இன்றைய இளைய தலைமுறையினர் பலர் எண்ணெய் தேய்த்து குளிப்பார்களா என்பது சந்தேகம் தான். நம் முன்னோர்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிமுறைகளை சொல்லி உள்ளனர். அதில் முக்கியமான ஒன்று எண்ணெய் குளியல். இன்று நம்ம ஊரைப்பொறுத்த வரை எண்ணெய்க் குளியல் அதிகம் நடக்கும் இடம் குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் அங்கு சென்றால் மட்டுமே நமக்கு எண்ணெய் குளியல் ஞாபகம் வருகிறது. ஒரு 15 வருடங்களுக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும் இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும் ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது.
‘‘எண்ணெய் குளியல் உடலுக்கு மட்டுமின்றி, உள்ளத்துக்கும் பல நன்மைகளைக் கொடுக்கக்கூடியது. இந்த தீபாவளி முதல் எண்ணெய் குளியலை மறுபடி உங்கள் வாழ்க்கையில் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்’’ என்கிறார் கவின்கேர் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையைச் சேர்ந்த முதன்மை விஞ்ஞானி லட்சுமி. எண்ணெய் குளியலின் அவசியத்தையும், அது தரும் பலன்களையும் பற்றிப் பேசுகிறார் அவர்.
‘‘நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய் சத்தானது அவசியம். இரண்டிலும் இயல்பிலேயே மிதமான கொழுப்பும் எண்ணெய் சுரப்பும் இருக்கும். அந்த இரண்டும் நம் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கவசம் போன்றவை. இதைத் தக்க வைத்துக்கொள்ள வெளியிலிருந்து எண்ணெய் தடவுவது, மசாஜ் செய்து குளிப்பது போன்றவை அவசியம். பிறந்த குழந்தைக்கு காலையில் எழுந்ததும், அதன் தாய் செய்கிற விஷயம், உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது. குழந்தை வளர வளர இந்தப் பழக்கம் மெல்ல மறைகிறது.
இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், தலையில் எண்ணெய் வைத்துக் கொள்வதை நாகரிகக் குறைவாக நினைக்க ஆரம்பிக்கிறார்கள் பிள்ளைகள். எண்ணெய் குளியலையும் தவிர்க்கிறார்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்தால் முகமெல்லாம் எண்ணெய் வழியும் என்பது பரவலான குற்றச்சாட்டு. சரியான முறையில் எண்ணெயைத் தேய்ப்பதும், பிறகு சரியான முறையில் குளிப்பதும் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும். உங்களுக்கு எந்த எண்ணெய் பிடிக்குமோ, ஒப்புக் கொள்ளுமோ அதை தலை, உடல், கை, கால் என முழுக்கத் தடவுங்கள்.
எப்படிக் குளிப்பது
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும். சாஸ்திரங்கள் ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணை நீராடுவது உசிதம் என்கின்றன. காரணம் சனி அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி எண்ணெய் குளியல் முடிந்த பின் மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும். விரைந்த செயல்பாடுகள், சடங்குகள், மங்கல நிகழ்ச்சிகள் சனிக்கிழமைகளில் செய்வது வழக்கமில்லை. எனவே ஓய்வை உண்டாக்கும் எண்ணை குளியலை சனியன்று செய்வது நல்லது.
பெண்களுக்கு சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை. செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள். எனவே இந்தக் கிழமைகளில் பெண்கள் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.
எண்ணை குளியல் சர்ம பாதுகாப்பில் சிறந்த சிகிச்சை – தோலுக்கு எண்ணை பதமிடுவது. குளிப்பதாலும், எண்ணை குளியலாலும் ஏற்படும் நன்மைகள் உடல் சூடு, காங்கை குறைகிறது.
எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய் தான். அது கொஞ்சம் சூடு படுத்தி முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும் மெதுவாக தேய்க்க வேண்டும் நன்கு தேய்த்த பின் கடைசியாக இரண்டு கண்களிலும் இரணஇடு சொட்டு எண்ணெய் விடவேண்டும். பின் சூரிய சூரிய வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே, எண்ணெய் குளியல் எடுக்கக் கூடாது. சூடு எண்ணெயின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள, அழுக்குகள் நெகிழும் ஒளியில் ஒரு 20 நிமிடம் உடல் காய நிற்கவேண்டும். பின் வெந்நீரில் சீகக்காய் போட்டு எண்ணெய் போக குளிக்க வேண்டும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, வெயில் காயணும்; தண்ணீர் காயணும்; சீயக்காய் சுடுதண்ணியில கரைச்சு வெதுவெதுப்பா இருக்கணும்..
