Friday, 27 April 2018

மதுரை சித்திரைத் திருவிழா !


மிழ்நாட்டில் புராதனமான திருத் தலங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றில் சங்கத் தமிழாலும் சமயத் தமிழாலும் ஒருசேரப் புகழப்பெற்ற திருத் தலம் மாமதுரை. 
மதுரை மாநகரில் சுமார் பதினேழு ஏக்கரில் தனிப்பெருங்கோயிலாக பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். 

பெரும்பாலான பதிகங்களில் அங்கயற்கண்ணி என்று அழைக்கப்பட்ட  மீனாட்சியன்னை சோழர், பாண்டியர் காலத்தில் திருக்காமக்கோட்ட நாச்சியா ராகவும், நாயக்கர் காலத்தில் மீனாட்சி எனவும் பெயர் மாற்றம் பெற்று மதுரை யில் அருளாட்சி செய்து வருகிறாள்.

காலத்தைக் காட்டும் கண்ணாடியாகக் கோயில்கள் விளங்கினாலும், அவற்றின் தோற்றம், வளர்ச்சி, கட்டடக்கலை, வழிபாடு, நிர்வாகம், சமுதாயம், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை அந்தக் கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் வாயிலாகவே அறிய முடியும்.  
இந்தியாவில் அதிகமாகக் கல்வெட்டு கள் காணப் பெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் முப்பதாயிரம் கல்வெட்டுகள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். அவற்றில் பெரும்பகுதி கோயில் களில்தான் உள்ளன. 

பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு, நாயக்கர் காலத்தில் விரிவுபடுத்தப்பட்ட மீனாட்சி அம்மன் திருக்கோயிலில், இதுவரை 64 கல்வெட்டுகள் படியெடுக் கப்பட்டுள்ளன. 

பிற்காலப் பாண்டியர்களின் 44 கல்வெட்டுகளும், விஜயநகர நாயக்கர் களின் 19 கல்வெட்டுகளும், ஆங்கிலேயர் களின் கல்வெட்டு ஒன்றும் இந்தத் திருக்கோயிலில் உள்ளன.

பாண்டிய நாட்டில் புகழ்பெற்ற சிவத்தலங்களில் பிரதானமானது மதுரையே. இந்தத் தலத்தை இலக்கியங்கள் ‘விழவுமலிமூதூர்’ என்று அழைக் கின்றன. இதற்கு ‘விழாக்கள் நிறைந்த தொன்மை யான நகரம்’ என்பது பொருள். இந்தப் பெயருக்குத் தகுந்தாற்போல், பல நூற்றாண்டுகளாக இந்தக் கோயிலில் பதின்மூன்று விழாக்கள் மிக விமர்சை யாக நடத்தப்பட்டு வருகின்றன. ஓர் ஆண்டில் 294 நாள்கள் இங்குத் திருவிழா நடப்பதாக சமய ஆன்றோர் தெரிவிக்கின்றனர்.  
அப்படியான விழாக்களில் குறிப்பிடத்தக்கப் பெரிய விழாக்களாகத் திகழ்வன: சித்திரைத் திருவிழா, ஆவணி மூலத் திருவிழா மற்றும் தெப்பத் திருவிழா. 

இவற்றில், மதுரை சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. சித்திரைத் திருவிழாவின்போது உலகின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் மதுரைக்கு வந்து, மீனாட்சியின் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசித்து அருள் பெற்றுச் செல்கிறார்கள்!

சித்திரைத் திருவிழா!

தி
ருக்கோயிலின் ஒவ்வொரு திருவிழாவும் தீர்த்தம் எனப்படும் நிறைவுநாளை முடிவுசெய்து, உற்சவம் தொடங்கப்படுகிறது. அவ்வகையில், சித்திரை நட்சத்திரத் தைக் கணக்கிட்டு இந்தத் திருவிழா தொடங்கும்.

பன்னிரண்டு நாள்கள் நடை பெறும் விழாவில், பத்தாம் நாள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணம் நடைபெறும்.  திருப்புகழ் மண்டபம் அருகே நடைபெறும் திருக்கல்யாணத்தில் திருப்பரங் குன்றம் சுப்ரமணியரும் பவளக் கனிவாய் பெருமாளும் கலந்து கொள்வது விசேஷ அம்சமாகும்.  

இந்த வைபவத்தில் `குலசேகர பாண்டியர்' பட்டர் வழியிலான சிவாசார்யர் சுந்தரேஸ்வரராகவும், `உக்கிர பாண்டியர்' பட்டர் வழியிலான  சிவாசார்யர் மீனாட்சி யம்மனாகவும் வேடமேற்று, மாலை மாற்றிக்கொள்வார்கள். தொடர்ந்து, மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பெறும். பிரியாவிடை அம்மனுக்குப் பொட்டும் மாங்கல்யமும் அணிவிக்கப்பெறும்.  
இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் திருமாங்கல்யம், பட்டுத்துணி, பணம் முதலியவற்றை மணமக்களுக்கு மொய் செய்கின்றனர். திருமண நிகழ்ச்சிகள் முடிந்ததும், `குண்டோதரனுக்கு அன்னமிடல்' எனும் திருவிளையாடற் புராண நிகழ்ச்சி நடைபெறும். 

திருக்கல்யாணத்துக்கு முன்பு, மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக முடிபுனைந்து செங்கோல் ஏந்தும் விழாவும் சிறப்பாக நடைபெறும். பதினோராம் நாள் தேர்த்திருவிழா. பன்னி ரண்டாம் நாள் கொடியிறக்கப்படும். விழா நிறைவு நாளான சித்திரைப் பௌர்ணமியன்று கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருள்வார். 

மீனாட்சி அம்மனின் திருமணத்தைக் காண வைகையைத் தாண்டி வரும் அழகர், மதுரைக்கு வருவதற்கு முன்பே திருமணம் முடிந்துவிட்டது போலவும், இந்தச் செய்தியைக் கேட்டு அழகர் திரும்பிவிடுவது போலவும் சித்திரைப் பெரு விழாவை அமைத்திருக்கிறார்கள்.

அழகர் கோயிலில்... 

வை
கையாற்றின் வடகரையில் அழகர் விழா கொண்டாடும்  வைணவ மக்களும், தென்கரையில் சித்திரைத் திருவிழா கொண்டாடும் சைவ மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும்படி, நாயக்கர் காலத்தில் இந்தத் திருவிழா மாற்றி அமைக்கப்பட்டது.  
``மாசி மாதத்தில் நடந்துட்டிருந்த சித்திரைத் திருவிழாவை உழவர் களுக்காக சித்திரை மாதத்துக்கு மாத்தினது நாயக்க மன்னர்கள்தான். கிட்டத்தட்ட நானூறு வருடங் களாகச் சித்திரை மாதத்தில்தான் இந்த விழா தொடர்ந்து நடந்து வருகிறது. 

அழகர் கோயிலில் நடக்கும் பத்து நாள் சித்திரைத் திருவிழாவில், முதல் மூன்று நாள் கோயிலுக்குள்ளேயே அழகர் எழுந்தருள்வார். பின்னர் மூன்றாம் நாள் மாலை, தங்கப்பல்லக்கில் கள்ளர் வேடத்தில் மதுரைக்குப் புறப்படுவார்.

17-ம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை... அலங்காநல்லூர் வழியாக தேனூர் வந்தடையும் கள்ளழகர், அதன்பின்னர் வைகைக் கரையோரத்திலேயே பயணப்பட்டு வண்டியூரை வந்தடைவார். அங்கே மண்டூக மகரிஷிக்குச் சாபவிமோசனம் அளித்துவிட்டு, அழகர்கோயிலுக்குத் திரும்ப வருவார்.   
நாயக்கர்கள் காலத்தில் அழகர் மதுரைக்கு வரும் வழியில் மாற்றம் செய்யப்பட்டது. கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் மூன்றாவது நாள், திருக்கோயிலின் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலிருந்து கள்ளர் வேடத்தில் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு எழுந்தருளும் அழகர், பொய்கைக் கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தை வந்தடைவார். 

அங்கிருந்து கடச்சனேந்தல் வழியாக மூன்றுமாவடியை வந்தடையும் போது, பொதுமக்கள் அழகரை எதிர்கொண்டு அழைத்துச் செல்வார்கள். அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில் எழுந்தருள்வார். மறுநாள் காலையில் தங்கக்குதிரை வாகனத்தில்  கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் நிகழும். பத்தாம் நாள் கள்ளர் திருக்கோலத்திலேயே பூப்பல்லக்கில் திருமாலிருஞ்சோலைக்கு எழுந்தருள்வார்’’ என்று அழகர் கோயில் சித்திரைத் திருவிழா குறித்து விவரிக்கிறார் அம்பி பட்டர். 
மதுரை சித்திரைத் திருவிழா, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பதுடன், மதுரை மக்களின் பண்பாடு, கலாசாரம் மற்றும் மண்ணின் கலைகளைச் செழித்தோங்கச் செய்யும் வைபவமாகத் திகழ்கிறது.

வைகையாற்றுக்கு அழகர் வரும்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளர் வேடம் பூண்டு அழகரை வரவேற்பார்கள்.

‘‘பிள்ளைவரம், நேர்த்திக்கடன்னு வேண்டுதலை நிறைவேற்ற இருபத்தோரு நாள்கள் மாலை போட்டு விரதமிருந்து, சித்திரா பௌர்ணமியன்று கள்ளர் வேடம் போடுவோம். எங்களுடைய எல்லா வேண்டுதலையும் நிறைவேற்றிய அழகரின் சிறப்பையும் அழகர் மலை சிறப்பையும் பாட்டா படிச்சபடி அழகர் முன்னாடி ஆடிப்பாடி எங்கள் நன்றியைத் தெரிவிப்போம்’’ என்கிறார் சிவராமகிருஷ்ணன். இவர் 1965-ம் ஆண்டு முதல் சித்திரைத் திருவிழாவில் கள்ளர் வேடம் பூண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் வைபவம்...

