Monday, 7 May 2018

அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள் - கும்பகோணம் (தஞ்சாவூர்)


Image result for அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்

சிவபெருமான் பக்தர்களுக்காக அவர் மனவருத்தம் தீர்ப்பதற்காக எதையும் செய்வார் ; வளைந்தும் கொடுப்பார் ; நிமிர்ந்தும் நிற்பார் என்பதை உணர்த்தும் பதி ; அன்புக்கும், பக்திக்கும் மயங்கும் அருணஜடேஸ்வரர் அருள்பாளிக்கும் அற்பூத சிவ ஷேத்திரம்..

🌸🌷🌸🌷 BRS🌸🌷🌸🌷🌸

தொலைபேசி எண் :  +91 - 4352 – 456422

💦🌿💦🌿  BRS 💦🌿💦🌿💦

மூலவர் : அருணஜடேசுவரர், செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர்

அம்மன்/தாயார் : பிருகந்நாயகி, பெரிய நாயகி, தாலவனேஸ்வரி

மூர்த்தி : சொக்கநாதர், நர்த்தன விநாயகர், முருகர், சப்த கன்னியர், அறுபத்து மூவர், பஞ்சபூத லிங்கங்கள், பைரவர், சூரியர், சந்திரர், சப்தகன்னியர், குங்கிலியக் கலயர்.

தல விருட்சம் : பனைமரம்

தீர்த்தம் : பிரமதீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம், விட்டுணு தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், ஆதிசேட தீர்த்தம், அரித்துவச தீர்த்தம், நாககன்னிகை தீர்த்தம், தருமசேன தீர்த்தம், கூபதீர்த்தம், மண்ணியாறு முதலாகிய பல தீர்த்தங்கள் ஆலயத்தின் உள்ளும் புறமும் இருக்கின்றன.

ஆகமம்/பூஜை : காரண, காமிக ஆகமப்படி ஆறுகால பூஜைகள் நாடோறும் நடைபெறுகின்றன.

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : தாடகையீச்சரம், திருப்பனந்தாள்

ஊர் : திருப்பனந்தாள்
 
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்

🅱 தேவாரப்பதிகம்:🅱

விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச எரித்தவன் முப்புரங்கள் ளியலேமுல கில்லுயிரும் பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளந்தன்னைத் தரித்தவனூர் பனந்தாள் திருத்தாடனை யீச்சரமே.  -  திருஞானசம்பந்தர்

🌀 தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 39வது தலம். 🌀

🅱 திருவிழாக்கள் :🅱
 
🍄 சித்திரையில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.

🍄 ஆடிப்பூரம்

🍄 நவராத்திரி

🍄 மகா சிவராத்திரி

🅱 தல சிறப்பு:🅱

🎭 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 பனையின் தாளின் இறைவன் எழுந்தருளியிருத்தலாலும்; பனைமரம் தலமரமாதலின் பனந்தாள் என்று பெயர் பெற்றது. கோயிலுக்கு தாடகையீஸ்வரம் - தாடகேச்சுரம் என்று பெயர்; தாடகை பூசித்தமையால் இப்பெயர் பெற்றது.

🎭 இத்தலத்தில் சந்திர பகவான் ஈசனை வேண்டித் துதித்து தனது தோஷங்களைப் போக்கிக் கொண்டார்.  இங்கு வழிபட்டால் சந்திர தோஷங்கள் அகலும்.

🎭 இத்தல இறைவன் பிரம்மனுடைய சாபத்தை நிவர்த்தி செய்து அவனுக்குரிய பதவியையும், பெருமையையும் திரும்பத் தந்தவர்.

🎭 பசியோடு வருந்தி வந்த காளமேகப் புலவனுக்குச் சிவாச்சாரியார் வடிவத்தில் வந்து அன்னத்தை அளித்தவர் இத்தல இறைவன்.

🎭 அழகும், பெருமையும் இழந்து, தேய்ந்து, சிறுத்துப் போய், குருவின் மனைவியை விரும்பிய சந்திரனுடைய சாபத்தைத் தீர்த்துப் பொலிவும், பெருமையும் தந்தவர் இத்தல இறைவன்.

🎭 அனைத்தும் அறிந்த அன்னை பார்வதி தேவி திருவைந்தெழுத்தின் பெருமையை அறிய விரும்பினாள். அவளுக்குப் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்த ஞான குருவாக இருப்பவர் செஞ்சடையப்பர். குருவாய் இருந்து குருதோஷ நிவர்த்திகளைச் செய்பவர் இத்தல இறைவன்.

🎭 திருமணத் தடை அகற்றி மக்கட்பேற்றினை அருளும் மகேஸ்வரன் அவர்.

🎭 தல விருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தையடுத்துள்ள கிணறு, நாககன்னிகை பிலம் எனப்படும். இதன் வழியாக நாககன்னியர் வந்து இறைவனை வழிபட்டதாக ஐதீகம் சொல்லப்படுகிறது.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 39 வது தேவாரத்தலம் ஆகும்.

Image result for அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்
 
🅱 நடைதிறப்பு:🅱
 
🔑 காலை 5.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.🔑

🅱 பொது தகவல்:🅱

🌸 இத்தல விநாயகர் ஆண்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

🌸 கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம்.

🌸 கிழக்கில் 5 நிலை கோபுரம், மூன்று பிரகாரகங்களுடன் கோயில் உள்ளது.

🌸 சிவனும் அம்மனும் கிழக்கு நோக்கி திருமண கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.

🌸 திருப்பனந்தாளில் வாழ்ந்த நக்கன்தரணி என்பவனால் இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டது.

🌸 இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் மேற்கு கோபுரத்தின் தென்பால், குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது.

🌸 தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான இக்கோயிலில் குமரகுருபரர் ஏற்படுத்திய காசிமடம் உள்ளது.

🅱 திருப்பனந்தாள் பெயர் காரணம்: 🅱

🌿 ஊருக்கு ஒரு பெயர்; கோயிலுக்கு ஒரு பெயர் பழங்காலத்தில் வழக்கத்தில் இருந்தது உண்டு. திருப்பனந்தாள் என்ற பெயர் ஒரு காலத்தில் ஊருக்கும் கோயிலுக்கும் இருந்தது. பனை மரத்து அடியில் சுயம்பு லிங்கம் எழுந்தருளியிருந்ததால் பனந்தாள் என்ற பெயர் வந்தது.

🌿 அந்த லிங்கத்தைப் பின்னர்த் தாடகை என்பவள் வழிபட்டாள். தாடகை வழிபட்ட ஈஸ்வரன் இருந்த ஆலயம் தாடகைஈச்சரம் எனப்பட்டது. ‘தண் பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே’ என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.

🌿 பனை மரங்கள் மிகுந்திருந்த ஊர் பனந்தாள். பனை மரத்தடியில் சிவலிங்கம். பனைமரத்துக்கு என ஒரு விசேஷம் உண்டு. தேவலோகத்தில் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய பொருள்கள் மூன்று உண்டு. ஒன்று காமதேனு என்னும் பசு. இன்னொன்று கற்பக விருட்சம். மூன்றாவது சிந்தாமணி. இந்த மூன்றும் இருப்பதே தேவலோகத்துக்குப் பெருமை.

🌿 கேட்டதெல்லாம் கொடுக்கக்கூடிய, நினைத்ததையெல்லாம் நிறைவேற்றக்கூடிய மரமான கற்பக மரங்களைப் பஞ்ச தருக்கள் என்பார்கள். ஐந்து வகையான மரங்களே பஞ்ச தருக்கள். கற்பக மரம், பாரிஜாத மரம், ஹரிசந்தன மரம், மந்தார மரம் ஆகியவை அவை.

🌿 பூலோக பாரிஜாதம் பவளமல்லிகை. பூலோகத்தில் சந்தன மரம் உண்டு. ஹரிசந்தனம் மற்றும் மந்தார மரங்கள் முறையே பெருஞ்சேரி சிதலைப்பதி என்ற தலங்களில் தலவிருட்சங்கள்.

🌿 பஞ்சதருக்களில் முதலாவதான கற்பக மரம் தேவலோகத்துக்குப் பெருமை தரக்கூடியது. இந்திரன் இந்த மரத்தில் மலர்ந்த பூக்களிலிருந்து சிந்தும் தேனுக்குக் கீழே வீற்றிருக்கிறான் என்பார் கம்பர். தேவலோகத்தைக் கற்பக நாடு என்றும் சொல்வார்கள்.

🌿 பூலோகத்தில் இருக்கக் கூடிய கற்பக மரம் எது தெரியுமா ? பனைமரம்தான். சில தலங்களில் பனை மரம் தலவிருட்சம். மூன்று தலங்கள் அப்படி உண்டு. அவற்றில் விசேஷமானது திருப்பனந்தாள். பனை மரத்தடியில் இருக்கும் கற்பகம்தான் செஞ்சடையப்பர். அவரை வழிபடக் கேட்டதெல்லாம் கிடைக்கும்; நினைப்பதெல்லாம் நடக்கும். கற்பக மரத்துக் கடவுள் கட்டாயம் அடியவர் தேவைகளை நிறைவேற்றுவார்.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌹 சர்ப்பதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபாடு செய்வது சிறப்பு.

🌹 குறிப்பாக பெண்களுக்கான தோஷ நிவர்த்தி தலம்.

🅱 நேர்த்திக்கடன்:🅱
 
♻ சுவாமி,  அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 
🅱 தலபெருமை:🅱

🌱 கீழப்பெரும்பள்ளம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகியவை ஆண் நாகம் வழிபாடு செய்த தலமாகும்.

🌱 திருப்பனந்தாள் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடு செய்த தலமாகும்.

🌱 மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இங்கு அருள்பாலிக்கிறாள்.

🌱 இரண்டு ஆண் பனைமரங்கள் கோயில் பிரகாரத்தில் உள்ளன.

🌱 இத்தல இறைவனை பார்வதி, ஐராவதம், சங்கு கன்னன், நாகு கன்னன், நாக கன்னியர், பிரம்மா, விஷ்ணு, இந்திரன், அகத்தியர், சூரியர், சந்திரர், ஆதிகேசன், தாடகை, குங்குலியக் கலயநாயனார் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

🌱 ஆவணி அமாவாசையன்று இங்குள்ள பிரம தீர்த்தத்தில் இறைவன் எழுந்தருள்வார்.

🌱 ஆஸ்தான மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவர் உள்ளார்.

🌱 திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன், நம்பியாண்டார் நம்பி, அருணகிரிநாதர், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், செஞ்சடை வேதிய தேசிகர், தருமை சண்முகத்தம்பிரான் ஆகியோர் இத்தலத்தை போற்றி பாடியுள்ளனர்.

🌱 இத்தலத்திற்குத் தாடகையீஸ்வரம் என்று பெயர்.

🌱 இத்தலத்தில் தான் குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது.

🌱 இத்தலம் உமையம்மையார் சிவ பூசையியற்றி ஞானோபதேசம் பெற்ற சிறப்புடையது.

🌱 தாழை மலரைச் சான்று காட்டி சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாகப் பொய் கூறிய பிரமனுக்கு அதனாலேற்பட்ட பாதகத்தைப் போக்கியது. இந்திரனுக்கு விருத்திராசுரனைக் கொன்ற பாதகமும், கெளதமர் மனைவியைக் களவாற் சேர்ந்த தோஷமும் போக்கிய அருள் பாலித்தது.

🌱 பிருந்தையைப்  புணர்ந்த திருமாலுக்கு அருள் செய்து. தக்கனுடன் கூடிச் சிவத்துரோகத்தில் ஈடுபட்ட சூரியனுக்கு அத்துரோகத்தால் உண்டான பாவத்தைத் தீர்த்தது.

🌱 குருபத்தினியைக் கூடின சந்திரனுக்கு மாபாதகத்தை நீக்கியது. அகத்தியரால் பூசித்து வழிபடப் பெற்றது. ஆதிசேடனால் பூசிக்கப் பெற்றது. தாடகை சிவ பூசையின் போது அணிவித்த மாலையை ஏற்றுக் கொள்ளத் திருமுடிசாய்த்தருளிய இறைவனைக் குங்குலியக்கலய நாயனார் அன்புக் கயிற்றால் இழுத்து நிமிர்த்தி வழிபட்டது.

🌱 வாசுகியின் மகளாகிய சுமதி என்னும் நாக கன்னிகையால் பூசிக்கப் பெற்றது. மேற்கூறிய ஒவ்வொருவரும் தத்தம் பெயரால் தீர்த்தங்கள் அமைத்து சிவலிங்கப் பிரதிட்டையும் செய்துள்ள பெருமை மிக்கது. அவ்வத் தீர்த்தங்களில் அன்போடு மூழ்கியவர்களின் பவப்பிணி மாய்த்துப் பெரும் பேறடையச் செய்வது இத்தலம்.

Ⓜ நாககன்னிகை தீர்த்தம்: Ⓜ

🍁 இது சுவாமி சந்நிதியில் மேலை இராஜ கோபுரத்தின் வடபால் கோயிலுக்குள் அமைந்துள்ளது. நாக கன்னிகையால் தோற்றுவிக்கப்பட்டது. இதில் மூழ்கினோர் சகலபிணிகளும் நீங்கப் பெறுவர்.

Ⓜ மண்ணியாறு: Ⓜ  

🍁 அம்மையார் விருப்பத்தின்படி, முருகப்பெருமானால் அழைக்கப்பட்டது. இறைவனது சந்நிதானத்தின் இரண்டு பர்லாங் தொலைவில் வடக்கு நோக்கி ஓடிகின்றது. வடக்கு நோக்கி ஓடுவதால் உத்தரவாகினி என்ற சிறப்போடு போற்றப்படுகிறது.

Ⓜ சிற்பஓவிய மேம்பாடு: Ⓜ

🍁 சிற்பங்கள் பல்லவர் கால வேலைப்பாடுடையன இராச கோபுரத்தின் மீது சுதை வேலைப்பாட்டுடன் கூடிய கந்தர்வர், கிம்புருடர் உருவங்கள் அமைந்துள்ளன. பதினாறுகால் மண்டபத்தில் தாடகையினால் சாத்தப்பட்ட மாலையினை ஏற்றுக் கொள்ள பெருமான் தலை குனிந்ததும் அதனை நிமிர்த்த அரசன் யானைகளைக் கட்டி இழுத்ததும், கலயனார் அரிகண்டம் போட்டு நிமிர்ந்ததும், அப்போது சிவலிங்கத்திடையே இறைவரது திருக்கரம் தோன்றியதும், நாயனார் வழிபட்டதும் ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

🍁 சிங்க வாயிலினுள் நுழைந்ததும் வடபுற மதியில் திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றினையொட்டிச் சில உருவங்கள் அமைந்திருக்கின்றன.

🍁 சுப்ரமண்யர் உற்சவருக்குப்பின் தாடகை பெருமானை வழிபட்டுப் பதினாறு கைகள் பெற்ற ஐதீகம் செதுக்கப் பெற்றிருக்கிறது. கோயில் கட்டிய தரணி நக்கனார் சிற்பமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

🍁 வெளவால் நெற்றி மண்டபத்தில் சுதையினால் பஞ்ச மூர்த்திகளும் வேலை செய்யப் பட்டிருக்கின்றன. அலங்கார மண்டபத்தின் முன் மேலே விதானத்தில் தாடகை வரலாறு ஒவியமாக வரையப்பட்டுள்ளது. அறுபத்து மூவர் வரிசையில் சிலைகளுக்குப் பின் அந்த அந்த நாயனாரின் உருவங்கள் எழுதப் பெற்றுள்ளன. 1942-ல் திருப்பனந்தாளில் வாழ்ந்த துளசி ராஜா என்பவர் இவ்வோயித்தை வரைந்தவர் ஆவர்.

🍁 வெளவால் நெற்றி மண்டபத்தில் உள்ள பஞ்ச மூர்த்திகளின் உருவத்திற்கு (சுதை) எதிரே பஞ்ச பூதத்தலங்களின் படமும் அதனையடுத்து இறைவனின் தாண்டவங்களும் தத்ரூபமாக வரையப் பெற்றுள்ளன. அதன் விபரம்.
1.     சிதம்பரம் – ஆனந்த தாண்டவம் – கனகசபை
2.     மதுரை – சந்தியா தாண்டவம் – இரசிதசபை
3.     திருக்குற்றாலம் – திரிபுர தாண்டவம் – சித்ரசபை
4.     திருவாலங்காடு – ஊர்த்துவ தாண்டவம் (காளி தாண்டவம்)– இரத்தினசபை
5.     திருநெல்வேலி – காளிகா தாண்டவம் (முனி தாண்டவம்) – தாமிரசபை

Related image

Ⓜ அம்மையார் ஞானோபதேசம் பெற்றது: Ⓜ

🌹 முன்னொரு கற்பத்தில் அம்மையார் இறைவனை வணங்கி ’ஞானோபதேசம் புரிந்தருளல் வேண்டும்’ எனப் பிரார்த்திக்க, இறைவன் ‘நீ தாலவனம் சென்று எம்மை பூசித்தால் அருள் செய்வோம்’ என்று உரைத்தனர்.

🌹 அம்மையாரும் இறைவன் ஆணைப்படி இத்தலத்து வந்து எதிர்முகமாக வடபுறத்தமர்ந்து தவஞ் செய்தார். இறைவன் காட்சியளித்து அம்மையாருக்கு ஞானத்தை உபதேசித்து அருள் செய்தனர். இவ்வுண்மையினையே இறைவர் மேற்குமுகமாக எழுந்தருளியிருப்பதும் இறைவி கிழக்கு முகமாக எழுந்தருளி இருப்பதும் வலியுறுத்தும், அம்மையார் உபதேசம் பெறுமுன் பாலாம்பிகை எனவும், உபதேசம் பெற்றபின் பிரகந்நாயகி எனவும் பெயர் வழங்கப் பெறுகின்றார்.

Ⓜ ஐராவதம்: Ⓜ

🌹 அசுரர்களின் அல்லலுக்கு ஆற்றாராகிய அமரர்கள் ஓடிவந்து இந்திரனிடம் முறையிட்டார்கள். செவியேற்ற இந்திரன் ‘போர் புரிதற்கு ஐராவதத்தைக் கொண்டு வருக’ எனக்கூறினான்.

🌹 ஐராவதம் போகத்தை விரும்பி மண்ணுகைத்துள்ள மந்தரமலையை அடைந்திருக்கிறது என்பதை உணர்ந்த இந்திரன், தனது சமயத்துக்கு உதவாத காரணத்தால் தெய்வ வலிமையையிழந்து மண்ணுலகத்தில் காட்டானையாகத் திரிந்தது. தன் எதிர்பட்ட நாரதரை வணங்கி, அவராணைப்படியே இத்தலத்திற்கு வந்தது.

🌹 தாலவனநாதரை வணங்கித் தன் சாபத்தைப் போக்கிக் கொண்டது. தன் பெயரினால் மேற்பால் ஓர் தடாகமும் சிவலிங்கப் பிரதிட்டையும் செய்து பூசித்துத் தன்னுலகடைந்தது. (ஐராவது ஆனை தங்கி இறைவனை வணங்கிய இடம் “ஆனைகோயில்” என்று தற்போது வழங்கப் படுகிறது. இது செஞ்சரையப்பர் கோயிலுக்கு மேற்கே மண்ணியாற்றின் கரையில் உள்ளது.)

குங்கிலியக்கலயனார்:

🍄 கலயனார் இவ்வூரில் தங்கியிருந்த காலத்தில் அவரது மகன் இறந்தான். தன் மகன் இறந்த செய்தி தெரிந்து வீடு சென்று இதுவும் திருவருட்செயல் போலும் என எண்ணி மகனை எடுத்துக் கொண்டு ஈமக்கடன் முடிக்கச் சென்றார். வழியில் உள்ள விநாயகர் அசரீரியாக அருளியபடி நாயனார் அவ்வுடலைக் கொண்டு வந்து நாக கன்னிகை தீர்த்தத்தில் நனைக்க, மகனும் உயிர் பெற்று எழுந்தான். (பெரியபுராணத்தில் இதற்கு ஆதரம் இல்லை) இவ்விநாயகர் இன்றும் ‘பிணமீட்ட விநாயகர்’ என்ற திருநாமத்துடன் திரு வீதியின் வாயுமூலையில் எழுந்தருளியுள்ளார்.

Image result for அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்

நாகன்னிகை:

🍁 நாகலோகத்தில் வாசுகி தன் மகன் சுமதிக்கு மணஞ் செய்விக்கக் கருதிய காலை ‘சுமதி அதைப் பற்றிய முயற்சி தங்கட்கு வேண்டாம்’ எனக் கூறி கன்னி மாடத்தமர்ந்திருந்தாள். இறைவன் அவளது கனவில் தோன்றி ‘நீ தாலவனமடைந்து பூசிப்பாய்’ என அருள் செய்தனன். சுமதியும் அவ்வாறே பிலத்தின் வழியாக வந்து அம்மையார் சந்நிதானத்திலுள்ள கூபத்தில் தோன்றி இறைவனை வழிபட்டு வந்தாள்.

🍁 தலயாத்திரை செய்து வரும் அரித்துவசன் என்னும் அரசனும் இத்தலத்தையடைந்தான். சுமதி அவனைக் கண்டு விருப்பமுற்று, நாகலோகத்திற்கு அழைத்துச் சென்று மணமுஞ் செய்து கொண்டாள். சில நாள் அங்கிருந்து மீண்டும் பிலத்தின் வழியாக வந்து அம்மையருக்கு மேல்புறம் ஓர் தடாகமைத்து நாடோறும் வழிபாடியற்றி வந்தாள்.

🍁 அரித்துவசனும் ஆலயத்திற்குத் தென்பால் ஓர் தடாகமும் இலிங்கமும் அமைத்தான். இவ்வாறு இருவரும் பூசித்துப் பல திருப்பணிகளும் செய்து முத்தியின்பம் பெற்றார்கள்.

Related image

🅱 திருப்பனந்தாளில் அகத்தியர் 🅱

🌀 தென்னகம் நோக்கிப் புறப்பட்ட அகத்திய முனிவருக்குச் சிவபெருமான் தமிழை உபதேசித்தார். சிவனிடம் அறிந்த தமிழுக்கு அகத்தியர் மிகப்பெரிய இலக்கண நூல் ஒன்றை வகுத்துத் தந்தார். அந்த நூலுக்கு அகத்தியம் என்று பெயர் என்கிறது இலக்கிய வரலாறு.

🌀 சிவபெருமான் அகத்தியருக்குத் தமிழை அறிவித்தார் என்ற உண்மையைக் கம்பரும் குறிப்பிட்டிருக்கிறார்.

🌀 தழல்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் என்று அவர் அகத்தியரை குறிப்பார்.

🌀 அரியவளான தாடகை பனசைப் பதியில் இறைவனை முடியை வளைத்த செய்தியை ஸ்தல மான்மியத்தை அறிந்தார் அகத்திய முனிவர். உடனே திருப்பனந்தாளுக்கு செல்ல முடிவெடுத்தார். பல்வேறு முனிவர்களுடன் திருப்பனந்தாளுக்குச் சென்றார்.

🌀 புண்ணியப் புனல்களில் மூழ்கினார்; சிவ பஞ்சாட்சர ஜெபம் செய்தார். உரிய நியாசங்களைப் புரிந்தார். முறைப்படிப் பூஜைகளைச் செய்தார். எட்டு வகை மலர்களை இட்டு அர்ச்சித்தார். பல்வேறு விதமான அபிஷேகங்களைச் செய்தார்.

🌀 தூய்மையான நீர், எண்ணை, மஞ்சள், மாப்பொடி, மஞ்சள் பொடி, நெல்லி முள்ளி, பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், இளவெந்நீர், வில்வக் குழம்பு, பாளிதம், பால், தயிர், தேன், கனிச்சாறு, இளநீர் முதலான பல அபிஷேகங்களைச் செய்தார். அவ்வப்போது தூப, தீபங்களையும் காட்டினார். செய்ய வேண்டிய எல்லாவகை பூஜைகளையும் முறைப்படிச் செய்தார். இறுதியில் சுவாமியை அலங்கரித்தபின் எட்டுவிதார்ச்சனைகள் செய்தார். ஈரெட்டு உபசாரங்களைச் செய்தார். உண்மையான அன்புடன் பணிந்தார்.

🌀 இப்படிப் பல நாட்கள் பெரியநாயகியுடனான செஞ்சடையப்பரை இடைவிடாது வழிபட்டார். விழுந்து வணங்கும் போது அடியற்ற மரம் போல மிகுந்த ஆர்வத்துடன் உள்ளம் உருகி வணங்குவார். அப்போது அவர் விழியிலிருந்து அருவி போலக் கண்ணீர் கொட்டும். இப்படிப்பட்ட பேரன்புடன் தன்னை வழிபடுவதைக் கண்டார் செஞ்சடையப்பர்.

🌀 சிவநாம ஜெபத்தில் மூழ்கிக் கிடந்த  அகத்தியர் முன் அருட்காட்சி தந்தார் சிவன். "உன் பூஜைக்கு மகிழ்ந்தோம். எனவே உனக்குக் காட்சி தந்தோம். வேண்டும் வரம் கேள் தருகிறோம்" என்றார்.

🌀 அப்போது அகத்திய முனிவர், "ஒப்பில்லாத தெய்வமே ! உன்னை அன்போடு வழிபடுபவர்களுக்கு இந்த லிங்கத்தில் எழுந்தருளியிருந்து தமிழ், இயல் ஞானத்தை அதாவது தமிழ் அறிவைக் குறையாமல் அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

🌀 இறைவனும் "அப்படியே செய்கிறோம்" என்று அருள் செய்தார் என்கிறது திருப்பனந்தாள் புராணம்.

🅱 தல வரலாறு:🅱

🔥 அருணஜடேஸ்வரர் யுக யுகாந்திரமாக இருக்கும் சுயம்புநாதர். அவரைப் புராண காலத்தில் பூஜித்தாள் ஒரு பூவை. அவள் அச்சம்,  மடம், நாணம், பயிர்ப்பு என்ற உத்தம குணங்களுக்குச் சொந்தக்காரி. சிவபூஜையில் நாட்டம் அதிகம் கொண்ட நங்கை. அவள் தினந்தோறும் சிவலிங்கத்தை பூஜிப்பது பழக்கம். வெவ்வேறு இடங்களிலிருந்து மலர்களைக் கொண்டு வருவாள். சிவலிங்கம் இருக்கும் கோயிலைத் தூய்மை செய்வாள். இறைவனை முறைப்படிப் பூஜை செய்வாள். எல்லா வகையான உபசாரங்களையும் செய்வாள். இறைவனுக்குச் செய்யும் உபசாரங்களில் மலர்மாலை சாத்துதல் என்பது ஒன்று.

🔥 ஒருநாள்... சுவாமிக்கு மாலை சாத்தப் போகும் நேரம்... அவள் மேலாடை சற்று நழுவியது. உடல் உறுப்புக்கள் தெரியச் சுவாமிக்கு மாலை சாத்துவது அபசாரம். எனவே அவள் நாணமிக்கவளாய் நழுவிய மேலாடையை ஒரு கையால் இறுக்கிப் பிடித்து மாலை சாத்த முயன்றாள். பக்கவாட்டில் ஆடையைப் பிடித்தமையால் கையின் நீளம் குறைந்தது. லிங்கம் கைக்கு எட்டவில்லை. மாலை சாத்த முடியவில்லை. அந்த நிலையில் சிவபெருமான் தாடகையின் பக்திக்கு இரங்கித் தன் பாணப்பகுதியைச் சற்றே முன்னோக்கி குனிந்தார். அதனால் மாலை சாத்த முடிந்தது. தாடகையும் மாலை சாத்தி மகிழ்ந்தாள்.

Related image

🔥 சிவபெருமான் தன் பக்திக்கு இரங்கிச் சற்றுச் சாய்ந்தது அவளுக்கு ஒரு பக்கத்தில் சந்தோஷத்தையும், இன்னொரு பக்கத்தில் வருத்தத்தையும் கொடுத்தது. இனி ஒருமுறை அவர் அப்படிச் சாய வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது என்று நினைத்தாள். சிவபெருமானுக்குத் துன்பம் தரக்கூடாது என்று எண்ணினாள் அவள். எனவே கடும்தவம் இருந்தாள். பூஜாகாலத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கப் பதினாறு கைகளைச் சிவனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டாள் என்பது திருப்பனந்தாள் தலவரலாறு.

🔥 தாடகைக்காகத் திருப்பனந்தாளில் சிவலிங்கம் வளைந்த வரலாறு சோழ நாட்டில் பரவியது. அப்போது சோழர் அரண்மனை கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பழையாறையில் இருந்தது. நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டான் மன்னன். துடிதுடித்தான்.

🔥 யானை, குதிரை, காலாள் படைகள் புடைசூழத் திருப்பனந்தாளுக்கு வந்தான். லிங்கத்தின் வளைவை நிமிர்த்துவதற்காகப் பாணத்தின் மேல் கயிறு கட்டினான். யானை, குதிரை மற்றும் வீரர்களை வைத்து நிமிர்த்த முயன்றான். சிவபெருமான் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை. ஆட்சி அதிகாரத்துக்கு அடிபணிந்து விடுவாரா ஆண்டவன் ? மாட்டாரல்லவா. தோல்வியைத் தழுவினான் மன்னன். துவண்டு திரும்பினான்.

🔥 தாடகையின் அன்புக்காக வளைந்தார் அருணஜடேஸ்வரர். ஆனால் அவர் அரசனின் அதிகாரத்துக்கு அடிபணியவில்லை என்ற செய்தி நாடெல்லாம் பரவியது. அந்தச் சமயத்தில்...

🔥 காலசம்ஹார க்ஷேத்திரமான திருக்கடையூரில் சிவத்தொண்டு புரிந்து வந்தார் ஒரு அடியவர். அவருக்குப் பெற்றோர் வைத்த பெயரென்னவோ ? உலகுக்கு அது புலப்படவில்லை. அவர் தினந்தோறும் திருக்கடையூர் சிவாலயத்தில் குங்கிலியப்புகையிடும் சிவத்தொண்டு செய்து வந்தார். இடைவிடாமல் செய்த அத்தொண்டு காரணமாக அவரை எல்லாரும் குங்கிலியக்கலயநாயனார் என்று அழைத்தார்கள். இயற்பெயர் போனது காரணப் பெயரே நிலைத்தது.

🔥 திருப்பனந்தாளில் நடந்த நிகழ்வுகளை அறிந்தார் குங்கிலியக்கலய நாயனார். திருப்பனந்தாளுக்குச் சென்று லிங்கத்தை நிமிர்த்த வேண்டும் என்று முடிவெடுத்தார். நினைத்ததைச் செயல்படுத்தத் திருப்பனந்தாள் நோக்கிப் புறப்பட்டார். கோயிலை அடைந்தார். குங்கிலியத் திருப்பணி செய்தார். அதன்பின் அவர் வளைந்திருந்த லிங்கத்திடம் சென்றார். இறைவனை மனதாரத் தொழுதார். ‘அன்புக்கு வணங்கிய அரனே என் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்’ என்று பிரார்த்தித்தார்.

Related image

🔥 நாரினால் கெட்டியாகக் கட்டப்பட்ட ஒரு மாலையை சிவனுக்கு அணிவித்தார். வளைந்திருந்த பக்கத்திற்கு எதிர்ப்புறத்தில் நின்று கொண்டார். தன் கழுத்தில் சுருக்குப் போட்டுக் கொண்டார். அந்தக் கயிற்றினை லிங்கத்துடன் கட்டினார். லிங்கத்தை நிமிர்த்த முயன்றார்.

🔥 சர்வேஸ்வரனுக்குச் சங்கடத்தைக் கொடுத்து விட்டார் சிவனடியார். அரசனின் அதிகாரத்துக்கு வளையாத சிவனுக்குச் சவாலாக அமைந்தார் அடியவர். நிமிராவிட்டால் குங்கிலியக்கலய நாயனாருக்குச் சாவு நிச்சயம். சுருக்கு இறுகும் அவர் உறுதியாக உயிர் நீப்பார். அவருடைய அன்பு சிவனை அசைபோட வைத்தது. அடியவருக்காக - அவர் அன்புக்காக - அவர் மனஒருமைப்பாட்டுக்காக மகிழ்ச்சியடைந்தார். லேசாக நிமிர்ந்தார். இதைச் சேக்கிழார் மிக அழகாகச் சொல்வார்.

 நண்ணிய ஒருமை அன்பின் நார் உறு  பாசத்தாலே

திண்ணிய தொண்டர் கூடி இளைத்த  பின் திறம்பி நிற்க

ஒண்ணுமோ கலயனார்தம் ஒருப்பாடு  கண்டபோதே

அண்ணலார் நேரே நின்றார் அமரரும்  விசும்பில் ஆர்த்தார்

- என்பது பெரிய புராணம்.

🔥 திருப்பனந்தாள் சிவபெருமான் பக்திக்காக வளைந்து கொடுத்தார் - ஆட்சி அதிகாரத்துக்கு அடிபணிய மறுத்தார் - அடியவர் அன்புக்கு இரங்கினார் நிமிர்ந்து கொடுத்தார் என்பது தல வரலாறு.

🔥 அன்புக்காக எதையும் செய்வார் அருணஜடேஸ்வரர். அடியவர்களுக்கு உதவுவார் என்பதை உணர்த்தும் வரலாறு இது.

🔥 இன்றும் செஞ்சடையப்பர் திருவுருவில் சற்று வளைந்து முன்னோக்கிய நிலையுடைய பாணம் அமைந்திருக்கிறது. உள்ளன்போடு வழிபட்டுக் கேட்டதைப் பெற வேண்டிய தலம் இது.

🅱 மற்றொரு தலவரலாறு :🅱

🔥 முன்காலத்தில் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே தம்மில் யார் பெரியவர் ? என்றப் போட்டி எழுந்தது.  அப்போது சிவபெருமான், ‘எனது அடி முடியை யார் அறிகிறார்களோ, அவர்களே பெரியவர்’ என்று கூறினார்.

🔥 ஈசனின் அடிமுடியைத் தேடி பிரம்மாவும், விஷ்ணுவும் புறப்பட்டனர். இருவராலும் சிவபெருமானின் சிரசையோ, பாதத்தையோ காண முடியவில்லை. லிங்கோத்பவராய் திருவண்ணாமலையில் தனது அடி முடி தெரியா வண்ணம் சிவராத்திரிப் பொழுதில் நள்ளிரவு 12.00 மணி அளவில் ஜோதி வடிவில் காட்சியளித்தார் சிவபெருமான்.  அதுவே லிங்கோத்பவ காலம் (இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1.00 மணி வரை) எனப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், இந்த லிங்கோத்பவர் காலத்தில் கண்டிப்பாக சிவாலயங்களில் வழிபாடு செய்ய வேண்டும்.

🔥 மகாவிஷ்ணுவாலும், பிரம்மாவாலும் சிவபெருமானின் அடிமுடியை காண முடியவில்லை. மகாவிஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.  ஆனால் பிரம்மதேவர், தாழம்பூவை பொய் சாட்சி கூறவைத்து பொய்யுரைத்தார்.  இதனால் கோபமுற்ற ஈசன், பொய் சொன்ன பிரம்மதேவனுக்குப் பூலோகத்தில் தனிக் கோவில்கள் இல்லாமல் போகட்டும் என்றும், தாழம்பூ சிவ பூஜைக்கு அருகதை இல்லாமல் போகட்டும் என்றும் சபித்தார்.

🔥 பிரம்மதேவர் தன் தவறை உணர்ந்து ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார்.   ‘பொய் சொன்ன பெரும் சாபம் தொலைய வேண்டும் என்றால் திருப்பனந்தாள் சென்று, அத்தல பொய்கை தீர்த்தத்தில் நீராடி வழிபட வேண்டும்’ என்று வழி கூறினார்.  பிரம்மாவும் அவ்வாறே செய்ய பொய் சொன்னதால் ஏற்பட்ட பாவமும், மற்றக் குற்றங்களும் அவரை விட்டு அகன்றன.

🔥 அகமகிழ்ந்த பிரம்மதேவர், இத்தல அருணஜடேஸ்வரருக்கு, சித்திரை மாதத்தில் பெருவிழா நடத்தி இன்புற்றார்.  இன்னும் ஒவ்வொரு வருடமும் இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருவிழாவை பிரம்ம தேவரே முன்னின்று நடத்துவதாக ஐதீகம் கூறப்படுகிறது.

🔥 பிரம்மதேவர் நீராடி சாப விமோசனம் பெற்ற பொய்கை தீர்த்தம், தற்போது பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாத அமாவாசையில் ‘பிரம்ம சாப நிவர்த்தி தீர்த்தவாரி’ பொய்கைக் குளத்தில் நடக்கிறது. தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால் அதற்கும் பாவம் உண்டானது.  திருப்பனந்தாளில் ஈசன் தாழம்பூவுக்கும் சாப விமோசனம் கொடுத்தார்.

🔥 சிவராத்திரியின் மூன்றாம் ஜாம பூஜையில் மட்டும் ஏற்றுக்கொள்வதாக சிவபெருமான், தாழம்பூவுக்கு விமோசனம் அளித்தார்.  இத்தலத்தில் ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால் கல்வி, கேள்விகளில் மிகச் சிறந்து விளங்கலாம்.

🅱 சிறப்பம்சம்:🅱
   
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ சித்திரை மாதம் சில நாட்கள்  மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன.

♻ இத்தலம் திருஞானசம்பந்தரால் வழிபட்டுப் பாடப் பெற்ற பெருமையினையுடையது. ஞானசம்பந்தர் பாடிய பதிகம் 3-ம் திருமுறையிலுள்ளது.

♻ இதுவன்றி திருநாவுக்கரசர் பாடிய தலத் தொகுப்புப்பாடல் ஒன்றிலும், பதினோராம் திருமுறையில் ஐயடிகள் காடவர் கோன் நாயனார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் பாடிய இரண்டு பாடல்களிலும், குங்குலியக் கலயநாயனார் புராணத்திலும், திருப்புகழிலும், க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழிலும் இத்தலம் பற்றியும் இறைவனைப் பற்றியும் பல செய்திகள் குறிப்பிடப் பெற்றுள்ளன.

♻ காலமேகப் புலவர் பாடிய பாடல் ஒன்றிலிருந்து அக்காலத்தில் ‘திருப்பனந்தாள் பட்டன்’ என்ற பெயரினையுடைய ஒருவன் தண்ணீரும் சோறும் தடையின்றி வழங்கிய செய்தி தெரிய வருகிறது. செஞ்சடை வேதிய தேசிகர் அவர்களால் தலபுராணமும் பாடப் பெற்றுள்ளது.

♻ திருஞானசம்பந்தர் பதிகம் ‘கண்பொலி நெற்றியினான்’ என்று தொடங்குகிறது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் தாடகையீச்சரத்தின் சிறப்புபேசப்படுகிறது. இரண்டாவது பாடலில் வல்வினையும் பல் பிணியும் பாழ்பட விரும்பினால் இறைவனை ஏத்துமின் என ஞானசம்பந்தர் அருளுகிறார்.

♻ ‘ஞானசம்பந்தன் நல்ல பண்ணியல் பாடல் வல்லார் அவர் தம் வினை பற்றறுமே’ எனப் பாடுவார் பெறும் பயனும் பேசப்படுகிறது. இப்பதிகத்தின் முதல் பாடல் வருமாறு:

       கண்பொலி நெற்றியினால் திகழ் கையிலோர்வெண் மழுவான்
       பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்
       விண்பொலி மாமதி சேர் தரு செஞ்சடை வேதியனூர்
       தண்பொழில் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.

♻ கல்வெடுக்களில் இறைவன் பெயர், திருத்தாடகையீச்சரத்து மஹாதேவர், திருத்தாடகேச்சரத்துப் பெருமான், திருத்தாடகேச்சுரமுடைய நாயனார் என வழங்கப்படுகிறது. முதற் குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டிலிருந்து இறைவியின் பெயர் பெரிய நாச்சியார் என்பது தெரிய வருகிறது.

♻ இறைவியின் கோயிலைக் கட்டியவன் வெண்கூருடையார் அன்பர்க்கரசு மருத மாணிக்கமான வில்லவராசன் என்ற செய்தி, இக்கோயில் மஹா மண்டபத்து வாசலில் தென்பாலுள்ள கல்வெட்டால் புலனாகிறது. இக்கோயிலின் உள்நுழை வாயிலின் இரு புறங்களிலும் உள்ள துவாரபாலகர்கள் சிற்ப வேலைப்பாடுடையன. அவற்றின் பின் பக்கம் சுவரில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு கூறும் சிற்பங்கள் காட்சியளிக்கின்றன.

♻ இக்கோயிலில், குங்குலியக் கலயநாயனாருக்கென தனிக் கோயில் உண்டு. அதனை எடுப்பித்தவர் அவர் பால் ஈடுபாடு கொண்டு விளங்கிய திருப்பனந்தாள் குங்கிலியக் கலயர் என்பவராவர். இக்கோயில் இரண்டாவது கோபுரத்தை அடுத்து உள்புறமு தென்பால் மண்டபத்துடன் அமைந்துள்ளது.

🅱 இருப்பிடம்:🅱

✈ கும்பகோணத்திலிருந்து(15 கி.மீ.)  சென்னை செல்லும் சாலையில் சோழபுரத்துக்கும் அணைக்கரைக்கும் இடையில் உள்ள ஊர்.

✈ கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. அணைக்கரை சாலையில் செல்லும் எல்லாப் பேருந்துகளும் நிற்கும்.

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄

அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி

Image result for நெல்லையப்பர் கோயில்

இறைவன் சிவனும் சக்தியுமாய் இயங்கி உயிர்களுக்குப் போக வாழ்வினை அளித்தருளி அம்மை அப்பனாய் எல்லா உயிர்களையும் காத்து அருளும் பதி ; உயிர்களுக்குத் தவம் இயற்றும் முறையை அறிவுறுத்தற் பொருட்டு அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டி திருக்கல்யாண விழா நடத்தியது ஆகிய திருவிளையாடல்கள் நடைபெற்ற மேன்மை உடைய ஸ்தலம்..

🌸🌷🌸🌷 BRS🌸🌷🌸🌷🌸

தொலைபேசி எண் : +91- 462 - 233 9910.

💦🌿💦🌿 BRS 💦🌿💦🌿💦

மூலவர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் )

அம்மன்/தாயார் : காந்திமதி, வடிவுடையம்மை

தல விருட்சம் : மூங்கில்

தீர்த்தம் : பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாறித் தீர்த்தம், சிந்துபூந்துறை

ஆகமம்/பூஜை : காரண ஆகமம், காமீக ஆகமம்

ஊர் : திருநெல்வேலி

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர்

🅱 தேவாரப்பதிகம்:🅱

அக்குலா மரையினர் திரையுலா முடியினர் அடிகளன்று தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலும் சோலைத் திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலியுறை செல்வர் தாமே. - திருஞானசம்பந்தர்.

🌀 தேவாரப்பாடல்பெற்ற பாண்டிநாட்டுத்தலங்களில் இது 14வது தலம்.

Image result for நெல்லையப்பர் கோயில்

🅱 திருவிழாக்கள் :🅱

இத்திருக்கோயிலில் ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

🍄 சித்திரை - வசந்த்மஹோற்சவம் (பதினாறு தினங்கள்),

🍄 வைகாசி - விசாகத்திருநாள் (ஆனி பெருந்தேர் திருவிழா),

🍄 ஆனி - பிரம்மோற்சவம் (ஆனி பெருந்தேர் திருவிழா),

🍄 ஆடி - பூரத்திருநாள் (பத்து தினங்கள்),

🍄 ஆவணி - மூலத்திருநாள் (பதினொரு தினங்கள்),

🍄 புரட்டாசி - நவராத்திரிவிழா (பதினைந்து தினங்கள் லட்சார்ச்சனையுடன்),

🍄 ஐப்பசி - திருக்கல்யாணம்உற்சவம் (15 தினங்கள்),

🍄 கார்த்திகை - கார்த்திகைதீபம், சோமவாரத் திருவிழா (ஒரு நாள்),

🍄 மார்கழி - திருவாதிரைவிழா (பத்து தினங்கள்),

🍄 தை - பூசத்திருவிழா (பத்து தினங்கள்),

🍄 மாசி - மகாசிவராத்திரி (ஒரு நாள்),

🍄 பங்குனி - உத்திரத்திருநாள் (பத்து தினங்கள்).

🅱 தல சிறப்பு:🅱

🎭 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 மூலவரான வேண்ட வளர்ந்தநாதர் சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே நெல்லையப்பர் எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம்.

🎭 இத்தலம், பஞ்சசபைகளுள் தாமிர சபையாகும்.

🎭 தமிழ் நாட்டில் இறைவன் சிவபெருமான் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன.

🎭 இங்குள்ள விநாயகர் முக்குறுணி விநாயகர் என்ற திருநாமத்துடன், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.

🎭 பொதுவாக, நவக்கிரக சன்னதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கியிருப்பார். இங்கு வடக்கு நோக்கியிருப்பது மிக அரிய கோலம்.

🎭 இங்கு மூலஸ்தானம் அருகில் உள்ள உற்சவர் விஷ்ணு, மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார்.

🎭 இங்கு மார்கழிபூஜை கிடையாது. அதற்குப்பதிலாக, கார்த்திகை மாதத்தில் அதிகாலை 4 மணிக்கு கோயில் திறந்து, அனைத்து சுவாமி களுக்கும் பூஜை நடக்கிறது.

🎭 சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் பிரதோஷத்தின்போது இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது. இதேபோல் சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.

🎭 அம்மை தான் படைத்த உலகத்தைக்  காத்தல் பொருட்டு இறைவனை வேண்டித் தவம் இயற்றி அவன் அருளை உலகம் பெறும் படிச் செய்தது வரலாறு.

🎭 உமாதேவி கயிலை மலையினின்றும் நீங்கி, இறைவனிடம் இருநாழி நெல்  பெற்று, வேணுவனம் அடைந்து, முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்தது.  கம்பை நதியின்  அருகிலேயே இறைவனை நினைத்து தவமிருந்து, நெல்லை நாதனது திருவருட்கோலக் காட்சி  எய்தி மணந்தருளியது.

🎭 அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடம் ஆகும்.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 204 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 நடைதிறப்பு:🅱

🔑 காலை 5.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 🔑

🅱 பொது தகவல்:🅱

🌸 பிரகாரத்தில் கன்னி விநாயகர், நந்தி தேவர், பாண்டியராஜா சன்னதிகள் உள்ளன.

🌸 பிட்சாடனர், ரிஷிபத்தினியர் உருவங்கள் கல்லில் வண்ணந்தீட்டப்பட்டுள்ளன.

🌸 அகத்தியர் பிரதிஷ்டை செய்த சால்வடீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி சற்றுத் தாழ்வில் உள்ளது.

🌸 நெல்லையப்பர் கோயிலுக்குள் பொற்றாமரைக் குளமும், நடுவில் நீராழி மண்டபமும் உள்ளது. இக்கோயிலில் 96 தூண்கள் உடைய ஊஞ்சல் மண்டபம், மகாமண்டபம், நவகிரக மண்டபம், சோமவார மண்டபம், சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் ஆகிய மண்டபங்களில் அழகிய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

🌸 நாட்டிலேயே மூன்றாவது பெரிய திருத்தேர் நெல்லையப்பர் திருத்தேர். அரியநாத முதலியாரால் ஏற்படுத்தப்பட்ட ரதவீதிகளில் 1505-ல் முதல்முறையாக தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது.

🌸 இக்கோயிலில் உள்ள பொள்ளாப்பிள்ளையார் இதனை மலைமண்டலத்தைச் சார்ந்த முந்திக் கோட்டு வீரம் அழகிய பாண்டிய தேவன் உருவாக்கினார் என்று கல்வெட்டில் எழுதப் பெற்றுள்ளது.

🌸 பிள்ளையாருக்கு பிள்ளைத்தூண்டு விநாயகர் என்றும் ஒரு பெயர் உண்டு.

🌸 நெல்லை மக்கள் அம்பாள் காந்திமதியை அம்மை என்றும், நெல்லையப்பரை அம்மையப்பர் என்றும் அழைக்கின்றனர்.

Image result for நெல்லையப்பர் கோயில்

🅱 பிரார்த்தனை:🅱

🌹 கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு நோக்கி திரும்பியிருப்பதன் மூலம், படித்தவர்கள் இவரை வணங்கினால், செல்வாக்கு மிக்க வேலையோ, தொழிலோ செய்யலாம் என்று நம்புகிறார்கள். ஜாதகத்தில் புதன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபடுகிறார்கள்.

🌹 கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒற்றுமையுடன் இருப்பர் என்பது நம்பிக்கை.

🅱 நேர்த்திக்கடன்:🅱

♻ இங்குள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதியில், 12 துளைகள் கொண்ட கல் ஜன்னல் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டு, குழந்தைப்பேறு பெற்றவர்கள், குழந்தையை ஜன்னல் வழியாக கொடுத்து வாங்கி வித்தியாசமான நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

♻ இந்த நேர்த்திக் கடனால் குழந்தைகள் விநாயகரின் பாதுகாப்பைப் பெற்று தீர்க்காயுளுடன் வாழ்வர் என்பதும், கல்வியில் சிறந்து விளங்குவர் என்பதும் நம்பிக்கை.

🅱 தலபெருமை:🅱

Ⓜ வெண்ணிற ஆடை அம்பிகை: Ⓜ

🌱 காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள். இறுதிக்காலத்தில் உலகம் அனைத்தும் அம்பிகையிடம், ஐக்கியமாவதை உணர்த்தும்விதமாக இவ்வாறு காட்சி தருவதாக ஐதீகம்.

Ⓜ தனித்தனி பூஜை: Ⓜ

🌱 நெல்லையப்பர் கோயிலில் சுவாமிக்கு தனி ராஜகோபுரமும், அம்பாளுக்கு தனி ராஜகோபுரமும் உண்டு. இரண்டு சன்னதிகளையும் மிக நீளமான சங்கிலி மண்டபம் ஒன்று இணைத்து வைக்கிறது. பார்ப்பதற்கு தனித்தனி கோயில்கள் போன்ற உணர்வு ஏற்படும். பொதுவாக கோயில்களில் சுவாமி, அம்பாள் இருவருக்கும் ஒரே ஆகமப்படிதான் பூஜை நடக்கும். ஆனால், இங்கு காந்திமதி அம்பாள் தனிக்கோயிலில் இருப்பதால் காரண ஆகமப்படியும், நெல்லையப்பருக்கு காமீக ஆகமப்படியும் ஆறு கால பூஜை நடக்கிறது.

Ⓜ காந்திமதி சீர் : Ⓜ

🌱 பெண்கள், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சீர் கொண்டு செல்வதுபோல, காந்திமதி அம்பிகையும் தனது திருக்கல்யாணத்தின் போது, சீர் கொண்டு செல்கிறாள். ஐப்பசி பிரம்மோற்ஸவத்தின் முதல் பத்து நாட்கள் அம்பாள், சிவனை மணக்க வேண்டி தவமிருப்பாள்.

🌱 பத்தாம் நாளில் கம்பை நதிக்கு எழுந்தருள்வாள். 11ம் நாள் மகாவிஷ்ணு, தன் தங்கையை மணந்து கொள்ளும்படி சிவனை அழைப்பார். சிவனும் அவரது அழைப்பை ஏற்று, அம்பிகையை மணம் செய்வார். அப்போது பக்தர்கள், மணமக்களுக்கு திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

🌱 12ம் நாளிலிருந்து இருவரும், 3 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் காண்கின்றனர். 14ம் நாள் இரவில் சுவாமியும், அம்பாளும் மறுவீடு செல்கின்றனர். அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு என சீர் பலகாரங்கள் கொண்டு செல்கிறாள். இதனை, "காந்திமதி சீர்' என்பார்கள்.

Related image

Ⓜ அன்னம் பரிமாறும் அம்பிகை : Ⓜ

🌱 இக்கோயிலில் காந்திமதி அம்பாள், கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்பாள் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்கு கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது.

Ⓜ திருமால் மார்பில் லிங்கம்: Ⓜ

🌱 மூலஸ்தானம் அருகில் தனி சன்னதியில் திருமால், பள்ளி கொண்ட கோலத்தில், சிவலிங்க பூ ஜை செய்தபடி இருக்கிறார். அருகில் உற்சவர் விஷ்ணு, மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார். திருமாலை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது. தன் தங்கையை மணந்த சிவனை, விஷ்ணு மார்பில் தாங்கினார். இதன் அடிப்படையில் இவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள். இவரது கையில் தாரை வார்த்துக்கொடுத்த தீர்த்த பாத்திரமும் இருக்கி றது.

Ⓜ அம்பிகைக்கு பிரதோஷம்: Ⓜ

🌱 பிரதோஷத்தின்போது, சிவன் சன்னதி எதிரேயிருக்கும் நந்திக்கு மட்டுமே பூஜை நடக்கும். ஆனால், இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது. அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறாள். சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர். சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.

Ⓜ தன்னில் நீராடும் தாமிரபரணி : Ⓜ

🌱 இக்கோயிலில் நாயன்மார் சன்னதி அருகில் தாமிரபரணி தாய், சிலை வடிவில் இருக்கிறாள். சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் இவளை தாமிரபரணிக்கு பவனியாகஎடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர்.

🌱 தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். இதன் முக்கியத்து வத்தை உணர்த்துவதற்காக தாமிரபரணியே, தனது உண்மை வடிவத்தில் நீராடுவதாக சொல்வதுண்டு.

🌱 அம்பிகை சன்னதி முன்பாக கங்கை, யமுனை இருவரையும் துவாரபாலகிகளாகவும் காணலாம். கங்கையும், யமுனை யும் தாமிரபரணி நகர் நாயகிக்கு பாதுகாவல் செய்வதில் இருந்தே, காந்திமதியம்மையின் மகிமையும், தாமிரபரணி நதியின் பெருமையும் தெரிய வரும்.

Ⓜ மார்கழி பூஜை இல்லாத கோயில்: Ⓜ

🍁 தை மாதத்தில் உத்ராயணம் துவங்குவதால், மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை நேரமாக கருதப்படுகிறது. ஆகவே, கோயில்களில் மார்கழி அதிகாலையில் திருவனந்தல் பூஜை நடக்கும். ஆனால், இங்கு மார்கழி பூஜை கிடையாது. அதற்குப்பதிலாக, கார்த்திகை மாதத்தில் அதிகாலை 4 மணிக்கு கோயில் திறந்து, அனைத்து சுவாமி களுக்கும் பூஜை நடக்கிறது. இந்த 30 நாட்களும் சுவாமி தங்கப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். இங்கு கந்தசஷ்டி ஐப்பசி அமாவாசையில் துவங்கி பவுர்ணமி வரையில் 15 நாட்கள் நடக்கிறது. அப்போது ஆறுமுக நாயனாருக்கு லட்சார்ச்சனை செய்யப்படுகிறது.

Ⓜ மான் வாகன துர்க்கை: Ⓜ

🍁 இங்குள்ள துர்க்கை தெற்கு நோக்கியபடி, சிங்கம் மற்றும் மான் வாகனத்துடன் இருக்கிறாள். சிங்கமும், மானும் ஒரு சேர இருப்பதால், எதிரிகளையும் அன்பால் அடக்கும் சக்தியை அவள் தருகிறாள். அருகில் அவளது தோழி இருக்கிறாள்.

🍁 அம்பாள் சன்னதியில் பண்டாசுரனை வதம் செய்த அம்பாளின் சிலை உள்ளது. இவளை "மஞ்சன வடிவாம்பிகை' என்பர். இவளையும் துர்க்கையின் அம்சமாக கருதி வழிபடுகின்றனர்.

Ⓜ புதனின் மாறுபட்ட திசை: Ⓜ

🍁 பொதுவாக, நவக்கிரக சன்னதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கியிருப்பார். இங்குள்ள புதனோ, வடக்கு நோக்கியிருக்கிறார். இது மிக அரிய கோலம். தமிழகத்தில் வேறு எந்தக் கோயிலிலும் புதனின் திசையில் மாற்றமில்லை.

Ⓜ முக்குறுணி விநாயகர்: Ⓜ

🍁 மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகர் இருக்கிறார். அதுபோல, இங்குள்ள விநாயகரும் இதே திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். ஆனால், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.

Ⓜ தாமிரபரணியில் தண்ணீர் வற்றாதது ஏன் ? : Ⓜ

🌱 திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் வற்றுவதில்லை. இந்நதியை அகத்தியர் உண்டாக்கியது ஒரு காரணம் என்றாலும், நதி செழிப்புடன் இருப்பதற்கு நெல்லையப்பரே மூலகாரணம் என்கிறார்கள்.

🌱 ஆம் ! இக்கோயிலின் அமைப்பை பார்த்தால் இவ்விஷயம் புலப்படும்.கோயில்களில் சுவாமி அபிஷேக தீர்த்தம் வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும். ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கில் இருக்கிறது. இந்த புனித நீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருணபகவான் எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையில் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம்.

🌱 பொன் திணிந்த பொருநை நதியில் அமைந்த பெரிய நகரம் திருநெல்வேலி. ஒருகாலத்தில் மூங்கில் வனமாக இருந்த காரணத்தால் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்ற பெயரும் உண்டு. மட்டுமின்றி நெல்லூர், வேணுவனம், சாலிவேலி, சாலிவாடி, சாலி நகர், தாருகா வனம், பிரம்மவிருந்தபுரம் ஆகிய பெயர்களும் இந்த ஊருக்கு உண்டு.

🌱 கல்வெட்டு குறிப்பு ஒன்று, கீழ் வேம்பு நாட்டுக் குலசேகரச் சதுர்வேதி மங்கலம் என்று இவ்வூரைக் குறிப்பிடுகிறது. தண்பொருநைப் புனல்நாடு என சேக்கிழார் பிரானும் இந்த ஊரைப் போற்றிப் புகழ்கிறார்கள். கவிச்சக்கரவர்த்தி கம்பரோ, பொன் திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி என்று, இவ்வூரின் நடுவே பாயும் தாமிரபரணியை சிறப்பிக்கிறார்.

🌱 தாமிரபரணி ஆற்றின் வட கரையிலும் தென் கரையிலும் அமைந்த திருநெல்வேலி, பாளையங்கோட்டை என்னும் இரட்டை நகரங்களில், திருநெல்வேலியின் நடுநாயகமாக விளங்குகிறது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்.

Related image

🅱 கோவில் அமைப்பு: 🅱

🌹 கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தியைக் காணலாம். அடுத்துள்ள கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். மூலவரைக் காண்பதற்கு முன் சுமார் 9 அடி உயரம் உள்ள மிகப்பெரிய விநாயகரைத் தரிசிக்கலாம்.

🌹 மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல கோஷ்ட மூர்த்திகளாக தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோரையும், மற்றும் சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் ஆகியோரை நாம் காணலாம். கோவிந்தப் பெருமாள் சந்நிதியும் சிவனுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.

🌹 இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே "ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்" உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் "தாமிர சபை" உள்ளது.

🌹 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்டலக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

🌹 மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியதாகவும் அகலமாகவும் அமைந்துள்ளது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்ல வழி உள்ளது. மீண்டும் அம்மா மண்டபம் வழியாகத் திரும்பி வந்தால், மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இல்லையெனில் அம்மன் சந்நிதியில் இருந்து அப்படியே வெளியேறவும வழி உண்டு.

🌹 மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி உள்ளது. ஒரே கல்லில் ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக நாயினார் என்னும் திருநாமத்துடன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம் திருப்புகழ் வைப்புத் தலங்களில் ஒன்றாகும்.

🌹 கோயிலின் உள்ளே பொற்றாமரைக் குளம் உள்ளது. நாற்புறமும் நல்ல படிகளுடனும், நடுவில் நீராழி மண்டபத்துடனும் இந்த தெப்பக்குளம் உள்ளது. இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம் போன்ற மண்டபங்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன.

Ⓜ ஆயிரங்கால் மண்டபம் : Ⓜ

🌹 1000 தூண்கள் உடையது.  ஜப்பசி திருக்கல்யாண திருவிழா நடைபெறும் மண்டபம்.  இம்மணடபம்  520 அடி நீளம் 63 அடி அகலம் உடையது.  பங்குனி உத்திரத்தன்று செங்கோல் கொடுத்தல் நிகழ்ச்சி  இம்மண்டபத்தில் நடைபெறும்.  இம்மண்டபத்தின் உச்சிஷ்ட கணபதி நம்மை ஈர்க்கும் தோற்றம்  உடையது.  ஐப்பசி திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம்.  கீழ்பகுதியில் ஆமை ஒன்றினால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டபட்டுள்ளது.  மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில்  வந்து இறைவனை பூஜிப்பதாய் ஐதீகம்(கச்சபாலயம்) புனர்பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்.

🌹 இக்கோயிலில் உள்ள சுரதேவர் சந்நிதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை.

🌹 நடராஜர் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள் இத்தலம் தாமிரசபையாகும். இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராசர் ‘தாமிர சபாபதி’ என்றழைக்கப்படுகிறார். சபைக்கு மேலே தாமிரத் தகடு வேயப்பட்டுள்ளது. இச்சபையின் உள்ளே ருத்திர விஷ்ணு, பேதங்கள், ரிஷிகளின் உருவங்கள் உள்ளன.

🌹 கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் ஆக்கப்பட்டு ஏழு அடுக்குகளைக் கொண்டு திகழும் இச்சபை சித்திர வேலைப்பாடுகளுடன் அருமையாகத் திகழ்கின்றது.பின்னால் உள்ள நடராஜர் சிலாரூபத்தில் சந்தன சபாபதி என்றழைக்கப்படுகிறார்.

🅱 கோவில் தோன்றிய வரலாறு:🅱

🔥 முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார்.

🔥 மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.

🔥 அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். இன்றும் மூல லிங்கத் திருமேனியின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

🅱 தல வரலாறு:🅱

🔥 முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார்.

🔥 வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சந்நிதி முன் உலரப் போட்டு குளிக்கச் செல்வது அவரது வழக்கம். அவ்வாறு செய்து வந்த நாளில் ஒரு நாள் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு வியப்புற்றார்.

🔥 மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காண விரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் வியப்புற்றார்.

🔥 உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலிநாதர் என்றும், அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி என்றும் அழைக்கலானார்கள்.

🅱 சிறப்பம்சம்:🅱
 
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ தமிழகத்தில் மூன்று மூலவர்களைக் கொண்ட கோயில் நெல்லையப்பர் கோயில் மட்டுமே. மூலவரான "வேண்ட வளர்ந்தநாதர்' சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் பெரிய லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரே "நெல்லையப்பர்' எனப்படுகிறார். இவருக்கு மூங்கில் வேணுவனேஸ்வரர், வெய்முத்தீசர் ஆகிய திருநாமங்கள் உள்ளன.

♻ இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கம் என்பதை இக்கோலம் உணர்த்துவதாக சொல்கிறார்கள். எனவே, சுவாமிக்கு "சக்தி லிங்கம்' என்ற பெயரும் உண்டு.

♻ இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதியும் இருக்கிறது. பாதாள லிங்கத்தில் உள்ள உள்ள சிவனையே ஆதிமூலவர் என்கின்றனர். இவருக்கு தான் முதல் பூஜை செய்யப்படுகிறது.

♻ இவருக்கு சாலி வாடீஸ்வரன், (சாலி என்பது நெல்லி), விருகி விடுதீஸ்வரன், ஸ்ரீதான மூர்த்தி போன்ற திருநாமங்கள் உள்ளன.இவரே இக்கோயிலின் முதல் லிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூஜை நடக்கிறது. வருமே மூலவராகவே வணங்கப் படுகின்றனர். இங்கு பஞ்ச தெட்சிணாமூர்த்தி களையும் தரிசிக்கலாம்.

♻ ஏறக்குறைய பாண்டியரின் இரண்டாம் தலைநகரம் என்ற அளவில் சிறப்புற்றிருந்தது திருநெல்வேலி என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை வீழ்த்திய பிறகு பாண்டிய நாடு சோழர்களின் வசமானது. 13-வது நூற்றாண்டு வரை சோழரின் ஆட்சியிலிருந்த திருநெல்வேலி, பிறகு பிற்கால பாண்டியரின் வசம் வந்தது.

♻ பொருநை என்னும் தாமிரபரணி நதியாலும், அதன் கரையில், சிந்துபூந்துறை, கொக்கு உறைகுளம் என்று அருந்தமிழ்ப் பெயர்களை ஏற்றுத் திகழும் இடங்களாலும் சிறப்புற்ற நெல்லைக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில். பதினான்கு ஏக்கர் நிலப் பரப்பில், இரட்டைக் கோயில் அமைப்பில் இருக்கிறது.

♻ காந்திமதியம்மன் - நெல்லையப்பர் திருக்கோயில். நிறை கொண்ட சிந்தையன் என்றும் நெல்வேலி கொண்ட நெடுமாறன் என்றும் சுந்தரரால் குறிக்கப்படும் நின்றசீர் நெடுமாறன் எனும் பாண்டிய மன்னனால், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்யப்பட்டு, இந்தக் கோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. ஆனால், அதற்கு முன்னரே கூட, இந்தக் கோயில் பிரபலமாக விளங்கியதை, திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களால் தெரிந்து கொள்கிறோம்.

🅱 இருப்பிடம்:🅱

✈திருநெல்வேலி நகரின் மத்தியில் கோயில் உள்ளது.

✈பழைய பேருந்து நிலையத்தில் (ஜங்ஷன்) இருந்து நகருக்குள் செல்லும் பேருந்துகள் அணைத்தும் கோயில் வழியே செல்கிறது.

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄

சிறுவயது பருமன் ? சுகமில்லா சுமை !


ம் பூங்காக்களிலெல்லாம் பெரும்பாலும் வயதானவர்கள்தாம்  வாக்கிங் சென்று கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள், ‘உடற்பயிற்சியை எல்லாம் வயதானபிறகுப் பார்த்துக்கொள்ளலாம்’ என்று நினைக்கிறார்கள். ஆனால், ‘பல் போனபிறகு தொடங்குவதைவிட, பல் முளைக்கும்போதே உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும்’ என சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ‘குழந்தைகள் குண்டாக இருப்பதுதான் நல்லது’ என்று பலரும் கருதுகிறார்கள். அதனால்தான் நமது நாட்டில், ‘கொழுகொழு குழந்தைகள் போட்டி’யை நடத்துகிறார்கள். ‘குழந்தைகள், சிறுவர்கள் எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்’ என்ற எண்ணம் நம் மக்கள் மனதில் இருக்கிறது.

‘வளரும் பருவத்தினருக்கு உணவுக் கட்டுப்பாடுகளும் உடற்பயிற்சியும் தேவையில்லை, வயதானவர்களுக்கே அது அவசியம்’ என்ற தவறான கருத்தை விதைத்து விட்டார்கள்.  இதன் காரணமாக, இன்றைய சிறுவர்களில் பலர் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

குழந்தைகளின் உடல்பருமன் என்பது உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகில், ஐந்து வயதுக்குட்பட்ட 4.3 கோடி குழந்தைகள் உடல் பருமனோடு வாழ்கிறார்கள். இந்தியாவில், இரண்டு வயது முதல் 17 வயது வரையுள்ளவர்களில் சுமார் 18.2 சதவிகிதம் பேர் உடல் பருமனாக இருக்கிறார்கள். ‘வளர்ந்தால், பருமன் குறைந்து சரியான எடைக்கு வந்துவிடுவார்கள்’ என்று தங்களுக்குத் தாங்களே பெற்றோர் பொய் சமாதானம் செய்துகொள்கிறார்கள். ஆனால், சிறுவர்களின் உடல்பருமன் என்பது உடனே கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்னையாகும். 

குழந்தைகள் உடல் பருமனாவதை ஆரம்பத்திலேயே உணர்ந்து வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவர்கள் பெரியவர்களாகும்போதும் குண்டாக இருப்பதுடன், பல்வேறு உடல் பாதிப்புகளுக்கும் ஆளாவார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளில் சில...

* சர்க்கரை நோய் ஏற்படலாம்.

* ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தல், இதய நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

* ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே ஆஸ்துமா இருந்தால், அது இன்னும் வீரியமாகும். உறக்கத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்படும்.

* சக குழந்தைகளோடு ஒப்பிடும்போது, இவர்கள் மன அழுத்தம், மனச்சோர்வு உடையவர்களாக இருப்பார்கள்.

* பல்வேறு உடல், தசை, மூட்டுவாத பாதிப்புகள் ஏற்படும்.
உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

* வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற எடையோடு ஆரோக்கியமாக இருப்பார்கள்.

* தசை, எலும்புகள், மூட்டுகள் வலிமைபெறும். விளையாட்டுகளில் ஈடுபட உடல் ஏதுவாக அமையும்.

* ஆழ்ந்த உறக்கம்  வரும். திறமையாளர்களாக, அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

* தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.

* நோய்கள் இவர்களை எளிதில் பாதிப்பதில்லை.

உடற்பயிற்சியை எப்போது தொடங்க வேண்டும்?

குழந்தை, பிறந்ததில் இருந்தே இயல்பாக உடற்பயிற்சியைத் தொடங்கிவிடுகிறது என்றுதான் சொல்லவேண்டும். கை கால்களை அசைப்பது, தலையை இருபுறமும் திருப்பிப்பார்த்து, உடலை அசைப்பது என்று குழந்தைகள் தங்களுக்கான உடற்பயிற்சியைச் செய்கிறார்கள்.

5-17 வயது வரை

* ஐந்து வயதிலிருந்து 17 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பள்ளியிலும் வீட்டிலும் பல்வேறு உடற்பயிற்சிகள் அவசியம்.

* இவர்களுக்குக் குறைந்தது தினமும் ஒரு மணிநேரப் பயிற்சி தேவை.

* டி.வி, கம்யூட்டர், வீடியோ கேம் போன்றவற்றில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். வேகமாக நடத்தல், ஓடுதல், குதித்தல், நடனமாடுதல், பூப்பந்து, உதைபந்து, டென்னிஸ், நீச்சல், வளர்ப்புப் பிராணிகளோடு நடத்தல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை நண்பர்களோடு சேர்ந்து விருப்பத்தோடும் மகிழ்ச்சியோடும் செய்தாலே போதும்.

சரியான தொடக்கம் அவசியம்

பிறந்ததில் இருந்து ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகளின் எடை, உடல் வளர்ச்சி ஆகியவற்றைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குறைந்தது ஒரு வருடம் கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அனைத்து தடுப்பூசிகளையும் முறையாகப் போடவேண்டும்.

உணவிலும் மாற்றம் வேண்டும்.

சிறுவயதில் இருந்தே, அதிகச் சர்க்கரை மிகுந்த உணவுகள், கொழுப்புச்சத்து மிக்க உணவுகள், எண்ணெய்ப் பலகாரங்கள், குளிரூட்டப்பட்ட பானங்கள், நொறுக்குத் தீனிகள் கொடுத்துப் பழக்கக்கூடாது. எல்லா சத்துகளும் உள்ள சரிவிகித உணவுகளைக் கொடுப்பதுடன், தினமும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டுவர வேண்டும். எல்லாக் குழந்தைகளையும் சிறுவர்களையும் ஒரே மாதிரி உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கக்கூடாது. ஒவ்வொருவருக்கும் அவர்களது உடல்நிலையைப் பொறுத்து, உடற்பயிற்சி முறைகளை மாற்றி அமைக்கவேண்டும்.

எனவே, உடற்பயிற்சியாளரைப் பார்க்கும்முன், சரியான மருத்துவ நிபுணரை ஆலோசனை செய்வது நல்லது. குழந்தைகள், சிறுவர்களின் உடல்நிலை, உடல் தகுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பல்வேறு பிறவிக்கோளாறுகள்,  இதய நோய்கள் உள்ளவர்கள், ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இளம் வயதிலேயே மூட்டுவாதப் பிரச்னை உள்ளவர்கள், பல்வேறு தசை - நரம்பு நோய் மற்றும் நலிவுக் கோளாறு உள்ளவர்கள், ரத்தக் கசிவுப் பிரச்னை உள்ளவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என உடலாலும் மனதாலும் பாதிப்புள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களை மருத்துவரின் அறிவுரை பெறாமல் உடற்பயிற்சி செய்யவும் விளையாடவும் அனுமதிக்கக் கூடாது என்பதைப் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தவழும் பருவத்தில்

தவழும்போதும் குழந்தைகள் சிறிதும் ஓய்வெடுப்பதில்லை. உற்சாகமாக, சுறுசுறுப்பாகக் கையில் கிடைப்பதை எடுத்துப் பார்ப்பது, ஏதாவது ஒரு வண்ணத்தில் இருக்கும் பொருள்மீது ஈர்க்கப்பட்டு, அதை நோக்கிச்செல்வது என்று இயங்கிக்கொண்டே இருப்பார்கள்.
நடக்கும் பருவத்தில்

நடக்கத் தொடங்கும் பருவத்தில், தினமும் குறைந்தது மூன்று மணி நேரமாவது குழந்தைகள் நடக்கின்றனர். நிற்பது, அமர்வது, எழுந்து மெதுவாக நடப்பது, எதையாவது தேடுவது எனக் குழந்தைகள் ஏதேனும் ஒரு செயலைச் செய்துகொண்டே இருப்பார்கள். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அளவுக்கு மீறி உடல் பருமனோடு இருந்தால், நடக்க வைப்பது, பந்து கொடுத்து விளையாட வைப்பது, நீச்சல் கற்றுக்கொடுப்பது, சைக்கிள் ஓட்டச் செய்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்தலாம்.

Friday, 4 May 2018

வாழ்க நலமுடன் - சீனியர் சிட்டிசன்களுக்குச் சிறப்பான கையேடு


“வயதான காலத்தில் மனம் கனிய வேண்டும் என்பார்கள். முடிந்தளவு அடுத்தவருக்கு உதவுவது, நன்மை செய்வது, எதையும் பரந்த மனதுடன் அணுகுவது போன்ற நற்செயல்களால் நிச்சயம் முதுமை இளமையாகும். குறிப்பாக, ஓய்வுக்காலம் உற்சாகத்துக்கானது என்பதை உணர்ந்து வாழ்க்கையை ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் அனுபவிக்க வேண்டும்” என்கிறார் முதியோர் நல மருத்துவ நிபுணர் வி.எஸ்.நடராஜன். 

முதுமையில் நோய் வரும் முன் எப்படி காத்துக் கொள்வது, உணவுமுறை, உடற்பயிற்சி வழிமுறைகள் என்னென்ன? எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார் டாக்டர் வி.எஸ். நடராஜன்.

`ரிட்டயர்மென்ட்’ என்னும் `பணி ஓய்வு’, நாம் செய்யும் வேலைக்குத்தானே தவிர, நம் வாழ்க்கைக்கு அல்ல. இதை ஓய்வுபெறும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். விவசாயிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது. எத்தனை வயதானாலும் அவர்கள் உழைத்துக்கொண்டேயிருப்பார்கள்.
ஓய்வு பெற்றுவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகக் கற்பனை செய்துகொண்டு துவண்டுவிட வேண்டாம். இத்தனை நாள் குடும்பத்துக்காக உழைத்துக் களைத்த நீங்கள், இனி உங்களுக்காக வாழுங்கள்; உங்களுக்குப் பிடித்தமானவற்றைச் செய்யுங்கள். கோடை விடுமுறை பள்ளிக் குழந்தைகளுக்கு எவ்வளவு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருமோ அதேபோல, இந்த ஓய்வு நாள்கள் உங்களுக்கு உற்சாகம் தரும் என்பதை மனதுக்குள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
ஓய்வுக்காலம் என்பது திடீரென்று வரப் போவதில்லை. அதனால் இதுகுறித்து ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிடுங்கள். குறிப்பாக ஓய்வுக்குப் பிறகு தேவைப்படும் பொருளாதார வசதிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். பொருளாதாரரீதியாக நீங்கள் வலிமையாக இருந்துவிட்டாலே, மனரீதியாக உங்களுக்கு ஒரு தைரியம் வந்துவிடும். நோய் வந்த பிறகு அதற்கான தீர்வைத் தேடுவதைவிட, வரும் முன்னர் காத்துக்கொள்வதே நல்லது. 
60 வயதில் ஒருவருக்கு நோய்களுக்கான அறிகுறிகள் பெரிதாக வெளிப்படாது. ஆனால், ஏதோ ஒரு சூழலில் கண்களில் பிரச்னை ஏற்படும்போது மருத்துவரிடம் செல்லவேண்டியிருக்கும். அப்போது செய்யப்படும் பரிசோதனையில் சர்க்கரைநோய் இருப்பது தெரியவரும். அதாவது, உங்களின் கண்களைப் பாதித்ததற்கு சர்க்கரைநோயே காரணம் என்பது அதன் பிறகே தெரியவரும். அதனால், ஓய்வுபெறும் வயதில் இருப்பவர்கள் முதலில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அந்தப் பரிசோதனையில் என்னென்ன உடல்நலப் பிரச்னைகள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளலாம். அதன் பிறகு, உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி, குறிப்பிட்ட உடல் பிரச்னைகளுக்கான பரிசோதனைகளை மட்டும் சரியான இடைவெளியில் செய்துகொள்ளலாம்.
ஓய்வுபெறும் வயதிலிருக்கும் பெண்கள், மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டியது அவசியம். குடும்பத்தில் யாருக்கேனும் மார்பகப் புற்றுநோய் இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதேபோல, கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயைக் கண்டறியும் `பாப் ஸ்மியர்’ (Pap Smear) பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. 

ஆண்களுக்கு வயதானதும் சிறுநீர் அதிகமாக வெளியேறும். எனவே, அவர்கள் `புரோஸ்டேட்’ புற்றுநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும், `பி.எஸ்.ஏ’ (PSA) என்ற ரத்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
உணவுமுறை

60 வயதுக்கு மேல், உணவுமுறையில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். இந்த வயதில் உடலில் புரதச்சத்துக் குறையும் என்பதால், எல்லா வகைப் பருப்புகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.சோயா பீன்ஸ், முட்டையின் வெள்ளைக்கரு, காளான், சிறுதானியங்கள் போன்றவை முதியவர்களுக்கான சிறந்த உணவுகள். சிறுதானியங்களில் நார்ச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளதால், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை அவற்றைச் சாப்பிடுவது நல்லது.

முதியவர்களுக்கு தாகம் எடுப்பது குறைந்துவிடும். ஆனால், வழக்கம்போல் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். போதிய அளவு தண்ணீர் இல்லாமல் போவதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. தினமும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
இதயநோய், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கிழங்கு வகைகள் மற்றும் எண்ணெயின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது நல்லது. அரிசி உணவை ஒருவேளை மட்டும் உட்கொள்வது நல்லது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உப்பு பரம எதிரி. எனவே, சாப்பாட்டில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். `உலக சுகாதார நிறுவனம்’ (WHO - World Health Organization), `ஒரு நாளைக்கு அதிகபட்சமாக நான்கு முதல் ஆறு கிராம் மட்டுமே உணவில் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்’ என்று பரிந்துரைக்கிறது. எனவே, அப்பளம், ஊறுகாய் போன்ற உப்பு அதிகமுள்ள உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
உடற்பயிற்சி

தினமும் 40 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது. ஆனால், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி மேற்கொள்ளக் கூடாது.காலை நேரத்தில் காபி அல்லது டீ குடித்துவிட்டு, நடைப்பயிற்சி செய்யலாம்.

தினமும் நடப்பதால் ரத்த அழுத்தம் குறையும். சர்க்கரை, கொலஸ்ட்ராலின் அளவு குறையும். உடல் எடை கட்டுக்குள் வரும். மலச்சிக்கல் ஏற்படாது. நன்றாகத் தூக்கம் வரும். எலும்புகளின் அடர்த்தியும் அதிகமாகும். நடைப்பயிற்சி மட்டுமல்லாமல், சேரில் உட்கார்ந்தபடி இடது, வலது, கீழே, மேலே எனக் கழுத்தை அசைக்க வேண்டும். தோள்களைச் சுழற்றுவது, குனிந்து நிமிர்வது போன்ற எளிமையான உடற்பயிற்சிகளையும் செய்யலாம்.
சூரிய ஒளி படாமல் வீட்டிலேயே இருப்பதால், வயதானவர்களுக்கு வைட்டமின் டி, எட்டு, ஒன்பது, பத்து என்ற அளவிலேயே இருக்கும் (சரியான அளவு முப்பதுக்கு மேல் இருக்க வேண்டும்). சூரிய ஒளி நம் உடலில் பட்டால் மட்டுமே வைட்டமின் டி உற்பத்தியாகும். 

வைட்டமின் டி உதவியால்தான் எலும்புகள் கால்சியத்தை உட்கிரகித்துக் கொள்கின்றன. வைட்டமின் டி இல்லாமல்போனால், கால்சியம் சத்துக்கான மாத்திரைகளை எவ்வளவு சாப்பிட்டாலும் எலும்புகளால் கால்சியத்தைக் கிரகித்துக்கொள்ள முடியாது. எனவே, தினமும் காலை ஏழு முதல் ஏழரை மணிவரை, சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.
தடுப்பூசிகளைத் தவற விடாதீர்கள்

குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாத்தா பாட்டிக்கும் தடுப்பூசி முக்கியம். 60 வயதுக்குப் பிறகு முதுமை மட்டுமல்லாமல், நோய்களுக்காகச் சாப்பிடும் மருந்துகள், போதிய சத்துணவு இல்லாமல் போவது போன்றவற்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே, கட்டாயம் நிமோனியா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

நிமோனியா என்பது ஒருவகை பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோய். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை இந்த நோய் எளிதில் தொற்றிக்கொள்ளும். பொது இடங்களில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமினாலோ, தும்மினாலோ அவரிடமிருந்து மிகச் சுலபமாக வயதானவர்களை இந்த நோய் தொற்றிக்கொள்ளும். நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் இந்தத் தொற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம்.
வைரஸ் காய்ச்சல் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு வருடமும் `இன்ஃப்ளூயன்சா வைரஸ்’(Influenza Virus) தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஆஸ்துமா நோயாளிகள் இந்த ஊசியைப் போட்டுக்கொண்டால் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.

ஓய்வுக்காலத்தில் மகிழ்ச்சி!

`முதுமையின் எதிரி தனிமை’ என்பதால் தனியாக இருக்காதீர்கள். ஏதாவது பகுதிநேர வேலையைத் தேடிக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த ஓர் அமைப்பில் சேர்ந்து செயல்படுங்கள். நண்பர்களுடன் கடற்கரை, பூங்கா என்று மகிழ்ச்சியாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
பேரப்பிள்ளைகளுடன் சிரிப்பும் விளையாட்டுமாக வாழ்க்கையைக் கொண்டு செல்வது கூடுதல் சிறப்பு. அதுமட்டுமல்ல, முதுமையில் கிடைக்கும் தனிமையை அனுபவிக்கவும் பழகிக்கொள்ளுங்கள். 

தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களில், உங்களின் பழைய நினைவுகளை அசைபோடுங்கள். தியானம், பிராணாயாமம் போன்ற பயிற்சிகளை நிபுணர் ஒருவரிடம் கற்றுக்கொண்டு முறைப்படி செய்யலாம்.

`வயதானதும் மனம் கனிய வேண்டும்’ என்பதற்கேற்ப மற்றவருக்கு நன்மை செய்து மகிழுங்கள். உங்களால் முடிந்த உதவிகளை, சேவையை மற்றவர்களுக்குச் செய்யுங்கள். பரந்த மனதுடன் பிறரை அணுகுங்கள். மனதில் நல்லவை நிறையும்போது, முதுமையிலும் நீங்கள் இளமையாக உணர்வீர்கள்.
உங்கள் நிதி வசதியை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்?

நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்கும்போதே உயில் எழுதி வைத்துவிடுங்கள். அப்போதுதான் தேவையற்ற குழப்பங்கள், சச்சரவுகளைத் தவிர்க்கலாம். அதேபோல, 50 வயதிலிருந்தே ஓய்வுக்காலத்தில் பயன்படுத்திக்கொள்ள வசதியாக குறிப்பிட்ட அளவு பணத்தை மாதந்தோறும் சேமிக்கத் தொடங்குங்கள். இதுபோன்ற சேமிப்பு உங்கள் ஓய்வுக்காலத்தை நிம்மதியாகக் கடக்க உதவும்.

60 வயதுக்கு மேல் யாருக்கு என்ன நோய் வேண்டுமானாலும் வரலாம் என்பதால், கணவன், மனைவி இருவருமே மறக்காமல் `ஹெல்த் இன்ஷூரன்ஸ்’ எடுத்துவிடுங்கள். அப்போதுதான், திடீரென உடல்நிலை சரியில்லாமல்போகும்போது, இன்ஷூரன்ஸ் கைகொடுக்கும்.
வயதான காலத்தில் வீடு, மனை, இடம் வாங்க முதலீடு செய்யாமல் சுலபமாக மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் வங்கியில் பணத்தைச் சேமியுங்கள். அப்போதுதான் கணவன், மனைவி இருவரில் யாருக்காவது ஒரு பிரச்னை என்றால் மற்றவர் தடுமாறாமல் கையிலிருக்கும் பணத்தைக்கொண்டு சமாளிக்க முடியும். அதேநேரத்தில் அளவாகப் பணம் வைத்துக்கொள்ளுங்கள். அதிகப் பணமும் நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உங்கள் சொந்தக் கால்களில் நிற்கப் பழகுங்கள். உங்களால் முடியும்பட்சத்தில் உங்கள் வேலைகளை நீங்களே செய்துகொள்ளுங்கள். ஆண்கள்... தண்ணீர், உணவு என்று ஒவ்வொன்றுக்கும் மனைவியை ஏவல் செய்யாதீர்கள். உங்களைப்போலவே அவருக்கும் வயதாகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். 

மனைவி என்பவள் உங்களுடைய தோழியே தவிர, அவர் உங்களின் வேலையாள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதுபோல தாமரை இலை மேல் தண்ணீர்போல இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். அதீத ஒட்டுதலோ, பிரிவோ வேண்டாம். குறிப்பாக, மரண பயம் வேண்டவே வேண்டாம். அது உங்கள் மன நிம்மதியை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். ஒவ்வொரு நாளையும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் எதிர்கொள்ளுங்கள்.
கடந்த காலம் என்பது உடைந்துபோன பானை
எதிர்காலம் என்பது மதில்மேல் பூனை
நிகழ்காலம் மட்டுமே நிஜம்!


அதனால் நிகழ்காலத்தைக் கொண்டாடுங்கள்.ஹேப்பி ரிட்டயர்மென்ட் டேஸ்!

நாற்பது வயதைக் கடந்துவிட்டால், இனிமேல் வாழ்க்கையே அவ்வளவுதான் என்ற மனோபாவம் நம்மில் பலருக்கு ஏற்பட்டுவிடும். அதிலும் வேலையிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டால், வாழ்வின் கடைசி கட்டத்துக்கே வந்துவிட்டது போன்ற உணர்வும் ஏற்படும். உண்மையில், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கும் நாள்கள் அற்புதமானவை. அவற்றைக் கொண்டாடி மகிழ வேண்டும், ரசிக்க வேண்டும், புதிதாகப் பிறந்ததுபோலத் துள்ளித் திரியவேண்டும்.

ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் அனுபவிக்க ஆலோசனைகளை வழங்குகிறார் குடும்ப நல மருத்துவர் மற்றும் சர்க்கரைநோய் நிபுணர் எஸ்.மீனா.

ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யலாம்? 

பணி ஓய்வுக்குப் பிறகு எந்த ஊரில் அல்லது எந்த இடத்தில் வசிக்கப் போகிறோம் என்பதை வேலையிலிருக்கும்போதே திட்டமிடுங்கள். ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகு அங்கிருந்து உங்கள் வாழ்க்கையின் செகண்ட் இன்னிங்ஸை மகிழ்ச்சியுடன் தொடங்குங்கள்.
பணி ஓய்வு பெற்றவர்களை மிகுந்த கவலைக்குள்ளாக்குவது, இதுவரை வந்துகொண்டிருந்த சம்பளம் இனிமேல் கிடைக்காது என்பதே. அதுமட்டுமல்ல, `வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்க என்னால் முடியவே முடியாது’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் மாற்று வழி ஒன்று இருக்கிறது. உங்களுக்குப் பிடித்த பகுதி நேர வேலை ஒன்றைத் தேடிக்கொள்ளுங்கள். இதன் மூலம் பணமும் கிடைக்கும், பிஸியாகவும் இருப்பீர்கள்.

நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். வாட்ஸ்அப்பில் `ரிட்டயர்மென்ட் குரூப்’ ஒன்றைத் தொடங்கி, உங்களின் நண்பர்களை அதில் ஒன்றிணையுங்கள். கடி ஜோக்ஸ், நகைச்சுவைகள், தன்னம்பிக்கைச் செய்திகள், வீடியோக்கள், அரசியல், ஆன்மிகம் என்று ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளுங்கள். அவற்றைப் பார்த்து, படித்து, ரசித்து மகிழுங்கள்.
வெறும் வாட்ஸ்அப் பகிர்வுகளோடு நின்றுவிடாமல், அவ்வப்போது எல்லோரும் நேரில் சந்தித்துப் பேசுங்கள். பிரபலமான நகைச்சுவை வசனங்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு, உங்கள் நண்பர்களைக் கலாயுங்கள். உங்களின் முதல் காதல், முதல் மழை, முதல் முத்தம் என்று எல்லாவற்றையும் ரீவைண்டு செய்து பேசுங்கள். முடிந்தால் ஹோட்டல், பிக்னிக், ஆன்மிகப் பயணம் என்று வாழ்க்கையை அனுபவியுங்கள்.
வயதாகிவிட்டால் எல்லோரும் ஆன்மிகவழியில் சென்றுவிட வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், ஆன்மிகத்தில் விருப்பமுள்ளவர்கள் ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகு, நிறைய பக்திச் சேனல்களைப் பார்க்கலாம். பஜனைகளில் கலந்துகொண்டு லயிக்கலாம். ஆலயங்களில் `க்யூ’வை ஒழுங்குபடுத்துவது, பிரசாதம் வழங்குவது என்று உங்களால் முடிந்த சேவைகளைச் செய்யலாம். 

பைபிள், குர் ஆன், திவ்வியப் பிரபந்தம், திருப்புகழ் போன்ற ஆன்மிகப் புனித நூல்களில் உங்களுக்குப் புலமையிருந்தால், அவை குறித்த வகுப்புகளை எடுக்கலாம். எதிர்மறைச் சிந்தனைகளைத் தரும் சீரியல்களைப் பார்க்காதீர்கள். அதற்குப் பதிலாக உங்கள் பேரப்பிள்ளைகளுடன் ஜாலியாக நேரத்தைச் செலவிடுங்கள்.
`கதை சொல்லிகள்’ அருகிக்கொண்டிருக்கும் காலமிது. அதனால், உங்கள் பேரப்பிள்ளைகளுக்காக நீங்கள் கதை சொல்லிகளாக அவதாரமெடுங்கள். நீங்கள் கதை சொல்வதில் தேர்ந்தவராக இருந்தால், வாட்ஸ்அப் மூலம் கதைகளை மற்றவர்களுக்கு அனுப்பலாம். ஒருவேளை வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் உங்கள் கதைகள் அதிகமாகப் பகிரப்பட்டால், அதையே உங்கள் முழுநேர வேலையாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருந்த உங்களுக்கு இப்போது எக்கச்சக்கமாக நேரம் கிடைக்கும். கீ போர்டு, பியானோ, வாய்ப்பாட்டு, ஓவியம், யோகா, கம்ப்யூட்டர், தையல், ஃபேஷன் டிசைனிங் என்று உங்களுக்குப் பிடித்த ஒரு பயிற்சியில் சேருங்கள். புதிய சூழல் உங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ளும். மேலும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதால் நீங்கள் இளமையாக உணர்வீர்கள்.
கூடுதலாகப் புத்தக வாசிப்பையும் கையில் எடுங்கள். முடிந்தால் கிண்டில் (Kindle - மின்னூல் வாசிப்புக் கருவி) ஒன்றை வாங்குங்கள். உங்கள் மகன் அல்லது மகளிடம் உங்களுக்குப் பிடித்தப் புத்தகங்களை, டவுண்லோடு செய்துதரச் சொல்லுங்கள். அதன் பிறகு ஜெயகாந்தன், கிரேஸி மோகன், சுந்தர ராமசாமி எனப் பல எழுத்தாளர்களின் எழுத்துகளும் உங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிவிடும்.
உங்களுக்கு அருகிலிருக்கும் குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக உங்கள் நேரத்தைச் செலவழியுங்கள். குழந்தையோடு குழந்தையாக நீங்களும் குதூகலியுங்கள். டோரா புஜ்ஜி, ஸ்பைடர்மேன், சோட்டா பீம் என்று அவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு கார்ட்டூன்களைப் பாருங்கள். உங்கள் மனம் முழுவதும் குழந்தைத்தன்மை வியாபிக்க ஆரம்பிப்பதை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்.

ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகான வாழ்க்கையை `கடைசிக் காலம்’ என்பதுபோல் நினைத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்வதற்குக் கிடைத்த பொன்னான நேரம் என்று நினைத்து மகிழுங்கள். குறிப்பாக, உங்கள் வாழ்க்கைத்துணையுடன் உங்கள் காதல் வாழ்க்கையை மறுபடியும் தொடங்குங்கள். கைகோத்தபடிக் கடற்கரையில் நடப்பது, ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து மணிக்கணக்கில் பேசுவது, ஒருவருக்காக மற்றவர் சின்னச் சின்ன ஆச்சர்யப் பரிசுகளைக் கொடுப்பது என்று உங்கள் ரொமான்ஸ் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகு ஆரோக்கியம் பேணுவது எப்படி?

`நான் இதுவரை ஹாஸ்பிடல் பக்கமே போனதில்லை. எனக்கு எதுவும் வராது’ என்று அலட்சியமாக இருக்காதீர்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது வருடத்துக்கு ஒருமுறையோ முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் மாதம் ஒரு முறையும், சர்க்கரை நோயாளிகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், கொலஸ்ட்ரால், தைராய்டு பிரச்னைகள் இருப்பவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். சர்க்கரை நோயாளிகளுக்கு சைலன்ட் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு அதிகமுள்ளதால், வருடத்துக்கு ஒருமுறை `எக்கோ டெஸ்ட்’ பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
அதுமட்டுமல்ல, உங்களது உடல் பிரச்னைகள் குறித்து முதலில் நீங்கள் தெளிவாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வெளியே எங்கு சென்றாலும், உங்களின் உடல்நிலை குறித்த தகவல்கள் மற்றும் நீங்கள் வழக்கமாகச் சந்திக்கும் மருத்துவரின் பெயர், அவரது தொலைபேசி எண் போன்றவற்றை ஓர் அட்டையில் எழுதி உங்கள் சட்டைப் பையிலோ அல்லது கழுத்திலோ ஐ.டி கார்டுபோலத் தொங்கவிட்டுக்கொள்வது நல்லது.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடாமல், வெறும் வயிறோடு எங்கும் செல்ல வேண்டாம். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் ஒரு மாத்திரை உட்கொள்வார்கள். சிலர், அரை மணி நேரம் கழித்துத்தானே சாப்பிட வேண்டும்... அதற்குள் இந்த வேலையை முடித்துவிடலாம் என்று வெளியே சென்றுவிடுவார்கள். ஆனால், அந்த வேலை முடிய தாமதமானால், வெறும் வயிற்றில் மாத்திரை உட்கொண்டதன் விளைவாக, உடலில் சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்பட்டுவிடும். மாத்திரை மற்றும் உணவை முறையாக உட்கொண்ட பிறகு வெளியே செல்வது நல்லது.
குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் வெளியே எங்கு சென்றாலும் கையில் பிஸ்கட், சாக்லேட், கடலைமிட்டாய் என எதையாவது எடுத்துச் செல்லவேண்டியது அவசியம். அப்போதுதான், உடலில் சர்க்கரை அளவு குறைந்து, கைகால் நடுக்கம், படபடப்பு, மயக்கம் போன்றவை ஏற்பட்டால் உடனடியாகக் கையில் வைத்திருக்கும் இனிப்பைச் சாப்பிட்டு மயக்கத்தைத் தவிர்க்கலாம்.
அதேபோல, சர்க்கரை நோயாளிகள் எப்போதும் கையில் சர்க்கரை அளவைக் கண்டறிய உதவும் `குளூக்கோ மீட்டரை’ வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் உடல்நிலையில் ஏதாவது அசௌகர்யம் இருந்தால், சட்டென்று குளுக்கோ மீட்டர் மூலம் சர்க்கரை அளவைப் பார்த்துக்கொள்ள முடியும். அதன் பிறகு, தேவையென்றால் மருத்துவரைச் சந்திக்கலாம். 

கணவன், மனைவி மட்டுமோ அல்லது தனியாகவோ வாழவேண்டிய சூழலில் இருந்தால், அக்கம்பக்கத்தினரிடம் நட்பாகப் பழகுவது நல்லது. முடிந்தால், தினமும் ஒருமுறையாவது அவர்களை நேரில் சந்தித்துப் பேசி அளவளாவுங்கள். அப்போதுதான், நீங்கள் ஒருநாள் அவர்களைச் சந்திக்காமல் விட்டால்கூட, `தினமும் வருவாங்களே... இன்னிக்கு ஏன் வரலை?’ என்ற உங்கள் மேலுள்ள அக்கறையுடன் வீட்டுக்கு வந்து என்ன காரணமென்று விசாரிப்பார்கள்.
அதேபோல, வீட்டில் தனியாக வசிக்கும் ஓய்வு பெற்றவர்கள், அவசரமென்றால் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது போன்ற தகவல்களை, ஓர் அட்டையில் பெரிய எழுத்துகளில் எழுதி வீட்டின் ஹாலில் மாட்டிவைக்க வேண்டும். அப்போதுதான் உதவிக்கு வரும் நபர்கள், அந்த அட்டையைப் பார்த்து, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் கொடுப்பார்கள்.
வீட்டில் நீங்கள் மட்டும் தனியாக இருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் வீட்டின் ஸ்பேர் சாவியை மிகவும் நம்பகமான பக்கத்து வீட்டில் வசிப்பவரிடம் கொடுத்து வைப்பது நல்லது. அப்போதுதான், இரவு நேரத்தில் உங்களுக்குத் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனால், நீங்கள் போன் மூலமாகத் தகவல் கொடுத்து, பக்கத்து வீட்டுக்காரர் ஸ்பேர் சாவி மூலம் உங்கள் வீட்டின் கதவைத் திறந்து, உங்களுக்கு உதவ எளிதாக இருக்கும்.

தள்ளாடும் வயது இல்லை என்றாலும், கொஞ்சம் கவனமுடன் செயல்பட்டால் பிரச்னைகளில்லாமல் வாழலாம். உதாரணமாக, உங்கள் வீட்டு பாத்ரூம் மற்றும் டாய்லெட்டின் தரை வழுவழுப்பாக இல்லாமல், சொரசொரப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இதனால், பாத்ரூமில் வழுக்கி விழும் பிரச்னையைத் தவிர்க்கலாம்.
எந்த மாதிரியான உணவுமுறைகள் நல்லவை?

`மூன்று வேளை உணவு’ என்ற வழக்கம் இந்த வயதுக்குச் சரிவராது. உணவை ஐந்து வேளையாக பிரித்துச் சாப்பிடுங்கள். காலை 9 மணிக்குள் டிபன்;

11 மணிக்கு மோர், சாலட், சுண்டல்; மதியம் காய்கறி, கீரைகளுடன் கூடிய உணவு; மாலையில் தேநீர் மற்றும் க்ரீம் இல்லாத பிஸ்கட்; இரவு உணவு என்று ஐந்துவேளையாக பிரித்துச் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, இரவு உணவை ஏழரை மணிக்குள் முடித்துவிடுவது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் எந்த உணவைச் சாப்பிடுவது என்ற குழப்பம் எல்லோருக்கும் இருக்கும். கோதுமைச் சப்பாத்தி, சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவு என்ற பொதுக் கருத்து இருக்கிறது. ஆனால், கோதுமை வட இந்தியர்களுக்கான உணவு. அவர்களது சீதோஷ்ணத்துக்கு அவர்கள் கோதுமை சாப்பிட்டால் அது எளிதில் செரிமானமாகும். ஆனால், நம் ஊருக்கு கோதுமை சரிப்பட்டு வராது. 

சர்க்கரை நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடலாம். ஆனால், அளவு குறைவாக இருக்க வேண்டும். சாதத்தின் அளவைக் குறைத்து காய்கறிகள், கீரைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். தோசை, அடை, உப்புமா போன்ற எந்த உணவையும் திணறத் திணறச் சாப்பிட வேண்டாம். சற்று குறைவாகச் சாப்பிடுவதே நல்லது. அதேபோல, எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது.
தினமும் ஒரு சிறிய டீஸ்பூன் அளவு நெய்யை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ரீஃபைண்டு எண்ணெயில் சமைப்பதற்குப் பதிலாக, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெயில் சமைப்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ஆனால், உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதாகச் சொல்லிக்கொண்டு சிலர் எண்ணெய் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பார்கள். அதேநேரத்தில் நம் உடல் மூட்டுகள் சுலபமாக இயங்க எண்ணெய் அத்தியாவசியம் என்பதால், எண்ணெயை அளவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

தினசரி 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெறும் தண்ணீராக அருந்துவது சிரமமென்றால், இளநீர், பழச்சாறு, மோர் குடிப்பது நல்லது.

சிறுநீரகப் பிரச்னை, இதயம் சுருங்கி விரிவதில் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர் அனுமதிக்கும் அளவில் தண்ணீரை அருந்தலாம்.

உடல் உறுதிக்கு என்ன செய்ய வேண்டும்?

*
 தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை கட்டாயம் நடக்க வேண்டும்.

*
 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை தியானம் செய்யலாம்.

*
 யோகாவை முறையாகக் கற்றுக்கொண்டு, தினசரி செய்து வரலாம். குறிப்பாக, மூச்சுப் பயிற்சி மிகவும் நல்லது.

ஓய்வு பெறும் வயதில்தான் `ஆர்த்ரைடிஸ்’(Arthritis) எனப்படும் மூட்டுவலிப் பிரச்னை அதிகமாக உண்டாகும். அதனால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதுமட்டுமல்ல, மூட்டுவலிப் பிரச்னை உள்ளவர்கள் இந்தியன் டாய்லெட்டைப் பயன்படுத்தினால், மூட்டுவலி அதிகமாகும். எனவே, வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்துவது நல்லது. மூட்டுவலி இல்லையென்றாலும்கூட, 60 வயதுக்கு மேல், இந்தியன் டாய்லெட்டைத் தவிர்ப்பது மூட்டுகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது.