சேதுக்கரை எனும் தனுஷ்கோடி!
வங்கக்கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் தனுஷ்கோடி இங்கு குளித்தால்தான் காசியாத்திரை முடிவுபெறுகி றது என்பது இந்துக்களின் நம்பிக்கை.
ராமர் இந்த தனுஷ்கோடிப் பகுதியில் இருந்துதான் இலங்கைக்குப் பாலம் அமைத்துச் சென்றார் என்பதால் இது சேதுக்கரை என்றும் அழைக்கப்படுகிறது. சேது என்ற வடமொழிச் சொல்லுக்குப் பாலம் என்று பொருள்.
இலங்கையில் ராவணனைக் கொன்று சீதையைச் சிறை மீட்ட பிறகு ராமன், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோர் தங்களது வானரப்படைகளுடன் இந்தச் சேதுப்பாலம் அணை வழியாகத்தான் ராமேஸ்வரத்துக்கு வந்தனர். இவர்களுடன் ராவணனின் தம்பியான வீபிஷணனும் வந்தான். வந்தவன் ராமனிடம் சேது அணையை உடைத்து விடுமாறு வேண்டுகோள் வைத்தான்.
ஸ்ரீராமன், விபீஷணனின் வேண்டுகோளை ஏற்று தன்னுடைய வில்லின் முனையால் (தனுஷ்வில், கோடி முனை) சேது அணையை உடைத்ததால் இவ்விடத்துக்கு தனுஷ்கோடி’ என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபீஷணன் ராமனை சரணாகதி அடைந்த இடமும் தனுஷ்கோடிதான். விபீஷணனுக்கு இலங்கை வேந்தனாக முடிசூட்டப் பட்டதும் இங்குதான்.
இந்த சேதுக்கரையைக் காப்பதற்கும் ராமலிங்கத்தைப் பராமரிப்பதற்காகவும் கங்கைக்கரை குகனின் வழிவந்த மாவீ ரர்களை ஸ்ரீராமர் நியமித்தார். அவர்களே சேதுவுக்கு அதிபதியாகி விளங்கிய சேதுபதி என்றழைக்கப்பட்டனர்.
பாதாள அமுதமாகிய சேதுக்கடலும் கயிலாய தீர்த்த மகாசக்தியும் இங்கு ஒன்றாகக் கலக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா ? இது ஓர் அரிய தகவல் மட்டுமல்ல, பிரமிப்புக்குரிய விஷயமும் கூட !
அதாவது சேதுக்கரையின் கடல்நீர் சுமார் இரண்டு லட்சம் மைல்கள் சுற்றிச் சுழன்று வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கடல் நீரோட்டத்தின் வேகம் அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி தினங்களில் அதிகம் பெறுவதால், அந்த வேகத்தில் கடலின் அடிவரை சுழற்சி கண்டு அடி யிலுள்ள மூலிகைகளின் உயிர்ச்சத்துகளைச் கடலின் மேல் மட்டத்துக்குக் கொண்டு வருகிறது. இந்த மூலிகைகளின் ஜீவசத்துகள் அமிர்தத்துக்கு நிகரானவையாக உள்ளன.
இந்த மாற்றத்தால் உண்டாகும் காந்தசக்தியும் மருத்துவக் குணமும் இந்த உயிர்ச் சத்துகளை போஷித்து வளர்க்கும் உயரிய மகத்துவம் மிக்கதாக விளங்குகிறது. அதன் காரணமாகவே இந்தச் சேதுதீர்த் தம் புனிதமாகக் கருதப்படுகிறது. எனவே புனித தீர்த்தமாகிய சேதுவில் நீராடி, அவர்களுடைய பூர்வ புண்ணிய பாவங்களையும் போக்கிக் கொள்கிறார்கள் பக்தர்கள்.
ராமேஸ்வரத்திலுள்ள அக்னி தீர்த்தத்தையும் சேது தீர்த்தமாகவே கருதி பக்தர்கள் நீராடுவதும் உண்டு.
