தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான சிவஸ்தலம் ; சப்தவிடங்கத் ஸ்தலம் ; திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளிய ஸ்தலம் ; நான்கு வேதங்களும் ஈசுவரனை பூஜித்த பெருமை கொண்ட சிவஷேத்திரம்..
🌱🏵🌱🏵 BRS🌱🏵🌱🏵🌱
மூலவர்: திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்)
அம்மன்/தாயார் : வேதநாயகி
தல விருட்சம் : வன்னிமரம், புன்னைமரம்
தீர்த்தம்: வேத தீர்த்தம், கடல்துறை, மணிகர்ணிகை, தேவபூஷணம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருமறைக்காடு
ஊர் : வேதாரண்யம்
பாடியவர்கள்: சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர்
🅱 தேவாரப்பதிகம்:🅱
யாழைப்பழித் தன்னமொழி மங்கைஒரு பாகன் பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான் இடம்பேணில் தாழைப்பொழில் ஊடேசென்று பூழைதலை நுழைந்த வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே. - சுந்தரர்
🅱 தேவாரப் பாடல்கள் : 🅱
Ⓜ சம்பந்தர் :Ⓜ
🎗1. சிலைதனை நடுவிடை,
🎗2. சதுரம் மறைதான்,
🎗3. பொங்கு வெண்மணற்,
🎗4. கற்பொலிசு ரத்தினெரி,
🎗5. விடைத்தவர் புரங்கள்.
Ⓜ அப்பர் :Ⓜ
🎗1. இந்திரனோடு தேவர் இருடிகள்,
🎗2. தேரையு மேல்கடாவி,
🎗3. ஓதமால் கடல் பாவி,
🎗4. பண்ணின் நேர்மொழி,
🎗5. தூண்டு சுடரனைய சோதி.
🌀 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 125வது தலம்.
🅱 வழிபட்டோர் :🅱
🔥 வேதங்கள், இராமர், அகத்தியர், முசுகுந்த சக்கரவர்த்தி, கௌதமர், விசுவாமித்ரர், வசிஷ்டர், நாரதர், பிரமன், கங்கை, காவிரி.
🅱 திருவிழாக்கள்:🅱
🍁 மாசி மகம் - பிரம்மோற்சவம் 29 நாட்கள் திருவிழா - அடைக்கப்பட்டிருந்த கதவு திறந்ததை கொண்டாடும் வகையில் திருவிழா நடக்கும். இதில் மக தீர்த்தம் அன்று சுவாமி கடலுக்கு போய் தீர்த்தமாடி வருவது சிறப்பு - 73 சுவாமி புறப்பாடும் கைலாச வாகனம் புறப்பாடும் நடக்கும்.
🍁 ஆடிப்பூரம் - 10 நாட்கள் - இது அம்மனுக்கு நடக்கும் பெரிய அளவிலான திருவிழா ஆகும்.
🍁 விநாயகர் சதுர்த்தி, கந்தர் சஷ்டி ஆகியன இத்தலத்தின் முக்கிய விழா நாட்கள் ஆகும்..
🍁 மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.
🍁 வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
🅱 தல சிறப்பு:🅱
🎭 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .
🎭 தியாகேசர் சன்னதியில் உள்ள மரகத லிங்கத்திற்கு காலை மாலை இருவேளையும் பூஜை உண்டு.
🎭 இந்திரன் அளித்து முசுகுந்தன் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.
🎭 வன்னிமரத்தில் ஒருபுறம் காய்கள் நீளமாகவும் முட்கள் உடையதாகவும் இன்னொரு பக்கம் உருண்டையாகவும் முட்கள் இல்லாமலும் இருக்கின்றன என்பது சிறப்பம்சம்.
🎭 நவகிரகங்கள் ஒரே முகத்தோடு தனிதனி விக்ரகமாக சுவாமி - அம்பாள் திருமணக்கோலத்தை காண ஒரே திசையில் உள்ளது.
🎭 அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய திருத்தலம்.
🎭 வேதங்களால் அடைக்கப்பட்டத் திருக்கதவினை, அப்பரடிகள் திறப்பிக்கவும், ஞானசம்பந்தர் திருக்காப்பிடவும் பாடியப் பெருமைப் பெற்றத் தலம்.
🎭 இராமர், இராவணனை கொன்ற பழி நீங்கப் பூஜித்த தலமாதலால், இஃது கோடிக்கரை என்றும் வழங்கப்படுகிறது.
