முருகனை வள்ளி தெய்வானை சகிதமாகப் பார்க்கும் போது உங்களுக்கு இந்தக்கேள்வி வந்திருக்கிறதா? இல்லையா? ம்… அப்படியென்றால் உங்களுக்கு ஏற்கனவேதெரிந்திருக்கும் போல் இருக்கிறது.
வள்ளி வலது பக்கம்; தெய்வானை இடது பக்கம். அதாவது முருகனுக்கு. வள்ளி இச்சாசக்தியையும், தெய்வானை கிரியா சக்தியையும், முருகன் ஞான சக்தியையும்குறிப்பவர்கள். வள்ளி இகலோகத்திலும், தெய்வானை பரலோகத்திலும் நம்மைகாப்பவர்களாம்.
வள்ளியுடைய கையில் பூலோகத்தில் காணப்படும் தாமரை மலர் இருக்கிறதாம்.தெய்வானை கையில் தேவலோகத்தில் காணப்படும் நீலோத்பல மலராம். வடிவேல்முருகனின் வலது கண்ணை சூரியனாகவும், இடது கண்ணை சந்திரனாகவும்சொல்வார்கள். அவனுக்கு தந்தையைப் போன்ற அக்கினிக் கண்ணும் உண்டு.
வலது புறம் இருக்கும் வள்ளியின் கையில் இருக்கும் தாமரை மலர், குமரனின் வலதுகண் பார்வை (சூரியன்) பட்டு எப்போதும் மலர்ந்தே இருக்குமாம். அதே போல, இடதுபுறம் இருக்கும் தெய்வானையின் கையில் இருக்கும் நீலோத்பல மலரும், முருகனின்இடக் கண் பார்வையினால் (சந்திரன்) எப்போதும் மலர்ந்தே இருக்குமாம். அதனால்,முருகப் பெருமானை இடைவிடாது அன்புடன் வணங்குபவர்களுக்கு அவன் இருபத்திநான்கு மணி நேரமும் அகலாத துணையாய் இருப்பான்.
No comments:
Post a Comment