சுடுதண்ணீரை உடம்பில் ஊத்தும் போது, அது கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை மூலமா, வெளியேறத் தொடங்கும்.இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு, சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று, எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும்போதே தேய்க்கணும்.
இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை அதிகரிக்கும். உச்சி முதல் பாதம் வரை, எண்ணெயை ஊற வைத்து, 20 நிமிடம் வரை, மசாஜ் பண்ணலாம். அதிகபட்சம், 45 நிமடங்கள் வரை, எண்ணெய் ஊறலாம்.எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்க்க சரியாகும்.
இடுப்பு வலி இருந்தால், விளக்கெண்ணெய் சூடு பண்ணி, அந்த பகுதியில் தேய்த்துக் குளிக்கலாம். மலச் சிக்கலும் போகும்.தலையில் நல்லெண்ணெயை அரக்கித் தேய்க்கும் போது, மூளை நரம்புகள் வலுப் பெறும். மூளையில் உள்ள ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி கிளாண்ட் சரியாய் இயங்கும். பிட்யூட்டரி சீராய் இயங்க, உடம்பில் அத்தனை சுரப்பிகளும் சீராகும்.
லேசாக உங்களுக்கு நீங்களே மசாஜ் செய்து விடுங்கள். சிறிது நேரம் ஊற விடுங்கள். சோப்போ, ஷாம்புவோ தேய்த்துக் குளிக்கக் கூடாது. நமது சருமத்திலும் கூந்தலிலும் இயற்கையான அமிலத்தன்மை இருக்கும். சோப்போ, ஷாம்புவோ தேய்த்துக் குளித்தால், அவற்றிலுள்ள காரத்தன்மை, சருமத்தையும் கூந்தலையும் பாதிக்கும்.
எனவே, இயல்பிலேயே அமிலத்தன்மை கொண்ட மூலிகைக்கலவைப்பொடி கொண்டுதான் குளிக்க வேண்டும். மூலிகைப்பொடி உபயோகித்துக் குளிப்பதால், சருமத்திலும் கூந்தலிலும் உள்ள எண்ணெய் பசையானது முற்றிலும் நீங்காமல் காக்கப்படும். வெறும் மேலோட்டமான அழுக்கு மட்டும் நீங்காமல், சருமத்தின் ஆழத்தில் படிந்த அழுக்கும், இறந்த செல்களும் அகற்றப்படும். இந்த மூலிகைப்பொடியும் பச்சைப்பயறு, சோயா, வெந்தயம் என புரதம் நிறைந்த பொருள்களால் தயாரிக்கப்பட்டதாக இருப்பது முக்கியம்.
அப்போதுதான் அது சருமம் மற்றும் கூந்தல் வறட்சியைப் போக்கி, உடல் சூட்டைக் குறைத்து, சருமத்துக்கும் கூந்தலுக்கும் ஒருவித பளபளப்பையும் பலத்தையும் கொடுக்கும். வருடம் ஒரு முறை தீபாவளிக்கு மட்டும் எண்ணெய் குளியலை ஏதோ சம்பிரதாயமாக நினைத்துச் செய்யாமல், இனி வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கண் எரிச்சல் நீங்கும். மனதும் உடலும் புத்துணர்வு பெறும். நல்ல தூக்கம் வரும். மன அழுத்தம் நீங்குவதை உணர்வீர்கள். இளமை நீடிக்கும். சருமம் மென்மையாக, பளபளப்பாக மாறும். அழகும் ஆரோக்கியமும் அதிகமாகும்!’’
ஆனால், முடி கொட்டுறவர்கள் தலையை அரக்கித் தேய்க்க கூடாது. அது முடி உதிர்தலை மேலும் அதிகரிக்கும். அவங்க எண்ணெயை பஞ்சில் முக்கி உச்சந்தலையில் வைக்க, எண்ணெயோட வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவர்களுக்கு போதுமானது.
மாதவிடய் காலங்களில், உடம்பில் ஏகப்பட்ட ஹார்மோன்ஸ் மாற்றங்கள் இருக்கும். அன்று, எண்ணெய் குளியல் கூடவே கூடாது. எப்போதும் குளித்த பிறகு, தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. அப்படி தடவினால், கை, கால் வலி வர வாய்ப்புண்டு.
உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு உறுதியையும், தோலுக்கு மழமழப்பையும் அளிக்கிறது. வாத தோஷத்தினால் தோன்றுகின்ற வேதனைகளைத் தணியச் செய்து, துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையையும், உடற்பயிற்சிக்குத் தேவையான சக்தியையும் அளிக்கிறது.
