Friday 9 February 2018

இராமேஸ்வரம் - 2

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேஸ்வரம் தலமும் ஒன்று.


இந்தியாவில் உள்ள புனித ஷேத்திரங்க ளுக்குள் நான்கு ஷேத்திரங்களையே வட இந்தியாவில் உள்ளவர்கள் மிகச் சிறப்பா கக் கருதுகின்றனர்.


🌻 1. வடக்கே பத்ரிநாதம்

🌻 2. கிழக்கே ஜகந்நாதம்

🌻 3. மேற்கே துவாரக நாதம்

🌻 4. தெற்கே இராமநாதம்



இவற்றுள் முதல் மூன்று ஷேத்திரங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றுதான் சிவ ஷேத்திரம்.

Related image
இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாகத் திகழ்கிறார்.



இராவணனின் தம்பியாகிய விபீஷணன், இராமருக்கு உதவி செய்ததன் மூலம் இராவணனுடைய அழிவுக்கு அவனும் ஒரு கார ணமாக இருந்தான். தனது அந்தப் பாவம் நீங்க, அவனும் இங்கு லிங்கத்தைப் பிர திஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தைப் போக்கியதோடு, ஜோதிஸ்வரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, ஜோதிர்லிங்கம் ஆயிற்று. இந்த ஜோதிர்லிங்கம் சுவாமி சன்னிதியின் முதல் கிழக்கு பிராகாரத்தில் உள்ள சிறிய சன்னிதியில் இருக்கிறது.


இராமேஸ்வரம் தீவின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இராமநாத சுவாமி கோயில் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை சிறு கோயிலாகத்தான் இருந்திருக்கிறது.


கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இலங்கை மன்னன் பராக்கிரமபாகு இத்திருக் கோயிலின் கருவறையிலும், அம்பிகை கோயிலிலும் சில திருப்பணிகள் செய்து புதுப்பித்திருக் கிறார். பின்னாளில் விஜயநகர இளவரசர் குமார கம்பணர், கி.பி 1371ல் தமது மதுரை வெற்றிக்குப் பிறகு இராமேஸ்வரம் கோயிலுக்கு வருகை தந்து சில திருப் பணிகள் செய்ததாகச் சொல்கிறார்கள்.


மதுரை நாயக்க அரசைத் தோற்றுவித்த விஸ்வநாதரும், அவர் வழிவந்த சிலரும் கூட இக்கோயிலில் சில திருப்பணிகள் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. என்றாலும் பின்னாளில் ஆட்சி செய்த சேதுபதி மன்னர்கள்தான் அவர்களது ஆட்சிப் பகுதியில் இருந்த இத்திருக் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகள் பெரும் கோயிலாக ஆக்கியிருக்கிறார்கள்.


இராமேஸ்வரம் கோயிலின் சிறப்புகள்:


🌀 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.


🌻 கருவறையில் வீற்றிருக்கும் மூலவர் இராமநாதர் லிங்க வடிவில் காட்சிய ளிக்கிறார். இவர் சீதாப்பிராட்டியாரால் அமைக்கப்பட்டு, இராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டவர் என் பது பெரும் சிறப்பாகும்.


🌀 இராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னிதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாகத் தரப்படுகிறது.


🌻 இந்த இராமேஸ்வர லிங்கம் இந்தியாவிலுள்ள 12 ஜோதி லிங்கங்களுள் ஒன்றாகவும் சிறப்புப் பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் இது.

🌀 தவிர, கருவறை லிங்கத்துக்கு அருகில் அனுமன் காசி விஸ்வநாதரைக் கேட்டு கொண்டு வந்ததாகக் கூறப்படும் ‘விசு வலிங்கம் உள்ள விசுவநாதர் சந்நிதியும் மிக்க சிறப்புடையதாக வணங்கப்படுகிறது.


🌻 பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம்.


🌀 இக்கோயிலின் இன்னொரு சிறப்பம்சம் இராமேஸ்வரக் கோயிலின் கட்டடக் கலைச் சிறப்பாகும். இத்திருக்கோயி லின் நீண்ட மூன்றாம் பிராகாரம் உலகப் பிரசித்தி பெற்ற சிறப்பான கட்டடக் கலைக்கு சான்றாக போற்றப்படுகிறது. இந்த ‘மூன்றாம் பிராகாரம் உலகிலேயே மிக நீண்டது என்ற பெருமையையும் பெற்றுள்ளது.


🌻 இந்த மூன்றாம் பிராகாரத்தின் நான்கு பக்கங்களின் நீளம் 660 மீட்டர் ஆகும். இதில் நிறுவப்பட்டுள்ள தூண்களின் எண்ணிக்கை 1212. இத்துண்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லினால் செதுக்கப்பட்டவை.4 மீட்டர் உயரமுள் ளவை. இவை 2 மீட்டர் உயரமுள்ள அதிட்டான மேடைமீது இடம் விட்டு விட்டு வரிசையாக நிறுவப்பட்டுள்ளன. எந்த வித நவீனப் போக்குவரத்து வசதிகளும் இல்லாத 18ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் இந்தத் தீவுப் பகுதிக்கு இத்தனை கனமான கற்றுாண்களைக் கொண்டுவந்து மிக நீண்ட வெளிப்பிரா காரம் அமைக்கப்பட்டிருப்பது நிச்சய மாக ஒரு கட்டட அதிசயம்தான்.


🌀 உலகப் புகழ்பெற்ற மூன்றாம் பிராகாரத்தைத் தவிர இக்கோயிலின் இதர பிராகாரங்களும்கூட கட்டடக்கலைச் சிறப்புமிக்கவையாகவே திகழ்கின்றன.


🌻 இராமாயண இதிகாசத்துடன் தொடர்புகொண்ட இராமலிங்கத்தை வணங்கி வழிபடுவதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்வேறு மொழிகள் பேசும் மக்களும் இங்கு வருகின்றனர். எனவே, இந்த இராமேஸ்வரக் கோயிலை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குரிய ஒரு சிறந்த சின் னமாகக் கருதலாம்.


🌀 இந்த இராமேஸ்வர திருத்தலத்தில் சிறப்புடைய தீர்த்தங்கள் பலவும் இங்கு உள்ளன. இதைப் பற்றி இன்னும் விரிவாகப் பின்னர் பார்ப்போம்.


🌻 அம்பாள் பக்தரான ராயர் என்பவர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிராகாரத்தில், இராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொர சொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த் தாலே உணர முடியும்.


🌀 மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டே இராமநாதருக்கு பூஜை செய்கின்றனர்.


🌻 சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 198வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம் ஆகும்.




கோயில் அமைப்பு:


ராமேஸ்வரம் திருக்கோயில் மிகப் பெரும் அளவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கோயிலாகும். ராமேஸ்வ ரம் கோயிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமான கோபுரமாகும். இது 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடையது. இதன் உயரம் சுமார் 126 அடி. மேற்கில் உள்ள கோபுரம் சுமார் 78 அடி உயரம் உடையது.


ராமேஸ்வரம் திருக்கோயிலின் நான்கு பக்கமும் வாசல்கள் உண்டு என்றாலும் வடக்கு, தெற்கு வாயில்கள் உபயோகத் தில் இல்லை. ஆலயத்தினுள் ராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகியோருக்கும் தனித்தனியே விமானங்கள் அமைந் திருக்கின்றன.


சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்தச் சந்நிதியில் சீதாதேவியால் உருவாக்கப் பட்டு ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப் பட்ட ராமலிங்கரே லிங்க திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் தழும்பு பதிந்திருப்பதை இன்றும் காணலாம். அதாவது அனுமன் தான் காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்காக ராமலிங்கத்தை நகர்த்த முனைந்தபோது ஏற்பட்ட வாலின் தழும்புச் சுவடு என்கிறது தலவரலாறு.


ராமலிங்க சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும்.


மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரின் திருஉருவங்கள் காணலாம். இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். ராமநாதரின் வலப்பக்கம் அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி அமைந்திருக்கிறது. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்துக்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. 51 சக்தி பீடங்களில் இது சேதுபீடம் ஆகும்.


அம்பிகையின் சந்நிதியின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள், கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக் கிறார். தென்மேற்கு மூலையில் சந்தாண்க ணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது.


ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. ராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிராகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது.


தினமும் காலை 5 மணிக்கு ராமநா தசுவாமி சன்னிதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் நடக்கிறது.


இது கோயில் அமைப்பின் சுருக்கம்தான். முறையாகக் கோயிலுக்குள் நுழையும் போது இன்னும் விரிவாகப் பார்ப்போம்.


காசி-ராமேஸ்வரம் யாத்திரை நியதி:



சபரிமலை போன்ற சிற்சில புண்ணியத் தலங்களைத் தவிர பொதுவாக எல்லா புண்ணிய ஷேத்திரங்களிலும் எந்தவித விதிமுறைகளோ நியதிகளோ இல்லாமல் நேரடியாகச் சென்று ஆண்டவனை தரிசிக்கலாம்.


ஆனால், காசியிலும் ராமேஸ்வரத்திலும் மட்டும் பகவானைத் தரிசித்து, அருளாசி பெற வேண்டும் என்றால் அதற்கெனச் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆமாம்! காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் அப்படியோர் இணைப்புச் சங்கிலி உள்ளது !  

அது என்னவென்று பார்க்கலாமா ? 



முதலில் காசியாத்திரை !


காசியாத்திரை செல்ல விரும்புபவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள அக்னி தீர்த்தமாகிய கடலில் நீராடி ஈர உடையுடன் கடலில் மூன்று தடவை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு தடவை மூழ்கி எழும்போதும் ஒவ்வொரு பிடி மணல் எடுக்க வேண்டும்.


முதல் தடவை மூழ்கி எடுக்கும் மணலை ‘சேது மாதவா’ என்று கூறி லிங்கமாக பிடித்தும், இரண்டாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை ‘பிந்து மாதவா’ என்று கூறி லிங்கமாக பிடித்தும், மூன்றாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை ’வேணு மாதவா’ என்று கூறி லிங்கமாக பிடித்தும், கரையில் வைக்க வேண்டும்.


பின்னர் பிடித்து வைத்த மூன்று லிங்கத் துக்கும் விபூதி சந்தனம் குங்குமம் இட்டு, வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நைவேத் தியம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சித்து “ஓம் நமசிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரம் கூறி கற்பூரதீபாராதனை காட்டி கும்பிட வேண்டும். பின் சேது மாதவ லிங்கத்தை மட்டும் எடுத்து பத்திரமாக பக்தர் வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற பிந்து மாதவ,வேணு மாதவ லிங்கம் இரண்டை யும் கடலில் போட்டு விட வேண்டும்.


அதன் பின் ராமநாதர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி விட்டு கோடி தீர்த்தத்தை மட்டும் ஒரு மூடிய பாத்திரத்தில் வாங்கி பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.


இவையெல்லாம் முடிந்த பிறகு ஈர உடையை மாற்றிக் கொண்டு ராமநாதர் மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின் இறைவனை வழிபட்டு காசிக்கு கிளம்ப வேண்டியதுதான்.


(உடனே காசிக்கு செல்ல இயலாதவர்கள் தம்முடன் வைத்திருக்கும் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் பூஜை அறையில் வைத்து காசி செல்லும் வரை பூஜை செய்ய வேண்டும். காசி செல் லும் போது மறக்காமல் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் எடுத்து செல்ல வேண்டும்.)


காசி செல்பவர்கள் முதலில் அலகாபாத் சென்று அங்கு சேது மாதவ லிங்கத்தை திரிவேணி சங்கமத்தில் இடவேண்டும். பின் அங்கிருந்து ஒரு பாத்திரத்தில் தீர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் காசி சென்று அங்குள்ள விஸ்வநாதருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்துச் சென்ற கோடி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். அங்கே காசியில் தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு உணவுப் பொருளை விட்டு விடுகிறேன் என்று சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் கயா சென்று அங்கு தத்தமது இறந்த மூதாதையருக்கு பித்ருக் கடன் செய்தும், மோட்சதீபம் ஏற்றியும் வழிபட வேண்டும். இதனால் இறந்த மூதாதையரின் பரிபூரண ஆசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைக்கும்.


அதன் பின் காசியிலிருந்து நேராக ராமேஸ்வரம் வர வேண்டும். உடனே ராமேஸ்வரம் வர இயலாதவர்கள் 15 நாட்களுக்குள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அது வரை அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். ராமேஸ்வரம் செல்லும் போது அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு காசி ராமேஸ்வர யாத்திரையை நிறைவுசெய்ய வேண்டும்.


இப்படி ராமேஸ்வரத்தில் தொடங்கி ராமேஸ்வரத்தில் முடித்தால் தான் காசி ராமேஸ்வர யாத்திரையின் முழுபலனும் கிடைக்கும் என்று முன்னோர்கள் நியதி வகுத்துள்ளார்கள்.


(எல்லோராலும் இது முடிவதில்லை. அப்படி காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்தத் தீர்த்தத்தை ராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.)


சரி, காசியாத்திரைக்குச் செல்லும்போது மேலே சொன்னபடியாகச் செல்ல வேண் டும். அதுபோல ராமேஸ்வரத்துக்கு யாத்திரை செல்லவும் நியதி இருக்கிறதா ?


ஆம் ! ராமேஸ்வர யாத்திரை செல்பவர்களும் நேரடியாக ராமேஸ்வரம் செல்லக் கூடாது.

Ramanathaswamy Temple 360 view 

http://www.dinamalar.com/360view_detail_eng.asp?id=171&cat=175#top

                                      திருத்தல யாத்திரை ()ரும்..

No comments:

Post a Comment