Saturday, 25 March 2017

அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில், உத்தரகோசமங்கை - ராமநாதபுரம்


மூலவர் : மங்களேசுவரர், மங்களநாதர், காட்சிகொடுத்தநாயகர், பிரளயாகேசுவரர்.

அம்மன்/தாயார் :  மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி

தல விருட்சம் :  இலந்தை

தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : உத்தரகோசமங்கை

ஊர் : உத்தரகோசமங்கை

திருவிழா:
 
🍁 சித்திரை மாதம் திருக்கல்யாண விழா 12 நாட்கள், மார்கழி திருவாதிரை திருவிழா 10 நாட்கள் நடக்கின்றன.
 
தல சிறப்பு:
 
 👉🏽 இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது.

👉🏽 வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது.

👉🏽 இத்தலத்தில் மாணிக்கவாசகர் லிங்கவடிவில் காட்சி தருகிறார்.

👉🏽 ஈஸ்வரத் தலங்களிலேயே இங்கு மட்டும் தான் இறைவனுக்கு தாழம்பூ சார்த்தலாம்.

👉🏽 சிவனுக்கு  புனுகு சாத்தப்பட்டு ஸ்படிகலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறுவது சிறப்பு.

👉🏽  வருடம் முழுவதும் நடராஜருக்கு  சந்தன காப்பு சாத்தப்பட்டிருக்கும். வருடத்தில் ஒரு நாள் ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனக்காப்பு கலையப்பட்டு மக்கள் தரிசிப்பர்.

👉🏽 வேதத்தின் இரகசியங்களை உமையம்மைக்கு ஈசன் அருளிய புண்ணிய திருத்தலம்.

👉🏽 சிவனின்  மிக பழமையா உறைவிடம் என்று சொல்லப்படுகிறது.

👉🏽 இங்குள்ள சபை இரத்தினசபை எனப்படுகிறது.

👉🏽 அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற தலம்.

👉🏽 தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் (இலந்தைவனம்) வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி முதலியன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.

  👉🏽 இங்குள்ள நடராசமூர்த்தி ஆதிசிதம்பரேசர் என்றழைக்கப்படுகிறார்.

👉🏽 இக்கோவில் சிதம்பரம் கோவிலுக்கு  முன்பே தோன்றியது.  எனவே உத்திர கோசமங்கைக்கு ஆதி சிதம்பரம் என்ற ஒரு பேரும் உண்டு.
 
திறக்கும் நேரம்:
 
🔑 காலை 5:30 மணி முதல் 12:45 மணி வரை, மாலை 3:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.🔑

பொது தகவல்:

🌺 பாண்டிய நாட்டில் உள்ள தலம்.

🌺 மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக "மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது.

🌺 இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும்; சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது.

🌺 சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் "இலவந்திகைப் பள்ளி" என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்பாரும் உளர்.

🌺 மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

🌺 உத்தரம் - உபதேசம்; கோசம் - ரகசியம்; மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.

🌺 மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.

🌺 இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.

🌺 இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

🌺 சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்து கொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, இங்கிருந்த அடியார் சிவயோகிகள் முதலிய பல்லாயிரவர்க்கும் ஞானோபதேசம் செய்து முத்தி நல்கி, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

🌺 இராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்ட தலம்.

🌺 நடராசர் கோயிலுக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்கக் கோயில் உள்ளது.


பிரார்த்தனை:
 
🌿 அம்பாள் மங்களேஸ்வரியை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும். சுவாமியையும், அம்பாளையும் காலையில் வணங்கினால் முன்வினை பாவங்கள் நீங்கும். மதியம் வணங்கினால் இப்பிறவி பாவங்கள் தீரும்.

🌿 மாலையில் தரிசித்தால் ஆயுள் அதிகரிப்பதுடன் தொழில் மேன்மையும், பொருள் பெருக்கமும் ஏற்படும்.

நேர்த்திக்கடன்:
 
☔   சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 
தலபெருமை:

 🌸 பொதுவாக, ஒரு கோயிலுக்கு சென்றால் ஒருமுறை வணங்கி விட்டு, உடனேயே திரும்பி விடுகிறோம். ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க  வகையிலான கோயில் ஒன்று ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் உள்ளது.

🌸 நடராசருக்குரிய ஆறு அபிஷேகக் காலங்களிலும் இச்சந்நிதியில் இறைவன் தாண்டவமாடிக் காட்சித் தரும் ஐதீகம் நடைபெறுகிறது.

🌸 இறைவனின் முடியைக் கண்டதாக தாழம்பூவின் சாட்சியுடன் பொய் சொன்ன பிரம்மா இத்தலத்தில் வணங்கிணார். இறைவன் இலந்தை மரத்தடியில் தோன்றி சாப விமோசனம் அளித்தார். அந்த மரம் இன்னும் உள்ளது.

🌸 நடராசப் பெருமானுக்கு ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயில்.
கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. இக்கோயில் அகழி அமைப்புடையது. எனவே சந்நிதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

🌸 தெற்கு நோக்கிய சந்நிதி. அக்கினி மத்தியில் நடராசப் பெருமான் ஆடுவதாகச் சொல்லப்படுகிறது.

🌸 அம்பிகை காண இங்கு அறையில் ஆடிய நடனத்தைத் தான் அம்பலவாணர், தில்லையில் அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.

தல வரலாறு:

🌤 சிவபெருமான் மண்டோதரிக்கு, அவளுடைய தவத்தை ஏற்றுக் காட்சி தந்தருளப் பெருமான் உள்ளங்கொண்டார்.

🌤 தன்பாலிருந்து ஐம்புலனும் அடக்கி அருந்தவம் புரிந்து வந்த ஆயிரம் முனிவர்களைப் பார்த்து "மண்டோதரிக்கு  அருள் செய்ய யாம் இலங்கை மூதூர் செல்கின்றோம்.

🌤 நீவிர் அனைவரும் இத்தலத்தை விட்டு அகலாது இருப்பீராக! எம்மால் ஒப்படைக்கப்படும் இவ்வேதாகமச் சுவடிகளை கைவிடாது காத்து வருவீராக!

🌤 இலங்கையரசன் இராவணனால் எப்போது எம்திருமேனி தீண்டப்படுகிறதோ, அப்போது அதற்கு அடையாளமாக, இத்திருக்குளத்தின் நடுவே அக்கினிப் பிழம்பு தோன்றும்" என்று வானொலியாக அருள் செய்தார்.

🌤 மாதர்குலத் திலகமாக விளங்கிய மாதரசி மண்டோதரி தன் உள்ளத்தில் எவ்வடிவில் இறைவனை நினைத்துத் தவமிருந்தாளோ அவ்வடிவத்தையே ஏற்று, அழகிய திருவுரக் கொண்டு இறைவன் சென்று அவளுக்குக் காட்சி தந்தார். தரிசனம் பெற்ற மாதரசி, தன்னை மறந்து, பரவசமாகி, கண்களாரக் கண்டு கைகளாரத் தொழுது பிரமித்துப் போய் அசையாது நின்றாள். அப்போது வெளியே சென்றிருந்த இராவணன் உள்ளே வந்தான். இறைவனும் அழகான குழந்தையாக மாறிக் காட்சித்தர்.

🌤 இராவணன் அக்குழந்தையைக் கண்டு அதன் அழகில் மயங்கி 'யார் பெற்றதோ இது' என்று வினவினான். மண்டோதரி, "யாரோ ஒரு தவமகள் வந்து இக்குழந்தையைத் தந்து சென்றாள்" என்றாள்.

🌤 குழந்தையின் உடம்பில் மாறிமாறித் தோன்றிய வண்ணத்தைக் கண்டு உள்ளம் வியப்புற்ற இராவணன் அக்குழந்தையைக் கையாலெடுத்துத் தழுவி மகிழ்ந்தான். அவ்வளவில் - இறைவன் திருமேனியை இராவணன் தீண்டியதால் - குளத்தில் அக்கினிப் பிழம்பு தோன்றியது. அதுகண்ட முனிவர்கள் செய்வதறியாது திகைத்து, அதில் வீழ்ந்து மறைந்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தம் அறிவால் உணர்ந்து, இறைபணியில் நிற்றலே கடமையென்று முடிவு செய்து, அத்தீர்த்தத்தின் கரையிலேயே அமர்ந்திருந்தார்.

🌤 மூதாட்டி ஒருத்தி வந்து மண்டோதரியிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்றாள். இறைவன் திரும்ப வந்து குளக்கரையில் இருந்தவர் மூலமாகச் செய்தியறிந்தார். மூழ்கிய 999 பேர்களுக்கும், மூழ்காதிருந்த வருக்குமாக ஆயிரவருக்கும் இறைவன் உமையோடு விடைமீதமர்ந்து காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார். இதனால் பெருமானுக்குக் "காட்சி கொடுத்த நாயகன்" என்ற பெயரும் வழங்கலாயிற்று.

🌤 ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர் - அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது. இக்கோயிலை வலம் வந்து வழிபடுவோர் எல்லாச் சித்திகளையும் அடைவர் என்பது தலவரலாறு.

சிறப்பம்சம்:
 
🌿 அதிசயத்தின் அடிப்படையில்:

👉🏽 இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது.

👉🏽 வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது.

👉🏽 திருவாசகத்தில் 38 இடங்களில்  புகழ்ந்து பாடப்பட்டுள்ள ஸ்தலம்.

👉🏽 மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி தந்த சிறப்புடைய தலம்.

👉🏽 மாணிக்கவாசகப் பெருமான், வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன் ஆகியோர் வழிப்பட்ட திருத்தலம்..


இருப்பிடம்:

🚗 மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, உத்தரகோசமங்கை இருப்புப்பாதை சந்திக் கடவைத் (Railway level crossing) தாண்டி, 7-கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். சாலை பிரியுமிடத்தில் கோயில் பெயர்ப் பலகையுள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃

 🌿  தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🌿

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


No comments:

Post a Comment