Sunday, 18 September 2016

கோவில் கருவறையின் தேவ ரகசியம்


மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது.இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது.இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள்.நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் டங்கியுள்ளன.வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள்,பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர்.பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும்.பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க விரவிபரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது.

இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை கடைபிடித்தனர்.எல்லா ஆலயங்களிலும் கருவறையானது, வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும். கருவறை அமைப்பை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை

1. அதிஷ்டானம்,
2. பாதம்,
3. மஞ்சம்,
4. கண்டம்,
5. பண்டிகை,
6. ஸ்தூபி

எனப்படும். இதில் மூலவர் சிலை நிறுவப்படும்
பகுதியை அதிஷ்டானம் என்பார்கள். பீடம் என்றும் சொல்வதுண்டு.
கருவறையின் வெளிப்புறச்சுவரை கோஷ்டம் என்பார்கள். அவற்றில் பல்வேறு கடவுள் உருவங்கள் இடம் பெற்றிருக்கும்.ஒரு கோவில் எந்த மூர்த்திக்கு உரியதோ, அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.
அது மட்டுமின்றி அந்த கருவறை எத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் இறை அருளை அள்ளித்தரும் பொக்கிஷமாக இருக்கவும் வழி வகுத்திருந்தார்கள்.
இந்த நடைமுறை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதாவது ஆகம வழிபாட்டு முறைகளுக்கும் முன்பே தோன்றி விட்டது.

அந்த காலக் கட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள், தங்களது அரண்மனையை விட அருள் அலை தரும் கோவில்கள் எப்போதும் உறுதியாக நின்று நிலைப் பெற்று திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கற்களால் ஆன கருவறையைக் கட்டினார்கள். அவர்கள்பெருங்கோவில், மாடக்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடிக் கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று 8 வகைக் கோவில்களைக் கட்டினார்கள்.ஆனால் கருவறை பகுதி சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன.

இதில் சதுர அமைப்பு தேவ உலகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் மண்ணுலகத்துடனும் தொடர்புடையதாக கருதப்படுகின்றன.
மிழ்நாட்டில் முக்கோண அமைப்புடன் ஆலய கருவறை அமைப்பதில்லை. வட்ட வடிவ கருவறைகளை புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோயில்களிலும் மட்டுமே காணமுடியும்.என்றாலும் மதுரை அழகர்கோவிலில் உள்ள ஆலயக் கருவறை வட்ட வடிவில் இருப்பது ஆச்சரியமானது.மற்றபடி தமிழக ஆலயங்களில் கருவறை சமசதுர வடிவில்தான் இருக்கும். கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும்.தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி ‘‘கஜப்ருஷ்டம்’’ வடிவில் இருக்கும்.கஜம் என்றால் யானை,ப்ருஷ்டம் என்றால் பின்பகுதி என்று பொருள். ஆக கருவறை வெளிப்புற சுவர் யானையின் பின் பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று அர்த்தம்.இத்தகைய அமைப்பை ‘‘தூங்கானை மாடக்கோவில்’’ என்பார்கள்.

அதாவது ஒரு யானை முன்னங்கால்களை முன்புறம் நீட்டியும்,பின்னங்கால்களை பின்புறம் மடித்தும் படுத்திருப்பதைப் போன்று காணப்படும்.இத்தகைய கருவறையை நம் முன்னோர்கள் சாதாரணமாக அமைத்து விடவில்லை.கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் தானியங்களை விதைப்பார்கள். அந்த தானியங்கள் மூன்று நாட்களில் முளைத்து விட்டால் உத்தமமான இடம். 5 நாட்களில் முளைத்தால் மத்திமம். 5 நாட்களுக்கு பிறகு அதமம்.மத்திமம், அதமமான இடங்களில் கருவறை கட்ட மாட்டார்கள். உத்தமமான இடத்தில் மட்டுமே கருவறையை அமைப்பார்கள்.

இது பிரபஞ்ச சக்திகளை ஒன்று திரட்டி தரும் தலமாக மாறும் என்று நம் மூதாதையர்கள் கணித்துதான் கோவில்களையும் கருவறைகளையும் கட்டினார்கள்.கருவறைக்குள் வைரம், வைடூரியம், தகடுகள், கருங்கற்கள், சுட்ட கற்கள், ஆற்று மணல் போன்றவற்றை போட்டு நிரப்பும் வழக்கமும் இருந்தது.சுண்ணாம்பு, கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து அரைத்து பூசி கருவறையை உருவாக்குவதை
கர்ப்பக கிரக லட்சணம் என்றனர்.கர்ப்பக்கிரக சதுர அளவு 1 தண்டம் எனப்படும்.

இதன் அடிப்படையில்தான் ஆலயத்தின் மற்ற பகுதி அமைப்புகள் இருக்கும்.உள்பிரகாரம் ஒரு தண்ட அளவு விஸ்தாரத்துடனும், இரண்டாம் பிரகாரம் இரண்டு தண்ட விஸ்தாரத்துடனும், மூன்றாம் பிரகாரம் 4 தண்ட விஸ்தார அளவுடனும், நான்காம் பிரகாரம் 7 தண்ட விஸ்தார அளவுடனும் இருத்தல் வேண்டும்.இப்படி நம் முன்னோர்கள் கருவறையை பார்த்து, பார்த்து பரிசோதித்து கட்டினார்கள். சங்க காலத்தில் கருவறையை நம் முன்னோர்கள் திருவுண்ணாழிகை என்றழைத்தனர்.


கருவறை வலுவாக இருக்க வேண்டும் என்பதிலும் நம் முன்னோர்கள் மிகவும் கவனம் செலுத்தினார்கள். தேப்பெருமா நல்லூரில் உள்ள சிவாலய கருவறை தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது.பெரும்பாலான கருவறைகள் இப்படித் தான் கட்டப்பட்டுள்ளன.அது போல கருவறை வடிவமைப்பிலும் மிகுந்த நுட்பம் கடைபிடிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் ஆலய கருவறை இதயம் போன்றது.வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் ஆலய கருவறை ஓங்கார வடிவத்துடன் இருக்கிறது.


கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய கருவறை அமைப்பு ஆச்சரியப்படத்தக்கது. சந்திரகாந்த கல்லால் உருவான இந்த கருவறை வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும்.இப்படி பல சூட்சமங்கள் கொண்ட கருவறையை நமது முன்னோர்கள் சற்று இருட்டாக வைத்தனர்.அதிலும் ஒரு அறிவியல் பின்னணி உள்ளது.கருவறை விமான கலசம் மூலம் சூரிய கதிர்களின் அலை, மூலவர் சிலைக்கு கடத்தப்படும். அதே சமயம் சிலைக்கு அடியில் உள்ள
யந்திரம் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களை மூலவர் சிலைக்கு கடத்தும்.இதனால் கருவறையில் இறை ஆற்றல்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிரம்பியிருக்கும்.கருவறை சற்று இருட்டாக இருந்தால்தான் அந்த இறை ஆற்றல்கள் ஆலயத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவும்.இந்த விஞ்ஞான உண்மையை நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால்தான் அவர்கள் ஆலய கருவறையை சற்று இருளாக இருக்கும்படி செய்தனர்.

அது மட்டுமின்றி அந்த இறை ஆற்றல்களைப் பெற தினமும் ஆலயங்களுக்கு செல்ல வற்புறுத்தினார்கள்.ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் கருவறையின் ஆற்றலையும் அருமையையும் புரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். நாம் வீட்டில் வழிபட்டால் 10 சதவீத ஆற்றலே கிடைக்கும். கோவில் பிரகாரத்தில் வழிபட்டால் 100 சதவீத ஆற்றல் பெறலாம்.குளத்தில் வழிபட்டால் 1000 மடங்கு பலனும், ஆற்றில் வழிபட்டால் லட்சம் பங்கு பலனும், அருவிக்கரை பகுதிகளில் வழிபட்டால் 1 கோடி பங்கு பலனும், கடற்கரையில் வழிபட்டால் 2 கோடி பங்கு பலனும், ஜீவசமாதிகளில் வழிபட்டால் 10 கோடி பங்கு பலனும் கிடைக்குமாம்.ஆனால் ஆலய கருவறை முன்பு நாம் வழிபாடு செய்தால் பலநூறு கோடி அளவுக்கு ஆற்றல்களை பெற முடியுமாம்.இதில் இருந்தே நாம் கருவறை முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.எல்லா இடங்களிலும் காந்த அலைகள் இருந்தாலும் கருவறையில்தான் அவை நமக்கு ஆற்றல் தரும் சக்தியாக மாறுகிறது என்பதையாராலும் மறுக்க முடியாது.

