Friday, 26 August 2016

ருத்ராக்ஷம்-1

ருத்ராக்ஷம்

-உயிருள்ள ஜடப்பொருள்

உலக நிகழ்வுகள் அனைத்தும் இரு தளங்களில் செயல்படுகிறது.இயற்கையனவை மற்றும் செயற்கையனவை என இரு பரிமாணங்களில்செயல்படும் நிகழ்வுகள் உலக இயக்கத்திற்கு மூலமாக அமைந்துள்ளது.வேதாந்தம் இதையே புருஷத்துவம் மற்றும் ப்ரகிருதி என விளைக்குகிறது.இருவகையன செயல் அனைத்து நிகழ்வுகளில் பிரதிபலிக்கிறது என்பது பலருக்குதெரியாது. வேதாந்த உண்மையான இந்த இரு செயல்களைபுரிந்துகொண்டோமேயானால் இயற்கையின் செயல்படுகளைபுரிந்துகொள்ளமுடியும்.

இயற்கையின் தன்மை சாஸ்வதமானது. இயற்கை என்பது உருவக்கப்பட்டதுஅல்ல இயற்கை என்னும் சொல் இருக்கிறது, இருந்தது மற்றும் எப்பொழுதும்இருக்கும் என்பதயே குறிக்கும். ப்ரகிருதி என்பது செயற்கை தன்மையைகுறித்தாலும், இது தற்காலிகமானது மற்றும் இதன் உருவாக்கத்திற்கு மூலம்புருஷத்துவமே ஆகும்.



அறிவியலை எடுத்துக்கொண்டோமானால் சக்கரம் கண்டுபிடித்தது என்பதுதான்முதல் அறிவியல் கண்டுபிடிப்பு என கூறமுடியும் . சக்கரத்தின் செயல்கள்,வடிவம் மற்றும் தன்மை இயற்கையில் உள்ள பொருளை சார்ந்து இருப்பதைஅறிவோம்.செயற்கை என்பது இயற்கையின் பிரதிபிம்பம் என கூறலாம். ஆனால்இயற்கை தன்னிகரற்றது.

ஆயுர்வேதத்தில் இந்த உலகம் மூன்று முக்கியமான குணத்தால்இயங்கிவருகிறது என கூறுவார்கள். முக்குணத்தை (தோஷங்கள்) வாத, பித்த, கபகுணம் சொல்லுவதை கேள்விப்பட்டுள்ளோம். இந்த இயற்கையன மூன்றுகுணங்கள் மனித உடலில் சமநிலை தருவதால் நோய் ஏற்படுவதாக ஆயுர்வேதசாஸ்திரம் கூருகிறது. மனித உடலில் தோஷத்தில் ஏதவது ஒன்று ஓங்கி நிற்கும்.

இயல்பான மூன்று தோஷங்கள் புருஸார்த்தம் (இயற்கையானது) என்றும் மனிதஉடலில் ஏற்படும் தோஷ ஏற்றத்தாழ்வுகள் ப்ரகிருதித்துவம் (செயற்கையானது)என்றும் வகைபடுத்துகிறார்கள். உபவேதமானஆயுர்வேதத்தில் வேதாந்தசாரமான புருஷ, ப்ரகிருதி தத்துவம் செயல்படுவதற்கான சான்றைவிளக்கியுள்ளேன்.


நமது வாழ்க்கையில் இயற்கை,செயற்கை தத்துவம் எவ்வாறு செயல்படுகிறதுஎன பார்ப்போம். மனித உடல் என்பது இயற்கை யின் படைப்பு, இதைபுருஷார்த்தம் என கூரலாம் . ஆணும் பெண்ணும் இணைந்து உருவாக்கும்பொழுது புருஷத்துவம் கொண்ட மனித உடல் ப்ருகிருதித்துவம் பெருகிறது. நமதுஇயற்கையான (புருஷார்த்த) குணம் என ஒன்று உண்டு. ஆனால் சமூகநடத்தைக்காக நாம் உருவாக்கிய குணதிசயங்கள் ப்ருகிருதித்துவம் எனும்செயற்கைத் தன்மையை சாரும். நான் கூறும் இது போன்ற உதாரணங்களால்புருஷத்துவம் மேலானது ப்ருகிருதித்துவம் கீழானது என எண்ணுதல் கூடாது.புருஷத்துவமும், பிருகிருதித்துவமும் இணைந்தால் மட்டுமே வாழ்வியல்சிறப்பாக இயங்கும்.

இறைதன்மையை விளக்கும் மதங்கள் இயற்கை தன்மையான புருஷத்துவமேமூலம் என கூருகிறார்கள். புருஷத்துவமே அனைத்து விஷயங்களுக்கும்ஆதாரமானது என்பது அனைத்து மதத்தின் விளக்கம். அதனால் தான் சிலமதங்கள் ஒரே கடவுள் எனும் கொள்கையை கொண்டுள்ளது. பாரதத்தில்தோன்றிய மதங்கள் மட்டுமே புருஷ-ப்ருகிருதி இணைவே உண்மையான இறைநிலை என ப்ரகடனப்படுத்தியது. புருஷ நிலையை சிவன் என்றும்,ப்ருகிருதிநிலையை சக்தி என்றும் விளக்கினார்கள். சிவன் ஆண் தன்மை சக்தி பெண்தன்மை என விளக்க காரணம் சிவநிலை என்பது அசைவற்றது, சக்திநிலைஎன்பது அசையக்கூடியது.(இயங்கும் தன்மை) என்ற வேறுபாட்டால் தான்.

சிவ-சக்தி நிலை என்பதை சீனர்கள்(யாங்-யன்) என வகைப்படுத்தினார்கள்.இயற்கையில் செயற்கை தன்மையும், செயற்கையில் இயற்கைத் தன்மையும்கலந்துள்ளது என்பதன் கருத்தே யாங்-யன் தத்துவம் ஆகும். இத்தத்துவத்தின்அடிப்படையிலேயே நமது சாஸ்திர சம்பிரதாயங்கள் அமைந்துள்ளன. பருத்திஎன்பது இயற்கையன ஒரு தாவரம், இதை பயிரிட்டு,நூலாக்கி ஆடை அணிதல்என்பது செயற்கையான செயல்பாடு.

இயற்கையான பருத்தியில் எதிர்காலத்தில் உருவகப்போகும் ஆடையும்,ஆடையில் இயற்கையான பருத்தியும் கலந்திருப்பது சிவசக்தி நிலையைகுறிக்கும். இதனால்தான் சக்தி வழிபாடு செய்பவர்கள் அதிக ஆடை அணிகலன்அணிவதும், இயற்கையான சிவநிலையில் இருப்பவர்கள் ஜடாமுடியுடன்நிர்வாணமாக இருப்பதும் ஆன்மீக இயல்பாக இருக்கிறது.

சிவ தத்துவத்தில் இருக்கும் முனிவர்கள் வைத்திருக்கும் பொருட்களைகவனித்தால் சங்கு, ஜடாமுடி, மண்டை ஓடு, ருத்ராஷம்,மிருக தோல்அனைத்தும் இயற்கையாக கிடைத்த பொருட்கள்.

இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்க முடியாது. சில பொருட்களைஉருவாக்கினாலும் செயற்கை என தெரிந்துவிடும். ப்ரபஞ்சத்தின் படைப்புத்தன்மை புருஷ தன்மையிலிருந்து துவங்குகிறது. புருஷ தன்மை என்பதுஇயக்கமற்றது. புருஷத் தன்மைக்கு கால தேச வித்தியாசம் இல்லை.பிரகிருதிக்கு கால பரிமணமும் உண்டு. பிறந்த குழந்தை புருஷ தன்மையில்தேச, கால வித்யாசம் இன்றி இருக்கிறது. வளர்ந்த மனிதன் புருஷ நிலையில்இருந்து பிரகிருதி நிலைக்கு மாற்றமடைந்து தனக்குள் கால மற்றும் தேசவித்தியாசத்தை அடைகிறான்.

ப்ரகிருதி நிலையை அடைந்த மனிதன் மீண்டும் புருஷத்துவத்தை அடையவேமீண்டும் ஜபம், தியானம் மற்றும் யோகம் எனும் ஆன்மீக வழிகள்உருவாக்கப்பட்டுள்ளன. செயற்கை நிலையில் இயங்கக்கூடிய மனிதன் இயற்கைநிலை எனும் நிர்விகல்ப சமாதியை அடைய அவனுக்கு இயற்கையனபொருட்கள் உதவுகிறது. இயற்கை பொருட்கள் மூலம் மனிதன் தனதுசுயதன்மையான புருஷ நிலையை அடைய முயற்சிக்கும் பொழுதுஅதிகம்பயன்படுவதும் எளிமையாக கிடைப்பதும் ருத்ராஷம் எனும்இயற்கையானமணிகள் ஆகும்.

சைவ சம்பிரதாயத்தில் மட்டும் ருத்ராஷம் பயன்படுத்துவதாக அனைவரும்நம்புகிறார்கள். ஆனால் சனாதான தர்மம் என அழைக்கப்படும் பாரத தேசத்தின்அனைத்து ஆன்மீக மார்க்கமும் ருத்ராஷத்தை பயன்படுத்திய சான்றுகள் உண்டு.குறிப்பாக ருத்ராஷத்தை மட்டும் நான் இங்கு விளக்க காரணம் உண்டு. பிறஆன்மீக வஸ்துக்களை காட்டிலும் ருத்ராஷத்தை பற்றி நிறைய முரண்பாடானதகவல்கள் உலவுகிறது. தெரியவேண்டிய விஷயம் மறைக்கப்பட்டும்,தேவையற்ற விஷயங்கள் உண்மையாக்கப்பட்டும் மக்களிடையே குழப்பத்தைஉண்டு செய்கிறது. இந்த தெய்வீகம் நிறைந்த ருத்ராஷத்தை பற்றி விழிப்புணர்வுஏற்படுத்த வேண்டிய அவசியம் இதனாலேயே ஏற்பட்டது.


ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய் (விதை) கனி வடிவம்பெருவதில்லை. அத்தி பூக்காது விதை அளிப்பது போல ருத்ராஷம் விதைதன்மை கொண்டது.மித வெப்பமும் மிதமான குளிரும் கொண்ட பகுதிகளில்ருத்ராஷம் விளைகிறது.

நேபாள தேசம் மேலே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலையில் இருப்பதால்அதிகமான ருத்ராஷத்தை விளைவிக்கும் நாடாக திகழ்கிறது. இந்தியாவில் அதிகஅளவில் ருத்ராஷம் கிடைப்பதில்லை. மேலும் ருத்ராஷத்தை பயிர் செய்துவிளைவிக்க முடியாது. ருத்ராஷ மரக்கன்று நம் தோட்டத்தில் வளர்க்கும்பொழுது இயல்பான வளர்சியையோ, ருத்ராஷத்தின் வடிவத்தையோபெறுவதில்லை. நேபாள தேசத்தில் பெரும்பாலும் ருத்ராஷ மரத்தோட்டம்வைத்திருப்பவர்கள் கூட அதை ஒரு இயற்கையான வன பகுதியாகவைத்திருக்கிறார்கள். நேபாளத்திற்குப் பிறகு இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் ருத்ராஷம் இயற்கையாக கிடைக்கிறது.

ருத்ராஷத்தின் வடிவம், அதில் உள்ள துளை அனைத்தும் இயற்கையானது.பார்க்கும்பொழுது எந்த வித செயல்படும் இல்லாத பொருளாக தெரிந்தாலும்ருத்ராஷத்திற்குள் புதைந்திருக்கும் ஆற்றல் விவரிக்க முடியாத ஒன்று. சாதாரணஒரு மரத்தின் விதையில் என்ன ஆற்றல் இருக்க முடியும் என எதிர்வாதம்செய்பவர்கள் கேட்பதுண்டு.

மணல் துகள்கள் மூலம் செய்யப்பட்டு தாமிர கம்பிகளால் இணைக்கப்பட்டகணிப்பொறியின் சில்லு(Chip) வேலை செய்வதையும், உலகின் பல கிலோ மீட்டர்தூரம் இடைவெளியில் இருக்கும் இருவரையும் தொடர்பு கொள்ள செய்வதைநாகரீக மக்கள் நம்மில் அனேகர் உண்டு. உயிரற்ற மணல் இது போன்ற செயலைசெய்யும்பொழுது உயிருள்ள தாவரவிதை ஏன் இதைக்காட்டிலும் அதிகசெயல்களை செய்ய முடியாது ? என சிந்திப்பதில்லை.

கணிப்பொறி சிப்பை மட்டும் கையில் வைத்திருந்தால் அது வேலை செய்யாது.அதற்கு தேவையான இணைப்புகள், மின்சாரம் வழங்கி தகுந்த நிபுணர்களைநியமித்தால் அவர்கள் அந்த கணிப்பொறி சிப்பை வேலை செய்ய வைப்பார்கள்.அது போல சிறந்த ருத்ராஷத்தை தேர்ந்தெடுத்து, ஆன்மீக ஆற்றல்கொண்டவர்களிடம் சக்தியூட்டப் பணிந்தோம் என்றால் அத்தகைய ருத்ராஷம்பிரஞ்சத்தின் சிறு மாதிரி வடிவமாகி உங்களை பிரபஞ்சத்தை கையில்வைத்திருப்பவராக மாற்றும்.

அப்படி பட்ட ருத்ராஷத்தை பற்றி சிறிது விரிவாக காண்போம்.


(தொடரும் )

Wednesday, 24 August 2016

51 விநாயகர் வடிவங்களும் பலன்களும் !!!!

51 விநாயகர் வடிவங்களும்
அந்த வடிவங்களை வணங்குவதால் நாம்அடையும் பலன்களும்

1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி.
2. மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும்
3. த்ரைலோக்ய. மோஹன கர கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.
4. லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி
5. ருணஹரள கணபதி: கடன் நிவர்த்தி.
6. மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.
7. ஹரித்ரா கணபதி: உலக வசியம்.
8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.
9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி.
10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி.
11. பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.
12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.
13. சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.
14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.
15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.
16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.
17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.
18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.
19. விஜய கணபதி: வெற்றி.
20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.
21. ச்லேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.
22. உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.
23. போக கணபதி: சகலலோக ப்ராப்தி.
24. விரிவிரி கணபதி: விசால புத்தி.
25. வீரகணபதி- தைரியம்.
26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.
27. கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.
28. விக்னராஜ கணபதி: ராஜயோகம்.
29. குமார கணபதி: மாலா மந்திரம்.
30. ராஜ கணபதி: மாலா மந்திரம்.
31. ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.
32. தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.
33. துர்கா கணபதி: துக்க நிவாரணம்.
34. யோக கணபதி: தியானம்.
35. நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.
36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.
37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.
38. நவநீத கணபதி: மனோவசியம்.
39. மோதக கணபதி: சம்பூர்ண பலன்.
40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி.
41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.
42. குரு கணபதி: குருவருள்.
43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி.
44. சிவாவதார கணபதி: சிவபக்தி.
45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.
46. ரக்த கணபதி: வசிய விருத்தி.
47. அபிஷ்டவாத கணபதி: நினைத்ததை அடைதல்.
48. ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.
50. மகா கணபதி: ப்ரணவமூலம்.
51. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை

மகாபாரதத்தை படிக்கும் போதும் சிலர் சொல்லும் சமயம் கேட்கும் போதும் நம் மனதில் விடை கிடைக்காத சில கேள்விகள் வரும். இதுபோல சில கேள்விகளும் அதற்கான பதில்களும்...!!!!



1. சந்தனு மனைவி கங்கை என்றால் சிவனின் தலை மீது அமர்ந்திருக்கும் கங்கை யார்?

2. ராமாயணத்தில் தோன்றும் பரசுராம அவரதாரம் எவ்வாறு மகாபாரதத்தில் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் குருவாக வர முடியும்?

3. திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் வியாசர் மூலம் எவ்வாறு உருவானார்கள்? எந்த முறையில் அந்தப் பெண்கள் கருவுற்றனர்? வியாசர் குழந்தைகளை உருவாக்கவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளைக் காண ஞானத் திருஷ்டி வழங்கிய வியாசரால் ஏன் திருதராஷ்டிரனுக்குப் பார்வை வழங்க முடியவில்லை?

4. விதுரன் மகன்கள் யார் யார்?

5. கிருஷ்ணனுடைய குழந்தைகள் யார் யார்? அவர்களைப் பற்றிய எந்த வரலாற்றையும் ஏன் காண இயலவில்லை?

6. காந்தாரியுடைய நூறு மகன்கள் எந்த முறையில் உயிர் பெற்றனர், எந்த முறையில்வியாசர் கையாண்டார்?

7. பீஷ்மருக்குத் தான் நினைக்கும் போது மட்டுமே மரணம் நேரும் வரம் சந்தனுவால் கிடைத்தது. இந்த வரத்தைச் சந்தனுவால் எவ்வாறு தர இயலும்?

8. இறுதியாகக் கடைசி கேள்வி. தீபாவளி பண்டிகை ராமாயணத்தில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் மகாபராதம் நடந்த காலத்தில் அங்குள்ள மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடினார்களா?


இந்த எட்டு கேள்விக்கு உரிய பதில்கள்
_______________________________

1. சந்தனுவின் மனைவி கங்கை எனில் சிவன் தலை மீது இருக்கும் கங்கை யார்?

* பதில்:


ஓடும் நீரான கங்கைக்கும் சந்தனுவின் மனைவி கங்கைக்கும் உள்ள் தொடர்பு உடல்-ஆன்ம தொடர்பாகும். சந்தனுவின் மனைவியான கங்கை மனித உடலில் இருந்த ஆன்ம கங்கை ஆவாள்.
சிவன் தலையில் கங்கையைத் தாங்கியது கங்கை விண்ணில் இருந்து மண்ணில் பாய்ந்தபோது. கங்கை சிவனின் தலையில் விழுந்து வேகம்தணிந்து மண்ணில் இறங்கினாள்.

ஈரசடையுடன் முடிந்து கொண்டதால் கங்கை சிவன் தலையில் கட்டப்பட்டாள். இது கங்கையின் ஸ்தூல வடிவம்.
தென்னாட்டில் கங்கை சிவனின் மனைவி என்று கதை சொல்லப்பட்டாலும் கங்கைக்கும் சிவனுக்கும் ஒரு போதும் திருமணம் நடக்கவில்லை. விண்ணிலிருந்து மண்ணிற்கு பாய்ந்த கங்கையை சிவன் தலையில் தாங்கி சடைகளின் வழியே மெல்ல வழிந்தோட விட்டு அதன் வேகத்தைக் குறைத்தார். அவ்வளவே.

அதாவது சிவன் கங்கையின் வேகத்தைக் கட்டினார். கங்கையைக் கட்டிக் கொள்ளவில்லை.
அனைத்து நதிகளுக்கும், மலைகளுக்கும், கோள்களுக்கும் ஸ்தூல வடிவமும் ஆன்ம வடிவமும் உண்டு. அதே போல் தேவர்களுக்கும் உண்டு,
மனிதன் ஒருவன் ஒரு ஆன்மா என்பது நமக்கு தெரியும்.

ஆனால் நதிகள், தேவர்கள், தெய்வங்கள் ஆகியவை தம் அம்சங்களை ஆன்மாக்கள் மீது செலுத்தும் சக்தி கொண்டவை.
உதாரணமாக கார்த்தவீர்யார்ச்சுனன் விஷ்ணுவின் ஒரு அம்சம் கொண்டவன். பரசுராமர் இன்னொரு அம்சம் கொண்டவர். இராமன், இலக்குவன், பரதன் சத்ருக்கனன் ஆகியோரும் விஷ்ணுவின் அம்சம். கிருஷ்ணனும் பலராமனும் விஷ்ணுவின் அம்சம்.

ஆக ஒரே நேரத்தில் பல அம்ச அவதாரங்கள் உருவாவதும், ஒன்றை ஒன்று அழிப்பதும் கூட சொல்லப்பட்டே இருக்கின்றன. இதில் இராமனும், கிருஷ்ணனும் முழு அவதாரங்கள். அவர்கள் விஷ்ணுவின் பெரும்பாலான அம்சங்கள் கொண்டு பிறந்தனர். மற்றவர்கள் உப அவதாரங்கள் எனப்படுவர். ஆக தெய்வங்கள் தன் ஆன்ம சக்தியை அம்சங்களாக பிற ஆன்மாக்களின் மீது செலுத்தும் சக்தி கொண்டவை.

அப்படி அம்சங்கள் கொண்டு பிறக்கும் பிறவியை உப அவதாரம் என்கின்றன புராணங்கள்.அதாவது கங்கையின் அம்ச வடிவம் ஒரு பெண்ணாக வந்தது. இன்றும் ஸ்தூல நதியாக கங்கை ஓடிக் கொண்டுதான் இருந்தது. கங்கை நதியே கங்கா மாயா, கங்கா மாதா, கங்கா தேவியாக வணங்குகிறோம்.
_______________________________

2. இராமாயணத்தில் தோன்றும் பரசுராமர் அவதாரம் எவ்வாறு மஹாபாரதத்தில் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் குருவாக வர இயலும்?

* பதில்:

புராணங்களில் வரும் ஏழு சிரஞ்சீவிகள்

1. பரசுராமர்
2. ஜாம்பவான்
3. அனுமான்
4. விபீஷ்ணன்
5. மஹாபலி
6. மார்கண்டேயர்
7. அசுவத்தாமன்

இவர்களில் அசுவத்தாமனைத் தவிர மற்ற எல்லோருமே இராமயணம் மற்றும் அதற்கு முற்பட்டவர்கள்.

பரசுராமர் பீஷ்மர், கர்ணன் ஆகியோருக்கு குரு, துரோணருக்கு ஆயுதங்கள் வழங்கியவர். கேரளாவின் மலைக்குகையில் இன்னும் வாழ்ந்திருப்பதாக ஐதீகம்.

ஜாம்பவான் இவர் மகள் ஜாம்பவதியை கிருஷ்ணன் மணந்து அவள் மூலம் சாம்பன் என்ற மகனைப் பெற்றார். இவன் கர்ப்பிணி வேஷம் தரித்ததால் துர்வாசரின் சாபம் பெற்றனர் யாதவர்கள்.

அனுமான் பீமனுக்கு பயிற்சி அளித்தார். அர்ச்சுனனின் கொடியில் அமர்ந்தார். எங்கெங்கு இராம கதை சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் இருப்பதாக ஐதீகம்.

விபீஷ்ணன் மஹாபாரத காலத்திலும் இலங்கை அரசனாக இருந்தான். இராசசூய யாகத்திற்கு பரிசுகள் அனுப்பினான்.

வாமன அவதாரம் மூலம் அசுர குணம் நீங்க பெற்ற மஹாபலி பாதாள உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்,

மார்கண்டேயர், முக்திக்காக கலியுக முடிவை எதிர்னோக்கி தவம் செய்துகொண்டிருக்கிறார்.(சில தினங்களுக்கு முன் அவரை பற்றி பதிவிட்டிருந்தேன்)

அசுவத்தாமன், சிரோண்மணி பறிக்கப்பட்டு குரூர ரூபம் கொண்டு இமயமலைச் சாரல்களில் அலைந்து கொண்டிருப்பதாக நம்பிக்கை.

எனவே இவர்கள் அனைவருமே வைவஸ்வத மன்வந்தரம் முடியும் வரை இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
பரசுராமர் பரம்பரையையும் பீஷ்மரின் பரம்பரையையும் அறிந்தால் அவர்கள் ஒரு வகையில் தூரத்து சொந்தம் கூட என அறிவீர்கள்.
_______________________________

3. திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் வியாசர் மூலம் எவ்வாறு உருவானார்கள். எந்த முறையில் அந்தப் பெண்கள் கருவுற்றனர்? வியாசர் குழந்தைகளை உருவாக்கவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளைக் காண ஞானத் திருஷ்டி வழங்கிய வியாசரால் ஏன் திருதராஷ்டிரனுக்குப் பார்வை வழங்க முடியவில்லை?

* பதில்:
உருவாகும் முறை தாம்பத்யம் தான். ஆனால் ரிஷிபிண்டம் இராத்தங்காது. தேவர்கள் – ரிஷிகள் ஆகியோரால் உண்டாகும் கர்ப்பம் ஒரு இரவிற்குள் குழந்தையாக பிறக்கும் என்பது லாஜிக். அப்படித்தான் வியாசர் ஒரே இரவில் பிறந்தார்.
கர்ணனும் பாண்டவரும் அப்படி ஒரே இரவில் பிறந்தவரே.

வியாசருக்கும் – அம்பிகாவுக்கும் த்ருதராஷ்டிரன் முதல் நாள் இரவு பிறந்தான். இரண்டாம் நாள் இரவு வியாசருக்கும் – அம்பாலிகாவுக்கும் பாண்டு பிறந்தான். மூன்றாம் நாள் இரவு வியாசருக்கும் அம்பிகாவின் பணிப்பெண்ணுக்கும் விதுரன் பிறந்தான்.

இது பூரணமான தாம்பத்ய உறவு என்பதாலேயே அம்பிகா அருவெறுப்பில் கண்களை மூடிக் கொண்டாள். அம்பாலிகா பயத்தில் உடல் வெளுத்தாள். பணிப்பெண் அர்ப்பணிப்புடன் இருந்தாள்.

இதனால் சொல்லப்படும் நீதி தாம்பத்ய உறவு கொள்ளும்போது அன்பு, நற்சிந்தனை போன்றவை மேலோங்கி இருக்க வேண்டும் என்பதே.அது மட்டுமின்றி பரசுராமர் காலத்தில் இந்த நியதி உண்டானது. தேவர்களாலும், ரிஷிகளாலும் உண்டாகும் கர்ப்பங்களுக்கு தாலிகட்டிய கணவனே தந்தையாக கருதப்படுவான்.

வியாசர் குழந்தைகள் உருவாகவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளை காண ஞான த்ருஷ்டியை வழங்கவும் செய்த வியாசர் ஏன் த்ருதராஷ்டிரருக்கு பார்வை வழங்க இயலவில்லை.

ரிஷிகளோ தேவர்களோ விதியை என்றுமே மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதில்லை. அதில் ஈடுபடுவதால் அவர்களின் சக்தி விரயமாகவே செய்யும். தங்களின் பணியைத் தவிர வேறு எதிலும் அவர்கள் தலையிட மாட்டார்கள்.

அசுரர்களும் மிகச் சிறப்பான தவங்களைச் செய்தவர்களே. அவர்கள் தங்கள் தவப்பயனை விதியை மாற்றுவதில் செலவிட்டதாலேயே அவர்களின் தவப்பயன்கள் எல்லாம் வீணாகின. பலன் கருதா தவம் செய்ததால் ரிஷிகள் உயர்ந்தனர். பலன் கருதி தவம் செய்தவர் அதை மட்டுமே பெற்றனர்.

த்ருதராஷ்டிரன் பிறந்தபோதே பீஷ்மரோ, சத்யவதியோ இந்த வேண்டுகோளை வைத்திருக்கலாம். ஆனால் வியாசர் மிக இலாவகமாக அதைத் தட்டிக் கழித்தார்.

வியாசர் வெளியேவந்த போது சத்தியவதி வியாசரை சந்தித்து "இளவரசி அம்பிகா பிள்ளையைப் பெறுவாளா?" என்று கேட்டாள்.

அதை கேட்ட வியாசர் "இளவரசி அம்பிகை பெறப்போகும் பிள்ளை பத்தாயிரம் யானைகள் பலம் கொண்டவனாக இருப்பான். அவன் சிறந்த அரச முனியாக இருந்து, பெரும் கல்வியும் புத்தி கூர்மையும் சக்தியும் பெற்றிருப்பான். அந்த உயர் ஆன்மா தனது காலத்தில் நூறு பிள்ளைகளைப் பெறுவான். ஆனால் அவனது தாயின் அம்பிகையின் தவறால் அவன் குருடாகப் பிறப்பான்." என்று வியாசர் பதிலுரைத்தார்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட சத்தியவதி, "ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவனே, குருடாக இருப்பவன் குருக்களின் ஏகாதிபதியாகும் தகுதியை எப்படிப் பெறுவான்? குருடாக இருப்பவனால் தனது உறவினர்களையும் குடும்பத்தையும் தனது தந்தையின் குல கௌரவத்தையும் எப்படி காக்க முடியும்? நீ குருக்களுக்கு இன்னும் ஒரு மன்னனைக் கொடுக்க வேண்டும்." என்றாள்.

வியாசர் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிச் சென்று விட்டார். மூத்த இளவரசி அம்பிகா சரியான காலத்தில் ஒரு குருட்டு மகனைப் பெற்றெடுத்தாள். குருடாக வாழ்வது அவனது விதி என வியாசர் நாசூக்காக சொல்லி விடுகிறார். அதை மாற்றினால் அவரது சொல் பொய்த்து விடுமே. அதனால் யாரும் அதை மாற்றக் கேட்கவும் இல்லை.

த்ருதராஷ்டிரனுக்கு போர் நிகழ்வுகளைக் கேட்க சஞ்சயனுக்கு ஞானத்ருஷ்டி வழங்கியது த்ருதராஷ்டிரனுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே பலர் கருதுகிறார்கள். தன் மகன் செய்த அக்ரமங்களை ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்த்தவன் தன் மகன் அழிவையும் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்க்க வேண்டியதாகப் போய்விட்டது.

த்ருதராஷ்டிரன் போர் தொடங்கும் போது மட்டுமல்ல.. போர் தொடங்கிய பின்னரும் கூட துரியோதனனை இழக்கச் சம்மதித்திருந்தால் (அதாவது துரியோதனனைக் கைது செய்ய உத்தரவிட்டிருந்தால் – துரியோதனன் தற்கொலை செய்து கொண்டிருப்பான் அல்லது கர்ணன் துணையுடன் போராடி மடிந்திருப்பான்) மிகப் பெரிய அழிவு தடுக்கப்பட்டிருக்கும்.

த்ருதராஷ்டிரன் கடைசி வரை பலமிருந்தும், பலமும் அறிவும் மிக்கோர் துணையிருந்தும், தன் மகனின் சந்தோஷத்தைத் தவிர வேறு எதையும் அவன் காண விரும்பவில்லை. நன்றாக ஊன்றிக் கவனித்தோமானால், சாபங்களினாலும் இன்னும் பிற பாதிப்புகளாலும் உண்டான குறையை மற்றுமே ரிஷிகள் மாற்றி இருப்பதைக் காணலாம்.

விசுவாமித்திரர் விதியை மீறி திரிசங்குவை சொர்க்கத்துக்கு ஸ்தூல உடலோடு அனுப்ப முயன்று, திரிசங்கு சொர்க்கம் படைத்து தன் தவப்பலனை இழந்தார். எனவே விதியை மாற்றும் சக்தி இருந்தாலும் அதை மாற்றாமல் அடக்கத்துடன் இருப்பவர்களே ரிஷிகளாக இருக்கவே முடியும்.
_______________________________

4. விதுரனின் மகன்கள் யார் யார்?

* பதில்:

ஒரு சூத்திரப்பெண்ணுக்கும் மன்னன் தேவகனுக்கும் பிறந்து அழகும் இளமையும் கொண்ட பெண்ணொருத்தி இருப்பதாக கங்கையின் மைந்தன் பீஷ்மர் கேள்விப்பட்டார்.

அவளது தந்தையின் தேவகனின் இருப்பிடத்தில் இருந்து அவளைக் கொண்டு வந்த பீஷ்மர் அவளை, ஞானியான விதுரனுக்கு மணமுடித்தார். விதுரர் அவளிடம் தன்னைப் போல வேத திறமை கொண்ட பல பிள்ளைகளைப்ப
பெற்றெடுத்தார்.

மற்றபடி விதுரனின் வம்சம் அரச வம்சம், ரிஷி வம்சம் அல்ல என்பதால் அவர்களின் பெயர்கள் புராணங்களில் இடம் பெறவில்லை. எத்தனை பேர் என்பதும் குறிப்பிடப்படவில்லை.
_______________________________

5. கிருஷ்ணனின் மகன்கள் யார் யார்? அவர்களைப் பற்றி எந்த வரலாறும் ஏன் காண இயலவில்லை?

* பதிவில்:

கிருஷ்ணன்-ருக்மணி மகன் பிரத்யும்னன், அவனுடைய மகன் அனிருத்தன்
கிருஷ்ணன் ஜாம்பவதியின் மகன் சாம்பன் இவர்களின் குறிப்புகள் மகாபாரதத்தில் உண்டு.

கிருஷ்ணனுக்கு மொத்த மனைவியர் 16108. அவர்கள் ஒவ்வொருவருவருக்கும் பத்து குழந்தைகள் பிறந்த்தாக புராணம் சொல்கிறது. ஆக மொத்தம் 1,61,080 குழந்தைகள்.
கிருஷ்ணரின் முக்கிய மனைவிகள் எட்டு பேர். அவர்களின் மகன்கள் பெயரே அறியத்தருகிறது பாகவத புராணம். இவர்களில் மூத்தவன் பிரத்யும்னன். மன்மதன் அம்சம்.

ருக்மணியின் மகன்கள்:
1. பிரத்யும்னன்
2. சாருதேசனன்
3. சுதேஷனன்
4. சாருதேஹன்
5. சுசாரு
6. சாருகுப்தன்
7. பத்ரசாரு
8. சாருசந்திரன்
9. விசாரு
10. சாரு.


சத்தியபாமையின் மகன்கள் :
11. பானு
12. சுபானு
13. சுவபானு
14. பிரபானு
15. பானுமான்
16. சந்த்ரபானு
17. பிரஹத்பானு
18. அதிபானு
19. ஸ்ரீபானு
20. பிரதுபானு.

ஜாம்பவதியின் மகன்கள் :
21. சாம்பன்
22. சுமித்ரன்
23. புருஜித்
24. சதாஜித்
25. சஹரஸ்ரஜித்
26. விஜயன்
27. சித்ரகேது
28. வசுமானன்
29. த்ராவின்
30. க்ருது.


நக்னஜித்தின் மகள் சத்யாவின் மகன்கள் :
31. வீரன்
32. சந்திரம்
33. அஸ்வசேனன்
34. சித்ராகு
35. வேகவான்
36. விருஷன்
37. ஆம்
38. சங்கு
39. வசு
40. குந்தி.


காளிந்தியின் மகன்கள் :
41. சுருதன்
42. கவி
43. விருஷன்
44. வீரன்
45. சுபாகு
46. பத்ரா
47. சாந்து
48. தர்ஷன்
49. பூர்ணமாஷ்
50. சோமகன்


லக்ஷ்மணையின் மகன்கள் :
51. பிரபோதன்
52. கத்ரவான்
53. சிம்ஹன்
54. பலன்
55. பிரபலன்
56. ஊர்த்துவகன்
57. மஹாசக்தி
58. சஹன்
59. ஓஜா
60. அபராஜித்.

மித்ரவிந்தையின் மகன்
61. விருகன்
62. ஹர்சன்
63. அனிலன்
64. க்ருத்ரன்
65. வர்தன்
66. அன்னாடன்
67. மஹேசன்
68. பாவன்
69. வன்ஹி
70. க்சுதி


பத்ராவின் மகன்கள் :
71. சங்க்ரமஜித்
72. ப்ருஹத்சன்
73. சூரப்
74. ப்ரஹாரன்
75. அரிஜித்
76. ஜெயன்
77. சுபத்ரன்
78. வாமன்
79. ஆயு
80. சாத்யகன்


இவர்களில் பிரத்யும்னன் வரலாறும், பேரன் அனிருத்தன் வரலாறும் பாகவத புராணத்தில் கிடைக்கும். சால்வன் துவாரகையை தாக்கியபோது பிரத்யும்னன் சால்வனுடன் போர் செய்தான். சாம்பன், சாருதேசனன் ஆகியோரும் போர் செய்தனர். சாம்பனைப் பற்றி அவன் துர்வாசரின் சாபம் பெற்ற கதை மகாபாரதத்தில் கிடைக்கும். மற்றபடி இவர்கள் அனைவரும் அழிந்ததால் வரலாறு கிடையாது.
_______________________________

6. காந்தாரியின் நூறு குழந்தைகள் எந்த முறையில் உயிர்பெற்றனர்? எந்த முறையில் வியாசர் கையாண்டார்?
* பதில்:

இன்று விஞ்ஞானத்தில் ஸ்டெம்செல் என்று கர்ப்பத்தில் உடல் உண்டாகும் அடிப்படை செல்களைச் சொல்கிறோம். இந்த ஸ்டெம்செல்கள் அடைப்படைச் செல்களாகும். இவை தானாகவே எலும்பகளாக, தசைகளாக, நரம்புகளாக வளரும் சக்தி பெற்றவை. இவற்றைக் கொண்டு நமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் செய்து கொள்ளலாம் என விஞ்ஞானம் சொல்கிறது.

நாம் பிறக்கும்போது நஞ்சுக்கொடி, இரத்தம் வெளியாகிறதல்லவா அதில் இந்த ஸ்டெம் செல்கள் இருக்கும். அதை சேகரித்து வைத்து பிற்காலத்தில் நமக்குத் தேவையான உடல் உறுப்புகளை உண்டாக்கிக் கொள்ளலாம்.

வியாசரின் முறையும் இதுபோன்ற ஒரு முறையாகவே விவரிக்கப்படுகிறது.
அதாவது வியாசர், தாயின் கர்ப்பப்பை போன்று 101 பானைகளை தயார் செய்கிறார்.

அவற்றில் கருவளர்ச்சிக்குத் தேவையான அனைத்து மூலைகைகளையும் மருந்துகளையும் சேர்க்கிறார். கருவளர்ச்சிக்குத் தேவையான ஆக்சிஜன், புரதங்கள் மற்ற இதர சத்துக்களை அந்த மருந்துகள் உருவாக்குமாறு செய்கிறார். இதனால் மாமிசபிண்டமாகக் கிடந்த ஸ்டெம்செல்கள் தனித்தனிக் குழந்தைகளாக முழுவளர்ச்சியை எட்டின.
இன்று விஞ்ஞானம் இதை செய்யும் நிலைக்கு மிக அருகில் வந்திருக்கிறது.

ஆனால் தாயின் வயிற்றைப் போல குழந்தை வளர நம்மால் இன்குபேட்டர் தயாரிக்க முடிந்தது. குறைமாதக் குழந்தைகளை அங்கே வைக்கிறோம். அடுத்த நிலை கரு வளர்ச்சிக்கான சக்திகளை தொப்புள்கொடி மூலம் குழந்தைக்கு அளிப்பதாகும். அதன் ஆய்வு நடந்தாலும் வாடகைத் தாய்மார்கள் கிடைப்பதால் மருத்துவர்கள் அதில் அதிக கவனம் செலுத்தவில்லை.
_______________________________

7. பீஷ்மருக்கு, தான் நினைக்கும் போது மட்டுமே மரணம் நேரும் வரம் சந்தனுவால் கிடைத்தது. இந்த வரத்தை சந்தனுவால் எவ்வாறு தர இயலும்?

* பதில்:

இக்ஷவாகுகுலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் மஹாபிஷன் என்ற பெயருடன் இருந்தான். அவன் அஸ்வமேத யாகங்களையும் நூறு ராஜசூய வேள்விகளையும் செய்தவன். இவனே பிரம்மனின் சாபத்தால் சந்தனுவாகப் பிறக்கிறான்.

அதுவுமின்றி கங்கை அவனை விட்டு நீங்கியபின் அவன் முப்பத்தாறு வருடங்கள் பல வேள்விகள், அறப்பணிகள் செய்கிறான். இவற்றால் அவனுடைய தவ வலிமை கூடுவதால் அவனுக்கு வாக்குபலிதம் உண்டாகிறது.

கற்புக்கரசிகள், மஹாதவம் செய்யும் ரிஷிகள், தேவர்கள், வேள்விகளைச் செய்யும் மன்னர்கள் ஆகியோருக்கும் வரமும் சாபமும் தர இயல்கிறது. சந்தனுவுக்கு இன்னொரு சக்தியும் உண்டு. அவன் தழுவிக் கொண்டோருக்கு அத்தனை நோய்களும் போய் உடல் புத்துணர்ச்சியடையும். (வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் கட்டிப்பிடி வைத்தியம் இங்கிருந்து எடுக்கப்பட்டதே)
_______________________________

8. இறுதியான கேள்வி. தீபாவளிப் பண்டிகை இராமாயணத்தில் இருந்து தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அப்படி என்றால் மஹாபாரதம் நடந்த காலத்தில் அங்குள்ள மக்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினார்களா?

* பதில்:

மஹாபாரத காலத்தில் தீபாவளி கொண்டாடும் வழக்கம் இருந்ததாக ஒரு பதிவும் எங்கும் இல்லை. எந்த ஒரு சுபகாரியங்களுக்கும் தீபங்களால் வீடுகளை, தெருக்களை அலங்கரிக்கும் வழக்கம் மாத்திரமே இருந்திருக்கிறது.

தீபாவளி கொண்டாடும் பழக்கம் சமண மதம் வேரூன்றிய பின் தொடங்கிய பழக்கமாகும். மகாவீரர் மறைந்ததை ஒட்டி தீபம் ஏற்றி வீடுகளில் வைக்கும் பழக்கம் தொடங்கப்பட்டது. இந்துக்கள் நல்ல விஷயங்களை எங்கிருந்தாலும் தமதாக்கிக் கொள்வார்கள்.

அதே நாள் இராமன் அயோத்தி திரும்பிய நாளாக கருதப்பட்டதால் இந்துக்களும் அதைக் காரணமாக்கி அதை இந்துத் திருநாளாக மாற்றினர். பின்னர் பாகவத புராணத்தின் நரகாசுரன் கதையின் அடிப்படையில் தமிழகத்தில் தீபாவளி இன்னொரு அவதாரம் எடுத்தது...

திருச்சிற்றம் பலம்

  🏼

Tuesday, 23 August 2016

திருவள்ளுவர்.

Thursday, 18 August 2016

ராஜேந்திர சோழன் 1000






வங்கக் கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம்... இங்கெல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் சீறிப் பயணித்தவன் ராஜேந்திர சோழன். அவன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு இது.

''ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை திரட்டி, கங்கை வரை போய் வெற்றிக்கொடி நாட்டி வந்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே. அதன்பிறகு மற்ற மன்னர்கள் பகைவரைத் தடுப்பதோடு சரி. தாக்கியதற்கான சரித்திரம் இல்லை.
கங்கை கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த ராஜராம் கோமகன் என்பவர், ராஜேந்திர சோழனின் 1000-வது பட்டாபிஷேக விழாவைக் கொண்டாடத் திட்டங்கள் போட்டிருக்கிறார். இந்த மாதிரியான விழாக்கள், தமிழர் சரித்திரம் மீது ஆர்வம்கொண்ட இளைஞர்களுக்கு உதவி செய்யும். தமிழ், மேலும் வாழும்!''

''ராஜேந்திர சோழனின் தீரம் எத்தகையது?''
'' 'அலைகடல் மீது பல கலம் செலுத்தி’ என்றுதான் அவன் மெய்கீர்த்தி சொல்கிறது. கடலின் தன்மை தெரிந்து, காற்றின் தன்மை தெரிந்து, இருட்டில் சுடர் மூலம் வழி தெரிந்து, ஆமைகள் போகிற நீரோட்டப் பாதை தெரிந்து, நூற்றுக்கணக்கான நாவாய்கள் அதாவது மிகப் பெரிய மரக்கலங்களோடு அவன் கிழக்கே உள்ள நாடுகளுக்குப் போயிருக்கிறான். இன்றைய சிங்கப்பூர், மலேசியா, ஜாவா, இந்தோனேசியா... எனப் பல நாடுகளில் அவன் கால்கள் பதித்திருக்கிறான். போரில் வென்று பெரும்பொருட்களை தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கிறான்.
சோழர்களுக்கு நடு நாடு, தொண்டை நாடு, தாண்டி கீழைச் சாளுக்கிய நாட்டோடு மிக நல்ல நட்பு இருந்திருக்கிறது. அதாவது ஆந்திர மக்களோடு, தமிழர்கள் மிக நெருக்கமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், மேலைச் சாளுக்கியம் என்கிற கன்னட மக்களோடுதான் அவர்கள் எப்போதுமே முரண்பட்டு இருக்கிறார்கள். கீழைச் சாளுக்கியத்தை கன்னடர்கள் கபளீகரம் செய்யாதிருக்க, மணவினை ஏற்பாடு செய்து கீழைச் சாளுக்கியத்துக்கு மிகப் பெரிய படை அனுப்பவேண்டிய நிர்பந்தம் ராஜேந்திர சோழனுக்கு ஏற்பட்டது.
கீழைச் சாளுக்கியத்துக்கு மேல் இருந்து கலிங்க தேசமும் ஒட்ட தேசமும் அவனுக்குத் தொந்தரவு செய்ததால் அதைத் தண்டிக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. அவ்வளவு தொலைவு போய்விட்டதால் இன்னும் சற்று நகர்ந்து, வங்காளத்தில் புகுந்து மிகப் பெரிய கங்கை நதியையும், படகுகளையும், முகத்துவாரத்தையும் அவன் பார்த்து வியந்திருக்கிறான். யானைகள் வைத்து பாலம் கட்டி, அதன் மீது குதிரைகள் ஏற்றி மறுகரைக்குப் போயிருக் கிறான். இடைவிடாது மழை பெய்யும் அசாம் வரைக்கும் அவன் போயிருக்க வேண்டும்.
அங்கு இருந்த பெண்டிர், பண்டாரங்களை மட்டும் அல்ல... கோயில் சிலைகளையும் பெயர்த்து எடுத்து வந்திருக்கிறான். அவன் கொண்டுவந்த பல சிலைகளை என்ன காரணத்தினாலோ கங்கை கொண்ட சோழபுரத்தில் வைக்காமல், அதன் அருகே செங்கமேடு என்ற கிராமத்தில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்படுகின்றன. எந்த வழிபாடும் இல்லாமல் இருக்கின்றன!''
''ராஜேந்திர சோழனின் சொந்த வாழ்க்கையில் என்ன செய்தி இருக்கிறது?''
''அவனுக்கு மனைவியர் பலர். அதில் வீரமா தேவி என்பவள் மிக நெருக்கம். ராஜேந்திர சோழன் தன் 84-ம் வயதில் மரணமடைந்தபோது அவளும் உடன்கட்டை ஏறினாள். ராஜேந்திர சோழன் தன் மத்திம வயதில் திருவாரூரைச் சேர்ந்த பரவை என்கிற தேவரடியாரை நேசித்தான். தேவரடியார் என்று அப்போது அழைக்கப்பட்டவர்கள், தங்களை கோயிலுக்கு எனத் தீர்மானம் செய்தவர்கள்; நித்யசுமங்கலிகள். அவர்களைத் திருமணம் செய்துகொண்டால் அது ஒரு வைப்பாட்டி நிலையில்தான் இருக்கும். ஆனால், பரவையின் அறிவிலும் அழகிலும் ஈர்க்கப்பட்டு, ராஜேந்திர சோழன் அவளை அவ்விதம் நடத்தாமல், தன் தேரில் ஏற்றி திருவாரூர் முழுவதும் சுற்றி வந்தான். அவள் விரும்பியதால் செங்கல்லால் அமைந்த திருவாரூர் கோயிலைக் கருங்கல்லால் உருவாக்கி, அதன் மீது தங்கத் தகடு வேய்ந்து, அவளை முதன்முதலில் சந்தித்த இடத்தில் ஒரு கல்வெட்டு பொறித்திருக்கிறான். அவள் உயரத்துக்கு ஒரு வெண்கலக் குத்துவிளக்குச் செய்யச் சொல்லி அதைக் கருவறையில் வைத்து ஏற்றியிருக்கிறான். இன்று இருக்கும் விளக்கும் அவன் கொடுத்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது!
இதே விதமாக ராஜேந்திர சோழன் தன்னுடைய தந்தையின் அனுக்கிக்கு... அதாவது காதல் தோழிக்கு ஒரு பள்ளிப்படை கோயில் எழுப்பியிருக்கிறான். அவளுக்கு பஞ்சவன் மாதேவி என்று பெயர். பஞ்சவன் மாதேவி பட்டமகிஷியும் அல்ல; மனைவியும் அல்ல; அனுக்கி. அதாவது, கேர்ள் ஃப்ரெண்ட்போல. ஆனால், அவள் ராஜேந்திரனால் அங்கீகரிக்கப்பட்டு, தாய் எனப் போற்றியிருக்கிறான். அந்தப் பள்ளிப்படை கோயில் இன்றளவும் நன்றாக இருக்கிறது!''
''நாட்டின் நிர்வாகம் எப்படி இருந்தது?''
''மிகச் சிறப்பாக இருந்தது. விவசாயத் தொழில்கள் மிக அற்புதமாக நடைபெற்றன. ஒரு காசுக்கு 150 வாழைப்பழம். ஒரு பொற்காசுக்கு இரண்டு பசு மாடுகள், ஓர் எருமை. ஒரு பொற்காசுக்கு ஆழாக்கு ஏலக்காய் என வியாபாரங்கள் நடந்திருக்கின்றன. பசு சல்லிசாகக் கிடைக்கும். ஆனால், ஏலக்காய் கேரளத்தில் இருந்து வரவேண்டும். அதனால் விலை அதிகம். கம்மாளர்களுக்கும் சிற்பிகளுக்கும் உலோகத் தச்சர்களுக்கும் மரத் தச்சர்களுக்கும் மிகப் பெரிய மரியாதை இருந்தது. அவர்கள் நல்லது கெட்டதுக்கு சங்கு ஊதிக்கொள்ளவும், வீட்டுக்கு இரண்டு வாசல் வைத்துக்கொள்ளவும், சுண்ணாம்பு அடித்துக்கொள்ளவும், செருப்பு அணிந்துகொள்ளவும், பல்லக்கில் ஏறவும், தோளில் துணி போத்திக்கொள்ளவும், தலைப்பாகை அணியவும், பூணூல் அணிந்துகொள்ளவும் ராஜேந்திர சோழன் உரிமை கொடுத்திருக்கிறான். அளவான வரி, அனைவருக்கும் அத்தியாவசிய வசதிகள், கரை புரண்டோடிய செல்வம்... என வளமும் நலமுமாக இருந்தது சோழ சாம்ராஜ்ஜியம்!''
''இப்போது அந்தச் செல்வங்கள் எல்லாம் எங்கே?''
''400 வருட பகைமையைத் தீர்த்துக்கொள்ள, பாண்டியர்கள் படையெடுத்து வந்து சோழர்களைத் தாக்கி ஒரு தூணும் நிற்கவொட்டாது இடித்து, கோவேறு கழுதை பூட்டி, பேய் கடுகு விதைத்து ஊரை நாசம் செய்தார்கள். பொன் பொருட்களை வாரிக்கொண்டு போனார்கள். அவை அடுத்த தலைமுறையிலேயே டெல்லியில் இருந்து வந்த இஸ்லாமிய தளபதியால் கொள்ளையடிக்கப் பட்டன. 36 யானைகள் முழுவதும் பொன், பொருட்கள் டெல்லிக்குக் கொண்டுபோகப்பட்டன. டெல்லியில் உள்ள ஆட்சியாளர்களை அடுத்த 120 வருடங்களில் ஆங்கிலேயர்கள் தாக்கி, அந்தப் பொன் பொருட்களை எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குப் போனார்கள். இங்கிலாந்தின் பல சாலைகள், கட்டடங்கள் இந்தப் பொற்காசுகளால் நிர்மாணிக்கப்பட்டவை; தமிழக செல்வத்தால் வளர்ந்தவை!''
''பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் ஏன் பகை?''
''ஓர் இனம் மற்ற இனத்தால் அழிக்கப்படாது. எப்போதுமே ஓர் இனம் இரண்டாகப் பிரிந்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். தமிழ் பேசும் பாண்டியர்களைக் கடுமையாகத் தாக்கி தமிழ் பேசும் சோழர்கள் துன்புறுத்தினார்கள். கன்னியாகுமரி வரை துரத்தினார்கள். பனங்காட்டுக்குள் வாழச் செய்தார்கள். அதே பாண்டியர்கள் பல தலைமுறைகளுக்குப் பிறகு மிக வெஞ்சினத்தோடு, சோழர்களின் பல்வேறு பெருமைகளை அழித்தார்கள். மிகச் சிறந்த தமிழர் நாகரிகம் ஒன்று 10 சதவிகிதம் மட்டும்தான் பார்க்க, கேட்கக் கிடைத்தன!
இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்த ராஜேந்திர சோழன் காஞ்சிபுரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் இறந்துபோனான். அவன் கடைசியாகத் தரிசித்த ஒரு கோயில் இருக்கிறது. சுற்றிலும் பனைமரங்கள்; பொட்டல்காடு. ஏன் அந்தக் கோயிலுக்கு வந்து இறந்துபோனான் என்று மனம் பதறுகிறது. 'இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்துவிட்டு, அங்கே அந்தச் சிறிய கிராமத்தில் இறந்துபோனாயே... ஏனப்பா?’ என்று அலறத் தோன்றுகிறது!''

விநாயகருக்கு முதல் மரியாதை ஏன் ?



இந்து சமய பூசைகளின் போது முதலில் விநாயகருக்கான விக்னேசுவர பூசையத்தான் செய்கிறோம். விநாயகரின் உருவச்சிலை இல்லாவிட்டால், மஞ்சள்தூளில் பிள்ளையார் பிடித்து வைத்துப் பூசை செய்த பிறகுதான் மற்ற பூசைகளைச் செய்கிறோம். விநாயகருக்கு ஏன் இந்த முதல் மரியாதை?

விநாயகரை மங்களநாதா என்றும், சித்திதாதா என்றும் கூறுகிறோம். அவர் அனைத்து நன்மைகளையும் நமக்கு அருள்பவர். நாம் மேற்கொள்ளும் செயல்கள் விக்கினம் (இடையூறு) இல்லாமல் நடைபெற அவர் அருள் புரிபவர்.அதனால் அனைத்து நல்ல செயல்களுக்கும் முதலில் விக்கினேசுவர பூசை செய்ய வேண்டும்.

கணபதி ஞானத்தின் உருவம். அதனால், அவர் நம்மை நமது முயற்சிகளில் எப்போதும் நல்ல வழியில் நடத்துவார். தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வார். ஆகையால், நாம் நல்ல வழியில் காரியசித்தி (செயல் வெற்றி) ஏற்பட முதலில் அவருடைய அருளை நாடுகிறோம்.

யோக அடிப்படையிலும், வேதாந்தப்பூர்வமாகவும் பார்த்தால், அவர் மூலாதாரர். ஆகையினால், எந்த நற்செயலுக்கும், மூலமாகவும், ஆதாரமாகவும் அவரைக் கருதி வழிபடுகிறோம்.

பஞ்சபூதங்களில் அவர் தண்ணீர் உருவமானவர். அகச்சுத்தி மட்டுமின்றி, புறத்தூய்மைக்கும் நாம் தண்ணீரை நாடுகிறோம். அதனால் எந்தப் பூசையையும் செய்யத் தொடங்கும் முன்பு கணேச பூசையைச் செய்கிறோம்.

கணேசர் வரம் வழங்குபவர் என்று சொல்வதுண்டு. எந்த ஒரு செயலிலும் வெற்றியை ஒரு வரமாக நாடுவது நமது இயல்பு. எனவே, வெற்றி எனும் வரத்தைப் பிரசாதமாக அருளுவதற்கும், நாம் முதற் கடவுளாகக் கணபதியை நாடுகிறோம்.

புராணங்களில், நாம் எந்த இந்து சமயச் சடங்கையும் விக்கினேசுவர பூசையுடன்தான் தொடங்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரிக்வேதம் கணேசரை ஜேஷ்டராஜர் எனக் கூறுகிறது. ஓம் என்ற பிரணவத்துக்கு உருவமாக அமைந்த மூர்த்தி அவர்.

எனவே, எந்தப் பூசையிலும், எந்த நல்ல செயலுக்கான தொடக்கத்திலும் விக்கினேசுவரரைப் பூஜிப்பது பொருத்தமானது.

விநாயகர் - காணிக்கை பலன்கள்




விநாயகர் ஆலயத்தில் செலுத்தப்படும் காணிக்கை மற்றும் அங்கு நடத்தப்படும் பூஜைகள் மற்றும் ஹோமங்களில் பங்கேற்று தரப்படும் காணிக்கைகளால் கிடைக்கும் பலன்கள்

1 . மோதகம் எனும் கொழுக்கட்டை - நினைத்த காரியம் நடக்கும்.
2 . அருகம் புல் கொண்டு பூஜை - செல்வம் தழைக்கும்.
3 . வெள்ளெருக்கு திரி கொண்டு விளக்கு ஏற்றுதல் - நினைத்த காரியம் அனைத்தும் தடங்கல் இன்றி நடைபெறும்.
4 . நெல் பொறி - புகழ் கிடைக்கும்.
5 . நான்கு லட்ஷ ஜெபம் செய்தல் - ஆத்ம ஞானம் கிடைக்கும்.
6 . நாற்பதாயிரம் ஆவர்த்தி ஹோமம் - இஷ்ட சித்தி கிடைக்கும் .
7 . மட்டை தேங்காய் - பூரண பலன்.
8 . ஹோம திரவிய சாமான்கள் தானம் - அனைத்திலும் நிறைவு கிட்டும்.
9 . வெண்பட்டு ஹோமம் - புத்திர பாக்கியம்.
10 . பழங்கள் - திருமண பாக்கியம், கல்வியில் மேன்மை.
11 . வெள்ளெருக்கு, அரசு, வன்னி மர சமித்துக்கள் - வேலை வாய்ப்பு கிடைக்கும்.
12. மகா பூரணஹார்த்தி - நிரந்தர வேலை, சுக வாழ்வு