Sunday, 16 October 2016

சிவ தாண்டவம்…Siva Thandavam

திருச்சிற்றம்பலம்

நற்றவா! உனை நான் மறக்கினுஞ் சொல்லும்நா 

நமச்சிவாயவே!

சிவ தாண்டவங்கள் – சிவ தாண்டவங்களை எண்ணிக்கையில் அடக்க இயலாது. ஆனந்த தாண்டவம்

unnamed
unnamed-1shivathandavam1-500x500Kadavul_tandavas


சிவ தாண்டவம் பஞ்ச குணம் – சாந்தம், ஆனந்தம், ருத்திரம், வசீகரம், கருணை என ஐந்து குணங்களையும் பஞ்ச குணம் என்கிறோம். மனிதர்களுக்கு இருப்பதைப் போல இந்தக் குணங்களை இறைவனுக்கும் பொருத்திப் பார்த்து மகிழந்தார்கள் சைவர்கள். நாமும் அந்த பஞ்ச வடிவ குண மூர்த்திகளை ரசிப்போம். 

ஆனந்த மூர்த்தி

unnamed-2
சிவன் நடனமாடும் தளங்களில் முதன்மையானது தில்லை என்றழைக்கப்படும் சிதம்பரம். இந்த தளத்தி்ல் சிவன் பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்றோர்களுக்காக ஆனந்த தாண்டவம் ஆடினார். இந்த தாண்டவம் பிரபஞ்ச இயக்க நடனம் என்று போற்றப்படுகிறது. அனைத்து நடத்திற்கும் உள்ள ஏக தத்துவத்தை விளக்கும் வடிவமாக நடராஜர் நடனம் விளங்குகிறது. மிகையில்லாத உண்மையை வெளிப்படுத்தும் இந்த நடத்தை, பரத கலையின் சின்னமாக மக்கள் போற்றுகின்றனர். இது ஆனந்த தாண்டவம் எனவும் வழங்கப்படுகிறது. இந்த ஆனந்த தாண்டவத்தை குற்றாலத்திலும், சிதம்பரத்திலும் காணலாம். 

காளிகா தாண்டவம்

unnamed-3


படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களை ஈசன் செய்கிறார். இதைக் குறித்து ஆடும் நடனம் காளிகா தாண்டவம் எனப்படுகிறது. இந்தக் காளிகா தாண்டவத்தை திருநெல்வேலியில் காணலாம். 

சந்தியா தாண்டவம்
unnamed-4

பாற்கடலிருந்து வெளிவந்த விஷத்தை குடித்துவிட்டு சிவன், உரைந்து நின்றார். தேவர்களும், மூவரும் வணங்கி நிற்க, அப்போது சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்வம் எனப்படுகிறது. இந்த நடனத்தின் நேரத்தைதான் பிரதோசம் என்று சைவர்கள் கொண்டாடுகின்றார்கள். மற்ற தாண்டவங்களைப் போல இடதுகாலை தூக்கி ஆடாமல் சிவன், வலது காலை தூக்கி ஆடுவது மேலும் சிறப்பு. இந்த சந்தியா தாண்டவத்தை மதுரையில் காணலாம். 

ஊர்த்துவ தாண்டவம்
unnamed-5

சிவனுக்கும், சக்திக்கும் இடையே நடனப் போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் ஒரு காலை தலைக்கு மேல் தூக்கி நடமாடினார் சிவன். அதைப் போல சக்தியால் நடனமாட இயலவில்லை. இந்த தாண்டவத்தை ஊர்த்துவ தாண்டவம் என்கின்றனர். இந்த ஊர்த்துவ தாண்டவத்தை திருவாலங்காட்டில் காணலாம்.

 கஜ சம்ஹாத் தாண்டவம்

unnamed-6unnamed-7
unnamed-8unnamed-9unnamed-10unnamed-11unnamed-12unnamed-13unnamed-14unnamed-15unnamed-16unnamed-17unnamed-18unnamed-19


1, பாண்டுரங்க நடனம் – முப்புரம் எரிக்க முற்பட்டபோது பிரமன் தேரோட்டியாக இருந்தார். கலங்கிய கலைமகளை தேற்றி கலக்கத்தை போக்க ஆடியது {திருவதிகை} கொடிகுகாட்டி நடனம்-திரிபுரம் எரித்த பின் ஆடியது.

2, கொடுகொட்டி நடனம் – திரிபுரம் எரித்த பின் மகிழ்ச்சியோடு தாளமாட சிவனார் தன் கரங்களை கொட்டி ஆடியது.

