Thursday, 26 January 2017

அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில், கொல்லூர் - (கர்நாடகா)


மூலவர்: மூகாம்பிகை

தீர்த்தம்: அக்னி, காசி, சுக்ள, மது, கோவிந்த, அகஸ்தியர், அர்ச்சனை குண்டு

பழமை: 2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: கொல்லாபுரம்

ஊர்: கொல்லூர்

பாடியவர்– ஆதி சங்கரர்

🅱 திருவிழா:🅱
 
👉🏾 பங்குனி உத்திரத்தில் கொடியேற்றி மூலநட்சத்திரத்தில் தேர்த்திருவிழா. இந்த திருவிழாவின் போது மூகாசுரனுக்கும் விழா எடுக்கப்படுகிறது.

 👉🏾 நவராத்திரி, தீபாவளி. கொல்லூர் அன்னை மூகாம்பிகைக்கு வருடத்தில் நான்கு திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடத்தப்படுகின்றன.

👉🏾 ஆனி மாதத்தில் வரும் அன்னையின் ஜெயந்தி விழா, ஆடி மாதத்தில் வரும் அன்னை மகாலட்சுமியின் ஆராதனை விழா, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழா, மாசி மாதத்தில் வரும் மகா தேர்த்திருவிழா ஆகியன.

👉🏾 சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகை சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி பக்தர்களின் தரிசனத்திற்காக வெளியே பவனி வருகிறாள்.
 
🅱 தல சிறப்பு:🅱

🍄 பேரருள் புரிந்து, புவனங்களைஎல்லாம் காக்கும் அன்னை பராசக்தி தேவி, திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களுள் ஒன்று, கொல்லூர்.  இத்தலம் அமைப்பில் ஸ்ரீ சக்கரத்தை ஒத்துள்ளது.

🌵 கொல்லூர் என்னும் இத் தலத்துக்குக் " கோபுரம் " என்னும் பொருள் உண்டு. பழங்காலத்தில், இத் திருத்தலம் "மகாரண்ணியபுரம்"  என்னும் திருப்பெயரால் அழைக்கப்பட்டது.
 
🌵 ஆதிசங்கரர் முதன் முதலில் இங்கு வந்தபோது கோல மகரிஷி என்பவர் வழிபட்ட சுயம்பு லிங்கம் மட்டுமே இத்தலத்தில் இருந்தது. இந்த லிங்கத்தில் அம்பாள் அரூபமாக அருள்பாலிப்பதை உணர்ந்த அவர், அங்கிருந்த மேடையில் அமர்ந்து தியானம் செய்வார்.

🌿 அம்பாள் மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி கொடுத்துள்ளார். அந்த உருவத்தை அடிப்படையாக கொண்டு மூகாம்பிகை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

🌷 இங்கு அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை மட்டுமே நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும்.

🌵 லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம். இதில் இடது புறம் பிரம்மா, விஷ்ணு, சிவனும், வலது புறம் சரஸ்வதி, லட்சுமி, பார்வதியும் அரூப வடிவில் அருள் பாலிப்பதாக ஐதீகம். இந்த லிங்கத்தை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

👉🏾 இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த கரம் இருக்கிறது.

👉🏾 பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் தொடர்ந்து பூஜை நடக்கும்.

👉🏾 அம்மனின் சக்தி பீடங்களில் இது அர்த்தநாரி சக்தி பீடம் ஆகும்.
 
🅱 திறக்கும் நேரம்:🅱
 
  காலை 5 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 
🅱 பொது தகவல்:🅱
 
🌷 கோயில் உள்பிரகாரத்தில் பஞ்சமுக கணபதி, சுப்ரமணியர், பார்த்தேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், சந்திரமவுலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், ஆஞ்சனேயர், மகாவிஷ்ணு, துளசி கிருஷ்ணன், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. இவர்களை வழிபாடு செய்த பின் தாய் மூகாம்பிகையை வழிபாடு செய்ய வேண்டும்.

🌷 சௌபர்ணிகை ஆற்றின் நீர்த்துறையின் கரையில் விநாயகர் கோயில் உள்ளது. இந்த ஆற்றில் நீராடி, விநாயகரை வழிபட்டுத் தான் அம்பிகை கோயிலுக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் வழியில், ஒரு காளி கோயில்  உள்ளது. இந்தக் காளி கோயிலினுள்ளே, ஆறு அடி உயரமுள்ள புற்று காணப்படுகின்றது. இக் காளி தேவியையும் வணங்கி, கீழ்த் திசையை நோக்கிச் சென்றால், அன்னை மூகாம்பிகை திருக்கோயிலின் மேற்கு வாசலை அடையலாம்.

🍄 மேற்கு கோபுர வாசல் எப்போதும் மூடப்பட்டிருக்கும். இந்தக் கோபுர வாசலின்  வழியாகவே, ஆதி சங்கரர் முதன் முதலில் திருக்கோயிலுக்குள் நுழைந்து  அம்பிகையைத் தரிசனம் செய்து, தியானம் செய்தார். இந்தப் புனிதத்துவத்தைக்  காக்கவே இந்த வாசல் எப்போதும் மூடப்பட்டிருப்பதாக ஐதீகம்.

🌷 இக் கோயிலின் கிழக்கு வாசல் வழியாக உள்ளே சென்றால், முன் மாடம் அமைந்துள்ளது. அதைக் கடந்து சென்றால், கம்பீரமாக நின்று அருள் புரியும் வீரபத்திரரைத் தரிசிக்கலாம்.

🍄 கோயிலின் தெற்குப் பிராகாரத்தில்,பத்துத் திருக்கரங்களுடன் விநாயகப் பெருமான் மூஞ்சூறு வாகனத்தின் மீது காட்சி தருவதைப் பார்க்கலாம். தென் கிழக்குப் பகுதியில்,  இரண்டு நாக உருவில் சுப்பிரமணியர், தென் மேற்கு மூலையில்,சந்திர மௌலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், பஞ்சமுக கணபதி முதலிய பல சந்நிதிகள் காணப்படுகிறன.

🍁 திருக்கோயிலின் கருவறையினுள்ளே, அன்னை மூகாம்பிகை தேவி தனது இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி, அருள் பொங்கக் காட்சியளிக்கின்றாள்.

🌵 இக் கோயிற் கருவறையின் விமானம் முழுவதும் தங்கத் தகடுகளால் இழைக்கப்பட்டுப் பிரகாசமாகக் காட்சியளிக்கிறது.

🌵 கருவறையினுள்ளே, அன்னை மூகாம்பிகை திரு உருவச் சிலையின்  முன்னே காணப்படும் சுயம்பு லிங்கமாகிய ஜோதிர்லிங்கம், சக்தியும், சிவனும்  இணைந்திருப்பதை உணர்த்துவது போல், ஒரு தங்க ரேகையால் இரு பிரிவுகளாகப்  பிரிக்கப்பட்டிருக்கின்றது. இது போன்ற சுயம்பு லிங்கத்தை உலகில் வேறு எத்தலத்திலும் காண முடியாது. உச்சி வேளையின் போது, சூரியனின் ஒளிக் கதிரைக் கண்ணாடி மூலமாகப் பிரதிபலிக்கச் செய்து, அந்த ஒளி லிங்கத்தின் மேல் விழ வைக்கும்போது, பக்தர்கள் அந்தத் தங்க ரேகை பளிச்சிடுவதைப் பார்த்துப்  பரவசமடைகின்றார்கள்.
 
🅱 பிரார்த்தனை:🅱
 
👉🏾 மூகாம்பிகை சரஸ்வதி அம்சமாக திகழ்வதால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்கிறார்கள்.
 
🅱 நேர்த்திக்கடன்:🅱
 
🌵 அம்மனுக்கு வஸ்திரம் சாற்றி சிறப்பு பூஜை செய்யலாம்.
 
🅱 தலபெருமை:🅱
 
🍄 அம்பிகை இக்கோயிலில் பத்மாசனத்தில், இரு கைகளில் சங்கு, கரத்துடன், காளி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள்.

🌷 ஐம்பொன்னால் ஆன காளி, சரஸ்வதி சிலைகள் மூகாம் பிகையின் இருபுறமும் உள்ளன. முத்தேவியருக்கும் தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது.

🍄 நவராத்திரி இக்கோயிலில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

🍁 ஆதிசங்கரர் இங்கு மூகாம்பிகையை, சரஸ்வதியாக பாவித்து வணங்கி, "கலா ரோகணம்' பாடி அருள் பெற்றார்.

🌿 சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அன்று குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்காக நடக்கும் வித்யாரம்ப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது.

