Sunday, 26 June 2016

சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை..


சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை:-

முதலில் உங்கள் வீட்டை விட்டு கோவிலுக்கு செல்லும் முன்னர் உங்களின் குலதெய்வத்தினை வேண்ட வேண்டும்.

பின்பு சிவாலயத்தின் அருகே சென்றவுடன் கோவிலின் கோபுரத்தினை இருகரம் கூப்பி வணங்க வேண்டும்.

பிறகு ஆலயத்தினுள் சென்று முழு முதற் கடவுளாகிய விநாயகப்பெருமானை வணங்க வேண்டும்.

அதன் பின்னர் கொடி மரத்தினை வணங்க வேண்டும்.

கொடி மரத்தினை வணங்கிய பின்பு பலிபீடத்தினை வணங்க வேண்டும்.

அதன் பின்னர் நந்தி பெருமானை வணங்க வேண்டும்.

மற்ற கடவுளர்களை வரிசையாக தரிசித்து வணங்க வேண்டும்.
பின்பு அம்பிகையை வணங்க வேண்டும்.

அம்பிகையை வணங்கிய பின்பு சிவபிரானை கண்டு தொழ வேண்டும்.

அதன் பின்னர் தக்ஷ்ணாமூர்த்தியை வணங்க வேண்டும்.

பின்பு சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும்.

அதன் பின்பு துர்க்கையை வணங்க வேண்டும்.

பின்பு பைரவ பெருமானை வணங்க வேண்டும்.

அதன் பின்னரே நவக்கிரகங்களை வணங்க வேண்டும்.

பின்பு கொடிமரத்தின் அருகே நின்று நமது வேண்டுகோள்களை வேண்ட வேண்டும்.

பிறகு கொடிமரத்திற்கு நேராக தரையில் விழுந்து வணங்க வேண்டும்

சண்டிகேஸ்வரரை மானசீகமாக வணங்கி விடைபெற வேண்டும்.

பின்பு ஆலயத்தில் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார வேண்டும்.

அதன் பின்னர் வேறு எந்த கோவிலுக்கோ அல்லது மற்றவர்களின் வீடுகளுக்ககோ செல்லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
ஓம் அண்ணாமலையே போற்றி!!!

ஓம் சிவ சிவ ஓம்

No comments:

Post a Comment