Thursday, 22 June 2017

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு - நாமக்கல்



மூலவர் : அர்த்தநாரீஸ்வரர்
 
அம்மன்/தாயார் : பாகம்பிரியாள்

தல விருட்சம் : இலுப்பை

தீர்த்தம் : சங்குதீர்த்தம், தேவதீர்த்தம்.
 
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருக்கொடிமாடச் செங்குன்றூர்

ஊர் : திருச்செங்கோடு
 
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
 
🅱 தேவாரப்பதிகம்:🅱

ஓங்கிய மூவிலை நற்சூலம் ஒருகையன் சென்னி தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கணிந்து கோங்கணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த பாங்கன் தாள்தொழுவர் வினையாய பற்றறுமே. - திருஞானசம்பந்தர்

🌼 தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 4வது தலம்.

🅱  திருவிழாக்கள்: 🅱
 
🍁 சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம்.
 
🅱  தல சிறப்பு:🅱
 
🎭 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்து, புகழும் வளமும் பெற்ற இந்நகரமானது கொங்கேழ் தலங்களில் முதன்மை பெற்றது.

🎭 குறிஞ்சி வளம் நிறைந்தது, மிகப் பழமை வாய்ந்தது.

🎭 அரியும், அரணும் ஒன்றே என்ற உண்மையை சமயத்திற்கு உணர்த்திய இத்திருத்தலமானது சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளாலும், திருஞானசம்பந்தப் பெருமானின் தேவார திருப்பதிகத்திலும், அருணகிரிநாதரின் திருப்புகழாலும், கந்தரலங்காரம், சுந்தரந்தாதி, கவிராசப் பண்டிதர், பள்ளு, குறவஞ்சி, உலா, பிள்ளைத்தமிழ், கும்பி போன்ற சிறப்புமிக்க நூல்களாலும் புகழப்பட்டது.

🎭 அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான விரல் மிண்ட நாயனார் பிறந்த பெருமை பெற்றது இத்தலம்.

🎭 சுமார் 1500 ஆண்டுகளுக்கு  முன்னரே இத்திருதலமானது மரம், செடி, கொடிகளை உடையதாகவும், பல மாட மாளிகைகள் நிறைந்ததாகவும், இங்குள்ள குன்றானது (மலை) இயல்பாகவே செம்மை நிறமாகவும் இருந்ததால் இத்தலத்தை கொடிமாடச் செங்குன்றூர் எனவும் மற்றும் ரிசிகள், தேவர்கள், முனிவர்கள் இருப்பிடமாக இருந்ததால் `திரு` என்ற அடைமொழியையும் சேர்த்து திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்றும் புகழப்பட்டது.

🎭 அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், அருள்மிகு ஆதிகேசவபெருமாள் ஆலயம், அருள்மிகு செங்கோட்டுவேலவர் ஆலயம் ஆகிய மும்மூர்த்திகளின் சன்னதிகளையும் தனிதனியாய் உடைய ஆலயமாக அமைந்த இத்திருத்தலம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது.

🎭 செம்மலை, மேருமலை, சிவமலை, நாகாசலம், பனிமலை, கோதைமலை, அரவகிரி, பிரம்மகிரி, வாயுமலை, கொங்குமலை, நாககிரி, வந்திமலை, சித்தர்மலை, சோணகிரி, தந்தகிரிமுதலான பல சிறப்புப் பெயர்களையும் உடையதாக இத்தெய்வத் திருமலை அழைக்கப்படுகிறது.

🎭 இத்தலம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத்தலமாகும்.

🎭  சதய நட்சத்திரத்தின் அதிபதி சனியும், ராகுவும் ஆவர்.

🎭 இம்மலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரரைத் தொழுதலே சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகாரமாகும்.

👉🏽 மணியுகும் சிகரமுத் துண்டமாயது சேதுமலி யிலங்கா புரிமுனி
ரணி திருக்கோண மலையென வமைந்தன நாகவசலந் தமிழ்க்கொங்கு நாடினை
தனிக்கிரி மங்கையங்கனும் வேலனும் இருந்துநல் வரமருள் வதாய்ப்
பணியுக மனந்தம் பரவியது கந்தப்பரப் புற்றுமழி - என்று தேவாரத் திருப்பதிகத்தில் போற்றப்படும் இத்திருமலையை ஒவ்வொரு திசையிலிருந்து பார்க்கும் போதும் வெவ்வேறு விதமாக காட்சியளிக்கும்.

🎭 சிவாலயம் என்றாலும் இங்கு செங்கோட்டு வேலவருக்கு அதாவது முருகர்க்கு சிறப்பு அதிகம்.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 208 வது தேவாரத்தலம் ஆகும்.
 
🅱 நடை திறப்பு :🅱
 
🗝 * காலை 6.00 முதல் 2.00 மாலை 3.00 முதல் 7.00 வரை திறந்திருக்கும்.*🗝

🅱 பொது தகவல்:🅱

🌺 சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் உள்ளன.

🌺 இந்த ஆலயத்தின் சிறப்பே தனிச் சன்னிதியாக மற்ற ஆலயங்களில் இல்லாத புதுமையாக ஐந்தலை நாகங்கள் பின்னிப் பிணைந்தது போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது தான்.

🌺 சுவாமியின் பாதத்தின் கீழ் தேவதீர்த்தம் உள்ளது.

🌺 சிவன் கோயிலில் லிங்கம் இருப்பது மரபு. இங்கே மலையே லிங்கமாக கருதப்படுவதால், மலைக்கு எதிரே பெரிய நந்தி உள்ளது.

🌺 இம்மலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஆதிகேசவப்பெருமாள், செங்கோட்டு வேலவர் அருளுகின்றனர்.

🌺 இம்மலையை பவுர்ணமி நாளில் வலம் வந்தால் கயிலாயத்தையும் வைகுண்டத்தையும் வலம் வந்த பலன் கிடைக்கும்.

🌺 கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ, இக்கோயிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌿 கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

🅱 நேர்த்திக்கடன்:🅱
 
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 
🅱 தலபெருமை: 🅱

🌸 தென்பகுதியில் கஜமுக பிள்ளையாரும், வடபகுதியில் ஆறுமுக சுவாமி ஆலயமும் அமைந்துள்ள இடத்திலிருந்து மலையின் முதல் படியானது தொடங்குகிறது. இவ்விடத்தினை மலையடிவாரம் என்று அழைக்கின்றனர்.

🌸 திருபடிகள் வழியாக சென்றால் முதலில் செங்குந்தர் மண்டபத்தையும் அதனை அடுத்து காளத்திசுவாமிகள் மண்டபம் திருமுடியார் மண்டபம் மற்றும் தைலி மண்டபத்தையையும் அடையலாம்.

🌸 தைலி மண்டபத்தில் மேற்குபுறத்தில் 7 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்ட நந்தி ஒன்று ராஜகோபுரத்தை பார்த்தவண்ணம் உள்ளது.

🌸 பசுவன் கோவில் என்று அழைக்கப்படும் இதன் பின் உள்ள பகுதியை நாகமலை என்று அழைக்கின்றனர்.

🌸 இவ்விடத்தில் 60 அடி நீளத்தில் ஆதிசேடன் ஐந்து தலைகளுடன் மிக பிரமாண்டமாய் அமைந்துள்ளது.

🌸 இதன் சிறப்பு என்னவன்றால் தன்னை ஆபரணமாக சுமந்து கொண்டுள்ள சிவனின் ஆவுடையார் உருவினை சுமந்து கொண்டுள்ள ஆதிசேடனின் நாகர் உருவினை காணலாம்.

🌸 நெடும் பாறையிலேயே வடித்தெடுக்கப்பட்ட இந்நாகர் உருவமே நாகர் மலையின் முதலிடமாகும்.

🌸 இன்றைக்கும் மக்கள் இந்த நாகர் சிலைக்கு குங்குமம், சிகப்பும் தூவிச் சூடம் ஏற்றி தீபாராதணை செய்தும் சக்கரைப்பொங்கல், வெண்பொஙகல் வைத்தும் வழிபடுகிறார்கள்.

🌸 அன்றைய மக்கள் படி வழியாக மட்டும் சென்று நாகதெய்வத்தை வழிபட்டார்கள் இன்று வாகன சாலை அமைத்து நடக்க முடியாதவர்கள் வாகன பாதையில் வாகனத்தில் சென்று நாகர் பள்ளம் என்று அழைக்கப்படும் பகுதி வரை சென்று நாக தெய்வத்தை வழிபடலாம்.

🌸 இதன் இடதுபுறமுள்ள நாகம் கால வேறுபாட்டால் இடி, மின்னல் தாக்குதல்களால் வெடிப்புகள் ஏற்பட்டு சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இதனையடுத்து உள்ள சில மண்டபங்களை கடந்து சென்றால் அறுபதாம் படி என்னும் ``சத்தியப்படியினை`` அடையலாம்.

தத்வ நாற்பத் தெட்டு நாற்பத் தெட்டு மேற்றுத் திடமேவும்
தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச் சத்ய வாக்யப் பெருமாளே
என்று இப்படியின் இறுதியில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ளார்.

🌸 ஒரே சீராக அறுபது படிகளை உடைய இவ்விடம் சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடு்த்துக்காட்டாக விளங்குகிறது. இம்மலையில் உள்ள 1206 படிகளிலேயே இப்படிகள் தான் மிகவும் சிறப்பு வாய்ந்தத படியாகும்.

🌸 அன்றைய காலத்தில் கொடுத்தல் வாங்கல் மற்றும் எண்ணற்ற தீர்க்க முடியாத வழக்குகளில் உண்மை நிலையை அறிய இப்படியினை பயன்படுத்தினார்கள்.

🌸 இப்படியின் மீது நின்று சத்தியம் செய்து கூறும் செய்திகளை சென்னை உச்சநீதிமன்றமே ஒப்புகொண்டதாக கூறுவார்கள்.

🌸 இதனையடுத்து பல மண்டபங்களை கடந்து சென்றால் கம்பீர தோற்றத்துடன் வடக்கு நோக்கிய வண்ணம் உள்ள ஐயங்கார பிள்ளையாரை வழிபடலாம் இங்கு 475 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட எழில்மிகு இராயர் கோபுரத்தை காணலாம்.

🦋 செங்கோட்டு மலை: 🦋

திருச்செங்கோடு என்பதற்கு "அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை' என்றும், "செங்குத்தான மலை' என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்து விட்டது.

இந்த மலை உருவானதற்கு புராணக்கதை உண்டு.

🌤 ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது. ஆதிசேஷன் தன் படங்களால் மேரு மலையை அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயு தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்பதே பந்தயம்.

🌤 இதன்படி வாயு வேகமாக வீச, மலையின் முகட்டுப்பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களிலும் விழுந்தன. அதில் ஒன்றே திருச்செங்கோட்டு மலை. ஆதிசேஷ பாம்பு மலையைப் பிடித்த போது, ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் கொட்டி, மலை செந்நிறமானதாலும் இப்பெயர் வந்ததாகச் சொல்வர். இம்மலைக்கு நாககிரி, வாயுமலை என்றும் பெயர்கள் உண்டு.

🅱 அர்த்தநாரீஸ்வரர் உருவ அமைப்பு :🅱

🔥 அர்த்தம் என்றால் பாதி எனவும், நாரீ என்றால் பெண் எனவும், ஈஸ்வரன் என்றால் சிவன் எனவும் பொருள்படும் (அர்த்த+நாரீ+ஈஸ்வரர்). இறைவன் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் இத்தலத்தில் பெண்ணாகவும், ஆணாகவும் இரண்டற கலந்து அம்மையப்பன் என்று அழைக்கப்படும் அர்த்தநாரீஸ்வரராக அதிசியமான வடிவுடன் பக்தர்களுக்கு காட்சியாளிக்கிறார்.

🔥 இறைவன் ஆணா அல்லது பெண்ணா என்ற கேள்வி எழுப்பி ஆண் என்றால் ஆண், பெண் என்றால் பெண் என்று புரட்சிகரமாகப் பதில் தருகிற உமையொருபாகனாக மங்கை பாங்கனாக மாதிருக்கும் பெருமானுக்கு முக உருவ வழிபாடு இல்லை. பாதியானாக காட்சி தருகினற சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்கிற உண்மையை உலகுக்கு உணர்த்திய உன்னத திருத்தலம் ஆகும்.

🅱 அர்த்த பாகத்தின் தோற்றம்: 🅱

 🦆 இங்குள்ள அர்த்தநாரீஸ்வரன் மூலவர் திருவுருவம் கற்சிலை அன்று, சித்தர்களால் வெண்பாஷணம் என்று அழைக்கப்படும் மிகுந்த நச்சுத்தன்மை உடைய பல வகை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது.

🦋 இந்த பாஷாணமானது வெண்குஷ்டம் போன்ற பல நோய்களை தீர்க்கும் சக்தி உடையது. ஆகவே பெருமானுக்கு செய்யும் அபிஷேக தீர்த்தம் மற்றும் பெருமானின் பாதத்தில் இருந்து வரும் சுனை நீர் தீர்த்தம் ஆகியவைகளை தொடர்ந்து பருகினால் இன்று மருத்துவர்களால் குணமாக்க முடியாத பல நோய்கள் குணமாகின்றன என்று மக்களால் முழுமையாக நம்பப்படுகிறது.

🦋 அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிப்பர். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பர். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.

🦋 மிகப்பழமையான சிலை என்பதால் அபிஷேகம் செய்து திருவருவம் சற்று மாறி காட்சி தருகிறது. தற்சமயம் மதியம் ஒருவேளை மட்டுமே பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

🦋 அர்ச்சனையின் போது எங்கும் இல்லாத புதுமையாய் ஒரு நாமம் அம்பிகைக்குரிய பெண்பாலாகவும், அடுத்த நாமம் சிவனுக்குரிய ஆண்பாலாகவும் அமைந்து அர்ச்சிப்பது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

🅱 நாகாசலத்தில் (திருச்செங்கோடு) எழுந்தருளல்: 🅱

 🔥 திருக்கயிலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தால் முருகப் பெருமான் கோபமுற்று நாகாசலம் வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. குமரன் கையிலையிலிருந்து பிரிந்து சென்றதிலிருந்து பார்வதி தேவியார் மிகுந்த கவலை கொண்டிருந்தார். சோகமே உருவமாக காட்சியளித்தார். அதைக் கண்ட சிவன் அம்மைக்கு மகிழ்வூட்ட எண்ணி அவரைத் தாருக வனத்திற்கு அழைத்து வந்தார். அங்கு உல்லாசமாக எல்லா இயற்கை எழில்களையும் கண்டுவந்தனர். அங்கு ஒரு முல்லைக்கொடி மாதவி மரத்தை சுற்றி வளர்ந்துள்ளதை பார்வதிக்கு சிவன் காட்டினார். அதைக் கண்ட அம்மையார் வெட்கப்பட்டு சிவபெருமானின் இருகண்களையும் தன் கைகளால் மூடினார். பரமனின் கண்கள் மறைக்கப்படவே அண்டங்கள் இருண்டன.