தொடு உணர்ச்சியில் வாயு அதிகமாக இருக்கிறது. தொடு உணர்ச்சிக்குத் தோல் இருப்பிடமாகும். எண்ணெய் வாத தோஷத்தை நீக்குவதில் சிறந்தது. உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தோலுக்கு நன்மையை அளிக்கிறது.
குழந்தைகளுக்கு
ஒரு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கான எண்ணெயை (பேபி ஆயில்) வாரத்தில் ஒரு நாளாவது உடல் முழுக்கத் தடவிவிட்டு வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டுங்கள்.
ஒரு வயதுக்கு மேலிருக்கும் குழந்தைகளுக்கு நல்லெண்ணை வாங்கி வந்து, சனிக் கிழமைகளில் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் குளிக்க வைக்கலாம்.
முதல் இரண்டு மூன்று வாரங்களுக்கு நல்லெண்ணை தேய்த்ததும் குளிக்க வைத்து விடுங்கள். புதிது என்பதால் உடலுக்கு ஏற்றுக் கொள்ள சில நாள் பிடிக்கும்.
நல்லெண்ணைய புருவத்தில் தடவ மறக்க வேண்டாம். 4வது வாரத்தில் இருந்து 10 நிமிடம் முதல் ஊற விட்டுக் குளிப்பாட்டுங்கள்
கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.
நன்மைகள் :
உடல் சூட்டைத் தணிக்கும்
உடல் புத்துணர்ச்சி பெறும்
உடலில் உள்ள நரம்புகள் செயல்பாடு அதிகரிக்கும்
திருமணம் ஆன தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும் (இதற்காகத்தான் திருமணம் ஆன இரண்டு நாட்கள் கழித்து எண்ணெய் தேய்த்து விருந்து வைக்கின்றனர்)
சளி தலைவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்
ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்
கடுமையான வேலை, டென்ஷனுக்குப் பின், நம்ம உடம்பை ரிலாக்ஸ் பண்றதுக்கு ஒரு சிறந்த தீர்வு.
மதுரை டிஎஸ்பி நகரில் உள்ள அவருடைய மோகன் மருத்துவமனையில் அவரிடம் பேசினோம். எம்பிபிஎஸ் படித்த அவர், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் உள்ள நன்மைகளைப் பற்றிப் பேசுவதைப் பார்த்ததுமே நமக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதா? அதற்கெல்லாம் இப்போது நேரம் இருக்கிறதா? என்று கேட்பவரா நீங்கள்?
“”கொஞ்சம் நில்லுங்கள். உங்களுடைய அவசரம் புரிகிறது. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் ஏற்படும் நன்மைகளை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் இப்படிப் பேச மாட்டீர்கள்” என்கிறார் டாக்டர் வி.மோகன்.
* எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலுக்கு என்ன பயன்?
நமது உடலில் சூடு அதிகரிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. நமது நாடு வெப்பமான நாடு. எனவே வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவை வெயில் காலத்தில் ஏற்படுவது இயல்பு.
வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். உடலில் எண்ணெயை நன்றாக அழுத்தித் தேய்ப்பதன் மூலம் அது தோலில் உள்ள மேல் அடுக்குகளுக்குள் சென்று பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டுள்ள அழுக்குகளையும், நுட்பமான அடைப்புகளையும் எண்ணெய்க் குளியல் நீக்கிவிடுகிறது. தோலின் கழிவான வியர்வை தடையில்லாமல் வெளியேறுகிறது. இதனால் உடலில் பல உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்பட வழி ஏற்படுகிறது.
வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவை ஏற்படாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தடுக்கிறது.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலில் பளபளப்புக் கூடுகிறது. வறண்ட தோல் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் அவசியம்.
* எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் ரொம்பக் குளிர்ச்சியாகிவிடுமே, அதனால் பாதிப்பு ஏற்படாதா?
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியடைகிறது. அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. உடலில் சூடு குறைவதால் மனம் ரிலாக்ஸ் ஆகிறது. உடல் ரிலாக்ஸ் ஆகிறது. நல்ல இயற்கையான தூக்கம் வருகிறது. தூங்கி எழுந்ததும் உடல், மனம் புத்துணர்ச்சி அடைகிறது. இயற்கையான அலுப்பு மருந்தாக எண்ணெய்க் குளியல் இருக்கிறது.
வெப்பத்தாலோ, தூக்கமில்லாததாலோ கண்களில் ஏற்படும் எரிச்சல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இல்லாமற் போகிறது. கண்கள் பொங்குவது நின்றுவிடுகிறது. தலையும், கண்களும் குளிர்ச்சியடைகின்றன.
* நன்கு படித்த பல டாக்டர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வீண் என்று சொல்கிறார்களே?