இதை கருத்தில் கொண்டே கருவறை எல்லா பக்கமும் மூடப்பட்டுள்ளது.கருவறையில் ஒரே ஒரு விளக்கு தொங்க விட்டிருப்பார்கள். அல்லது விக்கிரகத்துக்கு பின்னால் ஒரு செயற்கை ஒளி வட்டத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். இவை தான் கருவறையில் உள்ள இறை ஆற்றல்களை வெளிப்பக்கத்துக்கு எகிற செய்கிறது.தினம், தினம் இந்த இறை ஆற்றல்கள் திரண்டு வெளி வருகிறது. அதனால்தான் கருவறையில் பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம்,குங்குமம், விபூதி, எண்ணை என எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தாலும் அவை நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.
அதற்கு பதில் கருவறையில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக மாறுகிறது.


கருவறை நைவேத்தியங்கள் மகத்துவம் பொருந்தியமருந்தாக மாறுவதற்கு இறை ஆற்றல்களே காரணமாகும்.கருவறையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் போதும், நைவேத்தியம் படைக்கும்போதும் திரை போட்டு மூடி விடுவார்கள்.தீபாராதனை காட்டும்போது திரையை விலக்குவார்கள். இதிலும் விஞ்ஞான தத்துவமே பின்புலமாக உள்ளது.கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும்.

திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்தஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும்.இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.இதை கருத்தில் கொண்டுதான் சித்த சுவாதீனம் அடைந்தவர்களை கோவில் வளாகத்தில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

கோவிலில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்கள் சுவைமிக்கதாக மாறுவதற்கும், அபிஷேக நீர் நமது உடம்பில்பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் காந்த அலைகளே காரணமாகும்.கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டுபிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர்.

ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும்.எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம்.

இந்த காந்த அலைகள்தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன்‘‘வயர்லஸ்’’ தொடர்பு போல இணைக்கின்றன.

எனவே ‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’ பெற கருவறை வழிபாடு மிக, மிக முக்கியமானது.வெளியே வெயில் உள்ளே குளிர்ச்சி கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டது.

இதன் கர்ப்பகிரகம் சந்திரகாந்தகல்லால் ஆனது.இது தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப கர்ப்பகிரகத்தை மாற்றும்.

அதாவது வெளியே வெப்பமாக இருக்கும் போது கர்ப்பகிரகம் குளிர்ச்சியாக இருக்கும். வெளியே கடும் குளிராக இருந்தால் கர்ப்பகிரகத்தின் உள்பகுதி வெப்பமாக மாறிவிடும்

மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்




Sri AnnaiOshaoConfuciusNapoleon Hill


1. சிறந்த வழி

நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி - ஸ்ரீ அன்னை

2. பெருந்தன்மையே முதல் படி

1)  இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.
2)  நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.
3)  இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.
4)  தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.
- சீனப் பழமொழி

3. பயப்படாதீர்கள்

நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்!
தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!
- நெப்பொலியன் ஹில்

4. மூன்று ஆயுதம் நம்மிடம்

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
- கன்ஃப்யூஷியன்

5. துணிவே துணை

ஜூலியஸ் சீசர் போல ரோமப்பேரரசராக உயர வேண்டுமா? அல்லது உங்களுக்குள்ளேயே சிறைப்பட்ட ஒரு பறவையாக வாழ வேண்டுமா? என்பது உங்களின் துணிச்சலைப் பொறுத்தே அமையும். இந்த இரண்டு முடிவுகளும், வெற்றிகளும் உங்களுக்குள்ளேயேதான் இருக்கிறது. எதைத் தேர்வு செய்து தன்முனைப்புடன் உங்களை நீங்களே வழி நடத்திச் செல்கிறீர்களோ, அது போலவே - நீங்கள் எண்ணியது போலவே - உருவாகி விடுவீர்கள். துணிச்சலுடன் உயர்ந்த இலட்சியங்களை அடைய எப்பொழுதும் முன்னோக்கியே செல்லுங்கள்.
-ஸர் டி.ப்ரௌன்

6. வெற்றிக்கு முதல்படி எது?

மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.
- டாக்டர் ஜான்சன்
( உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்தவர் சாமுவேல் ஜான்சன் 33 ஆண்டுகள் கடின உழைப்பில் வெளிவந்தது. ஆனால் இவர் இறந்து 13 ஆண்டுகள் கழித்தே முதல் பதிப்பு வெளியானது )

7. அன்பின் நோக்கம்

உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு, உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்
- ஸ்ரீ அன்னை

8. விதைத்ததைத்தான் அறுவடை செய்கிறோம்

ஒவ்வொரு மனிதனும் விதக்கிறாள். ஒருவன் வாய்ச் சொற்களால் விதக்கிறான். இன்னொருவன் செயல்களால் விதைக்கிறான்.

எல்லா மனிதர்களும் தாங்கள் விதைத்த பண்பு விதைகளுக்கு ஏற்ப கோதுமைப் பயிராகவோ அல்லது களைச் செடியாகவோ வளர்கிறார்கள்.

எதைப்பற்றியும் சிந்திக்காமல் விதைத்தவனுக்கு எந்தச் செயல் நிறைவேற்றமும் ஏற்படவில்லை.

செயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு அதைத் தேடி உண்மையாக உழைத்தவனே 'வெற்றி' என்னும் நற்கனிகளைப் பெற்றவனாவன்.

பெரும்பாலான மக்கள் வயதான பிறகே தங்களின் வளர்ச்சியின்மை குறித்து அழுது புலம்புகின்றனர்.

நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எதை விதைத்தீர்களோ அதைத்தான் அறுவடை செய்கிறீர்கள்.

நல்லவற்றையே எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் உங்களுக்கு வெற்றி என்னும் அறுவடை சிறப்பாக இருக்கும்.
- பார்பர்

9. அஞ்சா நெஞ்சம் வேண்டும்

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
- சுபாஷ் சந்திரபோஸ்

10. நல்ல எண்ணெய் எது?

மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தில் கொடுமையான துன்பம் தருகிற கதை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொறு மனிதனும் 'துணிவு' என்ற எண்ணெயை தன்னுடைய சக்கரத்திற்கும், மற்றவர்களின் வாழ்க்கைச் சக்கரங்களுக்கும் போட வேண்டும் அப்போது தான் எல்லாச் சக்கரங்களும் இணைந்து முன்னேறும்.
- அய்டா 


11. ஓய்வு எடுங்கள் 

'திடும்' எனப் பொங்கிச் செயலாற்றும் கடல் நடுவேதான் அமைதியாகத் தீவுகளும் உள்ளன. மனிதனும் இதுபோல், வாழ்க்கைப் போர்க்களமாக இருந்தாலும் வார ஓய்வு நாட்களில் முழு ஓய்வுடன் அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். ஓய்வு நாளை முழு அமைதியுடன் கழிக்கும்போது கிடைக்கும் சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
- டப்ஃபீல்டு

12. எளிமைதான் முன்னேற்றம்

எளிமையாக இருங்கள். எளிமைதான் உன்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும். மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான அறிவைத் தரும் சாவி எளிமையில் தான் அடங்கி இருக்கிறது. நல்லவற்றிற்கு உடனே நம் மனதைத் திறக்கவும், கெட்டதற்கு உடனடியாகவும் நம் மனக்கதவை மூடக்கூடிய சக்தியும், எளிமையாக வாழும்போதுதான் கிடைக்கும். எளிமையாக வாழத்தான் நமக்கு நிறையத் துணிச்சல் வேண்டும். அது இருந்தால் நாம் நினைத்ததை சாதிக்கலாம்.
- ஜே.ஆர்.லோவெல்

13. அன்பை அனுப்புங்கள் 

அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள். அதைப் பயன்படுத்துங்கள். மாமிசம் சாப்பிடாத பழக்கம் உங்கள் அன்பிலிருந்து மலர்ந்திருந்தால் அது ஓர் அற்புதமான விஷயம். அகிம்சை, அன்பின் காரணமாக மலர்ந்தபோது பரம தர்மமாகிறது. மத நூல்களைப் படித்து ஒரு சம்பிரதாயத்தை ஏற்று மலர்ந்ததென்றால், அது ஒரு தர்மமல்ல! ஒருவருடைய தோளில் நீங்கள் கைவைத்தால், உங்களது இதயத்தின் அன்பு முழுவதையும் உங்கள் கையின் மூலம் அவருக்கு அனுப்புங்கள். உங்களது முழு உயிரையும் முழு இதயத்தையும் அந்தக் கையில் இணையச் செய்து போகவிடுங்கள். அந்தக் கை மாயமாக வேலை செய்வதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.

