வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரு காலங்களிலும் வரக்கூடிய திரயோதசி திதி பிரதோஷ காலம் ஆகும். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டு பாற்கடலைக் கடைந்தபோது, அதில் இருந்து பொங்கி வந்த ஆலகால விஷத்தை அமரர்களுக்கும் அடியார்களுக்கும் எவ்வித தோஷமும் ஏற்படா வண்ணம் வேண்டி, சிவபெருமான் பருகிய வேளை பிரதோஷ வேளை. எனவே, பிரதோஷ காலம் சிவனை வழிபடுவதற்கு உகந்த காலம் ஆகும்.
பாம்பணிந்த பரமன் நஞ்சுண்ட நாள் சனிக்கிழமை என்பதால் சனிப் பிரதோஷம் மிக மிக விசேஷமானது ஆகும். இதேபோல் திங்கட்கிழமை வரும் திரயோதசியை `சோம பிரதோஷம்’ என்றும், `செவ்வாய் பிரதோஷம்’ என்றும், வியாழக்கிழமைகளில் வரும் திரயோதசியை `குரு பிரதோஷம்’ என்றும் கூறப்படுகிறது.
இந்த பிரதோஷ நாளில் விரதமிருந்து சனி பகவானை ஆத்ம சுத்தியுடன் ஆராதித்து, எள் முடிச்சுடன் நல்லெண்ணைய் விளக்கேற்றி எள் கலந்த சாதம் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். மாலையில் சிவாலயம் சென்று அங்கு நடைபெறும் பிரதோஷ கால பூஜையில் கலந்து கொண்டு, நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி சிவபெருமானை வழிபட வேண்டும்.
குறிப்பாக பிரதோஷ நாளில் மௌன விரதமிருத்தல் மிக விசேஷமானது. பிரதோஷ விரதமிருந்து சனீஸ்வர பகவானையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் சிவஞான பக்தியுடன் யோக வாழ்வை பெறலாம்.
No comments:
Post a Comment