இலிங்கம் - சந்திரனால் வழிபடப்பட்ட லிங்கம்

★ஹேம இலிங்கம் - குபேரனால் வழிபடப்பட்ட லிங்கம்

★இவற்றில் மனுஷ்ய லிங்கமானது தொன்னூற்று வகையாக உள்ளதென மகுடாகமம் எனும் சைவ ஆகமம் கூறுகிறது.

★க்ஷணிக லிங்கம் - தற்காலிக வழிபாட்டிற்கு மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகியவைகளைக் கொண்டு உருவாக்கப்படும் லிங்கங்கள்.

★வர்த்தமானக லிங்கம் - பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் ஆகியவை ஒரே அளவாகவும், ருத்ர பாகம் அவைகளைவிட இருமடங்கும் இருக்கும் இலிங்கங்கள்.

★ஆத்ய லிங்கம் - பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் ஆகியவை அனைத்தும் சம அளவு இருக்கும் இலிங்கங்கள்.

★பஞ்ச இலிங்கங்கள்

சிவபெருமான் சதாசிவ மூர்த்தி தோற்றத்தில் தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து லிங்கங்களை தோற்றுவித்தார். இவை பஞ்ச லிங்கங்கள் எனவும் அறியப்படுகின்றன. அவை

★சிவ சதாக்கியம்★
★அமூர்த்தி சதாக்கியம்★
★மூர்த்தி சதாக்கியம்★
★கர்த்திரு சதாக்கியம்★
★கன்ம சதாக்கியம்★

★பஞ்சபூத இலிங்கங்கள்

நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆன இலிங்கங்கள் பஞ்சபூத இலிங்கங்கள் எனப்படும்.

★அப்பு லிங்கம்★
★தேயு லிங்கம்★
★ஆகாச லிங்கம்★
★வாயு லிங்கம்★
★அக்னி லிங்கம்★
★முக லிங்கங்கள் ★
★ஏக முக லிங்கம்★
★இரு முக லிங்கம்★
★மும் முக லிங்கம்★
★சதுர் முக லிங்கம்★
★பஞ்ச முக லிங்கம்★



★ஓம் நமசிவாய ஓம் ★

No comments:

Post a Comment