ஒருவரது கண்களைச் சந்திக்கும்போது உங்கள் கண்களில் உங்கள் இதயம் முழுவதையும் கொட்டி விடுங்கள்.
கண்கள் மந்திரம் மாயம் அடைந்து ஒருவருடைய இதயத்தை அசைத்து விடுவதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.
உங்கள் அன்பு விழிப்படைவது மட்டுமல்ல, மற்றவரது அன்பு விழிப்படைவதற்கும் வழி வகுப்பதாகி விடலாம்.
சரியான முறையில் அன்பு செலுத்தும் மனிதன் ஒருவன் பிறந்தால் இலட்சக்கணக்கான மனிதர்களின் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்கத்   துவங்கிவிடும்!.
- ஓஷோ ரஜனீஷ்

14. சூரிய ஒளி போல

யாருடன் பழகினாலும் அந்தஸ்து பார்க்காமல் ஒரே மாதிரியான அணுகுமுரையுடன் உள்ளன்பு குறையாமல் பழகுங்கள்.
- ரீடர்ஸ் டைஜஸ்ட்

15. வாய்மை வெல்லும் 

தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு
மனித சக்தியும் நிற்க முடியாது! (எனவே, சோதனையான நேரங்களிலும் நேர்மையாக வாழ்வோம்).
- ஸ்ரீ அன்னை

16. பிரார்த்தனை செய்யலாமா?

இறைவன் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால், பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக் கொண்டு வருவதுடன், அவருடைய சக்தியையும் நம்முடைய முயற்சியையும் இணைக்கிறது
- மாட்டிகாஸ் பெரீன்

17. நல்ல எண்ணமே சிறந்தது

நாம் நமது எண்ணங்களின் மீது கவனம் வைக்க வேண்டும் கெட்ட எண்ணங்கள் மிகவும் ஆபத்தான திருடர்கள்.
- ஸ்ரீ அன்னை

18. எல்லா உயிர்களையும் நேசியுங்கள்
அன்பு நிறைந்த ஒருவர், மனிதர் படும் துன்பங்களைக் காட்டிலும், விலங்குகள் படும் துன்பத்தைச் சகித்துக் கொள்ளமாட்டார்.
- ரோமெயின் ரோலந்து

( தெரு நாய்களுக்கு உணவளித்து உங்களைச் சுற்றி எப்போதும் அன்பான அதிர்வுகளையே பாதுகாப்பாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் ஆத்மாவாக எளிதில் உயர்வீர்கள்)

19. இயற்கை நமது நன்பன்

மனிதன் சில சமயங்களில் தான் தேடாதவற்றைக் கூடக் கண்டுபிடித்து விடுகிறான்
 - அலெக்ஸாண்டர் ஃப்ளெயிங்

( தியானம் செய்யும் பழக்கத்தால் இந்த சக்தி நமக்குக் கிடைக்கிறது)


20. சிந்தனைக்கு

நாம் அறிந்துள்ளவைகளுக்கு அப்பால் ஒரு அறியும் சக்தி நம்முள் உள்ளது. நமது சிந்தனைகளை விட நாம் உயர்ந்தவர்கள்.
- ஸ்ரீ அன்னை

( எனவே, இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து நேர்வழியில் வாழ்வோம்)

21. அன்பை வெளிப்படுத்துங்கள்

அன்பு விஸ்வமயமானது. நித்தியமானது. அது, என்றும் தன்னை வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது. அது ஒரு தெய்வ சக்தியாகும். அதன் புறவெளிப்பாட்டின் அடையாளங்கள் எல்லாம் அதன் கருவிகளைச் சார்ந்தவை. அன்பு எங்கும் வியாபித்திருக்கிறது. அதன் இயக்கம் தாவரங்களிலும் காணப்படுகிறது. விலங்குகளிடத்திலும் அது செயல்படுகிறது. கற்களிலும் அதைக் காண முடியும்.
- ஸ்ரீ அன்னை

22. வாழ்வின் வெற்றி

வாழ்வின் வெற்றி என்பது ஒரு மனிதன் பின்பற்றும் சத்தியத்தைப் பொறுத்தது.
- ஸ்ரீ அன்னை

23. தரமே தங்கக்குணம்

முதல் விதியாக இலட்சியத்தில் உறுதியில்லாமல் இருக்கலாம். ஆனால், இலட்சிய உறுதி வேண்டுமெனில் முதல் தரமான மூன்று அம்சங்கள் தேவை. அஞ்சாமை, துணிவு, விடாமுயற்சி எனும் இந்த மூன்றும் இருந்தால் முதல் விதி நம்மிடம் இருந்து இலட்சியத்தை வெற்றிபெறச் செய்யும்.
- ஸ்ரீ அன்னை

24. எது உயிர் மூச்சு?

நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சாகும் சூரிய ஒளி, ஊதா ஒளி மற்றும் உயிர்களின் வளர்ச்சியைப் போல் முக்கியமானதாகும்.
- நார்மன் வின்சென்ட்டில்

25. அன்பின் சக்தி

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும். அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.
 - புனித பைபிள் கொரிந்தியர் 1:13

26. அன்பு மயமாக இருங்கள்

அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது. புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை. அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான். இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார்
- ஓஷோ ரஜனீஷ்

27. மனஉரம் வேண்டும்

கோழையான எந்த ஒரு மனிதனும் போர்க்களத்தில் எல்லோருடனும் சேர்ந்து எளிதாக வென்று விடுவான். அவனைத் தனியாகப் போரிடச் சொன்னால் கண்டிப்பாகத் தோற்றுவிடுவான். ஒவ்வொறு தனிமனிதனும் குறிக்கோளை அடைவதற்காக துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது தான் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையாகும்.
- ஜார்ஜ் எலியட்

28. யோசனை கூறும் தகுதி

யார் யார் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் நமக்கு அறியும் ஆலோசனைகளையும் புகட்ட உரிமை உள்ளவர்களே.
- ஜார்ஜ் எலியட்

29. உறுதி
மனிதன் எதை உறுதியாக நினைக்கிறானோ அதுவாகவே அவன் மாறிவிடுவான்.
- புனித பைபிள்


30. உதவி கிடைக்க

நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது.
- ஸ்ரீ அன்னை

காரைக்காலம்மையார்




தமிழ் திருமுறையில் பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.


இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரி வாகக் கூறப்பட்டுள்ளது.


காரைக்காலம்மையார் வரலாறு
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் `பேயார்` எனக் குறிக்கப்படுபவர் இவ்வம்மையார். இவர் தாம் அருளிச் செய்த பிரபந்தங்களாகிய மூத்த திருப்பதிகங்களின் திருக் கடைக் காப்புக்களிலும் அற்புதத் திருவந்தாதியின் இறுதிச் செய்யுளி லும் `காரைக்கால் பேய்` என உரைப்பதால் இவர் தம் ஊர் காரைக்கால் என்பதும் பேய் வடிவம் வேண்டிப் பெற்றபின் பாடியன ஆதலால் தன்னைப் பேய் எனக் குறித்துரைத்துள்ளார் என்பதும் அறியற் பாலனவாகும்.

