Friday 24 June 2016

விபூதி இயல்:

விபூதி இயல்:


1. சிவபெருமானை வழிபடுஞ் சமயத்துக்குப் பெயர் யாது?

சைவசமயம்.

2சைவசமயிகள் சரீரத்திலே ஆவசியமாகத் தரிக்க வேண்டிய அடையாளம் யாது?

விபூதி.
3விபூதி ஆவது யாது?

பசுவின் சாணத்தை அக்கினியாலே சுடுதலால் உண்டாக்கிய திருநீறு.

4எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?

வெள்ளை நிற விபூதி.

5. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?

பட்டுப் பையிலேனும்சம்புடத்திலேனும் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்.

6. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?

வடக்கு முகமாகவேனும்கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.
7. விபூதியை எப்படி தரித்தல் வேண்டும்?

நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவஎன்று சொல்லிவலக்கையின் நடுவிரல் 

மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும்.

8. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?

சிந்திய விபூதியை எடுத்துவிட்டுஅந்த இடத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.
9. நடந்து கொண்டாயினும்கிடந்துகொண்டாயினும் விபூதி தரிக்கலாமா?

தரிக்கல் ஆகாது.
10. எக்காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்?

நித்திரை செய்யப் புகும் போதும்நித்திரை விட்டெழுந்த உடனும்தந்த சுத்தம் செய்த உடனும்
சூரியன் உதிக்கும் போதும்,அத்தமிக்கும் போதும்ஸ்நானஞ் செய்த உடனும்போசனத்துக்குப் 
போம் போதும்போசனஞ் செய்த பின்னும் விபூதிஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்.

11. ஆசாரியர் ஆயினும்சிவனடியார் ஆயினும் விபூதி தந்தால்எப்படி வாங்கல் வேண்டும்?


மூன்று தரம் ஆயினும்ஐந்து தரம் ஆயினும் நமஸ்கரித்துஎழுந்து கும்பிட்டுஇரண்டு கைகளையும் 
நீட்டி வாங்கல் வேண்டும்.

12. விபூதி வாங்கித் தரித்துக் கொண்ட பின் யாது செய்தல் வேண்டும்?

முன் போல் மீண்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.
13. சுவாமி முன்னும்குரு முன்னும்சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?

முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.

14. விபூதி தாரணம் எத்தனை வகைப்படும்?

உத்தூளனம்திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.

உத்தூளனம் = நீர் கலவாதுதிரிபுண்டரம் =மூன்று குறி)


15. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?

சிரம்நெற்றிமார்புகொப்பூழ்முழந்தாள்கள் இரண்டுபுயங்கள் இரண்டுமுழங்கைகள் இரண்டு

மணிக்கட்டுகள் இரண்டு,விலாப் புறம் இரண்டுமுதுகுகழுத்து என்னும் பதினாறுமாம்.

இவைகளுள்விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. 

முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிர்ண்டு தானங் கொள்வதும் உண்டு.

16. திரிபுண்டரந் தரிக்கும் இடத்துநெற்றியில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?

இரண்டு கடைப்புருவ எல்லைவரையுந் தரித்தல் வேண்டும்அதிற் கூடினாலுங் குறைந்தாலுங் குற்றமாம்.

17. மார்பிலும் புயங்களிலும் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?

அவ்வாறங்குல நீளந் தரித்தல் வேண்டும்.

(அங்குலம் = 2.5 செ.மீ)


18. மற்றைத் தானங்களில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்.

ஒவ்வோர் அங்குல நீளந் தரித்தல் வேண்டும்.

19. மூன்று குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டல் ஆகாது.



-ஆறுமுகநாவலரவர் 1976

No comments:

Post a Comment