தனுஷ்கோடியில் அர்த்தோதயம், மகோதியம் ஆகிய இரு நாட்களிலும் நீராடினால் மிகவும் புண்ணியம். மேலும் இந்த இருதினங்களிலும் இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகளை இங்கு செய்வதால் இறந்தவர்களுக்கான பாபவிமோசனமாக அமையும் என்ற நம்பிக்கை காலங்காலமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தனுஷ்கோடியில் சேதுமாதவப் பெருமாள் என்ற திருப்பெயரில் ஸ்ரீராமனுக்கு ஓர் ஆலயம் இருந்துள்ளது. வைஷ்ணவர்களால் போற்றப்படும் நூற்றியெட்டு வைணவத் தலங்களுக்கு நிகராகக் கருதப்படுவது இந்த ஆலயம்.
இங்கு ஏற்பட்ட புயலின் காரணமாக இந்த ஆலயமும் கடலில் மூழ்கிவிட்டது. இந்தச் சேது தீர்த்தமும் கடலால் சூழப்பட்டு விட் டதால் ராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்தத் தைச் சேது தீர்த்தமாக ஏற்றுப் புனித நீராடி வருகிறார்கள் பக்தர்கள்.
அடுத்து நாம் செல்லப்போவது ராமநாத சுவாமி கோயிலுக்குத்தான்.
அலையில்லாத கடலான அக்னி தீர்த்தம் !
கோயிலுக்குள் செல்லும் முன்பாக முத லில் நீராடலுக்கு அக்னி தீர்த்தம்.
ஸ்ரீராமபிரான் சீதையைத் தீக்குளிக்குமாறு ஆணையிட, அதன்படியே கற்பின் கனலான சீதை தீக் குண்டத்தில் இறங்கியபோது, அக்னிதேவனை சீதையின் அந்தக் கற்பு நெருப்பு சுட்டதாம்.
சீதாப்பிராட்டியாரின் அந்த கற்புவெப்பத்தைத் தாங்கமுடியாத அக்னிதேவன் இந்தச் சமுத்திரத்தில் வந்து நீராடி தன்னைத் தகித்த வெப்பத்தைத் தணித்துக் கொண்டான் என்கிறது புராணம்.
ஆம் ஆச்சரியம் தான் ! இங்கே கடல்நீரில் நீராடும்போது இன்றும் கடல்நீர் வெது வெதுப்பாகத்தான் இருக்கிறது. ராமனின் கட்டளைக்கேற்பவே இன்றும் கடலில் அலையே இல்லை.
இந்தக் கடல் மண்ணில் காந்த சக்தி இருப்பதால் இந்த வெதுவெதுப்பு என்கிறார்கள் அறிவியலாளர்கள். அந்த அக்னி தீர்த்தத்தில் நீராடி, இதன் கரையிலேயே பித்ருக்களுக்கான சடங்குகளைச் செய் கின்றனர் பக்தர்கள்.
அக்னி தீர்த்த நீராடலை முடித்துக் கொண்டு புறப்பட்டால் அடுத்தது ராமநாத சுவாமி ஆலயம் தான்.
தினந்தோறும் கங்கா அபிஷேகம் :
ஆலயத்தின் எல்லாத் திசைகளிலும் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம், வங்கக் கடலின் தென்கோடியில் குடிகொண்டு இருக்கும் ராமநாத சுவாமியின் அருளைப் பெற தினந்தோறும் நாடெங்கிலுமிருந்து, கூட்டம் கூட்டமாக வந்து கொண்டேயிருக் கிறார்கள் பக்தர்கள்.
கடவுள் அவதாரமான ஸ்ரீராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட விசேஷம் கொண்டவரல்லவா இந்த ராமநாதர் !
இந்த ராமநாத சுவாமி ஆலயத்துக்குள் புனிதத் தீர்த்தமாகக் கருதப்படும் 22 தீர்த்தங்கள் உள்ளன.
பக்தர்கள் ஒவ்வொருவரும் சந்நிதிக்குப் போகுமுன் இந்தத் தீர்த்தங்களில் நீராடி விட்டு இறைவனைத் தரிசித்து அவரின் அருளாசியைப் பெற வேண்டுமென்பது ஐதீகம்.
இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் ராம லிங்க சுவாமிக்கு அவரின் திருமேனியைத் தீண்டி பூஜை செய்யும் உரிமை அர்ச்சகர்களைத் தவிர மூன்றே பேருக்குத்தான் இருக்கிறது.
ஜகத்குரு ஸ்ரீசிருங்கேரி மகாசந்நிதானம், ஜகத்குரூ ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி கள் மற்றும் ராமபிரானின் ரவி குல வழித் தோன்றலாகக் கருதப்படும் நேபாள மன்னர் ஆகிய மூவர்தான் இந்தப் பெருமை பெற்றவர்கள்.
இங்கு இறைவனின் சந்நிதியில் பூஜை செய்பவர்கள் ஸ்ரீ சிருங்கேரி மகாசந்நிதானத்திடம் சிவாச்சாரிய தீட்சை பெற்ற கர்நாடக மாநிலத்து அந்தணர்கள்.
கோயிலில் ஸ்ரீ ராமநாத சுவாமிக்குத் தினந் தோறும் கங்கை நீரால்தான் அபிஷேகம் நடைபெறுகிறது. இறைவனின் இந்த அபிஷேகத்துக்காக வடநாட்டு பக்தர் ஒருவர் தவறாமல் கங்கை நீரை மிகப் பெரிய அளவில் சீலிட்டு ராமேஸ்வரத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
இந்த ஸ்ரீராமநாத சுவாமி ஆலய மேற்கு வாசல் கோபுரம் மிகக் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. கோயிலைச் சுற்றிலும் உயர்ந்த மதிற்கூவர். இந்த உயர்ந்த மதில் சுவர்கள் கிழக்கு மேற்காக 865 அடி நீளமும் தெற்கு வடக்கில் 657 அடி அகலமும் உடையது.
கருங்கற்களைக் கொண்டு அமைக்கப் பட்ட மேற்கு கோபுரம் 78 அடி உயரம்.
கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமநாதபுர அரசர் உடையான் சேதுபதியும் நாகூரைச் சேர்ந்த வைசியர் ஒருவரும் இணைந்து இந்த மேற்கு கோபுரத்தையும் மதில் சுவரையும் நிர்மாணித்திருக்கிறார்கள்.
தெற்கு மற்றும் வடக்குக் கோபுரங்கள் காஞ்சி ஸ்ரீ சங்கரமடத்திலிருந்து கட்டப்பட்டுள்ளன.
அதிசய அற்புதப் பிராகாரங்கள் !
இந்த ஆலயத்தில் அமைந்துள்ள மூன்றாம் பிராகாரம் உலகிலேயே சிறப்பு வாய்ந்த ஒன்றாக இன்றும் பேசப்பட்டு வருகிறது. இந்த மூன்றாம் பிராகாரம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் முத்துராமலிங்க சேதுபதியால் கட்டி முடிக்கப்பட்டது. இரு புறங்களிலும் ஐந்தடி உயரமுள்ள மேடைத்துண்கள் வரிசைகளின் நடுவே இந்தப் பிராகாரங்கள் அமைந்து உள்ளன.
மூன்றாவது மேற்குப் பிராகாரமும் மேற்குக் கோபுரவாசலில் இருந்து சேது மாதவர் சந்நிதிக்குப் போகும் வழியில் கூடும் இட மும் சொக்கட்டான் பலகையை நினைவுபடுத்துவது போல தோற்றம் கொண்டதாக இருப்பதால் 'சொக்கட்டான் மண்டபம்’ என்றே அழைக்கப்படுகிறது. வசந்த உற்சவத்தின்போது உற்சவமூர்த்திகள் அலங்காரம் செய்யப்பட்டு இங்கே எழுந்தருள்வார்கள்.
இந்த மண்டபத்தில் ஒரே கல்லில் உருவான மூன்று ஜன்னல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் பசு முகம் அமைந்திருப்பது இதைச் செதுக்கிய சிற்பியின் தனிச் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. இதன் வழியாகப் பார்த்தால், சூரிய ஒளியில் ராமநாத சுவாமியின் விமானம் அற்புதமாக ஜொலிக்கிறது.
12 ராசிக்கான கட்டங்களும் இந்த மண்ட பத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
மூன்றாவது பிராகாரத்தின் தெற்கு வடக்குப் பிராகாரங்கள் ஒவ்வொன்றும் 435 அடி நீளம் கொண்டவை.
கிழக்கு மேற்குப் பிராகாரங்கள் 3650 அடி நீளம் கொண்டவை. ஒவ்வொன்றும் கிழக்கு மேற்கு உட்பிரா காரங்கள் 649 அடி நீளமும் தெற்கு வடக்கு உட்பிராகாரங்கள் ஒவ்வொன்றும் 395 அடி நீளமும் கொண்டவை ஆகும். அவற்றின் உயரம் 22 அடிமுதல் 7 லீ அடி வரையிலானது.