பெரிய புராணத்தில்

இவர் தம் வரலாற்றைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் அழகுற விரித்துரைத்துள்ளார்.


சோழவள நாட்டில் கடற்றுறைப் பட்டினமாக விளங்கிய காரைக்கால் என்னும் பதியில் வணிகர் குலத்தில் தனதத்தன் என்பா னுக்கு அரும் பெறற் புதல்வியாய் திருமகள் போன்ற பேரழகோடு அம்மையார் தோன்றினார்.


பெற்றோர் புனிதவதி எனப் பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர். புனிதவதியார் பிறந்து மொழி பயிலும் காலத்திலேயே சிவபெருமான் திருவடிகளுக்குத் தொண்டு பூண்டு, சிவன் அடியார்களைக் கண்டால் சிவன் எனவே தெரிந்து வழிபடும் திறம் வாய்க்கப் பெற்றவராய் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தார்.

திருமணம்

நாகப்பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி என்ற வணிகன் தன் மகன் பரமதத்தனுக்குப் புனிதவதியாரை மணம் செய்விக்க விரும்பி முதியோர் சிலரைத் தனதத்தன்பால் அனுப்பினான். இருமுது குரவர் இசைவினால் புனிதவதியார்க்கும் பரமதத்தனுக்கும் திருமணம் நிகழ்ந்தது. தனதத்தன் தனக்கு வேறு பிள்ளைப்பேறு இல்லாமையால் காரைக்காலிலேயே தன் மருகன் பொன் வாணிபம் புரியவும் தனியே மனையறம் நடத்தவும் வகை செய்து கொடுத்தான்.

மனைத்தக்க மாண்பு
பரமதத்தன் தன் மாமனார் அமைத்துத் தந்த வாணிபத்தைப் பன்மடங்காகப் பெருக்கிச் சிறப்புற வாழ்ந்து வந்தான். புனிதவதியார் மனைத்தக்க மாண்புடன் இல்லறம் இயற்றியதோடு சிவபெருமான் மீது கொண்ட பக்தியிலும் மேம்பட்டுச் சிவனடியார்களுக்குத் திரு அமுதளித்தல், வேண்டும் பொருள்களை அவ்வப்போது கொடுத்தல் முதலான சிவபுண்ணியங்களிலும் சிறந்து விளங்கினார்.

அடியவர்க்கு அமுது

ஒருநாள் பரமதத்தனை வாணிபம் செய்யுமிடத்தில் காண வந்த சிலர் இரண்டு சுவையான மாங்கனிகளை அவனிடம் அளித்து உரையாடிச் சென்றனர். பரமதத்தன் அவர்களை வழியனுப்பியபின் அவர்கள் தந்து சென்ற மாங்கனிகள் இரண்டையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். புனிதவதியார் அக்கனிகளை வாங்கித் தன் கணவன் உணவுண்ண வரும்போது படைக்கலாம் என அடுக்களை அறையில் வைத்திருந்தார். அவ்வேளையில் சிவனடியார் ஒருவர் பசியால் மிக இளைத்தவராயப் புனிதவதியார் இல்லத்திற்கு வந்தார். அம்மையார் திருஅமுது (சோறு) மட்டும் சமைத்திருந்த நிலையில் ஏனைய கறியமுது முதலியவற்றை விரைந்து செய்தளிக்க எண்ணினார். வந்த அடியவரோ மிக்க பசியோடு இருத்தலைக் கண்ணுற்றுத் தன் கணவன் அனுப்பிய மாங்கனிகளுள் ஒன்றை இலையில் படைத்து அடியவர்க்குத் திருஅமுது படைத்து மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார். சிறிது நேரங்கழித்துப் பரமதத்தன் வழக்கம்போல் நண்பகல் உணவு அருந்தத் தன் இல்லம் அடைந்தான். புனிதவதியார் இன்முகத்தோடு தன் கணவனுக்குத் திருஅமுது கறியமுது முதலியவற்றைப் படைத்ததுடன் அவன் அனுப்பியிருந்த மாங்கனிகளுள் ஒன்றை இலையில் வைத்து உண்ணச் செய்தார். திரு அமுதுடன் அப்பழத்தைத்தின்ற பரமதத்தன் அதன் இனிய சுவையில் மயங்கியவனாய்ப் பிறிதொன்றையும் இடுவாயாக என்றான்.

அதிமதுரக்கனி

கணவன் சொற்பிழையாத புனிதவதியார் அவனது சுவை உணர்வைக் கெடுத்தல் கூடாது என்னும் கருத்தோடு தான் அப் பழத்தை அடியவர்க்களித்த செய்தியைக் கூறாது பழத்தை எடுத்து வருபவர்போல அடுக்களையினுள் வந்து வருந்தி இறைவனை வேண்டி நின்றார். அவ்வளவில் இறையருளால் அவர் தம் கையகத்தே மிக்க சுவையுடைய அதிமதுரக்கனி ஒன்று வந்தது. உடனே அக் கனியைக் கொண்டு வந்து தன் கணவர் உண்ணும் இலையில் இட்டார். அதனை உண்ட பரமதத்தன் அக்கனியின் சுவை முன்னுண்ட கனிச் சுவையின் வேறுபட்டதாய்த் தேவர் அமிழ்தினும் மேம்பட்டதாய் இருத்தலை உணர்ந்து புனிதவதியாரை நோக்கி மூவுலகிலும் பெறுதற் கரியதான இக்கனியை நீ எங்குப் பெற்றாய் என வினவினான். புனிதவதியார் இறைவன் தனக்கு வழங்கிய கருணையைப் பிறர்க்கு உரைத்தல் கூடாதாயினும் தன் கணவன் சொல்வழி ஒழுகுதலே கடன் எனத்துணிந்து நடந்தவற்றைக் கூறினார்.

மாங்கனியின் மாயம்

அவற்றைக் கேட்ட பரமதத்தன் இக்கனி சிவபெருமான் உனக்குத் தந்தது உண்மையாயின் பிறிதொரு கனியையும் இவ்வாறே வருவித்து எனக்கு அளிப்பாயாக எனக் கேட்டனன். புனிதவதியார் அவ்விடத்தை விட்டுத் தனியே சென்று இறையருள் எனத் தான் கூறிய வார்த்தை பொய்யாதிருக்கப் பிறிதொரு மாங்கனி அருள வேண்டு மெனச் சிவபெருமானை இறைஞ்சி நின்றார். இறையருளால் மற்று மொரு மாங்கனி அம்மையார் கைக்கு வந்தது. பரமதத்தன் அக்கனியைத் தன் கையில் வாங்கினான். வாங்கிய அளவில் அக்கனி மாயமாய் மறைந்தது. அதனைக் கண்டு அஞ்சிய பரமதத்தன் தன் மனைவியாக வந்த அம்மையாரைத் தெய்வமென மதித்து அவரோடு சேர்ந்து வாழ்ந்தபோதும் உறவுத்தொடர்பு இன்றி ஒழுகி வந்தான்.

மறுமணம்

இவ்வாறு ஒழுகும் நாளில் ஒருநாள் கடல் கடந்து வாணிபம் செய்து மீள்வேன் என உறவினர்களிடம் கூறி அரிய பல பொருள்களை மரக்கலத்தில் ஏற்றிக் கொண்டு கடல் கடந்து சென்று பெரும் பொருள் ஈட்டிக் கொண்டு மீண்டவன் பாண்டி நாட்டு மதுரையை அடைந்து அங்கே இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்து வாழ்ந்து வந்தான். அம்மனைவிக்குப் பிறந்த பெண் குழந்தைக்குத் தான் தெய்வமென மதிக்கும் புனிதவதியாரின் பெயரைச்சூட்டி மகிழ்ந்துறைந்தான்.