ழகர் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக அமைவது, தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்வு. `தான் வருவதற்குள் தங்கை திருமணம் செய்துகொண்டாளே' என்ற ஆதங்கத்தில் அழகர் கொண்ட கோபத்தைத் தணிக்க தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறு வதாகக் கூறப்படுகிறது. நாயக்கர் காலத்தில் புதிதாகச் சாலைகள் அமைக் கப்பட்டு அதில்தான் அழகர் பயணித்து வந்தார். அப்போது ஏற்படும் புழுதியைச் சரிசெய்ய தண் ணீர் பீய்ச்சுதல் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சாப விமோசனம்

`வை
கை நதியில் நீ தவளையாக இருப்பாயாக' என்று சுபதஸ் முனிவரைச் சபித்துவிடுகிறார் துர்வாசர். சுதபஸ் முனிவர் தவளையாக மாறிவிட்டதால், அவர் மண்டூக ரிஷி என்று பெயர் பெற்றார். 

அவர், சாபவிமோசனம் தரும்படி துர்வாசரை வேண்டிக்கொள்ள, ``விவேகவதி (வைகை ) தீர்த்தக் கரையில் தவமியற்றி வா. அழகர் வந்து விமோசனம் தருவார்'' என்று வழிகாட்டினார் துர்வாசர்.அதன்படி, சுதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கவே கள்ளழகர் வைகைக்கு எழுந்தருள்வ தாகப் புராணங்கள் கூறுகின்றன. 

சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக தேனூர் மண்டபத்தில் அழகரை எழுந்தருளச் செய்து சுதபஸ் முனிவருக் குச் சாப விமோசனம், அளிக்கப்படுகிறது. அப்போது, முனிவர் சாப விமோசனம் பெற்றதைக் குறிக்கும் விதமாக `நாரை' பறக்கவிடப்படும்.

கள்ளர் வேடம்

ழகர்மலையிலிருந்து மதுரைக்குப் புறப்படும் கள்ளழகர் கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கரங்களில் வளைதடி, வளரித்தடி மற்றும் சாட்டைக் கம்பு திகழ, காதுகளில் கல்பதித்த வளையத்துடன் கூடிய கடுக்கனும், கறுப்பு வண்ண ஆடையும் அணிந்து பக்தர்கள் படைசூழ புறப்படுகிறார்.

பச்சைப் பட்டு...

சித்திரைத் திருவிழா தொடங்கியதும், அழகர் முன்பு திருவுளச்சீட்டு எழுதிப் போடப்படும்.  சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை என எழுதப் பட்டிருக்கும் அந்தச் சீட்டுகளில் ஒன்றை, அழகரை வேண்டிக்கொண்டு எடுக்கவேண்டும்.  எடுக்கப்படும் சீட்டினில் எந்த நிறம்  குறிபிடப் பட்டுள்ளதோ, அந்த நிறத்திலான பட்டுத் துணியை உடுத்திக்கொண்டு, வைகையில் எழுந்தருள்வார் அழகர்.

பச்சைப் பட்டு தேர்வானால், அந்த ஆண்டு நல்ல மழை பெய்து பசுமையான ஆண்டாக இருக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல் சிவப்பு என்றால் வறட்சியும், வெள்ளை என்றால் மிதமான பலன்களும் இருக்கும் என்பதும் பக்தர்களது நம்பிக்கை.

அழகருக்கு ஆரத்தி!

ழகரைத் தரிசிக்க வரும் பக்தர்களின் தாகத் தைப் போக்க நீர், பானகம் மற்றும் மோர் பந்தல்கள் பக்தர்களால் அமைக்கப்பட்டிருக்கும். 

அழகர் வரும்போது, மக்கள் தங்கள் கைகளில் வெல்லம் மற்றும் பொரிகடலை கலந்த பிரசாதத்தை ஒரு சொம்பில் வைத்து வாழை இலையால் மூடி, அதன் மேல் கற்பூரத்தைக் கொளுத்தி, தாங்களா கவே அழகருக்கு ஆரத்திக் காட்டி வழிபடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

சுக்கிர யோகம் யாருக்கு ?

சுகபோகங்கள் அருள்வார் சுக்கிரன் ! 

சு
க்கிரனை ஆங்கிலத்தில் ‘வீனஸ்’ என அழைப்பார்கள். சூரியனுக்கு அருகில் புதனும் அதற்கடுத்து சுக்கிரனும் இருக்கின்றன. சுக்கிரனை ‘வெள்ளி’ என்றும் கூறுவார்கள். அதிகாலையில், சூரிய உதயத்துக்கு முன்பாக வானில் தோன்றும் கிரகம்தான் சுக்கிரன். நம் கிராமப்புறங்களில், ‘வெள்ளி முளைக்கும் வேளையில் வயலை நோக்கிப் புறப்பட்டான்’ என்று கூறுவார்களே, அந்த வெள்ளிதான் சுக்கிரன்.  

சூரியனிலிருந்து 6 கோடியே 70 லட்சம் மைல் தொலைவில் சுக்கிரன் இருக்கிறது. இந்தக் கிரகம் ஜோதிடக் கணக்குப்படி, 12 ராசிகளையும் சுற்றி வருவதற்குக் கிட்டத்தட்ட ஏழரை மாதங்கள்... அதாவது, 225 நாள்கள் ஆகும். இது, தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு 23:30 மணி நேரமாகிறது.  

சுக்கிரனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்: வெள்ளி, கவி, பிருகு, பார்க்கவன், அசுரகுரு, புகர், களத்திரக்காரகன், நேத்திரன், சுகி, போகி மற்றும் மழைக்கோள். 

சுகபோகங்கள் அருள்வதில் சுக்கிர பகவானின் பங்களிப்பு அதிகம். ஒருவருக்கு ஜாதகத்தில் சுக்கிர தசை ஆரம்பிக்கும் காலத்தில், பூர்வஜன்ம புண்ணியமும் சேர்ந்திட, அந்த அன்பர் அதிஅற்புதமான பலன்களை அனுபவிப்பார். அதேபோல், சுக்கிரயோக ஜாதகக்காரர்களும்  சகல வளங்களையும் பெற்று செளபாக்கியத்துடன் வாழ்வார்கள். சரி! எல்லோருக்குமே சுக்கிரதசையைச் சந்திக்கும் வாய்ப்பும், சுக்கிரயோக வாழ்க்கையும் கிடைத்துவிடுமா என்றால், `இல்லை' என்றே சொல்ல வேண்டும். 

பூர்வ ஜன்ம பலாபலன்களுக்கு ஏற்பவே இப்பிறவிக்கான வாழ்க்கை அமைகிறது. அவ்வகையில், ஜாதகத்தில் சுக்கிர பலம் இல்லாதவர்கள், வாழ்வில் சுக்கிர திசையையே சந்திக்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்? 

அவர்களுக்கு இறை வழிபாடு கைகொடுக்கும். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள். அதற்கேற்ப, இப்பிறவியில் மேலும் பாவ காரியங்களுக்கு ஆளாகாமல், புண்ணியங்கள் சேரும்படியாக அறவழியில் வாழ வேண்டும். வழிபாடுகளால் தெய்வபலம் சேரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தெய்வ அனுக்கிரகத்தால், பூர்வஜன்ம கர்மவினைகளுக்கான அசுப பலன்கள் படிப்படியாகக் குறையும்போது, சுபிட்ச பலன்களும் சுக்கிரயோக வாழ்வும் கைகூடி வரும்.
அதற்கான வழிபாடு களை, சுக்கிரனின் திருவருளைப் பெற்றுத் தரும் துதிப்பாடல்களைப் பற்றி அறியுமுன், அவரின் மகிமைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வோம்.  
சுக்கிர பகவானைத் தெரிந்துகொள்வோம் 

கு
ரு, சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களுமே மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்கள். நவகிரகங்களில் பூரண சுப கிரகம் குரு. குருவுக்கு நிகரான மிகுந்த அதிர்ஷ்டமுள்ள சுப கிரகம் சுக்கிரன். தேவர்களின் குரு பிரகஸ்பதி. அசுரர்களின் குரு சுக்கிரன். குரு, சுக்கிரன் இருவருக்குமே ஜோதிட சாஸ்திரத்தில்  தனித்தனி தன்மைகள் உண்டு. 

சுக்கிரன் மாய மந்திரங்களுக்கும் தந்திர வித்தைகளுக்கும் அதிபதி. மாந்த்ரீக - தாந்த்ரீக, வசிய மந்திரங்களுக்கு உரியவர்.

சுக்கிரன் என்றாலே யோகம்தான். ‘வறிய நிலையில் இருப்பவரைக்கூட மாட மாளிகையில் தங்கவைத்து, மூன்று வேளையும் அறுசுவை உணவு கிடைக்கும்படியும், எந்த நேரமும் கையில் பணம் இருக்குமாறும் செய்வார். சேவை செய்ய ஆட்கள், சொகுசு வீடு, வாகனம், துயரப்படாத மனம்,  பெண்கள் ஆதரவு,  வைர-வைடூரிய ஆபரணங்கள் அணிதல், அரசனுக்கே உதவி செய்தல், ஊரே மெச்சும் அளவில் வாழ்தல் ஆகியவற்றுக்கு சுக்கிரனே காரகத்துவம் பெற்றவர்.  
சுக்கிரன், தனது சொந்த ராசிகளான ரிஷபம், துலாம் ராசிகளில் ஆட்சி நிலையில் இருப்பார். தனக்கு நட்பு கிரகமான சனி ஆட்சி செய்யும் மகரம் மற்றும் கும்ப ராசிகளிலும், புதனின் ராசியான மிதுனத்திலும் நட்பு நிலையையும் கன்னி ராசியில் நீசமும் அடைகிறார். 

னக்குச் சம பலமுள்ள செவ்வாய் ஆட்சி செய்யும் மேஷம், விருச்சிகம் ராசிகளில் சம நிலையில் இருக்கிறார். சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியிலும் சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசியிலும் பகை நிலையை அடைகிறார்.
 
னக்கு நிகரான பலம் வாய்ந்த, அதே தருணத்தில் தனக்குப் பகை கிரகமான குருவின் ஆட்சி வீடுகளில் ஒன்றான தனுசு ராசியில் நட்பாகவும், மீன ராசியில் உச்சமாகவும் காணப் படுகிறார். எதிரியின் வீட்டில் உச்சம் பெறும் ஒரே கிரகம் என்ற சிறப்பும் சுக்கிரனுக்கு உண்டு. 

சுக்கிரன் பகை, நீசம் பெற்றிருக்கும் ஜாதகத்தில், குரு பகவான் தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்மம், கும்பம் ஆகிய ராசிகளில் இருந்து, தன்னுடைய 5 அல்லது 9-ம் பார்வையால் சுக்கிரனைப் பார்த்தால், பகை அல்லது நீசம் பெற்ற சுக்கிரனால் ஏற்பட்ட தோஷங்கள் விலகுவதுடன், சுக்கிரன் தனக்கு உரிய சுப பலன்களைத் தந்துவிடுவார்.  

குரு, பகை ராசிகளான ரிஷபம், மிதுனம், துலாம் ஆகிய ராசிகளிலிருந்து, பகை அல்லது நீசம் பெற்ற சுக்கிரனை 5 அல்லது 9-ம் பார்வையால் பார்த்தால், சுக்கிரனால் 50 சதவீதப் பலன்கள் கிடைக்கும். 

னக்குச் சம ராசியான கும்பத்திலிருக்கும் குரு, 5,9-ம் பார்வையால் சுக்கிரனைப் பார்த்தால், சுக்கிரன் 75 சதவீதப் பலன்களைத் தருவார்.

குரு நீச ராசியான மகரத்தில் நின்று 5, 9-ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால், கால் பங்கு மட்டுமே சுக்கிரன் சுப பலனைத் தருகிறார். 

குரு-சுக்கிரன் இருவரும் 7- ம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்த்ததுக் கொண்டால், இருவரும் எந்த ராசியில் எந்த நிலையில் இருந்தாலும், முழுமையான சுபயோக பலனையே தருகிறார்கள். பொதுவாக குருவும் சுக்கிரனும் ஒருவரையொருவர் பார்க்கும் வகையில் ஜாதகம் அமைந்த அன்பர்களுக்கு மிக மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.     
சுக்கிரனுக்கு உரிய காரகத்துவங்கள்  

தானியம் - மொச்சை
அங்கம் - இந்திரியங்கள்
தத்துவம் - பெண்
வஸ்திரம் - வெண்பட்டு
வாகனம் - மாடு
மொழி - தெலுங்கு 
பஞ்சபூதம் - அப்பு - நீர்
திசை - தென்கிழக்கு
ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒரு மாதம்
தன்மை - ஸ்திரம்
ஆட்சி -  துலாம், ரிஷபம்
உச்சம் - மீனம்
நீசம் - கன்னி
நட்பு - மகரம், கும்பம்
பகை - கடகம், சிம்மம்
மூலத்திரிகோணம் - துலாம்
எண் - 6
சுக்கிர திசை - 20 ஆண்டுகள்
சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரங்கள் - பரணி, பூரம், பூராடம். 
பார்வை   - ஏழாம் பார்வை
மலர் - வெள்ளைத் தாமரை
நிறம் - வெண்மை
உலோகம் - வெள்ளி
ரத்தினம் - வைரம்
தூப தீபம் - லவங்கம்
சமித்து - அத்தி
சுவை - புளிப்பு
நாடி - சிலேத்துமம்
அதிதேவதை - லட்சுமி, இந்திரன், வருணன்
குணம் - ராட்சஸம் 
குருவும் சுக்கிரனும் சேர்க்கை பலன்கள் 

கு
ருவும் சுக்கிரனும் இணைந்து கேந்திர ஸ்தானமான 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் நின்றிருந்தால், சுப பலனைத் தருகிறார். 

குருவும் சுக்கிரனும் 5, 9, 11-ம் இடங்களில் நின்றிருந்தால் அவரவர்க்கு உரிய சுப பலனைத் தருவார்கள். 
குரு, சுக்கிரன் இணைந்து 3, 6, 8, 12 ஆகிய இடங்களான மறைவு ஸ்தானங்களில் நின்றிருந்தால், கால் பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார்கள். இதிலும் பகை, நீசம் என்ற நிலையில் இருந்தால், பெரிய அளவில் யோகம் செய்வது இல்லை. 

மற்ற கிரகங்களுடன்...

ருவருக்கு சுக்கிர தசை 20 ஆண்டுகள் நடைபெறும். இந்தச் சுக்கிர தசை ஒருவரின் இளமைப் பருவத்திலேயே வருவது மிகவும் சிறப்பானது. 

குறிப்பாக சனி தசையின் இறுதியில் பிறப்பவர்களுக்கும், புதன் தசையில் பிறப்ப வர்களுக்கும் சுக்கிர தசை இளமையிலேயே வந்து, அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரும். சுகங்களை அள்ளித் தருவதில் சுக்கிரனுக்கு நிகர் சுக்கிரன்தான்.  
சுக்கிரன் மற்ற கிரகங்களுடன் சேர்ந்திருக்கும்போது பலன்கள் மாறுபடும். எந்த கிரகத்துடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால், என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

சுக்கிரன் - சூரியன்  

சு
க்கிரனுடன் சூரியனின் சேர்க்கை நல்ல இடத்தில் அமைந்திருந்தாலும், அந்த இடத்துக்கு குருவின் பார்வை இருந்தாலும், செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும். இப்படி சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருக்கும் அமைப்பைப் பெற்றவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபட்டால், நற்பலன்களைப் பெறலாம். 

சுக்கிரன் - சந்திரன் 

சு
க்கிரனுடன் சந்திரன் சேர்ந்திருக்கப் பெற்றவர்கள், நிறைந்த கல்வியறிவும், புத்தி சாதுர்யமும் கொண்டவர்களாகத் திகழ்வர். சகல சுக செளகர்யங்களையும் பெற்றிருப்பார்கள். பிறருக்கு உதவி செய்யத் தயங்க மாட்டார்கள். சுக்கிரனுடன் தேய்பிறை சந்திரன் இருந்தால், திங்கள்கிழமைகளில் சிவபெருமானை நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

சுக்கிரன் - செவ்வாய் 

செ
வ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்திருக்கும் அமைப்பைப் பெற ஜாதகர்கள், தோற்றப் பொலிவுடன் திகழ்வார்கள். தேக ஆரோக்கியமும், தைரியமும் மிகுந்தவர்களாக விளங்குவர். 
எதையும் சாமர்த்தி யமாகத் திட்டமிட்டுச் செய்து, வெற்றிபெறக் கூடியவர்கள்.  கலைகளில் பிரியம் உள்ள இவர்கள் பொறுமைசாலிகளும்கூட. சுக்கிரனுடன் செவ்வாய் சேர்ந்திருப்பவர்கள் முருகப்பெருமானை வழிபடுவதும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

சுக்கிரன் - புதன் 

சு
க்கிரன் புதனுடன் சேர்ந்திருக்கும் அமைப்பு இருந்தால், அந்த ஜாதகர்கள் அன்பும் பாசமும் நிறைந்தவர்களாகத் திகழ்வர். இவர்கள், மற்றவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். எப்போதும் நேர்மையுடன் நடந்துகொள்வார்கள். எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு, வெற்றிவாகை சூடுவார்கள். சுக்கிரனுடன் புதன் சேர்ந்திருப்பவர்கள் விஷ்ணுவை வழிபடுவதும், விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் நன்மை தரும். 

சுக்கிரன் - குரு 

ந்த இரு கிரகங்களும் இணைந்திருக்கும் ஜாதகக் காரர்கள், ஒரு கருத்தை ஆதரித்தும் பேசுவார்கள்; அந்தக் கருத்தையே மறுத்தும் பேசுவார்கள். இரக்க மனம் கொண்ட இவர்களிடம் பிடிவாத குணமும் சேர்ந்தே இருக்கும். இவர்களுடைய வாழ்க்கை எப்போதும் போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும் தெய்வபலம் இவர்களுக்குத் துணை நிற்கும். சுக்கிரனுடன் குரு சேர்ந்திருப்பவர்கள் தட்சிணாமூர்த்தியையும், மகாலட்சுமியையும் வழிபட்டு நற்பலன் களைப் பெறலாம். 

சுக்கிரன் - சனி 

சு
க்கிரனுடன் சனி சேர்ந்திருந்தால், அந்த அன்பர்கள் கம்பீரத் தோற்றத்துடன் காணப்படுவர். இவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்று பகுத்துப் பார்க்கத் தெரியாது. 

இவர்கள் உண்மையானவர் களாகவும், நீதி நேர்மையைக் கடைப்பிடிப்பவர் களாகவும் நடந்து கொள்வார்கள். இந்தச் சேர்க்கை அமையப் பெற்ற அன்பர்கள் ஆஞ்சநேயரை வழிபடுவதால் நற்பலன்கள் கிட்டும்.

சுக்கிரன் - ராகு 

ந்தக் கிரகங்கள் சேர்ந்திருக்க பிறந்தவர்கள், வாழ்க்கைத் துணைவரிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருப்பார்கள். எண்ணிய காரியங்களை எண்ணியபடியே முடிப்பதில் வல்லவர்கள். வீடு, நிலங்கள், மாடு- கன்றுகள், செல்வம், செல்வாக்கு அனைத்தும் பெற்றிருப்பார்கள். இந்தச் சேர்க்கை சரியான இடத்தில் அமையப் பெறாதவர்கள், ராகுகாலத்தில் துர்கையை வழிபட்டு நலன் பெறலாம்.

சுக்கிரன் - கேது 

ஜா
தகத்தில் சுக்கிர பகவானும் கேது பகவானும் சேர்ந்திருக்கும் அமைப்பு, ஆன்மிகத்தில் ஈடுபாட்டையும், திருக்கோயில்களைத் தரிசிப்பதில் ஆர்வத்தையும் தரும். இந்த அன்பர்கள் கவிஞர்களாகவும் ஆசிரியர் களாகவும் பெரும்புகழுடன் திகழ்வார்கள். 

இவர்கள் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

பன்னிரு ராசிகளும் சுக்கிர பலனும் 

ஜா
தகத்தில் சுக்கிர யோகம் நிரம்பப் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். ஏனெனில், வாழ்வில் சகல சுகபோகங்களும் அமைவதற்கு அருள்பாலிப்பவர் சுக்கிர பகவான். ஆகவே, ஜாதகத்தில் அவருடைய நிலையை அறிந்துகொள்வதில் அதீத ஆர்வம் காட்டுவார்கள். இங்கே, 12 ராசிகளில் சுக்கிரன் இருக்கும்போது உண்டாகும் பலாபலன்கள் உங்களுக்காக! 
மேஷம்: மேஷ ராசியில் சுக்கிரன் இடம்பெற்றால், இல்லற வாழ்வில் சஞ்சலங்கள் ஏற்படும். வேலை விஷயமாக அலைச்சல் அதிகமாக இருக்கும். குறைவான வசதி படைத்தவராக இருந்தாலும் அரசன் போன்ற ஆளுமைத்திறன் பெற்றிருப்பார்.
ரிஷபம்: புத்திக் கூர்மையுடன் செயல்படுபவர். நல்ல இல்லற வாழ்கை அமையப் பெறும். வறியவருக்கு உதவும் மனம் கொண்டவராக இருப்பார். வேலை செய்யும் நிறுவனத்தின் நன்மதிப்பை பெற்றிருப்பார்.
மிதுனம்: செல்வச் செழிப்பு வாய்க்கப்பெற்றவர். ஒரே நேரத்தில் பல தொழில் களில் வெற்றிகரமாக வேலை செய்யும் அளவுக்கு சாதுர்ய புத்தி கொண்டவராக இருப்பார். அயல்நாட்டுத் தொடர்பு மற்றும் இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.  
கடகம்: செய்யும் செயலில் மிகுந்த கவனம் கொண்டவராகவும், பலவிதமான வழிகளில் வாழ்க்கை நடத்துபவராகவும் திகழ்வர்; நற்குணம் கொண்டவர்.
சிம்மம்:  அளவான குடும்பத்தோடு வளமான வாழ்க்கை அமையும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் நன்மைகள் உண்டாகும். புத்திசாலித்தனமான செயல்பாடுகள் இருக்கும். 
கன்னி: பரம்பரைத் தொழிலில் ஈடுபாடு இருக்காது. அலைபாயும் மனமும், வெளிநாடு செல்லும் ஆர்வமும் ஏற்படும். இல்லற வாழ்வில் சச்சரவுகள் நிலவும்.
துலாம்: பேரும் புகழும் பெற்றுத் திகழ்வர். விவசாயம், கால்நடை, தானியங்கள் தொடர்புடைய தொழில்கள் மூலம் செல்வம் உண்டாகும். அறிவாளிகளின் தொடர்பு நன்மை தரும். 
விருச்சிகம்: அலைச்சல் மிக்க வாழ்க்கையைக் கொண்டவர். அதிகமாகப் பேசுபவர். பிறரது செயல்களில் ஆர்வம் காட்டுபவர்; சண்டைகளைத் தூண்டிவிடுபவர். இவர்களில் பலர், பெரிய கடனாளியாகத் திகவர்.
தனுசு: எதிரிகளை வீழ்த்துவார். தன் குலத்துக்கு தலைவராகத் திகழ்வார். மிகவும் மதிக்கப்படுபவர். நல்ல கவிஞராகவும் திகழ்வார். அரசாங்கத்துக்குப் பிரியமானவராக விளங்குவார். குடும்பத்துடன் இன்பமாக வாழ்வார். 
மகரம்: மகிழ்ச்சியான வாழ்க்கை அமையப் பெற்றவர். எந்தத் துக்கத்தையும் தாங்கும் திறன் பெற்றவர். கபம் மற்றும் வாதம் தொடர்பான நோய்களுக்கு ஆளாவார். வாழ்க்கைத் துணைவர் வழியில் பிரச்னைகள் உண்டு.
கும்பம்: உணர்ச்சிவசப் படுபவர். அடிக்கடி நோய் வாய்ப்படுவார். தீய செயல்-பழக்கவழக்கங்களுக்கு ஆளாகும் வாய்ப்பும் உண்டு. சமுதாயத்தில், எப்போதும் எதிர்மறை சிந்தனை கொண்டவராகத் திகழ்வார்.
மீனம்: தன் வம்சத்திலேயே மிக முக்கிய நபராகத் திகழ்வார். இவர்களுக்கு, விவசாயம் மூலம் பெரும்பொருள் சேரும். எல்லாவற்றிலும் மேன்மை நிலையை அடைபவர். மீனத்தில் சுக்கிரன் வர்க்கோத்தமம் பெற்றால், இவர்களது சுயமரியாதைக்கு 
இழுக்கு நேரிடலாம்.

சுக்கிர யோகம் பெற எளிய வழிபாடுகள் 

ஜா
தகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றவர்கள், சகல லட்சணங்களுடன் அழகாக இருப்பார்கள். முகம் களை பொருந்தியதாக இருக்கும். சுக்கிரன் இந்திரியங்களுக்கும் அதிபதி என்பதால், இவரது ஆதிக்கத்துக்குத் தக்கபடியே ஒருவரது இல்லற வாழ்வும், வாழ்க்கைத்துணையும் அமையும்.  
சுக்கிரன் பூரண சுப கிரகம் என்பதால், அவர் அசுபர்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருடன் சேரக்கூடாது. அப்படிச் சேர்ந்தால், அதற்கு உரிய பரிகாரங்களைச் செய்ய வேண்டும். 

சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமை வெண்பட்டு வஸ்திரம் சார்த்தி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் விலகும்.

குரு வழிபாடு, ஏழைகளுக்கு தானம் செய்தல், மகாலட்சுமி வழிபாடு ஆகியவற்றைச்செய்தால், சுக்கிரனால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஜாதகத்தில் சுக்கிரன் பகை அல்லது நீசம் பெற்று திகழ்கிறார் எனில், அந்த ஜாதகக்காரர்கள் வெள்ளிக்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்ததும், பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் துதிப் பாடலைப் பாராயணம் செய்து பூஜித்து வந்தால், அவர்களின் வாழ்வு மேம்படும்.  

துதிப்பாடல்... 

சுக்கிர மூர்த்தி சுகமிக ஈவாய் 
வக்கிரமின்றி வரம் பல தருவாய் 
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக்கொடுப்பாய் அடியார்க்கு அருளே!


சுக்கிரனுக்கு உரிய மந்திரம்

ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் ஸ: 
சுக்ராய நம: 

 
சுக்கிர காயத்ரீ 

ஓம் ப்ருகுபுத்ராய வித்மஹே
ஸ்வேத வாகனாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயாத்:


*** 
பரிகாரத் தலங்கள் 

சு
க்கிரனுக்கு உரிய ஸ்தலமாக கஞ்சனூர் விளங்குகிறது. இந்தத் தலம், சூரியனார்கோவிலிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கஞ்சனூரில் சிவபெருமான் குளிர் நிலவாகக் காட்சி தருகிறார்.  
மேலும் திருவரங்கம் சென்று ஸ்ரீரங்கநாத பெருமாளையும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் தரிசித்து வழிபடுவதும் சுக்கிரனுக்கு உரிய சிறப்பான பரிகாரமாகும். 

பொதுவாக, சுக்கிரன் பாவ கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலோ, அவற்றின் பார்வை பட்டாலோ மோசமான பலன்கள் விளையும், இதைப் போக்குவதற்கு நவகிரக ஹோமத்தில் சுக்கிரனுக்கு கிரக சாந்தி செய்யவேண்டும். இதற்குப் பெயர் ‘சுக்கிர சாந்தி’ என்று இருந்தாலும், நிஜத்தில் சுக்கிரனுக்கு மட்டும் சாந்தி செய்வதில்லை. எந்தப் பாவ கிரகம் தொந்தரவு தருகிறதோ, அதற்கும் சேர்த்தே சாந்தி செய்வார்கள்.

பொதுவாக, சின்னப் பிரச்னைகளுக்கு சுக்கிர சாந்தி செய்வது இல்லை. தாள முடியாத அளவு உபத்திரவம் இருந்தால் மட்டுமே செய்கிறார்கள்.

சுக்கிர தசையில் சூரிய புக்தி இருந்தால், அது மோசமான பலன்களைத் தரும். தலை, வயிறு, கண் தொடர்பான நோய்கள் வரும். 

சுக்கிர தசையில் சந்திர புக்தி இருந்தால், பணத்துக்குக் கஷ்டம் இருக்காது. ஆனால், உடம்பு பாடாய்ப் படுத்தும். வாத, பித்த ரோகங்கள் வரும். அதேபோல், செவ்வாய் புக்தி இருந்தால், குடும்பத்தில் கலகம் விளையும். கேது புக்தி இருந்தாலும் உடல்நலம் கெடும். எதிர்பாராத வகைகளில் உபத்திரவம் நேரிடும்.

இதுபோன்ற பிரச்னை களிலிருந்து மீள்வதற்காக சாந்தி செய்வார்கள். 

சுக்கிர சாந்தியை வெள்ளிக்கிழமைகளிலும், பூச நட்சத்திரத்திலும் செய்யலாம். இரண்டும் இணைந்து வரும் நாளாக இருந்தால் ரொம்ப விசேஷம்.  

சுக்கிர சாந்தி செய்யும் போது, மகாலட்சுமியை வணங்குவது சிறப்பானது. ‘நமஸ்தேஸ்து மகாமாயே’ எனத் தொடங்கும் மகா லட்சுமி அஷ்டகத்தைத் தவறாமல் 41 வெள்ளிக் கிழமைகள் படித்து, மகா
லட்சுமியை வணங்கி வந்தால் சங்கடங்கள் விலகி, நீங்காத செல்வம் கிடைக்கும்.

சுக்கிரனே போற்றி!

ஸ்ரீ
ஸ்காந்த புராணத்தில் சுக்கிர பகவானின் மகிமையை விவரிக்கும் மிக அற்புதமான ஸ்தோத்திரம் உள்ளது. அதன் கருத்துகளை விளக்கும் போற்றிப் பாடல் இங்கே உங்களுக்காக!

இந்தத் துதிப்பாடலைப் பக்தியோடு படித்து, சுக்கிரபகவானை வழிபடுபவர்களுக்கு சுக்கிரயோகம் வாய்க்கும். நீண்ட ஆயுள், பொருள், சுகம், புத்திர சம்பத்து, லட்சுமிகடாட்சம் ஆகிய அனைத்தும் ஸித்திக்கும். 

வெண்மை நிறத்தவரே
வெளுப்பு வஸ்திரம் தரித்தவரே 
சுக்கிரனே போற்றி!

வெள்ளை ஆபரணங்களும்
வெண்கிரணங்களும்
கொண்டவரே சுக்கிரனே போற்றி!

பார்கவனே போற்றி
காவ்யனே போற்றி
கருணைக்கடலே போற்றி

ஞானத்தால் அறியத்தக்கவரே 
ஆத்ம சொரூபத்தை அறிந்தவரே
சுக்கிரனே போற்றி போற்றி! 

தொகுப்பு: எஸ்.கதிரேசன்

கங்கைக்குப் புனிதம் தந்த தீர்த்தம் !


றைவன், தான் படைத்த ஜீவராசி களிடம் எந்த பேதமும் பார்ப்பதில்லை. ஆறறிவு பெற்ற மனிதர்களுக்கு மட்டு மல்லாமல், தன்னை உள்ளன்போடு வழிபடும் அனைத்து ஜீவன்களுக்கும் அருள்புரிபவர். 

மனிதர்கள் மட்டுமின்றி ஜீவராசிகள்  பலவும் இறைவனை வழிபட்டு பேறு பெற்றிருக்கின்றன. அந்த வகையில், பூனை ஒன்று வழிபட்டு பேறு பெற்ற தலம்தான், ஸ்ரீமுத்தாம்பிகையுடன்  ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயில் கொண்டிருக் கும் வில்லியப்பாக்கம். 
இந்தத் தலத்தில் பூனை மட்டுமின்றி, வேடன் ஒருவனும் வழிபட்டு சிவனரு ளைப் பெற்று மகிழ்ந்திருக்கிறான்.

அந்தத் திருக்கதை...

சிவகணங்களில் முதன்மையானவர் நந்திகேஸ்வரர். சிவபெருமானே இவருக்கு பஞ்சாட்சர உபதேசம் செய்து வைத்ததால், சைவ ஆசார்யர்களில் முதல் குரு என்ற பேறும் பெற்றவர். 

நந்தியெம்பெருமான் நாள்தோறும் செய்யும் சிவபூஜைக்கு அவரின் சீடர்களான காந்தனும் மகா காந்தனும் உதவி செய்வது வழக்கம். 

ஒருநாள், சீடர்கள் இருவரும் சிவ பூஜைக்கு மலர் பறிப்பதற்காகச் சென் றனர். நந்தவனத்தின் அருகிலிருந்த தாமரைக் குளத்தில் பூத்திருந்த வெண் தாமரை மலர்களைப் பறித்து, கூடையில் நிரப்பிக்கொண்டு திரும்பும்போது, ஒரு மலர் குளத்திலும் மற்றொரு மலர் தரையிலுமாக விழுந்தன. குளத்தில் விழுந்தது மீனாகவும், கரையில் விழுந்தது கிளியாகவும் மாறியது. 

இந்த அதிசயத்தைக் கண்ட காந்தனும் மகாகாந்தனும், மீண்டும் மீண்டும் மலர் களைத் தவறவிட்டு, அவை மீனாகவும் கிளியாகவும் மாறுவதைக் கண்டு குதூகலித்தபடி விளையாடத் துவங்கினர். 

மலர் பறிக்கச் சென்ற இருவரும் நீண்டநேரமாகியும் திரும்பி வராததால், நந்திதேவர் அவர்களைத் தேடிக்கொண்டு  அங்கேயே வந்துவிட்டார். சீடர்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருப்ப தைக் கண்டவர், கோபம் அவர்களைச் சபித்துவிட்டார். நந்திதேவரைக் கண்டதும் பூனை போல் விழித்துக்கொண்டிருந்த காந்தனைப் பூனையாக மாறும்படியும், கையில் கோலுடன் இருந்த மகா காந்தனை வேடனாக மாறும்படியும் சபித்தார்.

பின்னர், தங்களது தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்ட சீடர்களிடம் இரக்கம் கொண்டவர், சாப விமோசனத்துக்கான வழியையும் வழங்கினார். ``நீங்கள் இருவரும் காஞ்சி மாநகருக்கு தென்கிழக்கு திசையில் உள்ள புண்டரீக புஷ்கரணியில் நீராடி,  அதன் அருகில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பெற்ற அகத்தீஸ்வரருக்கு பக்தியோடு பூஜை செய்யவேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் அறியாதபடி, தனித் தனியாக வழிபடவேண்டும். ஈசன் அருளால் இருவரும் நேருக்குநேர் சந்திக்கும்போது, உங்களின் சாபம் நீங்கி என்னை அடைவீர்கள்’’ என்று கூறினார்.

சாபத்தின்படி பூனையாக மாறிய காந்தனும், வேடனாக மாறிய மகாகாந்தனும் நந்திதேவர் குறிப்பிட்ட தலத்தை அடைந்தனர்.  ஒருவரையொருவர் சந்திக்க வாய்ப்பில்லாதபடி தனித்தனியே அங்கிருந்த சிவலிங்கத்தை அனுதினமும் பூஜித்து வந்தனர். சாப விமோசனத்துக்கான காலமும் கனிந்தது. 

ஒருநாள் புண்டரீக புஷ்கரணியில் நீராடிவிட்டு, சிவனாரைப் பூஜிக்கச் சென்றான் வேடன் (மகாகாந்தன்). அப்போது, தனக்கு முன்பாக வேறு எவரோ சிவனாருக்குப் பலவித புஷ்பங்களைச் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வழிபட்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான்.  ‘ஆளரவமற்ற இந்தக் காட்டுப் பகுதியில் தன்னை மீறி யார் பூஜை செய்திருக்க முடியும்?’ என்று யோசித்துப் பார்த்தும் அவனுக்கு விடை கிடைக்கவில்லை. 

அன்றிரவு அங்கேயே தங்கியிருந்து பூஜை செய்ய வருவது யார் என்பதைக் கண்டறிய முடிவு செய்தான். அதன்படி இரவு துவங்கியதும் அங்கு வந்து, சிவலிங்கத்துக்கு அருகிலிருந்த சரக் கொன்றை மரத்தின் கிளையில் ஏறி அமர்ந்துகொண்டு கண்காணிக்க ஆரம்பித்தான். அதிகாலைப் பொழுதில் ஒரு பூனை ஈசனுக்கு மலர்களைத் தூவி பூஜை செய்தது. அதைக் கண்ட வேடன், அந்தப் பூனையைப் பிடிப்பதற்காக மரத்திலிருந்து வேகமாக கீழே குதித்தான். அதனால் ஏற்பட்ட சலசலப்புக்கு அஞ்சிய பூனை அங்கிருந்து வேகமாக ஓடத் தொடங்கியது. 

வேடன், பூனையைக் குறிவைத்து அம்பை எய்தான். அந்தத் தருணத்தில் பூனை சற்றே விலகியதால், அம்பானது சிவலிங்கத்தின் மேல் பட்டு, லிங்க மூர்த்தத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. வேடன் பதற்றத்துடன் அலற, அந்தச் சத்தம் கேட்டு பூனை திரும்பிப் பார்த்தது. பூனையும் வேடனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட அக்கணமே அவர்களது சாபம் நீங்கியது. காந்தனும், மகாகாந்தனும் சுயரூபம் பெற்று கயிலையைச் சென்றடைந்தனர்.

அவர்களது சாபத்தைப் போக்கிய ஈசன், ‘கிராத மார்ஜாலீஸ்வரர்’ என்ற திருப்பெயரை ஏற்றார். ‘கிராதன்’ என்பது வேடனையும், ‘மார்ஜாலம்’ என்பது பூனையையும் குறிக்கும். இங்கு அருள்பாலிக்கும் அம்பாள், ‘முத்தாம்பிகை’, ‘மௌத்தி காம்பிகை’ ஆகிய திருப்பெயர்களுடன் திகழ்கிறாள். இந்தக் கோயிலின் கல்வெட்டுகளில் இறைவனின் திருநாமம், ‘திருஅகஸ்தீஸ்வரமுடைய நாய னார்’ என்றும்,  ஊர் ‘வில்லிவாக்கம் என்கிற கங்கைகொண்ட சோழ நல்லூர்’ என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. 

கி.பி.1257-ல் வீரபாண்டியன் ஆட்சிக்காலத்தில், கோயிலில் விளக்கேற்றுவதற்கு அளிக்கப்பட்ட தானம் குறித்து ஒரு கல்வெட்டும், விஜயநகர மன்னர் கம்பணன் காலத்தில் `கங்கைகொண்ட சோழ நல்லூர்' என்று வழங்கப்பட்ட இந்தத் தலத்தில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது பற்றி ஒரு  கல்வெட்டும் காணப்படுகின்றன.

திருமால்,  பிரம்மா, கங்கை வழிபட்ட தலம்!


‘தங்களில் பெரியவர் யார்?' என்பது குறித்த சர்ச்சையில், `தானே பெரியவர்' என்று பிரம்மன் திருமால் ஆகிய இருவருக்குள்ளும் எழுந்த கர்வத்தால் ஏற்பட்ட தொஷம் நீங்கிட, அவர்கள் இருவரும் வந்து வழிபட்டு அருள்பெற்ற தலம் இது. 

அவர்கள் மட்டுமா? தன்னிடம் சேரும் பாவங்க ளைப் போக்கிக் கொள்வதற்காக, ஈசனின் ஆணையின் படி கங்காதேவியும் இந்தத் தலத்துக்கு வந்தாள். இங்குள்ள புண்டரீக புஷ்கரணியில் நீராடிப் புனிதம் பெற்றாள் என்கிறது தலபுராணம். கோயிலின் ஸ்தல விருட்சமான சரக்கொன்றை கோயிலுக்குள் உள்ளது. அந்த மரத்தினடியில் ஒரு சிவலிங்கம் காட்சி தருகிறது.

மிகவும் புராதனமான இந்தத் திருக்கோயில், இந்தப் பகுதியில் புகழ்பெற்ற ஜமீன்தாரராக இருந்த சூணாம்பேடு திவான்பகதூர் அருணாசல முதலியாரின் பரம்பரையில் வந்தவர்களால் மிகவும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞராகப் பணியாற் றும் சி.இராமகிருஷ்ணா, கோயிலின் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார்.

‘`தேவர்களும், மகரிஷிகளும், மன்னர்களும்பணிந்து வழிபட்ட இறைவன் இவர். இன்றும் தம்மை உள்ளன்போடு வழிபடும் பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்கிறார். குறிப்பாக திருமணத்தடை நீங்கவும், மழலைப்பேறு வாய்க்கவும் பக்தர்கள் பலர் இங்கு வந்து இறைவனை வழிபட்டுப் பலன் பெறுகின்றனர்’’ என்றார், கோயிலின் அர்ச்சகர் சங்கர குருக்கள். நீங்களும் ஒரு முறை இத்தலத்துக்குச் சென்று அகத்தீஸ்வரரைத் தரிசித்து, வாழ்வில் அல்லல்கள் நீங்கிட அருள்பெற்று வாருங்கள். 

துர்கையின் எழில் கோலம்! 

ந்தக் கோயிலின் வடக்குக் கோஷ்டத்தில் அழகுக் கோலத்தில் அருள்பாலிக்கிறாள் ஸ்ரீதுர்கை. 

வெண்கொற்றக் குடைக்குக் கீழே தோரண அலங்காரம் திகழ, சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம் ஆகியவற்றை ஏந்தியபடி ஆறு திருக்கரங் களுடன், கரண்ட மகுடம் தரித்து, மகிஷனின் சிரத்தின் மீது நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறாள் இந்த அம்பிகை. திருவடிகளுக்கு அருகில் சேடியர் இருவர் சாமரம் வீசுகிறார்கள். வேறெங்கும் காண்பதற்கரிய திருவடிவம் இது என்கிறார்கள்.

இந்தத் துர்கையின் திருவடிவம் 12 அல்லது 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று தொல்லியல் துறை அறிஞர்கள் கூறுகிறார்கள். தேவியின் சிற்பம் மட்டுமின்றி, சோழர் கட்டடக் கலைக்குச் சான்றாக மேலும்பல சிற்பங்கள் கோயிலில் நேர்த்தியான முறையில் அமைந்துள்ளன. 

முன் மண்டபத் தூண் ஒன்றில் திகழும் சரப மூர்த்தி, நரசிம்ம மூர்த்தி, கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்திக்கு அருகில் உள்ள ஏகபாத மூர்த்தியின் சிற்பம் ஆகியன மிகுந்த கலைநயத்துடன் காட்சி தருகின்றன.

எங்கிருக்கிறது..? 

கா
ஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், சூணாம்பேடு எனும் ஊரிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வில்லிப்பாக்கம்.சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் 83-ஏ அரசுப் பேருந்தும், சில தனியார் பேருந்துகளும் சூணாம்பேடு வழியாகச் செல்கின்றன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 11 மணி வரை; மாலை 5 முதல் 7 மணி வரை. கோயிலின் அருகிலேயே அர்ச்சகரின் வீடும் உள்ளது. 

பார்வை அருளும் பரமேஸ்வரன் !


கத்திய முனிவர் வழிபட்ட தால் `அகத்தீஸ்வரர்' எனும் திருப் பெயர் ஏற்று ஈசன் அருள்பாலிக்கும்  எண்ணற்ற சிவத்தலங்கள் தென்ன கத்தில் உண்டு. அவற்றில் ஒன்று பெருங்குடி. 

கல்வெட்டுகளில் இத்தலத்தின் பெயர், ‘பெருமுடி’ என்றே காணப் படுகிறது. இறைவனின் திருப் பெயர் ‘அகத்தீஸ்வரமுடையார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த இறைவனைத் தரிசித்து வழிபட்டால், பார்வை குறைபாடு கள் நீங்கும் என்பது நம்பிக்கை.  
இக்கோயிலில், ஸ்ரீதட்சிணா மூர்த்தி சந்நிதிக்கு அருகிலுள்ள கல்வெட்டு குறிப்பிடும் சம்பவம் ஒன்றும் இந்த நம்பிக்கையை மெய்யென்று நிரூபிக்கிறது !

கூத்தனின் மகளுக்கு அருளிய கூத்தன்! 

முற்காலத்தில் இந்தப் பகுதியில் கூத்தன் என்பவர் வசித்து வந்தார். அகத்தீஸ்வரரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தவர் அவர்.

பக்தர்களைச் சோதித்து ஆட்கொள்வது பரமனின் இயல்பு ஆயிற்றே! கூத்தனுக்கும் ஒரு சோதனை ஏற்பட்டது. ஒருநாள் எதிர்பாராத விதமாக அவருடைய மகள் நல்ல மங்கைக்குப் பார்வை பறிபோனது. அவளுக்குப் பார்வை திரும்ப கிடைக்க வேண் டும் என்பதற்காகப் பல வைத்தியர் களிடம் அழைத்துச் சென்றார் கூத்தன்.  ஆனாலும் பயனில்லாமல் போனது.

பல வருடங்கள் கடந்தன. கி.பி.1268ல் ஹொய்சாள மன்னர் ராமநாதனின் ஆட்சிக் காலத்தில், அகத்தீஸ்வரமுடையாரின் திருக் கோயில் திருப்பணிகள் தொடங் கப்பட்டன. பணிகளில் சில மிச்சமிருந்த நிலையில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், கூத்தன் தன் மகளின் சிகிச்சைக்காக வைத் திருந்த மூன்று கழஞ்சு பொன்னை ஆலயத் திருப்பணிக்கு வழங்கி னார். திருப்பணிகள் பூர்த்தியாகி கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து, ஐயன் அகத்தீஸ் வரரின் கருணையால், நல்ல மங்கைக்கு பார்வை கிடைத்தது. அதனால் நெகிழ்ந்துபோன கூத்தன், மறுபடியும் கழஞ்சு பொன்னால் பட்டம் செய்து,  அகத்தீஸ்வரருக்குச் சார்த்தி வழிபட்டார். இதுபற்றிய விவரத்தை கல்வெட்டிலும் பொறித்துவைத்தாராம். 

சுந்தர சோழனின் காலத்தில்... 

திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் சோமரசன் பேட்டைக்கு அடுத்து வலது பக்கமாகச் சென்றால், பெருங்குடி கிராமத்தை அடையலாம். சுற்றிலும் பசுமை போர்த்திக் காட்சி தரும் வயல்வெளிகள் சூழ்ந்த பெருங்குடி கிராமத்தின் வடக்கில் அமைந்திருக்கிறது ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோயில்.  
தொடக்கக் காலத்தில் காவிரிக் கரையோரம் செங்கற்றளி களாக அமைந்திருந்த நூற்றுக்கணக்கான ஆலயங்கள், சோழர்கள் காலத்தில் கற்றளிகளாக நிர்மாணிக்கப்பட்டன. அவற்றில் இக் கோயிலும் ஒன்று. இங்கு, ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. எனவே, இந்தக் கோயில் சுந்தர சோழர் காலத்தில் கட்டப்பட்டிருக்க லாம் என்று சொல்லப்படுகிறது. கோயில் கருவறை, முகமண்டபம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், அம்பாள் சந்நிதி பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள். 

கோயிலுக்குள் இறைவனைத் தரிசிக்கச் செல்லும்போது முதலில் நம்மைக் கவர்வது மண்டபம்தான். அதன் இடப்புறத்தில் ஸ்ரீமகா கணபதி, ஸ்ரீவேங்கடாசலபதி, ஸ்ரீலட்சுமி நாராயணர் திருவுருவங்களும், வலப் பக்கத்தில் ஸ்ரீதெய்வானையுடன் ஸ்ரீமுருகப்பெருமானும் காட்சி தருகின்றனர். அருணகிரிநாதரின் திருப்புகழில் போற்றப்பெறும் முருகப்பெருமான் இவர். 

அவருக்கு அருகில் சப்த கன்னியரில் வைஷ்ணவி, பிராம்மி, வாராகி ஆகியோர் மட்டுமே காணப்படுகிறார்கள். முருகனுக்கு நேரெதிரில் ஈசான்ய மூலையில் சனீஸ்வர பகவான் தனியாக எழுந்தருளியிருக்கிறார். இந்தக் கோயில், செவ்வாய் தோஷம் மற்றும் சனி தோஷம் ஆகிய வற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

தலை சாய்ந்த நிலையில் சிவலிங்கம்!

மண்டபத்தைக் கடந்து கருவறைக்குச் செல்கிறோம். பொதுவாகக் கருவறை வாயிலில் இருக்கும் துவாரபாலர்களில் வலப்புறத்தில் உள்ளவரின் திருக்கரத்தில் நரசிம்ம திருமுகம் திகழ்கிறது. வேறெங்கும் இப்படியான துவாரபாலகரைக் காண்பதரிது என்கிறார்கள்.

கருவறையில், வடக்கே சற்று சாய்ந்து தென்கிழக்கை நோக்கிய லிங்க மூர்த்தமாக அருள்கிறார் அகத்தீஸ்வரர். அம்பாள் ஸ்ரீசிவகாமி சுந்தரி தனிச் சந்நிதியில் காட்சி தருகிறாள். இந்த அம்பிகைக்கு அகிலாண்டேஸ்வரி என்ற திருப்பெயரும் வழங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அம்பாள் சந்நிதியின் இடப்பக்கத்தில் ஸ்ரீநர்த்தன விநாயகரும், வலப் பக்கத்தில் மயில் வாகனத்தில் ஸ்ரீமுருகப் பெருமானும் காட்சி தருகிறார்கள். 

பிராகாரத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்கின்றனர்.  சோழர்காலச் சிற்பத் திறனுக்குச் சாட்சியாகத் திகழ்கின்றன இந்தத் தெய்வமூர்த்தங்கள். குறிப்பாக மாதொருபாகனாம் அர்த்தநாரீசுவரரின் திருவடிவில், திருமுடி தொடங்கி திருவடி வரை அனைத்து அங்கங்களையும் நுட்பமாக வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்கள். மட்டுமின்றி, கோயிலின் சுவர்களில் திகழும் குறுஞ்சிற்பங்களும் அற்புதம்; ராமாயணக் காட்சிகள், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஆகியவற்றை நம் கண் முன்னே படம்பிடித்துக் காட்டுகின்றன!

கோயில் தோரணவாயிலில் திகழும் கணபதி- மகாலட்சுமி தேவி  சிற்பம், சுற்றிலும் திகழும் சிவபெருமானின் போர்க்களக் காட்சிகள், சிவன் மற்றும் பார்வதிதேவி வேடர்கள் வடிவில் அருளும் காட்சி, கஜ சம்ஹார திருக்கோலம்... என இறையின் அருள்திறனோடு சிற்பிகளின் கலைத்திறனும் செழித்தோங்கி திகழ்கிறது இந்தக் கோயிலில். கண்களில் பிரச்னை இருப்பவர்கள் பெருங்குடி அகத்தீஸ்வர முடையாரிடம் முறையிடுங்கள். அவர் நமது புறக்கண்களின் குறையைத் தீர்ப்பதோடு, நமது அகக் கண்களையும் திறக்கவைத்து, அற்புதமான எதிர்காலம் அமைய வரம் அருள்வார்.

கண் நோய் தீர்த்த கல்வெட்டு பற்றிய தகவல் ... 

இந்தியக் கல்வெட்டறிக்கை எண் : 394 (1939 - 1940) 


சக் கூலிக்கு இவன் இட்ட பொன் கழஞ்சு முக்கழஞ்சு இப் 
பொன் முக்கழஞ்சும் திருப்பணிக்கு கூ(த்)தன் இட் 
டான் இதுவும் 19 வது மகரநாயற்று நாள் இந்த கூத்தன் 
மகள் நல்லமங்கை சிறு வயஸ்ஸிலே கண் ம(றை)ந்த 
அளவுக்கு இவன் மகள் பின்பு 
கண் விளங்கி ஐந்நாயனாருக்கு இவன் கழஞ்சு 
பொன்னிட்டு பட்டம் பண்ணிச் சாத்தினான்

பக்தர்கள் கவனத்துக்கு... 

ஸ்வாமி: ஸ்ரீஅகத்தீஸ்வரர்

அம்பாள்: 
ஸ்ரீசிவகாமசுந்தரி

வழிபாட்டுச் சிறப்பு: பார்வை குறைபாடு உள்ளவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து ஸ்வாமி-அம்பாளைத் தரிசித்து வழிபட்டால், விரைவில் குறைபாடுகள் நீங்கும். மேலும் செவ்வாய் தோஷம் மற்றும் சனி தோஷம் நீங்கவும் அருள்வழங்கும் திருத்தலம் இது.

நடை திறந்திருக்கும் நேரம்:
 காலை 8:30 முதல் 11.30 மணி வரை; மாலை 5 முதல் 7:30 மணி வரை.

எப்படிச் செல்வது ?: 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வயலூர் செல்லும் சாலையில்  9 கி.மீ தொலைவிலுள்ளது சோமரசன் பேட்டை. அங்கிருந்து வலப் புறம் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்.

Sunday, 1 April 2018

ராகு திசை


ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். ராகுவுக்கு சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் ராகு நின்ற வீட்டதிபதியின் நிலையை கொண்டே ராகு அதன் பலனை தருவார். பொதுவாக ராகு பகவான் 3,6,10,11 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்று சுப கிரகங்களின் சேர்க்கையுனிருந்தால் நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் நல்ல மன தைரியம் உண்டாகும். ராகு நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்று அமைந்து விட்டால் அதிகம் சம்பாதிக்கும் யோகம்,  வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் உயர்ந்த நிலைக்கு செல்லக் கூடிய அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு ஆடை ஆபரண சேர்க்கைகள் யாவும் சிறப்பாக அமையும். புதுமையான கட்டிடங்கள் கட்டுவது, புதுமையான விஷயங்களில் ஆர்வம் காட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு கொடுக்கும்.

அதுவே ராகு பகவான் அசுபபலம் பெற்று ராகு நின்ற வீட்டதிபதியும் பலமிழந்திந்தால் ராகு திசை நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் சூழ்நிலை உடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள கூடிய அமைப்பு கொடுக்கும் அதிக முன் கோபமும் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், தவறான பெண்களின் சேர்க்கைகள், பிள்ளைகளுக்கு தோஷம், அரசு வழியில் தண்டனை பெறக் கூடிய நிலை, அபராதம் கட்ட வேண்டிய நிலை போன்ற பலவிதமான துக்க பலன்கள் உண்டாகும். உடல் நிலையிலும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்ணும் உணவே விஷமாக  மாற கூடிய நிலை ஏற்படும்.
திருவாதிரை,சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்கள் ராகுவுக்குடையதாகும். ராகு திசை ஒருவருக்கு 3வது திசையாக வந்தால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். குறிப்பாக ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற சந்திரனின் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு 3வது திசையாக ராகு வரும். இக்காலங்களில் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

ராகு பகவான் பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் திசை  நடைபெற்றால் நல்ல உடல்  ஆரோக்கியம், சுறுசுறுப்பாக இருக்க கூடிய ஆற்றல் உண்டாகும். இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை நல்ல அறிவாற்றல், புக்தி கூர்மை, ஸ்பெகுலேஷன் மூலம் தன சேர்க்கை உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் எதிர்பாராத தனசேர்க்கை, புதிய வாய்ப்புகள் தேடி வரும் அமைப்பு, எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் வசதி வாய்ப்புகள், எதிர்பாராத தனசேர்க்கைகள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

அதுவே ராகு பகவான் பலமிழந்திருந்து திசையானது குழந்தை பருவத்தில் ந¬பெற்றால் ஆரோக்கிய பாதிப்பும், பெற்றோருக்கு பிரச்சனைகளும் ஏற்படும். இளமை பருவத்தில் ந¬பெற்றால் கல்வியில் தடை, தேவையற்ற நட்புகள், தீய பழக்க வழக்கங்கள், பெற்றோர்களிடம் அவப்பெயர் உண்டாகும். மத்திம வயதில் நடைபெற்றால் மணவாழ்வில் பிரச்சனை, எடுக்கும் முயற்சிகளில் தடை முரட்டுதனமான செயல்பாடுகளால் அவப்பெயர் ஏற்படும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், உண்ணும் உணவே விஷமாகக் கூடிய நிலை உண்டாகும்.

ராகு திசை ராகுபுக்தி 
    ராகு திசையில் ராகுபுக்தி 2வருடம் 8மாதம் 12நாட்கள் நடைபெறும்.

ராகு பலம் பெற்று அதன் சுயபுக்தி காலங்களில் மனதில் நல்ல உற்சாகமும், எடுக்கும் காரியங்கள்  யாவற்றிலும் வெற்றியும், அரசு வழியில் ஆதரவும், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வுகளும் உண்டாகும், வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு ஏற்படும்.

ராகு பலமிழந்திருந்தால் பிறந்த ஊரை விட்டும் உற்றார் உறவினர்களை விட்டும். குடும்பத்தை விட்டும் அன்னியர் வீட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படும். மனநிலையில் பாதிப்பு, தீராத நோயினால் அவதிப் படும் நிலை, வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கெட்ட பெயரை எடுக்கும் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ளவர்களை இழக்கு நிலை, பொருள் இழப்பு, பங்காளி வழியில் தொல்லை ஏற்படும்.

ராகுதசா குருபுக்தி
     
ராகுதிசையில் குரு புக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.  

குரு பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பாராத வகையில் தன லாபம் கிட்டும் தான்ய விருத்தியும், சமுதாயத்தில் பெயர் புகழ்,செல்வம் செல்வாக்கு உயரக் கூடிய பாக்கியமும் உண்டாகும். சொந்த ஊரிலேயே வீடுமனை, வண்டி வாகன வசதிகளுடன் வாழக் கூடிய யோகம் அமையும். பிள்ளைகளால் பெருமையும், அரசு வழியில் உயர் பதவிகளும், பெரியவர்களின் ஆசியும் கிட்டும்

குருபகவான் பலமிழந்து அமையப் பெற்றால் நீச தொழில் செய்யும் நிலை, பண விஷயங்களில் கெட்ட பெயரை சம்பாதிக்க கூடிய நிலை, புத்திர பாக்கியம் உண்டாக தடை, புத்திரர்களால் அவமானம் நெருங்கியவர்களே துரோகம் செய்யும் நிலை வறுமை, தொழில் உத்தியோகத்தில் அவப்பெயர் குடும்பத்திலுள்ளவர்களுக்கு நோய்கள் உண்டாகும்.
   
ராகுதசா சனிபுக்தி

     ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.  

சனிபகவான் பலம் பெற்றிருந்தால் சொன்ன சொல்லை காப்பாற்றும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை, சுகமான வாழ்க்கை, சுப நிகழ்ச்சிகள் கைகூடும் வாய்ப்பு, தன தான்ய அபிவிருத்தி, தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம், எதிலும் துணிந்து செயல் படும் ஆற்றல், ஆடை ஆபரண சேர்க்கை, அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

சனிபகவான் பலமிழந்து புக்தி நடைபெற்றால் எதிர்பாராத விபத்துக்களால் ஊனமாகும் நிலை, மனைவி பிள்ளைகளுக்கு உடல் நிலை பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் பகை, சோர்வு எடுக்கும் காரியங்களில் தடை, தொழிலாளர்களால் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை, பூர்வீக சொத்துக்களை இழக்கும் நிலை, புத்திரதோஷம், வீண் வம்பு வழக்குகள், கடன் தொல்லையால் அவமானம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

ராகுதசா புதன் புக்தி
    ராகுதிசையில் புதன் புக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும். 

புதன் பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல வித்தைகளிலும் கல்வி நிலையிலும் உயர்வு ஏற்படும். உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் பெரிய மனிதர்களின் அன்பிற்கு பாத்திரமாக கூடிய வாய்ப்பு, ஆடை ஆபரண வண்டி வாகன சேர்க்கை, மனைவி பிள்ளைகளால் சிறப்பு புதுவீடு கட்டி குடி புகும் பாக்கியம் உண்டாகும்.

புதன் பலமிழந்திருந்தால் குலப்பெயர் கெடும்படி நடந்து கொள்ளும் நிலை, குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனை, வண்டி வாகனங்களால் வீண்விரயம் பகைவர்களால் தொல்லை ஏற்படும்.

ராகுதிசை கேது புக்தி
     ராகுதிசையில் கேதுபுக்தியானது 1 வருடம் 18 நாள் நடைபெறும்.  

கேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் நல்ல நிலையில் அமையப்பெற்றால் வண்டி வாகனம் ஆடை ஆபரண சேரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும் என்றாலும் ராகு திசையில் கேது புக்தி என்பதால் பெரிய அளவில் நற்பலனை எதிர்பார்க்க முடியாது.  கணவன் மனைவியிடையே பிரச்சனை, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, திருடர் மற்றும் பகைவர்களால் தொல்லை, நெருப்பால் கண்டம் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் நஷ்டம், விஷத்தால் கண்டம், விதவையுடன் தொடர்பு கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.

ராகுதசா சுக்கிர புக்தி
     ராகுதிசையில் சுக்கிரபுக்தி 3 வருடங்கள் நடைபெறும். 

சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள், உத்தியோக நிலையில் உயர்வு, புகழ் பெருமை யாவும் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை வண்டி வாகன யோகம் திருமண சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு, பெண் குழந்தை யோகம், கிட்டும் வீடுமனை அமையும். கலை துறையில் சாதனை புரிந்து வெற்றி பெற கூடிய ஆற்றல் உண்டாகும்.

சுக்கிரன் பலமிழந்திருந்தால் பெண்களால் அவமானம், மர்ம ஸ்தானங்களில் நோய், சர்க்கரை வியாதி, திருமணத் தடை, நினைத்த காரியங்களில் தோல்வி, பணநஷ்டம், வறுமை, வண்டி வாகனத்தால் வீண்விரயம், இல்லற வாழ்வில் இனிமை குறைவு உண்டாகும். எடுக்கும் காரியங்களில் முன்னேற முடியாத நிலை போன்றவை ஏற்படும்.

ராகுதிசையில் சூரிய புக்தி
ராகுதிசையில் சூரிய புக்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.  

சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகளை வகுக்கும் அமைப்பு, ராணுவம் போலீஸ் துறைகளில் பல விருதுகளைப் பெறக்  கூடிய ஆற்றல், எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் நல்ல தைரியம் துணிவு எதிரிகளை ஒட ஒட விரட்ட கூடிய பலம், தந்தை, தந்தை வழி உறவுகளால் மேன்மை, செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மை போன்ற நற்பலன்கள் ஏற்படும்.

சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்கள் தலைவலி, இருதய கோளாறு, ஜீரம் கண்களில் பாதிப்பு, தந்தை,  தந்தை வழி உறவுகளிடையே பகைமை, தொழில் வியாபாரத்தில் நஷ்டம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, நஷ்டம் யாவும் உண்டாகும்.


ராகு திசையில் சந்திர புக்தி

ராகுதிசையில் சந்திர புக்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும். 

சந்திரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, நல்ல மன உறுதி, அறிவாற்றல் திருமண பாக்கியம், பெண் குழந்தை  பிறக்கும் வாய்ப்பு, வண்டி வாகன யோகம், கணவன் மனைவி உறவில் திருப்தி, கடல் கடந்து அந்நிய நாட்டிற்கு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு, பயணங்களால் அனுகூலம், ஜல தொடர்புடைய தொழிலில் ஏற்றம் தாய் வழியில் மேன்மை உண்டாகும். பொருளாதாரமும் உயரும்.

சந்திரன் பலமிழந்திருந்தால் தாய்க்கு கண்டம் தாய் வழி உறவுகளிடம் பகை, மனக்குழப்பம் எதிலும் தெளிவாக செயல்பட முடியாத அமைப்பு, எடுக்கும் காரியங்களில் தடை, பெண்கள் வழியில் விரோதம், ஜலதொடர்புடைய பாதிப்புகள், நீரினால் கண்டம் கடல் கடந்து செய்யும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன், காரியத்தடை போன்றவை உண்டாகும்.

ராகுதிசையில் செவ்வாய் புக்தி
     ராகுதிசையில் செவ்வாய் புக்தி 1 வருடம் 18 நாட்கள் நடைபெறும்.

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி,  மனை,  வீடு, வண்டி வாகன யோகம் அமையும். தன தான்ய சேர்க்கைகள் அதிகரிக்கும். அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவிகள், நிர்வாக சம்மந்தமான உயர்வுகள் கிட்டும். நல்ல உடல் ஆரோக்கியம் எதிரிகளை வெல்லும் ஆற்றல், வம்பு வழக்குகளில் வெற்றி, நிர்வாக சம்மந்தமான உயர் பதவிகள் கிட்டும். உடன் பிறந்த சகோதரர்களால் அனுகூலம், செய்யும் தொழில் வியாபாரத்தில் உயர்வு உண்டாகும்.

செவ்வாய் பலமிழந்திருந்தால் உடல் நலத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தலைவலி ஜீரம் காயம் ஏற்படுதல், எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும் நிலை உண்டாகும். மனைவிக்கு கர்ப கோளாறு மாதவிடாய் பிரச்சனை, சகோதர்களிடையே பகை அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் வீண் விரயம்  பங்காளி வழியில் விரோதம், தொழில் உத்தியோத்தில் விண் பழிகளை சுமக்க கூடிய நிலை ஏற்படும்.


ராகுவிற்குரிய பரிகாரங்கள்;

ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை  பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் சரபேஸ்வரர், பைரவர்  வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, தேங்காய், உளுந்து போன்றவற்றை தானம் செய்வது பாம்பு புற்று பாலூற்றுவது, ராகுவுக்கு பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது. கோமேதக கல்லை அணிவது சிறப்பு.