சில மருத்துவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் எந்த நன்மையும் இல்லை என்று சொல்கிறார்கள். அதனால் எண்ணெய்க்கும் கேடு; நேரமும் வீணாகிறது என்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை.
குறிப்பாக பிரிட்டன் போன்ற வெளிநாட்டில் உள்ள மருத்துவர்கள் இப்படிக் கூறுகிறார்கள். வெளிநாட்டு மருத்துவர்களின் பேச்சை அப்படியே நம் நாட்டில் உள்ள சில மருத்துவர்கள் நம்பிவிடுகிறார்கள்.
உண்மையில் எண்ணெய்க் குளியல் என்பது உடலின் சூட்டைத் தணிப்பதற்காக நமது நாட்டில் நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு சிறந்தமுறை. அதுவும் அதிக வெப்பமுள்ள நமது நாட்டில் ஏற்பட்டுள்ள முறை. நமது நாட்டில் போல பிரிட்டனில் வேனல் கட்டிகள் வருமா? இல்லை வியர்க்கத்தான் செய்யுமா? எனவே பிரிட்டனில் உள்ள மருத்துவர்கள் எண்ணெய்க் குளியலின் பலன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமற் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு
* நல்லெண்ணெய்யைத் தவிர பிற எண்ணெய்களைப் பயன்படுத்தலாமே?
எண்ணெய்க் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் சிறந்தது என்று சொல்லவே வேண்டியதில்லை.
மசாஜ் நிலையங்களில் பயன்படுத்தும் எண்ணெய்களில் ஆகட்டும், தலையைக் குளிர்ச்சியடையச் செய்யும் தைலங்களில் ஆகட்டும், அவற்றின் மூலப் பொருளாக இருப்பது நல்லெண்ணெய்தான். குற்றால அருவியில் குளிக்கச் சென்றீர்கள் என்றால் அங்கே மசாஜ் செய்பவர்கள் கையில் வைத்திருக்கும் எண்ணெய் நல்லெண்ணெய்தான். அல்லது நல்லெண்ணெயை மூலப் பொருளாகக் கொண்டு செய்யப்பட்ட எண்ணெய்கள்தான்.
பித்த, கப, வாதத்தை சமப்படுத்தும் தன்மை நல்லெண்ணெய்க்கு அதிகம் இருப்பதாக நமது சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள். பிற எண்ணெய்களுக்கு இந்தத் தன்மை மிகவும் குறைவு. இதிலுள்ள வைட்டமின் “இ’ தோலில் இழுத்துக் கொள்ளப்படுகிறது.
* யாரெல்லாம் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது?
மிகச் சிறிய குழந்தைகளை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டக் கூடாது. ஏனென்றால் மூக்கு வழியாகவும், காது வழியாகவும் எண்ணெய் உள்ளே போய்விடும். சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே குளித்தாலும் மிதமான சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும். அவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது பச்சைத் தண்ணீரில் குளிக்கக் கூடாது.
சிலருக்கு சீயக்காய் அலர்ஜியாக இருக்கும். அவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. அவர்களுக்குச் சீயக்காயின் வாசனையை முகர்ந்த உடனேயே தும்மல் வந்துவிடும். மூச்சுவிடக் கஷ்டப்படுவார்கள்.
எண்ணை குளியலின் சில நியமங்கள்
எண்ணைக் குளியலுக்கு உகந்தது நல்லெண்ணை.
எண்ணையை காய்ச்சி தேய்த்துக் கொள்ள வேண்டும்.
காய்ச்சும் போது மிளகு, ஒமம், வெந்தயம், இஞ்சி போட்டு காய்ச்சினால் உடலுக்கு வலிமை ஏற்படும். சளி பிடிக்காது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், கொம்பரக்கும் சேர்த்துக் கொள்ளலாம். இது உடற் காங்கையை குறைக்கும்.
எண்ணைக் குளியலை வெந்நீரில் தான் செய்ய வேண்டும்.
எண்ணை தேய்த்து குளித்த அன்று, உடலுறவு கூடாது.
நோயற்ற வாழ்விற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எண்ணெய் குளியல் அவசியம் என்பதே என் கருத்து.
வெளியில் போகிறவர்களுக்கு கோடை காலத்தில், கூந்தல், வைக்கோலைப் போல் உலர்ந்து விடும். எவ்வளவுதான் எண்ணெய் தடவினாலும் போதாது. இப்படி இருந்தால், வாரத்திற்கு ஒரு தடவை காய்ச்சிய எண்ணெயை, தலையில் நன்றாகத் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின், தலைக்கு குளிக்கவும்.
ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டி வேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி ஆகியவை தலா, 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும்.

No comments:
Post a Comment