Monday, 7 May 2018

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள் !


திருமண வாழ்க்கைதான் ஒருவரது எதிர்காலத்தை நிர்ணயிப்பதுடன், அடுத்ததொரு செழுமையான  தலைமுறைக்கும் வித்திடுகிறது. அறத்தைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்குவகிப்பது திருமணப் பந்தம். ஆனால் சிலருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமண வரம் கைகூடுவதில்லை. இதற்கு முன்வினை பயன் என்றும், ஜாதக நிலையென்றும் எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

அத்தகைய குறைகளைக் களையவும், தடைகளை அகற்றவும் வழியே இல்லையா? உண்டு. கல்யாண வரம் அருளும் கடவுள் வழிபாடுகள் குறித்து ஞானநூல்கள் விவரிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் பங்குனி உத்திர வழிபாடும், தரிசனமும். குலம் செழிக்க அருள் வழங்கும் சாஸ்தாவை வழிபட உகந்தத் திருநாள் பங்குனி உத்திரம். அதுமட்டுமா? 
மீனாட்சி - சொக்கநாதர், ஸ்ரீராமர் - சீதை, முருகப்பெருமான்-தெய்வானை, நந்தியெம்பெருமான் - சுயசை, ஆண்டாள் - ரங்கமன்னார், இந்திரன் - இந்திராணி... என்று தெய்வத்திருமணங்கள் பலவும் நடைபெற்ற மகத்தான திருநாள் பங்குனி உத்திரம். இந்த நாளில் கல்யாணசுந்தர விரதம் முதலானவற்றைக் கடைப்பிடித்து வழிபடுவதுடன், கல்யாண வரம் அளிக்கும் திருத்தலங்களுக்குச் சென்று தரிசிப்பதால், எல்லாவிதத் தடைகளும் நீங்கி விரைவில் கல்யாண பாக்கியம் ஸித்திக்கும். 
அவ்வகையில், திருமண வரமளிக்கும் தமிழகத்தின் சிறப்புமிக்க சில தலங்களின் மகிமைகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன. திருமணத் தடையுள்ள அன்பர்கள், விவரங்களைப் படித்து மகிழ்வதுடன், அந்தத் தலங்களுக்கும் நேரில் சென்று வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்.

மூக்குடி ஸ்ரீவீரகாளியம்மன் 

அம்மன் பெயர்:  ஸ்ரீவீரகாளியம்மன். 

முற்காலத்தில் வீரவனம் என்ற பெயரில் திகழ்ந்தது மூக்குடி எனும் இந்தக் கிராமம். பாண்டவர்கள் வன வாசத்தின்போது இந்தப் பகுதிக்கு வந்து, இங்கு கோயில் கொண்டிருந்த ஸ்ரீவீரகாளியம்மனை வணங்கியதாகக் கூறுகிறார்கள். தங்குவதற்கு இடமின்றி தவித்த அவர்களுக்குத் தகுந்த இடத்தை வீரகாளியம்மன் காட்டி அருளியதாக தலவரலாறு கூறுகிறது.  

தற்போதும், தன்னை நாடிவரும் பக்தர்களின் துயரங்கள் நீங்கிட வரம் தந்து, வாழ்வுக்கு வழிகாட்டி அருள்பாலித்துக்கொண்டிருக்கிறாள் ஸ்ரீவீரகாளி. இந்த அம்மனின் ஆலயம் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டதாம். கருவறையில் சூலம், பத்மம், உடுக்கை, மழு, பாசம், கேடயம், கபாலம், அபயக் கரம் ஏந்தி, திரு முடியில் பாம்பை ஆபரணமாகக் கொண்டு, அமர்ந்த கோலத்தில் கம்பீர வடிவில் திருக்காட்சி தருகிறாள் ஸ்ரீவீரகாளியம்மன்.  
தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீபம், மாசி மகம் மற்றும் சிவராத்திரி என எல்லா மாதங்களும் இங்கு விழாக்கோலமாகக் காட்சியளிக்கிறது. 

பிரார்த்தனை:  இங்கு வந்து அம்மனுக்கு, ‘பொட்டுக் காணிக்கை’ அளித்தால் திருமண வரம் கைகூடுகிறது என்கிறார்கள். சாதாரண சாந்துப் போட்டு முதல் தங்கம், வெள்ளியிலான பொட்டுகள் வரை அம்மனுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் காணிக்கை செலுத்துவது சிறப்பு என்கிறார்கள் பக்தர்கள். 

அமைவிடம்: புதுக்கோட்டை மாவட் டம், அறந்தாங்கியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மூக்குடி கிராமம். பேருந்து வசதிகள் உண்டு.

தண்டந்தோட்டம்  

இறைவன் :
  ஸ்ரீதிருநடனபுரீஸ்வரர் 

அம்பாள்:  ஸ்ரீசிவகாம சுந்தரி.

டனபுரி, நர்த்தனபுரி, தாண்டவர்தோட்டம் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தத் தலத்தில், ஈசன் நடனம் புரிந்தபோது அவரின் சலங்கையின் மணிகள் உதிர்ந்து விழுந்தன. இதனால், திருநடனபுரீஸ்வரர் என்ற பெயரில்  ஈசன் இங்கு அமர்ந்து அருள்பாலிக்கிறார். 

அகத்தியர் இங்கு தவமியற்றி ஈசனின் திருமணக்கோலத்தைத் தரிசித்தார். அதனா லேயே இது திருமண வரமருளும் தலமாக விளங்குகிறது. சிதம்பரம் மற்றும் திருமணஞ்சேரி தலங்களுக்கு இணையான கோயில் இது. காஞ்சி மகாபெரியவர் தங்கி பூஜித்த தலம்.  
அகத்தியருக்குக் காட்சி தந்த ஈசன் ‘இந்தத் தலத்துக்கு வரும் அன்பர்களுக்குத் திருமணத் தடை முதலான சகல தடைகளும் நீங்கப் பெற்று, சுபிட்ச மாக வாழ வரமளிக்கிறேன்’ என்று அருள்பாலித்தாராம்.அதன்படி, இன்றும் இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்குத் திருமண வரமளித்து ஈசன் அருள் செய்கிறார். 

ஸ்ரீகார்த்தியாயினி சமேத திருக்கல்யாண சுந்தரமூர்த்தி யாக, திருமணக் கோலத்தில் வரம் அருள்கிறார் இங்குள்ள உற்சவர். `மாப்பிள்ளை ஸ்வாமி' என்றும் சிறப்பிக்கப் படும் இந்த ஸ்வாமியைத் தரிசித்தாலே போதும், திருமணத் தடை கள் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வைகாசி விசாகத் திருக்கல்யாணம் இங்கு விசேஷம். 

பிரார்த்தனை: தொடர்ந்து 11 பௌர்ணமி திருநாள்களில் இந்தக் கோயிலுக்கு வந்து, தங்களின் வயது அடிப்படையி லான எண்ணிக்கையில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி சிறப்பான இல் வாழ்க்கை அமையும். 

அமைவிடம்:  
கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது தண்டந்தோட்டம் எனப்படும் தாண்டவர் தோட்டம். கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

திருமழபாடி  

இறைவன்:
 ஸ்ரீவைத்தியநாதர்.  இறைவி: ஸ்ரீசுந்தராம்பிகை. 

புருஷாமிருக ரிஷி, தேவலோகத்தில் இருந்த சிவலிங்கத்தை இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தார். சிவலிங்கத்தை மீண்டும் கொண்டு செல்ல பிரம்மதேவர் முயற்சி செய்தபோது, சிவலிங்கம் சற்றும் அசைந்துகொடுக்கவில்லை. சோர்ந்துபோன பிரம்மதேவர், ‘இது என்ன வஜ்ர தூணோ’ என்று சலிப்புடன் கூறியதால், இறைவர், ‘வஜ்ரத் தூண் நாதர்’,  ‘வயிரத்தூண் நாதர்’ என்னும் திருப்பெயர்கள் ஏற்றார். சிவபெருமான் மார்க்கண்டே யருக்காக, மழுவேந்தி நடனமாடிய திருத்தலம். 

தனது நேசத்துக்குரிய நந்தியெம்பெருமானுக்குத் திருமணம் நடத்த விரும்பிய ஈசன், ஊரெங்கும் பெண் தேடி, இறுதியில் வசிஷ்டரின் பெயர்த்தியான சுயசையைத் தேர்ந்தெடுத்தார். 

நந்தியெம்பெருமான், சுயசையின் திருமணம் பங்குனி மாதம், வளர்பிறை, தசமி, புனர்பூச நட்சத்திரத்தில், திருமழபாடியில் தேவர்கள் புடைசூழ நடைபெற்றது.   
ஆக, தன்னை அன்புடன் வழிபடும் பக்தர்களுக்கு, ஈசனே வரன் தேடி திருமண பாக்கியத்தை அளிப்பார் என்பது சிறப்பம்சம். 

திருமழபாடி நந்தியெம் பெருமானின் திருமண விழாவே இங்கு வெகு பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த விழாவில், நந்தியின் தாய், தந்தையாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்க திருவையாறு ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியம்மை ஆகியோர் திருமழபாடிக்கு வருவார்கள். 

பிரார்த்தனை: ‘நந்திக் கல்யாணம் பார்த்தால், முந்திக் கொண்டு கல்யாணம் நடக்கும்’ என்பார்கள். 

அதற்கேற்ப இங்கு பங்குனி மாதம் நடைபெறும் நந்தியெம் பெருமானின் திருக்கல்யாணத்தை தரிசிப்பவர்களுக்கு அடுத்த ஆண்டு நந்திக் கல்யாணம் நடை பெறுவதற்குள் திருமணம் நடை பெற்றுவிடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. 

அமைவிடம்: அரியலூர் மாவட் டத்தில் உள்ளது திருமழபாடி. இந்தவூர் திருவையாறில் இருந்து சுமார்7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

திருவிடந்தை 

இறைவன்: ஸ்ரீவராக மூர்த்தி. உற்சவர்- ஸ்ரீநித்ய கல்யாணப் பெருமாள்.

தாயார்: அகிலவல்லி நாச்சியார். 

நீதிமானாக ஆட்சிபுரிந்து வந்த மகாபலிச் சக்கரவர்த்தி தனது நண்பர் களுக்காக தேவர்களுடன் போரிட்டு வென்றார். போரினால் உண்டான தோஷம் நீங்க, இங்கு வந்து வராகத் தீர்த்தக்கரையில் தவமிருந்து, ஆதிவராகரின் தரிசனம் பெற்றார். 

மகாபலியின் விருப்பத்துக்காகத் திருமகளைத் தாங்கிய திருக்கோலத்தில் இந்த தலத்திலேயே எழுந்தருளி விட்டார் வராகமூர்த்தி என்கிறது தலவரலாறு.  
இந்தத் தலம், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. பிரம்மசாரியாக வந்த பெருமாள், காலவ மகரிஷி யின் பிரார்த்தனையை ஏற்று, அவருடைய 360 புதல்வியரையும் தினம் ஒரு பெண் என மணம்  புரிந்த தலம் இது. இதனால் இங்கு தினமும் பெருமாளுக்குத் திரு மணம் நடைபெறுவதாக ஐதீகம். 

பெருமாளுக்கு உரிய எல்லா நாளுமே இங்கு விசேஷம்தான். 

பிரார்த்தனை - திருமணத் தடையால் மணமாகாமல் இருக் கும் ஆண்களும், பெண்களும், இங்கு வந்து இரண்டு மாலைகள் வாங்கிச் சென்று பெருமாளுக்குச் சமர்ப்பித்துத் தரிசிக்க வேண்டும். அப்போது சந்நிதியில் தரப்படும் ஒரு மாலையை கழுத்தில் அணிந்துகொண்டு ஆலயப் பிரா காரத்தை 9 முறை வலம் வந்து வழிபடவேண்டும். 

 பின்னர், மாலையை வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரமாக வைக்கவேண்டும். பெருமாள் அருளால் விரைவில் திருமணம் கைகூடும். திருமணம் நடைபெற்ற பிறகு, தம்பதி சமேதராக பழைய மாலையுடன் மீண்டும் இந்தக் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். 

அமைவிடம்: சென்னை யிலிருந்து சுமார் 42 கி.மீ. தொலை வில்,  கிழக்குக் கடற்கரைச் சாலை யில் கோவளத்தின் அருகில் அமைந்துள்ளது திருவிடந்தை.

திருவேள்விக்குடி  

இறைவன்:  ஸ்ரீகௌதகேஸ்வரர், ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர், ஸ்ரீமணவாளேஸ்வரர். 

அம்பிகை: ஸ்ரீபரிமளசுகந்தநாயகி, ஸ்ரீகௌதகேசி, ஸ்ரீநறுஞ்சாந்து நாயகி. 

யிலையில் ஈசன்-பார்வதி திருமணம் நடப்பதற்கு முன்னர் கங்கணதாரணம், யாகம் ஆகிய யாவும் இந்தத் தலத்தில்தான் நடைபெற்றனவாம். பிரம்மதேவர் தாமே முன் நின்று திருமணத்துக்கான எல்லா ஏற்பாடு களையும் செய்து, வேள்வி வளர்த்தார். சிவபெருமானின் திருமணவேள்வி நடந்த புண்ணியத் தலம் என்பதால், வேள்விக்குடி எனப் பெயர் பெற்றது. 

சோழ அரசன் ஒருவனுக்கு மணம்புரிய நிச்சயித் திருந்த மணமகளின் பெற்றோர் திடீரென மறைந்து விட்டனர். இதனால், மணமகளின் சுற்றத்தார் அந்த அரசனுக்கு மணமகளை மணம் செய்து கொடுக்காமல் மறுத்தனர். 

அதனால் வருத்தம் அடைந்த அரசன், இங்குள்ள இறைவனை வழிபட்டு வேண்டினான். 

மன்னனின் பக்திக்குக் கட்டுப்பட்ட இறைவன், உடனே மணமகளை அழைத்து வந்து, இந்தத் தலத்திலேயே வேள்வி வளர்த்து, திருமணத்தை நடத்தி வைத்ததாக தலவரலாறு கூறுகிறது.

இறைவன் மணவாளநம்பி, மணவாளேஸ்வரர், திருவேள்விக் குடி உடையார் ஆகிய பல திருப் பெயர்களில் போற்றப்படுகிறார். 

நீண்டநாள் திருமணம் ஆகாத வர்கள், இங்குள்ள கல்யாண சுந்தரரை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

சிவபெருமானுக்கு உகந்த எல்லா விசேஷ தினங்களும் இங்கே சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. 

பிரார்த்தனை - திருமணமாகாத ஆண்களும் பெண்களும், உற்சவர் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரருக்கும் அம்பிகைக்கும் மாலை சாத்தி, அர்ச்சனை செய்து, கோயிலை வலம் வந்து வழிபட்டால், திரு மண வரம் கைகூடும் என்கிறார்கள்.

அமைவிடம்: நாகை மாவட்டம், குத்தாலம் தலத்துக்கு நேர் வடக்கில் காவிரியின் வடகரையில் அமைந் திருக்கிறது இந்தத் தலம். நாகை மற்றும் மயிலாடுதுறையி லிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

திருவானைக்கா 
இறைவன்:  ஸ்ரீஜம்புகேஸ்வரர். 

அம்பிகை: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி. 

யிலையில் இருந்து பூமிக்கு வந்த அன்னை சக்தி, ஜம்பு மகரிஷி தவமியற்றிய வெண்நாவல் மரத்தடியில், ஈசனை நீரால் உருவாக்கி வழிபட்டாள். அதனால் இது பஞ்ச பூத தலங்களில் நீர்த் தலமானது. இங்குள்ள ஈசனை, யானையும் சிலந்தியும் வழிபட்டு மோட்சம் பெற்றன. 

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், ஐயடிகள் காடவர்கோன், அருணகிரி நாதர், தாயுமானவர் ஆகிய மகான்களால் போற்றிப் பாடப்பெற்ற தலம் இது. 

சிவலிங்கத்தைச் சுற்றி நீர் சுரந்துகொண் டிருக்க, அற்புத நாயகராக ஈசன் இங்கு வீற்றிருக்கிறார். அருள்பொங்கும் அகிலாண்டேஸ்வரி, தன் திருச் செவிகளில் ஆதிசங்கரரால் சமர்ப்பிக்கப்பட்ட ஸ்ரீசக்கரங் களையே தாடங்கங்களாக அணிந்து காட்சி தருகிறாள். 

தினந்தோறும் உச்சிவேளையில் அர்ச்சகர், சிவப்புப் பட்டுப் புடவை உடுத்தி, தலையில் கிரீடம் தாங்கி, கழுத்தில் ருத்ராட்சமும் மலர் மாலைகளும் அணிந்து அம்பிகையின் வடிவத்தில்,  ஈசனின் கருவறைக்குச் சென்று, பூஜிக்கும் காட்சி, தரிசிப்பவரைச் சிலிர்க்கவைக்கும்.   
இங்கு அம்பிகை யோகம் பயிலும் மாணவியாக இருப்பதால், சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக் கல்யாணம் நடைபெறுவதில்லை. ஆனால், உச்சிக் காலத்தில் அம்பிகை ஈசனுக்குச் செய்யும் பூஜையையும் கோ பூஜையையும் தரிசிப்பவர்களின் திருமணத் தடைகள் நீங்கி, சிறப்பான மணவாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

பிரார்த்தனை: தினமும் உச்சிவேளையில் அம்பாள் செய்யும் சிவபூஜை மற்றும் கோ பூஜையைத் தரிசித்து வழிபடுவது விசேஷம். இதனால், கல்யாண தோஷம் நீங்கி சந்தோஷ வாழ்வு அமையும் என்கிறார்கள். 

அமைவிடம்: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவானைக்கா.

திருச்செந்தூர் 
இறைவன்: ஸ்ரீசுப்ரமணியர். 

சொல்லொண்ணாத் துயரங்களை தேவர்களுக்குத் தந்த சூரபத்மனை, முருகப்பெருமான் வென்று தன்னிடம் சேர்த்துக்கொண்ட தலம் இது. 

முருகப்பெருமான் போர் புரிந்த தலமென்றாலும், தவக்கோலம் கொண்ட ருளும் ஆலயம் இது. மேலும், சிறப்பான திருமண பரிகாரக் கோயிலாகவும் விளங்குகிறது. 

பல்லாயிரம் வருடங்களைக் கடந்த முருகப்பெருமானின் ஆலயம், கடற் கரையில் 150 அடி உயர கோபுரத்துடனும் எண்ணற்ற சந்நிதிகளைக் கொண்டும் பிரணவ வடிவில் திகழ்வது சிறப்பு.

சூரபத்மனை வென்ற பிறகு, அந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்க, தனது தந்தையான சிவ பெருமானுக்கு முருகப்பெருமான் இங்கு சிவபூஜை செய்தார். 

இதனால் முருகப்பெருமான் தலையில் சிவயோகி போல ஜடா மகுடமும் தரித்திருக்கிறார்.  

தவக் கோலத்தில் முருகர் இங்கு இருப்பதாக ஐதீகம். எனவே,  மூலவர் கையில் வேலோ, அருகில் தேவியரோ இல்லை.  

இங்கு நடைபெறும் சூரசம்ஹாரத் திருவிழா, உலகப் புகழ் பெற்றது. மேலும் விசாகப் பெரு விழா, ஆவணிப் பெருவிழா  ஆகியனவும் சிறப்பாக நடை பெறுகின்றன. செவ்வாய்தோஷ பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது திருச்செந்தூர்.

பிரார்த்தனை: திருமணத்தடை உள்ளவர்கள் இங்குள்ள முருகப்பெருமானிடம் வேண்டிக் கொள்ள நல்ல வரன் அமையும் என்ற நம்பிக்கை பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. 

இங்குள்ள கடலிலும் நாழிக் கிணற்றிலும் நீராடி, திருச்செந்தூர் முருகப் பெருமானை வணங்கி, குகை லிங்கத்தைத் தரிசித்தால், திருமண தோஷம் நீங்கி, நல்ல வரன் அமைந்து கல்யாணம் நிச்சயமாகும் என்பது ஐதீகம்.

அமைவிடம்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது திருச்செந் தூர். தூத்துக்குடியில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

திருவீழிமிழலை  

இறைவன்:  ஸ்ரீவீழிநாதர். 

உற்சவர் : ஸ்ரீகல்யாணசுந்தரமூர்த்தி.

அம்பாள்: ஸ்ரீசுந்தர குசாம்பிகை. 

மகாவிஷ்ணு, 1008 தாமரை மலர்களைக் கொண்டு, ஈசனை பூஜித்து வணங்கி வரம்பெற்ற தலம். ஒருமுறை பூஜையின்போது ஒரு தாமரை மலர் குறைந்துவிட, விஷ்ணு தமது கண்களையே எடுத்துச் சமர்ப்பித்து ஈசனை வணங்கினாராம். இதனால் ஈசன் மனம் குளிர்ந்து விஷ்ணுவுக்கு சக்ராயுதத்தை வரமாக அளித்தார் என்று தலவரலாறு கூறுகிறது. 

திருநாவுக்கரசரும், சம்பந்தரும் இவ்வூர்க் கோயி லின் இறைவனைப்பாடி படிக்காசு பெற்று அங்குள்ள மக்களின் பசியைப் போக்கினர். 16 சிங்கங்கள் ஏந்தித் தாங்கும் விண்ணழி விமானத் தைக் கொண்ட இந்த ஆலயத்தையும், இங்குள்ள ஈசனையும் விஷ்ணுவே உருவாக்கி வழிபட்டார் என்கின்றன புராணங்கள். 

ஸ்ரீகயிலாயநாதரும் காத்யாயணி அம்பிகையும் திருமணம் புரிந்துகொண்ட தலம் இது என்பர். சித்திரை மாத மக நட்சத்திரத்தில் இங்கு நடைபெறும் சிவசக்தி திருமணம் விசேஷமானது. விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அலங்காரத்தில், இறைவ னும் இறைவியும் திருக்கல்யாண மண்டபத்தில் காட்சி தருவதைத் தரிசித்தாலே திருமணம் நடைபெறும்.   
பிரார்த்தனை: இங்கு வந்து ஸ்ரீகல்யாண சுந்தரேஸ் வரருக்கும் அம்பிகைக்கும் மாலை சார்த்தி, அர்ச்சித்து வழிபட வேண்டும். அத்துடன், தொடர்ந்து 48 நாள்கள் வீட்டில் பூஜை செய்து, 'தேவந்திராணி நமஸ்துப்யம் தேவந்திரப்ரிய பாமினி விவாஹ பாக்யமாரோக்யம்' - என்று துவங்கும் ஸ்லோகத்தை பாராயணம் செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் ஸித்திக்கும். 

அமைவிடம்:  கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவீழிமிழலை.

கல்யாண வரம் அருளும் துதிப்பாடல்கள் 

ல்லறம் அதுவே நல்லறம் என்பார்கள் பெரியோர்கள். அப்படியான அறத்தின் நுழைவாயிலாகத் திகழ்வது திருமணம். சிலருக்கு, முன்வினைப் பயனாலும் தோஷங்களாலும் திருமணம் தள்ளிப்போவதுண்டு. அவர்களுக்குக் கல்யாண பாக்கியம் விரைவில் கிடைத்திட, தெய்வத்தின் அனுக்கிரஹம் மிக அவசியம். 

அவ்வகையில், திருமணத் தடைகளும் தோஷங்களும் நீங்கவும், விரைவில் கல்யாண மாலை தோள்சேரவும் அருளும் அற்புதமான துதிப் பாடல் இங்கே தரப்பட்டுள்ளது. அனுதினமும் வீட்டில் நெய் தீபம் ஏற்றிவைத்து, அம்பாளை காத்யாயினி தேவியாக மனதில் தியானித்து இந்தப் பாடலைப் பாடி வழிபட்டு, சர்க்கரைப் பொங்கல் அல்லது கற்கண்டு பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தால், விரைவில் நல்ல செய்தி வந்து சேரும்.

காத்யாயனி மஹா மாயே
மஹாயோகின்யதீஸ்வரி
நந்தகோபஸுதம் தேவி
பதிம் மே குரு தே நம: 


கருத்து: கத கோத்திரத்தில் பிறந்தவளும், மாயைகளுக்கெல்லாம் இருப்பிடமும், மகத்தான யோக ஸித்திகளை அடைந்தவளுமான தேவியே... உன்னை வணங்குகிறேன். உனது திருவருள் கடாட்சத்தால்,  நந்தகோபருடைய மகனான அந்தக் கண்ணனே எனக்குக் கணவனாக அமையவேண்டும்.  
இந்தப் பாடலை அனுதினமும் முறைப்படி பாடி அம்பாளைத் துதித்து வழிபட்டு வந்தால், கண்ணனைப் போன்றே குணத்திலும் செயலிலும் சிறந்த கணவன் வாய்ப்பான் என்பது பெரியோர் கருத்து.

அபிராமியம்மை பதிகம் சொல்லியும் அம்பாளை வழிபட்டு வரம் பெறலாம். குறிப்பாக...

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிர் அவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே


இந்தப் பதிகத்தைப் பாடி அன்னையைத் துதிப்பதால், திருமணப் பேறு மட்டுமின்றி சகலசெளபாக்கியங்களும் கிடைக்கும்; இல்லத்தில்   சந்தோஷம் பொங்கிப் பெருகும்.

மலைக்கோயிலில் மகேஸ்வரன்... தாழக்கோயிலில் காமாட்சி !

ராமாயணக் குகைகள் 

வற்றாத சுனை

வால்மீகி வழிபட்ட ஈஸ்வரன்

சரித்திரம் பேசும் கல்வெட்டுகள்
அற்புதம் நிறைந்த திருமுக்கல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் பெருமுக்கல். சோழா் கால வரலாற்றுப் பக்கங்களின் பொக்கிஷமாகத் திகழும் கல்வெட்டுகள் நிறைந்த அற்புதத் தலம் இது. 
புராதன காலத்தில் `சஞ்சீவி மலை' என்று நம் மகரிஷிகளால் போற்றி வணங்கப்பட்ட இந்தத் தலத்தில் உள்ள மலையின் மீது அருள்மிகு முக்யாசலேஸ்வரா் திருக்கோயில் அமைந்திருக்க, அடிவாரத்தில் தாழக் கோயிலான காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. `திருக் காம கோட்ட நாச்சியாா் கோயில்’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடும் இந்தக் கோயில், சிதிலமடைந்த நிலையில் திகழ்கிறது.

எனினும், முற்காலச் சோழா் காலம் முதல் தமிழக வரலாற்றினை அறிந்துகொள்ள அரிய ஆவணங்களாக, இக்கோயிலின் கல்வெட்டுத் தொடா்கள் அமைந்துள்ளன. 60 கல்வெட்டுகள் இங்குள்ளனவாம். இவற்றின் மூலம் சோழா், பாண்டியா், காடவராயா், சம்புவரையா் மற்றும் விஜயநகர மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் திருக் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் குறித்த செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது.

விக்கிரம சோழனின் திருப்பணி 

ங்குள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழைமை யானவை, உத்தம சோழன் காலத்துக் கல்வெட்டுக ளாகும். இவற்றையடுத்து முதலாம் குலோத்துங்கச் சோழன் மற்றும் விக்கிரமச் சோழன் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. விக்கிரமச் சோழனின் காலத்தில்தான் மலைமீது உள்ள திருக்கோயில் புனரமைக்கப்பட்டுக் கற்றளியாகத் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. 
இந்தப் பணிக்காக ஏராளமான கைங்கா்யங்கள் செய்த காக்கு நாயகனின் திருவுருவச் சிலையும், கோயிலின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட பெரியான் திருவனான சிறுத்தொண்டனின் சிலையும், திருக்கோயிலின் அா்ச்சகரான திருச் சிற்றம்பலமுடையான் அன்பா்க்கரசு பட்டனின் திருவுருவச்சிலையும் இங்கே அமைத்திருப்பது அற்புதம்!

இவ்வூரானது கல்வெட்டுகளில், `ஜெயங் கொண்ட சோழ மண்டலத்து ஒய்மா நாடான விசைய இராசேந்திர வளநாட்டு பெருமுக்கிலான கங்கைகொண்ட நல்லூா்’ என்று குறிப்பிடப் படுகிறது. முதலாம் ராசேந்திரன் காலத்தில் இவ்வூர், `கங்கைகொண்ட நல்லூர்' என்று பெயா் மாற்றப் பட்டிருக்கலாம் என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள். பெருமுக்கலில் அமைந்துள்ள மலையானது `திருமலை’ என்றும் `முக்யசைலம்’ என்றும் வணங்கப்பட்டுள்ளது.

மலையின் மீது அருளும் ஈசனுக்கு ஸ்ரீமுக்தி யாலீஸ்வரா், ஸ்ரீதிருவான்மிகை ஈஸ்வரமுடையாா், ஸ்ரீபெருமுக்கல் உடையாா் என்று பல திருப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. 

ஏல விற்பனை முறை 

ற்போது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானம் மற்றும் மராமத்துப் பணிகளுக்காக பகிரங்க ஏலம் (open tender) விடப்படுவதை அறிவோம்.  இவ்வாறே நம் மன்னர்களின் ஆட்சிக்காலத்திலும் திருப்பணி களுக்காகக் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்ததற்கான தகவல்கள் பெருமுக்கல் தலத்தின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. 
மட்டுமன்றி, நாட்டில் அறம் குறையக் கூடாது என்பதற்காக இத்திருக்கோயிலில் `அறமிறங்கா நாட்டுச் சந்தி’ என்று ஒரு கூட்டு வழிபாடு முக்யாசலேஸ்வரப் பெருமானுக்கு நடத்தப்பட்டது குறித்தும் ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.

ஆசீவகம் நந்தாசிரியன் 

மெள
ரிய சாம்ராஜ்ஜியம் கோலோச்சிய கி.மு. 3-ம் நூற்றாண்டில் புகழ் வாய்ந்த சமயமாகத் திகழ்ந்தது ‘ஆசீவகம்.’ இம்மதம் பற்றிய பல்வேறு தகவல்கள் பாலி மற்றும் வடமொழி நூல்களில் இருந்தாலும், இச்சமயத்தின் ஆணி வோ் தமிழகமே என்று வரலாற்று ஆய்வாளா்கள் சிலர் தெரிவிக் கின்றனா். ஆசீவக மரபில் பிறவிப்பெருநோயைக் கடந்து வீடுபேற்றினை அடைந்த மூவரில் ‘நந்த வாச்சா’ என்பவரும் ஒருவா். 

மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகிலுள்ள மாங்குளத்தில் கணிநந்தாசிரியன் எனும் ஆசீவகத் துறவிக்கு, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மற்றும் அவன் வாரிசுகள் கற்படுக்கைகள் அமைத்துக்கொடுத்துள்ளனா். அங்கு காணப்படும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நந்தாசிரியன் எனும் பெயரே, பாலி மொழியில் நந்தவாச்சா என வழங்கப்பட்டுள்ளது. நந்தவாச்சா வானியல் அறிவியலில் நிபுணத்துவம் பெற்றிருந்த காரணத் தினால் `கணிநந்தாசிரியன்' எனவும் சிறப்பிக்கப்பட்டுள்ளாா். 
இவர் பெருமுக்கல் மலையில் முக்தி அடைந்ததாகவும், இதனால் `முக்கல் ஆசான் நல்வெள்ளையாா்” என இவா் புகழப்பட்டதாகவும் இத்திருத்தலம் குறித்த வரலாறு தெரிவிக்கின்றது. இதனால் இத்தல இறைவன் முக்தியாலீஸ்வரா் என்று வணங்கப்படுவதாகத் தெரிவிக் கின்றனர் ஆசீவக அறிஞா்கள். 

போா்களால் சிதைக்கப்பட்ட பெருமுக்கல் கோட்டை

ற்காடு நவாபின் பிரதிநிதியான ஐதர்அலிகான் பெருமுக்கல் பகுதியை ஆட்சி புரிந்த காலம். அப்போது, சந்தா சாஹிபுவின் மகன் திருமணம் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் புதுச்சேரியின் பிரெஞ்சு ஆளுநா் கலந்துகொள்ள வேண்டுமென, பெரு முக்கலை ஆண்ட  ஐதர்அலிகான் நேரில் சென்று தங்க நகைகளைப் பரிசளித்து அழைப்பு விடுத்ததாக, புதுவை ஆனந்தரங்கப் பிள்ளையின் டைரிக்குறிப்பு தெரிவிக்கிறது. 

இங்ஙனம் ஐதர் அலிகான் பிரெஞ்சு அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்ததால், ஆங்கிலேயரின் பகையை எதிா்கொள்ள நேரிட்டது. பெருமுக்கலின் மீது போா் தொடுக்க தக்க தருணத்தை எதிா்பாா்த்துக் காத்திருந்த ஆங்கிலேயருக்கு அதற்கான நேரமும் வாய்த்தது. 

புதுச்சேரியைக் கைப்பற்ற பிரிட்டிஷ் தளபதி ‘கர்னா் அயா்கூட்’ தலைமையில் பெரும்படை திரண்டபோது, (1760-ல்) பெருமுக்கலையும் தாக்கி அங்கிருந்த செல்வங்களையும் கோட்டையையும் பிரிட்டிஷார் கைப்பற்றினார்களாம். 
பின்னா் 1780-ல் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் படைகள் பெருமுக்கல் கோட்டையைக் கைப்பற்றின. 1783-ல் மீண்டும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குச் சென்ற இக்கோட்டையை 1790-ல் திப்புசுல்தான் கைப்பற்றினாா். அடுத்த சில ஆண்டுகளில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் மிகுந்திருந்தபோது மீண்டும் பெருமுக்கல் கோட்டை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 

இப்படி, சோமநாதபுரம் போன்று பலமுறை தாக்குதலுக்கு உட்பட்ட இத்திருத்தலத்தில், கோட்டையின் இடிந்த மதிற் சுவரும் சிதிலமடைந்த திருக்கோயிலும் மட்டுமே எஞ்சிநின்று பல நூற்றாண்டுகால வரலாற்றுக்குச் சாட்சியாய் திகழ்கின்றன.

போா்களால் சீரழிக்கப்பட்டது போதாதென்று இப்பகுதியில் உள்ள கல்குவாரிகளாலும் சிதைக்கப் பட்ட பெருமுக்கல் மலை, தற்போது நல்ல உள்ளம் படைத்த அன்பர்களின் முயற்சியாலும் நீதிமன்ற நடவடிக்கையாலும் அழிவிலிருந்து பாதுகாக்கப் பட்டுள்ளது. நம் முன்னோரின் பண்பாடு, கலாசாரம் மற்றும் வாழ்வியல் நெறிகளை எதிா் காலத் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் களமான இப்புராதனச் சின்னம் மேலும் சிதிலம் அடையாமல் காப்பாற்ற வேண்டியது, நமது பெரும் கடமையாகும்.

ராமாயணச் சிற்பங்கள் 

பெருமுக்கல் மலைக்கோயிலில்  ஸ்ரீதட்சிணா மூர்த்தி அருள்பாலிக்கும் தேவகோட்டத்தின் மேல், அசோகவனத்தில் சீதாபிராட்டி சோகமே உருவாக அமா்ந்திருக்கும் சிற்பம் உள்ளது. சீதையைச் சுற்றி ஓர் அரக்கியும், குரங்கு முகம் கொண்ட வானரப்பெண் தன் குட்டியைத் தழுவியுள்ளது போன்றும், மற்றொரு பூதகணம் தழுவக் காத்திருப்பது போன்றும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கோயிலின் பின்பகுதியில் தனிச் சந்நிதியில் புடைப்புச் சிற்பமாக அருள்பாலிக்கிறாா் அனுமன். அடுத்து அமைந்துள்ள திருக்குளத்தின் அருகில் குன்றுகளால் உருவான குகை உள்ளது. `சீதைக் குகை’ என்றழைக்கப்படும் இந்தக் குகையில்தான் லவனும் குசனும் பிறந்தார்கள் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை (லவன், குசன் பிறந்த இடம் மகாராஷ்டிர மாநிலம் கான்பூருக்கு அருகே என்றும் கூறுவர்). வால்மீகி மகரிஷி இம்மலையில் நீண்டகாலம் தவமியற்றி ஈசனின் பேரருளைப் பெற்றுள்ளாா். அவா் தவமியற்றிய குகை வால்மீகி குகை என்று வணங்கப்படுகிறது. மலையின் மீது கோடைக் காலத்திலும் வற்றாத அழகிய சுனை ஒன்றும் உள்ளது. 

தற்போது, பெருமுக்கல் திருத்தலத்தில் பிரதோஷ விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று ஈசனின் சிவலிங்கத் திருமேனியை தரிசித் துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு சாந்நித்தியத்துடன் அருள்பாலிப்பார் ஸ்வாமி.  ஐயனின் தெய்வீக வனப்பில் நாம் மெய்ம்மறந்து கண்களில் நீா் மல்க தரிசிக்கும்போது, இப்பிறவியின் பேற்றினைப் பெற்றுவிடுகிறோம். 

மகாசிவராத்திரி நாளில் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பெளர்ணமி நாளில் கிரிவலம் நடைபெறுகிறது. கார்த்திகை தீபத்தன்று இம்மலைமீதுள்ள கருங்கல் தீப மேடை யில் மஹா தீபம் ஏற்றப்படுகின்றது.

பக்தர்களது எதிர்பார்ப்பு 

மிழக அரசின் தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் உள்ள இத்திருக்கோயிலின் புனரமைப்புப் பணிகளுக்காக, 2013-ம் ஆண்டில் ஒருகோடி ரூபாய் ஒதுக்கியது தமிழக அரசு. இந்தத் தகவலை மகிழ்ச்சியுடன் ஊர்மக்கள் பகிர்ந்துகொண்டாலும், இத்தொகை மலைக் கோயிலையும் தாழக் கோயிலையும் புனரமைக்கப் போதுமானதாக இருக்காது என்பதே நிதர்சனம். 

தாழக்கோயிலான காமாட்சி அம்மன் கோயில் மிகவும் சிதிலம் அடைந்து திகழ்கிறது. ஒருகாலத்தில், மலைக்கு மேல் அருள்பாலிக்கும் ஈசன் அா்த்தசாம பூஜை முடிந்ததும், கீழேயுள்ள தாழக்கோயிலில் எழுந்தருளி பள்ளியறை துயிலும் வழக்கம் உண்டாம். தற்போது இத்திருக்கோயில் முற்றிலும் சிதிலமடைந்திருக்கும் நிலையில், இதுபோன்ற பூஜைமுறைகள் கைவிடப்பட்டுள்ளன. 

பெருமுக்கல் மலைமீதுள்ள ஈசனை தரிசிக்கச் செல்வதற்குப் படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இத்தலத்தின் மேன்மையை அகிலம் அறிய, அரசு முயற்சி எடுக்க வேண்டும். மலைக்கு எளிதாகச் செல்ல முறையாகப் படிக்கட்டுகள் அமைத்து மின்வசதி, குடிநீா்வசதி, பயணிகள் தங்குவதற்கு இடம் ஆகிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என்று வேண்டுகின்றனர் இப்பகுதி மக்கள். மக்களின் விருப்பம் நிறைவேற்றப்பட்டால் ஆன்மிகத் தலமான இத்தலம் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மிளிரும்.

காஞ்சி முனிவா் வழிபட்ட திருக்கோயில். 

1906-ம்
 ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் 66-வது பீடாதிபதியாக இருந்த `ஸ்ரீசந்திரசேகரா்’ பெருமுக்கல் மலையிலுள்ள முக்தியாலீஸ்வரா் சந்நிதியில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டிருந்தார். அப்போது தன் தந்தையுடன் காஞ்சி மடாதிபதியைத் தரிசிக்க சுவாமிநாதன் என்ற சிறுவன் வந்தார். அப்போது அச்சிறுவனின் பக்தியையும் ஞானத்தையும் கண்டு வியந்த பீடாதிபதி, சிறிது காலத்துக்குப் பிறகு அவரைக் காஞ்சி சங்கரமடத்தின் 68-வது பீடாதிபதியாக நியமித்தார். அந்த சுவாமிநாதன் வேறு யாருமல்லர். கலியுகத்தில் நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளே ஆவாா்.

இப்பூவுலகுக்கே குருவாகத் திகழ்ந்த காஞ்சி மஹானை அடையாளம் காணக் காரணமாக அமைந்த புண்ணிய பூமி பெருமுக்கல் திருத்தலம் என்பதை நினைக்கும்போது இங்கு அருள்பாலிக்கும் சிவனாரின் கருணையை எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்தோம். மேலும், மயிலம் பொம்மபுர ஆதீனம் பாலசித்தா் பாலயோகி சுவாமிகளும் இம்மலையில் தங்கி தவமியற்றி ஈசனின் அருளைப் பெற்றுள்ளாா்.

எப்படிச் செல்வது? 

தி
ண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் நெடுஞ்சாலையில், சுமார் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது பெருமுக்கல்.

சூரிய பூஜை... பனையபுரத்தின் அற்புதம் !

ட்டடக் கலையில் உலக அதிசயங்களுக்கு இணையானது, புராணப் பெருமைகள் மிகுந்தது, தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலம், தக்கன் பேறுபெற்றதும் சிபிச் சக்ரவர்த்தி முக்திபெற்றதுமான திருத்தலம், இறைவனையும், இறைவியையும் சூரியன் ஏழுநாள்கள் ஒருசேர வழிபடும் அபூர்வ க்ஷேத்திரம், சோழமன்னனின் குறுநாட்டுத் தலைநகரம், சோழ மன்னனின் காதலி பரவை நங்கை வாழ்ந்த ஊர், கண்கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம்... ஆகிய பல சிறப்புகளுடன் திகழ்கிறது, விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தில் அமைந்துள்ள புறவார்ப் பனங்காட்டீசர் திருக்கோயில். சென்னைக்குத் தெற்கே 150 கி.மீ. தொலைவில் உள்ளது.   

ராஜேந்திர சோழ வளநாட்டின் துணைக் கோட்டங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது பனையூர். இதன்  உட்பகுதி நாடான புரையூர் நாட்டின் பரவை புரமாக விளங்கியதே இன்றைய பனையபுரம். பிற்காலச் சோழர் காலத்தில் தனியூராக விளங்கியது. பல ஊர்களின் தலைமை ஊருக்கு தனியூர் என்ற பெயர் உண்டு. இங்குள்ள சிவன் கோயில் நடுநாட்டின்  20-வது பாடல் பெற்ற தலமாகும். இது நடுநாட்டு சூரியத்தலம் என்பது குறிப்பிடத் தக்கது.

ராஜேந்திர சோழன் போற்றிய க்ஷேத்திரம்!

இவ்வூரில் வாழ்ந்த நாட்டியப் பேரொளி பரவை நங்கையின் மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தார் முதலாம் ராஜேந்திர சோழன். அவளின் பெயரால் பல அறக்கொடைகளையும், தான தர்மங்களையும்  வழங்கியிருக்கிறார் ராஜேந்திரன். ஓர் அரசிக்கு இணையாக அவளை மதித்துப் போற்றியிருக்கிறார் சோழப் பேரரசர். இதற்கு ஆதாரமாகக் கோயிலின் தென்புறச் சுவரில்  இரண்டாம் ராஜேந்திர சோழனின் (கி.பி. 1052-கி.பி.1065) ஆறாவது ஆட்சி ஆண்டில்  செதுக்கப்பட்ட கல்வெட்டு விளங்குகிறது. 

இந்தக் கல்வெட்டின் மூலம், ராஜேந்திரன் மற்றும் பரவை நங்கை ஆகிய இருவரின் சிலைகள் இருந்ததாகவும், அவற்றுக்கு விளக்கேற்றவும், நைவேத்தியம் செய்யவும் வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றியும்  அறிய முடிகிறது. ஆனால், கலைநயம் கொண்ட இச்சிலைகளின் இருப்பிடம் அறியப் படவில்லை.  
இந்தக் கல்வெட்டில்  இவ்வூர்  பரவைபுரம் எனக் காணப்படுகிறது.  பரவையாரைப் பற்றிய குறிப்பு திருவாரூர் தியாகராஜர் கோயில் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் பரவையாரின் பெயரில் ஓர் ஊரை உருவாக்கி ஆலயம் எழுப்பப்பட்ட செய்தி காணப்படுகிறது. ஆக, பரவைபுரம் என்பதே  பனையபுரமாக மருவியிருக்க வாய்ப்புண்டு.  அந்நாளில் பரவையாரின் பிறந்தநாளை கௌரவிக்கும் வகையில், சித்திரை மாதத்தில் ஜோதி திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டது.
 
புறவார் என்ற சொல்லை புறவு + ஆர்  எனப் பிரித்துப் பொருள் கொண்டால்,  புறா நிறைவுற்ற இடம் என அறிய முடிகிறது. புறாவின் உயிரைக் காக்க, தன் தசையை அரிந்துகொடுத்து,   தன் உயிரையும்  மாய்க்கத் துணிந்த சிபிச்சக்ரவர்த்தியை இறைவன் தடுத்தாட்கொண்ட இடம் என்கிறது புராணம். கோயிலின் ராஜகோபுரத்தின் எதிரே உள்ள வாகன மண்டபத்துக்குள் உள்ள  நடுவரிசைத் தூணில் இக்காட்சி புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளதைக் காணலாம். 

சூரியனும் தட்சனும் பேறுபெற்ற திருத்தலம் 

தட்ச யாகத்தில் கலந்துகொண்டதால் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு பற்களை இழந்து தன் பலத்தையும் இழந்த சூரியபகவான், இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டு சாபமும் பாவமும் நீங்கிப் பழைய நிலையை அடைந்ததாக தல புராணம் சொல்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் சித்திரையில், ஏழு நாள்கள் சூரிய பூஜை நடைபெறுகிறது.  

அதேபோல், தனது பழி பாவம் தீர தட்சன் வழிபட்ட சிவத் தலங்களில் ஒன்றாகவும் பனையபுரம் திகழ்கிறது. இதற்குச் சான்றாக  ராஜகோபுரத்தின் உள்ளே  வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தட்சன் வழிபடும் சிலை, புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.

சரித்திரத்தில் பனையபுரம்...

இங்கே கல்வெட்டுகள் பல காணப்பட்டாலும் அரசு மரபினரால் நிர்மாணிக்கப்பட்டவை 16 மட்டுமே. இவற்றில், முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012), 2-ம் ராஜேந்திரன் (கி.பி.1058), உடையார் ஆதிராஜேந்திர தேவன் (கி.பி. 1070), முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1118), முதலாம் ஜடவர்ம சுந்தரபாண்டியன் (கி.பி.1265), மூன்றாம் விக்கிரபாண்டியன்(கி.பி.1288)  ஆகியோரது குறிப்பிடத்தக்கவையாகும். 

இவற்றின் நகல்கள் மைசூர் தலைமைக்  கல்வெட்டாளர் அலுவலகத்தில் இன்றும் உள்ளது. மூலக் கல்வெட்டுகள், கோயில் புரனமைப்பின்போது  இடம்மாறி  மறைந்து விட்டனவாம். 

சோழப் பேரரசின்போது இதன் நிர்வாகம் வெகு சிறப்பாக இருந்து வந்தது. அதேபோல, மூன்றாம் விக்கிரம பாண்டியன் காலத்திலும் (கி.பி. 1288) மேலும் புத்துயிர் பெற்றதாம்.  
இவ்வாலய நிர்வாகத்தை  திருவொண்ணாழி சபையோம் என்ற குழு கண்காணித்து வந்ததை  இரண்டாம் ராஜேந்திரசோழன் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது அதேபோல், இவ்வாலய நிர்வாகத்தை நகரத்தார் கண் காணித்ததையும், கோயில் காப்பாளர் களாக சிவபிராமணர்கள்  நிர்வகித்த தகவலை யும் அறியமுடிகிறது.

முகலாயர் ஆட்சிக்காலத்திலும், கி.பி.17-ம் நூற்றாண்டிலும், பொருளாதார நெருக்கடியினால் இக்கோயிலின் செல்வச் சிறப்பு குறைந்தது. அதன்பின், இந்து சமய அறநிலையத்துறை இக்கோயிலைத் தன் பொறுப்பில் எடுத்தபோது நிலைமை மேம் பட்டது. ஆண்டுதோறும் சூரிய பூஜையும், அதன்பின் வரும் பிரம்மோற்சவமும்  ஊர்ப் பெரியவர்கள் மற்றும் பக்ககத்து ஊர் மக்களின் ஆதரவோடு  சிறப்பாக  நடைபெற்று வருகிறது. 

சோழர்கள் காலத்தில் இக்கோயில் மிகப் பெரிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது. அதேபோல்,  பசிப்பிணி போக்கும் வகையில்  சிவனடியார்கள் மற்றும் சிவபிராமணர்களுக்கு  நாள்தோறும்  உணவளித்து வந்தது.  இக்கோயிலில் கல்வி போதிக்கும் சிறுவர் பள்ளி இயங்கிவந்ததையும்  மூன்று தண்ணீர்ப் பந்தல்கள் இருந்ததையும் அறிய முடிகிறது.

அம்மையும் அப்பனும்! 

இக்கோயில் 73 சென்ட் நிலப்பரப்பளவில் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோயிலில், கருவறைச் சிற்பங்கள் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தவை. இதற்குச் சான்றாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா,  துர்க்கை  இன்றும் காட்சி  தருகின்றனர். 

ராஜகோபுரம் அறுபது அடி உயரத்தில் நான்கு நிலைகளைக் கொண்டு நிமிர்ந்து  நிற்கின்றது. இதுவும் இதன் அருகே உள்ள சிங்கமுகத் தூண்களும் விஜயநகரக் காலத்தவை ஆகும். 

கருவறையில் மூலவர் வட்ட வடிவ ஆவுடையாராகக் கிழக்கு முகமாகக் காட்சி தருகின்றார். இவரின் வடிவம் எளிமையாக, அதே நேரத்தில் ஒளி பொருந்தியதாக அமைந்து,  நம்மை ஈர்க்கின்றது.  திருஞான சம்பந்தர்,  புறவார் பனங்காட்டீசன் என அழைத்தாலும்,  கல்வெட்டுகளில்  கண்ணமர்ந்த நாயனார் என்றும்,  பரவை ஈஸ்வரமுடைய மகாதேவர் என்றும், திருப்பனங்காட்டுடைய மகாதேவர் என்றும் பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  
சிவனின் இடப்புறத்தில் சற்றுத் தொலைவில் அம்பிகைக்குத் தனியாக ஆலயம் அமைந்துள்ளது. இறைவி பெயர் மெய்யாம்பிகை.  இவளுக்கு புறவம்மை, சத்தியாம்பிகை  என்ற பெயர்களும் வழக்கில் உண்டு.  

கிழக்கு முகமாய் நின்ற கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய வரத முத்திரைகள் கொண்டும்  நான்குகரங்களுடன், எழிலான கோலத்தில் அன்னை  காட்சி தருகின்றாள். பூரண அலங்காரத்தில்  இவளின் திருவுருவம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அன்னையின் அழகைக் காண கண் கோடி வேண்டும் என்றால் அது மிகையல்ல. 

இது தவிர, கொடிமரம் அருகே  பல்லவர் கால கற்பலகை விநாயகர், விநாயகர், வள்ளி- தெய்வயானை யுடன் ஆறுமுகம் சந்நிதிகள், 63 நாயன்மார்கள் சிலைகள் மற்றும் திருநீலகண்டர் தன் துணைவியுடன் கோல் தாங்கி நிற்கும் அரிய கோலம்,  ராஜ கோபுரம் உள்புறம் விநாயகரைத் தொழும் தக்கனின்  கோலம் ஆகியன அமைந்துள்ளன. மேலும், இவற்றிற்கெல்லாம்  மகுடமாக,  இது சூரியத் தலமாக விளங்குவதால்  சிவனின் சந்நிதி வளாகத்துக்குள், தனித்து காட்சி தரும் சூரிய பகவானைத் தரிசிப்பது சிறப்பு.

இவ்வூரில் தீராத பஞ்சாயத்து வழக்குகளில் முடிவாக, அன்னை மெய்யாம்பிகை மீது சத்தியம் செய்யச் சொல்வது வழக்கம். தவறாக பொய்ச் சத்தியம் செய்பவர், அடுத்து எட்டு நாள்களுக்குள் தண்டனை பெறுவது உறுதி என்பதை இன்றும் இவ்வூர் மக்கள் நம்புகிறார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த அன்னையாக இவள் திகழ்கிறாள். 

ஆதவன் வழிபடும் அற்புதம்! 


ஆண்டுதோறும் சித்திரை மாதம்  முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாள்கள் சூரிய உதயத்தின்போது, சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக் கதிர்களால், நீண்டு வளர்ந்துள்ள ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் இவற்றை எல்லாம் கடந்து கருவறையில் வீற்றிருக்கும் பனங்காட்டீசனின் சிரசின் மீது பட்டு வணங்குகிறது. இதன்பின் அது மெல்லக் கீழிறங்கி, சிவனின் பாதத்தினை அடைகிறது. 

பாதத்தைத் தொடும் அதே வேளையில், சற்றுத் தொலைவில் உள்ள அருள்மிகு மெய்யாம்பிகை  அம்மனின் சிரசின் மீதும்  ஒளிக் கதிர்கள் விழுகின்றன. 

பின்பு அது மெள்ள கீழிறங்கி அன்னையின் பாதத்தினை அடைவ துடன், அன்றைய சூரிய பூஜை நிறைவு பெறுகிறது. 

இப்படித் தொடர்ந்து ஏழு நாள்கள் ஆண்டு தோறும் நிகழ்கின்றது. சிவனுக்கு  சக்தி அடக்கம் என்ற தத்துவத்தை இது உணர்த்தும் விதமாக அமைந் துள்ளது.

சூரியன் தன் ஒளிக் கதிர்களால்   நிகழ்த்திவரும்  இத்தகு அரிய நிகழ்ச்சி  இக்கோயிலின் தனிச் சிறப்பு ஆகும்.   இறைவனையும் இறைவியையும்  சூரியன் வழிபட்டு வணங்குவதாக ஐதீகம். பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது சூரியபூஜை. வானவியல் சாஸ்திரத்துக்கு ஏற்ற படி, குறிப்பிட்ட நாள்களில் சூரியக்கதிர்கள் உள்ளே விழும்படி அமைக்கப்பட்ட கட்டடக் கலையைத்தான் உலக அதிசயம்  என்று அழைக்கிறோம்.  

 ஏப்ரல் 14 முதல் 20-ம்தேதி வரை  சூரிய பூஜை நிகழும். இதைத் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் சூரிய உதயத்துக்கு முன்பே ஆலயத்துக்குள் இருக்க வேண்டும். நாமும் பனையபுரத்துக்குச் சென்று, அகிலநாயகனை ஆதவன் வழிபடும் அபூர்வக் காட்சியைத் தரிசித்து வருவோம்; அத்தலத்தில் உறையும் சிவனருளால் சிந்தை மகிழ வரங்கள் பெற்று மகிழ்வோம்.

அர்ச்சனை செய்யும்போது... 

அனுதினமும் இறை நாமங்களை மனதுக்குள் உச்சரித்து, பூக்களால் ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து பூஜிப்பது, அற்புதமான பலன்களைத் தரும் எளிய வழிபாடு ஆகும்.

அவ்வாறு பூக்களால் அர்ச்சிக்கும்போது அவற்றின் இதழ்கள் மேற்புறமாகவும், காம்பு பாகம் கீழ்நோக்கி இருக்கும்படியும் சமர்ப்பித்து அர்ச்சனை செய்யவேண்டும். 

அதேபோல் அன்றலர்ந்த மலர்களையே அர்ச்சனைக்கும் பூஜைக்கும் பயன்படுத்தவேண்டும். வில்வம், துளசி, தாமரை ஆகியவற்றுக்கு நிர்மால்யம் கிடையாது. மீண்டும் பயன்படுத்தலாம்.


பக்தர்கள் கவனத்துக்கு...

இறைவன்: ஸ்ரீபுறவார் பனங்காட்டீசன் 

இறைவி: ஸ்ரீமெய்யாம்பிகை

தீர்த்தம்: 
பத்ம தீர்த்தம் 

ஸ்தல விருட்சம்:  

தலமரங்களாக...   ஆண்பனை  உயரமாகவும், பெண்பனை குள்ளமாகவும் காட்சி தருவது, வியப்பான ஒன்றாகும்.  

பெண் பனையி லிருந்து விழும் பழத்தை உண்பவர் களுக்கு  மகப்பேறு கிடைக்கும் என்பது  நம்பிக்கை. பனை மரங்கள் நிறைந்த பூமியாக இத்தலம் திகழ்ந்ததால், பனையபுரம் என அழைக் கப்பட்டதென கூறுவோரும் உண்டு.

எப்படிச் செல்வது ?: 

விழுப்புரம் மாவட் டம், விழுப்புரம் வட்டத்தில் அமைந் துள்ளது இவ்வூர். விழுப்புரத்திலிருந்து  வட கிழக்கே சுமார் 10 கி.மீ. தொலை வில், விக்கிரவாண்டி - தஞ்சாவூர்,  விழுப்புரம் - வழுதாவூர் சாலைகளின் சந்திப்பில்  அமைந்துள்ளது. விழுப்புரத் திலிருந்து ஏராளமான பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்கின்றன. 

விக்கிரவாண்டி சுங்கச்சாலையை அடுத்து இடதுபுறம் செல்லும் விக்கிர வாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ் சாலையின் முதல் ஊராக பனையபுரம் அமைந்துள்ளது.

இந்தத் தலத்தின் அருகிலுள்ள தரிசிக்க வேண்டிய இடங்கள்: 

இவ்வூரின் கிழக்கே 10 கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற வக்கிர காளி அம்மன் ஆலயமும், அருகே தொல்லி யல் சிறப்பு வாய்ந்த அரிய கல் மரங்களும், மேற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் தேவாரத் தலமான திருவாமாத்தூரும், வண்ணச்சரம் தண்டபாணி சுவாமிகளின் கௌமார மடமும் அமைந்துள்ளன. 

தொகையடியார்கள்!


ர், பெயர், அற்புதச் செயல்கள் ஆகியவற்றோடு கூடியவை அறுபத்து மூவரின் வரலாறுகள். நாயன்மார்கள் மட்டு மின்றி... சித்தத்தில் சிவத்தை ஏற்றி, முப்பொழுதும் சிவத்தொண்டில் ஈடுபட்டு, நன்னெறியில் வாழும் இன்னும்சில பெரியோர்களையும் தொகையடியார்களாகப் போற்றி வருகிறோம். 
திருத்தொண்டர் புராணத்தில் ‘உலகெ லாம்’ என்ற முதற் செய்யுளில் ஒன்பது ‘உ’காரங்கள் வருகின்றன என்றும், அவை ஒன்பது வகை தொகையடியார்களைக் குறிக்கும் என்றும் கூறுவர். 

சிதம்பரம் திருக்கோயிலில் சிவகங்கை தீர்த்தத்துக்கு வடக்குப் பகுதியில் ஒன்பது லிங்கங்களை உடைய சந்நிதி ஒன்றுள்ளது. ‘திருத்தொண்ட தொகையீச்சரம்’ என்ற பெயருடன் திகழும் அந்தச் சந்நிதி  ஒன்பது தொகையடியாரைக் குறிப்பதற்கு ஏற்பட்டதே என்பர்.  

சுந்தரர் திருத்தொண்டத் தொகையிலும், நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியிலும், சேக்கிழார் பெரிய புராணத்திலும் தொகையடியார்களைப் பற்றிக் கூறியுள்ளனர். நாமும் தொகையடி யார்களைத் தெரிந்துகொள்வோம். 

தில்லைவாழ் அந்தணர் 

தி
ல்லை நடராஜரை முதல்வராகக் கொண்டு மொத்தம் மூவாயிரம் அந்தணர் கள். இறைவன் திருவடித்தொண்டினை ஏற்று ஒழுகுபவர்கள். இவர்கள் நான்மறை, ஆறங்கங்களில் வல்லவர். 

தூய மரபினர்; திருநீற்றின் மகிமையைப் பற்றுக்கோடாகக் கொண்டவர்கள்.தானம், தவம் செய்பவர்; மானம், பொறுமை உடையவர்கள் இவர்கள் திருவாரூர் பெருமானின் திரு வாக்கினால், திருத்தொண்டத் தொகையின் முதலில் வைத்து சொல்லப்பெற்ற பெருமை உடையவர்கள். இம்மையில்  இறையருள் கிடைக்கப் பெற்றவர்.  

பொய்யடிமை இல்லாத புலவர் 

சொல் தெளிவு, பொருள் தெளிவு ஆகியவற்றுக்கு உண் டாகும் பலன்கள், இறையருள் பெறுதல் பொருட்டே என்று துணிந்தவர்கள் இவர்கள்.  

சிவனாரை அன்றி வேறு எவரையும் பாடாத மெய்யடி யவர் இவர்கள். நக்கீரர், கபிலர், பரணர் முதலிய பல புலவர் கள் இவ்வகையில் அடங்குவர்.

பத்தராய்ப் பணிவார் 


ஆசையோடு சிவனை வழி படுதலும், அடியாரைச் சார்ந்து வழிபடுதலும் இவர்களுக்கு உரித்தானது. செய்யும் எத்தொழிலையும் சிவனுக்கென்றே இயற்றுபவர். ‘நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், அடந் தாலும், விழித்தாலும், இமைத்தாலும் மன்றாடும் மலர்பதனொருகாலும்’ மறவாதவர். 

பரமனையே பாடுவார் 

சிவபெருமானையே பொருளாகக் கொண்ட இயலிசைப் பாட்டுகளை உள்ளம் உருகிப் பாடும் அடியார்கள்.

சித்தத்தை சிவன்பாலே வைத்தார் 

பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து விளங் கும் நாதாந்தத்திலே சித்தம் வைத்துச் சிவத்தை அடைந்து நிற்கும் அடியார்கள். 

திருவாரூரில் பிறந்தார் 

திருக்கயிலை வீற்றிருக்கும் திருக்கணத்தாரே திருவாரூரில் பிறந்தவர்கள். ‘திருவாரூர் பிறக்க முக்தி’ என்பது பழமொழி. 

முப்போதும் திருமேனி தீண்டுவார் 


எப்போதும் இனியராகிய சிவபெருமானை, சிவாகம நெறி தவறாமல், அப்போதைக்கப்போது ஆர்வம் மிகும் அன்பினராய், முப்போதும் அர்ச்சிக்கும் ஆதிசைவர்கள். 

முழு நீறு பூசிய முனிவர் 

தர்மசீலர்; அதத்துவ நெறியுணர்ந்தவர்; நீதி பிழையா நெறி நிற்பவர்; விதிப்படி உருவாக்கிய திருநீற்றை, சிவனைப் போற்றி மேனி முழுவதும் அணியும் முனிவர். 

அப்பாலும் அடி சார்ந்தார் 


தமிழகத்துக்கு அப்பாலுள்ள பிரதேசங் களிலும்... திருத்தொண்டத் தொகையில் போற்றப் பட்ட அடியார்களின் காலத்துக்கு முன்னும் பின்னும், சிவபெருமானது அடியைச் சார்ந்தவர்கள்.  

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், திருநணா, பவானி - ஈரோடு.

Image result for சங்கமேஸ்வரர் கோவில்

தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலமான தட்சிணப்பிரயாகை ; பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும்  பரிகாரம் செய்யும் கூடுதுறை ;  மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் தன்னகத்தே கொண்ட மிக பிரபலமான சிவஸ்தலம்..

🌸🌷🌸🌷 BRS🌸🌷🌸🌷🌸

தொலைபேசி எண் : +91- 4256 - 230 192, +91- 98432 48588

💦🌿💦🌿 BRS 💦🌿💦🌿💦

Related image

மூலவர் : சங்கமேஸ்வரர் ( அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார்), சங்க முகநாதேஸ்வரர்

அம்மன்/தாயார் : வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி

தல விருட்சம் : இலந்தை

தீர்த்தம் : காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காரண ஆகமம்

புராண பெயர் : திருநணா, பவானி முக்கூடல்

ஊர் : பவானி

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்

🅱 தேவாரப்பதிகம்:🅱

முத்தேர் நகையாள் இடமாகத் தம்மார்பில் வெண்ணூல் பூண்டு தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தார் இடம்போலும் சோலைசூழ்ந்த அத்தேன் அளியுண் களியால் இசைமுரல ஆலத்தும்பி தெத்தேன் எனமுரலக் கேட்டார் வினை கெடுக்கும் திருநணாவே. - திருஞானசம்பந்தர்

🌀 தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 3வது தலம்.

🅱 திருவிழாக்கள் :🅱

🍄 ஆடிப் பதினெட்டுப்பெருக்குத் திருவிழா

🍄 சித்திரைமாதம், சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு "திருத்தேர்விழா".

🍄 சித்திரை மாதம்  ஹஸ்தநட்சத்திரத்தில் ஸ்ரீஆதிகேசவபெருமாளுக்கு "திருத்தேர்விழா".

🍄 சித்ரா பவுர்ணமி

🍄 ரதசப்தமி சித்திரையில் 13 நாள் தேர்திருவிழா. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 

🍄 ஆடி அமாவாசை

🍄 தை அமாவாசை

🍄 கிரகண காலங்கள்

🍄 சிவராத்திரி

🍄 வைகுண்ட ஏகாதசி

🍄 மார்கழி, தை மாதங்களில் பவானித் திருமுறைக் கழகத்தினரால் பன்னிரு திருமுறை விழாவும், மார்கழி பஜனையும் நடைபெறுகின்றன.

Image result for சங்கமேஸ்வரர் கோவில்

🅱 தல சிறப்பு:🅱

🎭 சங்கமேசுவரப் பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 மூலவர் கிழக்கு நோக்கியும், குபேரன் பூஜித்ததால் ராஜகோபுரம் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது.

🎭 சிவன் சன்னதிக்கு பின்னால் பஞ்சபூத லிங்கங்கள் உள்ளது. 

🎭 விஸ்வாமித்திரர் நதியின் கரையில் தனியாக லிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி லிங்கம் எனப்படுகிறது. 

🎭 வேதங்களுக்கெல்லாம் தலைவியாக விளங்குவதாலும், சதுர் வேதங்களால் பூசை செய்யப் பெற்றதாலும் அம்பாள் வேதநாயகி என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

🎭 ராவணன் இங்குள்ள சகஸ்ரலிங்கத்தை பூஜை செய்துள்ளான். 

🎭 நான்கு வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளன. எனவே, இங்கு வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. 

🎭 இங்கு கோபுரமே லிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி உள்ளது. 

🎭 அம்மனுக்கு பவானி, சங்கமேஸ்வரி, வேதநாயகி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி என்ற பெயர்கள் உண்டு. இந்த அம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது.

🎭 இத்தலத்திற்கு திருநணா, பவானி கூடல், முக்கூடல், சங்கம க்ஷேத்திரம், பராசர க்ஷேத்திரம், வக்கிரபுரம், பதரிவனம், வீரபுரம், விஜயாபுரி என்ற பெயர்கள் உண்டு.

🎭 தட்சிண அளகை, தட்சிண கைலாயம், தட்சிணப் பிரயாகை போன்ற சிறப்புப் பெயர்களுடன், மூன்று நதிகளும் கூடுவதால் முக்கூடல் , கூடுதுறை என்றும், பராசர முனிவரால் வழிபடப்பட்டதால் பராசர தலம் என்றும், குபேரனால் வழிபடப்பட்டதால் குபேரபுரி என்றும் வக்கிராசுரன் இறைவனை வழிபட்டதால் வக்கிரபுரி என்றும், விஜய அரசரால் வழிபடப்பட்டதால் விசயபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

🎭 பெருமாளுக்கும் தாயாருக்கும் நடுவே யோகநரசிம்மர் லட்சுமியுடன் சாந்தமாக அருளுகிறார். சைவம் வைணவம் இரண்டிற்கும் சேர்த்து ஒரே ராஜகோபுரம். சிவன் சன்னதிக்கு பின்னால் பஞ்சபூத லிங்கங்கள் உள்ளது.

🎭 விஸ்வாமித்திரர் நதியின் கரையில் தனியாக லிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி லிங்கம் எனப்படுகிறது. 

🎭 வேணுகோபாலர் சன்னதிக்கு பின்புறத்தில் பசு ஒன்று உள்ளது. இந்த பசுவின் முன்பகுதியில் தலை இருப்பதோடு, பின் உடல் பகுதியில் மற்றொரு தலையும் இருக்கிறது.இவ்வாறு பசு ஒரே உடல், இரண்டு தலைகளுடன் காட்சியளிப்பது வித்தியாசமாக உள்ளது. 

🎭 பெருமாளுக்கும் தாயாருக்கும் நடுவே யோகநரசிம்மர் லட்சுமியுடன் சாந்தமாக அருளுகிறார். சைவம் வைணவம் இரண்டிற்கும் சேர்த்து ஒரே ராஜகோபுரம்.

🎭 ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது பட்டு சூரிய பூஜை நடப்பது சிறப்பு.

🎭 கூடுதுறையிலிருந்து திருக்கோயில் வரும் வழியில் அமிர்தலிங்கேசுவரர் சன்னதி அமைந்துள்ளது. கையில் எடுப்பதற்கு வாகாக அமைந்துள்ளதால் , இந்த மேல்பாகத்தைக் குழந்தை இல்லாத தாய்மார்கள் இடுப்பில் வைத்துக் கொண்டு மூர்த்தியை வலம் வந்து மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்கின்றனர்.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 207 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 நடைதிறப்பு:🅱

🔑 காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 🔑

பூஜை விவரம் : ஆறுகால பூஜைகள்.

🌹 காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி

🌿 காலை 8 மணிக்கு காலை சாந்தி 

🌹 நண்பகல் 12 மணிக்கு உச்சிக்காலம் 

🌿 மாலை 4.30 மணிக்கு இடைக்காலம், 

🌹 மாலை 5.15 மணிக்கு சாயரட்சை 

🌿 இரவு 7.30 மணிக்கு அர்த்த ஜாமம் என ஆறு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன.

Image result for சங்கமேஸ்வரர் கோவில்

🅱 பொது தகவல்:🅱

🌸 சிவனுக்கும் அம்மனுக்கும் இடையே முருகன் தனி சன்னதியில் உள்ளார். இது சோமாஸ்கந்த அமைப்பு கோயிலாகும். இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். 

🌸 இத்தலம் நான்கு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது.

🌸 இத்தலத்திற்கு பத்மகிரி என்ற பெயர் உண்டு. இதை சுற்றிலும் நாககிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி உள்ளது. 

🌸 வட இந்தியாவில் கங்கையுடன், யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் தலம் திரிவேணி சங்கமம் (அலகாபாத்) எனப்படுகிறது. இங்கு சரஸ்வதி நதி கண்ணுக்கு தெரிவதில்லை. இது போல தென்னகத்தில் காவிரியுடன், பவானி மற்றும் அமுதநதி ஆகிய மூன்று நதிகளும் இத்தலத்தில் சங்கமிக்கின்றன. இதில் அமிர்தநதி மட்டும் கண்ணிற்கு தெரியாது.

🌸 இந்த நதியானது பூமிக்கடியில் இருந்து இவ்விடத்தில் சங்கமிப்பதாக ஐதீகம். மூன்று நதிகள் சங்கமிப்பதால் இத்தலம், "தென்திரிவேணி சங்கமம்' என அழைக்கப்படுகிறது. எனவே இத்தல இறைவன் சங்கமேஸ்வரர் எனப்படுகிறார்.

🌸 வடநாட்டின் திருக்காசியைப் புண்ணியத் தலமாக வழிபடுவதற்கு இணையாகத் தென்நாட்டில் பவானி கூடுதுறையை “இளைய காசி” என்று அழைத்து வழிபடுகிறார்கள். காசியைப் போன்றே இங்கு இறந்தாலும், மோட்சம் என்றும், இறந்தவர்களின் அஸ்தியை இங்கு கரைக்கப்படுவதும் பெருகி வருகின்றன. நீண்ட ஆயுளுக்கும், திருமணத்தடை நீங்கவும், இங்கு வழிபடுவதும் வழமை.

🌸 இங்கு பெருமாள் ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமத்துடனும், தாயார் சவுந்தரவல்லி என்ற திருநாமத்துடனும், இத்தல விநாயகர் சங்கம விநாயகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.

🌸 அகால மரணமடைந்தவர்களுக்காக "நாராயணபலி' பூஜை செய்யப்படுகிறது. இதனால் அவர்களது ஆத்மா சாந்தியடைவதாக ஐதீகம்.

🌸 இக்கோயிலில் உள்ள கல் சிற்பங்கள் புராணக் கதைகள், தேவாரக் கதைகளை விளக்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

🅱 பிரார்த்தனை:🅱

🌹 குழந்தை பாக்கியம் பெறவும், நினைத்த காரியங்கள் நடக்கவும் நதியில் குளித்து விட்டு இங்குள்ள அமிர்த லிங்கத்தை கையில் எடுத்து ஆவுடையை 3 தடவை சுற்றி வந்து தரிசித்தால் சிறந்த பலன் உண்டு.

🌹 குழந்தை பாக்கியம் வேண்டுபவர் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தல விநாயகரையும், சங்கமேஸ்வரரையும் வழிபட்டு இங்குள்ள இலந்தை பழங்களை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🌹 மாந்தி(சனி மகன்) கிரகத்தின் ரூபத்தில் சனிபகவான் தனி சன்னதியில் உள்ளார். மாந்தி தோஷம், குளிக சாந்தி தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.

🌹 ஜுரஹரேஸ்வரர் தனி சன்னதியில் அருளுகிறார். அடிக்கடி காய்ச்சல், தோல் வியாதி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து மிளகு ரச சாதத்துடன் அரைக்கீரை கூட்டு நைவேத்தியம் செய்து வழிபட்டால் உடனடி நிவாரணம் கிடைப்பதாக கூறப்படுகிறது. வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு, இவரை வில்வத்தினால் அர்ச்சித்து அதை உணவில் சேர்த்து கொண்டால் நலம்.

🌹 நாக தோஷம் உள்ளவர்கள், கல்லில் செய்த நாகரைக்கொண்டு வந்து, ஆற்றின் கரையில் இருக்கும் விநாயகர் அருகே பிரதிஷ்டை நாக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், வாழை மரத்திற்கு தாலி கட்டி அதை ஆற்றில் விடுகிறார்கள். பெண்கள், அரசங்கொத்திற்கு பூஜை செய்து அதை ஆற்றில் விடுகிறார்கள்.

Image result for சங்கமேஸ்வரர் கோவில்

🅱 நேர்த்திக்கடன்:🅱

♻ சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

🅱 தலபெருமை:🅱

🌱 அம்மன், நதி, தலம் மூன்றிற்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப்பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு. இத்தலம் வந்து நீராடி, இறைவனை தரிசிப்பவர்களுக்கு "யாதொரு தீங்கும் நண்ணாது (நெருங்காது)'. எனவே இத்தலத்திற்கு "திருநணா' என்ற புராணப்பெயரும் உண்டு.

🌱 இத்தலம் நான்கு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. பத்மகிரி என்ற பெயர் கொண்ட இத்தலத்தைச் சுற்றிலும் நாககிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி ஆகியவை உள்ளன.

வளம் சேர்க்கும் ஆடி 18 : Ⓜ

🌱 பவானி கூடுதுறையில் எப்போது நீராடினாலும் சிறந்த பலன் உண்டு. இருந்தாலும் அமாவாசை நாட்களிலும், ஆடி 18 அன்றும் இங்கு பெரும் கூட்டம் கூடுகிறது. ஆடி 18ம் நாளில் இக்கூடுதுறையில் சுமங்கலிப்பெண்கள் ஆயிரக்கணக்கில் கூடி, தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து வழிபடுவர்.

🌱 காவிரி அம்மனுக்கு தீபாராதனை செய்து, மாங்கல்யம் நிலைக்கவும், வீட்டில் உள்ள இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடவும் வேண்டி, மஞ்சள் நூல் கயிற்றை அணிந்து கொள்வர்.

🌱 சிறுமிகளுக்கும், கன்னிப்பெண்களுக்கும் கூட இக்கயிறை, வயதில் மூத்த சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பர்.பின்னர் தேங்காய், பழம், காதோலை கருகமணி ஆகியவற்றை இலையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவர்.

🌱 திருமணமான புதுத்தம்பதியினர் காவிரிக்கு பூஜை செய்து, தாங்கள் திருமணத்தன்று அணிந்திருந்த மணமாலைகளை பத்திரப்படுத்தி இந்த நாளில் ஆற்றில் விடுவர்.

பரிகார தலம் :

🌱 தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லை. இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது.

🌱 இங்குள்ள நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்வதால் பிதுர்களுக்குரிய பூஜை செய்தால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகிறது.

இலந்தை பழம் நைவேத்தியம் :

🌱 கோயிலின் தென்மேற்கு மூலையில் உள்ள மேடை மீது உள்ள தல விருட்சம் இலந்தை மரம் தனி சிறப்பு கொண்டது. இங்கு தான் குபேரனுக்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தரிசனம் தந்துள்ளார். இம்மரம் தினமும் இறைவனின் நைவேத்தியத்திற்கு சுவைமிக்க பழங்களை தருகிறது.

கோவில் அமைப்பு:

🍁 பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

🍁 பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

🍁 கோவிலுக்கு இரண்டு வாயில்கள். இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.

🍁 திருக்கோவிலின் முகப்பிலேயே நந்தீஸ்வரர் நம்மை வரவேற்க, கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது.

🍁 இராஜ கோபுரம் முகப்பில் இருக்கும் விநாயகர், அனுமன் சன்னதிகளை வணங்கி இராஜகோபுரத்தை கடந்தால் இடப்பக்கம் திருக்கோவில் அலுவலகமும் வலது புறம் அருள்மிகு வேணுகோபாலர் காக்கும் கடவுள் வெங்கடாசலாபதி சன்னதியின் கொடிமரம் ஆகியவற்றைக் கடந்தால் லட்சுமி நரசிம்மர்,மகாலட்சுமி சன்னதிகள் மற்றும் திருக்கோவில் அலுவலர்களால் அழகாக பராமரிக்கும் புல்வெளிகள் ,பூச்செடிகள் அழகு.

🍁 அதைத்தாண்டிச்சென்றால் சித்தி விநாயகர் சன்னதி தரிசித்து சென்றால் வேதநாயகி அம்மன் சன்னதி முன் கொடிமரம் தரிசித்து மூலவரை தரிசிக்க சற்று நடந்தால் சங்கமேஷ்வரர் ஆலய முகப்பில் கொடிமரம் வணங்கி விநாயகர் ,முருகரை வணங்கி உட்பிரகாரத்திள் நந்தீஷ்வரர் அவர்க்கு பின் சூரிய ,சந்திர சிலைகள் இடது புறம் நால்வர்கள் சிலை வலதுபுறம் நடராஜர் சன்னதி,முன்பகுதியில் காக்கும் கடவுள்களை வணங்கி ஆலய உட்பகுதிக்கு சென்றால் வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம்.

🍁 சுப்பிரமணியக் கடவுளாம் முருகனுக்கு அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில் சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம். அம்பாளுக்கும் ஸ்வாமிக்கும் நடுவே சுப்ரமணியர் அமைந்திருப்பது சோமாஸ்கந்த அமைப்பு. இது ரொம்பவே விசேஷம் என்பார்கள்.

🍁 அருள்மிகு சங்கமேஸ்வரரின் சன்னதியை தரிசனம் செய்த அரும் பாக்கியம் கிட்டுகிறது . நல்ல வெண் திருநீரு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மூலவர் தரிசித்து பின் இடப்புறமாக வெளியே வந்தால் 68 நாயன்மார்களையும் ,தட்சிணாமூர்த்தியை தரிசித்து மூலவர் பின்புறம் விநாயகர் , வள்ளி தெய்வானையுடன் முருகர் தரிசனம் முடித்து, மூலவரின் இடப்புறம் சண்டிகேஷ்வரர் அருள்பெற்று இடப்புறம் வெளியே வந்தால் நவகிரக சன்னதியும் காலபைரவர் சன்னதியும் அருகருகே அமைந்துள்ளது.

🍁 வெளிப்பிரகாரம் சுற்றினால் திருக்கோவிலின் ஸ்தல விருட்சம் பழங்கால "இலந்தமரம்" அதன் அடியில் ஆனைமுகந்தோன் சன்னதியை காணலாம். சனிஷ்வரர்க்கும், முருகருக்கும் தனி சன்னதியகளில் பூஜை நடைபெறுகிறது.அதன் பின் வேதநாயகி அம்மனை தரிசிக்கலாம்.

Related image

மூர்த்தி சங்கமம்:

🌀 வேதகிரி (ஊராட்சிக் கோட்டை மலை), சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோட்டு மலை), மங்களகிரி (பெருமாள் மலை), பதுமகிரி ஆகிய இம்மலைகளுக்கிடையே “பவானி” திருத்தலம் அமைந்துள்ளதால் “பஞ்சகிரி மத்திய பிரதேசம்” என்றும் அழைக்கப்படுகிறது.

🌀 ஒரே ராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் “சேத்திர சங்கமம்” என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகசுவரலிங்கேசுவரர் மற்றும் காயத்ரி லிங்கேசுவரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கிணைந்து உள்ளதால் “மூர்த்தி சங்கமம்” என்றும் வழங்கப்படுகிறது.

🌀 பதுமகிரி அமைந்துள்ள, காயத்ரி லிங்கேசுவரர் சன்னதி உள்ளது. இம்மலையும் அதனை அடுத்துள்ள காயத்ரி மடுவும், காயத்ரி லிங்கமும் மிகப்பழமையானதாகும்.ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலைச் சுற்றிலும் பல்வேறு லிங்கங்கள் இருந்தாலும், கோயில் வளாகத்திலேயே காவிரிக் கரையோரம் “காயத்ரி லிங்கேசுவரர்” தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்.

மூர்த்தி - லிங்கம், 
தலம் - பதுமகிரி, 
தீர்த்தம் - காயத்ரி மடு.

🌀 விசுவாமித்திர மாமுனிகள், இங்குதான் காயத்ரி மந்திரத்தை ஓதினார் என்பதால், இங்கிருந்து காயத்ரி மந்திரத்தை தவறின்றி ஓர் முறை ஓதினாலும், ஓராயிரம் முறை ஓதியதற்குச் சமமாக பல நன்மைகள் கிட்டும் என்று நம்பப்படுகிறது.

🌀 இங்குள்ள காயத்ரி மடு, நீத்தம் கற்றவர்கள் கூட, நீந்திவர இயலாமல் திணறும் அளவிலான சுழற்சி உடைய , வளைந்த பாறையால் அமைந்துள்ளது வியப்புக்குரியது. இதன் காரணமாகவே தற்போது இது மூடப்பட்டுள்ளது.

🌀 இவ்வாலயத்தின் மேற்கில் ஒரே லிங்கத்தில் 1008 லிங்க முக அமைப்புடன் கூடிய “சகசுவர லிங்கேசுவரர்” சன்னதி மிக அழகான வடிவமைப்பு கொண்டது. சங்கமேசுவரர் ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் ஒரு மேடையின் மீது, “இலந்தை மரம்” தல மரமாக அமைந்துள்ளது. இம்மரம் நாள்தோறும், இறையனாரின் பூசைக்கு, மிகச்சுவையான ஒரு கனியைக் கொடுப்பதாகவும், குழந்தை பேறு தரவல்லது என்றும் நம்பப்படுகிறது.

🌀 இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் கல் தூண்களின் இருபுறங்களிலும் கல்லினால் செய்த கற்சங்கலி மிகுந்த வேலைப்பாடு உடையது. சங்கமேசுவரர் சன்னதிக்கு வடக்கில், சுரகரேசுவரர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு மிளகு ரசம் வைத்து படையலிட்டு, அப்பிரசாதத்தை அருந்திவர, சுரம் (காய்ச்சல்) பித்தம், வாதம் போன்ற நோய்கள் நீங்குவதாகவும் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

🌀 வேதநாயகி அம்மன் சன்னதியின் முன் மண்டபத்தில், “சிரிக்கும் சிலை” மற்றும் மிக அழகிய பல சிற்பங்கள் அமையப் பெற்றுள்ளது. சிரிக்கும் சிலை மீது தண்ணீர் ஊற்றினால் அச்சிலை சிரிக்கும் தோற்றமளிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கலை, “கல் விரிக்கும் கலை” எனப் போற்றப்படுகிறது.

🌀 இக்கோவிலின் ,வேதநாயகி அம்மன் சன்னதிக்கு நேர் எதிரில், கிழக்கு மதிற்சுவரில் மூன்று துவாரங்கள் காணப்படுகின்றன. இந்த துவாரங்களின் பின்னணியில் ஒரு சுவையான கதையும் கூறப்படுகிறது. 1804ஆம் ஆண்டில் இங்கு ஆட்சியராக இருந்தவர் வில்லியம் கேரோ. தினசரி சங்கமேசுவரர் ஆலயத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதையும், கூடுதுறையில் நீராடுவதையும், அம்மன் புகழ் பாடுவதையும் கேட்டு ஆச்சரியம் கொண்டிருந்திருக்கிறார்.

🌀 ஒரு நாள் மேல்மாடியில் இருந்த தம் அறையில் அவர் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், திடீரென, வேதநாயகி அம்மன் போன்று தோற்றம் உடைய ஒரு சிறு பெண் குழந்தை தம்மை எழுப்பி, கையைப் பிடித்து வெளியே அழைத்து வருவது போல் கனவு கண்டு , உடனே விழித்துக் கொண்டவர் எழுந்து வெளியே வந்து பார்த்திருக்கிறார். அந்த நேரத்தில் அவர் படுத்திருந்த இடத்தின் மேலிருந்த விட்டம் முரிந்து  மேற்கூரையே முற்றிலும் இடிந்து விழக் கண்கூடாகக் கண்டார்.

Related image

🌀 அம்பிகையே நேரில் வந்து தம் உயிரைக் காத்ததாக நம்பிய ஆட்சியர் அவர்கள், மனம் கனிந்துறுகி, தமது காணிக்கையாக அம்மனுக்கு அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய , யானைத் தந்தத்தினால் ஆன, பல்லக்கு ஊஞ்சலும், ஆபரணங்களும் வழங்கியுள்ளார்.

🌀 ஆயினும், இவர் வேற்று மதத்தவரானக் காரணத்தால் அம்மனை தரிசிக்க அனுமதியில்லை. இதை அறிந்த தாலுக்கா தாசில்தார், அம்பிகையைத் தரிசிக்கும் பொருட்டு, மூன்று துவாரங்களை அமைத்துக் கொடுத்தார். அதன் மூலம் அம்மனை அவர் மனமார தரிசித்திருக்கிறார்.

🌀 வேதநாயகி அம்மன் ஆலயத்தை அடுத்து சௌந்திரவல்லித் தாயார் சன்னதியும் , ஆதிகேசவப் பெருமாள் சன்னதியும் உள்ளன. இப்புனிதமான இரு சன்னதிகளுக்கிடையில் யோக இலக்குமி நரசிம்மர் சன்னதி உள்ளது. கிழக்கு நோக்கியுள்ள ஆதிகேசவப் பெருமாள்  சங்கு சக்கரதாரியாக திவ்ய தரிசனம் அளிக்கிறார். இங்குள்ள வேணுகோபாலர், பாமா, ருக்குமணி உருவச் சிலைகள் சாலிக்கிராமத்தால் மிகவும் அழகுற அமைக்கப் பெற்றவைகளாகும்.

நூல்கள் ; கல்வெட்டுகள்:

💦 புலவர் கு.குமாரசுவாமி பிள்ளையவர்களால் கூடற்புராண வசனம் என்னும் நூலும், பவானிப் பதிற்றுப்பத்தந்தாதி என்னும் நூலும் இயற்றப்பட்டுள்ளது. ஓலைச்சுவடியிலிருந்து வேதநாயகியம்மன் சதகம் என்னும் நூலும் கிடைத்துள்ளது. கலம்பகம், உலா போன்ற நூல்களுடன், திருமுகவூர் மு.ரா. கந்தசாமிக்கவிராயர் அவர்கள் இயற்றிய பவாநி வேதநாயகியம்மன் பிள்ளைத்தமிழ் என்னும் நூலும் பவானி தலத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

💦 “நணா” எனும் தலத்திற்கு உடைய இறைவன் “நண்ணாவுடையார்” எனபடுகிறார். ”மிகத்தொண்மையான துவாரபாலகர் கற்சிலைகள் கொண்ட பவானிச் சிவாலயத்தில் முற்கால அரசர்கள் பலருடைய கல்வெட்டுகள் இருந்திருக்க வேண்டும். இங்கு கிடைக்கும் முதல் கல்வெட்டு விசய நகர மன்னன் கிருட்டிண தேவராயனின் (1509 - 1529) கொங்கு மண்டல நிர்வாகி பாலதேவராசன் காலக்கல்வெட்டுத்தான் . 1640 முதல் கெட்டி முதலிகளின் கல்வெட்டுகளும், பிற கல்வெட்டுகளும் உள்ளன. “ என்கிறார் புலவர் கல்வெட்டு ராசு அவர்கள்.

💦 மேலும் அவர், 1640, 1645, 1741ஆம் ஆண்டுக் கல்வெட்டுகளில் நண்ணாவுடையார் , நண்ணாவுடையார் சுவாமி, பண்ணார் மொழியம்மை, பண்ணார் மொழியம்மன் என்றே குறிக்கப்படுகிறது, என்கிறார்.

💦 11.01.1840-ல் கலெக்டர் வில்லியம் கேரோவின் எழுத்துப் பொறிப்பில் “ஸ்ரீ பவாநி கூடல் வேதநாயகி அம்மன்” என்ற தொடரைக் காணுகின்றோம். தலைதடுமாறிக் கலைந்து கிடந்த வேதங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டதால் நான்றா - புராண ஐதீகத்தால் “வேதகிரி” என்றும், அம்மன் வேதநாயகி என்றும் அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

💦 பண்ணார் மொழியம்மையின் பெயர் வேதநாயகியாக மாற்றம் பெற்றதற்கு “வேதகிரியே” காரணம் என்கிறார். நாரதர் செய்த வேள்வியின் சாம்பலால் இம்மலை ஏற்பட்டதாகக் கொங்கு மண்டலச் சதகம் கூறுகிறது. நண்ணாவுடையார் எழுந்தருளியுள்ள பவானியை “நண்ணாவூர்” எனக் குறிக்கும் வழக்கமும் முன்பு இருந்துள்ளது.

🅱 தல வரலாறு:🅱

🔥 வடக்கு திசைக்கு அதிபதியான குபேரன் பூலோகத்தில் உள்ள புனித தலங்களை தரிசிக்க விரும்பினான். அவன் ஒவ்வொரு தலங்களாக சென்று தரிசித்த பின் இத்தலத்திற்கு வந்தான்.

🔥 அங்கு யோகிகள், ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் தவம் செய்வதையும் கண்டான். அத்துடன் மான், பசு, புலி, யானை, சிங்கம், நாகம், எலி ஆகிய அனைத்து உயிரினங்கள் சண்டையின்றி ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவம் செய்பவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதையும் பார்த்த குபேரன் மிகுந்த ஆச்சரியமடைந்தான்.

🔥 இந்த இடத்தில் தெய்வீக சக்தி இருப்பதை அறிந்து அவனும் இறைவன் தரிசனம் வேண்டி தவம் செய்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த சிவனும் திருமாலும் குபேரனுக்கு தரிசனம் தந்தார்கள். அத்துடன் சிவபெருமான் அங்கிருந்த இலந்தை மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றி அருள்புரிந்தார்.

🔥 அப்போது அசரீரி தோன்றி, "குபேரனே ! வேண்டும் வரம் கேள்,'' என்றது. -"இறைவா ! உனது பெயரான அளகேசன் என்ற பெயரால் இத்தலம் விளங்கி, உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள வேண்டும்,'' என வேண்டினான். அன்றிலிருந்து இத்தலம் "தட்சிண அளகை' என்ற பெயர் பெற்றது. திருமாலும் சிவனுக்கு இடப்பக்கம் ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.

🅱 சிறப்பம்சம்:🅱
   
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ சுயம்பு மூர்த்தியாக உருவான சங்கமேசுவரப் பெருமான் உறையும் பழம்பெரும் ஆலயம்.

♻ இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது.

♻ திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் பாதிப்பில் இருப்பவர்கள் இன்றும் ஜூரகரீஸ்வரரை வணங்கினால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்.

♻ கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.

♻ கொங்கு நாட்டுத் தலங்கள் எல்லாவற்றிலும் சனீஸ்ர பகவானுக்கு தனி சந்நிதி இருக்கும். இத்தலத்திலும் சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி உண்டு. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர். மேலும் இக்கோவிலில் உள்ள அமிர்தலிங்கேஸ்வரர் சந்நிதி சிறப்புடையதாகும்.

♻ லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் எனபது மக்களின் நம்பிக்கையாகும்.

♻ சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் திருப்பணிகள் மேற்கொண்ட ஆலயம் இது.

♻ திருஞானசம்பந்தர், அக்காலத்தில் திருநணா என்று வழங்கிய பவானி கூடுதுறைக்கு வந்தபொழுது, “அல்லாத சாதிகளும் வந்து கைதொழுது ஏத்தும் திருநணா” என்று பாடியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, வில்லியம் காரோ என்ற வேற்று நாட்டைச் சேர்ந்த, வேற்று மதத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் வந்து கைதொழுவார் என்று அம்பிகையிடம் பாலை உண்டு, அனைத்தையும் உணர்ந்த திருஞானசம்பந்தருக்குத் தெரியாமலா இருக்கும் ?


🅱 இருப்பிடம்:🅱

✈ ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மி. தொலைவிலும், சேலத்தில் இருந்து 56 கி.மி. தொலைவிலும் பவானி உள்ளது. சேலம், ஈரோட்டில் இருந்து பவானிக்கு பேருந்து வசதிகள் உள்ளது.

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄

அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில் (அ) நேத்ரார்ப்பணேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை – திருவாரூர்

Related image

ஞானசம்பந்தர் பெருமானுக்கும், அப்பர் பெருமானுக்கும் இறைவன் படிக்காசு தந்தருளி அவர்கள் மூலமாகச் சிவனடியார்க்கு அமுதூட்டிய தலம் ; திருமால் இறைவனைப் பூஜை செய்து  தம் சக்கரத்தைப் பெற்ற தலம் ;  இறைவன், சம்பந்தப் பெருமானுக்குத் தாம் சீர்காழியிலிருக்கும் தோணியப்பர் திருக்கோலத்தை  விண்ணிழி விமானத்தில் காட்டியருளிய மிக சிறப்பு வாய்ந்த சிவஸ்தலம்..

🍄💧🍄💧 BRS🍄💧🍄💧🍄

தொலைபேசி : +91-4366-273 050, 94439 24825

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

மூலவர் : வீழிநாதேஸ்வரர் ( கல்யாணசுந்தரேஸ்வரர்)

 உற்சவர் : கல்யாணசுந்தரர்

 அம்மன்/தாயார் : சுந்தரகுசாம்பிகை (அழகியமாமுலையம்மை)

 தல விருட்சம் : வீழிச்செடி

 தீர்த்தம் : வீஷ்ணுதீர்த்தம், 25 தீர்த்தங்கள்

 பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

 புராண பெயர் : திருவீழிமிழலை

 ஊர் : திருவீழிமிழலை

 பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றது. சேந்தனார், அருணகிரிநாதர்

வழிபட்டோர் : திருமால் (சக்கராயுதம் பெற), சுவேதகேது எனும் மன்னன் (எமபயம் நீங்க), வசிட்டர், காமதேனு, ரதிதேவி, மனு

Related image

🅱 தேவாரப்பதிகம்:🅱

எடுத்தான் தருக்கினை இழித்தான் விரனூன்றிக் கொடுத்தான் வாளாளாக் கொண்டான் உறைகோயில் படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே. - திருஞானசம்பந்தர்

🍧 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 61 வது தலம். 🌀

🅱 திருவிழாக்கள் :🅱

🌻 மகா சிவராத்திரி,

🌻 மார்கழி திருவாதிரை

🌻 சித்திரை மாதத்தில் பெருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

🌻 நவராத்திரி, சஷ்டி, முதலிய பெரு உற்சவங்களும் நன்கு நடைபெறுகின்றன.
 
🅱 தல சிறப்பு:🅱
 
🎭 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது.

🎭 இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார்.

🎭 மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

🎭 கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.

🎭 இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட "வவ்வால் நந்தி மண்டபம்' உள்ளது. இது நூறு கால் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன.

🎭 தேவார மூவராலும் பாடல் பெற்ற தலங்கள் பல உண்டு. அவற்றில் திருவீழிமிழலை தலமும் ஒன்றாகும். இத்தலம் 23 திருப்பதிகங்களையுடையது. வீழிச்செடிகள் நிறைந்திருந்ததால் இவ்வூருக்கு திருவீழிமிழலை என்று பெயர் ஏற்பட்டது.

🎭 இத்திருக்கோயிலைச் சுற்றி, பத்மதீர்த்தம், புஷ்கரணி, விஷ்ணுதீர்த்தம், திரிவேணிசங்கமம், குபேரதீர்த்தம், இந்திரதீர்த்ம், வருணதீர்த்தம், இலக்குமி தீர்த்தம், வசிட்டதீர்த்தம் முதலாக 25 தீர்த்தங்கள் உள்ளன.

🎭 சுவாமி சந்நிதியில் உள்ளது - புஷ்கரணிதீர்த்தம்

🎭 மேற்கு மதிலைச் சார்ந்த உள்ளது - விஷ்ணுதீர்த்தம்

🎭 தாமரைக் குளம் உள்ளது - பிரம, பத்மதீர்த்தங்கள் என்பன.

🎭 ஆதியில் செப்புத் தகடுகள் வேயப்பட்ட இவ்விமானம் இன்று தங்கக் கவசத்தோடு, தனி அழகுடன் விளங்குகிறது. பதினாறு சிங்கங்கள் இதைத் தாங்குகின்றன.

🎭 திருமால் கண்ணை இடந்தளிக்கும் காட்சி விமானத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள உலாத் திருமேனிகளுள் ஒருவராகச் சிவபெருமான் ‘சக்ரதானர்’ என்ற திருக்கோலத்தில் விளங்குகிறார்.

🎭 காஞ்சிபுராணத்தின் படி, திருவீழிமிழலைக்குரிய வரலாறு அருகிலுள்ள திருமாற்பேறு எனும் திருத்தலத்திற்கும் கூறப்படுகிறது.

🎭 திருமாலின் உற்சவத் திருமேனி ஒன்று ஒரு கையில் தாமரை மலரும், மறுகையில் கண்ணும் கொண்டு, நின்ற கோலத்திலிருப்பதை இக்கோயிலில் காணலாம். இங்கு இறைவனுக்கு முன்னே நந்தி தேவருக்குப் பதிலாக, திருமால் கூப்பிய கரத்தோடு நின்றிருக்கிறார் !

🎭 திருமால் சிவனை ஆராதனம் செய்து சக்ரத்தைப் பலமுறை பெற்றுள்ளார். ஆதியில் சிவபெருமான் அளித்தது சுதர்சனம் எனும் சக்ரமாகும்.

🎭 அதர்வண வேதத்தில், சரபோபநிடதத்தில் ‘எவருடைய இடதுபாதத்தில் விஷ்ணு தம் கண்ணை அர்ச்சித்துச் சுதர்சனம் எனும் சக்ரத்தைப் பெற்றுக் கொண்டாரோ அந்த ருத்ர மூர்த்திக்கு வணக்கம்’’ என்று வருகிறது.

🎭 கூர்ம புராணத்தில் ‘மாயோன் நேமி பெற்ற அத்தியாயம்’ என்ற  ஒரு தனிப்பகுதியே விரிவாக அளிக்கப்பட்டுள்ளது.

Image result for திருவீழிமிழலை
 
🅱 நடை திறப்பு:🅱

🔑 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.🔑
 
🅱 பொது தகவல்:🅱
 
🍁 கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது.

🍁 மிகப் பெரிய கோயில். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயில் மாடக்கோயில் அமைப்புடையது.

🍁 தெற்குப் பிராகாரத்தில் தல விநாயகர் (படிக்காசு விநாயகர்) சன்னதியும், மேற்கில் சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி சன்னதிகளும், வடக்கில் சண்டேசுவரர் சன்னதியும் உள்ளது.

🍁 நடராசர் சன்னதி சிறப்பானது.

🍁 'தில்லை மூவாயிரவர்' என்பது போல இத்தலத்து வாழ்ந்த ஐந்நூறு அந்தணர்கள் ( ஐஞ்ஞூற்று அந்தணர்) போற்றப்பட்டனர்.

🍁 இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமானது.

🍁 இத்தலத்துத் தலபுராணம், திருவாவடுதுறை ஆதீனத்து, இரண்டாவது குருமூர்திகளான ஸ்ரீ மறை ஞானதேசிகருடைய மாணவரான ஸ்ரீ மெய்ஞ்ஞான முனிவரால் இயற்றப்பட்டது  உள்ளது.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌹 திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
 
🅱 நேர்த்திக்கடன்:🅱
 
💥 சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Related image

🅱 தலபெருமை:🅱
 
Ⓜ ஸ்ரீ கார்த்தியாயினி அம்பிகையின் திருமணம்Ⓜ

🔥 முனிவர்களில் சிறந்தவர் ஆகிய கார்த்தியாயன முனிவர் இத்தலத்தை அடைந்து தீர்தபுஷ்கரணி கரையில் ஓர் தவச்சாலை அமைத்து தினந்தோறும் தீர்தபுஷ்கரனியில் நீராடி அழகியமாமுளை அம்மையும் விழினாதரையும் வழிபட்டுப்பன்னகசலையில் தம் பத்தினியோடு அருந்தவம் புரிவராயினர்.

🔥அவருக்குப் புத்திர பேரின்மையால் அதைக்குறித்து அறிய வேள்விகளையும் செய்தார். அப்பொழுது அம்பிகை ஆனவள் இடக்கரத்தில் அன்னப்பத்திரமும், வலக்கரத்தில் அன்னம்படைக்கும் அகப்பையோடும் அன்னபூரணியாக காட்சியளித்து "அருந்தவ முனிவா நீ விரும்பிய வரம் யாது? புகல்வாய் " என்றனள்...

🔥 " தாயே நீ புத்திரியாக வரவேண்டும் " என்றார் . அவருக்கு அம்பிகை அவ்வரத்தை தந்தாள்.

🔥அம்பிகை பரமநிடத்தில் விடைபெற்று முனிவர் தவம் புரியும் பான்னஹசாலைக்கு அருகே உள்ள தீர்தபுட்கரனியில் ஒரு சிறந்த பெரிய நீலோற்பலமலரில் அழகிய பெண்குழந்தை வடிவமாக திகழ்ந்தார் அதனை முனிவர் பத்தினி ஆகிய சுமங்கலை என்பவள் கண்டு ஆனந்தம் கொண்டு அக்குழந்தையை எடுத்து மார்போடு அனைத்து கார்த்தியாயன முனிவரிடம் கொடுத்துக் கார்த்தியாயினி என்று பெயரிட்டு மிக மகிழ்ச்சியோடு வளர்து வருவாராயினர் .

🔥 கர்தியாயினிக்கு உரிய மணப்பருவம் வருவதை அறிந்து பரமனை குறித்து அருந்தவம் புரிந்தார். முனிவர் தவத்திர்கிணங்கி பரமன் வெளிப்பட்டார்.

🔥இறைவன் திருவடிகளில் வணங்கிப் பெருமானே இக்கன்னிஹையை தேவரீர் மனக் கோலத்தோடு வந்து திருமணம் கொண்டருள வேண்டுமென்று பிரார்த்தித்தார்.

🔥 பரமன் திருவுளம் மகிழ்ந்து நாம் சித்திரை மாதத்தில் மக நக்ஷத்திரதன்று திருமணம் கொண்டருளுவோம் என்று அருள்புரிந்தார்.

🔥 இறைவன் முனிவருக்கு வாக்களித்தபடி சித்திரை மாதத்தில் மக நக்ஷதிரத்தன்று ஸ்ரீ கைலாயதிநின்றும் எளுந்தருளித்திருமால் பெருமான் நந்தி முதலிய கணங்கள் புடைசூழ, சர்வலன்கர ரூபராய் இத்தளத்தை நாடி திருவீழிமிழலையில் கார்த்தியாயன முனிவர் இருக்கும் இடத்தை அடைந்தார்.

🔥 கார்த்தியாயன முனிவர் இறைவனை எதிர்கொண்டு வணங்கி திருமணத்திற்கு ஆவன செய்தார். மகா அலங்காரத்தோடு மிக சிறப்புற ஸ்ரிகைலாசபதிக்கும் கார்த்தியாயினி அம்பிகைக்கும் திருமண வைபவம் நடைபெற்றது.

Ⓜ பெயர்க்காரணம்:Ⓜ

🌀 ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் வீழிச்செடி, சந்தனம், செண்பகம், பலா, விளா முதலிய மரங்களடர்ந்த காடாய் பல காலம் இருந்தது.

🌀 மிழலைக் குறும்பர் என்னும் வேடுவர் ஒருவர் இத்தலத்தில் வசித்து வந்தார். அவர் தினம் ஒரு விளாங்கனி நிவேதனம் செய்து வீழிநாதரை வழிபட்டு வந்தார்.

🌀 அதன் பலனாக ஈசன் அவர் முன் தோன்றி அருளாசி வழங்க, அவர் தவக்கோலம் பூண்டு, அருந்தவங்கள் செய்து அட்டமாசித்திகள் கைவரப் பெற்றார். இந்த மிழலைக் குறும்பருக்கு இத்தலத்தின் தனி சந்நிதி உள்ளது.

🌀 வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.

Ⓜ படிக்காசு அருளியது:Ⓜ

💓 திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சேர்ந்தே இத்தலத்திற்கு வருகிறார்கள். அவர்கள் வரும்போது நாட்டில் பஞ்சம். மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர்.

💓 இந்த நிலையில் அப்பர், சம்பந்தர் இவர்களுடன் வந்த அடியார்களுக்கு உணவு அளிப்பது சிரமமாக இருக்கிறது. இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடுகிறார்கள்.

💓 மறுநாள் காலையில் கிழக்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும், மேற்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும் இருப்பதை இருவரும் காண்கிறார்கள்.

💓 அவற்றைக் கொண்டு அடியவர்களுக்கு உணவு அளிக்கின்றனர். நாட்டில் பஞ்சம் தீரும் வரையில் இவ்வாறு தினமும் படிக்காசு பெற்று தொண்டு செய்திருக்கின்றனர்.

💓 படிக்காசு அளிப்பதிலும் இறைவன் அப்பருக்கு நல்ல காசும், சம்பந்தருக்கு மாற்றுக் குறைந்த காசும் கொடுத்தார்.

💓 சம்பந்தர் அதைப் பார்த்து  "வாசி தீரவே காசு நல்குவீர்"  என்னும் பதிகம் பாடிய பிறகு அவருக்கும் நல்ல காசு கொடுத்து அருள் செய்தார்.

💓 அவ்வாறு வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ளன. படிக்காசுப் பிள்ளையார் மேற்கு பலிபீடத்தின் அருகில் உள்ளார். அருகில் சம்பந்தர், அப்பரின் உருவங்கள் உள்ளன. இவ்விருவரும் தங்கியிருந்த திருமடங்கள் வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்) மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன.

Ⓜ கோவில் விபரம்: Ⓜ

🌱 இறைவன் நேத்ரார்ப்பன ஈசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. மூல்வர் சுயம்பு உருவில் சுமார் 5 அடி உயரத்தில் நற்காட்சி தருகிறார்.

🌱 மூலவர் லிங்கத்திற்கு பின்புற கர்ப்பக்கிருஹ சுவரில் பார்வதி பரமேசுவரர் திரு உருவங்கள் இருக்கின்றன.

🌱 கோவிலின் பிரதான நுழைவு வாயில் கோபுரத்தை விட கர்ப்பக் கிருஹத்தின் மேல் இருக்கிற 16 சிம்மங்கள் தாங்கக்கூடியதாக உள்ள விமானமே சிறப்பானது. இதற்கு விண்ணிழி விமானம் என்று பெயர்.

🌱 இது திருமால் கொணர்ந்தது என்பதை மேற்கூறிய பாடலில் திருநாவுக்கரசரும், ‘சலந்தரன் உடலம் தடிந்த சக்கிரம் எனக்கருளென்று அன்று அரி வழிபட்டிழிச்சிய விமானத்திறையவன் பிறையணி சடையன்’ என்று ஞானசம்பந்தரும் பாடியுள்ளதிலிருந்து உணரலாம்.

🌱 சக்கரம் பெற்ற திருமால் வைகுண்டத்தில் இருந்து கொண்டுவந்து இந்த விமானத்தால் இக்கோவிலை அலங்கரித்ததாக புராணங்கள் சொல்கின்றன.

🌱 இறைவி சுந்தர குசாம்பாள் சந்நிதி  மூலவர் சந்நிதிக்கு அருகில் உள்ளது.

🌱 ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம் சிற்ப வேலைக்கு ஒரு எடுத்துக் காட்டாக திகழ்கிறது.

🌱 மூலவரின் வலப்பக்க மண்டப அறையில் கையில் கண்ணோடு அர்ச்சிக்கும் பாவனையில் திருமால் காட்சி தருகிறார்.

🌱 கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்திற்கு முன் பெரிய அழகிய திருக்குளம் உள்ளது. இறைவன் நேத்ரார்ப்பனேஸ்வரர் ஈசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது.

🌱 இறைவன் உமையை மணந்து கொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன.

🌱 மகாமண்டபத்தில் கல்யாணசுந்தரர் மாப்பிள்ளை சுவாமியாகக் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் உற்சவமூர்த்தி.

🌱 அவரது வலது பாதத்தின் மேலே திருமால் அர்சித்த கண்மலரும், அதன் கீழே சக்கரமும் இருக்கக் காணலாம்.

🌱 பிட்சாடனர், ரதிதேவி, வசிஷ்டர், காமதேனு, மனு முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் இது.

🌱 வட இந்திய மன்னன் ஒருவனின் மகன் சுவேதகேது. அவனது ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள், 16 வயதில் அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று கூறினார்கள். அரசன் முனிவர்களிடம் ஆலோசனை செய்ய, அவர்கள் திருவீழிமிழலை தலத்திற்குச் சென்று சிவபூஜை செய்தால் காலமிருத்யுவை வெல்லலாம் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள்.

🌱 சுவேதகேது அதன்படி திருவீழிமிழலை தலம் வந்து இறைவனை தினமும் ஆராதித்து வந்தான். நாட்கள் சென்றன.

🌱 சுவேதகேதுவின் உயிர் பிரிய வேண்டிய நேரம் வந்தது. உயிரை எடுக்க வந்த எமதர்மரைப் பார்த்த சுவேதகேது சிவலிங்கத்தை இறுகப் பற்றிக் கொண்டான். எமதர்மன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தையும் சேர்த்து சுற்றிக் கொள்ள, சுவேதகேதுவோடு, பெருமானையும் இழுத்தான் எமதர்மன்.

🌱 அப்போது சிவலிங்கத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டு, எமனைக் காலால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்தது போல், சுவேதகேதுவைக் காப்பாற்றினார்.

🌱 பின் தேவர்கள் வேண்டுகோளின் பேரில் எமனை உயிர்ப்பித்து, இனி தன் பக்தர்கள் சிவபூஜையில் ஈடுபட்டிருக்கும் போது உயிரைப் பறிக்க வரக்கூடாது என்று ஆணையிட்டார். இத்தகைய சிறப்பு பெற்றது திருவீழிமிழலை திருத்தலம்.

Image result for திருவீழிமிழலை

🅱 தல வரலாறு:🅱

🍧 முன்னொருமுறை இந்திரனை அழிக்க எழுந்த தன் சினத்தை சிவனார் கடலில் வீசினார். அது குழந்தையாக மாறியது. அக்குழந்தைக்கு ஜலந்தரன் எனப்பெயர் சூட்டி வருணன் வளர்த்து வந்தான்.

🌀 கர்வமிகுதியால் தேவர்களைத் துன்புறுத்தி வந்த ஜலந்தரனைத் தண்டிக்க எண்ணினார் சிவபெருமான்.

🍧 முனிவராக மாறி அவன் முன்தோன்றி, தரையில் ஒரு சக்ரத்தை வரைந்து, அதைப் பெயர்த்து மேலே எடுக்க முடியுமா என்று கேட்டார்.

🌀 சக்ரத்தைப் பெயர்த்தெடுத்த ஜலந்தரன், மிகுந்த செருக்குடன் தன் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டான். சக்ரம் வலிமை பெற்று அவன் தலையை இரண்டாகப் பிளந்தது.

🍧 சிவபெருமான் ஜலந்தராசுரனை அழித்த சக்ரத்தை, தான் பெற வேண்டி திருமால் திருவீழிமிழலையில் தவம் புரிந்தார்.

🌀 ஆற்றல் பொருந்திய சக்கரம் பெறுவதற்காக மஹாவிஷ்னு சிவபெருமானை பூஜித்ததாக பல்வேறு புராணத் தகவல்கள் உண்டு. அப்படி சிவபெருமானை விஷ்னு பூஜித்ததாக திருமாற்பேறு, திருப்பைஞ்ஞீலி, திருவீழிமிழலை ஆகிய சிவஸ்தலங்களின் தல புராண வரலாறுகள் கூறுகின்றன.

🍧 இம்மூன்று தலங்களில் திருவீழிமிழலை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

🌀 திருமாலுக்கு சலந்திரனைச் சம்ஹரிக்கச் சக்கரம் தேவைப்படுகிறது. அதைப் பெருவதற்காக திருவீழிமிழலையில் சிவபெருமானிடம் வருகிறார்.

🍧 ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்தால் என்னியது கிடைக்கும் என்று அறிகிறார். அதன்படி ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அர்ச்சனை செய்ய ஆரம்பித்து 999 மலர்களால் அர்ச்சனை செய்து விடுகிறார். ஆயிரமாவது மலர் இல்லை. இன்னொரு தாமரை மலரைக் கொண்டு வந்து அர்ச்சனையை தொடர நேரமும் இல்லை.

Image result for திருவீழிமிழலை

🌀 குறைந்த ஒரு மலருக்குப் பதிலாக தாமரை மலருக்கு ஒப்பான தனது இரு கண்களில் ஒன்றையே பெயர்த்து எடுத்து பூஜையை குறை இல்லாமல் முடித்தவுடன் சிவனும் காட்சி கொடுத்து திருமால் விரும்பியபடி அவருக்கு சக்கராயுதம் கொடுத்து அருள் செய்கிறார்.

🍧 இப்படி மஹாவிஷ்னு தன் கண்ணையே கொடுத்து சிவனை அர்ச்சித்த தலம் தான் திருவீழிமிழலை.

🌀 இப்படி திருமால் ஈசனை வழிபட்ட செய்தியை திருநாவுக்கரசர் தனது பதிகம் மூலமாக பாடுகிறார். நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும்  "பூதத்தின் படையர் பாம்பின்" என்று தொடங்கும் பதிகத்தின் 8வது பாடலில் இத்தல வரலாற்றைக் குறித்துப் பாடுகிறார்.

நீற்றினை நிறையப் பூசி, நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி, யவன்கொணர்ந் திழிச்சங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.

Ⓜ இப்பாடலின் பொழிப்புரை Ⓜ

திருநீற்றை நன்கு அணிந்து நாடோறும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்த காலத்தில் ஒரு நாள் ஒரு பூக்குறையவே அப்பூவின் தானத்தில் தன் கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்த முறுகிய பக்தியை உடைய திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுத்து அவன் விண்ணிலிருந்து கொணர்ந்து நிறுவிய கோயிலில் வீற்றிருந்து வீழிமிழலை விகிர்தனார் எல்லோருக்கும் அருள் செய்கிறார்.

நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும்  "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் திருக்குறுக்கை வீரட்டம் தலத்திற்கான பதிகத்தின் 5வது பாடலிலும் இத்தல வரலாற்றைக் குறித்துப் பாடுகிறார்.

"ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூக்கொண்டு
ஆறு உடைச் சடையினானை அர்ச்சித்தான் அடி இணைக்கீழ்
வேறும் ஓர் பூக் குறைய மெய்ம் மலர்க்கண்ணை யீண்டக்
கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கை வீ ரட்டனாரே" 

Ⓜ இப்பாடலின் பொழிப்புரை : Ⓜ

ஏழு இடபங்களையும் ஒரு சேர அழித்த கண்ணனாக அவதரித்த திருமால் கங்கா சடாதரனை அவன் திருவடிகளின் கீழ் ஆயிரம் தாமரைப்பூக்கள் கொண்டு அருச்சித்தானாக அப்பூக்களில் ஒரு பூக்குறைய அக்குறைவை நீக்கத் தாமரை போன்ற தன் கண் ஒன்றனைப் பெயர்த்து அருச்சிக்க, அத்திருமாலுக்கு எல்லோராலும் புகழப்படும் சக்கராயுதத்தை வழங்கினார் குறுக்கை வீரட்டனார்.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ ஞானசம்பந்தரும், அப்பரும், படிக்காசு பெற்றபோது அவற்றைக் கடைத்தெருவிற்குக் கொண்டு சென்று பொருள்களை வாங்கிய கடைத்தெரு இப்போது ஐயன்பேட்டை என வழங்குகிறது. அங்கே உள்ள சுவாமி பெயர் - செட்டியப்பர். அம்பாள் - படியளந்த நாயகி. உற்சவமூர்த்தி தராசுபிடித்த கையோடும், அம்பாள் படியைப் பிடித்த கையோடும் காட்சி தருகின்றனர்.

♻ நடராஜர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சக்கரதானர், பிட்சாடனர், காலசம்ஹாரர், சுவர்க்காவதாநேசர், நாயன்மார்கள் முதலிய உற்சவத்திருமேனிகள் உள்ளன.

♻ தலவிருக்ஷம் ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொன்றாக உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. முதலில் சந்தனமாகவும், பிறகு சண்பகமாகவும், பின் வீழிச்செடியாகவும் உள்ளது. அடுத்து இருக்கவுள்ளது பலாமரமாகும்.

திருஞான சம்பந்தர் அருளிய முதல திருமுறை - வாசிதீரப் பாடியது 

வாசி தீரவே காசு நல்குவீர் 
மாசின் மிழலையீர் , ஏச லில்லையே 
காழி மாநகர் , வாழி சம்பந்தன் 
வீழி மிழலைமேல் , தாழும் மொழிகளே . 

2 ஆம் திருமுறை - இரதி தேவிக்கு மன்மதனைத் தோற்றுவித்தமை 

கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப் 
பெண்ணுக் கருள்செய்த பெருமா னுறைகோயில் 
மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும் 
விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே . 

3 ஆம் திருமுறை - கார்தியாயனியின் திருமணம் 

பூதபதி யாகியபு ரானமுனி புண்ணியணன் மாதைமருவிப் 
பேதமதி லாதவகை பாகமிகை வைத்தபெரு மானதிடமாம் 
மாதவளர்க ளன்னமறை யாளர்கல்வ ளர்த்தமலி வேல்வியதனால் 
எதமதி லாதவகை இன்பமமர் கின்றவெழில் வீழிநகரே. 

5 ஆம் திருமுறை - சுவேதகேது இயமனை வென்றது 

பழகி நின்னாடி சூடிய பாலனைக் 
கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய 
அழக னேயணி வீழி மிழலையுள் 
குழக னேயடி ஏனைக் குறிக்கோளே 

அருணகிரி நாதர் அருளிய திருவீழிமிழலைத் திருப்புகழ் 

எருவாய் கருவாய் தனிலே யுருவாய் 
இதுவே பயிராய் விளைவாகி 
இவர்போ யவராய் அவர்போ இவராய் 
இதுவே தொடர்பாய் வெறிபோல 
ஒருதா இருந்தாய் பலகோடி யதாய் 
உடனே யவமாய் அழியாதே 
ஒருகால் முருகா பரமா குமரா 
உயிர்கா வேனவோ தருல்தாராய் 
முருகா வேனவோர் தருமோ தடியார் 
முடிமே லினதால் அருள்வோனே 
முனிவோ ராமறோர் முறையோ வெனவே 
முதுசூ ருரமேல் விடும்வேலா 
திருமால் பிரமா அறியா தவர்சீர் 
சிறுவா திருமால் மருகோனே 
செழுமா மதில்சேர் அழகார் பொழில்சூழ் 
திருவீ ழியில்வாழ் பெருமாளே

🅱 இருப்பிடம்:🅱

✈ கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 28 கி.மீ. தூரத்தில் பூந்தோட்டம் உள்ளது. அங்கிருந்து நகர பேருந்துகள் மூலமாக தென்கரை சென்று கோயிலை அடையலாம். அடிக்கடி பேருந்து வசதி இல்லை என்பதால் பூந்தோட்டத்தில் இருந்து ஆட்டோக்களில் செல்வது சிறந்தது. அருகில் உள்ள பெரிய ஊர் பேரளம்.

✈ திருஅன்னியூர், சிறுகுடி, திருப்பாம்பரம் மற்றும் திருமீய்ச்சூர் ஆகியவை இத்தலத்தின் அருகில் உள்ள மற்ற சிவஸ்தலங்கள்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