Saturday, 27 January 2018

அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீவாஞ்சியம் – திருவாரூர்

சிவபெருமானே பார்வதி தேவியிடம் தமக்கு மிகவும் பிடித்தமான இடம் என்று கூறிய ஸ்தலம் ; எமவாதனையில்லா சிவ ஷேத்திரம் ; ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்த பக்தர்கள் மட்டுமே வர எமதர்மராஜா அனுமதியளிக்கும் சிவஸ்தலம் ..

🍁🌸🍁🌸 BRS🍁🌸🍁🌸🍁


தொலைபேசி எண் :  +91-4366 291 305, 94424 03926, 93606 02973.

🌀🌱🌀🌱 BRS🌀🌱🌀🌱🌀

மூலவர் : வாஞ்சிநாதேஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார் : மங்களநாயகி, வாழவந்தநாயகி

தல விருட்சம் : சந்தன மரம்.

தீர்த்தம்: குப்த கங்கை (முனி தீர்த்தம்), எமதீர்த்தம் உட்பட 23 தீர்த்தங்கள்

ஆகமம்/பூஜை : காமீகம் ஆகமம்

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: திருவாஞ்சியம்

ஊர்: ஸ்ரீவாஞ்சியம்

பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்

🅱 தேவாரப்பதிகம்:🅱

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னி யன்றசடையிற் பொலிவித்த புராணனார் தென்ன வென்றுவரி வண்டிசை செய்திருவாஞ்சியம் என்னை யாளுடை யானிட மாகவுகந்ததே. - திருஞானசம்பந்தர்

🌀 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 70வது சிவஸ்தலம்.

🅱 திருவிழாக்கள் :🅱

🔥 ஆடிப்பூரம் 10 நாள் திருவிழா.

🔥 கார்த்திகை ஞாயிறு நாட்கள் ( அதிகாலை வேளையில் தீர்த்தவாரி நடைபெறும்.)

🔥 மாசிமகப்பெருவிழா (பிரம்மோற்சவம்)

🔥 ஞாயிறு அன்று சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.

🅱 தல சிறப்பு:🅱

⚜ இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .

⚜ பூமியில் தோன்றிய சுயம்பலிங்கங்கள் 64ல் மிகவும் முக்கியமானது  திருவாஞ்சியத்தில் இருக்கும் லிங்கம்.

⚜ இந்த லிங்கம் தான் உலகிற்கு முன்னதாக தோன்றியதாகவும் இந்த லிங்கத்துள் சதாசிவம் இருப்பதால் உலகெங்கும் உள்ள லிங்கங்கள் அனைத்தம் திருவாஞ்சிய லிங்கத்தை வழிபட்டு வணங்கி வருகின்றன.

⚜ இந்த சுயம்லிங்கத்தை எவர் ஒருவர் பக்தியுடன் தரிசிக்கிறாரோ அவர் கைலாய நாதரை நேரில் தரிசித்து சிறப்பு பெறுவார்.

⚜ காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு காவிரித் தலங்களுள் இது ஒன்றாகும்.

⚜ திருவாஞ்சியம் காசியை விட 1/16 பங்கு மேலானதாக கருதப்படுகிறது.

⚜ "காசியைவிட வீசம் அதிகம்" என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படும் திருத்தலம்.

⚜ வாங்சியப்பதி, சந்தனவனம், ஜாந்தாரண்யம், பூகைலாசம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.

⚜ இத்தல நந்தி தேவர் கருவறுத்த தேவர் என்றழைக்கப்படுகிறார்.

⚜ பிரம்மன், இந்திரன், பராசரர், அத்ரி முதலியோர் வழிபட்ட தலம்.

⚜ இங்குள்ள குப்தகங்கைத் தீர்த்தம் மிகவும் புனிதமானது.

⚜ கார்த்திகை ஞாயிறு நீராடல் இங்குச் சிறப்பாகும். பின்வரும் தலபுராணப் பாடல் இக்கருத்தையுணர்த்தும் -

"மெய்தரு கயநோய் குட்டம் விளைத்தமுற் கொடிய சாபம்

பெய்துறல் செய்யும் வன்கண் பிரமராக்கதம் வேதாளம்

எய்திடின் அன்னதீர்த்தம் இழிந்ததில் படியத்தீரும்

செய்திரும்கடத்தின் ஏற்றுத் தெளிக்கினும் தீருமன்றே".

⚜ இங்குள்ள துர்க்கை சந்நிதி விசேஷமானது.

⚜ மஹாலக்ஷ்மி மற்றும் மகிஷாசுரமர்தினியின் சந்நிதிகளும் இங்குள்ளன. சிம்ம வாகனத்துடன் நின்ற நிலையில் எட்டு கைகளுடன் காட்சி தரும் மகிஷாசுரமர்தினியை இராகு காலத்தில் 108 தாமரை மலர்களால் அர்ச்சிப்பது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது.

⚜ நடராசசபையிலுள்ள நடராஜ மூர்த்தம் மிகச்சிறப்பாக, உரிய லட்சணங்களுடன் அமைந்துள்ளன தரிசிக்கத்தக்கது.

⚜ 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி.850ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான்.

⚜ கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.

⚜ மகுடவர்த்தனன் , மாதணுவு , சாருமதி வழிபட்ட தலம்.

⚜ பிரளய காலத்தில் அழியாமல் நிலைத்து நின்ற தலம்.

⚜ திருட்டுப்பாவம் போக்கும் தலம்.

⚜ பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலம்.

⚜ உயிர் தொடர்புடைய சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தலம்.

⚜ அவசியம் ஒருமுறை அனைவரும் தரிசிக்க வேண்டிய தலம்.

⚜ இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர முடியும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லை.

⚜ அமைதியான இறுதிக்காலத்தை தரும் தலம்.

⚜ இத்தலத்தில் எம வாகனத்தில் சிவபெருமான் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஊர்வலம் செல்கிறார்.

⚜ எமனே இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குகிறார் . இத்தலத்திற்கு வருபவர்கள் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே சிவனாரைத் தரிசிக்க வேண்டும். அதன்படி, இங்கு எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு நடக்கிறது.

⚜ சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 133 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 நடைதிறப்பு :🅱

🔑 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 🔑

🅱 பூசைக்காலம் : 🅱

🍁  காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

🅱 பொது தகவல்:🅱

Ⓜ இத்தல தீர்த்தப் பெருமை: Ⓜ

🌸 கிருதயுகத்தில் மிக தூய புஷ்கரணி என்ற நாமத்துடனும், திரேதாயுகத்தில் அத்திரி தீர்த்தம் என்று விளங்கியும், துவாபரயுகத்தில் பராசர தீர்த்தம் என்ற பெயருடனும், கலியுகத்தில் முனிதீர்த்தம் என்றும், போற்றப்பட்டு வருகிறது இத்தலத்தில் அமைந்துள்ள குப்தகங்கை என்னும் திருக்குளம்.

Ⓜ திருவாஞ்சியத்தில் உள்ள தீர்த்தங்கள்: Ⓜ

1. பிரம்ம தீர்த்தம் : கிழக்கு திசையில்
2. நாரத தீர்த்தம் : அக்னி மூலையில்
3. விஸ்வாமித்ர தீர்த்தம் : தென் திசை
4. ஸர்வ தீர்த்தம்
5. பரத்வாஜ தீர்த்தம் : நிருதி திசையில்
6. சேஷ தீர்த்தம் : மேற்கு திசையில்
7. நாராயண தீர்த்தம் : திருக்கோயிலில் இருந்து சற்று தள்ளி
8. ராம தீர்த்தம் : வாயு திசையில்
9. இந்திர தீர்த்தம் : ஈசான்ய மூலையில்
10. ஆனந்த கிணறு : திருக்கோயிலின் உள்ளே

🌸 இத்தலத்திலுள்ள லக்ஷ்மி தீர்த்தம், நாக தீர்த்தம் மற்றும் சக்கர தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றன. இவை மூன்றும் முறையே லக்ஷ்மி, ஆதிசேஷன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

🌸 லக்ஷ்மி தீர்த்தத்தில் ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமை நீராடுவதால் ஒருவன் தான் பிரிந்து வந்த குடும்பத்துடன் மீண்டும் சேருவான் என்றும், நாக தீர்த்தத்தில் வைகாசி மாதம் திருவோணம் நடசத்திர நாளன்று நீராடுதல் நாக தோஷத்தைப் போக்கும் என்றும், ஆவணி மாதம் ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசியில் சக்கர தீர்த்தத்தில் நீராடுதல் பிரம்மஹத்தி தோஷத்தை போக்குமென்றும் தலபுராணம் கூறுகின்றது.

🅱 பிரார்த்தனை:🅱  

🌻 மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம்.

🌻 இங்குள்ள சுற்று பிரகாரத்தில் உள்ள பிள்ளையாருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்கிறார்கள். ( அனுமனுக்கே உரித்தான இவ்வழிபாட்டை பிள்ளையாருக்குச் செய்வது இக்கோயிலின் சிறப்பம்சம்.) பிள்ளையாரை வெண்ணெய் சாத்தி வழிபட தீராத வயிற்று வலி உடனே தீரும்.

🌻 திருவாஞ்சியம் வந்து வழிபட பில்லி சூனியம் அதாவது செய்வினை என்று கூறப்படும் எதிர்வினைகள் அறவே அகன்று தூய்மை பெற முடியம். கொலை, தற்கொலை போன்ற துர்மரணங்கள் ஏற்பட்ட வீடுகளில் வரும் தொல்லை வர்ணிக்க முடியாது இருப்பினும் துர்மரணம் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள் ஸ்ரீவாஞ்சியம் வந்து பஞ்சதானம் கொடுத்து வழிபட்டால் துர்மரணம் பெற்றவர்களின் ஆத்மாசாந்தி அடைந்து கர்மா விலகி நற்பயன் பெறவர்.

🌻 கணவன்-மனைவி இடைவே ஊடல் எற்பட்டு பிரிந்தவர்கள் இங்கு வந்து மங்களாம்பிகையை வழிபட்டால் இருவருக்கமிடையே பாச உணர்ச்சிகளைத் தோற்றுவித்து இருஉள்ளங்களையம் இணைப்பதில் சிறப்பு பெற்றவராகத் திகழ்கிறார். இன்றம் விவாகரத்து பெற்ற தம்பதிகள் கூட இங்கு வந்து வழிபட்டதன் மூலம் இணைகின்றனர்.

🌻 இத்தலத்தில் ஆனந்தமாக யோகபைரவராக அமர்ந்திருக்கம் பைரவரை வழிபட நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கி நலன் பெறலாம். தீர்க்க முடியாத வழக்களில் சிறைபட்பவர்கள் இங்குள்ள பைரவரை வழிபட்டால் நீண்டகால வழக்குகள் உடைந்து நல்ல பலன் கிடைக்கம்.

🌻 ஸ்ரீ வாஞ்சியத்தில் மட்டுமே ராகவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில் பாம்பு உடலாகவும் மனித முகமாகவும் ஓரே நிலையில் சஞ்சர்க்கின்றனர். ஓரே மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம் காலசர்ப்பதோஷம் நீங்கி நலம் பெறலாம்.

🌻 கிரகங்களில் வலிமை மிக்க சனிபகவானை கிரகமாக இரு என ஆக்ஞை பிறப்பித்த தலம் ஸ்ரீ வாஞ்சியம். சுனிபகவான் அதிதேவதையான எமதர்ம ராஜா தனி சன்னதியில் எழுந்தருளியிருப்பதால் சனி சம்பந்தப்பட்;ட தொல்லைகள்  உபாதைகள் நீங்கப் பெறுவர்.

🌻 சனி உபாதையிலிருந்து ஒருவன் விடுபடுவான் என்று விதி   இருக்குமேயானால் தன்னுடைய தெய்வ பலத்தினாலேயோ மூதாதையோர் தவ வலிமையினாலேயோ தன்னை அறியாமல் ஏதாவது ஒரு காரணத்ததைச் சொல்லி இங்கு வந்து என்னை வழிபட்டு உன்னை வழிபடுவான் என்பது ஸ்ரீ வாஞ்சிநாதரின் பிரதான வாக்காகும்.

🌻 ஓவ்வொரு அமாவாசையும் பிதிர் கர்மங்கள் செய்யாதவர்கள் இங்கு வந்து கொடுப்பின் நன்னை உண்டாகும்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

🔵 சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

🅱 தலபெருமை:🅱

🍄 பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென் திசைக்கு வந்தனர்.

🍄 அப்போதுதான் காவிரிக் கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்கவடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டுவிட்டனர்.

🍄 இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன.

🅱 இரண்டாம் நாளே தீர்த்தவாரி : 🅱

🌀 எல்லாக் கோயில்களிலும் பிரம்மோற்ஸவம் முடிந்த பிறகே தீர்த்தவாரி நடத்தப்படும். அன்று சுவாமியை கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர். இத்தலத்தில், தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம் பிரம்மோற்ஸவத்தின் இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர். இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி. அன்றைய தினம் வாஞ்சிநாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள் முருகனுக்கு உற்சவம் நடைபெறும்.

🅱 குப்த கங்கை : 🅱

🌱 ஒருமுறை கங்காதேவி சிவனிடம், "மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,'' என வேண்டினாள். அதற்கு சிவன், "உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும்,'' என்றார்.

🌱அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மாசிமகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

🅱 கார்த்திகை ஞாயிறு: 🅱

🌹 தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார்.

🌹 வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர். இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார். ஸ்ரீயை வாஞ்சித்து(ஸ்ரீ என்ற மகாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் இத்தலம்  "ஸ்ரீவாஞ்சியம்' ஆனது.

🌹 இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால், நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை.

🌹 கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி  எமனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர். எமதர்மனை சாந்திசெய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம்.

🌹 இங்கு வீற்றிருக்கும் அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள்.துர்க்கைக்கு தனி சன்னதி இல்லை, பிரம்மாண்ட நாயகியாக காட்சி தரும் மகிஷாசுரமர்த்தினியே துர்க்கையின் சொரூபமாக இருக்கிறாள்.

🌹 ராகுவும் கேதுவும் ஒரே வடிவில் இருப்பதை இக்கோயிலில் மட்டுமே காண முடியும் என்று கூறப்படுகிறது.

🌹 யோக நிலையில் யமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும்.

🌹 காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு. ஆனால் வாஞ்சியத்தில் மரித்தவருக்கு யம பயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில், தமது தண்டங்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார்.

🌹 யமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம், காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது என முனிவர்கள் கூறுகின்றனர். பிரமாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

🅱 கல்வெட்டு / செப்பேடு : 🅱

🎭 இக்கோயிலில் இருபத்தேழு கல்வெட்டுக்கள் படி எடுக்கப் பட்டிருக்கின்றன. அவைகளில் ஏழு பிற்காலச் சோழர்களது. ஏழு பாண்டியர்களுடையனவும், ஒன்று நாயக்கர் காலத்தவையாகும்.

🎭 பிற்காலச் சோழர்கள், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த இத்தலக்கல்வெட்டில் இவ்வூர் "குலோத்துங்க சோழவள நாட்டுப் பனையூர் நாட்டுத் திருவாஞ்சியம்" என்று குறிக்கப்படகிறது. இவ்வூருக்கு 'ராஜகம்பீர சதுர்வேதி மங்கலம்' என்ற பெயர் உண்டு என்பதும், கல்வெட்டகள் மூலம் நிலதானம், வரிவிலக்கு முதலிய செய்திகளும் தெரியவருகின்றன.

🅱 சிற்பங்கள்: 🅱

♻ கருவறையில் இலிங்க வடிவில் வாஞ்சிநாதர் காணப்படுகிறார்.

♻ கருவறை விமானக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.

♻ கொடுங்கையில் பூதகணங்களின் சிற்பங்கள் வரிசையாக உள்ளன.

♻ விமானத்தின் தளங்களில் சுதையாலான அர்த்த நாரீசுவரர், ஆலமர் செல்வன், வீணாதரர், கஜசம்மாரர், கண்ணப்பர், சட்டைநாதர், பிட்சாடனர், ஊர்த்துவதாண்டவர், அட்ட சம்மார மூர்த்திகள் போன்ற திருவுருவங்கள் காட்சியளிக்கின்றன.

🅱 கோயில்அமைப்பு: 🅱

🌞 ராஜகோபுரத்தை அடுத்து கோயிலுக்குள் செல்லும்போது வலது புறத்தில் எமதர்மராஜா சன்னதி உள்ளது. சன்னதியின் முன்பாக பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலது புறம் அபயங்கர விநாயகரும், இடது புறம் பாலமுருகனும் உள்ளனர். இடது புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது.

🌞 கொடி பலி பீடம், நந்தியை கடந்து உள்ளே செல்லும்போது அடுத்த வாயிலின் வலது புறம் விநாயகரும் ( "நட்டுவன் பிள்ளையார் சந்நிதி' தலப்பதிகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. ), இடது புறம் சுப்பிரமணியரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக அதிகார நந்தியும், பலிபீடமும் உள்ளன. அந்த மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவரின் கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். இடது புறம் நடராஜர் சன்னதி உள்ளது.

🌞 திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றின் பின்புறம் சந்திரமௌலீஸ்வரர், கன்னி விநாயகர், சட்ட நாதர், மீனாட்சி, சுந்தரேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

🌞 அதே வரிசையில் தேயலிங்கம், ஆகாய லிங்கம், திருவெண்காடு லிங்கம், திருவிடைமருதூர் லிங்கம், மயிலாடுதுறை லிங்கம், சாயாவனம் லிங்கம், ஷேத்ரலிங்கம் ஆகியவை உள்ளன. கருவறையின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.திருச்சுற்றில் குளம் உள்ளது.

🌞 தெற்கு நோக்கிய சன்னதியில் யமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடக் காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார். அவர் அருகில் முனிவர் போல், ஒருவரது சிலா வடிவம் உள்ளது.

🅱 தல வரலாறு: 🅱

🎭  "எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார்' என எமதர்மராஜா மிகவும் வருந்தினார்.  திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது.

🎭 அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, "வேண்டும் வரம் கேள்,'' என்றார். அதற்கு எமனும், "இறைவா ! அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர். பல கொலைகளால் தீராத பிரம்மஹத்தி தோஷம் பிடித்து என்னை வாட்டுகிறது. பாவம் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை,'' என்றார்.

🎭 எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், "எமதர்மனே ! இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என கூறமாட்டார்கள். நோய் வந்ததாலும், வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது. மேலும், நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பே என்னைத் தரிசிப்பார்கள்,'' என அருளினார். அதன்படி, இங்கு எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு நடக்கிறது.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையிலிருந்து புறப்பட்டு இத்தலத்திற்கு வந்து பெருமானை வணங்கினர்.

♻ சுந்தரர், நன்னலித்துப் பெருங்கோயிலைப் பணிந்து, திருவீழிமிழலை வணங்கி இத்தலத்திற்கு வந்து தொழுதார்.

♻ திருவாசகத்திலும் அருணகிரிநாதர் வாக்கிலும் இத்தலம் இடம் பெறுகின்றது.

♻ காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு காவிரித் தலங்களுள் இது ஒன்றாகும். மற்றவை :  1. திருவையாறு , 2. வேதாரண்யம், 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர், 5. திருவெண்காடு.

♻ இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு அடுத்தப்படி நிகரற்ற தலம் திருவாஞ்சியம் ஆகும்.

♻ இத்தலத்தில் எவன் ஒரு நிமிடமாவது அமர்கிறானோ அல்லது ஸ்ரீவாஞ்சியம் செல்ல வேண்டும் என மனதார நினைத்தால் கூட பொதும் அவன் ஊழிவினை நீங்க நற்கதி பெறுவான் என்பது முனிவர்களின் வாக்கு.

♻ ஏவன் ஒருவன் காலை எழுந்தவடன் மனம் உருகி திருவாஞ்சியம் என்று மூன்று முறை சொல்கிறானோ அவனுக்கு பாவம் தீர்ந்து தோஷம் போய் முக்தி கிடைப்பது நிச்சியம்.

🅱 இருப்பிடம்: 🅱

✈ கும்பகோணத்திலிருந்து (35 கி.மீ.) நாச்சியார் கோவில் வழியாக நன்னிலம் செல்லும் பேருந்தில் அச்சுதமங்கலம் நிறுத்ததில் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄
🎠 இ றை ய ன் பி ல் 🎠

🌤 சீதா பாரதிராஜா/8447534825 ; 7011992634 ; 9971278934🌤

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

No comments:

Post a Comment