3, சந்தியா நிருத்தம் – ஆலகால விஷம் உண்டு. அறிதுயிலில் இருந்த சிவன், தேவர்கள் வழிபட்ட பின் மறுநாள் பிரதோஷத்தில் {திரயோதசி திதி} டமருகம் ஏந்தி, சூலத்தை சுழற்றி ஒரு ஜாம நேரம் ஆடியது.

4, சண்டா தாண்டவம் – திருவாலங்காட்டில் காளியின் செருக்கை அடக்க, பைரவர் மூர்த்தங்கொண்டு ஆடியது.

5, கௌரி தாண்டவம் – தாருகாவனத்தில் மோகினி வடிவெடுத்த திருமாலுடன் ஆடியது போல கௌரிக்கு கயிலையில் ஆடிக்காட்டியது.

6, வீரட்டகாச நடனம் – குமரக்கடவுள் பிரணவப் பொருளை உணர்த்தியபோது தானும் குமரனும் ஒன்றே என்று வீரம் புலம்பட ஆடியது.

7, ஆனந்த தாண்டவம் – பதஞ்சலி, வியாக்ரபாதர் காண சிவகாமியம்மை உளம் மகிழ முயலகன் முதுகுமிதித்து சிதம்பரத்தில் ஆடியது.

8, அனவரத நடனம் – ஆன்மாக்களுக்குப் போக முக்திகளை அளிக்கும் பொருட்டு படைப்பு முதலான செயல்களை செய்து எப்போதும் ஆடும் நடனம்.

9, மஹா சங்கர நடனம் – மஹா பிரளய காலத்தில் உலகம் அனைத்தும் பராசக்தியில் ஒடுங்க, பராசக்தி பரமசிவத்தில் ஒடுங்க, பரமசிவன் ஒருவனே தானாக இருந்து ஆடியது.



நடராஜர் சுற்றி திருவாசி உள்ளது. அதில் 51 சுடர்கள் இருக்கும். திருவாசி என்பது ஓம் என்ற பிரணவ மந்திரத்தையும் 51 சுடர்கள் 51 எழுத்துக்களையும் சுட்டிக்காட்டக்கூடியது. ஆண் ஆடுவது – தாண்டவ நடனம், பெண் ஆடுவது – லாஸ்ய நடனம். நடராஜர் கால்மாறி ஆடியது மதுரை, கீள்வேளூர், திருவக்கரை. தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் நிறுத்துவது வக்ர தாண்டவம் ஆகும்.

ஈசன் நடனம்


1, மதுரை – வரகுன பாண்டியனுக்கு காலமாறி {வலதுபாதம்} தூக்கி ஆடியது.

2, கீள்வேளூர் – அகத்தியருக்கு 10 கைகளுடன் நடராஜர் கால்மாறி {வலதுபாதம்} தூக்கி ஆடியது.

3, திருவாலங்காடு, சிதம்பரம் – இறைவன் காளியுடன் நடனமாடியது.

4, மயிலாடுதுறை – அம்பாள் மயில் வடிவம் கொண்டு ஈசன் முன்பு கௌரி தாண்டவம் ஆடினார்.

5, திருப்புத்தூர் – சிவன் லட்சுமிக்கு கௌரி நடனத்தை ஆடி காட்டியது.

6, திருவிற்கோலம் – காளி அம்மன் ஆலங்காடு பெருமானோடு தர்க்கித்து ரக்ஷா நடனம் ஆடி மகா தாண்டவம் ஆடியது.
7, திருவாவடுதுரை – இறைவன் வீர சிங்க ஆசனத்தில் சுந்தர நடனம் மகா தாண்டவம் ஆடியது.

8, திருக்கூடலையாற்றார் – பிரம்மனுக்கு நர்த்தனம் செய்து காட்டியது.

9, திருவதிகை – சம்பந்தருக்கு இறைவன் திருநடனம் ஆடிகாட்டியது. இறைவி பாட இறைவன் ஆடியது.

10, திருப்பனையூர் – ஊரின் புறந்தே சுந்தரமூர்த்திக்கு நடன காட்சி தந்தது.

11, திருவுசாத்தானம் – விஸ்வாமித்திரருக்கு நடன காட்சி தந்தது.

12, திருக்களர் – துர்வாச முனிவருக்கு பிரம்ம தாண்டவம் ஆடி காட்டியது.

13, திருவான்மியூர் – வான்மீகி முனிவர்க்கு இறைவன் பிரம்ம தாண்டவ நடன காக்ஷியும் கல்யாண காட்சியும் அருளியது.

14, கொடுமுடி – சித்ரா பௌர்ணமியில் பரத்வாச முனிவருக்கு நடராஜர் சதுர்முகத்தாண்டவ நடன காட்சி அருளியது.

15, திருமழபாடி – மார்கண்டேயருக்கு மழு ஏந்தி நடன காட்சி தந்தது.

16, கஞ்சனூர் – பராசர முனிவர்க்கு முக்தி தாண்டவம் அருளியது.

17, திருக்காறாயில் – பதஞ்சலி முனிவருக்கு 7 வகை தாண்டவங்களை காட்டியது. கபால முனிவருக்கு காட்சி தரல்.

18, அரித்துவார மங்களம் – உபமன்யு மகரிஷிக்கு இறைவன் திருநடனமாடி அருள் புரிந்தது.

19, திருவொற்றியூர் – மாசி மாதத்தில் நந்திக்கு நாட்டிய காக்ஷி.

20, திருக்கச்சூர் – திருமாலுக்கு நடன காட்க்ஷி தியாகராஜர் அருளியது.

21, திருப்பைஞ்ஜிலி – வசிட்ட முனிவர்க்கு நடராஜர் நடன காட்க்ஷி அருளியது.

22, கொடுமுடி, கூடலையாற்றூர், திருகளர், திருமுருகன்பூண்டி – பிரம்மனுக்கு ஈசன் நடன காட்க்ஷி.

23, திருத்துறைபூண்டி – நடராஜர் சந்திர சூடாமணி தாண்டவமாடுகிறார். அகத்தியர் நடனத்தை கண்டும் வேதாரயேஸ்வரரின் மணக்கோலத்தையுக் கண்டார்.

சிவ தாண்டவம்:


சிவபெருமான் காளிகா தாண்டவம் ஆடுவது எப்போது?
காளிகா தாண்டவம் – படைத்தல் செய்யும் போது. தலம் – நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி. ஆடிய இடம் – தாமிர சபை (Copper)


சிவபெருமான் சந்தியா தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?


சந்தியா தாண்டவம் – காத்தல் செய்யும் போது. தலம்- மீனாட்சி அம்மன் கோவில்,மதுரை. ஆடிய இடம் – வெள்ளி அம்பலம் (Silver)


சிவபெருமான் சங்கார தாண்டவம் ஆடுவது எப்ப்போது?


சங்கார தாண்டவம் – அழித்தல் செய்யும் போது. தலம்- மதுரை என்கிறார்கள் சிலர்.தெரிந்தால் சொல்லவும்.


சிவபெருமான் திரிபுர தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?


திரிபுர தாண்டவம் – மறைத்தல் செய்யும் போது. தலம்- குற்றாலநாதர் கோவில், குற்றாலம். ஆடிய் இடம் – சித்திர(Art) சபை.


சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?


ஊர்த்தவ தாண்டவம் – அருளல் செய்யும் போது. தலம்- ஊர்த்தவதாண்டவர் கோவில், திருவாலங்காடு, ஆடிய இடம் – இரத்தின(gem) சபை.


சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?


ஆனந்த தாண்டவம் – இவ்வைந்து செயல்களையும் செய்யும் இடம். தலம்- நடராஜர் கோவில், சிதம்பரம். ஆடிய இடம் – கனக (Sky) சபை.


சிவபெருமான் கௌரி தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?


கௌரி தாண்டவம் – பார்வதிக்காக ஆடிய போது. தலம்- திருப்பத்தூர்.

சிவ நடனம் :


அஜபா நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?

அஜபா நடனம்- சிவபெருமான் மேல்மூச்சில், கீழ்மூச்சில் (தவளை போல்) அசைந்தாடிய நடனம். ஆடிய தலம்- திருவாரூர்.


உன்மத்த நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?

சிவபெருமான் பித்தனைப் போல் தலை சுற்றி ஆடிய நடனம் உன்மத்த நடனம் ஆகும். ஆடிய தலம்- திருநள்ளாறு.


தரங்க நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?

தரங்க நடனம் என்பது கடல் அலைபோல் அசைந்து ஆடுவது. இதை சிவபெருமான் நாகப்பட்டினத்தில் ஆடினார்.



குக்குட நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?

குக்குட நடனம் என்பது கோழி போல் ஆடுவது. ஆடிய தலம் – திருக்காறாயில்.


பிருங்க நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?

பிருங்க நடனம் என்பது வண்டு மலரைக் குடைவது போல் ஆடுவது. இதை சிவபெருமான் ஆடியது இடம் திருக்கோளிலி ஆகும்.


கமல நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?

கமல நடனம் என்பது தாமரை காற்றில் அசைவது போல் ஆடுவது. ஆடிய தலம்-திருவாய்மூர்.


ஹம்சபாத நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?

ஹம்சபாத நடனம் என்பது அன்னம் போல் அடியெடுத்து ஆடுவது. ஆடிய தலம் – திருமறைக்காடு (வேதாரண்யம்)
unnamed-20

No comments:

Post a Comment