Thursday, 22 June 2017

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு - திருவள்ளூர்



மூலவர்:  வேதபுரீஸ்வரர்

அம்மன்/தாயார்:  பாலாம்பிகை

தல விருட்சம்:  வெள்வேல மரம்

தீர்த்தம்: வேத தீர்த்தம்,பாலிநதி, வேலாயுத தீர்த்தம்

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: திருவேற்காடு

ஊர்: திருவேற்காடு

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
 
🅱 தேவாரப்பதிகம்:🅱

ஆழ் கடலெனக் கங்கை கரந்தவன் வீழ்சடையினன் வேற்காடு தாழ்வுடை மனத்தால் பணிந்து ஏத்திடப் பாழ்படும் அவர் பாவமே. - திருஞானசம்பந்தர்

🌼 தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 23வது தலம்.

🅱 திருவிழா:🅱
 
🍁  மகா சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்.
 
🅱 தல சிறப்பு:🅱
 
 🎭 இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

🎭 லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு.

🎭 இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம்.

🎭 இத்தல முருகனை அருணகிரி நாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்.

🎭 வேதபுரீஸ்வரர் சிவாயத்தைச் சுற்றிலும் எட்டு திசைகளிலும் எண் கயிலாயத் தலங்களாகப் புராண காலத்தின் பெருமைகளைக் கூறும்படி அமைந்திருக்கின்றன.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 256 வது தேவாரத்தலம் ஆகும்.
 
🅱 திறக்கும் நேரம்:🅱
 
🗝 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்..🗝

🅱 பொது தகவல்:🅱

🌺 இக்கோயில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம், 3 பிரகாரங்களோடு கூடியது.

🌺 இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கஜபிருஷ்டம் எனப்படும்.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌿 இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

🌱 இத்தலத்தில் அகத்திய முனிவர் வழிபட்டு சிவபெருமானின் திருமண திருக்கோலத்தைக் கண்டதால், இத்தலம் ஒரு திருமண தடை நீங்கும் தலமாக விளங்குகிறது.

🌱 மேலும் இத்தலம் நவக்கிரக தோஷம் தீக்கும் தலமாகவும் உள்ளது.

🌱 ஆதிசேஷனும் இத்தல இறைவனை வழிபட்டுள்ளதால். இத்தலத்தில் அரவம் தீண்டி யாரும் மரிப்பதில்லை என்று தல புராணம் விவரிக்கிறது.

🅱 நேர்த்திக்கடன்:🅱
 
☀ பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.
 
🅱 தலபெருமை:🅱

🌸 திருவேற்காடு பாலாம்பிகையையும், திருவலிதாயம் ஜகதாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவாம்பிகையையும் ஒரே நாளில் வழிபடுவோர் இம்மையிலும், மறுமையிலும் அனைத்து நலன்களையும் பெறுவர் என கூறப்படுகிறது.

🌸 இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

🌸 இக்கோயில் சோழ அரசனால் கட்டப்பட்டது.

🌸 சிவன் ஒரு முறை பார்வதியிடம், இத்தலத்தை மனதால் நினைத்தாலும், ஒரு பொழுதாவது இங்கு தங்கியிருந்தாலும், இத்தலம் வழியாக சென்றாலும் முக்தியடைவர் என்று கூறியுள்ளார்.

🦋 வழிபட்டோர்: 🦋

🌤 திருமால் தன் கையில் இருந்த வலம்புரி சங்கை தவற விட்டார். பின் இத்தல சிவனை வழிபட்டு பெற்றார். திருமால் சுதர்சன சக்கரத்தை பெறுவதற்காக இத்தலத்தை அடைந்து பூஜை செய்த போது, உடனிருந்து ஆதிசேஷனும் இங்கு வழிபட்டு, இத்தலத்தின் எல்லை வரை வாசம் செய்பவர்களை தீண்டமாட்டேன் என கூறியதாக வரலாறு. அன்றிலிருந்து இத்தலத்தில் யாரும் பாம்பு கடித்து இறந்தது கிடையது.

🌤 இதனால் இத்தலத்திற்கு "விடந்தீண்டாப்பதி' என்ற பெயரும் உண்டு.

🌤 முருகப்பெருமான் பிரம்மனை சிறையிலிருந்து நீக்காத குற்றத்திற்காக, இங்கு தீர்த்தம் உண்டாக்கி வெள்வேல மரத்தடியில் வழிபட்டு பிழை நீங்கப்பட்டார்.

🌤 விநாயகர், திருமால், முருகன், பிரம்மதேவர், இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வாயு, வருணன், குபேரன், ஈசானன் வழிபட்டுள்ளனர்.

🌤 மேலும் பராசரர், அத்திரி, பிருகு, குச்சரர், ஆங்கீரசர், வசிட்டர், கவுதமர், காசிபர், திண்டி, முண்டி, வாலகில்லியர், விரதாக்னி முதலிய முனிவர்கள், பஞ்சபாண்டவர்கள், சிபி சோழன், வாணன், மற்றும் ஒன்பது கோள்கள், அஷ்டதிக்பாலகர்கள் வழிபாடு செய்துள்ளனர்.

🎸 மூர்க்கநாயனார்: 🎸

🎭 தொண்டை நாட்டிலே பாலாற்றுக்கு வடகரையில் அமைந்துள்ள சிறந்த ஊர் திருவேற்காடு !

🎭 இவ்வூரில் வேளாளர் குடியில் சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் பெயர் மூர்க்க நாயனார்.

🎭 இப்பெயர் இவரது குணம் பற்றி ஏற்பட்டதாகக் கருதப்படுகிறதே தவிர, இவரது இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை.

🎭 அறிவு தோன்றிய நாளிலிருந்தே இப்பெரியார் எம்பெருமானின் திருவடித் தாமரையைப் போற்றி வந்ததோடு திருவெண்ணீற்றினையே மெய்ப்பொருள் என்று கருத்தில் கொண்டு வாழ்ந்து வந்தார்.

🎭 எம்பெருமானின் திருவடியார்களுக்கு அமுதளித்து அகமகிழ்ந்த பிறகே தாம் உண்ணும் நியதியை வழுவாது மேற்கொண்டு ஒழுகி வந்தார். இதனால் இவரது இல்லத்திற்கு வரும் சிவனடியார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வந்தது.

🌤 அதனால் இவரிடமுள்ள பொருள்கள் யாவும் செலவழிந்தன. வறுமை ஏற்பட்டது. எவ்வளவு தான் வறுமை மலைபோல் வளர்ந்த போதும் நாயனார் தமது குறிக்கோளில் நின்று சற்றும் பிறழாமல் வாழ்ந்து வந்தார்.

🌤 பொருள்களை விற்று, விருந்தினர்களைப் பேணி வந்த தொண்டர், இறுதியில் விற்று பணமாக்குவதற்குக்கூட பொருள் இல்லாத கொடிய நிலையை அடைந்தார்.

🎭 இந்த நிலையில் நாயனாருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. இவர் தமது இளமைப் பருவத்தில் சூதாடுவதற்குக் கற்றிருந்தார். இப்பொழுது பொருள் சேர்க்க அச்சூதாட்டத்தையே ஓர் பற்றுக்கோலாகக் கொண்டார்.

🎭 அவ்வூரிலுள்ளாரோடு சூதாடத் தொடங்கினார். பலரைத் தோற்கடித்துப் பெரும் பொருள் ஈட்டினார். அவ்வாறு பெற்ற பொருளைக் கொண்டுத் திருவெண்ணீற்று அன்பர்களுக்கு எப்போதும் போல் திருத்தொண்டு புரிந்து வரலானார்.

🎭 நாயனார் சூதாடும்பொழுது எப்பொழுதுமே ஒரு தந்திரத்தைக் கையாள்வது வழக்கம். சூதாட ஆரம்பிக்கும் பொழுது முதல் ஆட்டத்தில் தம்முடன் ஆடும் எதிரிக்கு விட்டுக் கொடுப்பார். அதனால் முதல் ஆட்டத்தில் தமக்கு ஏற்பட்ட தோல்வியைப் பற்றிக்கூட வருத்தப்பட மாட்டார். எடுத்த எடுப்பிலேயே நாயனார் தோற்றதும் எதிரிக்கு அளவு கடந்த உற்சாகம் ஏற்படுவதோடல்லாமல், அடுத்த ஆட்டத்திலிருந்து நிரம்பப் பொருள் வைத்து ஆடவும் தோன்றும், அதன் பிறகு எதிரி எங்கு வெற்றி பெறப் போகிறான் ?

🎭 சூதாடும் பழக்கத்தில் ஈடுபட்ட நாயனார் சூதாட்டம் என்பதற்காகப் பொய்யாட்டம் ஆடமாட்டார். அதே சமயத்தில் தம்முடன் சூதாடுபவர்கள் எவராகிலும் பொய்யாட்டம் ஆடினால் அத்தருணத்திலேயே சற்றும்கூடச் சிந்திக்காமல் தாம் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கரிகையாற் குத்திவிடுவார். ஊர் மக்கள் இவருடன் சூதாடுவதற்கு பயந்தார்கள். அதுமட்டுமல்ல இவருடன் ஆடிய அனைவருமே தோற்றுத்தான் போயினர்.

🎭 நாளடைவில் இவருடன் சூதாடுவதற்கு எவருமே வரவில்லை. இதனால் நாயனார் வெளியூர்களுக்குச் சென்று சூதாடிப் பொருள் பெற்றுப் பரமனுக்குப் பெருந்தொண்டாற்றி வரலானார். இவ்வாறு சூதாடிப் பொருள் நாடி பிறைசூடிப் பெருமானின் திருவடி நாடி, அவர்தம் அடியாரைக் கூடி வணங்கி வந்த மூர்க்க நாயனார் இறுதியில் எம்பெருமானின் திருவடித் தாளினைப் போற்றி வாழும் சிவபதியை அடைந்தார்.

"வல்லார்கள் தமைவென்று சூதினால் வந்த பொருள்
அல்லாரும் கறைக் கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும்
நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கிச்
சொல்லார் சீர்ச் சோமாசி மாறர் திறம் சொல்லுவாம்."

🌞 பாடல் விளக்கம்: 🌞

🍁 சூதில் வல்லமை உடையார்களை வென்று, அதனால் வந்த பொருள் முழுமையையும், கருமை விளங்கும் கழுத்தினையுடைய பெருமானின் அடியவர்கட்கு அமுதாக்கிடும் நல்லவராய மூர்க்க நாயனாருடைய மலர்க்கழல்களை வணங்கி, உலகில் பெரிதும் புகழ்ந்து பேசப்படும் சீர்மையுடையசோமாசிமாற நாயனார் திறத்தை இனிச் சொல்லுவாம்.

🅱 குருபூஜை: 🅱

🎸 மூர்க்க நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. நாட்டமிகு மூர்க்கர்க்கும் அடியேன்.இவருக்கு கோயில் வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது.

🅱 கோவில் விபரம்:🅱

🌷 கிழக்கு நோக்கி உள்ள ஆலய முகப்பு கோபுரம் ஐந்து நிலைகளை உடையதாகும்.

🌷 கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே துழைந்தவுடன் உள்ள விசாலமான வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம்.

🌷 அவற்றின் பின் உள்ள 2-வது வாயில் மூலமாக உள்ளே சென்றவுடன் நேர் எதிரே மூலவர் வேதபுரீஸ்வரர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார்.

🌷 லிங்க உருவின் பின்புறம் சுவற்றில் சிவன் பார்வதி திருமணக் காட்சி புடைப்பு சிற்பமாக காணபாடுகிறது.

🌷 அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோல காட்சி கொடுத்த தலங்களில் திருவேற்காடும் ஒன்று.

🌷 ஆலய உட்பிரகாரத்தின் இடது புறம் அகத்தியர் மற்றும் சூரியன் திருமேனிகள் காட்சி தருகின்றன.

🌷 தெற்கு உட்பிரகாரத்தில் நால்வர் சந்நிதி மற்றும் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகளைக் காணலாம்.

🌷 மேற்கு உட்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாயச் சோழன் ஆகியோரின் உருவச் சிலைகளைக் காணலாம்.

🌷 வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய இறைவி பாலாம்பிகை சந்நிதி உள்ளது.

🌷 மேலும் உட்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், கணபதி, தட்சினாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் கோஷ்ட தெய்வங்களாக காணப்படுகின்றனர்.

🌷 கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் மேற்கு நோக்கிய சனீஸ்வர பகவான் தனி சந்நிதி இருக்கிறது.

🌷 ஆலய கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறத்தில் இந்த சனீஸ்வரன் சந்நிதி உள்ளது. அதன் அருகில் மூர்க்க நாயனாரும் தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.

🌷 இத்தலத்திலுள்ள முருகன் தன் கையில் வேல் இல்லாமல் வில்லும் அம்பும் ஏந்தியவாறு ஒரு காலை மயிலின் மீது வைத்துக்கொண்டு நின்றபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

🔥 புராணச் செய்தி: 🔥

🌻 இத்தலம் முருகப் பெருமானின் வாழ்க்கையோடு சம்பந்தம் உடையதாகும்.

🌻 பிரணவத்திற்கு பொருள் கூற முடியாத பிரம்மாவை முருகப் பெருமான் கைது செய்துவிட்டார். அதனால் படைப்புத் தொழில் தடைபட்டது.

🌻 சிவபெருமான் நந்தியை முருகனிடம் அனுப்பி பிரம்மாவை விடுதலை செய்யும்படி கூறச் செய்தார். ஆனால் முருகன் அதற்கு சம்மதிக்கவில்லை. இதைத் தெரிந்து கொண்ட சிவபெருமான் தானே நேரில் வந்து முருகனிடம் பிரம்மாவின் படைப்புத் தொழில் தடைபடுவதால் ஏற்படும் சிக்கல்களை விளக்கி பிரம்மாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார்.

🌻 நந்தி மூலம் சொல்லி அனுப்பியும் தன் சொல்லிறகு கட்டுப் படாத முருகனை தண்டிக்கும் பொருட்டு திருவேற்காட்டிற்குச் சென்று அங்கு தன்னை வழிபட்டு வரும்படி ஆணையிட்டார். அதன்படி முருகனும் திருவேற்காடு வந்து ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி சிவனை வழிபட்டார்.

🌻 கருவறை மேற்குப் பிரகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியில் முருகனுக்கு முன்னால் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். இத்தகைய அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.

🌻 முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது.

🌻 திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன.

🌻 இத்தலத்தில் உள்ள நவக்கிரக சந்நிதி பத்ம பீடத்தில் எண்கோண வடிவில் அமைந்துள்ளது சிறப்பிற்குரியது.

🌻 இத்தலம் நவக்கிரக தோஷங்கள் நீங்குவதற்குரிய ஒரு பரிகாரத் தலமாகும்.

🌻 இத்தலத்தில் பராசர முனிவர் இறைவனை வழிபட்டுள்ளார்.

🌻 இம்முனிவர் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் புலமை பெற்றவர். எனவே ஜோதிடம் சொல்வதை தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடத்தில் புலமை பெற விரும்பவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் ஆகியோர் இத்தல இறைவனை வழிபடுதல் நன்மை தரும்.

🅱 அஷ்டலிங்கங்க தரிசணம்: 🅱

🍄 சிவன் என்றால் மங்களன் என்று பொருள். சிவபெருமானை இக்கலியுகத்தில் லிங்கமூர்த்திகளாக வழிபட்டால் பலபேறுகளை அடையலாம். நம் கண்களுக்குத் தெரியாத பல சிவலிங்கத் திருமேனிகள்  தேவ சிற்பியினால் வடிவமைக்கப்பட்டு, ஆங்காங்கே கிடப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

🍄 அவற்றுள் எண்வகை லிங்கத் திருமேனிகள் இரண்டாம்  குலோத்துங்க மன்னன் ஆட்சிபுரிந்த தெற்குத் தொண்டை மண்டலப் பகுதியான திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் - திருவேற்காடு வேதபுரீஸ்வரர்  சந்நிதானத்தைச் சுற்றிலும் அருள் தரும் அஷ்டலிங்கங்களாக ஒவ்வொரு திக் பாலகரது திருநாமத்தைக் கொண்டு விளங்குகின்றன.

🍄 ஒவ்வொரு லிங்கமும்  தனித்தனியான வாழ்க்கை நலன்களை அருள்பவை என்றாலும் அவற்றை ஒரே நாளில் 18 கி.மீ. எல்லைச் சுற்றுக்குள் தரிசித்து விடுவதே சிறப்பானது.

🍄 அந்த வரிசையில் எண்கயிலாய தரிசனமாக, சென்னையின் தென்பகுதியான தொண்டை மண்டலத்தில் வள்ளிக் கொல்லைமேடு, நூம்பல், செந்நீர்குப்பம், பாரிவாக்கம், மேட்டுப்பாளையம், பருத்திப்பட்டு, சுந்தர சோழபுரம், சின்னக்கோலடி ஆகிய தலங்களை வழிபடலாம்.

🅱 இனிமை தரும் இந்திர லிங்கம்: 🅱

🍁 வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து நேர் கிழக்காக வள்ளிக் கொல்லைமேடு என்ற இடத்தில் இந்திரசேனாபதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்கிறார். பதவி உயர்வு, அரசு அனுகூலம் பெற்றுத் தருகிற இந்த சுவாமியை நெய்தீபம் ஏற்றி வைத்து
வழிபடலாம்..

🅱 இடர்களையும் அக்கினி லிங்கம்: 🅱

🍁 அகத்தியர் தனித்து பூஜை செய்த லிங்கமாக ஆனந்தவல்லி உடனுறையும் அகத்தீஸ்வரராக தென்கிழக்கு திசையில் நூம்பல் என்ற தலத்தில் அருள் தரும் இவர் முன் நெய்தீபம் ஏற்றினால் வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

🅱 எதிர்க்கும் வினைகளையும் எம லிங்கம்: 🅱

🍁 மரகதாம்பிகை உடனுறை கைலாசநாதர் எனும் திருநாமத்துடன் பூந்தமல்லி, ஆவடி சாலையில் தென்திசை லிங்கமாக செந்நீர்குப்பம் என்ற தலத்தில்  சிவமூர்த்தங்களோடு கருங்கற்கோயிலில் காட்சி தருகிறார். ஏழரைச்சனி, கண்டச்சனி விலகி, இரும்புத் தொழிலில் முன்னேற்றம் காண நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

🅱 நிம்மதி அருளும் நிருதி லிங்கம்: 🅱

🍁 வேதபுரீஸ்வரர் சந்நதியிலிருந்து தென்மேற்கு திசையில், சுமார், 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக ஓலைச்சுவடிச் செய்திகளோடு பாலாம்பிகை  உடனுறை பாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் பூந்தமல்லி, பட்டாபிராம் இடையில் பாரிவாக்கத்தில் (மகாநாடு நிறுத்தத்தில்) அருள்கிறார். கொடுத்த  கடன் திரும்பவும், உறவினர் மூலம் நன்மை பெறவும் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

🅱 உடல் திறன் கூட்டும் வருண லிங்கம்: 🅱

🍁 வேதபுரீசர் கோயிலிலிருந்து மேற்கு திக்கில் மேட்டுப்பாளையம் என்ற பூமியில் ஜலகண்டீஸ்வரி உடனுறை ஜலகண்டீஸ்வர சுவாமி என்ற திருநாமத்துடன் ஆலயம் இன்றி வெட்டவெளியில் அருள்  தருகிறார். புத்திரப்பேறு, நோய் நீக்கம், விவசாய விருத்தி போன்ற பலன்கள் பெற நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். பூந்தமல்லி - ஆவடி  சாலையில் காடுவெட்டி என்ற இடத்தில் உள்ளது.

🅱 குறைவிலா செல்வம் தரும் குபேர லிங்கம்: 🅱

🍁 ஆவடி-திருவேற்காடு சாலையில் வடக்கு திசை லிங்கத் திருமேனியாக சுந்தர சோழபுரம் என்ற தலத்தில் வேம்புநாயகியோடு குபேரபுரீஸ்வரர் ஏகதள விமானக் கருவறையில் அருளாட்சி செய்கிறார். பைரவர், வாயு தேவர், துர்க்கை, நவநாயகர் மற்றும் சத்திய நாராயணருடன் அருள் தருகிறார்.

🍁 ஆலய வரலாற்றுக் குறிப்பைக் காணும்போது இவ்வூரில் சுந்தரன் என்ற சோழ அரசன் சிலகாலம் ஆட்சிபுரிந்தமையால் சுந்தர சோழர்புரம் என்ற பெயர் நிலைத்ததாக உள்ளது.

🍁 இத்தல ஈசனை வழிபட பொருட் சேர்க்கையோடு சகல சம்பத்துக்களும் கிட்டும்.

🅱 வாழ வழி காட்டும் வாயு லிங்கம்: 🅱

🍁 வேற்காட்டீஸ்வரர் தலத்திலிருந்து வடமேற்கு திசையில்  விருத்தாம்பிகை உடன் வாழவந்த வாயுலிங்க மூர்த்தியாக அழகான சிவாலயத்துள், சிவமூர் த்தங்களோடு அருள் தருகிறார். ஆவடி சாலையில் பருத்திப்பட்டு என்ற தலத்தில் கோயில் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனி அருகே  இலவம்பஞ்சு மரங்களின் காய்கள் வெடித்துச் சிதறுவதால் பஞ்சுகள் இறைவன் மேல் படர்வதால் அப்பெயர் நிலைத்து விட்டது. சந்நதியில் நெய்தீபம்  ஏற்றி துதி கூறி வழிபட இழந்த பொருளை மீட்பீர்கள்.

🅱 எடுத்த செயல் முடிக்க வைக்கும் ஈசான லிங்கம்: 🅱

🍁 வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து வடகிழக்கு திசையில் திருவேற்காடு - கோலடி சாலையில் சின்னக்வகோலடி என்ற இடத்தில் வெட்ட வெளிச்  சிவலிங்கமாக நானேஸ்வரி உடனுறையும் ஈசான சிவன் அருள் தருகிறார். தொண்டை மண்டல கோட்டத்தில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் எப்போதும் ஒரு  செயல் வெற்றியாக ஈசனை லிங்க வழிபாடு செய்தபின்பே புறப்பட்டுச் சென்றதாக கால வரலாறு சொல்கிறது. வீடு கட்ட இயலாமை, காரியத் தடை,  கண் திருஷ்டி, வண்டி வாகனத்தில் லாபம் இல்லாமை ஆகியவை விலகிட நெய்தீபத்துடன் நல்லெண்ணெய் ஏற்றி வணங்க வேண்டும்.

👉🏽 திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் உள்ள திருவேற்காடு தலத்தை மையமாக வைத்து இந்த லிங்கங்கள் எட்டையும் சுமார் மூன்று மணி நேரத்திற்குள்  ஆட்டோ அல்லது கார்களில் சென்று வழிபட்டு வரலாம். இந்த ஊரின் சோமவார வழிபாட்டுக் குழுவினரும் அஷ்டலிங்கத் தரிசன குழுவும் எண் கயிலாய தரிசன சேவைக்கு உதவுகின்றனர்.

🅱 தல வரலாறு:🅱

🌤  சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்து கொண்ட காலத்தில் தேவர் முதலியோர் இமயமலை எல்லையை அடைந்ததால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சரிசெய்ய இறைவன் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். அகத்தியர் இறைவனின் திருமணக்காட்சியை காண இயலவில்லையே என்ற வருத்தத்துடன் சென்றார். அப்போது இறைவன் நீ தென் திசை நோக்கி செல்லும் போது உமக்கு திருமண காட்சியை காட்டுவோம் என அருள்புரிந்து அனுப்பி வைத்தார்.

🌤 அகத்தியர் திருவேற்காடு அடைந்த போது இறைவன் பார்வதியுடனான திருமணக்கோலத்தை காட்டி அருளினார்.

🌤 பிருகு முனிவரின் சாபத்தால் பெருமாள் ஜமத்கனி முனிவருக்கும், ரேணுகைக்கும் மகனாக அவதரித்தார். பரசுராமர் என பெயர் பெற்றார். அவர் இத்தல இறைவனை வழிபட வந்தபோது அவருடன் ரேணுகையும் உடன் வந்தார்.

🌤 ரேணுகை கோயிலே புகழ்பெற்ற, "கருமாரியம்மன் கோயில்' என்ற பெயரில் விளங்குகிறது.

🌤 பிரளய காலத்தில் இந்த உலகம் மூடப்பட்ட பின், சிவன் மீண்டும் இந்த உலகை படைக்க விரும்பினார். முதலில் வெள்ளத்தை வற்றச்செய்து பின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை இத்தலத்தில் வெள்ளெருக்கு மரங்களாக வடிவெடுக்குமாறு கட்டளையிட்டிருந்தார். அதன் படி இத்தலத்தில் வேதங்கள் வெள்வேல மரங்களாக மாறி இறைவனை வழிபட்டு வந்தன. இவ்வூரின் தல விருட்சம் வெள்வேல மரமாகும். இதனால் இத்தலம் "திருவேற்காடு' என அழைக்கப்படுகிறது.

🅱 சிறப்பம்சம்:🅱
 
🎥 அதிசயத்தின் அடிப்படையில்:

👉🏽 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

👉🏽 லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக் கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு.

👉🏽 காண்பவர் கண்கள் குளிர்ந்திடவும், நினைப்பவர் நெஞ்சங்களில் தீவினைகள் அகன்று நன்மைகள் பெருகவும், சிவபுண்ணிய பூமியில் கால் பதித்துவிட்டு அஷ்டலிங்கத் திருமேனிகளைத் தரிசிப்பவர்களுக்கு எட்டு ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

👉🏽 சம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

🅱 இருப்பிடம்:🅱

🚗 சென்னை கோயம்பேட்டிலிருந்து (10 கி.மீ) பூந்தமல்லி செல்லும் வழியில் திருவேற்காடு உள்ளது.

No comments:

Post a Comment