புனிதவதியார் சந்திப்பு

இதனை அறிந்த புனிதவதியாரின் சுற்றத்தினர் அம்மையாரை அவர் தம் கணவர்பால் சேர்ப்பிக்கும் கருத்துடன் அவரைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு பாண்டி நாடடைந்து அவன் வாழும் ஊர் எல்லையை அணுகினார்கள். அவர்கள் வருகையை அறிந்த பரமதத்தன், அச்சம் உடையவனாய், இரண்டாவதாகத் தான் மணந்த மனைவியோடும் மகளோடும் புறப்பட்டு ஊர் எல்லையை அடைந்தான். அவன் வருகையை அறிந்த உறவினர் பல்லக்கை நிறுத்தினர். பரமதத்தன் அம்மையாரிடம் `அடியேன் உம் அருளால் வாழ்கிறேன். இவ்விளங் குழவிக்கு உமது பெயரையே சூட்டியுள்ளேன்` என்று கூறி அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அதனைக் கண்ட புனிதவதியார் அச்சத்தோடு சுற்றத்தார் பால் ஓதுங்கி நின்றார். சுற்றத்தினர் பரமதத்தனை நோக்கி `நீ உன் மனைவியை வணங்கக் காரணம் யாது` எனக் கேட்க அவன் அவர்களை நோக்கி ` இவர் நம் போன்றவர் அல்லர் தெய்வத்தன்மை வாய்ந்தவர் நீவிரும் இவரை வழிபடுவீராக` என்றான்.

பேய் வடிவம்


சுற்றத்தவர் `ஈதென்ன வியப்பு` எனத் திகைத்து நிற்கப் புனிதவதியார் சிவபிரான் திருவடிகளைச் சிந்தித்து `தன் கணவர் கருத்து இதுவாயின் அவர் பொருட்டு அமைந்த எனது தசைப்பொதியைக் கழித்து நீக்கி நின் திருவடிகளைப் போற்றி நிற்கும் கணங்களில் ஒன்றாகும் பேய் வடிவினை எனக்குத் தந்தருளுக` என இறைவனை வேண்டி நின்றார். அந்நிலையில் பெருமான் அருளால் வானுலகும் மண்ணுலகும் போற்றும் பேய் வடிவம் அவருக்கு வாய்த்தது. சுற்றத்தவர் அஞ்சி அகன்றனர். புனிதவதியார் சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் உடையவராய் அற்புதத் திருஅந்தாதியால் இறைவனைப் போற்றினார்.

அம்மையே வருக

பின்பு திருஇரட்டை மணிமாலை என்ற சிறு பிரபந்தத்தையும் அருளி இறைவனைப் போற்றித் திருக்கயிலையில் சிவபிரானது திருவோலக்கத்தைக் காணும் பெருவிருப்புடன் வடதிசை நோக்கிப் புறப்பட்டு, திருக்கயிலை மால்வரையை அடைந்தார். சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையைக் காலால் மிதித்தல் கூடாது எனக் கருதியவராய்


தலையால் நடந்து மேல்ஏறிச் சென்று இறைவன் சந்நிதியை அடைந் தார். இறைவனது திருவருள் நோக்கம் அம்மையார் மேற் பதிந்தது. சிவபோகத்தைத் தன் அடியவர்க்கருளும் அருட்சத்தியாகிய அம்பிகை அம்மையாரின் அன்பின் திறங்கண்டு வியந்து இறைவனை நோக்கி `எம் பெருமானே? தலையினால் நம்மை நோக்கி நடந்துவரும் இப் பெண் யார்?` என வினவ பெருமான் `இவர் அன்பினால் நம்மைப் பேணும் அம்மையாவாள். பேய் வடிவம் நம்மை வேண்டிப் பெற்றனள்` எனக்கூறி `அம்மையே` என்னும் செம்மொழியால் அவரை அழைத்தருள `அப்பா` என்று சொல்லிக் கொண்டு இறைவனையும் இறைவியையும் வணங்கினார்.


இறைவன் அவரை நோக்கி `நீ நம்பால் பெறக் கருதுவது யாது?` எனக் கேட்க அம்மையார் இறைவா நீ திருநடம் புரியும்போது உன் அடி நிழற்கீழ் இருக்க வேண்டு மென வேண்டினார்.


பெருமான் `தென்னாட்டில் திருவாலங்காட்டில் யாம் ஆடி அருளும் திருக்கூத்தினைக் கண்டு எம்மைப் பாடிப் போற்றி இன்புற் றிருப்பாயாக` என அருளினார்.

திருவடிப்பேறு

அம்மையார் கயிலைப் பெருமானிடம் விடைபெற்று தலையால் நடந்தே திருவாலங்காட்டினை அடைந்து அண்டமுற நின்றாடும் இறைவனது திருக்கோலத்தைக் கண்டு உளம் உருகி வழிபட்டு `கொங்கை திரங்கி`, `எட்டி இலவம்` என்று தொடங்கும் திருப்பதிகங்களைப் பாடிப் போற்றி பெருமானது தூக்கிய திருவடி நிழற்கீழ் என்றும் நீங்காது வாழும் பெருவாழ்வு பெற்றார். பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் இவ்வரலாற்றை அழகுற விரித்துரைத்துள்ளார்.

கிழமைகள்… பலன்கள்… பரிகாரங்கள்…!!!


பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறப்பெடுக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல்பாடுகளின் பலாபலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு.

எண்கணித அடிப்படையில் கிழமைகள், குறிப்பிட்ட கிழமையில் பிறந்த அன்பர்களது குணநலன்கள், அவர்களுக்கான பலாபலன்கள், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பரிகார வழிபாடுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. அதுபற்றி நாமும் அறிவோம்.

ஞாயிற்றுக்கிழமை


கடின வேலைகளையும் மிக எளிதாகவும் திறமையாகவும் முடித்து சாதனை படைப்பார்கள். சொன்னதைச் செய்வார்கள். இயலாது எனில் மௌனம் சாதிப்பார்கள். உற்றார்- உறவினருக்கு உதவும் குணம் கொண்டவர். இவரது தலைமையின் கீழ் பலபேர் பணிபுரிவார்கள்.

நல்லன அருளும் தேதிகள்: ஞாயிற்றுக்கிழமையுடன் 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் இணைந்திருக்க பிறந்தவர்களுக்கு எதிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை இந்தத் தேதிகளில் துவங்கலாம்.

ஏற்றம் தரும் வயது காலங்கள்:
19, 28, 37, 45, 55, 64, 73

வளம் தரும் கிழமை: வெள்ளி

வழிபாடு: ஞாயிறன்று சூரிய உதயத்துக்குமுன் எழுந்து காலைக்கடன்களை முடித்து, ஆதித்ய ஹ்ருதயத்தை பாராயணம் செய்வதால், நல்ல பலன்களைப் பெறலாம்; ஆயுள் விருத்தி உண்டாகும். தந்தையிடமும், பெரியோரிடமும், ஆன்றோரிடமும் ஆசிபெற வேண்டும். தெய்வ வழிபாடுகளில் கோதுமை பண்டத்தால் நைவேத்தியம் செய்தல் நலம்.

திங்கள்கிழமை


சாந்தமான மனம் படைத்தவர். இனிமை, அன்பு, உதவும் உள்ளம் உள்ளவர். எதிரிகளையும் நண்பர்களாக பாவிப்பர். தர்ம- நியாயங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதி உள்ளவர். இவர்களுக்குச் சொந்தத் தொழில் கைகொடுக்கும். குளிர்ச்சியான தேகம் உடையவர்.

நல்லன அருளும் தேதிகள்:
இவர்கள் 2, 7, 11, 16, 20, 25, 29 ஆகிய தேதிகளில் புதிய தொழில் தொடங்குதல், பொருள்களை வாங்கி சேகரித்தல், சுப நிகழ்ச்சிகள் செய்வது சிறப்பு.

ஏற்றம் தரும் வயது காலங்கள்: 20, 29, 38, 47, 56, 65, 74 இந்த வயதுகள் நடக்கும்போது திருப்திகரமான திருப்பங்கள் உண்டாகும்.

வளம் தரும் கிழமை:
திங்கள்கிழமையே!

