எதில் புரதச்சத்து அதிகமிருக்கிறது... முட்டையின் வெள்ளைக்கருவிலா, பாதாம் பருப்பிலா? இந்தக் கேள்விக்கான பதில் ஆச்சர்யம்! முட்டையின் வெள்ளைக்கருவோடு போட்டிவைத்தால், `என் ஒவ்வொரு பகுதியிலும் புரதச்சத்து அதிகம் இருக்கிறது’ என்று தம்ஸ்அப் காட்டி வெற்றி பெறுவது பாதாம்தான். சைவ உணவிலிருந்தும் நமக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கும். சில உதாரணங்கள்...
மனித உடல் வெவ்வேறு வகையான புரதங்களால் உருவானது. உடல் வளர, காயங்கள் குணமாக, வேதி வினைகளைச் செய்ய என அனைத்துக்கும் புரதம் தேவை. உடலுக்குத் தேவையான அனைத்துப் புரதச்சத்துகளையும் சைவ உணவுகள் மூலமும் பெற முடியும்.
100 கிராம் பூசணி விதையில் 33 கிராமும், 100 கிராம் முந்திரிப் பருப்பில் 24 கிராமும், 100 கிராம் பாதாம் பருப்பில் 20 கிராம் புரதமும் இருக்கின்றன. ஒரு கப் பூசணி விதையில் இவ்வளவு புரதச்சத்தா? அம்மாடியோ!
ஸ்பைருலினா எனப்படுகிற கடல்பாசியில் புரதத்துடன், வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம் சத்துகளும் அதிகமாக இருக்கின்றன. இவற்றைப் பொடிகளாக்கி உணவு, ஜூஸ்களில் சேர்த்து உட்கொள்ளலாம்.
சைவ உணவில் அதிக புரதம் தேவைப்பட்டால், சப்ஜா விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
28 கிராம் பாதாமில் 6.2 கிராம் புரதம் இருக்கிறது. அதே நேரத்தில், ஒரு பெரிய முட்டையில் 5 கிராம் புரதம் மட்டுமே இருக்கிறது. கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும் யோகர்ட்டில் மாட்டிறைச்சியில் இருப்பதைவிட புரதச்சத்து அதிகம் என்பது இன்னோர் ஆச்சர்யம். ஒன்றரை கப் யோகர்ட்டில் 18 கிராமும், 50 கிராம் மாட்டிறைச்சியில் 14 கிராம் புரதமும் இருக்கிறது.
எந்த உணவில் எவ்வளவு புரதம் இருக்கிறது என்பது முக்கியமில்லை. புரதம்தான் அமினோ அமிலங்கள் சுரப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. அவற்றில் ஒன்பது வகை அத்தியாவசியமான அமினோ அமிலங்களை நம் உடல் சுரக்காது. முட்டை, பால் பொருள்கள், இறைச்சி, மீன் போன்றவற்றில் அமினோ அமிலங்கள் இருக்கின்றன. எனவேதான் இவை `முழுப் புரதம் தரும் உணவுகள்’ (Complete Protein) என அழைக்கப்படுகின்றன.
- மு.இளவரசன்

No comments:
Post a Comment