🅱 சகலநோய் நிவாரணி:🅱

♻ ஒரு முறை ஆதிசங்கரர் மூகாம்பிகை நினைத்து இங்கு தவம் புரிந்து, எழ முயன்ற போது அவரால் முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்ததாகவும், அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கஷாயத்தை சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.

🍄 இத்தலத்திலிருந்து தான் ஆதி சங்கரர் "சவுந்தர்ய லஹரி' எழுதியுள்ளார்.

🅱 குடஜாத்ரி மலை:🅱

 🍁 கொல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் குடஜாத்ரி மலை இருக்கிறது. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து விழுந்த துண்டு பகுதி குடஜாத்ரி மலையானது என்பர். இதில் 64 வகை மூலிகைகளும், 64 தீர்த்தங்களும் உள்ளன. இந்த மலையில் கணபதி குகை, சர்வஞபீடம், சித்திரமூலை குகை உள்ளன. இந்த குகையில் ஆதிசங்கரரும், கோலமகரிஷியும் தவம் செய்ததாகவும், இவர்கள் தேவைக்காக அம்பாளே ஒரு நீர் வீழ்ச்சியை இங்கு தோற்றுவித்ததாகவும் கூறுவர்.

🅱 மாசி மகா தேர்த்திருவிழா வைபவம்:🅱

🌷 ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாகவும், மிகவும் விமரிசையாகவும் நடைபெறும். அன்னையின் புன்னகை பூத்துக்குலுங்கும் எழில் வதனமும், புவனத்தை ஈர்க்கும் வைர மூக்குத்தியும், அனைவரின் கவனத்தைக் கவரும் தங்கக் கிரீடமும், தாமரைத் திருவடிகளும், அருள் சுரக்கும் அழகிய நேத்திரங்களும், சிம்மத்திவ் மீதமர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் மூகாம்பிகையின் திருக்கோலத்தை காணக் கண்கோடி வேண்டும். திருத்தேர்விழாவை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து மகிழ்கிறார்கள். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள், மலைவாசிகள் கலந்து கொண்டு அம்பிகையின் அருளைப் பெறுகிறார்கள்.

🌷 பரசுராமரால் கர்நாடகத்தில் உருவாக்கப்பட்ட ஏழு முக்தி ஸ்தலங்களில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் ஒன்று.

🍁 இங்கு மூகாம்பிகை அம்மன் பத்மாசன தோற்றத்தில் காட்சி தருவது விசேஷம்..

🌵 சங்கொடு சக்கரம் ஏந்தி மகாவிஷ்ணுவைப் போல் ஜொலிப்புடன் ஸ்ரீசக்ர பீடத்தின் மேல் அமர்ந்து, ராஜபரிபாலனம் செய்து  இடர் களைந்து , கொடிய நோயையும் நீக்கும் வல்லமை கொண்டவள் அன்னை கொல்லூர் மூகாம்பிகை..!

🅱 ஆதிசங்கரருக்கு அருள்:🅱

🌷 ஆதிசங்கரர் 788ல் அன்றைய தமிழகத்தின் ஒரு பகுதியாகவும், இன்று கேரளா பகுதியாக உள்ள காலடி என்ற இடத்தில் சிவகுரு – ஆயாம்பாள் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார். கோவிந்த பாகவதரின் சீடராக தன் ஆன்மீக பயணத்தை தொடங்கினார். உபநீஷங்கள், பிரம்மசூத்திரம், அத்வைதம் என கற்று தேர்ந்த ஞானியவர். இந்து மதத்தை மென்மேலும் உயிர்பிக்க வந்தவர். பகவத்கீதை, விஷ்ணு அவதாரம் போன்றவற்றிற்கு விளக்கவுரை எழுதி வைத்தவர். இந்திய துணை கண்டம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை எழுச்சி பெற வைத்தவர். கிழக்கே பூரி, மேற்கே துவாரகா, வடக்கே பத்ரிநாத், தெற்கே சிருங்கேரி என நான்கு இடங்களில் அத்வைத மடங்களை நிறுவி தன் சீடர்களிடம் ஒப்படைத்தார்.

🍁 அவர் பயணம் மேற்கொள்ளும் போது கர்நாடகாவின் கொடச்சேரி மலையின் மீது தியானம் மேற்கொள்கிறார். தியானத்தின் பலனாய் அம்பாள் அருளாசி வழங்க அவர் முன் தோன்றும் போது அம்பாளை தினம் தினம் வணங்க வேண்டும், தங்களது உருவத்தை நான் கேரளா காலடியில் பிரஷ்டை செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என கேட்கிறார். அம்பாளுக்கே இருப்பிடம் விட்டு போக மனசில்லை. இருந்தும் பக்தன் கேட்டுவிட்டான். கேட்டதை வழங்குவதே அம்பாளின் நிலை. அதனால் மூகாம்பிகையம்மன் பதிலுக்கு அவரிடம் ஒரு வாக்குறுதி பெறுகிறார். அதாவது, நீங்கள் என் உருவத்தை கொண்டு செல்லுங்கள். ஆனால் நீங்கள் சென்று சேரும் இடம் வரை திரும்பி பார்க்ககூடாது. அப்படி திரும்பினாள் அந்த இடத்திலேயே என்னை பிரஷ்டை செய்துவிட வேண்டும் என்கிறார். ஆதிசங்கரரும் அதை ஏற்று அமபாளின் உருவம் கொண்ட சிலையுடன் கொடச்சேரி மலையில் இருந்து அம்பாளை கைகாளால் தாங்கிக்கொண்டு பக்தியுடன் இறங்கி வருகிறார். மலையின் அடிவாரம் வந்தபோது அம்பாள் தனது கொலுசை அசைக்க அதில் வந்த சத்தத்தை கேட்டு ஆதிசங்கரர் திரும்பி பார்க்கிறார். திரும்பி பார்த்ததால் அம்பாளுக்கு தந்த வாக்குப்படி அந்தயிடத்திலேயே அம்பாளை பிரஷ்டை செய்கிறார். அந்தயிடம் கொல்லப்புறா என்கிற கொல்லூராகும்.

🌷 ஆதிசங்கரரால் பிரஷ்டை செய்யப்பட்ட அந்த சிலையே தற்போதும் உள்ளது. அழகும், அமைதியும் கொண்டயிடத்தில் சாந்தமான கோலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் மூகாம்பிகா. மூன்று கண்கள் கொண்டவளாக காட்சியளிக்கும் அம்பாள் காணக்கிடைக்காத உருவம்மது. பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்க தூண்டும் அன்பு கலந்த சாந்த முகம்மாக காட்சியளிக்கிறாள்.

🅱 சவுபர்னிக்கா:🅱

🍄 கோயிலுக்கு மேற்கே காலபைரவர் மற்றும் உமாமகேஸ்வரி சந்நதிக்கு இடையே சவுபார்னிக்கா ஆறு ஓடுகிறது. கருடன் தனது தாயார் விருந்தாவின் துயரத்தை துடைக்க இங்கு வந்து தவம் செய்யும் போது, வசந்த ஆறு தேவை என கேட்டபோது அம்பாள் ஆசிர்வாதி நீரோடையை உருவாக்கி தந்தார். அதன்படி இந்த ஆறு கொடச்சாத்தரி மலை உச்சியில் இரண்டு கனவாய் வழியாக உற்பத்தியாகி மலை அடிவாரத்தில் உள்ள கொல்லூர் வந்து செல்கிறது எனக் கூறப்படுகிறது. கொல்லூர் வழியில் இந்த ஆறு வரும்போது இதன் பெயர் சம்பாரா என அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றில் 64  வகை மூலிகை தாவரங்கள் கலந்த நீர் இந்த ஓடையில் வருகின்றன. இதில் விடியற்காலை நேரத்தில் பக்தர்கள் நீராடினால் நோய்கள் அவர்களை அண்டாது, தீராத நோய்கள் குணமாகும் என்பது புராண நம்பிக்கை. வற்றாமல் அவ்வாறில் நீர் ஓடுகிறது.

🍄 தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. அதேபோல் கோயில் உள் பிரகாரம் முழுவதும் ஆற்று நீரால் கழுவப்படுகிறது.

🌵 வெள்ளிக்கிழமை தோறும் கோயில் வளாகத்தில் ஆயிரத்தெட்டு விளக்குகள் கொண்ட தீபமரத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. அதேபோல் கருவரையை சுற்றியும் அகல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள. அவையும் தீப ஒளியால் மின்னுகின்றன.

🌻 இரவு சந்நிதானம் அடைபடுவதற்கு முன் அம்பாள் கோயில் உள்ளே தங்க ரதத்தில் பிரகார வலா வருகிறாள். தேவலோக தேவர்கள் அதை தினமும் கண்டு வணங்குகிறார்கள் என்பது புராண நம்பிக்கை.

🍁 தினமும் இரவு சந்நிதானம் மூடும் நேரத்தில் சுக்கு நீர் வழங்கப்படுகிறது. அதை அருந்தினால் மனதில் தெம்பு வரும், நோய்கள் அண்டாது, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🅱 மூகாம்பிகை என அம்பிகை பெயர் பெற்றது எப்படி ?🅱

👉🏾 முன்னொரு காலத்தில் கம்ஹாசுரன் என்கிற அரக்கன் ஒருவன் இருந் தான். குடிமக்களுக்கும் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்து வந்த அவன், சிவனை நோக்கிக் கடும் தவமிருந்தான். சாகாவரம் வேண்டி அவன் தவம் இருப்பதை அறிந்த பராசக்தி, அவன் வரம் பெறுவதற்கு முன்பே, அவனை (மூகன்) ஊமையாக்கி விட்டாள். இதனால் அவன் ‘மூகாசுரன்’ என்று அழைக்கப்பட்டான். இந்த அசுரனை வதம் செய்ததால் அம்பிகை, ‘மூகாம்பிகை’ எனப் போற்றப்படுகிறாள்.
 
🅱 தல வரலாறு:🅱
 
குடசாத்ரி மலையிலிருந்து 64 நீர்வீழ்ச்சிகள் தனித்தனியாக உருவாகி, பின்னர் அவை ஒருங்கிணைந்து சௌபர்ணிகா நதியாக உருவெடுத்துப் பாய்கிறது. அந்தக் காலத்தில் இதன் கரையில் ஏராளமான முனிவர்கள் தவம் இருந்தனர். ஒரு முறை இந்தப் பகுதிக்குப் பாத யாத்திரையாக வந்தார் கோலன் என்கிற மகரிஷி. இதன் அமைதியான சூழல் அவருக்குப் பிடித்துப் போக, அங்கேயே ஆசிரமம் அமைத்துத் தங்கி இறைவனை நோக்கிக் கடுந் தவம் இருந்தார். (கோல மகரிஷி தங்கியதால் இந்தப் பகுதி கொல்லாபுரம் என்று அழைக்கப் பட்டு பின்னர் கொல்லூர் ஆனதாகத் தகவல்!)

கோல மகரிஷியின் தவத்தை மெச்சிய பரமேஸ்வரன் அவர் முன் தோன்றி, ‘‘பக்தா, வேண்டும் வரம் கேள்!’’ என்றார்.

‘‘ஈசனே, உலக மக்கள் யாவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். உலகில் மாதம் மும்மாரி பொழிய வேண்டும். பயிர்களும் உயிர்களும் செழிக்க வேண்டும். எல்லோரும் நிறைந்த ஆயுளுடனும், தேக சுகத்துடனும் வாழ வேண்டும். இவற்றைத் தவிர, எனக்கு வேறு எதுவும் வேண்டாம்!’’ என்று பதிலளித்தார் மகரிஷி.

ஈசன் மனம் மகிழ்ந்து, ‘‘கோல மகரிஷியே... இதோ, இந்தப் பாறையில் உனக்காக ஒரு லிங்கம் அமைக்கிறேன். இதை நீ தினமும் பூஜை செய்து வா!’’ என்று அருளினார்.

ஈசன் அருளால் அங்கு ஓர் அழகிய லிங்கம் தோன்றியது. அதைக் கண்ட கோல மகரிஷி இறைவனிடம், ‘‘ஈசனே! சக்தி தேவி இல்லாத சிவனை நாங்கள் எப்படி வழிபடுவது?’’ என்று வருத்தத்துடன் கேட்டார். அதற்கு இறைவன், ‘‘இந்த லிங்கத்தின் மத்தியில் உள்ள ஸ்வர்ண ரேகையைப் பார். இதன் இடப் பாகத்தில் பார்வதி, அறுபத்துநான்கு கலைகளுக்கும் தாயான சரஸ்வதி, செல்வங்களை அள்ளித் தரும் லட்சுமி ஆகிய மூவரும் அரூபமாக இருப் பார்கள். வலப் புறம் பிரம்மா, விஷ்ணு ஆகியோருடன் நானும் இருப்பேன்!’’ என்று கூறி மறைந்தார்.

ஈசன் அருளியவாறு ஸ்வர்ணரேகை ஜொலிக்கும் அந்த ஜோதி லிங்கத்தை, கோல மகரிஷி உட்பட மற்ற முனிவர் களும் பூஜித்து வந்தார்கள்.

இந்த நிலையில் மூகாசுரன், கோல மகரிஷி வாழும் இந்தத் தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, தன் அசுரர் குழாமுடன் அங்கு வந்து சேர்ந்தான். அங்கு வசிக்கும் அனைவரையும் துன்புறுத்தி மகிழ்ந் தான். பாதிக்கப்பட்டவர்கள், கோல மகரிஷியிடம் சென்று கண்ணீருடன் முறையிட்டனர். அனைவரையும் சாந்தப்படுத்திய அவர், மூகாசுரனை சம்ஹரிக்க வேண்டி அம்பாளை நோக்கிக் கடும் தவம் இருந்தார்.

அம்பாள், கோல மகரிஷியின் முன் தோன்றினாள். முனிவரின் முறையீட்டைத் தொடர்ந்து கோபக் கனலைக் கண்களில் தேக்கி, கையிலே திரிசூலம் ஏந்தி, தேவ கணங்களில் திறமை வாய்ந்த வீரபத்ரனைப் படைத் தளபதி யாக்கி மூகாசுரனோடு போர் புரிந் தாள் அம்பிகை. முடிவில் அசுரன் மடிந்தான். மூகாசுரன் மடிந்த பகுதி, கொல்லூரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள ‘மாரண ஹட்ட’ என்னும் இடமாகும்.

இந்து தர்மம் செழிக்க ஆதிசங்கரர், சக்தி வழிபாட்டைச் சொல்லும் ‘சாக்தம்’ உள்ளிட்ட ஆறு வகை வழிபாடுகளை வழிப்படுத்தினார். பாரத தேசம் முழுதும் புனித யாத்திரை மேற்கொண்ட அவர், கொல்லூருக்கு வந்தபோது மக்கள் அவரிடம், ‘‘ஸ்வாமி, தங்க ரேகை மின்னும் லிங்கத்தில் அம்பாள் அரூப வடிவில் இருக்கிறாள். ஆனால், மூகாம்பிகை அன்னையின் முகம் எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லையே!’’ என்று முறையிட்டனர்.

ஆதிசங்கரர் தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அம்பாள் அவருக்குப் பிரத்தியட்சமானாள். பத்மாசனத்தில் வீற்று, இரு கரங்களில் சங்கு, சக்கரம். மற்ற இரு கரங்களில், ஒரு கரம் பாதங்களில் சரண டையத் தூண்ட, மற்றது வரமருளி வாழ்த்தும் கோலத்தில் அன்னை தோற்றமளித்தாள். தன் முன் தோன்றிய அம்பாளின் உருவத்தை, தேர்ந்த ஸ்தபதியிடம் விவரித்து விக்கிரகம் செய்யப் பணித்தார் ஆதி சங்கரர். அதன்படி, அம்பாளின் அழகிய உருவம் பிரமிப்பூட்டும்படி உருவானது.

ஸ்வர்ண ரேகை லிங்கத்தின் பின்னால், மூகாம்பிகை திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் அடியில் ஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தச் சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் இருப்பதாக ஐதீகம். மூகாம்பிகை கோயிலின் பூஜை முறைகள் அனைத்தையும் ஆதிசங்கரரே வகுத்து அருளினார். இன்று வரை அவை சற்றும் மாறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீமூகாம்பிகை ஆதிசங்கரருக்குப் பிரத்தியட்சமான பிறகு, அவர் இயற்றியது தான் ‘சௌந்தர்ய லஹரி’ (சௌந்தர்யம்-அழகு; லஹரி- அலைகள்).

மூகாம்பிகை கோயிலில் ஆதிசங்கரர் அமர்ந்து தியானம் செய்த பீடம், அம்பாள் படைத் தளபதியாக நியமித்த வீரபத்திரர் சந்நிதி ஆகியவற்றையும் காணலாம். அம்பாளுக்கு நடக்கும் எல்லா பூஜையும் வீரபத்திரருக்கும் உண்டு. அன்னை மூகாம்பிகைக்கு இங்கு அபிஷேகம் கிடையாது. ஆரத்தி, புஷ்பாஞ்சலி மட்டுமே உண்டு. ‘‘இது ஸித்தி க்ஷேத்திரம் ஆகும்.

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை (கோயம்புத்தூர்)


மூலவர்: சுப்ரமணிய சுவாமி (மருதாசலமூர்த்தி)

உற்சவர்: மருதாசலமூர்த்தி

அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: மருதமரம்

 தீர்த்தம்: மருது சுனை

ஆகமம்: காமிகா

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: மருதவரை

ஊர்: மருதமலை

பாடியவர்கள்:அருணகிரிநாதர்.

🅱 திருவிழா:🅱

⛱ வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு 108 பால் குட அபிஷேகம் நடக்கிறது, தைப்பூசத்தை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது.

💦 பூசத்தன்று காலையில் திருக்கல்யாணம், மாலையில் தேர்த்திருவிழா நடக்கும். அன்று சுவாமி, யானை வாகனத்தில் எழுந்தருள்வார்.

🎀 தினமும் மாலையில் தங்க ரதத்தில் சுவாமி வலம் வருகிறார்.

🅱 தல சிறப்பு:🅱

⛄ இங்கு விநாயகர், முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள்.

 🅱 திறக்கும் நேரம்:🅱

🍁 காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

🅱 பொது தகவல்:🅱

🌷 இது சுமார் 837 படிகளுடன் அமைந்த மலைக்கோயில்.

🌿 வரதராஜப் பெருமாளுக்கு சன்னதி இருக்கிறது.

⛱ பாம்பாட்டிச்சித்தர் சன்னதி செல்லும் வழியில் சப்தகன்னியர் சன்னதி உள்ளது. ஆடிப் பெருக்கின்போது இங்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.

⛱ மலைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் நடுவே இடும்பன் சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரே புலி வாகனம் உள்ளது.

🅱 பிரார்த்தனை:🅱

🎀 திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் விநாயகர், முருகனை வேண்டி மரத்தில் மாங்கல்யக்கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக் கொள்கிறார்கள்.

💧 பாம்பாட்டி சித்தருக்கு அலங்காரத்துக்கு பயன்படுத்திய விபூதியை பிரசாதமாக தருகிறார்கள். நாக தோஷம், விஷப்பூச்சி கடிபட்டவர்கள் இந்த விபூதியை நீரில் கரைத்து சாப்பிட்டால் நோய் குணமாவதாக நம்பிக்கை. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விபூதியை உடலில் பூசிக்கொள்கிறார்கள்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

🌷 மன நிம்மதி வேண்டுபவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள் பாம்பாட்டி சித்தர் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி, வெண்ணிற மலர், இனிப்பான நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள்.

🅱 தலபெருமை:🅱

🌹 அர்த்தஜாம பூஜை விசேஷம் :🌹

⛱ மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது.

🎀 இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார்.

🌻 தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார்.

💦  தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்றுவித அலங்காரங்களுடன் காட்சி தருவார்.

♻ விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை, தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிகிறார்.

🍄 அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போது ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர்.

🍄 அருணகிரியாரால் பாடப்பெற்றவர் இவர். இத்தலம் "ஏழாம்படை வீடாக' கருதப்படுகிறது.

🅱 பாம்பாட்டி சித்தர் சன்னதி :🅱

⛱ மலைப் பாறைகளுக்கு மத்தியில் உள்ள குகையில் பாம்பாட்டிச் சித்தர் சன்னதி உள்ளது. வலது கையில் மகுடி, இடது கையில் தடி வைத்துள்ளார். அருகில் சிவலிங்கம், நாகர் இருக்கிறது.

🎀 முருகனுக்கு பூஜை முடிந்ததும், சித்தருக்கும் பூஜை செய்யப்படுகிறது.

🌵 பாம்பாட்டிச்சித்தர் தற்போதும் இங்கு முருகனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். தினமும் இவரது சன்னதியில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்து விடுகிறார்கள். மறுநாள் இந்த பால் குறைந்திருக்குமாம். சித்தர், இந்த பாலை முருகனுக்கு அபிஷேகித்து பூஜை செய்வதாக சொல்கிறார்கள்.

🅱 பாம்பு முருகன் :🅱

💧 பாம்பாட்டிச்சித்தர் சன்னதியிலுள்ள பாறையில் நாக வடிவம் இருக்கிறது. இந்த நாகத்தின் வடிவிலேயே பாம்பாட்டிச் சித்தருக்கு முருகன் காட்சி தந்தார்.

🌸 இந்த நாகத்தை முருகனாகவே பாவித்து வழிபடுகிறார்கள். இதன் பின்புறம் பீடம் போன்ற அமைப்பில் மூன்று வடிவங்கள் உள்ளது. இவற்றை சிவன், கணபதி, அம்பிகையாக கருதி பூஜை செய்கிறார்கள்.

⛄ பொதுவாக முருகன் தான் சிவன், அம்பாளுக்கு நடுவில் காட்சி தருவார். இங்கு விநாயகர், பெற்றோருக்கு மத்தியில் காட்சியளிப்பது விசேஷம்.

🅱 மருதாச்சல மூர்த்தி :🅱

🐚 மருத மரங்கள் நிறைந்தும், நோய் நீக்கும் மருந்து குணங்களை உள்ளடக்கிய மூலிகைகளைக் கொண்டதுமான மலையில் அருளுபவர் என்பதால் இங்கு முருகன், "மருதாச்சலமூர்த்தி' என்று அழைக்கப்படுகிறார்.

🌵 மருத மரமே இத்தலத்தின் விருட்சம்.

🍄 தீர்த்தத்தின் பெயர் "மருது சுனை'. இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது. மலையில் உள்ள ஒரு மருதமரத்தின் அடியில் இருந்து இந்த தீர்த்தம் உற்பத்தியாகி வருவதாக சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

🅱 ஆதி முருகன்:🅱

💦 புராதனமான சிவன் கோயில்களில் சிவன், சுயம்பு லிங்கமாக இருப்பார். ஆனால், இத்தலத்தில் முருகன் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானையும் சுயம்பு வடிவில் இருப்பது விசேஷம்.

♻ முருகனுக்கு பின்புறத்தில் பிளவு இருக்கிறது. வள்ளி உயரமாகவும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர். இந்த முருகனே இத்தலத்தின் ஆதிமூர்தியாவார். இவரது சன்னதி "ஆதி மூலஸ்தானம்' எனப்படுகிறது. இவருக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பின்பே, பிரதான முருகனுக்கு பூஜை நடக்கிறது.

🍄 கிருத்திகையில் இவருக்கு அதிகளவில் பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

🅱 பஞ்ச விருட்ச விநாயகர் :🅱

👉🏽 அரச மரத்தின் அடியில் விநாயகர் இருப்பார். இத்தலத்தில் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்கள் இணைந்து வளர்ந்திருக்க அதன் அடியில் விநாயகர் இருக்கிறார். இவரை, "பஞ்ச விருட்ச விநாயகர்' என்று அழைக்கிறார்கள்.

🌵 அருகில் முருகப் பெருமான், மயில் மீது அமர்ந்து, கையில் வேலுடன் காட்சி தருகிறார்.

🅱 சோமாஸ்கந்த தலம்:🅱

🎀 சிவன், அம்பாளுக்கு நடுவில் முருகன் இருக்கும் அமைப்பை, சோமாஸ்கந்த அமைப்பு என்பர். இங்கும் சிவன், அம்பாளுக்கு நடுவில் தான் முருகப் பெருமான் காட்சி தருகிறார்.

🌷 முருகத்தலம் என்றாலும் சுவாமிக்கு வலப்புறம் பட்டீஸ்வரர் சன்னதியும், இடப்புறத்தில் மரகதாம்பிகை சன்னதியும் உள்ளன. கோஷ்டத்தில் உள்ள முருகன் சிகிவாகனர் (மயிலை வாகனமாக உடையவர்), "சேனானி (படைத்தளபதி) என்ற பெயரில் அழைக்கப்படுவது விசேஷம்.

🅱 தோஷம் நீக்கும் விபூதி பிரசாதம்:🅱

🍄 பாம்பாட்டிச் சித்தருக்கு ஆடம்பர அலங்காரம் செய்யப்படுவதில்லை. விபூதிக்காப்பு செய்து, காவியுடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். மனிதர்கள் ஆடம்பரம் இல்லாமல், எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.

🅱 தம்பிக்கு உகந்த விநாயகர்:🅱

🌹 மருதமலை கோயிலுக்குச் செல்லும் வழியில் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னதி இருக்கிறது. இச்சன்னதியில் விநாயகர், சுயம்புவாக இருக்கிறார். யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு உடல் இல்லை. இவர், மலையிலுள்ள முருகன் சன்னதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி காட்சி தருவது விசேஷம். அருகில் மற்றொரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, பிரதான விநாயகருக்கு பூஜை நடக்கிறது. முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. எனவே இவரை, "தம்பிக்கு உகந்த விநாயகர்' என்றும் அழைக்கிறார்கள்.

🌸 மருதமலை சுப்பிரமணியரை தரிசிக்கச் செல்பவர்கள் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்.

🍁 மலைக்கோயிலுக்கு படி வழியாகச் செல்லும் பக்தர்கள் மட்டுமே இவரை வணங்கிச் செல்கிறார்கள். வாகனத்தில் செல்பவர்கள், இவரைக் கவனிக்காமல் சென்று விடுகிறார்கள். வாகனத்தில் வந்தாலும், அடிவாரத்திலுள்ள இவரை வணங்கிய பிறகே செல்ல வேண்டும் என்பது நியதி.

🅱 குதிரையில் வந்த முருகன் :🅱

🎀 முருகனுக்கு வாகனம் மயில் என்றாலும், ஒரு சில ஊர்களிலுள்ள கோயில்களில் அவரை விழாக்காலங்களில் குதிரையில் எழுந்தருளச் செய்வர். இதற்கு காரணம் என்ன தெரியுமா?

👉🏽 முற்காலத்தில் இக்கோயிலில் சில திருடர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பினர். அப்போது, முருகன் குதிரை மீதேறிச் சென்று அவர்களை மறித்து, பொருட்களை மீண்டும் கோயிலில் சேர்க்கச் செய்தார். அதோடு அவர்களை பாறையாக மாற்றி விட்டார். முருகன் குதிரையில் வேகமாகச் சென்றபோது, குதிரை மிதித்த இடத்தில் பள்ளம் உண்டானது. மலைப்பாதையில் உள்ள ஒரு பாறையில் இந்த தடம் இருக்கிறது. இக்கல்லை "குதிரைக்குளம்பு கல்' என்கிறார்கள். இம்மண்டபத்தில் முருகன், குதிரை மீது வந்த சிற்பம் இருக்கிறது.

🅱 தல வரலாறு:🅱

பாம்பாட்டிச் சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை, "பாம்பு வைத்தியர்' என்றே அழைத்தனர். ஒருசமயம் இவர், நாகரத்தின பாம்பு ஒன்றைத்தேடி மருதமலைக்கு வந்தார்.

 அப்போது சட்டைமுனிவர் அவருக்கு காட்சி தந்து, ""உடலுக்குள் இருக்கும் பாம்பை (குண்டலினி சக்தி) கண்டறிவதுதான் பிறப்பின் பயனாகும். அதைவிடுத்து காட்டில் திரியும் பாம்புகளை தேடி அலைவது வீண் வேலையே!'' என்றார். அவரது சொல் கேட்ட பாம்பாட்டிச்சித்தர் ஞானம் பெற்றார். உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்றமுடிவுக்கு வந்தார். முருகனை வணங்கி தியானத்தில் ஈடுபட்டார்.

 முருகன் அவருக்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார்.பக்தர்கள் இவரை, "மருதமலை மாமணி' என்றுசெல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.

🅱 பூஜைகள்:🅱

👉🏽 இத்திருக்கோவிலில் காமிகா ஆகம முறைப்படி தினசரி பூஜைகள் செய்யப்படுகிறது.

🙏🏽 காலையில் 6.00 மணிக்கு உஷக்காலம் (விஸ்வரூப தரிசனம்)

🙏🏽 காலை 9.00 மணிக்கு காலசந்தி

🙏🏽 மதியம் 12.00 மணிக்கு உச்சிக்காலம்

🙏🏽 மாலை 5.00 மணிக்கு சாயரட்சை

 🙏🏽  இரவு 8.30 மணிக்கு அர்த்தஜாமம் (இராகாலம்) ஆகிய பூஜைகள் செய்யப்படுகிறது.

🙏🏽 மதியம் 1.00 மணி முதல் 2.00 மணிவரை திருக்கோவில் காப்பீடுதல் செய்யப்படுகிறது.

🅱 சிறப்பம்சம்:🅱

🌿 அதிசயத்தின் அடிப்படையில்:

 இங்கு விநாயகர், முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள்.

தை அமாவாசை சிறப்புகள்..!



👉🏼 ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும் ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர்.

🍄 உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும் தட்சணாயன கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால் ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்தராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது.

🎀 அந்த மாதத்தில் வரும் அமாவாசையில் கடற்கரை தலங்களுக்குச் சென்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வணங்குதல் மானிடராக பிறந்த ஒவ்வொருவரினது ஆன்மிகக் கடமையாகும். எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

🍁 ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

🌷 தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே தை அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது.

✨ வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம் சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப் பெற்ற உண்மைகள். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் நமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் எல்லாம் தரவல்லவர்.

📍 சூரியனைப் “பிதுர் காரகன்’’ என்றும் சந்திரனை “மாதுர் காரகன்’’ என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும், சந்திரனும் பிதா, மாதாவாக வழிபடும் தெய்வங்களாகக் கருதப்படுகிறார்கள்.

📍 இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்த வர்கள் அமாவாசை, பூரண தினங்களில் வழிபடுகின்றனர். அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும் பவுர்ணமி தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின் பற்றிவரும் ஒரு வழக்கமாகும்.

🔥 அமாவாசை திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தை மாததிலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசை திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

⛱ தை மாதம் முருகனையும், அம்பாளையும் பூஜித்துக் கொண்டாடும் மாதம் என்றாலும் தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

🍄 பித்ருக்களுக்கான கடனைச் சரியாக நிறைவேற்றுவதால் பல நன்மைகள் உண்டாகும். பித்ருக்களுக்கு திதி தருவது பிண்டம் இடுவது, வழிபாடு செய்வது ஆகிய கடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிறது சாஸ்திரம். இக்கடனை அடைத்துவிட்டால் பிள்ளைகளின் வாழ்க்கை கலங்காதிருக்கும்.

👫 மென்மேலும் சிறக்கும். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ராமபிரானிடம் கூறி இருக்கிறார். ராமசந்திர மூர்த்தி, தசரத சக்கரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள்ளால் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார்.
அப்போது, சிவபெருமான் ராமரின் முன் தோன்றி, முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ததால் அனைத்துப் பாவங்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் தேடி வரும் என்றார் என்கிறது புராணச் செய்தி.

🎀 தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மன் அனுமதி தருவார். யம தூதர்கள் பித்ருக்களை சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு அழைத்து வருவார்கள். பித்ருக்களும் அவரவர் சந்ததியினர் இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்களாம். அதனால் தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம்.

♻ இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களைக் குளிரச் செய்து குடும்பத்தில் துர் சம்பவங்கள் நடக்காமல் காக்கும். பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூடக் கருணை காட்ட முடியாது. உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம்.

🍄 தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் தர இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து திதி செய்வர். ராமேஸ்வரம், திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் இத்தர்ப்பணத்தை அளிக்க மக்கள் கூடுவர்.

🙏🏽 கடவுள் பெயர்களில் உள்ள சூட்சும அர்த்தங்கள்..!!🙏🏽


👉🏼 இந்த உலகத்தில் பல்வேறு சொற்கள் பல்வேறு உருவங்களில் பல்வேறு நிலைகளில் உலவிக் கொண்டு வருகிறது.

🎀 மனிதன் பல்வேறு சொற்களின் அர்த்தங்களை அறிந்தும் - அறியாமலும் பயன்படுத்தி வருகிறான்.

🌵 பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு இருக்கும் கடவுளின் பல்வேறு பெயர்களுக்கு உள்ளே எவ்வளவோ அதி சூட்சும ரகசியங்கள் மறைந்து இருக்கின்றன.

🅱 கடவுளின் பல்வேறு பெயர்கள்:🅱

1. ஆதி
2. பகவன்
3. ஆண்டவன்
4. கடவுள்
5. இறைவன்
6. தெய்வம்
7. அநாதி
8. பிரம்மம்
9. பரம்
10. பூரணம்

👉🏼 இந்த பெயர்களுக்குள் மறைந்திருக்கும் சூட்சுமமான ரகசியங்கள் அர்த்தங்கள் என்ன என்பதையும் முடிந்த அளவு பார்ப்போம்.
══════════════
🅱 1. ஆதி:🅱

♻ ஆதி என்றால் முதல் நிலை , மூல நிலை, இருப்பு நிலை என்று பொருள்.

🎀 இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பு இருந்த நிலை - ஆதலால் முதல் நிலை என்றும்,
இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பதால் - மூல நிலை என்றும்,
இந்த உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்து ஆண்டு கொண்டு இருப்பதால் - இருப்பு நிலை என்றும்,
இந்த மூன்று அர்ததங்களையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு, இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு, அதாவது இயக்க நிலை தோன்றுவதற்கு முன்பு இருந்த காரணத்தினால் ஆதி என்றும் அழைக்கப் படுகிறது.

🅱 2. பகவன் :🅱

🌵 இலகு பகு என்று இரண்டு வடமொழிச் சொற்கள் உள்ளன இலகு - என்றால், சிறிய எளிய என்று பொருள் பகு - என்றால், பெரிய மதிப்புமிக்க என்று பொருள்.. பகு + அவன் = பகவன் அதாவது பகவன் என்றால் பெரியவன் மதிப்பு மிக்கவன் என்று பொருள். பகவன் என்பது இறைவன் மிகப் பெரியவன் என்பதைக் குறிக்கிறது. குடும்ப அளவில் பெரியவன் என்றால் எல்லோரையும் விட மூத்தவன் என்று பொருள். உலக அளவில் பெரியவன் என்றால் உலகில் உள்ள அனைத்திற்கும் மூத்தவன், மூலநிலை என்று பொருள் அந்த மூலநிலையைத் தான் பகவன் என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.
══════════════

🅱 3. ஆண்டவன் :🅱

🎐 ஆண்டு + அவன் = ஆண்டவன்

🎀 ஈண்டு என்றால் இங்கே குறிப்பிட்ட எல்லைக்குள் என்று பொருள்

👫 ஆண்டு என்றால் விரிந்த எல்லையில்லாத என்று பொருள்.

🍁 ஆண்டவன் என்றால் விரிந்தவன் எல்லையில்லாதவன் என்று பொருள்.

🎐 அதாவது இந்த உலகம் முழுவதும் விரிந்து பரந்து ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற நிறைந்து இருப்பவன்.

👉🏼 ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்க முடியாதவன்.

👉🏼 ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் குறிப்பிட்டுக் காட்ட முடியாதவன்.

👉🏼 ஒரு குறிப்பிட்ட உருவத்திற்குள் அடக்கி வார்த்தைகளில் சொல்ல முடியாதவன் என்று பொருள்.
══════════════
🅱 4. கடவுள் :🅱

🍁 உயிரின் படர்க்கை நிலையான மனம், உயிராக ஒடுங்கி, உயிரே பரமாக, கடவுளாக மாறுவதைத் தான் கடவுள் என்ற சொல் குறிப்பிடுகிறது.

🎀 கட + வுள் = கடவுள் அதாவது கடந்து கொண்டே உள்ளே செல். மனதை அடக்கிக் கொண்டே உள்ளே சென்றால் மனதின் அடித்தளமாக இருப்பு நிலையாக உள்ள இறைவனைக் கண்டு கொள்ளலாம் என்பதே கட + வுள் = கடவுள் என்பதாகும்.

🅱 5. இறைவன்:🅱

🌵 இறைவன் என்றால் அரசன், தலைவன், அனைத்தையும் தன்னுள் அடக்கி ஆள்பவன் என்று பொருள்.

🌿 அதாவது உலகில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்து - இயக்க நிலை மாறாமல் - இயக்க ஒழுங்கு மாறாமல் - இயக்க விதிப்படி - ஆண்டு கொண்டிருப்பவன் - என்று பொருள்.
══════════════
🅱 6.தெய்வம்:🅱

♻ உலகில் இரண்டு நிலைகள் தான் உள்ளது ஒன்று நிகழ்ச்சி நிலை இரண்டு பொருள் நிலை

👉🏼 1. எது அசைந்து கொண்டிருக்கிறதோ எது தன்னுடைய நிலையில் மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறதோ அது நிகழ்ச்சி நிலை எனப்படும்.

👉🏼 2. அசைவையும் மாற்றத்தையும் கழித்து விட்டால் எது எஞ்சி இருப்பாக இருக்கிறதோ அது தான் பொருள் நிலை.

🎐 உடலை நெருப்பில் போட்டால் சாம்பலாகிப் போகிறது சாம்பல் அணுவாகிப் போகிறது. அதைப் போல எல்லாப் பொருட்களும் ஆராய்ச்சிக்கு அகப்படாமல் அணு அணுவாகத் தேய்ந்து சுத்த வெளியில் கலந்து ஒன்றுடன் ஒன்றாகி நின்று விடுகிறது.

🎀 தேய்வம் என்ற சொல்லே மருவி தெய்வம் என்று ஆயிற்று.
══════════════
🅱 7. அநாதி:🅱

👧🏻 அநாதி என்றால் ஆதாரம் இல்லாதது என்று பொருள்

🍄 புத்தகம் மேசை மீது இருக்கிறது - மேசை பூமி மீது இருக்கிறது - பூமி வெட்டவெளியில் இருக்கிறது.

🌷 புத்தகத்திற்கு மேசை ஆதாரம் - மேசைக்கு பூமி ஆதாரம் - பூமிக்கு வெட்டவெளி ஆதாரம் - வெட்டவெளிக்கு ஆதாரம் என்ற ஒன்றும் இல்லாததால் - அது அநாதி ஆயிற்று.

👫 அநாதை என்ற சொல்லில் இருந்து தான் அநாதி என்ற சொல்லே வந்தது.

🎐 அநாதை என்றால் ஒரு பொருள் உருவாக காரணமானவர் யார் ? என்று தெரியவில்லை என்று பொருள்.

🌿 கடவுளை யார் உருவாக்கினார்கள்? என்று தெரியாத காரணத்தினால் அதாவது தாய் தந்தை இல்லாத காரணத்தினால் கடவுளை அநாதி என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்.

🅱 8. பிரம்மம் :🅱

👉🏼 பிரம்மம் என்றால் நித்தியமாயிருக்கின்ற பொருள்.

🎐 அதாவது அழிவில்லாதது என்று அர்த்தம்.

🎀 கடவுள் அழிவில்லாதவர் என்றால் கடவுளைத் தவிர உலகில் உள்ள மற்ற அனைத்து பொருள்களும் அழியக் கூடியது என்று அர்த்தம்.

🍁 அதனால் இந்த உலகையும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களையும் மாயை என்று சொல்லால் குறிப்பிடுகின்றனர். மாயை என்றால் அழியக் கூடியது என்று அர்த்தம்.
══════════════
🅱 9. பரம் :🅱

👉🏼 பரம் என்றால் நேர் இல்லாதது, உவமை இல்லாதது, அதற்கு இணை என்ற ஒன்று கிடையாது, அதற்கு மேல் ஒன்றும் இல்லாதது, என்று பொருள்.

🎀 இந்து மதத்தில் பரம் என்ற சொல் கீழ்க்கண்டவாறு மாற்றமடைகிறது.

பரம் + சிவன் = பரமசிவன்

பரம் + சக்தி = பராசக்தி

🍄 சிவன் என்று சொல்லப் படக் கூடிய இருப்பு நிலைக்கு மேல் வேறு ஒன்றும் (கடவுள்) இல்லாத காரணத்தினால், பரம் + சிவன் = பரமசிவன், அதாவது பரமசிவனுக்கு மேல் வேறு இருப்பு நிலை (கடவுள்) இல்லை என்று பொருள்.

🎐 சக்தி என்றால் இயக்க நிலை என்று பொருள். அதாவது இருப்பு நிலை அசைந்து, இயக்க நிலை உருவாகிய அந்த நிலையே முதல் இயக்கநிலை. அதற்கு முன்பு இயக்க நிலை கிடையாது என்பதைக் குறிப்பதே பரம் + சக்தி =பராசக்தி என்பதாகும்.

🎀 கிறிஸ்தவ மதத்தில் பரம் என்ற சொல் கீழ்க்கண்டவாறு மாற்றம் அடைகிறது.

பரம் + பிதா = பரம பிதா

பரம் + மண்டலம் = பர மண்டலம்

பரம் + லோகம் + ராஜ்யம் = பரலோக ராஜ்யம்

பிதா என்றால் தந்தை என்று பொருள்.

🎐 குடும்ப அளவில் கூறும் பொழுது தந்தை என்றால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து காப்பாற்றி வருபவர் என்று பொருள்.

♻ உலக அளவில் கூறும் பொழுது தந்தை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து காப்பாற்றி வரும் பரம பிதாவுக்கு மேல் வேறு யாரும் கிடையாது என்பதைக் குறிப்பதே பரம் + பிதா = பரம பிதா என்பதாகும்.
══════════════
🅱 10. பூரணம் :🅱

🌷 இவைகள் - என்று சொற்களில் எடுத்துக் கூற முடியாத, இவைகள் - என்று வார்த்தைகளில் எழுதிக் காட்ட முடியாத, அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் காலம் வரும் பொழுது தானாகவே பரிணமித்து வெளிப்படும்.

🌷 அதாவது இன்னதென்று தெரியாமல், அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் காலம் வரும் பொழுது வெளிப்படும், அதுவே பூரணம் எனப்படும்.
══════════════
🎀 பல்வேறு பெயர்கள் மூலம் அழைக்கப்படும் கடவுள் என்ற சொல்லுக்குள்ளேயே இவ்வளவு ரகசியங்கள் அடங்கி இருக்கிறது என்றால்,

♻ கடவுள் என்றால் என்ன?

🍁 கடவுளை அடையக் கூடிய வழிகள் எவை?

என்பன போன்ற அதி சூட்சும கேள்விகளுக்குள் எவ்வளவு ரகசியங்கள் அடங்கி இருக்கும்? என்பதைப் பற்றி சிந்திப்போம் தெளிவு பெறுவோம்.

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில் - வலங்கைமான் ( திருவாரூர் )


மூலவர் : சொர்ணபுரீஸ்வரர், செம்பொன்நாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : சொர்ணாம்பிகை, சிவசேகரி

தல விருட்சம் : வன்னி

தீர்த்தம் : திரிசூலகங்கை

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருக்கடுவாய்க்கரை தென்புத்தூர்

ஊர் : ஆண்டான்கோவில்

பாடியவர்கள்: அப்பர்

தேவாரப்பதிகம்

குண்டு பட்ட குற்றம் தவிர்த்தென்னை யாட் கொண்டு நாற்றிறங் காட்டிய கூத்தனைக் கண்டனைக் கடுவாய்க் கரைத் தென்புத்தூர் அண்டனைக் கண் டருவினை யற்றெனே. - திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 97வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்.

தல சிறப்பு:

ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 160 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

இத்தல விநாயகர் கும்பகர்ண விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார்.


பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.

நேர்த்திக்கடன்:

சரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் திங்கள் கிழமையில் இத்தலத்தில் நீராடி, இறைவனுக்கு விளக்கேற்றி அர்ச்சித்தால் விரைவில் "ருது' ஆகிவிடுவார்கள் என்பது நம்பிக்கை.

தலபெருமை:

காசிப முனிவர் வழிபாடு செய்துள்ளார்.

தல வரலாறு:

முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரில் தியாகராஜர் கோயில் கட்டிக்கொண்டிருந்த காலம் அது. கண்டதேவர் என்ற மந்திரி திருவாரூர் கோயில் கட்டுவதற்காக மலையடிவாரத்திலிருந்து கல் கொண்டு வர சென்றார். இருட்டி விட்டது. இவர் சிவதரிசனம் செய்யாமல் எப்போதும் உணவருந்த மாட்டார். எனவே சாலையோரமாக படுத்துவிட்டார். சிவன் இவரது கனவில் தோன்றி, ""நான் அருகே உள்ள வன்னிமரத்தின் அடியில் உள்ளேன். என்னை தரிசித்து விட்டு உணவருந்து,''என்று கூறிவிட்டு மறைந்து விடுகிறார். மந்திரி வந்து பார்த்த போது சிவன் கூறியபடியே வன்னிமரத்தடியில் ஒரு லிங்கம் இருந்தது. உடனே அவர் திருவாரூர் கொண்டு செல்லும் ஒவ்வொரு வண்டியிலிருந்து ஒரு கல்லும், ஒவ்வொரு சுண்ணாம்பு மூட்டையிலிருந்து ஒரு கரண்டி சுண்ணாம்பும் கொண்டு வந்து இந்த இடத்தில் கோயில் கட்டி முடித்து கும்பாபிஷேகமும் நடத்தி விட்டார். ஒரு முறை முசுகுந்த சக்கரவர்த்தியிடம் நடந்த விஷயங்கள் எல்லாம் கூறி, இந்த கோயிலை வந்து பார்க்கும்படி வேண்டினார். மன்னன் வந்து கோயிலை பார்த்து விட்டு,""மந்திரியாரே! இந்த கோயில் கட்டுவதற்கு உண்டான செலவையும், அதற்கான தர்மத்தையும் என்னிடம் கொடுத்துவிடு,''என்றார். அதற்கு மந்திரி, ""மன்னா!என் உயிரைக்கொடுப்பேனே தவிர இந்த தர்மத்தை கொடுக்க மாட்டேன்,''என்றார். இதனால் கோபமடைந்த ராஜா,""என் சொத்தில் தானே இந்தகோயிலை கட்டினாய். எனவே திருடிய குற்றத்திற்காக இந்த கோயில் சன்னதி முன்பு இவனது தலையை வெட்டுங்கள்,'' என உத்தரவிட்டார். மன்னனின் உத்தரவுப்படி தலை வெட்டப்பட்டது. வெட்டிய தலை பூமியில் விழுந்தவுடன் "ஆண்டவனே' என்றது. இதையறிந்த ராஜா ஒரு உண்மையான சிவபக்தனை வெட்டிவிட்டோமே என வருந்தி, தன்னையும் வெட்ட நினைக்கிறார். அப்போது இறைவன் தோன்றி ""ராஜாவும், மந்திரியும் கணவன் மனைவி மாதிரி இருக்க வேண்டும்'' என்று கூறி மந்திரிக்கு உயிர் கொடுத்து இருவரையும் ஆசிர்வதிக்கிறார். அன்று முதல் இத்தலம் "ஆண்டவன் கோயில்' எனப்பட்டது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம் - திருவாரூர்


மூலவர் : சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர்

உற்சவர் : ஆதிசேஷன்

அம்மன்/தாயார் : பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி

தல விருட்சம் : வன்னி

தீர்த்தம் : ஆதிசேஷ தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : சேஷபுரி, திருப்பாம்புரம்

ஊர் : திருப்பாம்புரம்

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதி எம்பெருமான் நஞ்சுசேர் கண்டம் உடைய என்நாதர் நள்ளிருள் நடம்செயும் நம்பர் மஞ்சுதோய் சோலை மாமயில் ஆட மாட மாளிகை தன்மேல் ஏறிப் பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்னகராரே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 59வது தலம்.

திருவிழா:

 சிவாலய விழாக்கள் அனைத்தும் நடைபெற்றாலும், மகாசிவராத்திரி மிகவும் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. அதிலும் ஆதிசேஷன் வணங்கிய மூன்றாம் காலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதிசேஷன் உற்சவராக புறப்பட்டு இறைவன் திருமுன் வந்தபின்பு, அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். மாசி மாதத்தில்,பஞ்சமூர்த்தி அபிஷேகம் சிறப்புடன் நடத்தப்படுகிறது.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பிற கோயில்களில் இருப்பதைப்போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 122 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 ஞாயிறு மற்றும் செவ்வாய் மாலை 2.45 மணி முதல் இரவு 8.00 மணி வரை,

புதன்கிழமை ராகு, கேது பூஜை பகல் 6.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை,

 வியாழகிழமை ராகு, கேது பூஜை பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை. 

 பூஜை விவரம் :

4 கால பூஜைகள்.

காலசந்தி காலை 9.00 மணி,

உச்சிகாலம் பகல் 12.15 மணி ,

சாயரட்சை மாலை 5.15 மணி ,

அர்த்தசாமம் இரவு 8.00 மணி.


பொது தகவல்:

வழிபட்டோர்: பிரம்மா, இந்திரன், பார்வதி, அகத்தியர், அக்னி, தட்சன், கங்காதேவி, சூரியன், சந்திரன், சுனிதன், கோச்செங்கண்ணன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். 

🍁 இந்நாள் வரை இவ்வூரில் அகத்திப் பூப்பதில்லை.

🍁 ஆலம் விழுதுகள் தரை தொடுவதுமில்லை.

🐍 இந்த ஊரில் பாம்பு தீண்டி இதுவரை யாரும் இறந்ததில்லை. 

🌷 சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோவில் ஒரு பஞ்சலிங்க தலமாகும்.

🌷 சுவாமி சந்நதியை சுற்றி கல் அகழி உள்ளது.

பிரார்த்தனை

போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.


ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசா நடந்தால், 7 வருட கேது தசா நடந்தால், லக்னத்திற்கு 2ல் ராகுவோ, கேதுவோ இருந்து, லக்னத்திற்கு 8ல் கேதுவோ, ராகுவோ இருந்தால், ராகு புத்தி, கேது புத்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், இருபாலருக்கும் திருமணத்தடை இருந்தால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பைக் கொன்றிருந்தால், கடன் தொல்லைகள் இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தல் அவசியம்.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை:

சிவனின் சாபத்தால் விஷத்தை இழந்த ஆதிசேஷன் இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் பெற்றதால், இங்கு வந்து வழிபடுவோருக்கு தாங்கள் இழந்ததை மீண்டும் பெறும் பாக்கியம் கிடைக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் பாம்பு நடமாட்டம் இருக்கும் என்றும் கூறுவர். இவைகள் அந்த நேரத்தில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.

இந்த கோயில் திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோயில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பெற்ற தலம். எனவே இத்தலம் சர்வ தோஷ பரிகார தலம் என புராணங்கள் கூறுகின்றன. ஆதிசேஷனுக்கு இங்கு உற்சவர் விக்ரகம் உள்ளது.

ராகு, கேது சன்னதி: பிற கோயில்களில் இருப்பதைப் போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்றார்கள். எனவே இத்தலத்து சிவனையும் அம்மனையும் நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

ஒரு முறை விநாயகர், திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் சர்வேஸ்வரை தரிசனம் செய்வதற்காகச் சென்றார். அங்கு தியான நிலையில் இருந்த, தன் தந்தையான ஈசனை வணங்கினார். அப்போது சிவபெருமானின் கழுத்தில் இருந்த பாம்பானது, விநாயகப்பெருமான் தன்னையும் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது.

உலகின் இயக்கங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு, ஒவ்வொரு உயிரின் செயல்களையும் கண்காணித்து வரும் சிவபெருமானுக்கு, தன் கழுத்தில் இருக்கும் நாகத்தின் எண்ணத்தை கணிக்க முடியாமல் போய்விடுமா என்ன?.

 நாகத்தின் எண்ணத்தை அறிந்த ஈசன், நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்கும்படி சாபமிட்டார்.
இதனால் உலகில் உள்ள அனைத்து நாகங்களும் தங்கள் வலிமையை இழந்தன.

 அதன் காரணமாக உலக உயிர்கள் பலவற்றாலும், நாகங்களுக்கு துன்பங்கள் நேர்ந்தன. இதையடுத்து அஷ்ட மகா நாகங்களும், ராகு, கேதுவும் தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக, மற்றவர்களையும் தண்டிக்க வேண்டாம் என்றும், தவறு செய்த பாம்பையும் மன்னிக்கும் படியும் அனைவரும் ஈசனை வேண்டி நின்றனர்.
‘மகா சிவராத்திரி அன்று நாகங்களின் தலைவன் ஆதிசேஷன் தலைமையில் அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய நாகங்கள் திருப்பாம்புரம் சென்று என்னை தரிசித்து வேண்டினால் சாபவிமோசனம் பெறலாம்’ என்று சிவபெருமான் வழிகாட்டி அருளினார்.

அதன்படியே ஆதிசேஷன் தலைமையில் அஷ்டநாகங்களும் திருப்பாம்புரம் சென்று ஈசனை வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப்பெற்றனர் என்று தல வரலாறு கூறுகிறது.

இத்தலத்திற்கு மற்றொரு தல வரலாறும் கூறப்படுகிறது.
(அதனையும் இங்கே பார்க்கலாம்.)

முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டி ஏற்பட்டது.

 இதனால் வாயு பகவான் தன் வலிமையால், பெரிய பெரிய மலைகளை எல்லாம் புரட்டிப் போட்டது. ஆதிசேஷனோ அந்த மலைகளை தன் வலிமையால் தடுத்து நிறுத்தியது.
இருவரும் சமபலத்துடன் இருந்த காரணத்தால், வெற்றித் தோல்வி யாருக்கு என்பதை கணிக்க முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட வாயு பகவான், ஏனைய உயிர்களுக்கு வழங்கும் பிராணவாயுவை நிறுத்தினார். இதனால் உயிரினங்கள் சோர்ந்து, மடியும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தேவர்களின் வேண்டுகோள் படி, ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. மேலும் உலக உயிர்கள் துன்பப்பட தானும் ஒரு காரணமாக இருந்ததால், திருப்பாம்புரம் சென்ற ஆதிசேஷன், அங்குள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து தன்னுடைய தவறை பொருத்தருளும் படி இறைவனை வேண்டியது.

இவ்வாறு மற்றொரு தலவரலாறு கதை கூறுகிறது. 

இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் சேஷபுரீஸ்வரர் என்றும் பாம்புரேஸ்வரர் என்றும் அழைக்க படுகிறார். அம்பாள் பிரமராம்பிகை என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பிற கோயில்களில் இருப்பதைப்போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம்.

அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், (திருச்சிறுகுடி), செருகுடி சரபோஜிராஜபுரம் அஞ்சல் - (வழி) பூந்தோட்டம்,( திருவாரூர் )


மூலவர் : சூஷ்மபுரீஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : மங்களநாயகி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : மங்களதீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருச்சிறுகுடி

ஊர் : செருகுடி

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய சுற்றிய சடைமுடி யீரே சுற்றிய சடைமுடி யீரும் தொழுகழல் உற்றவர் உறுபிணி யிலரே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 60வது தலம்.)

திருவிழா:

மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மணலால் ஆன லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 123 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கியது. உள்ளே சென்றால் விசாலமான இடம். பிராகாரத்தில் மங்கள விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள். முன்மண்டபத்தில் நவகிரக சன்னதி உள்ளது. சூரியன், விசுவாமித்திரர், கந்தர்வர்கள் ஆகியோர் வழிபட்ட தலம்.

பிரார்த்தனை

சிவன், அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் மங்களம் என்றும் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை:

பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்ததால், சூஷ்மபுரீஸ்வரம் என்று இவ்விடம் கூறப்படுகிறது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயிலில் சூரியனும், சனீஸ்வரனும் அருகருகே இருப்பது சிறப்பாகும். மேலும் சூரியன், விசுவாமித்திரர், கந்தர்வர்கள் ஆகியோரால் பூஜிக்கப்பட்டதாகும். அங்காரகனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கி பூஜித்து வரம் பெற்றமையால், இக்கோயிலில் உள்ள அங்காரகனை தரிசனம் செய்பவர்களுக்கு செவ்வாய் தோஷம், திருமணத் தடை, பலவித நோய்கள் தீரும்.


அங்காரகனை தரிசனம் செய்ய மாசி மாதம் செவ்வாய் கிழமைகள் ஏற்றது. இந்நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேர, இத்தலத்தில் பிரார்த்தனை செய்யலாம்.வில்வ இலை, மங்கள நீர் (குளத்து நீர்) ஆகியவை கொண்டு செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. செவ்வாய்தோஷ ஜாதகதாரர்கள் இங்கு ஏராளமாக வருகின்றனர்.


நவக்கிரக மண்டப சிறப்பு: இந்தகோயிலின் நவக்கிரக மண்டபம் மிகவும் வித்தியாசமானது. நவக்கிரகங்களுடன் கோளறுபதிகத்தின் 11 பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் குழந்தை வடிவில் உள்ளார். மதுரையில் சமணர்களின் பிடியில் சிக்கித்தவித்த கூன் பாண்டியனை காப்பாற்ற சென்ற திருஞானசம்பந்தரை திருநாவுக்கரசர் "நாளும் கோளும் சரியில்லை, இப்போது சென்றால் சிறுவனான தங்களுக்கு ஆபத்து' என சொல்லித் தடுத்தார். அப்போது, சம்பந்தர், சிவபக்தனை கிரகங்கள் ஏதும் செய்யாது எனக்கூறி பாடியதே கோளறுபதிகம். அன்றுமுதல் கிரகக்கோளாறு உள்ளவர்கள் கோளறுபதிகம் பாடி வருகின்றனர். இதைக் குறிக்கும் வகையில், இங்கே நவக்கிரகங்களின் நண்பராக சம்பந்தர் உள்ளார்.


இவரை தரிசித்தால், எப்படிப்பட்ட கிரக தோஷமும் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் விநாயகரும், பைரவரும் இதே மண்டபத்தில் இருப்பது இன்னுமொரு விசேஷம்.


தல வரலாறு:

ஒருமுறை கயிலையில் சிவபெருமானும், அம்பாளும் சொக்கட்டான் (தாயம்) விளையாடினர். அம்மன் பக்கம் வெற்றி திரும்பியது. இந்நிலையில், திடீரென சிவபெருமான் அவ்விளையாட்டில் இருந்து காணாமல் போனார். பின்னர், ஈசனை தேடி அலைந்தாள் அம்பிகை. எங்கும் காணாததால், காவிரியின் தென்கரையில் வில்வ மரங்கள் அடர்ந்த, அமைதியான சூழல் உள்ள குளக்கரையில் மண்ணில் லிங்கம் பிடித்து வைத்து வழிபட்டாள். காணாமல் போன சிவபெருமான் அந்த இடத்தில் தோன்றினார். விளையாட்டில் தான் வேண்டுமென்றே தோற்க இருந்ததாகவும், மனைவியின் மனம் மகிழ்வதற்காகவும், குடும்பம் மங்களகரமாக இருப்பதற்காக, கணவனிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டுமென்றும் அருள்பாலித்தார்.


இதனால் அம்பிகை "மங்களாம்பிகை' என்று பெயர் பெற்றாள். அவள் தவமிருந்த குளக்கரை "மங்கள தீர்த்தம்' ஆயிற்று. சுவாமிக்கு மங்களநாதர் என்று பெயர் சூட்டப்பட்டது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.