பரிகார வழிபாடு:
திங்கள்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து காலைக்கடன் முடித்து நீராடி, தாயை வணங்கி ஆசிபெறுவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அத்துடன், சக்தி தலங்களுக்குச் சென்று வெள்ளை நிறப் பூக்களால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் விசேஷம். கற்கண்டு கலந்த நைவேத்தியங்களைப் படைத்து வழிபடலாம்.

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் பலரிடமும் பலவிதமான யோசனைகளைக் கேட்பார்கள். ஆனாலும் தான் வைத்ததே சட்டம்; தான் நினைப்பதே சரி எனும் மனப்போக்குடன் திகழ்வார்கள். நல்லவர்களுக்கு நல்லவர்; கெட்டவர்களுக்கு கெட்டவராகத் திகழ்வார். அதனாலேயே பலருக்கும் இவரைப் பிடிக்காது. ஆனால், அதைப் பற்றி இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். நியாய- தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்.

நல்லன அருளும் தேதிகள்: 9, 18, 27 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

ஏற்றம் தரும் வயது காலங்கள்:
18, 27, 36, 45, 54, 63, 72 ஆகிய வயதுகளில் நல்ல திருப்பங்கள் உண்டாகும்.

வளம் தரும் கிழமை:
வியாழன்

பரிகார வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை எழுந்து நீராடி, அரளிப்பூவால் முருகப்பெருமானை அர்ச்சித்து வழிபட்டால், வாழ்க்கை வளம்பெறும். அன்றைய மாலைப்பொழுதில் ஸ்ரீபைரவரை வழிபடுதல் விசேஷம். துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பிப்பது சிறப்பு.

புதன்கிழமை

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளிகளாகத் திகழ்வார்கள். இயந்திரம், வைத்தியம், ஜோதிடம், துப்பறியும் கலை, ஓவியம் ஆகியவற்றில் திறமைசாலிகளாக விளங்குவர். ரகசியம் காப்பதில் வல்லவர். மற்றவர்களின் மனதில் உள்ளதைத் துல்லியமாக அறிந்து அதற்கேற்ப செயல்படுவார்கள். பலதுறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். மருத்துவர், நீதிபதி, பொறியாளர், எழுத்தாளர் என்று உயர்ந்த நிலையில் வாழ்வார்கள்.

நல்லன அருளும் தேதிகள்:
5, 14, 23 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளைத் துவங்கினால் வெற்றி கிடைக்கும்.

ஏற்றமிகு வயது காலங்கள்: 23, 32, 41, 50, 59, 68 ஆகிய வயதுகளில் நல்ல முன்னேற்றம் உண்டு.

வளம் தரும் கிழமை: வியாழன்

பரிகார வழிபாடு:
புதன்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி துளசி மற்றும் மருக்கொழுந்தால் ஸ்ரீமகாவிஷ்ணுவை வழிபடலாம். மேலும் விஷ்ணு சகஸ்ரநாமம், கிருஷ்ணாஷ்டகம் பாராயணம் செய்வதும் சிறப்பு. பாசிப்பயறு சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தல் நலம்.

வியாழக்கிழமை
வியாழனன்று பிறந்தவர்கள் நீதி-தர்மத் துக்கு பக்கபலமாக விளங்குவர். குறுக்கு வழியில் செல்பவரையும் திருத்தி நல்வழிப் படுத்துவதற்கு பாடுபடுவர். உற்றார்- உறவுகளுக்கு உதவிபுரிவர். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவர்.

நல்லன அருளும் தேதிகள்:
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளைத் துவங்க ஏற்றம் உண்டாகும்.

ஏற்றம் தரும் வயது காலங்கள்:
21, 30, 48, 57, 66, 75, 84 ஆகிய வயதுகளில் வாழ்க்கையில் முன்னேற்றம் (வீடு, மனை, வண்டி, வாகனம்) வசதி ஏற்படும்.

வளம் தரும் கிழமை:
வெள்ளி
பரிகார வழிபாடு: வியாழக்கிழமைகளில் சூரிய உதயத்திற்கு முன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகத்தைப் பாராயணம் செய்து வழிபடுவது சிறப்பு. தேவகுரு பிரகஸ்பதியை வழிபடுவதால் வளம் பெருகும். மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொண்டைக் கடலை சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தல் நலம். கருட தரிசனம் செய்வது மிக நன்று.

வெள்ளிக்கிழமை

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள், பிறக்கும்போதே ‘சமர்த்துப் பிள்ளை’ என்று பெயரெடுப்பார்கள். பேச்சாலேயே மற்றவர் களை தன் வயப்படுத்துவார். தமது பேச்சை கேட்காதவர்களை புறக்கணித்து விடுவார்கள். எந்த வேலையையும் சிரமம் இல்லாமல் மற்றவர்களின் துணையுடன் பூர்த்தி செய்வார் கள். கணவன் அல்லது மனைவியின் அளவற்ற அன்பிலும் பாசத்திலும் மூழ்கித் திளைப்பர்.

நல்லன அருளும் தேதிகள்: 4, 8, 13, 17, 26, 31 ஆகிய தேதிகள் நலம் பயக்கும்.

ஏற்றம் தரும் வயது காலங்கள்: 22, 26, 31, 35, 44, 53, 62, 66, 71 வயதுகளில் குடும்பம் பல நன்மைகளைச் சந்திக்கும்.

வளம் தரும் கிழமை:
திங்கள்.

பரிகார வழிபாடு:
வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி மல்லிகைப் பூக்களால் ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்வது சிறப்பு. பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷம்.

சனிக்கிழமை

இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள். வேலை என்று வந்துவிட்டால் அதை முடித்துவிட்டே மற்ற வேலைகளைத் துவங்குவர். சான்றோரிடமும் ஆன்றோரிடமும் மிகுந்த பக்தி உள்ளவர். எப்போதும் தான் உண்டு தன்வேலை உண்டு என நினைப்பவர்

நல்லன அருளும் தேதிகள்: 8, 17, 26 ஆகிய தேதிகளில் சிறப்பான நன்மைகள் பல பெற்றிடுவீர்.

ஏற்றம் தரும் வயது காலங்கள்: 22, 26, 31, 35, 41, 50, 53, 58, 62, 67 ஆகிய வயதுகளில் வாழ்வில் இன்பம் சேரும்.

வளம் தரும் கிழமை:
வியாழன்

பரிகார வழிபாடு:
சனிக்கிழமை காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து, நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து, நீலாம்பரம், நீல சங்குபூ, வில்வம் சாற்றி சிவனாரை வழிபடுவது சிறப்பு. சிவாலயங்களில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தோஷங்கள் நீங்கும். வீட்டில் பூஜைக்கு பிறகு காகத்துக்கு எள் கலந்த நெய்சாதம் இடவேண்டும். கருட தரிசனமும் நலம்பயக்கும்.

நன்றி விகடன்

எதிர் மறை சக்திகளை விரட்டியடிக்க முட்டை பரிகாரம் !

எப்போதும் தடங்கல், எந்த காரியங்களும் முடிவு வரை வந்து பின்பு நடக்காமல் போதல், எப்போதும் மனக்கவலை, தோல்வி பற்றியே எப்போதும் சிந்தனை போன்ற எதிர் மறை சக்திகளை கீழ்க்கண்ட பரிகாரம் மூலம் நம் உடலில் இருந்து விரட்டி அடிக்கலாம். இதை முதல் முதல் ஆரம்பிக்கும் நாள் அமாவாசை நாளாக இருத்தல் நலம். பின்பு தேவைப்படும் போதெல்லாம் செய்து கொள்ளலாம்.


தேவை : 2 கோழி முட்டை

உடைகளை முழுதும் கலைந்து குளியல் அறையில் கிழக்கு நோக்கி நின்று கொள்ளவும். பின்பு 1 முட்டையை எடுத்து அதை ராக் சால்ட் அல்லது கல் உப்பு நீரால் கழுவி கொள்ளவும்.பின்பு சிறிது எலுமிச்சை நீரால் கழுவவும்.
பின்பு கண்களை மூடி கொண்டு பிரபஞ்சத்தை உங்கள் எதிர் மறை சக்திகள் அனைத்தும் விலக வேண்டி கொள்ளவும். பின்பு உச்சந்‌தலையில் ஆரம்பித்து உடல் முழுதும் மெதுவாக ஒரு இடம் விடாமல் முட்டையால் தடவ ஆரம்பிக்கவும். உடலில் உள்ள எதிர் மறை சக்திகள் அனைத்தும் முட்டை சுவீகரித்து கொள்ளும். உடலில் ஒரு இடம் விடாமல் தடவி கொள்ளவும்-ஏதேனும் இடத்தில் வலி இருந்தால் அந்த இடத்தை பிரத்யேகமாக கவனித்து தடவி கொள்ளவும். உள்ளங்கால் வரை தடவ வேண்டும். முக்கியமாக கழுத்தின் பின் புறம், கை கால்களின் முட்டிகளின் பின்புறங்களில் நன்கு தேய்க்கவும் -இந்த இடங்களில் தான் எதிர் மறை சக்திகள் அதிகம் தங்கும். நன்கு தேய்து முடித்ததும் ஒரு பாத்திரத்தில் அதை உடைத்து விட்டு பார்க்கவும்.

முட்டையில் கொப்பளம் அல்லது குமிழ்கள் வரின் எதிர் மறை சக்திகள் எடுக்கப்பட்டு விட்டது என அறிந்து கொள்ளவும். சாரங்களாக வந்தால் மேலும் எடுக்கப்பட வேண்டும் என அர்த்தம். ரத்தம் அல்லது கருப்பு புள்ளிகள் இருப்பின் ஏதோ பெரிய எதிர் மறை சக்தி இருந்தது கவிட்டது என அர்த்தம் கொள்க. பின்பு இதை கழிவறையில் கொட்டி அதில் எலுமிச்சை நீர் சிறிது மற்றும் கல் உப்பு போட்டு நீர் விட்டு கழுவி விட்டு, பின்பு நீங்கள் யாம் ஏற்கனவே கூறியுள்ள நம் புற ஒளியை (Aura Cleansing)மிளர செய்யும் குளியல் செய்யலாம் அல்லது ராக் சால்ட் குளியல் செய்யவும். மற்றொரு முட்டையை மூன்று நாட்கள் இரவு தூங்கும் சமயம் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு அதில் முட்டையை போட்டு,தலை மாட்டில் வைத்து உறங்கி பின்பு காலையில் அந்த நீரை கழிவறையில் கொட்டி விடவும். மூன்று நாட்களும் புதிய நீரை எடுத்து கொள்ளவும். நான்காம் நாள் முட்டையை கழிவரை அல்ல்து தெரு சாக்கடையில் எறிந்து விடலாம்.

மேலை நாடுகளில் பரவலாக கடைபிடிக்கும் பரிகாரம் இது. மிகுந்த சக்தி வாய்ந்தது. செய்து பயன் அடையுங்கள்.

புது ஆடைகள் அணிய உகந்த நாட்கள்


பொதுவாக எல்லா நாளும் தான் விடிகிறது
எல்லா நாளும் தான் உணவு உண்கிறோம் [ உண்ண உணவு ]
எல்லா நாளும் வீடு கட்டுவது இல்லை [ இருக்க இருப்பிடம் ]
எல்லா நாளும் புது உடை அணிவதில்லை [ உடுக்க உடை ]
இன்று எந்நாளில் புது ஆடைகளை அணிவது என்பதை பற்றி கொஞ்சம் கவனிப்போம் !!!

சாஸ்திரங்களில் வகுக்கப்பட்டதே தவிர இதில் புதுமைகளை புகுத்தி எதையும் சொல்லவில்லை என்பதை மனதில் கொண்டு தொடருங்கள் !!

புது ஆடை அணிய பொதுவான நல்ல நடசத்திரம் உள்ள நாட்கள் :-

1] அசுவினி , 2] ரோஹிணி, 3] புனர்பூசம், 4] பூசம், 5] உத்திரம், 6] ஹஸ்தம், 7] சித்திரை, 8] சுவாதி, 9] விசாகம், 10] அனுஷம், 11] உத்திராடம்,12] அவிட்டம், 13] உத்திரட்டாதி ,14] ரேவதி ஆகிய 14 நடசத்திரம் கொண்ட நாட்கள் ஆகும்..

கிழமையில் புதன் வியாழன் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மிக சிறப்பு

ஞாயிறு ,திங்கள் சுமாரான நாட்கள்

செவ்வாய் , சனி கிழமையில் புது ஆடை அணிவது மிகுந்த சிரமங்களை தரும் …

ஒவ்வொரு நட்சத்திர நாளில் புது ஆடைகளை அணிவதால் வரும் பலாபலனை கொஞ்சம் இப்போது கவனிப்போம்..

1] அசுவினி :- அரசாங்க கெளரவம் கிட்டும் [ அரசு ஊழியர் கவனிக்க ]

2] பரணி :- மனைவிக்கு தீமை தரும்

3] கிருத்திகை:- உடலில் எரிச்சல் ஏற்படும் [ கோடைகாலம் கவனிக்க ]

4] ரோஹிணி:- சகல லாபம் [ சிரமத்தில் இருப்போர் கவனிக்க ]

5] மிருகசீர்ஷம்:- எலி கடிக்கும் [ ஆடைகளை மட்டுமே ]

6] திருவாதிரை:- மரண கண்டம் ஏற்படுத்தும்

7] புனர்பூசம்:- தனதான்ய விருத்தி [ வறுமையில் இருப்போர்களுக்கு நன்மை ]

8] பூசம்:- சகல சமத்து கொண்டு வாழ்வார்கள் [ சுபிட்ஷம் ]

9] ஆயில்யம்:- நோய் நொடியும் கடனும் சேரும்

10] மகம்:- மரணத்திற்க்கு ஒப்பான கண்டம் வரும்

11] பூரம்:- நோயும் தொல்லைகளும்

12] உத்திரம்:- மேலும் மேலும் புது ஆடைகள் சேரும் [பெண்கள் கவனிக்க]

13] ஹஸ்தம்:- இனிமையான வாழ்வும் சுகமும் [ தம்பதியினர் இடையே 
சண்டை நடக்கும் குடும்பத்தில் இந்நாளில் இருவரும் அணியலாம் ]

[ இங்கே இன்னும் ஒரு சிறு குறிப்பு சூடாமணி உள்ளமுடையான் நூல் என நினைக்கிறேன் ..பிரிந்த தம்பதிகள் அஸ்த நட்சத்திரத்தில் மீண்டும் இணைத்து வைத்தால் பிரிவினை இல்லாமல் வாழ்வார்கள் என சொல்கிறது ]

14] சித்திரை:- பலதரப்பட்ட புத்தாடைகள் கிடைக்கும் [ தாய்மார்கள் கவனிக்க ]

15] சுவாதி:- சிறந்த உணவுகள் கிடைக்கும் [ வறுமையில் இருப்போர்கள் கவனிக்க ]

16] விசாகம்:- மனசந்தோசம் தரும் [ நிம்மதி இல்லாமல் இருப்போர் கவனிக்க]

17] அனுஷம்:- உறவினரால் நல்ல லாபம் தரும்.. [மருமகன்கள் கவனிக்க ]

18] கேட்டை:- ஆடைகள் கிழியும் [உண்மை ]

19] மூலம்:- தான்ய நாசம் அடையும் [ விவசாயிகள் இந்நாளை தவிர்க்கவும் ]

20] பூராடம்:- நோய் நொடியை தரும்..

21] உத்திராடம்:- பற்பல புது ஆடைகள் கிடைக்கும்

22] திருவோணம்:- கண்நோய் அடையும்

23] அவிட்டம்:- தான்ய விருத்தி அடையும் [ விவசாயிகள் இந்நாளில் புது ஆடைகள் அணியலாம்நன்மை ]

24] சதயம்:- விஷ ஜந்துக்கள் அபாயம் வரும்

25] பூரட்டாதி:- அரசாங்கத்தால் பயம் வரும் [ வழக்கில் இருப்போர் கவனிக்க ]

26] உத்திரட்டாதி:- புத்ரலாபம் கிடைக்கும் [ குழந்தை இல்லாதவர்கள் கவனிக்க ]

27] ரேவதி:- உயர்ந்த பொருள் ஆதாயம் [ சகல மக்களுக்கும் உகந்தது ]

அதுபோக திதிகளை கவனிப்போம்

துவிதியை, திருதியை ,பஞ்சமி, சப்தமி ஆகிய நாட்கள் புது ஆடை அணிய நன்மை தரும்

சதுர்த்தி மற்றும் நவமி திதி, சதுர்தசி , அமாவாஸை ஆகிய திதிகள் புது ஆடை அணிவதை தவிர்க்கவும் ,

கிழமைகள் தரும் பலன்கள் பின்வருமாறு :-

ஞாயிறு :- உடல் நோய் வரலாம்

திங்கள்:- துயரம் [புது ஆடை கண்ணீரால் நனையும்

செவ்வாய்:- உடையில் தீயினால் சேதம் தரும்

புதன்:- பலவகை ஆதாயங்கள் அடையலாம்

வியாழன்:- சிறப்பான பலன்கள் தரும் அதுவும் குளிகை காலம் காலை 9 முதல் 10-30 ஆடைகள் பெருகும் [ வாகனம் எடுக்கவும் குளிகை காலம் சிறப்பு ஆகும் வாகனம் பெருகும்]

வெள்ளி: நல்ல பலாபலனை தரும்

சனி:- பெரும் துயரம் வந்து சேரும்

ஆன்மிக அற்புதங்கள் நிரம்பிய சிதம்பரம் நடராஜர் கோவில்


இந்த உலகத்தின் ஒட்டு மொத்த மையப்புள்ளி அமைத்திருக்கும் இடமாக, தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மையை கண்டு, இன்றைய நவீன விஞ்ஞான உலகம் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

நோயின்றி வாழ:

சிதம்பரம் நடராஜர் கோவில், இன்றைய அறிவியலுடன் மட்டுமல்ல, மனிதர்களின் உடற்கூறுடன் பொருந்துவதும் அதிசயமே. ஆகவே தான், நம்மை, அங்கு சென்று வழிபட வைத்து, உலகத்தின் காந்த சக்திக்கு கட்டுப்பட்டு, நோயின்றி வாழ, நம் முன்னோர் வழிகாட்டியுள்ளனர். இக்கோவிலின் அற்புதங்களும், ரகசியங்களும், ஆச்சரியங்களும் ஏராளம். இன்னும், மனித ஆற்றலினால் கண்டுபிடிக்க இயலாத, பேருண்மைகள் இக்கோவிலின் அமைப்பில் புதைந்து உள்ளன!

கால் பெருவிரலில்…:

சர்வதேச ஆன்மிக அமைப்புகள், கடந்த எட்டு ஆண்டுகளாக, சில கோடி டாலர்கள் செலவு செய்து, தீவிர ஆராய்ச்சி நடத்தி, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான், மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக கண்டுபிடித்துள்ளன. இதை, பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிந்து, இக்கோவிலை, நம் முன்னோர் கட்டினர்; அவர்கள், ஆன்மிகத்தின் உள் அறிவியலை

புகுத்திய ஞானிகள்!

நவீன ஆய்வகங்கள், விலை உயர்ந்த நவீன கருவிகள் ஏதும் இல்லாத, அக்காலத்தில், இதை முன்னோர் கண்டறிந்துள்ளனர் என்பது, நம்மை வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது! அணுத் துகள்கள் அசைந்தபடியே இருக்கும் என்ற உண்மையை, ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து, அதை பூமியின் மையப்புள்ளியில் அமர்த்தியது பெரிய சாதனை தான்!

அறிவியல் நூல்:

இதை, 5,000 ஆண்டுகளுக்கு முன்பே, கண்டறிந்த திருமூலரின் சிந்தனை ஆற்றலும், சக்தியும் மகத்தானது. திருமூலரின் திருமந்திரம், உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும். இதை உணர, இன்றைய அறிவியலுக்கு மேலும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்! ‘சிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியம்’ என்று பலரும், பல தகவல்களை கூறிவரும் வேளையில், கோவிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த விவரங்கள் அளவிட இயலாதவை. முன்னோர் செய்த அனைத்து செயல்களும், ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது. மன்னர்கள் கட்டிய பிரமாண்டமான கற்கோவில்களுக்கு, பின்னால் இருக்கிற பல அற்புதங்கள், அதைக் கட்டியவர்களின் நுண்ணறிவை வெளிப்படுத்துகிறது.

ஒன்பது வாயில்:

மனித உடலை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ள, சிதம்பரம் கோவிலில், ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும், ஒன்பது வாயில்களை குறிக்கின்றன. கோவிலின் விமானத்தின் மேலே உள்ள பொற்கூரை, 21,600 தங்கத் தகடுகள் மூலம் வேயப்பட்டுள்ளது; இது, ஒரு மனிதன், தினமும் சராசரியாக, 21,600 தடவை சுவாசிக்கிறான் என்பதை குறிக்கிறது. இந்த தங்கத் தகடுகளை பொருத்த, 72 ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன; இந்த எண்ணிக்கை, மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளையும் குறிக்கின்றன. இதில் பல, கண்ணுக்குத் தெரியாத, உடலின் பல பாகங்களுக்கு சக்தியை சேர்ப்பவையும் அடங்கும். திருமூலர், திருமந்திரத்தில், ‘மானுடராக்கை வடிவு சிவலிங்கம், மானுடராக்கை வடிவு சிதம்பரம், மானுடராக்கை வடிவு சதாசிவம், மானுடராக்கை வடிவு திருக்கூத்தே’ என்று கூறுகிறார். அதாவது, ‘மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்’ என்ற பொருளைக் குறிக்கிறது.

பஞ்சாட்சர படிகள்:

பொன்னம்பலம், சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது; இது, நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய, ஐந்து படிகளை ஏற வேண்டும். இந்த படிகள், பஞ்சாட்சர படிகள் என அழைக்கப்படுகின்றன. அதாவது, ‘சி, வா, ய, ந, ம’ என்ற ஐந்து எழுத்தே அது! கனகசபை, பிற கோவில்களில் இருப்பதை போன்று, நேரான வழியாக இல்லாமல், பக்கவாட்டில் வருகிறது. இந்த கனகசபை தாங்க, நான்கு தூண்கள் உள்ளன; இது, நான்கு வேதங்களையும் குறிக்கின்றன. பொன்னம்பலத்தில், 28 தூண்கள் உள்ளன. இவை, 28 ஆகமங்களையும்; சிவனை வழிபடும், 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும், 64 + 64 மேற்பலகைகளை (பீம்) கொண்டன; இது, 64 கலைகளை குறிக்கின்றன. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றன. பொற்கூரையின் மேல் இருக்கும் ஒன்பது கலசங்கள், ஒன்பது வகையான சக்தியை குறிக்கின்றன. அர்த்த மண்டபத்தில் உள்ள ஆறு தூண்கள், ஆறு சாஸ்திரங்களையும்; அர்த்த மண்டபம் அருகில் இருக்கும் மண்டபத்தில் உள்ள, 18 தூண்களும், 18 புராணங்களையும் குறிக்கின்றன.

ஆனந்த தாண்டவம்:


சிதம்பரம் நடராஜரின், ஆனந்த தாண்டவம் என்ற கோலம், ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது. இந்து மத சாஸ்திர, சம்பிரதாயங்கள் அறிவியல் ரீதியானவை. அவை, மனிதனை மேம்படுத்த, உயர்ந்த தத்துவங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டவை. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு, வரும், ?ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ஆகாய உருவில் இறைவன்!

சிதம்பர ரகசியம் என்பது, சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில், சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது, ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே, திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தினாலான, வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, வில்வ தள மாலை தொங்கும். இதன் ரகசியம், இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதை உணர்த்துவதே! அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை, வெறும் வெளியையே காட்டி, இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. 

இது தான், ‘சிதம்பர ரகசியம்’ என, அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகிறது.