Friday 24 June 2016

தோப்புக் கரணம் போடுவது ஏன் ?

தோப்புக் கரணம் போடுவது ஏன் ?

நம்முடைய தர்மத்தைப் பற்றி , பழக்கங்களை பற்றி நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
முதலில் விநாயகரிடமிருந்து ஆரம்பிக்கலாம்
காலங்காலமாக நம் மக்கள் விநாயகரை கும்பிட்டு தோப்பு கரணம் போட்டால் நல்லது. படிப்பு வரும் என்று கூறினார்கள். முன்னோர் சொல் முக்கியமானது என்று கருதி கேள்வி கேட்காமல் பின்பற்றி வந்தனர். உண்மையான காரணம் மறைந்து விட்டது.
கடவுள் மறுப்பு கொள்கையாளர்களும் மாற்று மதத்தினரும் நம்முடைய பழக்க வழக்கங்களை மூட நம்பிக்கைகள் என்று பிரசாரம் செய்து நமக்கு அவநம்பிக்கை ஏற்பட செய்துள்ளனர் .
இன்றிலிருந்து நம் குழந்தைகளுக்கு உண்மையான காரணங்களை கூறி வளர்ப்போம்.

தோப்புக் கரணம் போடுவது எப்படி?

வலது காதை இடது கையால் பிடிக்க வேண்டும். இடது காதை வலது கையால் பிடிக்க வேண்டும். காது மடலின் கீழ்ப்பகுதியை (கம்மல் போடும் பகுதியை) பிடித்து அழுத்தியபடி கையின் பெருவிரலை முன்பகுதியிலும், ஆட்காட்டி விரலை பின்பகுதியிலும் வைத்துப் பிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரு காதுகளையும் பிடிக்கும் போது இடதுகை உள்ளேயும், வலது கை வெளியேயும் இருக்க வேண்டும்.
இடது காதைப் பிடிக்கும் போது வலது பக்க மூளை தூண்டப்படுகின்றது. வலது காதைப் பிடிக்கும் போது இடதுபக்க மூளை தூண்டப்படுகின்றது.
நமது முன்னோர்கள் பிடித்த ‘தோப்புக்கரணம்’ ஒரு வகையில் மருந்தில்லா மருந்தாகத் திகழ்கிறது.
காது மடல்களைப் பிடித்துவிடுவதால் அதன் நரம்புகள் வழியாக மின்தூண்டல் ஏற்பட்டு, மூளையை சுறுசுறுப்படையச் செய்வதாக ‘யேல்’ பல்கலைக்கழகப் பேராசிரியர் ‘யூஜிங் ஆங்’ என்பவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மறதியைத் தவிர்த்து, ஞாபகசக்தி பெருகும் என்றும், ‘அல்சைமீர்’ என்ற மறதி நோயைக் குணமாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘எரிக் ராபின்சன்’ என்ற மருத்துவர் கூறுகையில் , ‘ஞாபக மறதி நோயைக் குணப்படுத்தும் மருந்து இல்லா வைத்தியம்தான் தோப்புக்கரணம்’ என்று தெரிவித்துள்ளார்.

ஒருவர் தினமும் தோப்புக்கரணம் போடுவதால், 

கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கின்றனவாம்.

* மூளையின் செயல்பாட்டை எந்தப் பாதிப்பும் இல்லாமல் வேகப்படுத்துகின்றது.
* வேலையில் அதிக கவனம் செலுத்த முடியும்.
* ஒரு நாளில் அதிக பணிகளைச் செய்ய முடியும்.
* மூளைக்கு அதிக சக்தியைக் கொடுக்கின்றது
* பதற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படுகின்றது.
* எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளின் கல்வித்திறனை அதிகப்படுத்துகின்றது.
நம்முடைய முன்னோர்கள் சொல்லி சென்றவைகளின் உண்மையான காரணத்தை கண்டு அறிந்து நம் குழந்தைகளுக்கு சொல்லி வளர்ப்போம்

No comments:

Post a Comment