Sunday 26 June 2016

விரிஞ்சிபுரம் அருள்மிகு மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில் !!!

அருள்மிகு மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில்விரிஞ்சிபுரம்வேலூர்.

மூலவர்மார்க்கபந்தீசுவரர்
அம்மன்மரகதாம்பிகை
தல விருட்சம்பனைமரம்
தீர்த்தம்சிம்ம தீர்த்தம்
பழமை500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்திருவிரிஞ்சி
ஊர்விரிஞ்சிபுரம்
மாவட்டம்வேலூர்
மாநிலம்தமிழ்நாடு
திருவண்ணாமலையில் ஈசனின் முடி காண முடியாமல் ஈசனாரின் திருமுடியில் இருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு ஈசனாரின் முடி கண்டதாகக் கூறி அதனால் அவதியுற்ற பிரம்மாதேவரூபத்தில் காட்சி தரக்கூடாது என்று ஈசன் கருதியதால்,விரிஞ்சிபுரத்தில் உள்ள இக்கோயில் குருக்கள் மகனாக பிறந்து சிவசர்மன் என்ற பெயரோடு வளர்ந்தான்.

கொஞ்ச காலத்தில் தந்தையார் மறைந்ததால் சிவசர்மன் சிவபெருமானுக்கு பூஜை செய்யத் தயாரானான்சுவர்ண கணபதியை ஆராதித்த பின் கையில் திரு மஞ்சனக் குடத்துடன் பகவானுக்கு அபிசேகம் செய்ய எத்தனிக்கையில் மகாலிங்கம் உயரமாக இருந்ததால்(சிவசர்மன் சிறு பாலகனாக இருந்ததால்திருமுடி எட்டவில்லைஅது கண்டுஅப்பனே!உங்கள் முடி எனக்கு எட்டவில்லையே என்று உருகி நிற்க அவனது பக்திக்கு இரங்கி ஈசனார் தம் திருமுடியை வளைத்தார்பெருமான் திருமுடி வளைந்து சிறுவன் முறைப்படி செய்த பூஜைகளை ஏற்றுக்கொண்டார்அதே கோலத்தில் இன்றும் முடி சாய்ந்த மகாலிங்கமாக மார்க்கபந்தீசுவரராக காட்சி அளிக்கிறார் என்று வரலாறு கூறுகிறதுமூலவர் சற்று ஈசாணிப்பக்கம் சாய்ந்துள்ளார்.பிரம்மனுக்கு முடி சாய்த்து கொடுத்ததால் அவ்வாறு உள்ளது.திருவண்ணாமலையில் அடிமுடி காண்பதில் பொய் சொன்ன பிரம்மா இத்தலத்தில் பூஜை செய்து திருமுடி கண்டிருக்கிறார்பாலகனாகத் தோன்றிய பிரம்மா இத்திருத்தலத்தில் சிவபெருமானிடம் உபநயனம்பிரம்மோபதேசம்சிவதீட்சை ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியகதிர்கள் விழுகின்றன.
விரிஞ்சன் என்று பிரம்மாவுக்கு பெயர்பிரம்மா பூஜை செய்ததால் விரிஞ்சிபுரம் என்று பெயர் வந்தது.
13ம் நூற்றாண்டுக் கோயில் என்றும் சோழ ராஜாக்களால் நிர்மாணம் செய்யப்பட்தென்றும் தெரிகிறதுதனபாலன் என்ற வணிகனுக்கு வேடுவராய் சிவபெருமான் வழித்துணை வந்தருளிய தலம்இதனாலேயே வழித்துணை நாதர் என்ற பெயரும் சுவாமிக்கு உண்டுதிருமூலர்,பட்டினத்தார் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இதுமூலவருக்கு மேல் ருத்ராட்சப் பந்தல் இருப்பது விசேசம்இங்கு தலமரமாகப் பனைமரம் உள்ளதுஇது கோயிலின் உட்பிரகாரத்தில் உள்ளதுஇது ஒரு அதிசய பனைமரமாக உள்ளதுஅதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கறுப்பாக இருக்கிறதுமறுவருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாக இருக்கிறது.
திருவிழா:
பங்குனி – பிரம்மோற்சவம் – 10 நாட்கள் திருவிழா – கொடி ஏற்றம் தீர்த்தவாரியுடன் நடக்கும்.விழா நாட்களில் பத்து வாகனங்களில் சுவாமி வீதி உலாகார்த்திகை மாதம்– கடைசி ஞாயிறு மிகவும் விசேசம்.
ஆடிப்பூரம் சிவராத்திரிநவராத்திரி ஆகியவை கோயிலின் மிக விசேசமான நாட்கள் ஆகும்பவுர்ணமிஅன்னாபிசேகம்பிரதோசம்அமாவாசைகிருத்திகை,   சஷ்டிவிசாகம்தைபூசம் சங்கடகர சதுர்த்திகார்த்திகை தீபம் ஆகியவை இத்தலத்தின் சிறப்பான நாட்கள் ஆகும்தவிர வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ்ஆங்கில வருடப்பிறப்புதீபாவளி,பொங்கல் ஆகிய நாட்களில் கோயிலில் சுவாமிக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.
கோரிக்கைகள்:
குழந்தை வரத்துக்கு மிகவும் பெயர் பெற்ற கோயில் இதுகார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று முதலில் ஆற்றில்(பாலாறுகுளித்துவிட்டு பின்பு பிரம்ம தீர்த்தத்திலும் சிம்ம குளத்திலும் குளித்துவிட்டுசுவாமியை வலம் வந்தால் குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கிறது என்பது இத்தலத்தில் வழிபடும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளதுதிருமணம் வரம் கிடைக்கவும் பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள்.இத்தலத்தில் வழிபட்டால் பேய் பிசாசு தொல்லைகள் நீங்குவதால் அந்த பிரார்த்தனைகளுக்காகவும் இத்தலத்துக்கு நிறைய பக்தர்கள் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு நல்லெண்ணெய்மஞ்சள் பொடிமா பொடிபால்தயிர்பழ வகைகள்,கரும்புச்சாறுதேன்இளநீர்பஞ்சாமிர்தம்சந்தனம்பன்னீர்திருநீர்ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்உலர்ந்த தூய ஆடைகள் சாத்தலாம்நெய்தீபம் ஏற்றலாம்சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம்புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம்.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்கார்த்திகை மாதத்தில் சங்காபிசேகம் நடத்துகிறார்கள்வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.
காலை மணி முதல் 11 மணி வரைமாலை மணி முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

No comments:

Post a Comment