🔥 சிறிது நேரத்தில் அம்மையார் தன் இரு கைகளையும் விலக்கவே இருள் நீங்கியது.

🔥 எதிர்பாராமல் ஏற்பட்ட இருளின் காரணமாக ரிசிகளும், முனிவர்களும் மேற்கொள்ளும் நித்திய வழிபாட்டுமுறைகள் மாறியது. இதை முனிவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். உமாதேவியார் சிவபெருமானை வணங்கி சுவாமி இத்தவறு மீண்டும் நிகழாதிருக்க வேண்டும். அதற்கு நாம் இருவர் என்ற முறை மாறி நாம் ஒருவர் என்ற உண்மை நிலை ஓங்க வேண்டும். அதற்கு ஒரே வழி தங்கள் உடலில் எனக்கு இடமளித்து இரட்சிக்க வேண்டும் என்றார்.

🅱 தேவியார் இடப்பக்கம் பெற்ற வரலாறு : 🅱

 🌺 தேவியார் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு சிவபெருமான் தேவியாருக்கு தன் உடலில் இடம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். அதற்கு உமையே நீ இன்றே புறப்பட்டு இமயமலையில் உள்ள கேதார சிகரத்தை அடைந்து அங்கு தவம் செய்து பின் காசி நகரை அடைந்து விசுவநாத சொரூபத்தை வழிபட்டு காஞ்சி நகரில் உள்ள கம்பையாற்றங் கரையில் தவம் செய்வாய் அங்கு யாம் காட்சியளிப்பேன் என்றார்.

🌺 அதன்படியே தேவியார் பலகாலம் கடுந்தவம் மேற்கொண்டாள். பின்பு காட்சியளித்த சிவ பெருமான் அம்மையே நீ விரும்பியபடி எமது உடலில் இடம் பெற திருவண்ணாமலையில் தவம் மேற்கொள்வாய் என்றார்.

🌺 பின் கார்த்திகை மாதம் இறுதியில் காட்சியளித்த பெருமான் தேவியே நீ யாருக்காக சோகமுற்று இத்தொல்லைகளுக்கு இலக்கானாயோ அந்த கந்தப் பெருமான் கொங்கு மண்டலத்தில் உள்ள கொடிமாடச் செங்குன்றின் மேல் கோயில் கொண்டு உள்ளான். அந்தக் குன்றம் தான் நாம் தங் குவதற்கு ஏற்ற இடமாகும் ஆகவே நீ அங்கு சென்று தவத்தினை மேற்கொள்வாய் என்றார். அதனைக் கேட்ட அன்னை தன் பிள்ளையாகிய வேலனை காணும் ஆசையாலும், சிவபெருமானின் உடலில் ஒரு கூராய் அமரவேண்டும் என்ற விருப்பாலும் திருவண்ணாமலையிலிருந்து நாகாசலம் எனப்படும் திருக்கொடி மாடச் செங்குன்றூர் வந்து அடைந்தார்.

🌺  இவண் உனக்கு எமது பாகம் ஈய்ந்தது ஏகாந்தமான
தவம் மிகு நாக வெற்போர் தலத்திடை உளதாங் கெய்தி
பவள மெய்த் தகரூர் சேயும் பரித்தவன் உறைந்த தென்மேல்
அவநிலை வரையின் பாங்காய் நாக வெற்பு அடைதி யென்றார்
என திருச்செங்கோடு தல புராணம் குறிப்பிடுகிறது.

🌺 அன்னை பராசக்தி நாகசலத்தில் முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள இடத்திற்கு மேற்காகவும் இலுப்பை மரத்திற்கு கிழக்காகவும், அமைந்துள்ள தேவ தீர்த்தமே ஏற்ற இடமென்று கருதி அந்த தீர்த்தின் மேலுள்ள தாமரை மலரின் மேல் நின்று தன் தவமந்திரமாகிய பஞ்சசலத்தை உச்சரித்துக்கொண்டு பல காலம் கடும் தவம் புரிந்தார். தவத்தின் இறுதியில்சிவபெருமான் தோன்றி சிவமில்லையேல் சக்தியில்லை, சக்தியில்லையேல் சிவமில்லை என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தும் வகையில் தனது உடலில் இடது பாகத்தை தேவிக்காக தியாகம் செய்து. அப்பகுதியில் அம்மையின் உடலில் ஒரு பாகத்தை இடம் பெறச்செய்தார்.

🦋 பிருங்கி மகரிஷி 🦋

🎭 ஒவ்வொரு புனித தலத்திலும் ஒரு மகரிஷியின் அருள்சக்தி நிரம்பியிருக்கும். உதாரணமாக திருப்பதியில் கொங்கண மகரிஷியும். பழனியில் போக மகரிஷியும், தஞ்சாவூரில் கருவூர் மகரிஷியும், கரூரில் சதாசிவபிரம்மேந்திரான் மகரிஷியும், திருவண்ணாமலையில் ரமண மகரிஷியும், மருதமலையில் பாம்பாட்டி சித்தரின் அருள்சக்தியும் நிரம்பியிருப்பதையும். அந்தந்த திருத்தலங்களில் அந்தந்த மகரிஷிகளின் ஜீவசமாதியும் உள்ளதை இன்றளவும் கண்டு கொண்டிருக்கிறாம். அந்த வகையில் திருச்செங்கோடு திருத்தலத்தில் உள்ள மகரிஷி தான் பிரிங்கி மகரிஷி. இவரே கடும் தவமியற்றி பாஷாணங்கள் என்று கூறப்படுகிற விஷங்களை ஒன்று படுத்தி வெண்பாஷன சிலையாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரனின் சிலையை உருவாக்கியவர் என்று மக்களால் நம்பப்படுகிறது.

🐲 உலகிலேயே மூன்று கால்களை உடைய முனிவர் என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்தவர் பிருங்கி மகரிஷி..

🅱 வழிபாடு (பூஜைகள்) 🅱

 👉🏽 இறைவன் அர்த்தநாரீஸ்வரருக்கு காலை பூஜை (காலை 6-7மணி வரை) உச்சி காலம் (12-1 மணி வரை) மாலை பூஜை (4-5 மணி வரை) நடைபெற்று வருகின்றது.

👉🏽 பார்வதி தேவியால் பூஜிக்கப்பட்டு இன்றும் கோயிலில் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வரும் ஆத்மார்த்த மரகதலிங்கத்திற்கு முதலில் அதிகாலையில் பாலாபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பிறகு வரிசையாக எண்ணை காப்பு, பால், சந்தனம், திருமஞ்சனம், இளைநீர், தயிர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, தேன், மலர்கள் போன்ற பொருட்களைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

👉🏽 அபிஷேகம் முடிந்தவுடன் இறைவனை பட்டினாலும், பல வகை மலர்களாலும் அலங்காரம் செய்வர். அழகிய மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட இறைவனுக்கு முதலில் மூலமந்திரங்களில் வடமொழியில் அர்ச்சணைகள் நடைபெறுகிறது. இதனை ஆவாகனம் என்று அழைக்கப்படுகிறது. பிறகு இறைவனுக்கு வெறும் அன்னம், பாயச அன்னம், எள் அன்னம், பயறு அன்னம், சக்கரை அன்னம் போன்ற அன்னங்களை வைத்து நைவேத்தியம் செய்யப்படுகிறது.

🐿 இறை வழிபாடு : 🐿

🍁  முதலில் ஸ்தூல லிங்கமாகிய இராஜகோபுரத்தை வழிபட்டுபிறகு கோவிலின் உட்புகுந்து பலி பீடத்தின் அருகே நின்றுஆண்களாக இருந்தால் அட்டாங்க நமஸ்காரமும் பெண்களாக இருந்தால் பஞ்சாங்க நமஸ்காரமும்செய்ய வேண்டும். பின் கர்ப்பக கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு ஏற்றவாறு வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று வழிபடவேண்டும்.

🍁 பிறகு நந்தி தேவரையும் துவாரபாலகரையும் வணங்கி கற்பூர ஒளியில் சிவசக்தி வடிவமான அர்த்தநாரீஸ்வரரை வணங்கி இரண்டாவது பிரதட்சணம் செய்ய வேண்டும். பிறகு நடராஜர், சிவகாமி அம்மை, தட்சிணாமூர்த்தி, பைரவர், வீரபத்திரர் முதலிய தெய்வங்களை முறையாக வணங்கவேண்டும். இறுதியாக நந்தி தேவரின் அருகே அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்து நமது வழிபாட்டை பூர்த்தி செய்ய வேண்டும்.

⚜ வழிபாட்டின் பலன்கள் : ⚜

🔥 அதிகாலை செய்யும் ஆலய வழிபாடு முதல் நாள் செய்த பாவத்தை போக்கும். மாலை நேரத்தில் பிரதோசகாலத்தில் செய்யப்படும் வழிபாடு நம் பிறவி தோறும் செயயும் பாவங்களை போக்கிவிடும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

🅱 தல வரலாறு:🅱

🌤   ஒரு சமயம் கயிலை மலை மீது பார்வதி தேவியுடன், சிவபெருமான் அமர்ந்திருந்தார். அப்பொழுது சிவனைக் காண வந்த பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வணங்கி வலம் வந்தார்.  ஆனால் பார்வதி தேவியை வணங்கவில்லை.  அதனால் பார்வதி தேவி கோபமடைந்தார்.  சினம் கொண்ட பார்வதி தேவி பிருங்கியின் உடலில் உள்ள சதை மற்றும் இரத்தம் நீங்குமாறு சாபமளித்தார். பிருங்கி முனிவர் சதையும் இரத்தமும் நீங்கி எலும்பு தோல் போர்த்திய உடம்பினைப் பெற்றார்.  சிவன் தம்முடைய தளர்வடைந்த நிலையினைக் கண்டு இரக்கமுற்றார்.  சிவன் பிருங்கி முனிவருக்கு மூன்றாவது காலாக ஊன்று கோலினை அளித்தார்.

🌤 ஊன்று கோலினை பெற்ற முனிவர் மகிழ்ச்சி அடைந்து, சிவனின் முன்பாக நடனம் ஆடி பக்தியைச் செலுத்தினார்.

🌤 இதையறிந்த சிவன், "நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை' எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். இடப்பாகத்தில் தான் இதயம் இருக்கிறது. மனைவி என்பவள் இதயத்தில் இருக்க வேண்டியவள் என்பதற்கேற்ப இந்த சம்பவம் நிகழ்ந்தது. இருவரும் இணைந்த வடிவம் "அர்த்தநாரீஸ்வரர்' எனப்பட்டது. அர்த்தநாரீ என்றால் "இணைந்த வடிவம்' எனப் பொருள். இந்த வடிவத்துடன் அவர் பூலோகத்திற்கும் வந்து சில தலங்களில் குடிகொண்டார். அதில் ஒன்றே திருச்செங்கோடு.

🅱 சிறப்பம்சம்:🅱
 
🎥 அதிசயத்தின் அடிப்படையில்:

🤹🏻‍♀ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🤹🏼‍♂ சிவதலமும், திருமால் தலமும் ஒன்றாய் அமைந்து விளங்கும் இத்திருத்தலமானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடையது.

🤹🏼‍♂ அம்மையும், அப்பனும் கலந்த ஒரு திருவுருவில் அம்மையப்பனாய் இறைவன் இத்தலத்தில் எழுந்தருளி நிற்கும் சிறப்பு உலகிலேயே வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாகும்.

🤹🏼‍♂  மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்புகளாலும் பெருமையுடையது இத்தலம்.

🅱 இருப்பிடம்:🅱

🚗 ஈரோட்டிலிருந்து 18 கி.மீ., நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் திருச்செங்கோடு உள்ளது. பேருந்து நிறுத்ததில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் இருக்கிறது. 

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகனூர், திருப்பட்டூர் - திருச்சி.



மூலவர் : பிரம்மபுரீஸ்வரர்
 
அம்மன்/தாயார் : பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி)

தல விருட்சம் : மகிழமரம்

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காரண ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருப்பிடவூர், திருப்படையூர்

ஊர் : சிறுகனூர், திருப்பட்டூர்
 
🅱 திருவிழா:🅱
 
🍁 பங்குனி மாதத்தில் பத்துநாள் விழா நடக்கும்.
 
🅱 தல சிறப்பு:🅱
 
👶🏽 பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது.

👶🏽 பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.

👶🏽 சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது.

👶🏽 காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.

👶🏽 சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார்.

👶🏽 இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும்.

👶🏽 இத்தலத்தில் 3001 அந்தனர்கள் வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ததால் அதில் உண்டான அதிர்வலைகள் அங்கிங்கெனாதபடி எங்குமாக பரவிக் கிடப்பதால் திருப்பிடவூர் எனப்பெயர்பெற்றது. திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில் திருப்பட்டூராக மாறியது.

👶🏽 இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கைலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை வணங்கி தொழுததால் ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.

👶🏽 கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் இத்தலத்தில் நிகழும்.

👶🏽 திருக்கயிலாய ஞான உலா எனும் நூல் இத்தலத்தில் அரங்கேறியது.

👶🏽 சிவ பெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.

👶🏽 சேர மன்னன் நாயானாரும், சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான இடம் இதுவாகும். மாசாத்தனார் ஓலை நறுக்குகளுடன் காட்சி தரும் விக்கிரகத் திருமேனியை கோவிலின் மூலமூர்த்தமாக இன்றைக்கும் இங்கு தரிசிக்கலாம்.

👶🏽 சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்திலாகும். அந்த பிரம்மன் பரிகாரம் தேடி கொண்டது திருப்பட்டூராகும்.

👶🏽 பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளம், சிவலிங்கச் சந்நிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

👶🏽 பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாதாவாக பிரம்ம சம்பத்கவுரி கனிவு ததும்ப கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணம் இனிதே நடைபெறும்.

👶🏽 பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

👶🏽 ஏழேழு ஜென்ம பாவங்களை நீக்கி பஞ்சபூதங்களாக உறைந்து இத்தலத்து ஈசன் நம்மை காக்கிறார்.

👶🏽 பிரம்மாவை வணங்கும் போதே குரு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

👶🏽 குரு பகவானுக்கு அதி தேவதை யான பிரம்மா தனி சந்நிதியுடன் திகழும் தலம் இதுவாகும்.

👶🏽 இத்தலத்திற்கு திருப்படையூர் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது.

👶🏽 சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

👶🏽 தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடி கொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.

👶🏽 தேய்பிறை அஷ்டமி யில், ராகு கால வேளையில் காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்கு வதற்காகத்தான் இத்தலத்தில் கால பைரவரின் வலது காது வித்தியாசமாக உள்ளது.

👶🏽 இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் இருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

 👶🏽 இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வநாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து வணங்குபவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புதிய சக்தியுடன் சிவத்தொண்டு புரிவர்.

👶🏽 திருப்பட்டூர் திருத்தலம் ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்தது. எப்போதும் வேத கோஷங்கள் காற்றில் நிரம்பி புண்ணிய பூமியாக திகழ்ந்தது.

👶🏽 பூணூல் கல்யாணம் எனும் சடங்கை இத்தலத்தில் செய்வது விசேஷம் ஆகும்.

👶🏽 திருபட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.

👶🏽 ஒரேயரு முறை திருப்பட்டூர் தலத்தில் காலடி எடுத்து வையுங்கள். மனதின் அத்தனை துக்கங்களும் பறந்து, மனம், புத்தி, செயல், சிந்தனை யாவற்றிலும் ஓர் ஒழுங்கை, நேர்த்தியை, தெளிவை உணர்வீர்கள்.
 
🅱 திறக்கும் நேரம்:🅱
 
🗝 காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல்  இரவு 8.00 மணி வரை.  பிரதி வியாழன் அன்று பிற்பகல் 1.00 மணி வரை நடை திறந்திருக்கும்..🗝

🅱 பூஜைவிவரம் : 🅱

🐲 காலசந்தி - காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை,

🐲 உச்சிக்காலம் - பகல் 11.30 மணி முதல் 12.00 மணி வரை,

🐲 சாயரட்சை - மாலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை,

🐲 அர்த்தஜாமம் - இரவு 7.45 மணி முதல் 8.00 மணி வரை.

🅱 பொது தகவல்:🅱

🌺  இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது.

🌺 இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர்.

🍄 தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பார்கள். நம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களுக்கும், நல்லது கெட்டதுகளுக்கும், லாப நஷ்டங்களுக்கும் நாமே காரணம்! நம் சிந்தனையிலும் செயலிலும் நல்லது இருப்பின், நாம் சந்திக்கிற எல்லா விஷயங்களும் நல்லனவாகவே இருக்கும். வாழ்க்கையில் ஒரேயோரு நல்ல விஷயம் நடந்துவிட்டால், பிறகு அடுத்தடுத்து நடக்கிற எல்லாக் காரியங்களும் நல்லனவாகவே அமையும்!

🍄 எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள். நம் எண்ணம் போல் நம் வாழ்க்கை அமைவதற்கு, வாழ்வில் நல்லதொரு திருப்பம் நிகழ்வதற்கு, பேரருள் புரியும் திருத்தலம் தான் திருப்பட்டூர்!

🍄 திருப்பட்டூருக்கு வந்தால் திருப்பம் ஏற்படும்’ என்றும், திருப்பதிக்கு நிகரான புகழுடன் பிராபல்யமாகும் திருத்தலம் என்றும் ஓலைச்சுவடிகள் தெரிவிக்கிற அற்புதத் தலத்துக்கு- ஸ்ரீகாசிவிஸ்வநாதரின் கோயிலுக்கு வந்து, ஸ்ரீவியாக்ரபாதர் உருவாக்கிய திருக்குளத்தின் தண்ணீரைச் சிரசில் தெளித்துக்கொண்டு, அந்த ஆலயத்தின் ஸ்ரீவிசாலாட்சி அம்பாளையும் ஸ்ரீகாசிவிஸ்வநாதரையும் தரிசித்துப் பூரிக்கின்றனர்.

⚜ அதையடுத்து, அங்கேயுள்ள ஸ்ரீவியாக்ரபாதரின் திருச்சமாதிக்கு அருகில் ஒரு பத்து நிமிடம் கண் மூடி அமர்ந்து, அந்த மகரிஷியின் நல்லதொரு அதிர்வை உணர்ந்து சிலிர்க்கின்றனர். பிறகு, ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று, அங்கே ஸ்ரீபிரம்மா வணங்கிய பல தலங்களின் மூர்த்தங்களையும் தனிச்சந்நிதியில் அருளும் ஸ்ரீபிரம்மாவையும் தரிசித்து மனமுருகப் பிரார்த் திக்கின்றனர். அங்கேயுள்ள பதஞ்சலி முனிவரின் திருச்சமாதிக்கு அருகிலும் கண் மூடி அமர்ந்து பிரார்த்தித்து, அங்கேயுள்ள அதிர்வை உணர்ந்து சிலிர்த்த வாசக அன்பர்கள் ஏராளம்!

🦋 அதற்கு முன்னதாக, சிவாச்சார்யர்களுக்கு அருளும் திருத்தலம் இது என்பதை முன்னரே பார்த்தோம் அல்லவா?! 'ஆகமச் செல்வர்களுக்கு அருளும் இறைவனே!’ என்று இந்தத் தலத்து இறைவனைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர் என்றும், ஆகமங்களைக் கட்டிக் காக்கிற, ஆலயங்களில் உரிய பூஜைகளைச் செய்கிற ஆசார்யர்கள் எனப்படும் அர்ச்சகர்களுக்கு அருளக்கூடிய ஒப்பற்ற தலம் என்றும் பார்த்தது நினைவிருக்கிறதுதானே?!

🌺 இந்தத் தலத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. பிரம்மோபதேசம் என்றும் யக்ஞோப வீதம் என்றும் சொல்லப்படும் உபநயனம்... அதாவது பூணூல் கல்யாணம் எனும் சடங்கை, இந்தத் தலத்தில் செய்வது விசேஷம் என்கிறார்கள், ஆசார்யப் பெருமக்கள்!

🍄 ஆகமச் செல்வர்கள் எனப்படும் அர்ச்சகர் களும் மற்ற அந்தணப் பெருமக்களும் அவர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயதில் உபநயனம் செய்து வைப்பார்கள். அந்த உபநயனத்தை, பிரம்மோபதேச வைபவத்தை ஸ்ரீபிரம்மதேவன் குடிகொண்டிருக்கும் இந்தத் திருவிடத்தில் நடத்தினால், அந்தக் குழந்தை பின்னாளில் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவான் என்பது ஐதீகம்!

🍁 கிரகிக்கும் திறனும் முகத்தில் தேஜஸும் கொண்டு, கல்வியில் சிறந்து விளங்கி, ஞானத்துடன் நம் பையன் திகழ வேண்டும் என்பதுதானே ஒவ்வொரு பெற்றோரின் நினைப்பும் கவலையும்?! திருப்பட்டூருக்கு வந்து, ஸ்ரீவியாக்ரபாதர் உருவாக் கிய திருக்குளத்து நீரைத் தெளித்துக்கொண்டு, இரண்டு ஆலயங்களையும் வழிபட்டுப் பிரார்த்தித்தாலே... பித்ருக்களாகிய முன்னோரின் ஆசியுடன் குருவருளும் திருவருளும் கிடைக் கப் பெற்று, நம் சந்ததி சிறக்கும் என்பது ஆசார்யர்களின் வாக்கு! அதன்படி, மாணவர்கள் இங்கு வந்து வழிபட்டாலே சர்வ நலனும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள். ஆசார்ய புருஷர்களும் அந்தணர் களும் அவர்களின் மகன்களுக்கு இங்கு வந்து உபநயனம் செய்து வைத்தால்... இன்னும் பொலிவோடும் வலுவோடும் திகழ்வார்கள் என்பது உறுதி!

🐲 எத்தனையோ மகரிஷிகளின் பாதம் பட்ட பூமி இது. மன்னர்கள் பலரும் திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் அளித்து ஆராதித்த ஸ்தலம் இது! 'தில்லை மூவாயிரம் திருப்பிடவூர் மூவாயிரத்து ஒன்று’ என்கிற சொலவடைக்கு ஏற்ப, இங்கே ஒருகாலத்தில் வேத கோஷங்கள் எப்போதும் ஓங்கி ஒலித்து,  அதிர்வலைகளைப் பரப்பிய இடம்... என்று பெருமைகள் பல கொண்ட திருப்பட்டூர்...

🔥 குரு பரிகார தலம்:🔥

🌤 அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார்.

🌤 குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது.

🌤 மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.

🅱 குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு: 🅱

🦋 சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர்.

🦋 அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும்.

🦋 இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.

🅱 ஞானஉலா அரங்கேற்றம்: 🅱

🎭 சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார்.

🎭 இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் "ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார்' என்ற பெயரில் அருளுகிறார்.

🎭 ஆடி சுவாதியில் "திருக்கயிலை ஞானஉலா' விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.

🌷 ஏழாம் தேதி பிறந்தவரா? 🌷

🌺 ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது.

🌺 சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம்.

🌺 பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும்.

🌺 ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர்.

🌺 இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர்.

🌺 ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌿 திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம்.

🌿 மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.

🅱 நேர்த்திக்கடன்:🅱
 
☀ சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 
🅱 தலபெருமை:🅱

🌷 கோவில் அமைப்பு: 🌷

* இவ்வாலயம் ஐந்து (5) நிலைகள் கொண்ட இராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது.

* நாம் உள்ளே நுழைந்ததும் கொடிமரம். அதனைத் தொடர்ந்து நந்தியெம்பெருமான் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சியளிக்கிறார். இம் மண்டபத்திற்கு பெயர் வேத மண்டபம்.

* அதனைத் தொடர்ந்து உள் பிரகாரம் சென்றால் நாத மண்டபம். இம்மண்டபத்தில் சப்தஸ்வரத்தூண்கள் அமையப்பெற்றுள்ளது. இம்மண்டபத்தினைக் கடந்து உள்ளே சென்றால் துவார பாலகர்களை வணங்கி ஈசன் கருணைக் கடலான பிரம்மனுக்கு அருள் புரிந்த பிரம்மபுரீஸ்வரரைக் காணலாம்.

* ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்க்கு கிழக்கு நோக்கிய சன்னதி. சுயம்பு மூர்த்தி. அழகிய தோற்றம். மேலே தாரா பாத்திரம். நாகாபரணத்துடன் கூடிய சதுர ஆவுடையார் கூடிய திருமேனி. ஈசன் ஸ்ரீ பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி அருள்புரிந்ததால் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆனார்.

 * நாத மண்டபத்தின் தென்புறம் சென்றால் மிகப் பெரிய கிழக்கு நோக்கிய ஸ்ரீ பிரம்மா சன்னதி. பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து. ஆனால் பிரம்மன் இல்லாத சிவ ஆலயம் இல்லை என்பது தான் உண்மை. எல்லா சிவ ஆலயத் திலும், ஈசனின் இடபுறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்டமூர்த்தியாக இருந்து வருகிறார்.

* ஆனால் திருபட்டூரில் மட்டுமே மிகப் பிரமாண்ட மான அதுவும் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தியுடன் தனி சன்னதியுடன் காட்சியளிக்கிறார்.

* பதஞ்சலி முனிவர் பிரம்மன் சன்னதிக்கு தென்புறம் உள்ளார். இவர் யோக சூத்திரம் அருளிய பதஞ்சலியாவார். இவர் நித்ய கைங்கர்யாள் என்று அழைக்கப்படுபவர். தினமும் இவர் இத்தலத்து ஈசனை வணங்கி இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு யோகமாகிய ஞானத்தை வழங்கி மன நிம்மதி அளித்து அருள்புரிந்து வருகிறார்.

* சப்த மாதாக்கள் பதஞ்சலி முனிவர் சன்னதியின் அருகில் உள்ளது. தட்சிணா மூர்த்தி பிரம்மன் சன்னதிக்கு அருகில் வடபுறம் உள்ளது.

* மகாவிஷ்ணு ஈசனின் நேர் மேற்கில் கோஷ்டத்தில் உள்ளது.

* முருகன் வள்ளி, தெய்வானை ஸ்ரீ பிரம்மன் சன்னதியின் பின்புறம் சற்று தள்ளி உள்ளது. முருகன் வள்ளி தெய்வானையுடன் கூடிய தனித்துவமான சன்னதி. முருகன் இடபாக மயிலில் வாகன மூர்த்தியாக உள்ளார்.

* சுதை சிற்பத்துடன் ஒரு கஜலட்சுமியும், கல்சிலா ரூபமாக ஒன்றும் உள்ளது. விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு அருகில் உள்ளது. இந்த சன்னதி கொடிமரத்தின் வடபுறம் ஸ்ரீ பிரம்மசம்பத் கௌரி தனிக்கோவிலாக அமைந்துள்ளது. ஸ்ரீ பிரம்ம தேவன் வழிபட்ட அம்பிகை, பிரம்மனுடைய சம்பத்தாகிய தேஜசை அம்பிகை திரும்ப வழங்கியதால் பிரம்மசம்பத் கௌரி என்று வழங்கப்படுகிறது.

⚜ வித்தியாசமான அமைப்பு: ⚜

குருர் பிரஹ்மா;
குருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர;
குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ''

என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது.

🌸 கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.

🅱 முருகன் வணங்கிய சிவன்: 🅱

🦋 முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் "திருப்படையூர்' எனப்பட்ட தலம் "திருப்பட்டூர்' என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்.

🅱 எல்லாமே மஞ்சள் நிறம்: 🅱

🔥 பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர்.

🔥 பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.

🌷 பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார்.

🍁 குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம்.

🍁 யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம்.

🔥 அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது.

🎭 உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.

🅱 நரசிம்மர் மண்டபம்: 🅱

🐲 நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன.

🦋 நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.

🌺 பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது.

🅱 எலும்பு நோய்க்கு பூஜை: 🅱

🍁 பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும்.

🎭 வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் "பதஞ்சலி பிடவூர்' எனக் கூறப்பட்டுள்ளது.

🐲 மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.

🅱 பதஞ்சலியின் ஜீவசமாதி: 🅱

🌷 ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார்.

🌸 வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார். அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில்.

🦋 பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது.

🦋 தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.

🦋 பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது.

🦋 ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.

🅱 தல வரலாறு:🅱

🌤  பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார்.

🌤 அதனால் ஈசனை மதிக்காமல் இருந்தார்.  ஈசன் பிரம்மனுடைய  அகங்காரத்தை அழித்து அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், "ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,'' எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார்.

🌤 படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.

🌤 பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்)  வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார்.

🌤 மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்தார்..

🌤 பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனின் படைப்பாற்றலையும், திரும்ப வழங்கி கூடுதலாக ஒரு வரம் வழங்கினார். பிரம்மனே உன்னுடைய வழிபாட்டில் மகிழ்ந்த யாம் எல்லோருடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் உன்னுடைய தலையெழுத்தை மாற்றியது போல் இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு மீண்டும் ஒரு முறை அவர்களுடைய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக என்று வரமளித்தார். “விதியிருப்பின் விதி கூட்டி அருள்க” என்றும் வரம் வழங்கினார்.

இந்த வரத்திற்கு இரு பொருள் உண்டு

1) ”விதியிருப்பின்” அதாவது இத்தலத்தில் வந்து யாருக்கெல்லாம் தலைவிதி மங்களகரமாக மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ அவர்களே உன்னை வந்து பார்த்து மாற்றிக் கொள்ள இயலும்.

2) “விதியிருப்பின் விதி கூட்டி அருள்க” யாருடைய தலையெழுத்தை யெல்லாம் விதி கூட்டி மங்களகரமாக அருள முடியுமோ அவர் களுக்கெல்லாம் அருள்க என்பதாகும்.

🌤 பிரம்மனுக்கு வரம் அளித்த இத்தலத்து இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார். பிரம்மனுக்கு தேஜஸை வழங்கியதால், அன்னை பிரம்ம சம்பத் கௌரி என அழைக்கபடலானாள்.

🅱 சிறப்பம்சம்:🅱
 
🎥 அதிசயத்தின் அடிப்படையில்:

🤹🏻‍♀ பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.

🤹🏼‍♂ சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது.

 26. இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சந்நிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

🤹🏼‍♂ 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்கிறார் இங்கு வரும் பக்தர் ஒருவர்.

🤹🏼‍♂ வெள்ளைத் தாமரை சார்த்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் நிச்சயம் சேரும்.

🤹🏼‍♂ ஆடி சுவாதி நட்சத்திர நாளில், திருப்பட்டூர் வந்து மூன்று கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அப்படி தரிசித்த பலனை, அடுத்தடுத்த நாளிலேயே உணர்வீர்கள்.

🅱 இருப்பிடம்:🅱

🚗 திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் செல்லும் பேருந்துகளில் சென்று 30 கி.மீ., தொலைவிலுள்ள சிறுகனூரில் இறங்கி, அங்கிருந்து மேற்கே பிரியும் சாலையில் 4 கி.மீ.,தூரம் சென்றால் திருப்பட்டூரை அடையலாம்.

🚗 சிறுகனூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு. 

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி - திருநெல்வேலி



மூலவர் : விஸ்வநாதர்
 
அம்மன்/தாயார் : உலகம்மன்

தல விருட்சம் : செண்பகமரம்

தீர்த்தம் : சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான  தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.

பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்

 ஊர் : தென்காசி

🅱 திருவிழாக்கள்:🅱
 
🍁 மாசிமகப் பெருந்திருவிழா 10 நாள் சிறப்பாக கொண்டாடப்படும்,

🍁 புரட்டாசி நவராத்திரி கொலு திருவிழாவும்,

🍁 ஐப்பசி திருக்கல்யாணமும்,

🍁 ஆவணி மூல தெப்பத்திருவிழாவும்,

🍁 தை அமாவாசை பத்திர தீப திருவிழாவும் முக்கியமானதாகும்.
 
🅱 தல சிறப்பு:🅱
 
 👉🏽 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

👉🏽 இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

👉🏽 மூன்று முக்கிய காரணங் களுக்காக இத்தலம் கீர்த்தி பெற்றது.

👉🏽 பூர்வஜன்ம பாவங்கள் நீங்குதல், தோஷ நிவர்த்தி, புத்திர பாக்கியம் பெறுதல் ஆகியவைகள் ஆகும்.

👉🏽 இக்கோவில் திரிகூட மலையின் அடிவாரத்தில் உள்ளது. (மூன்று மலைகள் சேர்ந்து இருப்பதால் திரிகூடம் என்று அழைக்கப்படுகிறது)

👉🏽 இந்திரன், மைநாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி, கண்ம முனிவர் போன்றோர் வழிபட்ட தலம்.

👉🏽 நந்தியின் அவதார தலம் எனவும் போற்றப்படுகிறது.

👉🏽 சிலாகித முனிவர் குழந்தை வரம் வேண்டிய பயன் பெற்றதாக தலவரலாறு குறிப்பிடுகிறது.

👉🏽  திருக்கோயிலிலைக் கட்டிய பராக்கிரம பாண்டிய மன்னனின் உற்சவர் சிலை சுவாமி சந்நிதியில் உள்ளது.

👉🏽 திருக்கோயில் விழாக்களுக்கு தலைவராக அம்மன்னன் மதிக்கப்பட்டு மன்னனுக்கு முதல் மரியாதை செய்யப்படுவது இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

👉🏽 கோயில் மூலவரான காசி விஸ்வநாதரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்தே பார்க்கலாம்.அந்த அளவிற்கு சுவாமி சன்னதி அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

👉🏽 மற்ற தலங்களில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் துர்க்கை இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
 
🅱 நடைதிறப்பு :🅱
 
🗝 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.🗝

🅱 பொது தகவல்:🅱

🌺 மைநாகம் , கண்ம முனிவர் ஆகியோர் இங்குள்ள காசி விஸ்வநாதரை வழிபட்டுள்ளார்கள்.

🌺 மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர்ஆலய கோபுரம்.

🌺 இக்கோயில் ராஜகோபுர வாசலில் அதிசயிக்கத் தக்க ஒரு நிகழ்வு அன்றாடம் நிகழ்கிறது.

🌺 பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக இக்கோபுர வாசல் வரும் தென்றல், பக்தர்களை மேற்கிலிருந்து கிழக்காக வீசி வாரி அணைக்கிறது.

🌺 அதே நேரத்தில் கோயிலின் உள்ளே செல்லும்போது எந்த வித செயற்கை தடுப்பும் இல்லாமலேயே கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீசி நம்மை திருக்கோயிலின் உள்ளே தள்ளுகிறது.

🌺 ஒரே நேர்க்கோட்டில் எந்த வித தடுப்பும் இல்லாமல் இரு பக்கங்களில் இருந்தும் காற்று வீசும் வண்ணம் இக்கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

🌺 எவ்வாறென்றால் இத்திருக்கோயிலின் வேறு எந்த பகுதியிலும் காற்று வீசாத நேரத்தில் கூட இந்த கோபுரத்தின் உள்ளே, கோபுர வாசலிலே காற்றின் ஆளுமை கண்ணுக்கு மட்டுமல்ல நம் உணர்வுகளுக்கும் விருந்து.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌿 இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

🌿 இத்தலத்து இறைவனை பிராத்திதால் திருமணம் கைகூடும்,
புத்திரபாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

🌿 இத்தல இறைவனை வழிபட்டால் மன நிம்மதி உண்டாகும்.

🅱 நேர்த்திக்கடன்:🅱
 
☀ சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 
🅱 தலபெருமை:🅱

🌸 1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் தற்போது இக்கோயில் திகழ்கிறது.

🌸 இந்த கோபுரத்தின் ஒன்பது நிலைகளிலிருந்தும் தென்காசியின் இயற்கை அழகை பார்க்க அகலமான பாதை அமைக்கப்பட்டுள்ளது.

🌸 இந்தப்பாதையில் நடந்து சென்றால் வான் வெளியில் வலம் வருவது போல் இருக்கும்.

🌸 கோபுரத்தின் 9வது நிலையில் இருந்தபடியே கோபுரத்தை சுற்றி வரும் பால்கனி வசதி உள்ளது.

🅱 கலை சிற்பங்கள் : 🅱

🎭 இறைவன் சந்நிதியின் வாயிலருகில் உள்ள திருஓலக்க
மண்டபத்தில் தமிழ்நாட்டிலுள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை.

🎭 இங்குள்ள இரட்டைச்சிற்பங்களான வீரபத்திரர்கள் - தாண்டவ மூர்த்திகள். இரண்டு தமிழணங்குகளும், இணைச் சிற்பங்களான ரதி - மன்மதன் சிற்பங்களும், தனியழகு சிற்பங்களான திருமால் -காளிதேவி ஆகியவையும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.

🎭 மேற்கு பிரகாரத்தில் மூலை விநாயகர் வெகு அழகாய் அமர்ந்து அருள் தருகிறார்.

🎭 பஞ்சலிங்க அய்யனார், மஹாலஷ்மி, சந்தன மாரீஸ்வரர், நடராஜ பெருமான், சண்டீஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது.

🎭 அர்த்த மண்டபம், மணிமண்டபம், பஞ்ச பாண்டவர் மண்டபம், மஹா மண்டபம், இசை எழுப்பும் கல் தூண் மண்டபம் ஆகியவைகளும், பராக்கிரம பாண்டியன் சுவாமியை வணங்குவது போன்ற தத்ரூபமான சிலைகளும் காண்போரை வியக்க வைக்கும்.

🎭 மேற்கூறிய சிலைகள் யாவும் ஒற்றைக் கல்லினாலானவை.
நுட்பமான வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. இவை பாண்டியர்
காலச் சிற்பிகளின் உன்னத படைப்புகளாகும். அளவிலும், அழகிலும் இச்சிற்பங்களுக்கு இணையாகத் தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை எனலாம்.

🎭 பால முருகன் சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் காணப்படும்
தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், கர்ணன்
ஆகியோரின் சிற்ப உருவங்கள் ஒற்றைக் கல்லில் வடிக்கப்பட்டு
அழகுடன் காட்சியளிக்கின்றன.

🎭 காசி விஸ்வநாதரின் சந்நிதி முன்னுள்ள மண்டபத்திலும்,
பால முருகன் சந்நிதி முன்னுள்ள மண்டபத்திலும்
இசைத் தூண்கள் உள்ளன. இக்கோவிலிலுள்ள கல்வெட்டுகள்
பல, இக்கோவிலின் தோற்றம், வளர்ச்சி, பிற செய்திகள்
ஆகியவற்றைத் தெரிவிக்கின்றன.

🎭 தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலின் சிற்பங்கள்
பிற்காலப் பாண்டிய மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள
அரிய கலைச் செல்வங்களாகும்.

🅱 ஓலக்க மண்டபத்தில் கற்றூணில் அற்புதச்சிலைகள்: 🅱

⚜ பரக்கிரம பாண்டிய மன்னர் இக்கோயிலை கட்டும்போது 8 விநாயகர் கோயில்களையும், 8 திருமடங்களையும் அமைத்தார்.

⚜ இந்த கோபுர வாசல் வழியில் எப்பொழுதும் காற்று வீசி கொண்டே இருக்கும்.

🅱 விநாயகர் கோயில்கள்: 🅱

🐲 கன்னிசுதன் (கன்னிதிசை)

🐲 சுந்தரகயத்தன் (மேல்திசை)

🐲 ஷென்பகச்சேய் (வடமேற்கு)

🐲 வெயிலிகந்த பிள்ளை (கன்னிமார்தெரு)

🐲 அம்பலச்சேய் பொன்னம்பல விநாயகர் (கன்னிமார்தெரு வடகிழக்கு)

🐲 ஒப்பனைச்சுதன் (கிழக்கு)

🐲 அபிடேகச்சேய் (தென்கிழக்கு)

🐲 மெய்கண்டப் பிள்ளை (தெற்கு சம்பாத்தெரு)

🅱 திருமடங்கள் : 🅱

🔥 அரசருக்கு முடிசூட்டும் சன்னதி மடம் (சிவந்தபாதவூருடைய ஆதீனம் சிவாகமங்கள் ஓத)

🔥 சாமிதேவநயினார் (அகோர தேவர் ஆதீனம் சிவதீக்கை பெற்றுக்கொள்ள)

🔥 துருவாசராதீனம் (வேம்பத்தூர் மடம் கல்வி கற்றுக் கொள்ள)

🔥 பெளராணிக (ஆனந்தக்கூத்தர் ஆதீனம் புராணங்கள் கேட்க)

🔥 தத்துவ (பிரகாசர் ஆதீனம் தத்துவ விசாரணை செய்ய)

🔥 மெய்கண்டார் ஆதீனம் (சைவசித்தாந்த நூல்களை ஓதி உபதேசம் பெற)

🔥 உமையொருபகக் குரு ஆதீனம் (உபதேசம் பெற)

🔥 இடி வலஞ்சூழ் பரஞ்சோதித்தேவர் ஆதீனம் (யோகம் பயில)

🅱 பொங்கி எழுந்த கங்கை! 🅱

🦋 ஆலயம் கட்டி முடித்த பின், கங்கை நீர் கொண்டு தினமும் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய ஆசைப்பட்டான் பராக்கிரமன். இவனது எண்ணத்தை அறிந்துகொண்ட இறைவன், இந்தக் கோயிலிலேயே ஓரிடத்தில் கங்கையைப் பொங்கச் செய்தார். காசி விஸ்வநாதரைத் தொடர்ந்து கங்கையும் தென்காசிக்கு வந்தது கண்டு சந்தோஷப்பட்ட பராக்கிரமன், கங்கை பொங்கிய இடத்தில் ஒரு கிணறு கட்டினான்.

🦋 பராக்கிரமன் அமைத்த இந்தக் கிணறு, ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் காணப்படுகிறது. ‘காசி கங்கைக் கிணறு’ என்றே அழைக்கிறார்கள். தினமும் இறைவனுக்கு இந்த நீர் கொண்டுதான் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.

🅱 செண்பகப் பொழில் தென்காசி ஆன கதை: 🅱

👶🏽 முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி,பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார்.

👶🏽 அதற்கான காரணம்  தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்து விடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டது தான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.

👶🏽 கோபுர தரிசனம் கோடி பாப விமோசனம் என்பார்கள். அப்படிப்பட்ட கோபுரங்களுக்காகவே தனிச் சிறப்பு பெற்ற தமிழகத் தலங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று உலகம்மை உடன் காசிவிஸ்வநாதர் உறையும் தென்காசி திருத்தலம், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலின் ஒன்பது நிலை ராஜகோபுரத்திற்கு எதிரே உள்ள அகன்ற வெளித்திடல் கோபுரத்தின் கம்பீரத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.

👶🏽 கோயிலிற்கும் கோபுரத்திற்கும் இடையில் பரந்த வெளிப் பரப்பு பொதிகை மலையிலிருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று கோயிலிற்குள் நுழையும் பக்தர்களை வரவேற்பது போல், மேற்கில் இருந்து கிழக்காக வீசுகிறது. கோயிலை நோக்கிச் செல்லும்போது, காற்று இல்லாமலேயே காற்று சுழன்று வீசுவது போல் ஓர் அனுபவம் ஏற்படுகிறது.

👶🏽 இன்று 178 அடியில் நெடிய உயரத்தோடு பஞ்ச வண்ணங்கள் தீட்டப்பட்டு, 800 சிலைகள் வடிக்கப்பட்டு பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் இந்தக் கோபுரம், ஒரு காலத்தில் சிதைந்த நிலையில் இருந்தது என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

👶🏽 1457 இல் பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கோபுரம் 1518 இல் அழகன் குலசேகரனால் கட்டி முடிக்கப்பெற்றது.

👶🏽 கி.பி. 1792 க்குப் பின்னரும், கி.பி. 1824 க்கு முன்னரும் உள்ள இடைப்பட்ட காலத்தில் பாளையக்காரர்களுக்குள் ஏற்பட்ட பகையாலும், வெள்ளையர்களின் சூழ்ச்சியாலும், உட்பகையாலும் ஆவணங்களை அழிப்பதற்காக வைக்கப்பெற்ற நெருப்பு, கோபுரத்தையும் அழித்துவிட்டது.

👶🏽 கோபுரத்தை இடியும், மின்னலும் தாக்கியதால் அழிந்தது என்பது தவறான செய்தியாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு கோபுரத்தைக் கட்ட பலர் முன்வந்தர்கள். இப்பணிகள் பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு, புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டு 1990 ஆம் ஆண்டு குடமுழுக்கு நிகழ்ந்தது.

🅱 தல வரலாறு:🅱

🍄 சுமார் 700 வருடங்களுக்கு முன்பு தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் சிவ பெருமானை வழிபட காசிக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தான்.

🍄 மன்னனின் குலதெய்வமான முருகப்பெருமான் மன்னனுக்கு சக்தி வாய்ந்த அபூர்வ குளிகை ஒன்றைக் கொடுத்து வான் மார்க்கமாக காசி சென்று வழிபடச் செய்தார். இவ்வாறு காசிக்குச் சென்று தினமும் காசி விஸ்வநாதரை வழிபட இயலாததை எண்ணி, மன்னன் மனம் வருந்தினான்.

🍄 ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய இறைவன், வடக்கே உள்ள காசிக்கு வருவதற்கு பதிலாக இவ்விடத்திலேயே தட்சிண(தென்) காசியில் கோவில் அமைத்து வழிபடும்படி கூறினார்.

🍄 நான் இருக்குமிடத்தை நீ காண உனக்கு எறும்புகள் சாரைசாரையாக ஊர்ந்து சென்று வழிகாட்டும் என்று கூறி மறைந்தார். மறுநாள் எறும்பு சாரைசாரையாக செல்லுமிடத்தை மன்னன் அடையாளம் கண்டு அங்கு சிவலிங்கமும், நந்தியும் இருப்பதைக் கண்டு வணங்கினான்.

🍄 அது சிற்றாற்றங்கரையில் செண்பக வனத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த இடத்தில் புற்றில் சுயம்புலிங்கம் கண்டு கோவில் கட்டி, கோபுரமும் கட்டி, தென்காசி நகரையும் நிர்மாணித்து தென்காசி கண்ட பாண்டியன் ஆனான்.

🅱 சிறப்பம்சம்:🅱
 
🎥 அதிசயத்தின் அடிப்படையில்:

🤹🏻‍♀ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🤹🏼‍♂ இவ்மாவட்டத்தில் உள்ள சிவபக்தர்கள், தங்கள் குடும்பங்களின் நடக்கும் அனைத்து சுப காரியங் களுக்கும் இங்கு வந்து காசி விஸ்வநாதரை வணங்கி, ஆசி பெற்று செல்கின்றனர். அதனால் வாழ்க்கை வளம் பெறும், தொழில் வளம் உயரும், ஆரோக்கியம் பெருகும், வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு உகந்த வேலை கிட்டும், திருமணம் கை கூடும், புத்திரபாக்கியம் தருவார், இல்லற வாழ்க்கையில் நிம்மதி வந்து சேரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

🤹🏼‍♂ காசியில் குடி கொண்டுள்ள காசி விஸ்வநாதர், தானே விருப்பப்பட்டு இங்கே அமர்ந்துள்ளார் என்பது நம்பிக்கை. எனவே, அங்கே போய் வணங்க முடியாதவர்கள், தென்காசி வந்து வணங்கினாலே காசிக்குச் சென்ற பலன் முழு அளவில் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

🤹🏼‍♂ வடகாசியில் இறந்தால்தான் முக்தி; ஆனால் தென்காசியைக் கண்டாலே முக்திதான்.

அருள்மிகு. வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், திட்டை, பசுபதிகோயில் – தஞ்சை



மூலவர் : வசிஷ்டேஸ்வரர்
 
அம்மன்/தாயார் : உலகநாயகியம்மை, மங்களாம்பிகை

தல விருட்சம் : முல்லை, வெண்செண்பகம், செவ்வந்தி

தீர்த்தம் : சக்கர தீர்த்தம், சூலதீர்த்தம்
 
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருத்தென்குடித்திட்டை, திட்டை

ஊர் : தென்குடித்திட்டை
 
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
 
🅱 தேவாரப்பதிகம்:🅱

கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன் உருவினால் அன்றியே உருவுசெய் தானிடம் பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும் திருவினார் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே. - திருஞானசம்பந்தர்

🌼 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 15வது தலம்.

🅱 திருவிழாக்கள்:🅱
 
🍁 மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

 🍁 வருடந்தோறும் குருபெயர்ச்சி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
🅱 தல சிறப்பு:🅱
 
🦋 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🦋 சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் லிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்பி பூஜை செய்கிறார்.

🦋 உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார்.

🦋 மூலஸ்தான வசிஷ்டேஸ்வரர் திருமேனியில் விமானத்தில் இருந்து 24 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் சொட்டு சொட்டாக இதுவரை விழுந்து கொண்டுள்ளது அதிசயமாகும்.

🦋 சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில்  நின்றகோலத்தில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்..

🦋 இத்தலத்தில் உள்ள இறைவன் தானே தோன்றியதால் ஸ்ரீவயம்பூதேஸ்வரர் என்றும், வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும், பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

🦋 அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், ரதபுரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர் என்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு.

🦋 கதிரவன் அதிபதியாக அமையவும், மேருமலையைச் சுற்றி வலம் வந்து உலகை ஒளி வீசிக் காக்கும்படியான வரத்தையும், ஆதிசேடன் பூமியை பூவாக எளிதில் தாங்கும் வல்லமையைப் பெற்ற தலம்.

🦋 வசிட்டர் பிரம்ம ஞானிகளுள் தலைசிறந்தவர் ஆனதும், காமதேனு புத்ரிகளாகிய நந்தினி, கமிலினி,பேறு பெற்றதும், பைரவர் கேத்திர தீர்த்த பாலகர் ஆனதும் இத்தலத்தில் தான்.

🦋 யம தர்மன் சாப விமோஷனம் பெற்ற தலம்.

🦋 யமன் தென்திசைக்கு தலைவன் ஆனதும் இத்தலம் தான்.

🦋 யம தர்மன் சாப விமோஷனம் பெற்ற தலம் இது.

🦋 சனீஸ்வரன் நவ கோள்களில் ஒன்றாக விளங்கும்  அருள் பெற்றது இத் தல சிவனை வேண்டியே.

🦋 பரசுராமர், கார்த்த வீர்யார்ச்சுனன், முருகன், பைரவர் போன்றோர் வழிபட்ட திருக்கோவில் இது.

🦋  திருமால் மதுகடைபர்களை வெல்லும் ஆற்றல் பெற்றதும், பிரமன் உலகைப் படைக்கும் வல்லமையை அடைந்ததும் இத்தல சிவனின் அருளால் தான்.

🦋 அகவினி தேவர்கள் இந்திரன், வசிட்டர், கௌதமர் முதலானவர்களும் வழிபட்டிருக்கின்றனர்.

🦋 நான்கு வேதங்களும் தனித்தனியே வந்து முறையிட்டு வணங்கித்தொழுது தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்குக் காரணமாக நின்ற ஊர் தென்குடித் திட்டை.

🦋 இதை முன்னை நான்மறையவை முறை முறை குறையொடும் தன்னைதான் தொழுதெழ நின்றவன் என்ற திருஞான சம்பந்தர் வாக்கில் காணமுடிகிறது.

🦋 நவகிரகங்கள் ஒன்றுகூடி சிவனை வணங்கிய தலம்.

🦋 சனி பகவானுக்கு பரிகாரம் செய்யவும் உகந்த தலம்.

🦋  "ஒம் கம் நம்ஹ பிதாமகாயஞ" என்ற நவா க்ஷர மந்திரத்தை அகத்திய முனிவர் உபதேசித்த புண்ணிய தலம்.

🦋 ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல ஸ்லங்கள் மீண்டும் பிரளயத்தில் மூழ்கி பின் தோன்றின. ஆனால் இத்தலம் மட்டும் இன்றளவும் அழியாமல் தொடர்ந்து நிலைபெற்று வருகிறது.ஊழிக்காலத்திலும் அழியாதபெருமை உடையது இத்தலம்.

🦋 இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

🦋 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 78 வது தேவாரத்தலம் ஆகும்.

🦋 நித்யாபிஷேகம் செய்வது வேறெங்கும் காண இயலாத சிறப்பு. சந்திரனின் வழிபாடாக இந்த அபிஷேகம் நிகழ்கிறது.
 
🅱 திறக்கும் நேரம்:🅱
 
🗝 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.🗝

🅱 பொது தகவல்:🅱

🌺 வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும் அருளியவர்.

🌺 கால பைரவரின், பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர்.

🌺 குரு பகவானுக்குத் தேவகுரு என்ற பதவியை அருளியவர்.

🌺 நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்களின் நடுவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் அமர்ந்து பஞ்ச லிங்கேஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.

🌺 தவிர, தனக்கு இணையாக உயர்ந்த பீடத்தில் அன்னை சுகந்த குந்தளாம்பிகையை இருத்தியுள்ளார்.

🌺 பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை எனப் போற்றப்படுகிறாள்.

🌺 மேலும், விநாயகர், முருகர், ராஜகுரு, பைரவர் ஆகியோரும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

🌺 குருபகவானை வசிஷ்ட ரிஷி ராஜகுருவாக வழிபட்டதால் இத்தலம் குரு பகவான் தலமாக உள்ளது. இத்தலத்தில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடக்கிறது.

🌺 நவக்கிரகங்களில் சுபகாரகர் குருபகவான், தான் இருக்கும் இடம் மட்டுமின்றி; பார்க்கும் இடத்திலுள்ள மற்ற கிரகங்களின் தோஷத்தையும் போக்கும் வல்லமை பெற்றவர்.

🌺 தஞ்சை பெருவுடையார் கோயிலை அடிப்படையாகக் கொண்ட சப்த ஸ்தானத் தலங்களுள் ஒன்று திருத்தென்குடித்திட்டை எனப்படும் திட்டை திருத்தலம்.

🌺 இங்கு, வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னிதிகளுக்கு இடையே குரு பகவான் ராஜகுருவாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌿  இங்கு வேண்டிக்கொள்ள குரு தோஷம் நீங்கும். கல்வி, செல்வங்களால் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.

🅱 நேர்த்திக்கடன்:🅱
 
☀ குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடலாம்.
 
🅱 தலபெருமை:🅱

🔥 முருகன் சிறப்பு:🔥

🍄 திட்டை என்பது ஞானமேடு. மனித உடல் மூலாதாரம், சுவாதிதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இத்தல முருகன் தன்னை வழிபடுபவர்களுக்கு முதலில் இந்த ஆறு ஆதார ஞானம் அருளி அதற்கு மேல் ஞானமாகி மெய்யுணர்வையும் தந்து பேரானந்த பெருவாழ்வில் நிலை பெற வைப்பார். எனவே இத்தலத்தில் முருகன் மூல மூர்த்தியாக விளங்கி உடலால் தென்குடி ஆகவும், உயிரால் ஞானமேடு எனப்படும் திட்டையாகவும் இருந்து அருள் பாலிக்கிறார்.

🔥 சூரிய பூஜை:🔥

🐲 சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் லிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்பி பூஜை செய்கிறார். இதேபோல் உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார். இவ்விரு காலங்களில் சுவாமிக்கு சூரிய பூஜை நடப்பது சிறப்பாகும்.

🅱 இறைவன் மீது சொட்டும் நீர்: 🅱

🌸 நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம்.

🌸 திட்டையில் லிங்க வடிவமாக எழுந்தருளியிருக்கும் மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில், சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது.

👉🏽 அதற்கும் ஒரு வரலாறு உண்டு.

🌸 தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்து கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை, வணங்கி தவம் இருந்தார்.

🌸 கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார்.

🌸 திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவபெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன். இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார். 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம். உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.

🅱 குரு பகவான் : 🅱

🌽 ஆங்கிரசர் முனிவரின் ஏழாவது குழந்தை வியாழன். சகல கலைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தேவர்களுக்கு குருவானார். குருவின் வழிகாட்டலில் தேவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஒருநாள் குரு இந்திரனை பார்க்கச் சென்றார். ஊர்வசியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன், குருவை அலட்சியம் செய்தான்.

🌽 குருவுக்கு ஆத்திரம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட அவர் ஒரு மறைவிடத்தில் வாழத் தொடங்கினார். சரியான வழிகாட்டல் இல்லாததால் தேவலோகமே ஸ்தம்பித்தது.

🌽 அரக்கர்கள் தேவர்களை கொடுமைப் படுத்தினார்கள். தவறை உணர்ந்த இந்திரன், எங்கெங்கெல்லாம் சிவத்தலங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று குருவை தேடினார். அப்படித் தேடிவரும் வழியில்தான் திட்டைக்கு வந்தார்.

🍁 வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மனமுருக மன்னிப்பு கேட்டு வேண்டிக்கொண்டார். இனியும் அவரை சோதிக்க விரும்பாத குரு, அவருக்கு காட்சி தந்தார்.

🍁 இந்த சிவாலயத்திலேயே தனி சந்நதியும் கொண்டார்.

🅱 குரு ஸ்தலம்: 🅱

🍇 நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

🍇 இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங்களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு.

🍇 நவக்கிரகங்களில் சூரியன் ராஜா. சந்திரன் ராணி. செவ்வாய் கிரகம் சேனாதிபதி. புதன் இளவரசர். குரு பகவான் ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

🍇 இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

🅱 மங்களம் தரும் மங்களாம்பிகை :🅱

🥑 மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை லோகநாயகி என்று அழைக்கின்றனர். சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும், மங்களேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்.

🥑 கும்பகோணத்தில் சோமநாதன் என்பவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவரது வீட்டுக்கு வந்த ஜோதிடர் ஒருவர், ‘உங்கள் மகள் மங்களா 16-வது வயதில் விதவையாகி விடுவாள்’ எனக் கூறினார். அதைக்கேட்டு சோமநாதன் வருந்தினார்.

🥑 சிறிது காலத்தில் தஞ்சைக்கு அருகே உள்ள திட்டையில் உள்ள ஒருவருக்கும், மங்களாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வந்த நாள் முதல் மங்களா, தனது கணவன் நீண்டநாட்கள் வாழ வேண்டும் என திட்டையில் உள்ள லோகநாயகி அம்மனை வணங்கி வந்தாள். பவுர்ணமி தினத்தன்று எமன் மங்களாவின், கணவனின் உயிரை பறிக்க நெருங்கினான்.

🥑 இதனை அறிந்து அலறித் துடித்த மங்களா, லோகநாயகி அம்மனை சரணடைந்து, ‘எமனிடம் இருந்து என் கணவனின் உயிரை காப்பாற்றி, எனக்கு மாங்கல்ய பிச்சை கொடு’ என கண்ணீர் மல்க வேண்டினாள்.

🥑 அவளது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய லோகநாயகி, மங்களாவின் கையில் விபூதியை கொடுத்து ‘இதை எமன் மீது இடு. உன் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான். நீயும் நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாயாக’ என ஆசி கூறி மறைந்தார்.

🥑 மங்களாவும், இறைவியின் ஆணைப்படியே செய்தாள். எமன் மறைந்தான். பின்னர் மங்களா நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள். மாங்கல்ய பிச்சை கொடுத்ததால் இத்தலத்தில் அன்னை மங்களாம்பிகா, மங்களேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.

🥑 இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற  இறைவி, இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அமர்ந்துள்ளார். சிவன் இல்லையேல் சக்தியில்லை. சக்தியில்லையேல் சிவன் இல்லை. ஆண், பெண் சமத்துவத்திற்கு அற்புத உதாரணமாக அம்மன் இத்தலத்தில் கோவில் கொண்டுள்ளார்.

🥑 அம்மன் சன்னிதிக்கு எதிரே விமானத்தில் மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிகளுக்குரிய சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தோஷம் நீங்க தங்கள் ராசிக்கு கீழே நின்று அம்மனை பிரார்த்தனை செய்து கொண்டால், தோஷங்கள் நீங்கி நலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

🅱 மகாவிஷ்ணு உருவாக்கிய தீர்த்தம் :🅱

🔥 இந்த தலத்தில் பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

🔥 பசு தீர்த்தத்தில் ஒரு துளி நீரானது, நம்முடைய சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது. சிவ ஜோதியுடன் ஒன்ற வைக்கும் சக்தி பெற்றது.

👶🏽 இன்னொரு தீர்த்தம் பற்றி இக்கோயில் தல வரலாறு கூறுகிறது.

🔥 முன் காலத்தில் தண்டகவனத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. கதிரவனின் கடும் கிரகணங்களால் குளம், குட்டைகள் வற்றின. மழை பொய்த்தது. தெய்வாதீனமாக திட்டை தலத்தை அடைந்த பசு குதிரை, ஆடு முதலிய மிருகங்கள் மனம் உருகி வசிஷ்டேஸே்வரரைப் பூஜித்தன.

🔥 அவைகளில் கருணை  கொண்ட சிவபெருமான் தன் சூலத்தால் பூமியைத்தோண்டி குளம் ஒன்றை உருவாக்கினார். தன் தலையில்
இருந்த கங்கை நீரால் குளத்தை நிரப்பினார். சூலத்தால் உருவாக்கப்பட்டால் அக்குளம் சூலதீர்த்தம் என அழைக்கப்பட்டது.

🔥 பசுக்களின் வேண்டுதலுக்கு இணங்க பரமேஷ்வரன் தீர்த்தம் உருவாக்கியதால் பசுபதீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார். இவ்வாறு மூர்த்தி தலம், தீர்த்தம் மூன்றாலும் பெருமை உடையது தென்குடித்திட்டை.

🔥 சூல தீர்த்தமானது சிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்து சிவனின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ள செய்யும் வல்லமை கொண்டது என்று புராணங்கள் கூறுகின்றன.

🔥மகாவிஷ்ணு ஒரு சமயம் யோக நித்திரையில் இருக்கும் போது, மது, கைடவர் என்ற இரு அரக்கர்கள் தோன்றி தேவர்களை துன்புறுத்தினர். நித்திரை அகன்று எழுந்த மகாவிஷ்ணு, அசுரர்களை எதிர்த்து போர் புரிந்தார். அப்போது விஷ்ணு தன் பலம் குறைவதை உணர்ந்தார். தன் பலத்தை புதுப்பித்துக்கொள்ள திட்டையில் தன் சக்ராயுதத்தால் ஒரு குளம் உண்டாக்கி, அதில் நீராடி இறைவனை வழிபட்டார். அதனால் பலம் ஏற்பட்டு அரக்கர்களை அழித்தார். மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்ட குளம் ‘சக்கர தீர்த்தக்குளம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

🅱 கோவில் அமைப்பு:🅱

🐲 ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. அழகிய கருங்கல் திருப்பணியுடன் ஒரு கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியாக சில படிகள் ஏறி உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம்.

🐲 உள்ளே நுழைந்தவுடன் காணப்படும் முன்மண்டபத்தில் ஒரு தூணில் வலப்பால் நால்வர் வடிவங்களும் மறுபுறத் தூணில் ரிஷபாரூடர் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. கொடிமரம் கருங்கல்லால் ஆனது.

🐲 உயரத்தில் பலிபீடம் நந்தி உள்ளது. மூலவர் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட நிலையில், அமபாள் சந்நிதிக்கு மேற்குப் பக்கத்தில் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய குரு பகவானின் தனி சந்நிதி அமைந்துள்ளது.

🐲 எல்லா சிவாலயங்களிலும் ஞான வடிவான தட்சிணாமூர்த்தியாக குரு கோயில் கொண்டிருப்பார். ஆனால் தென்குடித் திட்டையில் இவர் ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

🐲 சந்நிதிக்கு முன்னால் செப்பாலான நந்தி பலிபீடம் உள்ளன. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

🐲 அவரவர் ராசிக்குக் கீழே நின்று பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிட்டும் என்பது ஆன்றோர் நம்பிக்கை. இக்கோவில் விமானங்கள் அனைத்தும் கருங்கற்களால் ஆன அற்புதக் கலையம்சம் பொருந்தியதாய் உள்ளன..

🅱 சனி பகவான்:🅱

🍄 சனிபகவான் பிறந்ததில் இருந்து அவரது பார்வையில் தீட்சண்யம் இருந்தது. அவரது பார்வை ட்ட இடங்களில் பல விபரீதங்கள் நிகழ்ந்தன. விநாயகப்பெருமான் பிறந்தநாள் விழாவைக் காண சனி பகவான் கைலாயம் சென்றார். அவர் பார்வை பட்டதால் விநாயகருக்கு தலைபோகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பார்வதி தேவியார் சனீஸ்வரனைச் சபித்தார்.

🍄 சனி பகவான் திட்டைக்கு வந்து வேதமுறைப்படி இறைவனைப் பூசித்து ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து வந்தார். அவர் தவத்துக்கு மெச்சி இறைவன் அவரை கிரகநாதனாக அமர்த்தி அனுக்கிரகம் செய்தான்.

🍄 எனவே, சனிதோஷம் உள்ளவர்கள், அர்த்தாஷ்டம், அஷ்டமச்சனி மற்றும் ஏழரை நாட்டுச்சனியின் பிடியில் இருப்பவர்கள் திட்டைக்கு வந்து பசு தீர்த்ததில் நீராடி பசுபதீஸ்வரரைத் தரிசித்து இங்குள்ள நவக்கிரகத்தினை வலம் வந்து சனி பகவானை அர்ச்சனை செய்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

🅱 சூரியன்:🅱

🌺 சிவ பக்தனான சுமாலியைக் கொன்றதால் பாவம் வரும் என்று பயந்த சூரிய பகவான் திட்டைதலத்துக்கு வந்து இறைவனை நினைத்து கடுந்தவம் புரிந்தான்.

🌺 இறைவன் அவன் தவத்துக்கு இரங்கி சூரியனை கிரகநாதனாக அமர்த்தி காலச்சக்கரத்தை நடத்திச்செல்ல அனுமதி அளித்தான்.

🌺 சிம்மராசியில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் சூரிய தோஷம் உள்ளவர்கள். இங்கு வந்து வழிபட நலம் பெறுவார்கள்.

🅱 பஞ்சலிங்க ஸ்தலம்:🅱

🍁 கயிலாயம்,கேதாரம், காசி, ஸ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்பு ஸ்தலங்களின் வரிசை 22 வது ஸ்தலமாக விளங்குவது தென்குடித் திட்டை.

🌺 இத்திருக்கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியிலுள்ள வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக ஸ்தாபிக்கப் பட்டுள்ளார். எனவே பஞ்ச பூதங்களுக்கும் உகந்த ஸ்தலமாக உள்ளது.

🌺 திருக்காளத்தி திருஅண்ணாமலை, திருவானைக்கோயில், சிதம்பரம், காஞ்சிபுரம் போன்ற பஞ்சபூத ஸ்தலங்களும் ஒருங்கிணைந்த ஸ்தலமாக தென்குடித்திட்டை அமைந்துள்ளது.

🌺 நவகோள்களில் மூன்று கிரகங்கள் இத்தல வரலாற்றில் இணைத்துப் பேசப்படுகின்றன.

🌺 நவக்கிரகங்களின்  தலைவனான சூரியன் சிவபக்தரான சுமாலியைக் கொன்றதால், பாவம் வருமே என்று பயந்து இத்திட்டைக்கு வந்து வசிஷ்டேஸ்வரரைப் பூஜித்து கடுந்தவம் புரிந்தான். இறைவன் அவன் தவத்துக்கு இரங்கி நவக்கிரங்களின் அதிபதியாகவும் காலச்சரக்கரத்தை நடத்திச் செல்லவும் அருள் புரிந்தார்.

🅱 தல வரலாறு:🅱

🌤   அது ஒரு மகாப்பிரளய காலம். பிரளய முடிவில் ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தோன்ற வேண்டும். பூமியெங்கும் மழை வெள்ள மென கொட்டியது.  உயிரினங்கள் அழிந்தன. ஆனால், அவ்வளவு வெள்ளப் பெருக்கிலும், பூலோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது. காரணம், அங்கு  இறையருள் இருந்தது. அந்தத் தலமே தென்குடித்திட்டை என்ற திட்டை. பேரூழிக்காலத்திலும், பெரு வெள்ளத்திலும் மூழ்காத திட்டை தலம் .

👶🏽 பிரளய முடிவில் மீண்டும் உயிரினங்களைப் படைக்க உடையுடன் சேர்ந்து உமையொருபாகன் அண்டத்தைப் படைத்து, அதனைப் பரிபாலனம் செய்ய  மும்மூர்த்திகளையும் படைத்தனர். ஆனால் மாயைவயப்பட்டிருந்த மும்மூர்த்திகளும் பெருவெள்ளத்தால் மூடி பேரிருள் சூழ்ந்திருந்த இந்தப் பிரபஞ்சத்தைக்  கண்டு பயந்தனர். அலைந்து திரிந்து பெரு வெள்ளத்தின் நடுவில் பெருந்திரளாக இருந்த திட்டையை அடைந்தனர். மாயை நீங்க வேண்டி இறைவனைத்  தொழுதனர். இறைவன் அவர்கள் அச்சத்தைப் போக்க உடுக்கையை முழக்கினார். அதிலிருந்து தோன்றிய மந்திர ஒலிகள் மும்மூர்த்திகளையும் அமைதியடைச்  செய்தது. பேரொளியாக ஒரு ஓடத்தில் ஏறி வந்த இறைவன் அவர்களுக்கு காட்சி தந்தார். மும்மூர்த்திகளின் மாயை யை நீக்கி அவர்களுக்கு வேத வேதாந்த  சாஸ்திர அறிவையும், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்ய உரிய சக்தியையும், ஞானத்தையும் அருளினார்.

👶🏽 திட்டை என்பது திட்டு அல்லது மேடு ஆகும்.  "ஓம்' என்ற மந்திர ஓடத்தில் இறைவன், இறைவி இருவர் மட்டும் ஏறி வர, அது ஒரு திட்டில் வந்து நின்றது. அதுவே சீர்காழி என்னும் தோணிபுரம் ஆகும். ஆதி காலத்தில் இறைவன் விரும்பி இருந்த 28 தலங்களில் 26 தலங்கள் ஊழிக்காலத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. அவற்றுள் ஒன்று சீர்காழி.

👶🏽 மற்றொன்று தென்குடி திட்டை. சீர்காழியில் ஊழிக்காலத்தில் "ஓம்' என்ற மந்திர ஒலி எழுந்தது போலவே திட்டையில் "ஹம்' என்னும் மந்திர ஒலி வெளிப்பட்டதுடன் வேறு பல மந்திர ஒலிகளும் வெளிப்பட்டன. எனவே இத்தலம் ஞானமேடு எனவும் தென்குடி திட்டை எனவும், சீர்காழி வடகுடி திட்டை எனவும் வழங்கலாயிற்று.

👶🏽 இறைவன், இறைவியுடன் விரும்பி குடியிருக்கும் திட்டுகள் குடித்திட்டை எனப்படும். வசிஷ்டா முனிவர் ஆசிரமம் அமைத்து இத்தல ஈஸ்வரனை பூஜித்தமையால் இத்தல ஈஸ்வரன் வசிஷ்டேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அம்பாள் உலகநாயகியம்மை.

🅱 சிறப்பம்சம்:🅱
 
🎥 அதிசயத்தின் அடிப்படையில்:

🤹🏻‍♀ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🤹🏼‍♂ திருக்கயிலாயம், கேதாரம், காசி, ஸ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்புத் தலங்களின் வரிசையில் 22 வது சுயம்புத் தலமாக விளங்குவது தென்குடித்திட்டை

🤹🏼‍♂ சம்பந்தர் சிவபெருமானை விட அவர் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் இத்தலம் மேலானது என்று குறிப்பிடுகிறார்.

🤹🏼‍♂ மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்பையும் பெற்றுள்ளது திட்டை திருத்தலம்.

🤹🏼‍♂ சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

🤹🏼‍♂ ஞானக்கோயில் எனப்படும் இக்கோயிலின் அமைப்பே அலாதியான சோபையுடன் காணப்படுகிறது. எங்கும் கருங்கற் திருப்பணியாகவே இருக்கிறது.

🤹🏼‍♂ மூலவர் விமானம், அம்பிகை விமானம், என்றில்லாமல் விநாயகர், முருகன், நடராஜர், பைரவர், தேவகுரு என்று எல்லா பரிவார தெய்வங்குளுக்கும் கருங்கல் விமானம் அமைந்திருப்பது வேறு எங்கும் காண முடியாத, இங்கு மட்டுமே காணக்கூடிய சிறப்பு, இத்திருக்கோயிலில் சுதை வேலைபாடுகளே இல்லை, பொரும் பொருட்செலவில் முழுவதும் கருங்கற்களாலேயே அமைக்கப்பட்ட கோயில் இது, கட்டிடக்கலைக்கு முக்கிய எடுத்துக்காட்டு இக்கோயில்.

தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக் கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள் ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ் பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.

👉🏽 தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருத்தென்குடித்திட்டையைப் போற்றி ஞானசம்பந்தர் அருளிய இச் செந்தமிழ்ப்பாக்களைப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை என்று சம்பந்தர் பாடியுள்ளார்..


🅱 இருப்பிடம்:🅱

🚙 தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திட்டை என்னும் கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

🚙 தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்கிரகாரம் என்ற பகுதியில் இருந்து திட்டைக்கு சாலை பிரிந்து செல்கிறது. தஞ்சையில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு - திருவள்ளூர்



மூலவர்:  வேதபுரீஸ்வரர்

அம்மன்/தாயார்:  பாலாம்பிகை

தல விருட்சம்:  வெள்வேல மரம்

தீர்த்தம்: வேத தீர்த்தம்,பாலிநதி, வேலாயுத தீர்த்தம்

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: திருவேற்காடு

ஊர்: திருவேற்காடு

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
 
🅱 தேவாரப்பதிகம்:🅱

ஆழ் கடலெனக் கங்கை கரந்தவன் வீழ்சடையினன் வேற்காடு தாழ்வுடை மனத்தால் பணிந்து ஏத்திடப் பாழ்படும் அவர் பாவமே. - திருஞானசம்பந்தர்

🌼 தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 23வது தலம்.

🅱 திருவிழா:🅱
 
🍁  மகா சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்.
 
🅱 தல சிறப்பு:🅱
 
 🎭 இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

🎭 லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு.

🎭 இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம்.

🎭 இத்தல முருகனை அருணகிரி நாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்.

🎭 வேதபுரீஸ்வரர் சிவாயத்தைச் சுற்றிலும் எட்டு திசைகளிலும் எண் கயிலாயத் தலங்களாகப் புராண காலத்தின் பெருமைகளைக் கூறும்படி அமைந்திருக்கின்றன.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 256 வது தேவாரத்தலம் ஆகும்.
 
🅱 திறக்கும் நேரம்:🅱
 
🗝 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்..🗝

🅱 பொது தகவல்:🅱

🌺 இக்கோயில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம், 3 பிரகாரங்களோடு கூடியது.

🌺 இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கஜபிருஷ்டம் எனப்படும்.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌿 இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

🌱 இத்தலத்தில் அகத்திய முனிவர் வழிபட்டு சிவபெருமானின் திருமண திருக்கோலத்தைக் கண்டதால், இத்தலம் ஒரு திருமண தடை நீங்கும் தலமாக விளங்குகிறது.

🌱 மேலும் இத்தலம் நவக்கிரக தோஷம் தீக்கும் தலமாகவும் உள்ளது.

🌱 ஆதிசேஷனும் இத்தல இறைவனை வழிபட்டுள்ளதால். இத்தலத்தில் அரவம் தீண்டி யாரும் மரிப்பதில்லை என்று தல புராணம் விவரிக்கிறது.

🅱 நேர்த்திக்கடன்:🅱
 
☀ பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.
 
🅱 தலபெருமை:🅱

🌸 திருவேற்காடு பாலாம்பிகையையும், திருவலிதாயம் ஜகதாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவாம்பிகையையும் ஒரே நாளில் வழிபடுவோர் இம்மையிலும், மறுமையிலும் அனைத்து நலன்களையும் பெறுவர் என கூறப்படுகிறது.

🌸 இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

🌸 இக்கோயில் சோழ அரசனால் கட்டப்பட்டது.

🌸 சிவன் ஒரு முறை பார்வதியிடம், இத்தலத்தை மனதால் நினைத்தாலும், ஒரு பொழுதாவது இங்கு தங்கியிருந்தாலும், இத்தலம் வழியாக சென்றாலும் முக்தியடைவர் என்று கூறியுள்ளார்.

🦋 வழிபட்டோர்: 🦋

🌤 திருமால் தன் கையில் இருந்த வலம்புரி சங்கை தவற விட்டார். பின் இத்தல சிவனை வழிபட்டு பெற்றார். திருமால் சுதர்சன சக்கரத்தை பெறுவதற்காக இத்தலத்தை அடைந்து பூஜை செய்த போது, உடனிருந்து ஆதிசேஷனும் இங்கு வழிபட்டு, இத்தலத்தின் எல்லை வரை வாசம் செய்பவர்களை தீண்டமாட்டேன் என கூறியதாக வரலாறு. அன்றிலிருந்து இத்தலத்தில் யாரும் பாம்பு கடித்து இறந்தது கிடையது.

🌤 இதனால் இத்தலத்திற்கு "விடந்தீண்டாப்பதி' என்ற பெயரும் உண்டு.

🌤 முருகப்பெருமான் பிரம்மனை சிறையிலிருந்து நீக்காத குற்றத்திற்காக, இங்கு தீர்த்தம் உண்டாக்கி வெள்வேல மரத்தடியில் வழிபட்டு பிழை நீங்கப்பட்டார்.

🌤 விநாயகர், திருமால், முருகன், பிரம்மதேவர், இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வாயு, வருணன், குபேரன், ஈசானன் வழிபட்டுள்ளனர்.

🌤 மேலும் பராசரர், அத்திரி, பிருகு, குச்சரர், ஆங்கீரசர், வசிட்டர், கவுதமர், காசிபர், திண்டி, முண்டி, வாலகில்லியர், விரதாக்னி முதலிய முனிவர்கள், பஞ்சபாண்டவர்கள், சிபி சோழன், வாணன், மற்றும் ஒன்பது கோள்கள், அஷ்டதிக்பாலகர்கள் வழிபாடு செய்துள்ளனர்.

🎸 மூர்க்கநாயனார்: 🎸

🎭 தொண்டை நாட்டிலே பாலாற்றுக்கு வடகரையில் அமைந்துள்ள சிறந்த ஊர் திருவேற்காடு !

🎭 இவ்வூரில் வேளாளர் குடியில் சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் பெயர் மூர்க்க நாயனார்.

🎭 இப்பெயர் இவரது குணம் பற்றி ஏற்பட்டதாகக் கருதப்படுகிறதே தவிர, இவரது இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை.

🎭 அறிவு தோன்றிய நாளிலிருந்தே இப்பெரியார் எம்பெருமானின் திருவடித் தாமரையைப் போற்றி வந்ததோடு திருவெண்ணீற்றினையே மெய்ப்பொருள் என்று கருத்தில் கொண்டு வாழ்ந்து வந்தார்.

🎭 எம்பெருமானின் திருவடியார்களுக்கு அமுதளித்து அகமகிழ்ந்த பிறகே தாம் உண்ணும் நியதியை வழுவாது மேற்கொண்டு ஒழுகி வந்தார். இதனால் இவரது இல்லத்திற்கு வரும் சிவனடியார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வந்தது.

🌤 அதனால் இவரிடமுள்ள பொருள்கள் யாவும் செலவழிந்தன. வறுமை ஏற்பட்டது. எவ்வளவு தான் வறுமை மலைபோல் வளர்ந்த போதும் நாயனார் தமது குறிக்கோளில் நின்று சற்றும் பிறழாமல் வாழ்ந்து வந்தார்.

🌤 பொருள்களை விற்று, விருந்தினர்களைப் பேணி வந்த தொண்டர், இறுதியில் விற்று பணமாக்குவதற்குக்கூட பொருள் இல்லாத கொடிய நிலையை அடைந்தார்.

🎭 இந்த நிலையில் நாயனாருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. இவர் தமது இளமைப் பருவத்தில் சூதாடுவதற்குக் கற்றிருந்தார். இப்பொழுது பொருள் சேர்க்க அச்சூதாட்டத்தையே ஓர் பற்றுக்கோலாகக் கொண்டார்.

🎭 அவ்வூரிலுள்ளாரோடு சூதாடத் தொடங்கினார். பலரைத் தோற்கடித்துப் பெரும் பொருள் ஈட்டினார். அவ்வாறு பெற்ற பொருளைக் கொண்டுத் திருவெண்ணீற்று அன்பர்களுக்கு எப்போதும் போல் திருத்தொண்டு புரிந்து வரலானார்.

🎭 நாயனார் சூதாடும்பொழுது எப்பொழுதுமே ஒரு தந்திரத்தைக் கையாள்வது வழக்கம். சூதாட ஆரம்பிக்கும் பொழுது முதல் ஆட்டத்தில் தம்முடன் ஆடும் எதிரிக்கு விட்டுக் கொடுப்பார். அதனால் முதல் ஆட்டத்தில் தமக்கு ஏற்பட்ட தோல்வியைப் பற்றிக்கூட வருத்தப்பட மாட்டார். எடுத்த எடுப்பிலேயே நாயனார் தோற்றதும் எதிரிக்கு அளவு கடந்த உற்சாகம் ஏற்படுவதோடல்லாமல், அடுத்த ஆட்டத்திலிருந்து நிரம்பப் பொருள் வைத்து ஆடவும் தோன்றும், அதன் பிறகு எதிரி எங்கு வெற்றி பெறப் போகிறான் ?

🎭 சூதாடும் பழக்கத்தில் ஈடுபட்ட நாயனார் சூதாட்டம் என்பதற்காகப் பொய்யாட்டம் ஆடமாட்டார். அதே சமயத்தில் தம்முடன் சூதாடுபவர்கள் எவராகிலும் பொய்யாட்டம் ஆடினால் அத்தருணத்திலேயே சற்றும்கூடச் சிந்திக்காமல் தாம் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கரிகையாற் குத்திவிடுவார். ஊர் மக்கள் இவருடன் சூதாடுவதற்கு பயந்தார்கள். அதுமட்டுமல்ல இவருடன் ஆடிய அனைவருமே தோற்றுத்தான் போயினர்.

🎭 நாளடைவில் இவருடன் சூதாடுவதற்கு எவருமே வரவில்லை. இதனால் நாயனார் வெளியூர்களுக்குச் சென்று சூதாடிப் பொருள் பெற்றுப் பரமனுக்குப் பெருந்தொண்டாற்றி வரலானார். இவ்வாறு சூதாடிப் பொருள் நாடி பிறைசூடிப் பெருமானின் திருவடி நாடி, அவர்தம் அடியாரைக் கூடி வணங்கி வந்த மூர்க்க நாயனார் இறுதியில் எம்பெருமானின் திருவடித் தாளினைப் போற்றி வாழும் சிவபதியை அடைந்தார்.

"வல்லார்கள் தமைவென்று சூதினால் வந்த பொருள்
அல்லாரும் கறைக் கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும்
நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கிச்
சொல்லார் சீர்ச் சோமாசி மாறர் திறம் சொல்லுவாம்."

🌞 பாடல் விளக்கம்: 🌞

🍁 சூதில் வல்லமை உடையார்களை வென்று, அதனால் வந்த பொருள் முழுமையையும், கருமை விளங்கும் கழுத்தினையுடைய பெருமானின் அடியவர்கட்கு அமுதாக்கிடும் நல்லவராய மூர்க்க நாயனாருடைய மலர்க்கழல்களை வணங்கி, உலகில் பெரிதும் புகழ்ந்து பேசப்படும் சீர்மையுடையசோமாசிமாற நாயனார் திறத்தை இனிச் சொல்லுவாம்.

🅱 குருபூஜை: 🅱

🎸 மூர்க்க நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. நாட்டமிகு மூர்க்கர்க்கும் அடியேன்.இவருக்கு கோயில் வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது.

🅱 கோவில் விபரம்:🅱

🌷 கிழக்கு நோக்கி உள்ள ஆலய முகப்பு கோபுரம் ஐந்து நிலைகளை உடையதாகும்.

🌷 கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே துழைந்தவுடன் உள்ள விசாலமான வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம்.

🌷 அவற்றின் பின் உள்ள 2-வது வாயில் மூலமாக உள்ளே சென்றவுடன் நேர் எதிரே மூலவர் வேதபுரீஸ்வரர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார்.

🌷 லிங்க உருவின் பின்புறம் சுவற்றில் சிவன் பார்வதி திருமணக் காட்சி புடைப்பு சிற்பமாக காணபாடுகிறது.

🌷 அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோல காட்சி கொடுத்த தலங்களில் திருவேற்காடும் ஒன்று.

🌷 ஆலய உட்பிரகாரத்தின் இடது புறம் அகத்தியர் மற்றும் சூரியன் திருமேனிகள் காட்சி தருகின்றன.

🌷 தெற்கு உட்பிரகாரத்தில் நால்வர் சந்நிதி மற்றும் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகளைக் காணலாம்.

🌷 மேற்கு உட்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாயச் சோழன் ஆகியோரின் உருவச் சிலைகளைக் காணலாம்.

🌷 வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய இறைவி பாலாம்பிகை சந்நிதி உள்ளது.

🌷 மேலும் உட்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், கணபதி, தட்சினாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் கோஷ்ட தெய்வங்களாக காணப்படுகின்றனர்.

🌷 கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் மேற்கு நோக்கிய சனீஸ்வர பகவான் தனி சந்நிதி இருக்கிறது.

🌷 ஆலய கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறத்தில் இந்த சனீஸ்வரன் சந்நிதி உள்ளது. அதன் அருகில் மூர்க்க நாயனாரும் தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.

🌷 இத்தலத்திலுள்ள முருகன் தன் கையில் வேல் இல்லாமல் வில்லும் அம்பும் ஏந்தியவாறு ஒரு காலை மயிலின் மீது வைத்துக்கொண்டு நின்றபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

🔥 புராணச் செய்தி: 🔥

🌻 இத்தலம் முருகப் பெருமானின் வாழ்க்கையோடு சம்பந்தம் உடையதாகும்.

🌻 பிரணவத்திற்கு பொருள் கூற முடியாத பிரம்மாவை முருகப் பெருமான் கைது செய்துவிட்டார். அதனால் படைப்புத் தொழில் தடைபட்டது.

🌻 சிவபெருமான் நந்தியை முருகனிடம் அனுப்பி பிரம்மாவை விடுதலை செய்யும்படி கூறச் செய்தார். ஆனால் முருகன் அதற்கு சம்மதிக்கவில்லை. இதைத் தெரிந்து கொண்ட சிவபெருமான் தானே நேரில் வந்து முருகனிடம் பிரம்மாவின் படைப்புத் தொழில் தடைபடுவதால் ஏற்படும் சிக்கல்களை விளக்கி பிரம்மாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார்.

🌻 நந்தி மூலம் சொல்லி அனுப்பியும் தன் சொல்லிறகு கட்டுப் படாத முருகனை தண்டிக்கும் பொருட்டு திருவேற்காட்டிற்குச் சென்று அங்கு தன்னை வழிபட்டு வரும்படி ஆணையிட்டார். அதன்படி முருகனும் திருவேற்காடு வந்து ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி சிவனை வழிபட்டார்.

🌻 கருவறை மேற்குப் பிரகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியில் முருகனுக்கு முன்னால் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். இத்தகைய அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.

🌻 முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது.

🌻 திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன.

🌻 இத்தலத்தில் உள்ள நவக்கிரக சந்நிதி பத்ம பீடத்தில் எண்கோண வடிவில் அமைந்துள்ளது சிறப்பிற்குரியது.

🌻 இத்தலம் நவக்கிரக தோஷங்கள் நீங்குவதற்குரிய ஒரு பரிகாரத் தலமாகும்.

🌻 இத்தலத்தில் பராசர முனிவர் இறைவனை வழிபட்டுள்ளார்.

🌻 இம்முனிவர் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் புலமை பெற்றவர். எனவே ஜோதிடம் சொல்வதை தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடத்தில் புலமை பெற விரும்பவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் ஆகியோர் இத்தல இறைவனை வழிபடுதல் நன்மை தரும்.

🅱 அஷ்டலிங்கங்க தரிசணம்: 🅱

🍄 சிவன் என்றால் மங்களன் என்று பொருள். சிவபெருமானை இக்கலியுகத்தில் லிங்கமூர்த்திகளாக வழிபட்டால் பலபேறுகளை அடையலாம். நம் கண்களுக்குத் தெரியாத பல சிவலிங்கத் திருமேனிகள்  தேவ சிற்பியினால் வடிவமைக்கப்பட்டு, ஆங்காங்கே கிடப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

🍄 அவற்றுள் எண்வகை லிங்கத் திருமேனிகள் இரண்டாம்  குலோத்துங்க மன்னன் ஆட்சிபுரிந்த தெற்குத் தொண்டை மண்டலப் பகுதியான திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் - திருவேற்காடு வேதபுரீஸ்வரர்  சந்நிதானத்தைச் சுற்றிலும் அருள் தரும் அஷ்டலிங்கங்களாக ஒவ்வொரு திக் பாலகரது திருநாமத்தைக் கொண்டு விளங்குகின்றன.

🍄 ஒவ்வொரு லிங்கமும்  தனித்தனியான வாழ்க்கை நலன்களை அருள்பவை என்றாலும் அவற்றை ஒரே நாளில் 18 கி.மீ. எல்லைச் சுற்றுக்குள் தரிசித்து விடுவதே சிறப்பானது.

🍄 அந்த வரிசையில் எண்கயிலாய தரிசனமாக, சென்னையின் தென்பகுதியான தொண்டை மண்டலத்தில் வள்ளிக் கொல்லைமேடு, நூம்பல், செந்நீர்குப்பம், பாரிவாக்கம், மேட்டுப்பாளையம், பருத்திப்பட்டு, சுந்தர சோழபுரம், சின்னக்கோலடி ஆகிய தலங்களை வழிபடலாம்.

🅱 இனிமை தரும் இந்திர லிங்கம்: 🅱

🍁 வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து நேர் கிழக்காக வள்ளிக் கொல்லைமேடு என்ற இடத்தில் இந்திரசேனாபதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்கிறார். பதவி உயர்வு, அரசு அனுகூலம் பெற்றுத் தருகிற இந்த சுவாமியை நெய்தீபம் ஏற்றி வைத்து
வழிபடலாம்..

🅱 இடர்களையும் அக்கினி லிங்கம்: 🅱

🍁 அகத்தியர் தனித்து பூஜை செய்த லிங்கமாக ஆனந்தவல்லி உடனுறையும் அகத்தீஸ்வரராக தென்கிழக்கு திசையில் நூம்பல் என்ற தலத்தில் அருள் தரும் இவர் முன் நெய்தீபம் ஏற்றினால் வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

🅱 எதிர்க்கும் வினைகளையும் எம லிங்கம்: 🅱

🍁 மரகதாம்பிகை உடனுறை கைலாசநாதர் எனும் திருநாமத்துடன் பூந்தமல்லி, ஆவடி சாலையில் தென்திசை லிங்கமாக செந்நீர்குப்பம் என்ற தலத்தில்  சிவமூர்த்தங்களோடு கருங்கற்கோயிலில் காட்சி தருகிறார். ஏழரைச்சனி, கண்டச்சனி விலகி, இரும்புத் தொழிலில் முன்னேற்றம் காண நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

🅱 நிம்மதி அருளும் நிருதி லிங்கம்: 🅱

🍁 வேதபுரீஸ்வரர் சந்நதியிலிருந்து தென்மேற்கு திசையில், சுமார், 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக ஓலைச்சுவடிச் செய்திகளோடு பாலாம்பிகை  உடனுறை பாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் பூந்தமல்லி, பட்டாபிராம் இடையில் பாரிவாக்கத்தில் (மகாநாடு நிறுத்தத்தில்) அருள்கிறார். கொடுத்த  கடன் திரும்பவும், உறவினர் மூலம் நன்மை பெறவும் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

🅱 உடல் திறன் கூட்டும் வருண லிங்கம்: 🅱

🍁 வேதபுரீசர் கோயிலிலிருந்து மேற்கு திக்கில் மேட்டுப்பாளையம் என்ற பூமியில் ஜலகண்டீஸ்வரி உடனுறை ஜலகண்டீஸ்வர சுவாமி என்ற திருநாமத்துடன் ஆலயம் இன்றி வெட்டவெளியில் அருள்  தருகிறார். புத்திரப்பேறு, நோய் நீக்கம், விவசாய விருத்தி போன்ற பலன்கள் பெற நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். பூந்தமல்லி - ஆவடி  சாலையில் காடுவெட்டி என்ற இடத்தில் உள்ளது.

🅱 குறைவிலா செல்வம் தரும் குபேர லிங்கம்: 🅱

🍁 ஆவடி-திருவேற்காடு சாலையில் வடக்கு திசை லிங்கத் திருமேனியாக சுந்தர சோழபுரம் என்ற தலத்தில் வேம்புநாயகியோடு குபேரபுரீஸ்வரர் ஏகதள விமானக் கருவறையில் அருளாட்சி செய்கிறார். பைரவர், வாயு தேவர், துர்க்கை, நவநாயகர் மற்றும் சத்திய நாராயணருடன் அருள் தருகிறார்.

🍁 ஆலய வரலாற்றுக் குறிப்பைக் காணும்போது இவ்வூரில் சுந்தரன் என்ற சோழ அரசன் சிலகாலம் ஆட்சிபுரிந்தமையால் சுந்தர சோழர்புரம் என்ற பெயர் நிலைத்ததாக உள்ளது.

🍁 இத்தல ஈசனை வழிபட பொருட் சேர்க்கையோடு சகல சம்பத்துக்களும் கிட்டும்.

🅱 வாழ வழி காட்டும் வாயு லிங்கம்: 🅱

🍁 வேற்காட்டீஸ்வரர் தலத்திலிருந்து வடமேற்கு திசையில்  விருத்தாம்பிகை உடன் வாழவந்த வாயுலிங்க மூர்த்தியாக அழகான சிவாலயத்துள், சிவமூர் த்தங்களோடு அருள் தருகிறார். ஆவடி சாலையில் பருத்திப்பட்டு என்ற தலத்தில் கோயில் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனி அருகே  இலவம்பஞ்சு மரங்களின் காய்கள் வெடித்துச் சிதறுவதால் பஞ்சுகள் இறைவன் மேல் படர்வதால் அப்பெயர் நிலைத்து விட்டது. சந்நதியில் நெய்தீபம்  ஏற்றி துதி கூறி வழிபட இழந்த பொருளை மீட்பீர்கள்.

🅱 எடுத்த செயல் முடிக்க வைக்கும் ஈசான லிங்கம்: 🅱

🍁 வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து வடகிழக்கு திசையில் திருவேற்காடு - கோலடி சாலையில் சின்னக்வகோலடி என்ற இடத்தில் வெட்ட வெளிச்  சிவலிங்கமாக நானேஸ்வரி உடனுறையும் ஈசான சிவன் அருள் தருகிறார். தொண்டை மண்டல கோட்டத்தில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் எப்போதும் ஒரு  செயல் வெற்றியாக ஈசனை லிங்க வழிபாடு செய்தபின்பே புறப்பட்டுச் சென்றதாக கால வரலாறு சொல்கிறது. வீடு கட்ட இயலாமை, காரியத் தடை,  கண் திருஷ்டி, வண்டி வாகனத்தில் லாபம் இல்லாமை ஆகியவை விலகிட நெய்தீபத்துடன் நல்லெண்ணெய் ஏற்றி வணங்க வேண்டும்.

👉🏽 திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் உள்ள திருவேற்காடு தலத்தை மையமாக வைத்து இந்த லிங்கங்கள் எட்டையும் சுமார் மூன்று மணி நேரத்திற்குள்  ஆட்டோ அல்லது கார்களில் சென்று வழிபட்டு வரலாம். இந்த ஊரின் சோமவார வழிபாட்டுக் குழுவினரும் அஷ்டலிங்கத் தரிசன குழுவும் எண் கயிலாய தரிசன சேவைக்கு உதவுகின்றனர்.

🅱 தல வரலாறு:🅱

🌤  சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்து கொண்ட காலத்தில் தேவர் முதலியோர் இமயமலை எல்லையை அடைந்ததால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதை சரிசெய்ய இறைவன் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். அகத்தியர் இறைவனின் திருமணக்காட்சியை காண இயலவில்லையே என்ற வருத்தத்துடன் சென்றார். அப்போது இறைவன் நீ தென் திசை நோக்கி செல்லும் போது உமக்கு திருமண காட்சியை காட்டுவோம் என அருள்புரிந்து அனுப்பி வைத்தார்.

🌤 அகத்தியர் திருவேற்காடு அடைந்த போது இறைவன் பார்வதியுடனான திருமணக்கோலத்தை காட்டி அருளினார்.

🌤 பிருகு முனிவரின் சாபத்தால் பெருமாள் ஜமத்கனி முனிவருக்கும், ரேணுகைக்கும் மகனாக அவதரித்தார். பரசுராமர் என பெயர் பெற்றார். அவர் இத்தல இறைவனை வழிபட வந்தபோது அவருடன் ரேணுகையும் உடன் வந்தார்.

🌤 ரேணுகை கோயிலே புகழ்பெற்ற, "கருமாரியம்மன் கோயில்' என்ற பெயரில் விளங்குகிறது.

🌤 பிரளய காலத்தில் இந்த உலகம் மூடப்பட்ட பின், சிவன் மீண்டும் இந்த உலகை படைக்க விரும்பினார். முதலில் வெள்ளத்தை வற்றச்செய்து பின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை இத்தலத்தில் வெள்ளெருக்கு மரங்களாக வடிவெடுக்குமாறு கட்டளையிட்டிருந்தார். அதன் படி இத்தலத்தில் வேதங்கள் வெள்வேல மரங்களாக மாறி இறைவனை வழிபட்டு வந்தன. இவ்வூரின் தல விருட்சம் வெள்வேல மரமாகும். இதனால் இத்தலம் "திருவேற்காடு' என அழைக்கப்படுகிறது.

🅱 சிறப்பம்சம்:🅱
 
🎥 அதிசயத்தின் அடிப்படையில்:

👉🏽 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

👉🏽 லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக் கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு.

👉🏽 காண்பவர் கண்கள் குளிர்ந்திடவும், நினைப்பவர் நெஞ்சங்களில் தீவினைகள் அகன்று நன்மைகள் பெருகவும், சிவபுண்ணிய பூமியில் கால் பதித்துவிட்டு அஷ்டலிங்கத் திருமேனிகளைத் தரிசிப்பவர்களுக்கு எட்டு ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

👉🏽 சம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

🅱 இருப்பிடம்:🅱

🚗 சென்னை கோயம்பேட்டிலிருந்து (10 கி.மீ) பூந்தமல்லி செல்லும் வழியில் திருவேற்காடு உள்ளது.