🎭 இக்கோவிலில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுவதற்கு வந்த எலி, அணையும் நிலையில் இருந்த திரியைத் தூண்டி, மறு பிறப்பில் மாவலிச் சக்கிரவர்த்தியாகப் பிறந்தது. இச்செய்தியை, அப்பரடிகள் திருக்குறுக்கைத் தல தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
🎭 முசுகுந்தச் சக்கரவர்த்தி தியாகேசப் பெருமானை எழுந்தருளுவித்த ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (தியாகர் - புவனவிடங்கர்; நடனம் - ஹம்ச நடனம்; மேனி - மரகத் திருமேனி; ஆசனம் - இரத்தின சிம்மாசனம்).
🎭 திருவிளையாடற் புராணம் அருளிய பரஞ்சோதி முனிவர் அவதாரத் ஸ்தலம்.
🎭 இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார்.
🎭 விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார்.
🎭 அகத்தியர், விசுவாமித்திரர் தவிர, கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்து மறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.
🎭 பரஞ்சோதி முனிவரே இக்கோவில் தலபுராணத்தை அருளிச் செய்துள்ளார்.
🎭 சோழர், விஜயநகர அரசர் கால, கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.
🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 189 வது தேவாரத்தலம் ஆகும்.
🅱 நடை திறப்பு:🅱
🔑 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.🔑
🅱 பொது தகவல்:🅱
🌻 இத்தலத்தில் மேற்குக் கோபுர வாயிலில் உள்ள விநாயகர், இராமர் இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை விநாயகர் விரட்டி அடித்ததால் இத்தலத்திலுள்ள விநாயகர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
🌻 இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார்.
🌻 இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார்.
🌻 விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார்.
🌻 இக்கோவிலில் இரண்டு பிரகாரங்களும், இரண்டு ஸ்தல விருக்ஷங்களும் உள்ளன.
🌻 முதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்து தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது.
🌻 கோவிலின் ராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது.
🌻 இறைவன், இறைவி ஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன.
🌻 இங்கு சுவாமி அம்பாள் விநாயகர் மூவருக்கும் தனித்தனி கொடிமரம் உண்டு.
🌻 இராமர் இவ்விடத்தில் சமுத்திர ஸ்னானம் செய்து இராவணனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்றார் என்று தலப்புராணம் கூறுகிறது.
🌻 இராமர் பூஜித்த இராமநாதர் சந்நிதியும் இவ்வாலயத்திலுள்ளது.
🅱 பிரார்த்தனை:🅱
🌱 இத்தலத்தில் வழிபடுவோர்க்கு பாவங்கள் விலகும். நாக தோசம் நீங்கும்.
🌱 இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.
🌱 இதில் நீராடி தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதாக ஐதீகம். பிரம்மகத்தி போன்ற பாவங்களும் நீங்கும்.பல ஆண்டுகள் யோகம் , தானம், தவம் செய்த பலன்களை அடையலாம்.
🌱 இத்தலத்திற்கு தெற்கே நேர் எதிரே கிழக்கே உள்ள கடல் ஆதி சேது என்னும் கடல் தீர்த்தம். இதில் ஒருமுறை நீராடுவது சேதுவில் நூறு தடவை நீராடுவதற்கு சமம்.
🌱 இத்தீர்த்தங்களில் ஒவ்வோராண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மாசி மாதத்தில் மகாளய அமாவாசை முதலிய நாட்களில் கோடியக்கரை ஆதிசேதுவிலும், வேதாரண்ய சன்னதிக் கடலிலும் அதன்பின்னர் மணிகர்ணிகையிலும் நீராடி மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் திருமணவரம், குழந்தைபாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, பிணியற்ற வாழ்வு ஆகியன கிடைக்கும்.
🌱 இத்தலத்து திருமறைக்காடரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
🅱 நேர்த்திக்கடன்:🅱
☀ குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டுகிறார்கள்.
☀ திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி வழிபடுகின்றனர்.
☀ மிகப்புகழ்பெற்ற பரிகார தோச நிவர்த்தி தலம் என்பதால் பல்வேறு தோசங்களுக்கும் நிவர்த்தி பரிகாரங்கள் செய்து வழிபடுகிறார்கள்.
☀ அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.
☀ சுவாமிக்கு மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி , பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.
☀ மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.
☀ தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
🅱 தலபெருமை:🅱
Ⓜ மூடியிருந்த திருக்கோயில் கதவு திறந்த கதை:Ⓜ
🌸 சைவ சமயத்தின் முக்கிய நாயன்மார்களில் இருவரான அப்பரும் ஞானசம்பந்தரும் சிவதலம் தோறும் சென்று எம்பெருமானை போற்றி பதிகம் பாடி வருகையில் இந்த திருமறைக்காட்டிற்கும் வந்தனர்.
🌸 அப்போது வேதங்களே வழிபட்ட இத்தலத்து மறைக்காட்டீசுவரரை வழிபட எண்ணி கோயிலுக்கு செல்கையில் கோயிலின் பிரதான வாயிற் கதவு மூடப்பட்டிருந்தது. இறைவனை எல்லோரும் பக்கத்து வாயில் வழியாகவே சென்று வழிபட்டவண்ணம் இருந்தனர்.
🌸 இதைப்பார்த்த அப்பரும் சம்பந்தரும் இறைவனை வணங்க இப்படியொரு சிக்கல் இருப்பது ஏன் என்று வினவினர். வேதங்கள் பூஜித்து வந்து வரம்பெற்றுப் பின்னர் திருக்கதவைத் தாழிட்டுவிட்டுச் சென்ற விபரம் அறிந்தனர்.
🌸 உடனே ஞானசம்பந்தர் அப்பரிடம் மிக்க பழமை மிக்க வேதங்களே வழிபட்ட இத்திருக்கோயில் கதவை திறந்து இறைவனை நேராக தரிசிக்க திருப்பதிகம் பாடியருளுமாறு வேண்டிக் கொண்டார்.
🌸 அதைக் கேட்ட அப்பர் மிகுந்த ஆராமையோடும் பண்ணினேர் மொழியென்று மொத்தம் 10 திருப்பாசுரம் பாடியவுடன் கதவு திறந்து கொண்டது.
🌸 உள்ளே சென்று ஆனந்தப்பரவசத்துடன் மறைக்காட்டீசரை வணங்கிவிட்டு வெளியே வந்தபோது அப்பர்., சம்பந்தரே இந்த கதவு எப்போதும் மூடவும் திறக்கவும் பதிகம் பாடும் என்று கேட்டுக்கொள்ள ஞானசம்பந்தர் சதுரம் மறை என்று ஒரே ஒரு திருப்பதிகம் பாடியவுடன் கதவு மூடிக் கொண்டது.
🌸 இறைவனின் இந்த கருணையை எண்ணி இருவரும் பரவசம் எய்தினர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கதை நிகழ்ந்த கோயில் இது.
🅱 வேதநாயகி :🅱
🔥 இத்தலத்து அம்பாளின் பெயர் வேதநாயகி எனவும் தமிழில் யாழைப் பழித்த மொழியாள் என்றும் வடமொழியில் வீணாவாத விதூஷணி எனவும் வழங்கப்படுகிறது.
🔥 அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணை நாதத்தை விட இனிமையாக இருந்ததால் அம்பிகைக்கு இங்கே இப்பெயர். இதன் நினைவாக சரஸ்வதி இத்தலத்தில் வீணையில்லாமல் தவக்கோலத்தில் சுவடியைக் கைக் கொண்டு இருப்பதைக் காணலாம்.
Ⓜ துர்க்கை :Ⓜ
🍁 இத்தலத்தின் பரிவார தேவதையான துர்க்கை தென்திசை நோக்கியுள்ளாள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் முறுவல் காட்டி எழுந்தருளி உள்ள இக்காவல் தெய்வம் இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வம்.
🅱 தியாகராசர் : 🅱
🔥 இத்தலம் சப்தவிடத்தலங்களில் ஒன்று.
🔥 முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரன் அளித்த தியாகமூர்த்தங்களுள் ஒன்று.
🔥 இவர் செய்யும் நடனம் அம்சநடனம் எனப்படும்.
🔥 திருமறைக்காடு என்று தமிழிலும், வேத ஆரண்யம் என்று வடமொழியிலும் வழங்கப்பெறும் மிகப்பழமை வாய்ந்த சிவதலம்.
🔥 சப்தவிடத் தலங்களுள் இது இரண்டாவது தலம்.
🔥 சக்தி பீடங்களில் மிக்க விசேசம் வாய்ந்த சுந்தரி பீடத்தைப் பெற்று விளங்கும் கோயில்.
🔥 மூலவருக்கு மறைக்காட்டுறையும் மணாளர் என்று சிறப்பு பெயரும் உண்டு.
🔥 வீணை இல்லாத சரஸ்வதி இருக்கும் சிவதலம் இது.
🔥 63 நாயன்மார்களோடு சேர்ந்து தொகையறாக்கள் 10 பேர்., ஆக மொத்தம் 73 பேருக்கும் இங்கு சிலைகள் உள்ளன.
🔥 ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்கள் இறைவனை வழிபட்ட தலம்.
🔥 அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் இறைவன் காட்சி தந்த தலம்.
🔥 மனு, மாந்தாதா, தசரதன், ராமன், பஞ்சபாண்டவர், மகாபலி முதலியோர் வழிபட்ட பேறு பெற்ற தலம்.
🔥 பதினாறு சபைகளில் 12 வது தேவ பக்த சபை என்ற திருநாமம் உடைய தலம்.
🔥 புகழ்பெற்ற கோளறு பதிகத்தை ஞானசம்பந்தர் இங்கேதான் பாடியருளினார்.
🔥 தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது.
🔥 இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் மேலக்குமரர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர்.
🔥 இக்கோயில் வளாகத்திற்கு வெளியில் உள்ள அத்தனை இடங்களிலும் உப்பு கரிக்கும் தண்ணீரே இருக்கும். இத்தலத்தில் மட்டுமே நல்லதண்ணீர் உள்ளது. இவ்வூருக்கு குடிதண்ணீர் இந்த கோயில் வளாகத்துக்குள் இருந்து எடுத்து தான் பயன்படுத்தப்படுகிறது.
Ⓜ கோவில் அமைப்பு :Ⓜ
💡இராசகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியது.
💡முன் மண்டபத்தின் பக்கத்தில் தலமரம் வன்னி உள்ளது - அடியில் எண்ணற்ற நாகப்பிரதிஷ்டைகள் எதிரில் தீர்த்தமுள்ளது.
💡உள்சுற்றில் அறுபத்துமூவர், இராமநாதலிங்கம் உள்ளன.
💡வெளிப் பிராகாரத்தில் இராமரை தொடர்ந்து வந்த வீரஹத்தி பாவத்தைப் போக்கிய வீரஹத்தி விநாயகர் - பக்கத்தில் குமரன் சந்நிதி.
💡சேர சோழ பாண்டிய லிங்கங்கள் தனித்தனியே மூன்று சந்நிதிகளாக உள்ளன.
💡புன்னைமரத்தடியில் நசிகேது, சுவேத கேது ஆகியோரின் மூலத்திருமேனிகளைக் காணலாம்.
💡சுவாமிக்குப் பக்கத்தில் அம்பாள் சந்நிதி (கிழக்கு நோக்கி) உள்ளது - தனிக்கோயில்.
💡உள்வலமாக வரலாம். முன் மண்டபத்தின் மேற்புறம் வண்ண ஒவியங்கள் உள்ளன.
💡தலவிநாயகர், காட்சி கொடுத்த நாயனார், ஆறுமுகர், ஜ்வரதேவர், சனிபகவான், வீணையில்லாத சரஸ்வதி, அன்னபூரணி, துர்க்கை, சோழீஸ்வரலிங்கம் முதுலிய சந்நிதிகள் உள்ளன.
💡இங்குள்ள நடராஜசபை - தேவசபை எனப்படும்.
💡நவக்கிரகங்கள் - இத்தலம் கோளிலித் தலங்களுள் ஒன்றாதலின் வரிசையாகவுள்ளன.
💡பள்ளியைறையை அடுத்துப் பைரவர், சூரிய - சந்திரர்கள் சந்நிதிகள்.
💡உள்வலமுடித்துப் படிகளேறி முன்மண்டபத்தை யடைந்தால் தியாகராஜ சபை. விடங்கர், பெட்டிக்குள் பாதுகாப்பாக வுள்ளார்.
💡உள் வாயிலைக் கடந்தால் இருபுறமும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
💡சுதையாலான துவாரபாலகர்களைத் தொழுது உட்சென்றால் மூலவர் தரிசனம்.
💡மூலவர் - வேதாரண்யேசுவரர் - சிவலிங்கத்திருமேனி, சுவாமிக்குப் பின்னால் 'மறைக்காட்டுறையும் மணாளர்' திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.
💡இம்மணாளருக்கு ஆண்டுக்கொருமுறை தான் திருமஞ்சனம்.
💡திருமஞ்சனம் முடிந்ததும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அஃதுஅடுத்த திருமஞ்சனத்தின் போது தான் களையப்படும். ஆகவே மணாளர், சந்தனக் காப்பு மணத்தில் ஆண்டு தோறும் காட்சியளிக்கிறார் என்பது விசேஷமான செய்தியாகும்.
💡மரகதத் விடங்கருக்கு நாடொறும் திருமஞ்சனமுண்டு.
💡வீதியுலாவில், தியாகேசர் புறப்படாத நாள்களில் சந்திரசேகரரே எழுந்தருளுகிறார்.
💡தியாகேசருக்குப் பதிலாக இவருக்குப் பட்டம் கட்டும் நாளை "சந்திரசேகரப் பட்டம்" என்பர்.
💡 "பட்டம் கட்டிய சென்னிப் பரமர்" என்பது தேவாரம்.
💡இக்கோயிலில் 92 கல்வெட்டுக்கள் சோழர் காலத்தியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
💡இறைவனை 'வேதவன முடையார்' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
💡யாழ்ப்பாணத்து 'சின்த்தம்பி நாவலர்' என்பவர் இத்தலத்துப் பெருமான் மீது "மறைசை அந்தாதி" பாடியுள்ளார்.
🅱 தல வரலாறு:🅱
💧ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது.
💧 நான்கு வேதங்களும் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து கோண்டு இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன.
💧 கலியுகம் ஆரம்பிப்பதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்றுணர்ந்த வேதங்கள் கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன.
💧 அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.
💧 ஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர்.
💧 வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு.
💧 அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
💧 இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.
🔥 பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார்.
🔥 மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி
🙏🏽 1. வேய் உறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே ஆக அறும் நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
🙏🏽 2. என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழை உடனே பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்த அதனால் ஒன்பதொடு ஒன்றொடடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்கள் அவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
🙏🏽 3. உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன் முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும் அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
🙏🏽 4. மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் கொதிஉறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும் அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
🙏🏽 5. நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் துஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
🙏🏽 6. வாள்வரி அதன் ஆடை வரி கோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய் நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து என் உளமே புகுந்த அதனால் கோற் அரி உழுவையோடு கொலை யானை கேழல் கொடு நாகமோடு கரடி ஆள் அரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
🙏🏽 7. செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடையேறு செல்வன் அடைவு ஆர் ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகை ஆன பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
🙏🏽 8. வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்த மடவாள் தனோடும் உடனாய் வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
🙏🏽 9. பலபல வேடமாகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன் சலமகளோடு எருக்கும் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருவகாலமான பலவும் அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
🙏🏽 10. கொத்து அவர் குழலியோடு விசயற்கு நல்கு குணம் ஆய வேட விகிர்தன் மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் புத்தரொடு அமணை வாதில்ல் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
🙏🏽 11. தேனமர் பொழில் கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞானமுனிவன் தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
என்ற கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.
🅱 சிறப்பம்சம்:🅱
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:
♻ இத்தல மூலவர் மறைக்காடுநாதர் சுயம்பு லிங்கமாக அருள் புரிந்து வருகிறார்.
♻ "வேதாரண்யம் விளக்கு அழகு" என்பது பழமொழி.
♻ அப்பர் சுவாமிகள் தூண்டு சுடரனைய சோதி கண்டாய்' என்று பாடுகிறார். இன்றும் கோயிலில் விளக்குகளின் பேரொளியைக் காணலாம்.
♻ பரஞ்சோதி முனிவர், தாயுமானவர் ஆதீன முதற்குரவர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளுக்கு இத்தலத்தில் தான் அருளுபதேசம் செய்தார் என்பது வரலாறு.
♻ அகத்தியான் பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன் திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார்.
♻ அகத்தியான் பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம் அமைந்திருக்கிறது.
🅱 இருப்பிடம்:🅱
✈ நாகபட்டினத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் வேதாரண்யத்துக்கு பேருந்து வசதி உள்ளது.
✈ திருத்துறைபூண்டில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.
Ⓜ முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :Ⓜ
🚀நாகபட்டினம் - 45 கி.மீ.
🚀திருத்துறைபூண்டி - 35 கி.மீ.
🚀திருவாரூர் - 63 கி.மீ.
🚀கோடியக்கரை - 12 கி.மீ.
🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀
🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄

No comments:
Post a Comment