இவை போகக் கோயிலின் முக்கிய சந்நிதியைச் சுற்றிலும் தனிப் பிராகாரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கிலும் மேற்கிலும் உள்ள ஒவ்வொன்றும் 117 அடி நீளமும் தெற்கிலும் வடக்கிலும் உள்ள ஒவ்வொன்றும் 172 அடி நீளம் கொண்டவை. அவற்றின் அகலம் 14 முதல் 17 அடி வரையாகும்.
இதனால் கோயிலில் உள்ள பிராகாரங்க ளின் மொத்த நீளம் 3850 அடி ஆகிறது.
வெளிப் பிராகாரத்தில் அமைந்துள்ள 1212 தூண்களும் நூல் பிடித்தாற்போல ஒரே சீராக அமைந்திருக்கின்றன.
இவற்றின் உயரம் தரையிலிருந்து மேல் தளம் வரையில் 30 அடி. சிற்பச் சிறப்புகளைக் கொண்டதாக இந்தத் தூண்கள் விளங்குகின்றன. இவை யாவும் மிருது வான கல்லால் வடிக்கப்பட்டவையாகும், கட்டடக் கலைக்கு ஓர் சிறப்பு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்தக் கோயில் என்று அப்போதைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த டாட்டன்ஹாம் என்ற ஆங்கிலேயர் பரவசத்துடன் குறிப்பு எழுதி விட்டுப் போயிருக்கிறார்.
பர்குவான் என்ற வெள்ளைக்கார அதிகாரி திராவிட சிற்பக் கலையம்சத்தின் அழகையெல்லாம் முழுமையாக இந்த கோயிலில் தான் பார்க்கிறேன் என்று பாராட்டி இருக்கிறார்.
சலவைக்கல் சந்நிதி !
ஆலயப் பிராகாரங்களின் கலையழகை ரசித்தபடியே வந்தால், அடுத்ததாக, அனுப்புமண்டபம் என்னும் சேதுபதி மண் டபம். நுழைந்ததும் தெற்கு முகமாக பெரிய அளவில் ஆஞ்சநேயர் தரிசனம் தருகிறார்.
அவரின் திருமேனி முழுவதும் சாதிலிங்கக் குழம்பு பூச்சில் அழகாக காட்சி அளிக்கி றது. வடக்கே கணபதி, ஆஞ்சநேயர் திருமேனிகள் செந்தூரப் பூச்சாக இருப்பதை நினைவுபடுத்துகிறது.
அனுமார் கோயிலுக்கு எதிரேதான் மகாலட்சுமி தீர்த்தம் இருக்கிறது. இங்கு நீராடிய பிறகு இதே வழியாக மகாலட்சுமி சந்நிதியை அடையலாம்.
அனுமன் கோயிலுக்கு மேற்கில் சேதுபதீசம் என்ற இடம் உள்ளது.
சேதுபதி மன்னர்களில் ஒருவரான விஜய ரகுநாத சேதுபதி நாள்தோறும் குதிரையில் வந்து ராமநாதரைத் தரிசனம் செய்தபிறகு தான் உணவு உண்ணுவது வழக்கமாம்.
ஒருநாள் வழிபாடு செய்ய வருவதற்குள் அர்த்தஜாம பூஜை முடிவடைந்துவிட்டது. அதனால் இரவு அங்கேயே தங்கி, மறுநாள் ராமநாதரைத் தரிசனம் செய்துவிட்டுப் போனாராம்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தரிசனம் தடைபடாமல் இருக்க இந்த சேதுபதீ சத்தை உருவாக்கினார்.
இங்கு எழுந்தருளியிருக்கும் ராமநாதர், விஸ்வநாதர் ஆகிய இருவரும் சேதுபதீஸ்வரர் என்றும் பர்வதவர்த்தினி, விசாலாட்சி ஆகிய இரண்டு அம்மன்களும் சேதுபதியம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இந்தச் சம்பவத்தை நினைவூட்டும் விதமாகக் குதிரைமீது சேதுபதி மன்னர் அமர்ந்திருக்கும் உலோகச் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இந்த சேதுபதீசத்தின் தெற்கே ஒரு சிறிய நடைமண்டபம் உள்ளது. அதற்குக் கிழக்கே பார்த்தால் மகாலட்சுமி தீர்த்தம் இருக்கும். மகாலட்சுமி சந்நிதிக்கு இதன் வழியாகவும் போகலாம். இந்த நடைமண் டபத்தின் வழியாகப் போனால் பர்வதவர்த் தினி கல்யாண மண்டபம் உள்ளது. ஆடி மாதத்தில் இங்கே அம்மனுக்குக் கல்யாண உற்சவ வைபவம் நடைபெறுகிறது.
இந்தத் திருமண மண்டபத்தின் இரண்டு பக்கத்திலும் கணபதி மற்றும் முருகன் சந்நிதிகள் உள்ளன. அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டால் அடுத்ததாக சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.
அதாவது ஒரு பெரிய தொட்டியில் மூன்று பகுதிகளாகப் பிரித்து இந்த மூன்று தீர்த்தங்களையும் அமைத்துள்ளனர்.
மேற்குச் சுற்றுப் பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் கோதண்டராமர் கோயில் உள்ளது. இதன் வடபுறம் உள்ளன 5 தீர்த்தங்கள் உள்ள கிணறுகள் .
அதற்கடுத்ததாக வெள்ளைச் சலவைக் கல்லினால் வடிவமைக்கப்பட்ட சேது மாதவர் சந்நிதி "ஸ்வேதமாதவர்” என்றும் அழைக்கப்படுகிறார். வடமொழியில் ஸ்வேதம் என்பதற்கு வெண்மை நிறம் என்று அர்த்தம்.
இந்தச் சந்நிதிக்கு அருகிலுள்ள சேதுமாதவர் தீர்த்தத்தில் மூழ்கி, சேதுமாதவர் மற்றும் லட்சுமியைத் தரிசித்தால் சேது தீர்த்தத்தில் நீராடிய பலனைப் பெறுவார்கள்.
மேலும் தனுஷ்கோடியிலிருந்து மணல் கொண்டுவந்து சேது மாதவர் முன் பூஜை செய்கிறவர்களுக்குக் காசியாத்திரை செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
புகழ்வாய்ந்த வெளிப்புறப் பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்ச்சியை மிகவும் தத்ரூபமாக விளங்கும் விதத்தில் சுதைச் சிற்பங்களாக அமைத்திருப்பது கண்கொள்ளாக் காட்சி !
ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் இரண்டு கைகளிலும் லிங்கத்தை ஏந்தியபடி அனுமன். தவிர, ராமர் பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்ட சுக்ரீவன், விபீஷணன் ஆகியோரின் உருவங்களையும் காண லாம். (இதைக் காண கட்டணம் உண்டு.)
இதே வெளிப்பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி உள்ளது. இதற்குள் மகாவிஷ்ணு உள்பட பல விக்கிரகங்கள் உள்ளன. இங்குள்ள நட ராஜர் விக்கிரகம் மற்ற கோயில்களில் காணப்படுவதைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறது.
இந்தச் சந்நிதியின் விமானம் ருத்திராட்ச மணிகளால் அமைக்கப்பட்டு அழகாகக் காணப்படுகிறது.
சுவாமியின் மூலஸ்தானத்தைச் சுற்றியுள்ள உட்பிராகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் சபாபதிசிவகாமி சந்நிதி அமைந் திருக்கிறது.
இந்தச் சபாபதி தரிசனத்துடன் 3வது பிராகாரம் முடிவடைகிறது.
இரண்டாவது திருச்சுற்றில் பத்து கைகள் கொண்ட அபூர்வப் பிள்ளையார் அமர்ந்திருக்கிறார்.
அபயக்கரமும் கங்கை ஏந்திய கரமுமாகக் காட்சிதரும் இந்தப் பிள்ளையாரின் மடியில் தேவி அமர்ந்திருக்கிறாள்.
உச்சிஷ்ட பாவனையுடன் அருள் வழங்கும் இந்தப் பிள்ளையாருக்குத் தெற்கே சுக்ர தீர்த்தம் உள்ளது. தொடர்ந்து 8 தீர்த்தங்கள் ஆக இரண் டாவது திருச்சுற்றுடன் 18 தீர்த்தங்களில் நீராடி முடிக்கலாம். 2ஆம் சுற்றின் முடிவில் கோடி தீர்த்தம், சிவ தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தங்களிலும் நீராடல் முடிவடையும்.
- திருத்தல யாத்திரை வ(ள)ரும்..

No comments:
Post a Comment